Friday, October 26, 2012

ஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்


காலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காதுஎன்று சொல்வார்கள்கால தேவனின் சக்கரம் என்றுமே உருண்டு கொண்டிருக்கக் கூடியது.  

அதே கால சூழலில் நற்காவியங்களும் வளரலாம், கருஞ்சுவடுகளும் எழலாம். நம்மை வந்தடைவது எதுவானாலும் அதனையே தாங்கிடும் வல்லமை தந்திட இறைவன் தான் அருள வேண்டும்.

சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் பருவங்களை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கின்றார்கள்.  
அவையன

பருவங்கள் (பெண்கள்)
வயது எல்லை
பருவங்கள் (ஆண்கள்)
வயது எல்லை
பேதை
ஐந்து முதல் எட்டு வரை
பாலன்
ஒன்று முதல் ஏழு வரை
பெதும்பை
ஒன்பது முதல் பத்து வரை
மீளி
எட்டு முதல் பத்து வரை
மங்கை
பதினொன்று முதல் பதிநான்கு வரை
மறவோன்
பதினொன்று முதல் பதிநான்கு வரை
மடந்தை
பதினைந்து முதல் பதினெட்டு வரை
திறவோன்
பதினைந்து மட்டும்
அரிவை
பத்தொன்பது முதல் இருபத்தி நான்கு வரை
விடலை
பதினாறு மட்டும்
தெரிவை
இருபத்தைந்து முதல் இருபத்தொன்பது வரை
காளை
பதினேழு முதல் முப்பது வரை
பேரிளம்
முப்பது முதல் முப்பத்தி ஆறு வரை
முதுமகன்
முப்பதிற்கு மேல்

பருவங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து வலைப்பூக்களைப் பார்ப்போமே!

என் மனம் தான் எனக்கு கோயில். அங்கு உணர்வுகள் தான் எனக்கு கடவுள். என் பெயர் தான் எனக்கு மதம். நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. 

பாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும் என்று தன்னைப் பற்றி அறிமுகப் படலம் தந்திருக்கும் இலங்கை எழுத்தாளார் ம. தி. சுதா அவர்களின் மதியோடை என்னும் வலைப்பூவினில் கவிதைளும், 
கதைகளும் நிரம்பி வழிகின்றன.

வெளியாகியுள்ள பதிவுகளில் நான் ரசித்ததை பகிர்கின்றேன்.

இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிக்கையில் விட்ட குறையும், தொட்ட குறையும் என்ற தலைப்பில் வெளியாகிய சிறுகதையானது கதை நாயகர் தானே நமக்கு கதையைச் சொல்லிடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. படிப்பதற்கு ஏற்ற சுவையினையும் கொண்டிருக்கின்றது.

அறிவூட்டும் கவிதைகள் என்ற தலைப்பிலே நாயகரின் காதல் வரிகளை நாமும் சுவைக்கலாம்.

பெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய் - உணர்ச்சி ததும்பிடும் உன்னதமான கட்டுரை. 


இலங்கையைத் தாயகமாய்க் கொண்டு மலேசியாவிலிருந்து நம்மோடு இதந்தரு தென்றல் வடிவிலே உரையாடும் சகோதரம் ரூபன் அவர்களின் வலைப்பூவிற்குள் தற்போது நுழைந்திருக்கின்றோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து 
                            என்ற அப்பத்வாசுகி வீட்டுக்காரரின் வரிப்பொருளை நமக்கு சொல்லாமல்  ிப்பு மட்டும் என்னோடு இருக்கின்ற என்ற சொல்லியிருக்கின்றார்கள். கல்வி ஒன்றே அழியாச் செல்வம், எழுதப்படும் எழுத்துக்கள் என்றும் தரமானவையாக இருந்திட நம் சிந்தையில் தெளிவிருந்தால் போதும் என்று நண்பருக்கு நாம் இங்கே ஒரு உதவிக்குறிப்புரையினை அளித்து விட்டு மேலே செல்வோமே.

நவயுகக் காதலுக்கு சரியான சாட்டையடியாய் முகவரி அறிந்து காதல் செய் என்ற தலைப்பிலான கவிதை விளங்குகின்றது. மேலும் கூடுதல் சுவையாக இந்த பதிவைத்தான் சகோதரம் ரஞ்சனி நாராயணன் அவர்களும் தன் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மேற்கோளிட்டிருக்கின்றார்கள்.

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் வளரும் “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற வரிகளை நினைவு கூற வைத்து விட்டீர்களே. 

எப்போது விடியும் எம் வாழ்வு தலைப்பிலமைந்த கவிதை நெஞ்சில் துயரலைகளை மெல்லிய கீற்று கொண்டு வருடிவிட்டுச் செல்கின்றது. இந்த நிலையும் மாறிவிடும்” என்ற எண்ணம் ஒன்றே நம்முடைய தற்போதைய சமாதானப் பொருள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

நல்ல சுயசார்புச் சிந்தனை எழுத்தாளர். மென்மேலும் வளர்ந்திட என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எனக்குப் பிடித்த சில வலையகங்களில் தனிப்பட்ட பதிவினை குறித்துச் சொல்லிடாமல் அந்த வலையகத்தினையே மொத்தமாய் குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.

அவையன: 
அடுத்த தலைமுறையினருக்கு நாம் நல்ல பெற்றோராகவும், வழிநடத்திச் செல்லக் கூடிய ஆசானாகவும் விளங்கிட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்திடும் வலைப்பூ.

 நாம் அங்கே இணைந்து நம் கருத்துகளை மற்ற பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பயன்படும் வண்ணம் சேவை செய்யலாம்.


******************************************************

என் மதிப்பிற்குரிய அற்புதமான நபர். வலைத்தளம் சார்பான எனது இடக்கை, வலக்கை, வழுக்கை எல்லாம் இவரையே சாரும். என் வலைப்பூவில் ஏற்படும் அவ்வப்போதான சிக்கல்களை தீர்த்து வைப்பதில் வல்லவரின் வலைப்பூ. 

நண்பர் அப்துல் பாஷித் அவர்களின் வலைப்பூவானது கணினி உலகில் ஒரு அமுத சுரபி என்றால் வியப்பில்லை.

 ********************************************
 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வரலாறினை K.Kamaraj – by Kamaraj’s family – விருதுநகர் என்ற வலைப்பூவானது தாங்கி நிற்கின்றது.

 தமிழக ஆட்சியிலே காமராசரின் ஆட்சிக் காலத்தில் விளந்திருகும் நன்மைகள் குறித்து தனியே நான் சொல்லுவதை விட சான்றோர்கள் உரைத்தால் பொருளின் சுவை கூடும் அல்லவா. எளிமையாய் வாழ்ந்த தியாகச் செம்மல் குறித்த வலைப்பூவினை இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்வெனக்கு. 

***************************************
 எழுத்தாளர்களின் பெட்டகமாய் விளங்கும் இவ்வலையிலே நாம், கவிதை, கட்டுரை, கதை, புத்தக விமர்சனம் என பல்நோக்குச் சுவைகளை இனிமையுடன் சுவைத்திட முடியும். 

வாசகர் மறுவினைப் பகுதியில் நம்முடைய எண்ணச் சிதறகளையும் அள்ளித் தெளித்திட இடமளித்திருக்கின்றார்கள்.

 *******************************
எழுத்தறிவித்தவன் இறைவனே. அந்த இறைவனின் மகிமையைச் சொல்லிடும் அற்புதமான தளம் ஆன்மீகக் கடல். ஆன்மீகம் சம்பந்தமான பல கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார்கள். படித்துப் பயனடைவீர்களாக.

 *******************************
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று அண்ணல் மொழிந்திருக்கின்றார்கள். அந்தக் கிராமங்களின் அடிப்படை ஆதாரம் விவசாயம் தான்.

அந்த விவசாயம் செழித்தால் தான் நாமும் முன்னேற முடியும். ஆனால் விவசாயின் வாழ்க்கை நிலை ஒரு போதும் மேல் நோக்கிய பயணத்தை தொடங்குவதே இல்லை. விவசாயம் குறித்து நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கும் இத்தளத்தினை கண்டு நாமும் பயன்பெறுவோமாக. 

*******************

நகைச்சுவை என்ற உணர்வு மனிதனுக்கு இல்லையெனில் என்றோ மக்கிப் போயிருப்பான். அத்தகைய நகைச்சுவை உணர்வானது பார்த்தல், கேட்டல், படித்தல் ஆகிய வழிகளில் நம்மை அடைந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய நகைச்சுவை உணர்வினை நமக்கு அள்ளித்தரும் வலைப்பூவாக எங்கள் ப்ளாக் அமைந்திருக்கின்றது.


***************
கதைகள், அனுபவங்கள், சினிமா, விமர்சனம், இசைஞானி குறித்த கருத்துகள் என பல சுளைகளோடு இப்பலா வேரில் பழுத்து நிற்கின்றது. நாம் புசித்திட வேண்டியது தான் பாக்கி.! சுளை பிரித்து புசித்திட கிளம்புவோமாக.

 ***********
இணைய உலகிலே கவிச்சக்கரவர்த்திகளில் ஒருவர். ஈகரை என்னும் வலைத்தளத்தின் மூலமாக இவரது தனித்திறமைகளை முன்னர் அறிந்திருக்கின்றேன்.

அவரது இவ்வலைப்பூவினை இங்கே அறிமுகப் படுத்திடுவதில் மகிழ்வெனக்கு.

**********
கார்த்திக் அவர்கின் தகவல் குறிப்புகள் வலைப்பூவினிலே நாட்டு வைத்தியம், அழகு, அமுத மொழி, சமையல் குறிப்பு என பல குறிப்புகள் விரவி கிடக்கின்றன. 

அனைத்தும் நம் பார்வைக்காக தொகுத்தளித்திருக்கின்றார்கள். கண்டு நாமும் பயன்பெறுவோமே!


*******
புதுக்கவிதை படைத்திட்டேன் என்று புலவர் பலர் இன்று உரைநடையை ஒடித்து மடக்கி கவிதை மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் புதுக்கவிதைக்குரிய இலக்கிய நயம் நோக்கியும், இதமான வரிகளில் இடித்துரைத்தல் செய்து நல்வழிப்படுத்திடலும் ஒரு கலை தான்.

 அதன் வழியிலே கவிதை வாசலின் ஆசிரியர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களின் வலைப்பூவானது முழுமையுமே கவிதை மலர்களால் நம்மை அகமகிழ வரவேற்கின்றது.

வாசலில் நுழைந்து நாமும் தேன் பருகி திளைத்தின்பம் கொள்வோமே!


*****
தமிழ் பதிவர் உலகிலே தன்னிகரற்ற இடம் பிடித்த வலையாசிரியர். இவரது பின்னூட்டங்களை நான் பல இடங்களில் கண்டு ரசித்ததுண்டு

அத்தனை வலைப்பூக்களிலும் இருக்கும் கருத்துகளை ரசித்து சுவைபட இரத்தினச் சுருக்க பின்னூட்டம் இடுகின்றார்கள் என்றால் சாதனை மகத்தானது தானே!

 அவருடைய வலைப்பூவிலே நமக்கு சிந்தனைத் துளிகளை பல்வித ஊட்டிகளின் மூலமாக ஊட்டுகின்றார்கள். ISO பதிவானது நம்மை நாமே 
சீர்படுத்திக் கொள்ள உதவிடும் படைப்பு என்பேன். 

  
ந்தன் ைச்ச ஆசிரியப்ொறுப்பின் கல்வெட்டுப் பிவாளர்:

 

சமீபத்தில் வலைச்சரத்தில் வலையாசிரியாய்ப் பொறுப்பேற்றவர்கள். இவர்களின் இயல்பான எழுத்து நடைும், எையுமே எிர்நோக்குணும், சீர்ூக்கிப் பார்த்ெழிடும் வன்ிறும் என்னை பல முறை கவர்ந்திருக்கின்றது.   

ர்கள் நையிலஒரு பிவினை இட்டிடாம் என்றம், மாமையோடு இச்சிறுகுகும் போட்டியிடாம் என்றும் நினத்ிரந்தேன். ஆனால் என் சூழல் காராகானே போட்டியிலிரந்தஎன்னை விலக்கிக் கொண்டேன்.

சமையல், கவிதை, கதை என பன்முகங்களை நமக்காக காட்டி மகிழச் செய்யும் இவர்களது வலைப்பூவினை என் வலைச்சர ஆசிரியப்பணியின் நிறைவு செய்திடும் கல்வெட்டாக நிறுத்திச் செல்வதில் மகிழ்வெனக்கு.


வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளச் சொல்லி பொறுப்பாசிரியர் அவர்களிடமிருந்து மின்மடல் வந்த பொழுதில் இருந்து பல வலைப்பூக்களில் பொதிந்திருக்கும் கருத்துச் செறிவுகளை நோக்கி பல சூழ்நிலையிலும் பயணித்தேன்.

இறையருளால் என் கடன் சரிவர செய்திருப்பதாகவும் மாநம்பிக் கொள்கின்றேன். அடுத்த ஆசிரியருக்கு வழிதனை விட்டு என் பணியினை இத்துடன் நிறைவு செய்கின்றேன். 
இதுவரை என் பதிவினை கண்டு ரசித்த பதிவன்பர்கள் அனைவருக்கும் உளமார நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு அடுத்து பொறுப்பினை ஏற்கும் ஆசிரியருக்கு இனிய வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இடையிடையே வண்ணப்படங்களுகுண்டான வலையினை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என் தோழி யுவா அவர்களை மீண்டும் நினைவு கூறிக் கொண்டு
நன்றியுடன்,

சிவஹரி

33 comments:

  1. அன்பு சிவஹரி!
    ரொம்ப வெட்கமாக இருக்குதுங்கோ!இத்தனை புகழ்ச்சி கேட்டதில்லீங்கோ! நன்றி!

    என் நடையிலே ஒரு பதிவை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன்!

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. அன்பின் சிவஹரி!
    எங்கள் ப்ளாக் பற்றிய அறிமுகத்திற்கு எங்கள் நன்றி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. என் ப்ளாக் பற்றிய அறிமுகத்திற்கு என் நன்றி.

    By : thagaval kalangiyal KARTHIK.

    ReplyDelete
  5. Thank you for your words brother!

    ReplyDelete
  6. அருமையான பதிவர்களை அறிமுக படுத்தி உள்ளீர்கள்

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அன்புள்ள சிவஹரி,
    //இணைய உலகிலே கவிச்சக்கரவர்த்திகளில் ஒருவர். ஈகரை என்னும் வலைத்தளத்தின் மூலமாக இவரது தனித்திறமைகளை முன்னர் அறிந்திருக்கின்றேன்.//

    என்று உயர்வு நவிற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. ஈகரை பற்றி எழுதியுள்ளீர்கள். அங்கு நீங்கள் உறுப்பினராக இருந்தீர்களா? தெரிந்துகொள்ள ஆவலாக..

    ReplyDelete
  9. என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா..

    மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றிகள் பல...
    tm3

    ReplyDelete
  10. மிகவும் சிறப்பான நிறைவு. திண்டுக்கல் தனபாலன் என் பார்வையில் பின்னூட்டக் கர்ணன்! அவர் தளம் கட்டாயம் குறிப்பிட வேண்டிய ஒன்று.

    ஸ்ரீ....

    ReplyDelete
  11. சிறப்பான அறிமுகங்கள், மற்றும் ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் சொன்ன தகவல்கள் என இந்த வாரம் முழுவதும் சிறப்பு...

    பாராட்டுகள்.

    ReplyDelete
  12. இன்றைய அறிமுகங்களும் அறிமுகப்படுத்திய விதமும் புதுமையாகவும் மிகச்சிறப்பாகவும் அமைந்துள்ளது. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பெண்களின் ஏழு பருவங்களை மிக அருமையாக குறிப்பிட்டு எழுதி இருக்கே தம்பி...

    அறிமுகப்படுத்தப்பட்ட விதம் மிக சிறப்பு....

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அருமையானபதிவுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும்..

    த.ம. 5

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியர் பணி ஏற்று, பொறுப்பாக சிறப்பாக பணியாற்றியது விரைவில் முடித்தாலும் சொல்ல வந்ததை மிக அருமையாக சொன்னதும் எத்தனையோ வேலைப்பளுவுக்கு இடையிலும் மிக அற்புதமாக ஒவ்வொரு நாளும் மிக அருமையாக எழுதியதற்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பி...

    ReplyDelete
  15. >{kg gouthaman said...

    அன்பின் சிவஹரி!
    எங்கள் ப்ளாக் பற்றிய அறிமுகத்திற்கு எங்கள் நன்றி}<

    கருத்துரைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  16. >{karthik karthik said...

    என் ப்ளாக் பற்றிய அறிமுகத்திற்கு என் நன்றி.

    By : thagaval kalangiyal KARTHIK.}<

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  17. >{Abdul Basith said...

    Thank you for your words brother!}<

    மகிழ்ச்சி நண்பரே. தங்களின் சேவையில் நாம் எம்மாத்திரம்?

    ReplyDelete
  18. >{"என் ராஜபாட்டை"- ராஜா said...

    அருமையான பதிவர்களை அறிமுக படுத்தி உள்ளீர்கள் }<

    கருத்துரைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  19. >{ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    இன்று

    Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி?}<

    மற்றவர்களுக்கும் அறியச் செய்தமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  20. >{Lakshmi said...

    அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.}<

    இந்தப் பதிவோடு என் வலைச்சர பதிவுகள் நிறவடைந்து விட்டன. தொடர்ந்து தாங்கள் உளமார அளித்த ஊக்கத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  21. >{ஆதிரா said...

    அன்புள்ள சிவஹரி,
    //இணைய உலகிலே கவிச்சக்கரவர்த்திகளில் ஒருவர். ஈகரை என்னும் வலைத்தளத்தின் மூலமாக இவரது தனித்திறமைகளை முன்னர் அறிந்திருக்கின்றேன்.//

    என்று உயர்வு நவிற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. ஈகரை பற்றி எழுதியுள்ளீர்கள். அங்கு நீங்கள் உறுப்பினராக இருந்தீர்களா? தெரிந்துகொள்ள ஆவலாக..}<

    நான் முத்தமிழ் மன்ற உறுப்பினர் தான் சகோ. தங்களின் பெருமையினை என் சகோதரி மஞ்சுபாஷிணி சொல்லியிருக்கின்றார்களே. அத்தோடு நானும் ஈகரையில் அவ்வப்போது பார்த்து பயனடைவேனே சகோ.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  22. >{திண்டுக்கல் தனபாலன் said...

    என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா..

    மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றிகள் பல...
    tm3}<

    என் பக்கம் எந்தக் கருத்துரையும் மேற்காணும் தாங்களின் கருத்திற்கு இல்லை சகோ.

    தங்களின் சேவை அனைவரும் அறிவர்

    ReplyDelete
  23. >{ ஸ்ரீ.... said...

    மிகவும் சிறப்பான நிறைவு. திண்டுக்கல் தனபாலன் என் பார்வையில் பின்னூட்டக் கர்ணன்! அவர் தளம் கட்டாயம் குறிப்பிட வேண்டிய ஒன்று.

    ஸ்ரீ...}<

    இனிய வரவேற்புகள்.

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  24. >{ வெங்கட் நாகராஜ் said...

    சிறப்பான அறிமுகங்கள், மற்றும் ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் சொன்ன தகவல்கள் என இந்த வாரம் முழுவதும் சிறப்பு...

    பாராட்டுகள். }<

    தங்களின் தொடர் ஊக்கத்திற்கு என் நன்றிகள் பற்பல சகோ.

    கருத்தினைக் கண்டு மகிழ்ச்சி

    நன்றியுடன்,

    ReplyDelete
  25. >{வை.கோபாலகிருஷ்ணன் said...

    இன்றைய அறிமுகங்களும் அறிமுகப்படுத்திய விதமும் புதுமையாகவும் மிகச்சிறப்பாகவும் அமைந்துள்ளது. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். }<

    தங்களின் கருத்தினைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

    ஒரு வார கால ஊக்கத்திற்கு என் நன்றிகள் பலவே.

    ReplyDelete
  26. >{ Ranjani Narayanan said...

    அன்பு சிவஹரி!
    ரொம்ப வெட்கமாக இருக்குதுங்கோ!இத்தனை புகழ்ச்சி கேட்டதில்லீங்கோ! நன்றி!

    என் நடையிலே ஒரு பதிவை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன்!

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!}>

    வலைச்சரத்தில் என் பதிவுகளை மஞ்சு அக்காவை வைத்து தொடங்கி, தங்களை வைத்து முடித்தேன்.

    நன்றியுரையில் தங்களை வைத்து தொடங்கி அப்படியே வெளியே மஞ்சு அக்காவோடு முடிக்கின்றேன் சகோ.

    தாங்கள் எதிர்பார்க்கும் பதிவினை பதிவிட முயற்சிக்கின்றேன் சகோ.

    வாழ்த்துகளுக்கும், பாராட்டுதலுக்கும், தொடர்ந்து ஒரு வார ஊக்கத்திற்கும் நன்றிகள் பற்பல சகோ.

    நன்றியுடன்,

    ReplyDelete
  27. >{மஞ்சுபாஷிணி said...

    பெண்களின் ஏழு பருவங்களை மிக அருமையாக குறிப்பிட்டு எழுதி இருக்கே தம்பி...

    அறிமுகப்படுத்தப்பட்ட விதம் மிக சிறப்பு....

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அருமையானபதிவுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும்..

    த.ம. 5}<

    கருத்தினைக் கண்டு மகிழ்ச்சி அக்கா.

    ReplyDelete
  28. >{மஞ்சுபாஷிணி said...

    வலைச்சர ஆசிரியர் பணி ஏற்று, பொறுப்பாக சிறப்பாக பணியாற்றியது விரைவில் முடித்தாலும் சொல்ல வந்ததை மிக அருமையாக சொன்னதும் எத்தனையோ வேலைப்பளுவுக்கு இடையிலும் மிக அற்புதமாக ஒவ்வொரு நாளும் மிக அருமையாக எழுதியதற்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பி...}<

    தங்களின் ஆசியே இதற்கும் மூலகாரணம் என்பது என்னுள்ளுணர்விற்கு மட்டுமே தெரிந்த விடயம் அக்கா.

    நல்ல நினைவலைகளோடு வலைச்சரத்தின் பொறுப்பை இறக்கி வைப்பதில் மகிழ்ச்சி அக்கா.

    ReplyDelete
  29. வாக்களித்த நால்வருக்கும் (dindiguldhanabalan manjuஅக்கா, abdulbasith rrajja ) என் பணிவான நன்றிகள்

    ReplyDelete
  30. மிக அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. பேரண்ட்ஸ் கிளப்பை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  32. பேரண்ட்ஸ் கிளப்பை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete