Sunday, November 4, 2012

எங்கள் சரவெடி 8


                   
88) மனோ சாமிநாதன் எங்கள் தஞ்சாவூர்க்காரர்! அவரின் முத்துசிதறல் வலைப்பூவில்   பயணக் கட்டுரைகள் முதல் கதை கவிதை மருத்துவக் கட்டுரைகள் ( டெங்கு பற்றி இங்கு) வரை  பலசுவைகளிலும் பதிவுகள் போடுகிறார்.  
   
89)  கைமணம்   அங்கு இருக்கும் லிஸ்ட்டில் உங்கள் தேவையைக்  க்ளிக் செய்து அந்தந்த ரெசிப்பியை தெரிந்து கொள்ளலாம்.
  
90)  தளிர் s. சுரேஷ் நடத்தும் வலைப்பூ. தன் வலைப்பூ லிங்க்குடன் எங்கள் பக்கம் வந்தார். அப்போது  அறிமுகம். பாப்பா மலர் என்ற பெயரிலும் பதிவுகள் இடுகிறார்.  சுரேஷ் எழுதிய பேய்க்கதை (தொடர்கதை) ஒன்று இங்கே. சுரேஷ் முயற்சித்துள்ள 'லிமரைக்கூ'க்கள்.
  
91) ரஞ்சனி நாராயணன் மூத்த  பதிவர்களில் ஒருவர்.சென்னையில் நடந்த பதிவர்கள் சந்திப்பில் இவர் பற்றி அறிந்து இவர் வலைத்  தளம் சென்றபோது இவர் தன்னை விட இன்னும் மூத்த பதிவர் ஒருவரைப் பற்றி அறிமுகம் செய்திருந்தார். மங்கையர் மலரில் மகளின் திருமணம் தந்த அனுபவத்தில் இவர் எழுதிய முதல் கதையும், அப்புறம் அவள் விகடன் இவரின் படைப்புகள் வெளிவந்திருப்பதாகச் சொல்கிறார். தன்னைப் பற்றிச் சுருக்கமாக இங்கு சொல்கிறார்.  தன்னை பாதித்த கவிதை  ஒன்றின் லிங்க் கொடுத்து ரசிக்கச் செய்கிறார்.
    
92) திருமதி ரஞ்சனி நாராயணன் அறிமுகப் படுத்திய  மிக மூத்த பதிவர் காமாட்சிப்பாட்டி  சொல்லுகிறேன் என்ற பெயரில் வலைப்பூ நடத்தி வருகிறார். நிறைய சமையல் பதிவும்,  பஜனை நினைவுகள்கதையுமாக  இவரைப் பற்றி சைபர்சிம்மன் தன்னுடைய வலைப்பூவில் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 30 ம் தேதி இரவு FM ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் (மிர்ச்சி என்று நினைவு) இவரது ப்ளாக் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  
    
93) வடுவூர் குமார் நாகைக்காரர்.  2006 லிருந்து பதிவுலகில் இருப்பவர். எங்கள் ஆரம்பகால, ஆதரவு கொடுத்த, முதல் வாசகர்களில் ஒருவர்! கட்டுமானத்துறையில்  பணிபுரிகிறார். துறை சம்பந்தமாகவும், கிரிக்கெட் பற்றிய பதிவுகளும், புத்தகங்கள்  பற்றியும் இன்னும் நிறைய  உள்ளார். இவர் குறிப்பிட்டிருக்கும் இந்த சுஜாதா புத்தகம் என்னவென்று,  இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 
    
94) சி. கருணாகரசு  அவர்களின் 'அன்புடன் நான்' வலைப்பக்கம். எங்களுக்கு மறந்தே போய்விட்டது, 
இவர் பக்கம். கடைசியாக அவர் குழந்தைக்கு பெயர் வைத்தபோது சென்றது என்று ஞாபகம்! கவிதைகள் நிறைய எழுதுவார்.  இவரது வெண்பா ஒன்று.  வானொலியில் கவி பாடியிருக்கிறார்.
   
95) To 98) அன்புள்ள பதிவரே... நீங்க மதுரையா? நோ...நோ... அடுத்து சிதம்பரமான்னு கேட்கப் போறேன்னு நினைக்க வேண்டாம். மதுரைப் பதிவர்களை ஒன்று திரட்ட ஒரு இடம். அது எந்த இடம்?  இந்த இடம்! நீங்க இங்க 'என்ரோல்' பண்ணிட்டீங்களான்னு கேட்கத்தான்! 
     
நடந்தவைகளை அசைபோட ஒரு இடம். எந்த இடம்? இதோ, இந்த  இடம்!  எந்த மாதிரி அசைபோடலாம்?  இது மாதிரி! மதுரை மாநகரம் எங்கள் ஊரும்தான்! எனவே அங்கு  நாங்களும் இடம் பிடிக்கலாம்! என்ன நாஞ்சொல்றது!  அங்கு பட்டியலில் உள்ள மதுரைப் பதிவர்கள் இங்கு பதிவிடுவதில் இடம் பிடிக்கிறார்கள். 
     
பக்கத்துக்குச் சொந்தக்காரரின் பதிவொன்று இங்கே! படித்ததில் பிடித்தது 
தளத்தில் தலைப்புக்கேற்ற படைப்புகள். யாருடையது இத்தனையும்? cheena (சீனா)ஐயாதான்! அவர் தொடரும் லிஸ்ட்டில் 'எங்கள்' இருக்கிறதா என்று கவனமாக தேடியது ஒரு சுவாரஸ்யம்.
     
99) கயல்விழி முத்துலட்சுமி முன்னாள் வலைச்சரப் பொறுப்பாசிரியர்களில் ஒருவர். தற்சமயம் தில்லியில் இருக்கிறார் நாங்கள் கூட முன்...பு எப்போதோ ஓரிரு முறை இந்தத் தளம் வந்த நினைவு உள்ளது! தளத்தின் பெயர் 'சிறு முயற்சி. கவிதைகள், கதைகள், ஆன்மிகம், புகைப் படங்கள் என்று அறுசுவைப் பதிவர். எங்களுக்கும் இசை பிடிக்கும் என்பதாலும் டிசம்பர் சங்கீத சீசன் வந்து விட்டதாலும் இந்தப் பதிவை இங்கு தருகிறோம்! கவிதை ஒன்று.வித்தியாசமான கேள்வி பதில் பதிவொன்று. பதிவர்களிடம், மன்னிக்கவும், பிரபல பதிவர்களிடம் கேட்கப் பட்ட கேள்விகளும், அவர்களின் பதில்களும்.
    
100) பிகேபி அற்றை நாட்களில் (!) எக்கச்சக்க தொழில் நுட்பப் பதிவுகள் போட்டிருக்கிறார். 2004 லிலிருந்து பதிவுலகில் இருக்கும் இவரது பெயர் என்னவென்று தெரியாது. பட்டுக்கோட்டை பிரபாகர் என்று நினைத்துக் கொள்வோம்! ஒவ்வொரு பதிவின் முடிவிலும் ஒரொரு புகழ் பெற்ற தமிழ், ஆங்கில புத்தகங்கள் 'ஈ புக்'காக தரவிறக்கத்துக்குத் தருவார். 
           
பதிவின் முடிவில் அவர் தரும் பிரபலங்களின் வார்த்தைகள் பொன்மொழிகளும் சுவாரஸ்யமானவை. தபால்தலை பற்றிய பதிவொன்று இங்கே! :)) கணினியில் ஆண்டிராயிட் தொழில்நுட்பம் உபயோகிப்பது பற்றிய பதிவு. உலகம் அழியும் என்று எதிர்பார்க்கப்படும் டிசம்பர் 2012 பற்றிய பதிவு!   
                       
101) சந்ருவின் பக்கங்கள் இவரும் எங்கள்  ஆரம்ப காலத் தோழர். எங்கள் சமகாலத்தில் பதிவெழுத ஆரம்பித்தவர். ஊடகங்களில் தமிழ்க் கொலை பற்றிய அவரின் பதிவொன்று இங்கே.  'வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்' என்று தொடங்கினால் உங்களுக்கு யார் ஞாபகம் வரும்?
          
102) நீச்சல்காரன். நான் கற்றவை என்ற பெயரில் இன்டர்நெட் ரகசியங்கள் என்ற உபயோகமான பகிர்வுகள் இங்கே. ப்ளாக் தொடங்குவது எப்படி என்று எழுதியிருந்தார். ஒருமுறை எங்கள் தளத்தில் சிறு பிரச்னை ஒன்று வந்தபோது உதவியவர். அவரின் ட்விங்கிள் ட்விங்கிள் மொழிபெயர்ப்பு இங்கே! 
    
103) வெண்ணிற இரவுகள் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வார். அவரது கவிதை ஒன்று இங்கே. சாரு நிவேதிதா  ரசிகராக இருந்தபோது அவர் புத்தகங்கள் வெளியீடு பற்றிய அவரின் பகிர்வு.
    
104) கணினி மென்பொருட்கள் கூடம் ஆயிரம் பின்தொடர்வாலர்களை நெருங்கிக்  கொண்டிருக்கும் தளம். 
தளத்தின் பெயர் உள்ளடக்கத்தைச் சொல்லும்! குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லாமல் அங்கு சென்று பார்த்தால், படித்தால் மிக உபயோகமாகும் தளம்.
     
105)  பனித்துளி சங்கர் கவிதைக் காதலர். அவரின் ' முத்தக் குறிப்புகள்' இன்று ஒரு தகவலாய் தருவது சுவாரஸ்யம். அறிவியல் பற்றி அவரின் தொகுப்பு.
        
106) இது இமாவின் உலகம் - இமா. எங்கள் மேய்ச்சல் பக்கங்களில் சென்ற வாரம் இடம் பிடித்திருக்கிறார். " என் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... " என்று கூறுகிறார்! 
            
107) கற்றலும் கேட்டலும் - ராஜி அவர்கள், நல்ல பதிவுகள் பல எழுதி வெளியிட்டுள்ளார். இதோ அவரது சமீபத்து ரகளை! 
     
108) Balhanuman's Blog இவருடைய பின்னூட்டங்கள் ஆங்காங்கு பார்த்திருக்கிறோம். சமீபத்தில் மோகன் குமார்,  இவர் சென்னை வந்த விவரம் எழுதி இருந்தார்.  சுஜாதா அணுசக்தி வேண்டாம் என்று சொன்ன பதிவு. யேசுதாஸ் பற்றி. உள்ளங்கையில் உலகம்..
    
இவைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்! 

109) தினமலர் நாளிதழின் கணினி மலர் உபயோகமான ஒன்று என்று நீங்கள் ஒரு வேளை நினைத்திருந்தால் அதன் அத்தனை இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்!

110) கணினி செயல்பாடுகள் மென்பொருள், போன்றவைகளை அறிய உதவி பெற்றிட மற்றொரு தளம். தேன் தமிழ்.

111) தமிழ்நாடு பாடநூல்களை படிக்க டவுன்லோட் செய்ய தமிழ் நாடு அரசின் பாடநூல் நிறுவனத்தின் தளம்.

112) தமிழ் இலக்கியம் சமஸ்க்ரிதம் போன்றவற்றின் பொருள் அறிய, இலக்கியத்தில் ஊறித் திளைக்க இன்னும் பலப்பல பயன்பாடுகள் உடைய விர்ச்சுவல் வினோத்தின் தளம். Avalokitam. அவசியம் சென்று பாருங்கள்.

113) தொலைக்காட்சிப் புகழ் நிஜந்தனின் வலைப் பக்கம். 

114) வைரமுத்து கவிதைகள் படிக்க...  

115) பாடும் நிலா பாலு என்ற பெயரில் எஸ் பி. பாலசுப்ரமணியம் பாடல்களைப் பட்டியலிட்டு, கேட்க இறக்கிக் கொள்ள ஒரு தளம்.

116) ஆங்கில நாவல்கள் படிக்க இறக்க ஒரு தளம்.

117) தமிழ் டிஜிடல் டிக்ஷனரி.

118) கணினி மென்பொருட்களுடன், திரை விமர்சனம் உள்ளிட்ட பல்சுவைப் பதிவுகளின் தளம். நிலவைத்தேடி.



விடை பெறுமுன் ஒரு வேண்டுகோள்! 

நீங்கள் ஒரு வலைப் பதிவரா? நல்ல தகவல்களை, சுவையான அனுபவங்களை, பயன்படும் பதிவுகளை, ஒரு மாதத்திற்கு ஒன்றாவது பதிவிடுவது உண்டா? விவரங்களையும் உங்கள் பதிவு சுட்டிகளையும் எங்கள் ப்ளாக் மின்னஞ்சலுக்கு (engalblog @ gmail.com) அனுப்புங்கள். எங்கள் ப்ளாக் வலைப் பதிவிலோ அல்லது எங்கள் மற்ற வலைப் பக்கங்களிலோ அந்த விவரங்களைப் பகிர்கிறோம். அல்லது அடுத்தடுத்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்பவர்களுக்கு அந்த விவரங்களை அளிக்கின்றோம்.   
=================    =================    ===============   

வலைப் பதிவுலக வாசகர்களுக்கு ... 

'மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே' என்று கேள்விப் பட்டிருப்போம். வலைப் பதிவர்களும், பல வலைப் பதிவுகளின் வாசகர்களே! வலைப் பதிவில்லாத வாசகர்கள் சிலரும் உள்ளனர். 

ஒரு வலைப் பதிவராக நாம் வாசகரிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றோமோ அதை ஒரு வாசகராக நாம் மற்ற வலைப் பதிவர்களுக்கு செய்யலாமே! 

பிடித்த பதிவுகளை சிலாகித்து ஒரு கமெண்ட். 

குறைந்த பட்சமாக, ஒவ்வொரு பதிவின் அடியிலும், (எங்கள் ப்ளாக் பதிவில் " very good / good / no good என்று) பெட்டிகள் இருக்கும் இதில் ஏதாவது ஒன்றில் கிளிக்கிச் செல்லலாம். சில தளங்களில் "funny / interesting / cool " என்று  காணப்படும்.  நீங்க செய்யவேண்டியது எல்லாம் ஏதாவது ஒரு பெட்டியில் ஒரே ஒரு கிளிக். அவ்வளவுதான்! பதிவருக்கு உங்கள் feed-back சென்றடைந்துவிடும். 

ஏதாவது ஒரு பதிவு அல்லது ஒரு பதிவில் உள்ள ஒரு கருத்தோடு நீங்கள் ஒத்துப் போகவில்லை என்றால், அதையும் நாகரீகமான, எவர் மனதையும் புண்படுத்தாத பின்னூட்டமாக இடலாம். அல்லது ஒன்றும் சொல்லாமல், வேறு பதிவு எதையாவது படிக்க செல்லலாம். எந்தப் பதிவிலும் விதண்டாவாதப் பின்னூட்டங்கள் போடாதீர்கள். இதனால் உங்களுக்கு எந்தப் பயனும் விளையாது. 

பதிவுலகத்துக்கும் பொருந்தி வருகின்ற ஒரு பைபிள் வாசகம்: "எப்படி தீர்க்க நினைக்கின்றீர்களோ, அப்படியே தீர்க்கப்படுகின்றீர்கள்!"    
==================== 

'அ' வில் ஆரம்பித்தோம். முடிக்கும் பொழுது,  திருக்குறள் போல 'ன்' என்ற எழுத்தோடு முடிக்க வேண்டும் என்று ஆவல். 
     
இந்த வலைச்சர, சர வெடிகளுக்காக, இராப்பகல் கண் விழித்து, பதிவர்களையும், பதிவுகளையும் பற்றி எழுதி, சுட்டிகள் கொடுத்து, மற்ற ஆசிரியர்களைக் கலந்தாலோசித்து, கலக்கிய சக ஆசிரியர் 'ஸ்ரீராம்' என்று நான் சொல்லாமலேயே நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். மற்ற ஆசிரியர்கள் எல்லோரும் அவரிடம், எங்களுக்குப் பிடித்த சில பதிவுகளைக் கூறினோம். அவர் தொகுத்தார். 
   
வலை விவரங்களுக்காக, பகலில் மட்டும் கண் விழித்து, சில விவரங்களைத் தொகுத்து, சில மொழி பெயர்ப்புகள் செய்த ஆ'சிரிய'னாகிய நான், உங்கள் எல்லோருடைய வருகைக்கும், பாராட்டுகளுக்கும் எங்கள் எல்லோர் சார்பிலும் நன்றி கூறி, வணக்கம் செலுத்தி விடை பெறுகிறேன்! 
       
அன்புடன்,
கௌதமன். 
         

28 comments:

  1. அனைத்தும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    (109-120) குறிப்பிட்ட அனைத்து தளங்களும் அனைவருக்கும் மிகவும் உதவும்... மிக்க நன்றி...

    முடிவிலும் நல்ல பல கருத்துக்கள்...

    இந்த வாரம் முழுவதும் சிறப்பாக இருந்தது... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. சிறப்பான வாரம்....

    எத்தனை எத்தனை பதிவர்கள், பதிவுகள் என வலைச்சரத்தில் ஒரு ரெக்கார்ட் செய்து விட்டீர்கள்....

    வாழ்த்துகள். தொடர்ந்து “எங்கள் பிளாக்”-ல் சந்திப்போம்....

    ReplyDelete
  3. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,

    என்னையும் அதைவிட எனக்கு நெருக்கமான (பார்க்காமலே நட்பு!) திருமதி காமாட்சியையும் அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்.

    இரண்டாவது முறையாக தொடர்ந்து அறிமுகம் ஆகியிருக்கிறேன். மிகவும் சந்தோஷம்! உச்சி குளிர்ந்தே போய்விட்டது.

    அடுத்த வார வலைச்சர ஆசிரியரும் அறிமுகப்படுத்தி விட்டால் Hat Trick தான்!

    யாரங்கே!
    அடுத்த வார ஆசிரியரிடம் என் கடைசி ஆசையை - வேண்டுகோளை சொல்லவும்!

    நன்றி, நன்றி, நன்றி!
    கைம்மாறு அறியேன்!




    ReplyDelete
  4. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,

    வலைச்சரத்தில் எனக்கு இது இரண்டாவது அறிமுகம். முதல் முறை அறிமுகப்படுத்தியவர் நண்பர் மின்னல் வரிகள் பால கணேஷ்.

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  5. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஆஹா இன்றைய அறிமுகங்களில் என் நெருங்கிய உறவினர்கள் நிறைய பேர் உள்ளனர்.

    1) என் அன்புச்சகோதரி
    திருமதி மனோ சுவாமிநாதன் [88]

    2) என் அன்புச்சகோதரி
    திருமதி ரஞ்சும்மா [91]

    3) என் அன்புக்குப்பாத்திரமான
    திருமதி காமாக்ஷி மாமி [92]

    4) என் அன்பின் சீனா ஐயா [98]

    5) என் அன்புக்குரிய
    தங்கச்சி இமா [106]

    6) என் அன்பு மகள்
    கற்றலும் கேட்டலும் ராஜி [107]

    இவர்கள் அனைவருக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    >>>>>>>>>>>

    ReplyDelete
  7. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    அறிமுகம் செய்துள்ள தங்களுக்கும் என் நன்றிகள்.


    >>>>>>>>>>>

    ReplyDelete
  8. அம்மாடியோவ்! எத்தனை அறிமுகங்கள். மேற்கொண்ட பணியை சிறப்பாக செய்து முடித்த எங்கள் பிளாக் சகோதர்களுக்கு பாராட்டுகள். அறிமுகமான அனைவருக்கும் என் அன்பு.

    ReplyDelete
  9. இந்தவாரத்தில் தங்களின் கடும் உழைப்பும்,

    அதற்கு பக்கபலமாக இருந்துள்ள

    “ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்”

    அவர்களின் அருளும் என்றும் வலையுலகில் உள்ள பதிவர்களால் மறக்க முடியாதது. ;)))))

    மனதுக்கு மிகவும்
    சந்தோஷமாக உள்ளது.

    வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றிகள்.

    >>>>>>>>>

    ReplyDelete
  10. //விடை பெறுமுன் ஒரு வேண்டுகோள்!//

    மிகவும் நியாயமாக உள்ளது.

    //'மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே' என்று கேள்விப் பட்டிருப்போம். வலைப் பதிவர்களும், பல வலைப் பதிவுகளின் வாசகர்களே! வலைப் பதிவில்லாத வாசகர்கள் சிலரும் உள்ளனர்.

    ஒரு வலைப் பதிவராக நாம் வாசகரிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றோமோ அதை ஒரு வாசகராக நாம் மற்ற வலைப் பதிவர்களுக்கு செய்யலாமே!

    பிடித்த பதிவுகளை சிலாகித்து ஒரு கமெண்ட். //

    இதுவரை எனக்குத் தெரியும். ஓரளவு செய்துகொண்டே இருக்கிறேன்.


    //குறைந்த பட்சமாக, ஒவ்வொரு பதிவின் அடியிலும், (எங்கள் ப்ளாக் பதிவில் " very good / good / no good என்று) பெட்டிகள் இருக்கும் இதில் ஏதாவது ஒன்றில் கிளிக்கிச் செல்லலாம். சில தளங்களில் "funny / interesting / cool " என்று காணப்படும். நீங்க செய்யவேண்டியது எல்லாம் ஏதாவது ஒரு பெட்டியில் ஒரே ஒரு கிளிக். அவ்வளவுதான்! பதிவருக்கு உங்கள் feed-back சென்றடைந்துவிடும். //

    ஆஹா இது புத்தம் புதிய செய்தியாக இனிமையாக உள்ளது.

    அப்படியே இனி செய்து விடுகிறேன்.

    ஒரு சிறு சந்தேகம்:

    /பதிவருக்கு உங்கள் feed-back சென்றடைந்துவிடும்./

    நம் பெயரும் பதிவருக்குத் தெரிய வருமா? என்பதை மட்டும் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    VGK

    ReplyDelete
  11. சர வெடியில் இந்த ஊசி பட்டாசையும் இணைத்ததற்கு மிக்க நன்றி ... வித்தியாசமும் சுவாரசியமும் நிரம்பிய எங்கள் ப்ளாக்கின் சர சரமான வெடிகளும் அருமை ....

    சரவெடி பற்றிய செய்தியளித்த திண்டுக்கல் தனபால் அவர்களுக்கு மிக்க நன்றி .....

    ReplyDelete


  12. பிரமிக்க வைக்கும் உழைப்பு. மிகச் சிறப்பான வாரம். எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றியும்.

    ReplyDelete
  13. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் மீண்டும் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள்கௌதமன்! இதுவரைஇல்லாத அளவிற்கு மிக நிறைய தளங்களை உங்கள் அறிமுகத்தில் அறிந்து கொள்ள முடிந்தது! கடைசியில் நீங்கள் தரும் டிப்ஸ்களும் மிக அருமை! நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  15. இனிய சரவெடியின் அட்டகாசமான நிறைவு நாள் இன்று....

    அடேங்கப்பா.. ஒரு கல்யாணம் நடந்துமுடிந்ததும் எப்படி எல்லோரும் ஒரே கொண்டாட்டமும் சிரிப்பும் வேடிக்கையுமாக இருந்து கல்யாண விஷேஷத்தைப்பற்றி சந்தோஷமாக ஒருவரிடம் ஒருவர் பகிர்ந்துக்கொண்டு கிளம்பும் சமயம் மறக்காமல் தேங்காய்ப்பை பழம் புடவைக்கொடுத்து ஆசிர்வாதம் கொடுத்து பெற்று தாம்பூலம் பெற்றுக்கொண்டு கிளம்புவோமோ அதுப்போல உணர்ந்தேன் என்றால் மிகையில்லைப்பா...

    சிறப்பான அறிமுகங்கள்... மனோ அம்மாவில் தொடங்கி ரஞ்சனி மேடம், காமாட்சிம்மா, கற்றலும் கேட்டலும் ராஜி, தினமலர், ஈ புக்ஸ் எல்லாமே சிறப்பான எல்லோருக்கும் பயனுள்ள தளங்களாக அறிமுகப்படுத்தி இருக்கீங்க... அதோடு வலைப்பதிவாளர்கள் வாசகர்கள் எல்லோருக்கும் கல்கண்டு போல் பயனுள்ள இனிமையான யோசனைகளும் சிறப்பான புதுவிதமான ஃபீட்பாக் பற்றிய தகவலும் அக்‌ஷயப்பாத்திரம் தான் ஸ்ரீராம்... சாரி எங்கள்ப்ளாக் குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா.. கடுமையான உழைப்பை பார்க்கமுடிகிறது ஒவ்வொரு நாளும் தீபாவளிக்கொண்டாட்டமாகவே களைக்கட்டியது....

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....

    யோசனைகளாக பகிர்ந்த அனைத்து விவரங்களுகும் மனம் நிறைந்த அன்புநன்றிகள் எங்கள் ப்ளாக் குழுவினர் அனைவருக்குமேப்பா...

    சிறப்பு அன்புநன்றிகள் எங்கவீட்டுப்பிள்ளை ஸ்ரீராமுக்கு.... (எம் ஜி ஆர் போலவா அப்டின்னு கேட்கக்கூடாது கண்டிப்பா)

    ReplyDelete

  16. நன்றி திண்டுக்கல் தனபாலன். உங்கள் சுறுசுறுப்பு எங்கள் வேலைகளில் ஒன்றைக் குறைத்தது! மிக்க நன்றி.

    நன்றி வெங்கட் நாகராஜ்.

    நன்றி Ranjani Narayanan மேடம்.

    நன்றி balhanuman.

    நன்றி அமைதிச்சாரல்.

    நன்றி வைகோ சார்.

    நன்றி மோகன்ஜி.

    நன்றி பத்மநாபன்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி சந்ரு.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  17. தங்கள் பணி பாராட்டுதலுக்குரியது.

    பயனுள்ள பதிவுகளை அறிமுகம் செய்ததுடன் முடித்த பாங்கு போற்றுதலுக்குரியதாக அமைந்தது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  18. நன்றி முனைவர் இரா. குணசீலன்.

    ReplyDelete
  19. நீங்கள் வலம் வந்த அனைத்து பழைய புதிய பதிவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.
    உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அன்பின் கௌதமன் - வலைச்சர வாரம் அருமையாகச் சென்றது - அத்தனை அறிமுகங்களும் நன்று. இறுதியாக என் வலைத்தளங்களூம் அறிமுகப் படுத்தப் பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நல்வாழ்த்துகள் கௌதமன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. அனைத்து அறிமுகங்களும் அருமை. காமாட்சிப்பாட்டியைப் பற்றி ஶ்ரீராம் தான் எனக்கு அறிமுகம் செய்தார். ரஞ்சனி நாராயணனை வல்லி சிம்ஹன் மூலம் அறிந்தேன். மற்றபடி எங்க ஊர்ப் பதிவர்களில் நானும் ஒருத்தி. இப்போ கொஞ்ச நாட்களாய்ப் பதிவிடவில்லை. :))) மற்றப் பதிவர்கள் அனைவரும் புதியவர்கள். முடிந்தபோது முடிந்த பதிவர்களின் பதிவுகளைப் படிக்கணும். பார்க்கலாம். உங்கள் சரவெடி ஆயிரம்வாலாவாக இருந்தது. வாழ்த்துகள்.

    தொகுத்தவருக்கும், தொகுக்க உதவியவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு முதலில்
    நன்றிகள். ரஞ்ஜனி அவர்கள் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துப் போய்விடுகிறார்கள். நீங்களும் என்னை அறிமுகம் செய்ததற்கு மிகவும் சந்தோஷமுள்ளவளாகவும்,அன்புள்ளவளாகவும் இருக்கிறேன். ஸீனியர் ஸிடிஸன்
    போஸ்ட் எனக்குக் கிடைத்தது கூட
    ரஞ்சனியின் வழியில்தாந். வலைச்சரம்
    மிகவும் அக்கறையுடன் எல்லோரையும்
    அறிமுப்படுத்துவது குறித்து மிக்க நன்றிகள்.F.m
    ரேடியோஸ்டேஷன் ஒன்றில் மிர்ச்சி
    என்று நினைவு இவர் ப்ளாகைப்
    பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
    நீங்கள் சொல்லிதான் இந்த விஷயம் தெறியும்.
    மொத்தத்தில் என்னைக் குறிப்பிட்டு
    பின்னூட்டம் இட்ட ரஞ்சனி,வை.கோ
    கீதா ஸாம்ப சிவம், ஆகிய இவர்கள்
    யாவருக்கும் என் நன்றிகள்.
    இம்முறையாவது பின்னூட்டம் நல்லபடி போய்ச்சேர வேண்டும். அன்புடன்








    ReplyDelete
  23. மஞ்சு பாஷிணி உங்கள் பெயர் விட்டு விட்டேன். எல்லா வலைப்பதிவர்களுக்கும் என் அன்பும், பாராட்டும். ஆசிகளுடன் சொல்லுகிறேன்.

    ReplyDelete
  24. //ஒரு சிறு சந்தேகம்:

    /பதிவருக்கு உங்கள் feed-back சென்றடைந்துவிடும்./

    நம் பெயரும் பதிவருக்குத் தெரிய வருமா? என்பதை மட்டும் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    VGK//

    வை. கோ சார்! வோட்டளித்தவர் யார் என்று தெரியாது. ஆனால், எவ்வளவு பேர் படித்து, அது அவர்களுக்குப் பிடித்தது என்னும் விவரம் பதிவைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். பெரும் வரவேற்பைப் பெறுகின்ற பதிவுகளை ஓரளவு இனம் கண்டு, மேலும் அந்த வகைப் பதிவுகளை, வாசகர்களுக்கு அளிக்க பதிவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அந்த வோட்டுப் பெட்டி வாக்குகள் எண்ணிக்கை உபயோகமாகும். நன்றி.
    நன்றி ஜலீலா கமால், சீனா சார், கீதா சாம்பசிவம், காமாட்சி.

    ReplyDelete
  25. Kasu Sobhana said...

    //வை. கோ சார்! வோட்டளித்தவர் யார் என்று தெரியாது. ஆனால், எவ்வளவு பேர் படித்து, அது அவர்களுக்குப் பிடித்தது என்னும் விவரம் பதிவைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். பெரும் வரவேற்பைப் பெறுகின்ற பதிவுகளை ஓரளவு இனம் கண்டு, மேலும் அந்த வகைப் பதிவுகளை, வாசகர்களுக்கு அளிக்க பதிவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அந்த வோட்டுப் பெட்டி வாக்குகள் எண்ணிக்கை உபயோகமாகும்.//

    தங்களின் அன்பான தகவலுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  26. கடந்தவாரம் மிகவும் சிறப்பாகவும் பலரையும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது வாழ்த்துக்கள்.சிறப்பான பணி செய்தீர்கள்

    ReplyDelete