Saturday, November 3, 2012

எங்கள் சரவெடி 7

     

72) PiT photography in Tamil  புகைப்படத்தில் ஆர்வமிருப்பவர்கள் ரசிக்கக் கூடிய தளம். ஒவ்வொரு மாதமும் 20 தேதிக்குள் படங்கள் 'சப்மிட்' செய்யச் சொல்லி சில 'தீம்'களைச் சொல்லி விடுவார்கள். அந்தத் 'தீமி'ல் நம்மிடம் இருக்கும் புகைப்படங்களையோ அல்லது புதிதாக எடுத்தோ அவர்கள் சொல்லும் நிபந்தனைகளுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டோக்ராஃபி பற்றி நிறையத் தகவல்களும் இந்தத் தளத்தில் அறிந்து கொள்ள முடியும். ஜீவ்ஸ் நடத்தும் இந்தத் தளத்தில் பிரபல புகைப்பட நிபுணர் ராமலக்ஷ்மியும் ஒரு நடுவர்.

73) சும்மா சாதனை அரசி திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் கவிதைப் பக்கம். பன்முகத் திறமை கொண்ட பதிவர்களில் இவரும் ஒருவர். 'ங்கா', 'சாதனை அரசிகள்' என்று இரு புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். குமுதம் விகடன், கல்கி என்று நிறைய வார இதழ்களில் கவிதை, கதைகள் எழுதியுள்ளார். குங்குமம் வார இதழில் இவர் கதை வெளியான வாரமே மூன்றாம் சுழி அப்பாதுரையின் கதை ஒன்றும் பிரசுரமாகியிருந்தது! பெண்களுக்காக வரும் பத்திரிகைகளில் இவர் எழுத்துகளும் திருமதி ராமலக்ஷ்மி எழுத்துகளும் வருவது வாடிக்கை! நிறைய கவிதைகள் எழுதும் இவரது கவிதை ஒன்று இங்கே.

74) மணிராஜ் இராஜராஜேஸ்வரி மேடம் பதிவுகளில்தான் அசத்துவார் என்றில்லை. அவர் பின்தொடரும் ப்ளாக்குகள் எண்ணிக்கைக் கூட தலை சுற்ற வைக்கிறது! :)) ஆன்மீகப் பதுவுகளின் அரசி என்று சொல்லலாம். இவர் பதிவுகளில் இவர் தரும் விவரங்களும் கண்கவரும் படங்களும் கண்ணைக் கட்டி நிறுத்தும். பிரமிக்க வைக்கும் விதத்தில் தினமொரு பதிவு இடுபவர். மாதிரிக்குஒன்று திருநாகேஸ்வரர் பற்றி.  இன்னொன்று அனுமன் பற்றி.

75) இந்திராவின் கிறுக்கல்கள்  மதுரையிலிருந்து எழுதும் பதிவர். மனித உடல்கள் பற்றி இவர் தரும் தகவல்கள். இவர் பகிர்ந்துள்ள சில காமெடிப் புகைப் படங்கள். 

76) உள்ளதைச் (உள்ளத்தைச்) சொல்கிறேன் என்ற பெயரில் உள்ள வலைப்பக்கத்துக்குச் சொந்தக்காரர் சாய்ராம் கோபாலன். தொடர்கதை ஒன்று ஆரம்பித்தார். அப்படியே நிறுத்தி விட்டார்! நடிகர் நாகேஷின் பரம ரசிகர். ஜாலியாகவே பல பதிவுகள் எழுதுபவர், வேலை டென்ஷனால் சமீபத்தில் ஒன்றும் எழுத முடியவில்லை என்கிறார்.

77) வந்துட்டான்யா வந்துட்டான் வலைத்தளத்தில் எழுதும் 'பெயர் சொல்ல விருப்பமில்லை' எல்லா விஷயங்களையும் 'டேக் இட் ஈசி' என்று எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுப்பது போல பதிவுகள் இடுபவர். ஏதோ சீரியசாக சொல்லப் போகிறார் என்று படித்துக் கொண்டு வந்தால் படித்து முடிக்கும்போது சிரித்து விடுவோம்! மாம்பழம் வாங்க என்ன செய்ய வேண்டும்? இங்கே படியுங்கள். பதினெட்டு வயது ஆனவர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு இது. :)) 

78) வகுப்பறை 3551 'பின்தொடர்வாளர்'களைக் கொண்ட தளம். ஜாதக பலன்கள் குறித்து அலசுகிறார், கற்றுத் தருகிறார் வாத்தியார் திரு SP VR சுப்பையா. இங்கு வரும் பின்னூட்டங்களும் நேர்த்தியாக இவற்றை அலசும். எம் ஜி ஆரின் ஜாதகம் பற்றி இங்கே. அரசனைப் போல் எவன் வாழ்வான் என்று அலசும் பதிவு.

79) வித்யா சுப்பிரமணியம் அறிமுகம் தேவயில்லா பிரபல எழுத்தாளர். இவரைப் பற்றி இவரே சொல்வதைக் கேட்க இங்கு  போய்ப் பாருங்கள்.   அவருக்கு அடிபட்ட அனுபவத்தைக் கூட நகைச்சுவையாகவே சொல்லிய்டிருக்கும் அவர் பதிவு. இந்த வருடத்தில் மூன்றே பதிவுகள் போட்டிருக்கிறார்.

80) சமையல் அட்டகாசங்கள் ஜலீலா கமால் தலைப்பே இவர் வலைப் பக்கப் பொருளடக்கத்தைச் சொல்லி விடும்! சென்னையில் உள்ள சென்னைப் பிளாசா இவர்களுடையதுதான். சைவத்துக்குஎண்ணெய்க் கத்திரிக்காய்க் கிரேவியும்,  அசைவத்துக்கு சவுராஷ்டிரிய சிக்கன் கிரேவியும், அப்புறம் சமையல் அல்லாத பதிவாக துபாயில் பேச்சிலர்கள் வாழ்க்கை பற்றிய பதிவு.

81) என் இனிய இல்லம். பெரும்பாலும் அசைவ, கொஞ்சம் சைவ சமயல்களைச் சொல்லும் வலைப்பக்கம்.  அழகுக் குறிப்புகளும் உண்டு!

82) வந்தே மாதரம்  அறிமுகம் தேவை இல்லைதான். கணினி சம்பந்தமாகவும், புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும் அறியத் தரும் வலைப் பக்கம். மிகவும் உபயோகமான பக்கம். நம் சந்தேகங்கள் யாவுக்கும் இங்கு பதிலிருக்கும். உதாரணத்துக்கு விண்டோஸ் 8 எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றிய பதிவு. முகநூலின் புதிய வசதிகளை அறியத் தரும் பதிவு.

83) அலைவரிசை. அகமது இர்ஷாதின் ப்ளாக். முன்பு சுறுசுறுப்பாகப் பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தார். சமீபத்தில் நாங்களும் அங்கு சென்று நாளாகி விட்டது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்! அவரது கவிதை ஒன்று இங்கே. கதை ஒன்று இங்கே.  எங்கள் நண்பர்தான். அவரும் எங்கள் பக்கம் வந்து நாளாச்சு! :))

84) கொஞ்சம் வெட்டிப் பேச்சு  பரபரப்பாகப் பலப் பதிவுகள் எழுதிக் கலக்கிக் கொண்டிருந்தவர் சித்ரா. தற்சமயம் வலையுலகிலிருந்து சற்றே ஒதுங்கி இருக்கும் இவர் மீண்டும் வலையுலகம் பக்கம் திரும்ப வேண்டும் என்பது எங்களைப் போன்ற அவரது எழுத்தின் ரசிகர்களின் ஆர்வம், எதிர்பார்ப்பு. அமெரிக்காவில் குகைக்குப் போன அவர் அனுபவங்களின் பதிவு.  தொடர்பதிவு அலையில் சிக்கிய அவரின் பதிவு ஒன்று. 

85) ஆதிமனிதன் ஆதியில் இவரும் எங்கள் ஆசிரியர்களில் ஒருவரும் ஒரே ஊர் என்ற பாசம் ஒன்றும் உண்டு! அமெரிக்கர்களிடம் இவருக்குப் பிடிக்காத 5 அம்சங்கள் என்ற இவரின் பதிவு இங்கே.   சுஜாதா பற்றிய இவரின் பதிவு.

86) சுஜாதா தேசிகன் சுஜாதா பற்றி நிறைய ஆங்காங்கே எழுதி இருக்கிறார். சுஜாதாவின் சகோதரர் எழுதிய பதிவொன்று இங்கே. 

87) ஆனந்த வாசிப்பு பத்மநாபன். சுஜாதாவின் பரம ரசிகர். தொடர்பதிவு அலையில் எங்களிடம் சிக்கி எழுதிய இவரின் தொடர் ஒன்று  இங்கே. இப்பொழுதும் அவர் 'எங்களின்' ஒரு தொடர்பதிவு அழைப்பை மிச்சம் வைத்திருக்கிறார். ரா கி ர வின் ஒரு பிடி உப்பு பற்றிய இவரின் பதிவு.



(தொடரும்!) 
    
   

19 comments:

  1. தெரிந்தவர்களுக்கிடையில் சில புதிய அறிமுகங்களும் இங்கே கிடைத்தன. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அட சொன்னமாதிரியே சரவெடியின் கொண்டாட்டம் தொடங்கிவிட்டதேப்பா...

    அருமையான அறிமுகங்கள்.... நான் அறிந்தவர்கள் பெரும்பான்யோர் இதில் என்பதில் மனம் மிக்கமகிழ்ச்சி எனக்கு...

