இதனில் ஒன்று தடுமாறினாலும் மனிதனின் இயக்கத்திலும் தடுமாற்றம் தொணிக்கும் என்பதால் தான் நம் முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்வதனையும், அறநெறி முறைகளையும் வகுத்தளித்திருக்கின்றார்கள்.
திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம் – உடலில் பஞ்சபேதம் தலைப்பினில் நான்காவது பாடலாய்க் குறிப்பிட்டிருக்கும் வரிகளை நாம் இங்கே காண்போம்.
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழ் ஆம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே.
(ப. இ.) இவ்வுடம்பு பாழாகிய மாயையின் காரியமாக வருவது. பாழ் - அருவம். காரணமாயை - அருவம். காரியமாயை - உருவம். உபாதி - காரியம். இவ்வுடம்பு எழுவகைப் பொருள்களால் யாக்கப்பட்டது.
அவை முறையே சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மச்சை - மூளை, சுக்கிலம் - வெண்ணீர்.
இத்தகைய ஏழு பொருள்களின் கலப்பு உடம்பு என்னும் உண்மை அறிய வந்தால் இவ்வுடம்பை ஒரு பொருளென்று யாரும் மதித்துக்கூறி மகிழமாட்டார்.
இத் திருப்பாட்டின்கண் தோல் ஒரு தனிப்பொருள்போல் கூறப்பட்டுள்ளது. வழும்பும் மச்சையும் ஒன்றாகக் குறிக்கப்பட்டுள்ளன.
(அ. சி.) இரதம் - அன்ன ரசம். அத்தி - எலும்பு. வழும்பு - நிணம். மச்சை - எலும்புக்குள்ளிருக்கும் பொருள். உபாதி - காரியம்.
நன்றி : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.
திருமூலரின் கருத்தினை நாமும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொண்டு இன்றைய தினமும் சில வலைப்பூக்களில் தேனுறிஞ்சிடப் பயணிப்போம்.
“ஒரு கட்டத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருத்தி அம்பு இருந்தும் எய்யலாம் இல்லாவிட்டாலும் எய்யலாம்” என்று நகைச்சுவை உணர்வோடு தன்னுடைய வலைப்பூவில் வசந்தத்தை அள்ளித் தெளிக்கின்றார்கள்.
“அத்தோடு விடாமல் நான் இன்னும் “L"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன். என்று நம்மை பார்த்துப் போகவும் சொல்கின்றார்கள்.
பயங்கரமான குறும்பு போலிருக்கு. வாருங்கள் அகம் நோக்கி தெளியலாம்.
பறக்கவே என்னை அழைக்கிறாய்! பதிவதனில் ஐந்தறிவு ஜீவராசிகளில் ஒன்றான பறவையினத்தின் மீது காதல் கொண்டு கட்டுரை வடித்திருக்கின்றார்கள். அற்புதமான நடையொடு பகிர்ந்த பதிவதனை நாமும் பார்ப்போமே!
அடுத்து ஒரு முக்கியமான பொருளை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன். இதனைப் பகிர வலையாசிரியர் அவர்களிடம் முன் அனுமதியும் வாங்கிவிட்டேன்.
கருப்பொருள் என்னவெனில் முகமற்றவளின் முகமன் என்ற கவிதையில் நேரடி பொருளெடுக்கும் வாய்ப்பினை வழங்காது சிந்தித்து பொருள் கொள்ளும் வாய்ப்பினை நமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
ஆனால் கவிதைக்கான மறுமொழியில் “பெயரில்லா” என்ற முகவரியோடு கருத்துரை வழங்கியிருக்கும் நண்பரின் பார்வையினை நாமும் ஒருக்கணம் சிந்தித்து அதன் பின்பு நாம் எங்கே வேண்டுமானலும் மறுமொழிகள் இடுவது பதிவரை மென்மேலும் உயர்த்த நம்மாலான ஒரு உதவி.
இங்கு வலைப்பதிவரின் மனோதைரியத்தினையும், “பெயரில்லா” பதிவரின் கருத்துரைகளையும் பார்த்து நாமும் நம் கருத்தினை பதித்திட வேண்டிக் கொள்கின்றேன்.
நகைச்சுவை உணர்வு ததும்பிட குழப்பம் என்ற சிறுகதையினை அருமையான முறையிலே படைத்திருக்கின்றார்கள். அதனையும் வாசிப்போமே!
மேலே பார்த்த வலைப்பூவின் நாயகியே “எங்கே எனது கவிதை” என்ற இந்த வலைப்பூவிற்கு பண்ணயக்காரார். குறுங்கவிதைகளால் நம் மனதை கொள்ளை அடிக்கின்றார்கள்.
அவற்றிலே நான் படித்த்தில் சிலவற்றை பகிர்கின்றேன்.
சொர்க்கம்
கனவுகளுடன்
ஏன்?
பூகோள ரீதியிலே கொஞ்ச தூரத்து உறவு நம்ம பங்காளி வசந்தகுமார் அவர்கள் உறவுக்காரன் நான் தான் என்று ஓடோடி வருகின்றார்கள்.
அவர்களை நோக்கி நாம் ஓடிச் சென்று அவர்களின் மலர்களில் நாம் தேன் பருகிடுவோம். சில பதிவுகளின் தங்களின் பார்வைக்காக..
பல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு!
இயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா? ஆச்சரியம்தான்!
பால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2
வாழ்க்கை எல்லாம் போராட்டமா???
கனவு மெய்ப்பட வேண்டும் என்ற முண்டாசுக் கவியின் வரிகளை தன் வலைப்பூவிலே வைத்து நம்மை அகமகிழ்வோடு வரவேற்கின்றார் வலைப்பூவின் ஆசிரியர் ந.துரை அவர்கள்.
உள்ளே பிரவேசித்த மாத்திரத்திலே நனையுதே மாராப்பு என்ற தலைப்பிலே க(வி)தை நமக்கு அளித்திருக்கின்றார்கள்.
தாயன்பின் மகத்துவம் சொல்லிடும் தரமிக்க படைப்பினை படித்து முடிக்கும் தருவாயில் துரோணாச்சாரியாரின் குருதட்சணையினை நினைவு படுத்தி அந்தக் கட்டைவிரல் என்னும் தலைப்பிலே ஓர் கவிதையினை நமக்கு தந்திருக்கின்றார்கள். ஆச்சர்யப்பட வேண்டிய பதிவது.
கூடவே மண்வாசத்தின் சுவைதனையும் உணர்வோம்.
__//''\\____//''\\____//''\\____//''\\____//''\\__
அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்
என்ற வள்ளுவனின் வாக்கினை தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் எனது கவிதைகள் வலைப்பூவின் ஆசிரியர் உமா அவர்கள் இலக்கண இலக்கியத்தில் கரை தேர்ந்தவர் என்பதனைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள்.
பாக்களை வரிசைப்படுத்தில் அதற்கு ஏற்ற கவிதைகள் வடித்து நமக்கும் மரபுப் பாவின் ஆசையினை விதைத்திடுகின்றார்கள். அவற்றில் சில கவிதைகள்
காணும்' பொங்கல்
நன்றாகச் செய்க நயந்து.
கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
அரசியல், அனுபவம், இலக்கியம், சிறுகதை, விளையாட்டு, புத்தக விமர்சனம், வரலாறு என பற்பல வகைப் பதிவுகள் நிரம்பியிருக்கும் இத்தளத்தினில் நான் கண்ட சில பதிவுகளை இங்கே தருகின்றேன்.
தவறான திசையில் ஓடும் உலகம்
செல்வம் தேடும் வழி மனித மேம்பாட்டு ஆலோசகர் கீதா பிரேம்குமார் அவர்களின் தொழில் முனைவோர் கையேடு.
பிரத்யோகமாய் பெண்களின் பொருளாதாரச் சூழலை உயர்த்திட என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
ஆழி பெரிது – பூமி தியானம் சிந்தனைத் துளிகளை தொடர் வரிசையில் பரவியிருக்கின்றார்கள்.
கரட்டடிப்பாளையத்து கவிஞனின் நிசப்தத்திற்குள் நாம் நுழைந்திடுகையில் நம்மை கவிதைகளும் மின்னல் கதைகளும் முகமன் கூறி வரவேற்கின்றன.
அவரது கவிதைத் தொகுப்பான கண்ணாடியில் நகரும் வெயில் கவிதைத் தொகுப்பினை நமக்கு மின்னூலாக தரவிறக்கம் செய்யத் தருவதோடு கவிஞர் ந.பெரியசாமி அவர்களின் விமர்சனத்தை கூச்சம் கொள்ளச் செய்யும் கவிதைகள் என்ற தலைப்பிலே நமக்களித்திருக்கின்றார்கள்.
மரங்கொத்திக்கும் புழுவுக்குமான போராட்டம் என்ற தலைப்பினிலே கவிதையைப் புரிதல் என்ற வகையிலே “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை” என்னும் தொகுப்பில் உயிர்ப்பிரதி கவிதையினை நன்கு அலசியிருக்கின்றார்கள்.
என் பெயர் கான். ஆனால் நான் தீவிரவாதியல்ல என்ற தலைப்பிலே மின்னல் கதையொன்றை படைத்திருக்கின்றார்கள். அருமையான தொகுப்பு கொண்ட தளம்.
பயணக்கட்டுரையாக நாடோடி எக்ஸ்பிரஸ் – ராமேஸ்வரம் தனுஷ்கோடி என்ற தலைப்பினில் தந்திருக்கும் பதிவினில் ராமேஸ்வரத்தினை புகழினையும், அவரது அனுபவத்தினையும் நமக்கு வழங்குகின்றார்கள்.
நைட்ஷிப்ட் - எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே பதிவதனில் இரவில்
அலுவலத்தில் பணிபுரிவோர் நிலையினை எடுத்துரைக்கின்றார்கள்.
அப்படியே ஒரு சிறுகதையினையும் நாம் பார்த்திடுவோமே!
துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - தொடர்
People’s Action for Development (PAD) நிறுவனப் பணியாளர்களின் வலைப்பூ இது. மன்னார் வளைகுடாப் பகுதி என்பது தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரையோரப் பகுதியினைக் குறிப்பிடுவதாகும்.
இந்த பூவினில் கடலின் வளமும் கடலோர மக்களின் வாழ்க்கை முறையினையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றார்கள்.
செடிக்காக... பொழிந்த மழைத்துளிகள்... கட்டுரையைப் படித்த மாத்திரத்திலே கண்களின் நீர்த்துளி அரும்பியதை என்னால் இன்று வரை மறக்க இயலவில்லை.
கடவுள் துன்பங்களை நமக்கு மட்டும் கொடுத்து இவ்வுலகில் பயணிக்க அனுப்பிட வில்லை. மாரிச்செல்வம் போன்ற மகத்தான இளம்பிஞ்சுகளின் வாழ்விலும் துன்பத்தினை மனம் போல் அள்ளி வழங்கியிருக்கின்றான் என்று நான் மறுமுறை சொல்லிக் கொள்ள ஏதுவாக மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை இக்கட்டுரை அமைந்திருந்தது.
வலைப்பூவானது தகவல்கள் என்ற தலைப்பினிலே மேலும் பல செய்திகளை நமக்குத் தருகின்றது.
பழமையை விட்டுக் கொடுக்காமல் புதுமையை வரவேற்கும் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அவர்களின் கடல் நுரைகளும் என் கவிதையும் வலைப்பூவானது “ உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது; நேர்மையுடன்” என்று ஓசோவின் பொன்மொழிகளைக் கொண்டு வரவேற்கின்றது.
புதிதாக புரிவதற்கு ஒன்றுமில்லை பதிவதனில் இன்றைய எதார்த்த நிலையினை விளக்கியிருக்கின்றார்கள். அப்படியே சிந்தனையை மேலும் சிதறவிடாமல் அலைகரை தலைப்பிலே வடித்த பாவில் கேட்ட கேள்விக்கு இன்னும் விடை காண முடியவில்லை என்னாலே!
விறால் மீன் பற்றிய தகவலைத் தந்து அசைவ ப்ரியர்களின் அன்பினைப் பெற்று விட்டார்கள்.
வலைப்பூ முழுமையும் இந்திய தேசியத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமான பதிவுகள் பரவிக் கிடக்கின்றன. நல்ல விசயங்கள் அனைத்தும் ஒரு சேர கிடைக்கப்பெற்ற மகிழ்வில் சில பதிவுகளின் இணைப்பினைத் தருகின்றேன்.
புவிவெப்பமயமாதல் ஓர் அமானுஷ்யம்!
முன்னோர்கள் விட்டுச்சென்ற டாட்டூஸ்!
தாண்டியா வளர்க்கும் கலாசாரம்
போர்க்களத்தில் பிறந்த வில்லுப்பாட்டு!
உள்ளே பல்சுவைக் கருத்துகளும் பலவாறு நம்மை படிக்கச் சொல்லி தூண்டுகின்றன. அதனில் சில.
விவசாயம் பார்க்கும் ஐ.பி.எல் வீரர்! அதிர்ச்சி தகவல்! என்று தற்போதைய சமூக அவலங்களைச் சுட்டிகாட்டி கம்ரானைக் கொண்டு நம்மை பெருமைபட வைக்கின்றார்கள்.
அதன் பின்பு கதைகள் பகுதியொன்று இருக்கின்றதே என்று அங்கே நோக்கினால் பயம் என்னை தொற்றிக் கொள்ளுமோ என்று கூட பயம்.
நீங்களே பாருங்களேன். பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 10
இதற்கு வழி பகவானை பிராத்திப்பதே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அற்புதமாய் வித்தியாச விநாயகர்கள்! நமக்கு அருள்பாலிக்கின்றார்கள்.
சிலருக்கு வாழ்க்கை இன்பமயமாய் இருக்கின்றது. பலரது போரட்டகளமாக
இருக்கின்றது.
அந்த பலரில் நானும் ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தோழர்
வழிப்போக்கன் அவர்களின் வலைப்பூவானது சமூகத்தில் நிலவும் வலிகளையும்,
வரலாற்றுத் தகவல்களையும் கொண்டதாக அடங்கியிருக்கின்றது.அவற்றில் சில
செத்துப்போவதற்கு 1008 காரணங்களில் இதுவும் ஒன்று........
தாகத்தில் தவித்த தொண்டருக்கு முலைப்பால் கொடுத்த சாதனைப்பெண்...!!
இன்னுமொரு ஆண்ட பரம்பரை.....??????
செந்தமிழ் சொற்களின் களஞ்சியம் அகரமுதலி. தமிழர் பாடல்களும், சங்க இலக்கண, இலக்கிய நூல்களும், தமிழர் கணித முறைகளும், தமிழ் அகராதியும் ஒருங்கே அமையப் பெற்ற இந்த வலைத்தளம் எதிர்கால சந்ததியினருக்கும், தமிழார்வலர்களுக்கும் ஓர் அரிய பரிசுப் பொருள்.
தமிழர் அளவை முறைகள்
தமிழ் எழுத்துக்கள்
அகர வரிசையில் சொற்களுக்கான பொருள்
நல்லதே நினைப்பின் நல்லதே நடந்திடும் என்ற பொன்மொழியோடு நன்றிதனைக் கூறிக் கொண்டு அடுத்தொரு பதிவொடு வருகின்றேன்.
நன்றி
சீனு, ஸ்ரீவிஜி, தமிழ் பேப்பர் தளங்கள் தெரிந்தவை. மற்ற அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteசிறப்பான அறி முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைத்தும் சிறப்பான தளங்கள்...
ReplyDeleteஅகரமுதலி களஞ்சியம் - மிகவும் பயன்தரும் தளம்... மிக்க மிக்க நன்றி...
அறியாத சில தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
த.ம.3
மிக்க மகிழ்ச்சி. நன்றி
ReplyDeleteநெறைய புது முகங்கள்
ReplyDeleteமிகவும் வித்தியாசமான பக்கங்களால் அழகுற " மிளிர்கிறது வலைச்சரம்" சிவஹரி அவர்களின் "கடின உழைப்பிற்கு" எனது நன்றியை சமர்பிக்கிறேன்.
ReplyDeleteஅகர முதலி - தமிழர் அறிந்திருக்கவேண்டிய சிறப்பான தளம். தளத்தின் உரல் எண்களின் குறியீடாக இருப்பதால் பலரும் இந்தத்தளத்தை கூகிலில் தேடுவது சிரமம் தான்.
ReplyDeleteதிருமதிஅருணா ஆசிப்அலியின் தியாகச் செயல் எவராலும் யோசிக்க முடியாத செய்ய இயலாத செயல் "மெய் சிலிர்க்க வைக்கிறது"
ReplyDelete//தாகத்தில் தவித்த தொண்டருக்கு முலைப்பால் கொடுத்த சாதனைப்பெண்...!!//
சுட்டிக்காட்டியுள்ளவற்றில் நிறைய அறிமுகங்கள் புதியவை மற்றும் புதுமையானவை.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
கவிதை மழையென பொழிந்துள்ளீர்கள். உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார்
ReplyDelete//சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு வலைப்பூவில் பிரபல மறுமொழியாளர்களின் வருகை அதிகமாகவே இருப்பதைக் கண்டு வலைப்பூவின் மகத்துவத்தை பார்த்தே உணர்ந்து கொண்டேன்.//
இந்த வார்த்தைகளுக்கு நான் பொருத்தமானவன் தானா என்று யோசித்துக் கொண்டுள்ளேன். என் எழுத்துக்களுக்கு சிறந்த அடையாளம் கொடுத்து உளீர்கள் மிக்க நன்றி சார்.
இந்த சிறியோன் இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன்! அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்! தளம் தொடங்கிய புதிதில் அறிமுகமாகி திசை மாறிய என் பயணம் இப்போது திசை சேர்ந்துள்ளது வலைச்சர அறிமுகம் மூலம். இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று பல நாள் ஏங்கியுள்ளேன்! ஏக்கம் தீர்த்த நண்பர் சிவஹரிக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது என்று தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்! இந்த உயரிய இடத்தை இனி என்றும் மறவாது சிறப்பான படைப்புக்கள் தர முயற்சிக்கிறேன்! நன்றி!
ReplyDeleteவணக்கம் .
ReplyDeleteசிவஹரி
என்னுடைய படைப்பை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைப்பூவுக்கு கிடைத்த மூன்றாவது வெற்றிப்படி என்றுதான் நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது..... தெரியப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
இன்று இறுதி நாள் பதிவாகி விட்டது எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் பல வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சரியாக உங்கள் கடமையை சரிவர செய்திர்கள் மிக்க நன்றி.....நீங்கள் அறிமுகம் செய்த பல தளங்கள் பலவகைப்பட்ட கருத்துக்களை சொல்லிவிட்டது. அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுடையவையாகத்தான் உள்ளது. இருந்தாலும் நான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்து. சந்திப்போம்.சிவஹரி (அண்ணா)மேலும் இந்த எழுத்துலகில் நீங்களும் பாண்டித்தியம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்!
ReplyDeleteமூன்றாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகிறேன் :)
வலைச்சரத்துக்கும் திரு.சிவஹரி அவர்களுக்கும் எனது நன்றிகள்!
அன்பின் தம்பி,
ReplyDeleteதிருமூலரின் விளக்கங்கள் மிக அருமை....
அறிமுகப்படுத்தப்பட்ட விதம் சிறப்பு....
துரை ஸ்ரீவிஜி இவர்கள் இருவரின் தளமும் அறிவேன். மற்றவை புதியவை. பார்க்கிறேன்...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் பதிந்த அன்புத்தம்பிக்கு....
த.ம.5
>{வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசீனு, ஸ்ரீவிஜி, தமிழ் பேப்பர் தளங்கள் தெரிந்தவை. மற்ற அறிமுகங்களுக்கு நன்றி. }<
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
>{ Lakshmi said...
ReplyDeleteசிறப்பான அறி முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.}<
கருத்திட்டமை கண்டு மகிழ்ச்சி
>{திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅனைத்தும் சிறப்பான தளங்கள்...
அகரமுதலி களஞ்சியம் - மிகவும் பயன்தரும் தளம்... மிக்க மிக்க நன்றி...
அறியாத சில தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
த.ம.3}<
தங்களின் சேவைக்கு என் சிரம் தாழ்ந்த நல்வணக்கங்கள் சகோ.
>{ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. நன்றி}<
கருத்திட்டமைக்கு நன்றி சகோ.
>{எல் கே said...
ReplyDeleteநெறைய புது முகங்கள் }<
சில வலைப்பதிவுகளில் இருக்கும் உன்னத கருத்துகள் மற்றவர்களுக்கு தெரிய வருவதில்லை. அதனை முன்னனி வலைப்பூக்கள் மட்டுப்படுத்தி விடுகின்றன என்பதால் தான் என்னால் ஆன இச்சிறு முயற்சி.
கருத்திட்டமைக்கு நன்றி சகோ.
>{கலாகுமரன் said...
ReplyDeleteமிகவும் வித்தியாசமான பக்கங்களால் அழகுற " மிளிர்கிறது வலைச்சரம்" சிவஹரி அவர்களின் "கடின உழைப்பிற்கு" எனது நன்றியை சமர்பிக்கிறேன். }<
என் உழைப்பினை அங்கீகரித்த தங்களுக்கு நன்றிகள் பற்பல
>{கலாகுமரன் said...
ReplyDeleteஅகர முதலி - தமிழர் அறிந்திருக்கவேண்டிய சிறப்பான தளம். தளத்தின் உரல் எண்களின் குறியீடாக இருப்பதால் பலரும் இந்தத்தளத்தை கூகிலில் தேடுவது சிரமம் தான்.}<
அகர முதலியென தேடினால் கிடைக்கலாம் தானே சகோ.
முயற்சிக்கின்றேன்.
நன்றி
>{கலாகுமரன் said...
ReplyDeleteதிருமதிஅருணா ஆசிப்அலியின் தியாகச் செயல் எவராலும் யோசிக்க முடியாத செய்ய இயலாத செயல் "மெய் சிலிர்க்க வைக்கிறது"
//தாகத்தில் தவித்த தொண்டருக்கு முலைப்பால் கொடுத்த சாதனைப்பெண்...!!//}<
ஒத்த ரசனை பொருந்திய கருத்துரைக்கு நன்றி சகோ.
>{ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசுட்டிக்காட்டியுள்ளவற்றில் நிறைய அறிமுகங்கள் புதியவை மற்றும் புதுமையானவை.
அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
கவிதை மழையென பொழிந்துள்ளீர்கள். உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.}<
கருத்துரைக்கு நன்றி சகோ.
>{சீனு said...
ReplyDeleteஎன்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார்
//சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு வலைப்பூவில் பிரபல மறுமொழியாளர்களின் வருகை அதிகமாகவே இருப்பதைக் கண்டு வலைப்பூவின் மகத்துவத்தை பார்த்தே உணர்ந்து கொண்டேன்.//
இந்த வார்த்தைகளுக்கு நான் பொருத்தமானவன் தானா என்று யோசித்துக் கொண்டுள்ளேன். என் எழுத்துக்களுக்கு சிறந்த அடையாளம் கொடுத்து உளீர்கள் மிக்க நன்றி சார். }<
தங்களின் ஆற்றல் மென்மேலும் பெருகிட என்னால் ஆன சிறுமுயற்சி தான் இது.
கருத்துரைக்கு நன்றி சகோ
>{ s suresh said...
ReplyDeleteஇந்த சிறியோன் இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன்! அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்! தளம் தொடங்கிய புதிதில் அறிமுகமாகி திசை மாறிய என் பயணம் இப்போது திசை சேர்ந்துள்ளது வலைச்சர அறிமுகம் மூலம். இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று பல நாள் ஏங்கியுள்ளேன்! ஏக்கம் தீர்த்த நண்பர் சிவஹரிக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது என்று தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்! இந்த உயரிய இடத்தை இனி என்றும் மறவாது சிறப்பான படைப்புக்கள் தர முயற்சிக்கிறேன்! நன்றி!}<
வீண்புகழ் நோக்காது படைக்கும் தன்மை தங்களிடம் உண்டு சகோ.
அந்த தனித்தன்மையினை தொடர்ந்து வலுவூட்டி சிறப்படையுங்கள் சகோ.
நன்றி
>{ OpenID 2008rupan said...
ReplyDeleteவணக்கம் .
சிவஹரி
என்னுடைய படைப்பை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைப்பூவுக்கு கிடைத்த மூன்றாவது வெற்றிப்படி என்றுதான் நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது..... தெரியப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
இன்று இறுதி நாள் பதிவாகி விட்டது எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் பல வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சரியாக உங்கள் கடமையை சரிவர செய்திர்கள் மிக்க நன்றி.....நீங்கள் அறிமுகம் செய்த பல தளங்கள் பலவகைப்பட்ட கருத்துக்களை சொல்லிவிட்டது. அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுடையவையாகத்தான் உள்ளது. இருந்தாலும் நான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்து. சந்திப்போம்.சிவஹரி (அண்ணா)மேலும் இந்த எழுத்துலகில் நீங்களும் பாண்டித்தியம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-}<
எழுத்துலகின் என் தகுதி என்றுமே சிறுகடுகு தான்.
கருத்துரைத்து நன்றி.
மென்மேலும் வளர்ந்தோங்க என் முன்கூட்டிய வாழ்த்துகள் பற்பல
>{சுபத்ரா said...
ReplyDeleteவணக்கம்!
மூன்றாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் ஆகிறேன் :)
வலைச்சரத்துக்கும் திரு.சிவஹரி அவர்களுக்கும் எனது நன்றிகள்!}<
தங்களுடைய தைரியமான கருத்துரையின் காரணமாகத்தான் மூன்றாம் முறை தங்களின் வலைப்பூ அரங்கேறியுள்ளது.
அதே சமயம் அனானிமஸின் கருத்தினையும் தயவு கூர்ந்து ஏரெடுத்துப் பாருங்கள் சகோ.
நன்றி
>{ மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteஅன்பின் தம்பி,
திருமூலரின் விளக்கங்கள் மிக அருமை....
அறிமுகப்படுத்தப்பட்ட விதம் சிறப்பு....
துரை ஸ்ரீவிஜி இவர்கள் இருவரின் தளமும் அறிவேன். மற்றவை புதியவை. பார்க்கிறேன்...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் பதிந்த அன்புத்தம்பிக்கு....
த.ம.5}<
தங்கள் இப்படைப்பினைக் கண்டவுடன் தான் என் மறுமொழிகளை தொடங்கிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் தான் தங்களுக்கு தொந்தரவும் கொடுத்திட்டேன்.
மறுமொழிகள் கண்டமையில் சந்தோசம் அக்கா
வாக்கினை அளித்த நால்வருக்கும் (dindiguldhanabalan cheenakay manju அக்கா, venkatnagara) எந்தன் பணிவான நன்றிகள் பற்பல
ReplyDeleteஅதே சமயம் அனானிமஸின் கருத்தினையும் தயவு கூர்ந்து ஏரெடுத்துப் பாருங்கள் சகோ//
ReplyDeleteஅது ஒரு பெரிய கதை. அவர் ரொம்ப நாட்களாக என் வலைத்தளத்திற்கு வந்துகொண்டிருக்கிறார். பொதுவாக அனானிமஸ் கருத்துகளை நான் மதிப்பதில்லை. யார் என்று பலமுறை கேட்டும் அவருக்குத் தான் யாரென்று சொல்லும் கன்விக்ஷன் இல்லை. அதனால் நானும் கண்டுகொள்வதில்லை. சிலநேரங்களில் நேரப்போக்குக்காக அவருக்குப் பதிலளித்துக் கொண்டிருப்பேன் :)
எழுதுவது என்று வந்துவிட்டால் இப்படிக் கருத்துகள் வருவது சாதாரணம் தான் என்றாலும், யார் அந்தக் கருத்தைத் தெரிவிப்பது என்பதைப் பொறுத்துத் தான் நாம் ரியாக்ட் செய்ய முடியும். ‘தகாத வார்த்தைகளை’ச் சொல்லி க்ரிடிஸைஸ் செய்பவர்களை நான் மதிப்பதில்லை. அவர் அப்படிப்பட்ட ஒருவர். சோ, நீங்களும் ஃப்ரீயா விடுங்க :)
அறிமுகப்படுத்திய உள்ளத்திற்கு நன்றி! நன்றி!
ReplyDelete