    இராஜராஜேஸ்வரி

    தேனம்மை லட்சுமணன்

    ஜலீலாகமால்

    வித்யாசுப்ரமண்யம்

    அறியாத தளங்களின் அறிமுகமும் கண்டேன்....

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் எங்கள்ப்ளாக் குழுவினருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்களுக்கும்....

    ReplyDelete
  3. சிறப்பான சரவெடி...

    பல பிரபலங்கள் இன்றைய சரவெடியாக....

    தொடரட்டும்....

    ReplyDelete
  4. அறியாத சில தளங்கள்... சில தளங்கள் நீங்கள் சொன்னது போல் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    இன்னும் 13 அறிமுகங்கள் உள்ளது நூறை நெருங்க... நன்றி... வாழ்த்துக்கள்...

    tm2

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவுகள்.

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள். நிறைய பேர் தெரிந்தவர்கள். படிக்காத தளங்களுக்கு சென்று வர வேண்டும். சித்ரா, பத்மநாபன் ஆகியோர் மீண்டும் பதிவுலகுக்கு வர வேண்டும்.

    ReplyDelete
  7. வழக்கம் போல் சிறப்பான தொகுப்பு. அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.

    PiT குறித்த அறிமுகத்துக்கும் நன்றி. எட்டு பேர்கள் கொண்ட குழுவால் இயங்கி வருகிறது தளம்.

    சித்ரா மீண்டும் எழுத வர வேண்டும்.

    ReplyDelete
  8. சதமடித்துச் சாதனை புரிவீர்கள் போலிருக்கிறதே?

    அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. இனிய இல்லத்தின் சமீப லசான்யா ரெசிபி அவசியம் செய்து பார்க்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  10. இராஜராஜேஸ்வரியின் சிறப்பு ஏறக்குறைய தினமொரு பதிவு - இதைத் தொடர்ந்து செய்து வருவது. அனேகமாக எல்லாமே கோவில் கடவுள் பற்றியது. அலுக்காமல் அலுத்துவிடாமல் எழுத மிகக் கடினமான டாபிக்.

    ReplyDelete
  11. நீங்கள் ரசித்த பல பதிவுகளை இங்கு சரவெடியாக அறிமுகப்படுத்த போகிறோம் என்றூ சொன்னதற்கு ஏற்றார்போல்
    சரவெடியில் தூள் கிளப்பி கொண்டு இருக்கிறீர்கள்.

    வாழ்த்த்துக்கள்

    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    என்னை அழகுற அறிமுகபடுத்தி என் கடையையும் பற்றி இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.


    http://www.chennaiplazaik.com/

    http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/blog-post_1.html

    http://jaleela-duwa.blogspot.com/

    ReplyDelete
  12. என்னை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளதை வந்து சொன்ன தனபாலன் சாருக்கும் நன்றி.

    ReplyDelete
  13. ஆஹா, இதில் உள்ள அறிமுகங்கள் யாவும் அசத்தலோ அசத்தல் தான்.

    குறிப்பாக நான் அறிந்த

    73] ’சும்மா’த் தங்கம்

    74] ஜொ லி க் கு ம் வை ர ம்

    79] வைடூர்யம்

    80] கோமேதகம்

    84] நவரத்தினம்

    மற்றவைகளை இனிமேல் தான் போய் அறிந்து கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் என்
    மனமார்ந்த பாராட்டுக்கள்,
    இனிய நல்வாழ்த்துகள்.

    ஜொலிக்கும் வைரம் முதலிய நவரத்தினங்களை அறிமுகம் செய்த உங்கள் கை விரலுக்கு ஓர் நவரத்தின மோதிரமே போடலாம் தான்.

    என்ன செய்வது? தயவுசெய்து நான் போட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

    மறக்க முடியாத சூப்பரான அறிமுகப் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    அன்புள்ள
    VGK



    ReplyDelete

  14. நன்றி பாலகணேஷ்...

    நன்றி மஞ்சுபாஷிணி ...

    நன்றி வெங்கட் நாகராஜ்..

    நன்றி திண்டுக்கல் தனபாலன்...

    நன்றி முனைவர் திரு குணசீலன்......

    நன்றி கோவை2தில்லி...

    நன்றி ராமலக்ஷ்மி...

    நன்றி அப்பாதுரை...

    நன்றி ஜலீலா கமால்...

    நன்றி வைகோ ஸார்...

    ReplyDelete
  15. Thank you very very bery much.

    ReplyDelete
  16. இதில் ராஜராஜேஸ்வரி, சுப்பையா வாத்தியார், பிஐடி தவிர மற்றவை முற்றிலும் புதிது. எந்தக் காலத்தில் போய்ப் படிக்கிறதுனு நினைச்சால் தலை சுத்தல்! :)))))

    ஏதோ அவசரமாச் சொன்னாப்போல் இருக்கு.

    ReplyDelete
  17. எனது தளத்தை சிறப்பாக அறிமுக்ப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete