ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே சுற்றி வரும் போது சந்திரபுஷ்கரணியை பார்க்கலாம். இதன் அருகிலேயே பரமபத வாசல்.. தன்வந்தரி ஸந்நிதி.. கோதண்டராமர் சந்நிதி எல்லாம் இருக்கு..
இப்போது பூட்டி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இதற்குள்ளே போகலாம். சுற்றி வரலாம். புன்னை மரம் (ஸ்தல விருட்சம்) உண்டு.. படத்தில் தெரிகிறதே.. அதே மரம். ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு (தாயார் சற்று குள்ளம்) புன்னைப் பூ பறிக்க இயலாமல் தவித்தபோது, கிளையை சற்று தாழ்த்தி தருவதாக ஸ்லோகம் இருக்கு.. பெருமாளும் தாயாரும் ஏகாந்தமாய் உலவும் இடம் என்று ஐதீகம். உள்ளே போய் அமர்ந்தால் சகலமும் மறந்து .. ”நான்” மறந்து ’உள்ளே ’ லயித்துப் போகலாம் அழகாய். உபரியாய் குளத்தின் காற்று ஜில்லென்று மேலே வீசும்.
காற்று போல
சொல்லித் தருபவர் யார்..
வாழ்க்கை ரகசியங்களை..!
காற்றை நேசிக்கிறேன்
எப்போதும்.
காற்று காதில் சொல்லிப் போகும் எத்தனையோ விஷயங்களைத்தான் நாம் கதையாகவோ, கவிதையாகவோ ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
இயக்கம் நின்றால் பின் படைப்புக்கு ஏது வழி??
இன்று நாம் பார்க்கப் போவது காற்றைப் போலவே ஸ்பெஷலான பதிவர்களை. ( மதிப்பிற்குரிய இவர்கள் பெயர்களை ‘அவர்கள்’ என்று அடைமொழி இடாமல் போட்டிருக்கிறேன்.. அது அன்னியப்படுத்துகிற மாதிரி உணர்வதால்)
மனசளவில் இன்னும் குழந்தைமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற வரை வாழ்க்கை இனித்துக் கொண்டுதான் இருக்கும்... இல்லியா..
நம் வலைத்தளத்தில் நம் மனதில் வந்ததை பதிவிடலாம். என்ன வேண்டுமானாலும். அதே போல பிறர் பதிவுகளைப் பார்த்து கருத்து சொல்லலாம்.
ஆனால் எந்த அளவு நம் பதிவுகளை ரசித்து எழுதுகிறோமோ, அதே அளவுக்கு பிறர் எழுதுவதையும் உள் வாங்கி விரிவான அலசல்.. நுண்ணிய பார்வை என்று இதயம் தொடும் பின்னூட்டங்களைத் தரும் இவர் எழுத்திலும் அதே அழுத்தம்.. ஆழம்..
கதம்ப உணர்வுகள் மஞ்சு பாஷிணியைத்தான் சொல்கிறேன். அவர் பின்னூட்டம் பார்த்தாலே இன்னும் இன்னும் எழுதத் தோன்றும். உலகம் அன்பு மயமானது என்று எப்போதும் சொல்லாமல் சொல்கிற நல் ஆத்மா.
கற்றலும் கேட்டலும் ராஜி.. ஆர்வமாய் இவர் எழுதும் பதிவுகளும் சரி.. தான் ரசித்ததை மனம் விட்டு பாராட்டும் விதத்திலும் சரி.. உயர்ந்து நிற்பவர். எழுத்து.. இசை என்று சகல கலா வல்லி.
எண்ணிய முடிதல் வேண்டும் ஷைலஜா.. ஸ்ரீரங்கத்து தேவதை..! அப்பாவின் பிதிரார்ஜிதம் பரிபூர்ணமாய் நிரம்பி இருக்கிறது. அப்புறம் என்ன.. ஜமாய்க்க கேட்பானேன்.. எழுத்து சிலம்பில் எளிதாய் வீடு கட்டி நிற்பவர்.
மைத்துளிகள் வெள்ளமாய் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்.. மாதங்கியின் வலைத்தளம் போனால் தெரியும். ஞானம் பேசும் பக்கங்கள். ஒரு பக்கம் துப்பாண்டி.. இன்னொரு பக்கம் தத்துவம்.. குழந்தைமையும் ரிஷித்துவமும் அற்புதமாய் கை கோர்த்து நிற்குமிடம்.
பறத்தல் பறத்தல் நிமித்தம் நிலாமகள்.. இரண்டு பெயர்களுமே அபாரம். வாழ்க்கை சிலருக்கு தன் ரதத்தை வழங்கி விடுகிறது.. கவிதையும் கதையும் எழுதுகிறவர்களின் எழுத்தில் கவிதைகளில் ஒரு கதை ஒளிந்திருக்கும். கதையிலோ உரை நடை மீறி ஒரு கவிதைத் தன்மை அழகு சேர்க்கும். எழுத்து ரதத்தில் சாரத்தியம் செய்கிற அற்புதத் தம்பதி.இப்போது போல கடவுளின் ஆசி என்றும் தொடரட்டும் இவர்களுக்கு.
காகித ஓடம் பத்மா.. கருப்பொருள் இவருக்கு சுலபமாய்க் கிட்டி விடுகிறது கவிதை எழுத. ரசனையுடன் கவிதைகளை வாசிக்கலாம் இந்தப் பக்கம் போனால்.
மணிராஜ் இராஜராஜேஸ்வரி எழுத்துக்களில் நம் மனம் அடையும் ஆன்மிக புத்துணர்வுக்கு எல்லையே இல்லை. வண்ணக் களஞ்சியமாய் தம் பதிவுகளில் அந்தந்த இடத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்.
மணிராஜ் இராஜராஜேஸ்வரி எழுத்துக்களில் நம் மனம் அடையும் ஆன்மிக புத்துணர்வுக்கு எல்லையே இல்லை. வண்ணக் களஞ்சியமாய் தம் பதிவுகளில் அந்தந்த இடத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்.
அமைதிச்சாரல் இவங்களைப் புகழணும்னா அது பக்கம் பத்தாது. இன்னொரு சகல கலா வல்லி. எழுதவும் அதை விட வாசிக்கவும் பிடிக்கும்னு இவங்க சொன்னதுல எனக்கும் உடன்பாடு.. அதனாலேயே கூடுதல் பிரியம் இவங்க எழுத்துல.
கிருஷ்ணப்ரியா தஞ்சை கவிதை.. கதை கவிதை.. என இவரும் எழுத்துப் பங்களிப்பில் சளைத்தவர் இல்லை. நேர்த்தியான எழுத்துக்கு சொந்தக்காரர்.
முத்துச்சரம் இவரது பன்முகத்தனமை பிரமிக்க வைக்கும். இவரது எழுத்து காட்சிகளைக் காட்டும் என்றால் இவரது படங்கள் பேசும். ராமலக்ஷ்மியின் திறமைக்கு அவரது உழைப்பே ஆதாரம்.
அன்புடன் அருணா தருகிற பூங்கொத்து நம்மை இன்னும் சிறப்பாய் எழுதத் தூண்டும்.. எப்போது நானாக இருப்பது.. அதுவே என் பலமும், பலவீனமும்.. என்கிறார்.. நானாக நானில்லை என்று இவர் பதிவுகளை வாசித்து மகிழ்ந்து.. நெகிழ்ந்து போகும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்..
குறை ஒன்றுமில்லை மனம் முழுக்க நிறைவுதான்.. எளிமையாய்.. மனம் தொடும் எழுத்துக்கு சொந்தக்காரர். பதிவுகளுக்கு வைக்கிற தலைப்புகளில் கூட மிரட்டல் இருக்காது.. இவரது ஆப்ரிக்கா பயணம் பதிவுகள் மிக சுவாரசியம்.
கீத மஞ்சரி யின் எழுத்துக்கள் உயிரோட்டமாய் இருக்கும் என்பதற்கு என் அம்மாச்சியும் மகிழம்பூக்களுமே சாட்சி.. பூவின் வாசம் வீசும் எழுத்துக்களை இங்கு நுகரலாம் வாங்க.. கதை, கவிதை கட்டுரை என எழுத்தின் சகல வடிவங்களிலும் ஆளுமை கொண்டவர். இவருக்கு வரும் பின்னூட்டங்களில் இவரைப் புகழாத பிற பதிவர்களே கிடையாது என்பதே இவர் எழுத்துத் திறனுக்கு சாட்சி.
ஹுஸைனம்மா வலியைக் கூட வரமாக்கித் தந்திருக்கிறார்.. இந்தப் பதிவில். ஆண் எனும் பித்தளையோ, குடும்பம் எனும் செம்போ, சமூகம் எனும் வெண்கலமோ, எதுவானாலும், பெண் எனும் ஈயம் பூசப்பட்டாலன்றி, இவை யாவும் பயன்படுத்த லாயக்கற்றவைகளாகி விடும்.. என்று தம் மனதில் பட்டதை அழுத்தம் திருத்தமாகக் கூறும் இவரது பதிவுகள் எல்லாமே அழுத்தமானவைதான்.
முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் கைவண்ணத்தில் ஜொலிக்கும் பதிவுகளை ரசிக்கலாம். எத்தனை விருதுகள் வாங்கி இருக்கிறார்.. ஏயப்பா.. திருஷ்டி கழிக்கணும்.
கோவை2தில்லி முதல் பனி அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கிறார்.. சமையல் .. பயணம்.. கைவைத்தியம்..விமர்சனம் என்று இவர் தொடாத பக்கங்கள் இல்லை..
இதுவரை நாம் பார்க்கிற அனைவருமே பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்.. கவனித்தீர்களா..
இத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்களது எளிமை.. சக பதிவர்களின் படைப்புகளை வாசித்து.. ரசித்து.. அழகாய் பின்னூட்டமும் போடுகிறார்கள்.
அன்பின் வலைத்தளமாய் இயங்குகிற இந்த அற்புதம் எந்நாளும் நீடிக்க வேண்டும்..
இன்னும் சில பதிவர்களின் வலைத்தளங்கள் எப்போதாவதுதான் எழுதப் படுகின்றன.. திறமையான அவர்களின் எழுத்து நீண்ட இடைவெளியின்றி தொடரப்படுமானால் நமக்கும் சந்தோஷமாய் இருக்கும்..
சித்ரா.. சாகம்பரி.. மிடில் கிளாஸ் மாதவி.. இப்படி சிலர்..
தொடர்வோம்..
கிருஷ்ணப்ரியா தஞ்சை கவிதை.. கதை கவிதை.. என இவரும் எழுத்துப் பங்களிப்பில் சளைத்தவர் இல்லை. நேர்த்தியான எழுத்துக்கு சொந்தக்காரர்.
முத்துச்சரம் இவரது பன்முகத்தனமை பிரமிக்க வைக்கும். இவரது எழுத்து காட்சிகளைக் காட்டும் என்றால் இவரது படங்கள் பேசும். ராமலக்ஷ்மியின் திறமைக்கு அவரது உழைப்பே ஆதாரம்.
அன்புடன் அருணா தருகிற பூங்கொத்து நம்மை இன்னும் சிறப்பாய் எழுதத் தூண்டும்.. எப்போது நானாக இருப்பது.. அதுவே என் பலமும், பலவீனமும்.. என்கிறார்.. நானாக நானில்லை என்று இவர் பதிவுகளை வாசித்து மகிழ்ந்து.. நெகிழ்ந்து போகும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்..
குறை ஒன்றுமில்லை மனம் முழுக்க நிறைவுதான்.. எளிமையாய்.. மனம் தொடும் எழுத்துக்கு சொந்தக்காரர். பதிவுகளுக்கு வைக்கிற தலைப்புகளில் கூட மிரட்டல் இருக்காது.. இவரது ஆப்ரிக்கா பயணம் பதிவுகள் மிக சுவாரசியம்.
கீத மஞ்சரி யின் எழுத்துக்கள் உயிரோட்டமாய் இருக்கும் என்பதற்கு என் அம்மாச்சியும் மகிழம்பூக்களுமே சாட்சி.. பூவின் வாசம் வீசும் எழுத்துக்களை இங்கு நுகரலாம் வாங்க.. கதை, கவிதை கட்டுரை என எழுத்தின் சகல வடிவங்களிலும் ஆளுமை கொண்டவர். இவருக்கு வரும் பின்னூட்டங்களில் இவரைப் புகழாத பிற பதிவர்களே கிடையாது என்பதே இவர் எழுத்துத் திறனுக்கு சாட்சி.
ஹுஸைனம்மா வலியைக் கூட வரமாக்கித் தந்திருக்கிறார்.. இந்தப் பதிவில். ஆண் எனும் பித்தளையோ, குடும்பம் எனும் செம்போ, சமூகம் எனும் வெண்கலமோ, எதுவானாலும், பெண் எனும் ஈயம் பூசப்பட்டாலன்றி, இவை யாவும் பயன்படுத்த லாயக்கற்றவைகளாகி விடும்.. என்று தம் மனதில் பட்டதை அழுத்தம் திருத்தமாகக் கூறும் இவரது பதிவுகள் எல்லாமே அழுத்தமானவைதான்.
முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் கைவண்ணத்தில் ஜொலிக்கும் பதிவுகளை ரசிக்கலாம். எத்தனை விருதுகள் வாங்கி இருக்கிறார்.. ஏயப்பா.. திருஷ்டி கழிக்கணும்.
கோவை2தில்லி முதல் பனி அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கிறார்.. சமையல் .. பயணம்.. கைவைத்தியம்..விமர்சனம் என்று இவர் தொடாத பக்கங்கள் இல்லை..
இதுவரை நாம் பார்க்கிற அனைவருமே பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்.. கவனித்தீர்களா..
இத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்களது எளிமை.. சக பதிவர்களின் படைப்புகளை வாசித்து.. ரசித்து.. அழகாய் பின்னூட்டமும் போடுகிறார்கள்.
அன்பின் வலைத்தளமாய் இயங்குகிற இந்த அற்புதம் எந்நாளும் நீடிக்க வேண்டும்..
இன்னும் சில பதிவர்களின் வலைத்தளங்கள் எப்போதாவதுதான் எழுதப் படுகின்றன.. திறமையான அவர்களின் எழுத்து நீண்ட இடைவெளியின்றி தொடரப்படுமானால் நமக்கும் சந்தோஷமாய் இருக்கும்..
சித்ரா.. சாகம்பரி.. மிடில் கிளாஸ் மாதவி.. இப்படி சிலர்..
தொடர்வோம்..
மைத்துளிகள், நிலாமகள் தளங்கள் சென்றதில்லை. புஷ்கணிப் படமும் (இன்னும் பெரிதாக்கிப் பார்க்க முடியாதா என்ற ஏக்கத்துடன்) தாயார் கொஞ்சம் குள்ளம் போன்ற நுட்பமான தகவல்களுடன் காற்றுத் தகவல்கள் சுவாரஸ்யம்.
ReplyDeleteகுழந்தை போல் குணம், மனதில் எப்போதும் இருந்தால் வாழ்க்கை இனித்துக் கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்டது என்னதொரு அப்பட்டமான உண்மையை, அனுபவத்தால் / பக்குவப்பட்ட மனது தான் சொல்ல முடியும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ்மண இணைப்பு முடிந்து விட்டது... அனைவரின் தளத்திற்கு சென்று விட்டு, மறுபடியும் வருகிறேன்... நன்றி...
(1) பறத்தல் பறத்தல் நிமித்தம் நிலாமகள் அவர்கள்...
ReplyDelete(2) காகித ஓடம் பத்மா அவர்கள்...
இந்த இவர்களின் தளமும் ஒரே இணைப்பாக (Link) உள்ளது... இரண்டாவது தளம் மட்டும் மாற்ற வேண்டும்... (http://kakithaoodam.blogspot.in)
நன்றி... பிறகு வருகிறேன்...
வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்பிட்ட எல்லோரும் பன்முக திறமை படைத்தவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.ஸ்தல விருடசம் , சந்திரபுஷ்கரணி தரிசனம் கிடைத்தது உங்களால் நன்றி.
ReplyDeleteநன்றி தனபாலன்.. பிறகுதான் கவனித்தேன்.. சரி செய்து விட்டேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.. கோமதி அரசு..
எனது சரிபாதியின் தளத்தினையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ரிஷபன் சார்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
//ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே சுற்றி வரும் போது சந்திரபுஷ்கரணியை பார்க்கலாம். இதன் அருகிலேயே பரமபத வாசல்.. தன்வந்தரி ஸந்நிதி.. கோதண்டராமர் சந்நிதி எல்லாம் இருக்கு..//
ReplyDeleteபலமுறை சென்று வந்துள்ளதால் இவை யாவும் என் நீங்காத நினைவுகளில் ... ;)))))
>>>>>>>>>>>
மிகுந்த வாசமுள்ள அருமையான பதினாறு மலர்களைப் பறித்து
ReplyDeleteகதம்ப மாலையாகக் கோர்த்து இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது, ஸ்வீட் சிக்ஸ்டீன் போல, மிகவும் இனிமையாக உள்ளது.
மாலையின் கீழே
குஞ்சலம் போல
மேலும் மூவரை நினைவுடன் சேர்த்துள்ளது மேலும்
சிறப்பாகவே உள்ளது.
சம்பந்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த
பாராட்டுக்கள் +
அன்பான வாழ்த்துகள்.
கதம்ப உணர்வுகளுடன் தொகுத்தளித்துள்ள
தங்களுக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
வீ...........ஜீ
[VGK]
-oOo-
இன்றைய பதிவர்கள் அறிமுகம் லேடீஸ் ஸ்பெஷலா என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் மற்ற வர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த அன்புடன் அறிமுகப்படுத்தியமைக்கு என்ன பதில் சொல்ல?.. 'நன்றி' என்ற ஒற்றை வார்த்தையைத்தவிர.
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள்.
வணக்கம்
ReplyDeleteரிஷபன்(அண்ணா)
எப்போதும் உங்கள் பதிவின் முதல் இறை கருத்து மிலிர்வதை காணக்கூடியதாக உள்ளது 4ம் நாள் போல 5ம் நாளும் சிறப்பான பதிவுகளுடன் வலைச்சரம் பூத்து மலர எனது வாழ்த்துக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துப்பதிவுகளும் அருமை அனைத்து பதிவுகளையும் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டும் கோவில் தரிசனத்துக்கு வரும் ஆசையை ஏற்படுத்துகின்றன தங்கள் பகிர்வுகள்.
ReplyDeleteஉங்கள் அறிமுகத்தில் நானும் இடம் பெற்றதில் பெருமையும் மகிழ்ச்சியும். மனமார்ந்த நன்றி. மற்றவருக்கும் என் வாழ்த்துகள்!
காற்று என்றவுடன் ஞாபகம் வருவது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ..
ReplyDeleteஅதன் பின் புயல்..சூறாவளி ..அதற்கு வைத்த அருமையான பெண்களின் பெயர்கள் ..அதனால் தான் என்னவோ இன்றைய இதழ் மங்கையர் மலரோ
முகிழ்த்திருக்கிறதோ ?
அன்புடன் ..
ஆர்.ஆர்.ஆர்.
ReplyDelete. //பெருமாளும் தாயாரும் ஏகாந்தமாய் உலவும் இடம் என்று ஐதீகம். உள்ளே போய் அமர்ந்தால் ...//
ஏன் ஸ்வாமி !! அவா ஏகாந்தமா உலவுற இடத்துலே .. நீங்க போய் டிஸ்டர்ப் பண்ணலாமா ?
அடுத்த த்டவை அரங்க நாதனைச் சேவிக்க வரும்பொழுது இந்த மாதிரி
அந்தரங்கமான ஏகாந்த ஸ்தலங்களிலே வாசலிலே
" டோன்ட் டிஸ்டர்ப்" போர்டு போடச்சொல்லணும்.
// காற்று காதில் சொல்லிப் போகும் எத்தனையோ விஷயங்களைத்தான் நாம் கதையாகவோ, கவிதையாகவோ....//
காற்றிலே பிறப்பது கவிதையா - இல்லை
காற்றிலே பறப்பது கவிதையா ?
இன்றைய நாட்களில்
இணையத்தில் பறப்பதெல்லாம்
கவிதையே. காதல் கவிதையே .
இருந்தாலும்
இதையும் கேட்பீர். .
கோவர்த்தன கிரிதாரி கண்ணன் ஓர் நாள்
குழலெடுத்தான் இசைத்தான். புவியேழையும்
அசைத்தான். ஆடச்செய்தான். அந்தக்
" காற்றினிலே வரும் கீதம் "
கேட்டதும் ஓடி வந்த
கோகுலத்து கோபியர்
மயங்கி நின்றாராம்.
அந்தக்
காற்றைக் கேட்டேன்.
காற்றே நீ கதையா ? கவிதையா ?
கண்ணடித்து சொல்லிற்று.
இல்லை இல்லை ..
நின் கவிதைக்கு நான் ஒரு விதை.
நின் காதலுக்கு துணை.
சுப்பு தாத்தா.
சந்திர புஷ்கரணி வெளியே நின்று தான் பார்த்திருக்கிறேன். புன்னை மரம் தான் ஸ்தல விருட்சம். தகவலுக்கு நன்றி சார்.
ReplyDeleteதங்கள் மூலம் எனக்கு அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் சார். மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவருகை தந்த அன்பர்கள்....
ReplyDeleteவெங்கட்
வை.கோ.
லக்ஷ்மி
அமைதிச்சாரல்
ரூபன்
ராமலக்ஷ்மி
ஆரண்யநிவாஸ்
சுப்பு தாத்தா
கோவை2தில்லி
அன்புடன் நன்றி.. நன்றி.. நன்றி..
மிகுந்த நன்றிகள் ரிஷபன் சார்!! அனுபவம் நிறைந்த உங்களால் குறிப்பிடப்படுவது எனக்கு மிகுந்த நிறைவு தருகிறது.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் இடம் பெற்ற பதிவர்களிற்கும், தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.மாலையில் நேரத்தை எடுத்து சென்று பார்க்கலாம் . இனிய நாளும் தொடரட்டும் சகோதரா!....
ReplyDeleteVetha.Elangathilakam,
இனிய தமிழில் அருமையான கவிதை போல, எண்ணங்களைக் கோர்த்தெடுத்து இன்றைக்கு நீங்கள் உருவாகியிருக்கும் கதம்ப மாலை நறுமணம் கமழ்கின்றது! இந்தக் கதம்ப மாலையில் என்னையும் ஒரு மலராக அறிமுகப்படுத்தியிருப்பதற்கு மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
ReplyDeleteஇந்த மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு, தானாகவே முன் வந்து, ஒரு அருமையான சமூக சேவை போல, அவரவர் தளங்களுக்குச் சென்று அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதை எப்போதுமே தெரிவித்துக் கொண்டிருக்கும் சகோதரர் தனபாலனின் நல்ல மனதிற்கும் இங்கே என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!
திருவரங்கக் கோவில் பற்றி பல அறியாத விஷயங்களைத் தங்களால் தெரிந்துகொள்ளமுடிகிறது. மண்வாசனையுடனான தங்கள் படைப்புகள் மூலம் அறிந்தவையும் அநேகம்.
ReplyDeleteநிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் நிமித்தம் பதிவுலகிலிருந்து சிலகாலம் விலகியிருக்கும் என்னை இழுத்துவந்துவிட்டது தங்கள் அறிமுகப்பதிவு. மனம் நிறைந்த நன்றி ரிஷபன் சார். இதைப்போல பதிவர்கள் ஒவ்வொருவரும் தரும் ஊக்கம்தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்துள்ளது. விரைவிலேயே விட்ட இடத்திலிருந்து எழுத்தைத் தொடர்வேன். இன்று தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சக பதிவுலகத் தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பெரும் சிரத்தையுடன், உரிய தளங்களுக்குச் சென்று அழைப்பு விடுக்கும் தனபாலன் அவர்களது உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி தனபாலன்.
Thanks for adding the picture! After seeing the picture, the next thing that comes to my mind is "5 kuzhi 3 vaasal"!
ReplyDeleteThanks for introducing me here too! :)
வித்தியாசமான அறிமுகங்கள் பின்னூட்டங்களைக் கொண்டு அவர்களை அறிமுகம் செய்த விதம் அருமை
ReplyDeleteஅரிய படம் காணக்கிடைத்தது.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சந்திர புஷ்கரணி சிறுவயதில் நிறைய முறை தரிசித்து அங்கிருக்கும் பெரிய பெரிய மீன்களை வியப்புடன் ரசித்திருக்கிறோம் ..
ReplyDeleteபுன்னை மரத்தின் உதிர்ந்த காய்களை எடுத்து விளையாடிய பசுமையான நினைவலைகள் மகிழ்ச்சிதருகின்றன..
இப்போதெல்லாம பூட்டியே இருக்கிறது ..\
அருமையான அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..
எமது மணிராஜ் தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
காற்றின் திசையில் இந்த சருகுமா?குட அமுதம் தேக்கரண்டியை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅதிலும் சருகிற்கு தந்த லிங்க் என் மனதிற்கு பிடித்த ஒன்று.மிக மிக நன்றி.ரங்கனே ஆசிர்வாதம் அனுக்ரஹம் செய்தது போல் உணர்கிறேன் :-)
This comment has been removed by the author.
ReplyDelete//மனசளவில் இன்னும் குழந்தைமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற வரை வாழ்க்கை இனித்துக் கொண்டுதான் இருக்கும்
ReplyDeleteசட்டுனு கவனிக்காமப் போயிருக்கக் கூடிய வரி. நல்ல வேளை.
அனேகமாக எல்லாப் பதிவர்களையும் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இதுல எனக்குத் தெரிஞ்சு தன்னுடைய பதிவளவுக்கு, சில சமயம் பதிவை விடக் அதிகமாக, பின்னூட்டம் எழுதுறவங்க மஞ்சுபாஷிணி தான். (இப்ப வை.கோ அந்த இடத்தை நைசா பிடிக்கப் பாக்கறாரு :)
அன்பின் வலைத்தளமாய் இயங்குகிற இந்த அற்புதம் எந்நாளும் நீடிக்க வேண்டும்..//
ReplyDeleteஅறிமுகத்துக்கும் அரிய பல தகவல்களுக்கும் மகிழ்வும் நன்றியும்.
தங்கள் ஆசி மகாப்ரபு ஆசியாய் குதுகலம் தருகிறது. தன்யளானேன்...தன்யரானோம்.
திருமண விழாவில் சந்தித்த உறவும் நட்புமாய் சக பதிவர்கள். கீதமஞ்சரியிடம சூழ்ந்துகொண்டவர்களில் என் தலையும். மூ வார் சாருக்கு எல்லையற்ற குறும்பு. ரசித்தேன்.
வை.கோ. சாருக்கு தங்கை அல்லவா மஞ்சு! சுப்பு ஐயா கவிதை அழகு. ஹுசைனம்மா பெண்கள் பற்றி சொன்னது அபாரம். என் கட்டுரை ஒன்றின் முத்தாய்ப்பாய் வைத்துக்கொள்ள விழைகிறது மனம். தனபாலன் சாருக்கு எனது நன்றியும்.
Thanks for mentioning me!
ReplyDeleteமாதங்கி அறிமுகம் மிக நன்று. நன்றாகச் சொன்னீர்கள். பதிவுகள் எழுதுவதோடு வேலையாச்சு என்று செல்லாமல் மற்றவர்களின் படைப்புகளைப் படிக்க நேரம் ஒதுக்குபவர்களே தாராள மனம் கொண்டவர்கள். தனபாலன் போல ஓடி ஓடிப் பின்னூட்டம் இடமுடியாது:)நீங்கள் குறிப்பிட்டிருக்கும்
ReplyDeleteஅனைத்துப் பதிவர்களும் ரத்தினங்கள்.
இத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்களது எளிமை.. சக பதிவர்களின் படைப்புகளை வாசித்து.. ரசித்து.. அழகாய் பின்னூட்டமும் போடுகிறார்கள்.//
ReplyDeleteஎங்கே! :( என்னாலே முடியறதில்லை. பல சமயங்களிலும் படிப்பதோடு சரி. :)
மஞ்சுபாஷிணியால் எப்படி முடிகிறது என ஆச்சரியமாகவே இருக்கு. அதுவும் மூன்று, நான்கு பின்னூட்டங்கள் வெகு சரளமாய்ப் போடுகிறார். விவரணைகளும் அபாரம்.
இன்றைய அறிமுகங்கள் பலரும் அறிந்தவர்களே. நன்றி.
பலரும் நான் அறிந்தவர்களே என வரவேண்டும். :)))
ReplyDeleteசப்தப்ராகாரம் – காற்று…
ReplyDeleteஸ்ரீரங்கத்தின் மற்றொரு அழகை இங்கே விஸ்தாரமாகச்சொன்னது அற்புதம்… சந்திரபுஷ்கரணி பேரே இத்தனை அழகாக இருக்கிறதே அப்ப இதன் தடாகம் எத்தனை அழகாக இருக்கும்? ஹை பரமபதம் விளையாடி இருக்கிறோம்.
அதென்ன பரமபதம் வாசல்…. தன்வந்திரி (மருத்துவர்), கோதண்டராமர் சந்நிதி எல்லாம் ரிஷபா உங்க உபயத்தில் சேவித்த புண்ணியம் எங்களுக்கு… முன்பெல்லாம் உள்ளே போகலாம் இப்ப போகமுடியறதில்லையா? மக்கள் இதை தூய்மையாக வைத்துக்கொள்ளாததால் இருக்கலாம்… அதனால் பூட்டி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.. ஸ்தல விருட்சம் பெயர் புன்னை மரமா… ம்ம்ம்….
அட இந்த ஸ்தல விருட்சத்துக்கு புராணத்தில் கதை இருக்கிறதா… அம்பாள் ஸ்ரீரங்கநாச்சி தாயாரம்மா குள்ளமா… அட இது செய்தி….
அம்பாளுக்கு அதன் கிளை எட்டவில்லை என்பதால் கிளையை தாழ்த்தியதாய் ஸ்லோகத்தில் இருக்கிறதா… நிறைய விஷயங்கள்… அதுவும் நான் இதுவரை அறியாத விஷயங்கள் ரிஷபனின் இந்த பகிர்வினால் அறியமுடிகிறதுப்பா…
ரிஷபன் டச் இந்த வரியில் காணமுடிகிறது.. “ நான் “ மறந்து உள்ளே லயித்துப்போகலாம்.. உண்மையேப்பா…..மின்வெட்டெல்லாம் என்ன செய்துவிடமுடியும் இந்த குளத்தின் காற்றின் ஜில்லிப்பு நம் மனதைவருடி உடலைத்தழுவிச்செல்லும்போது….
அருமையான வரிகள்… காற்றைப்போல நம் மனதை நிரப்பி நம் சோகங்களை பளிச்சென்று துடைத்து தூய்மையான சந்தோஷக்காற்றை நிரப்பி காதருகில் வந்து கிசுகிசுத்து கிச்சுகிச்சு மூட்டிச்செல்லும்….
காற்றுடனான ஸ்நேகம்… காற்றுடனான அந்நியோன்யம்…. காற்றுடனான நட்பு… அது சொன்னதை அழகாய் பகிர்ந்தது மிக மிக அழகுப்பா ரிஷபா…
எப்போதும் போல் ரிஷபனின் கடைசி வரிகளில் வித்தியாசமான அருமையான சிந்தனை வரிகள் இருக்கிறது… உண்மையேப்பா கண்ணா..
“மனசளவில் இன்னும் குழந்தைமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற வரை வாழ்க்கை இனித்துக் கொண்டுதான் இருக்கும்... இல்லியா..”
எத்தனை நாம் வளர்ந்தாலும் நம்மில் இருக்கும் குழந்தைத்தனம் நம்மையே அறியாமல் வெளிப்படும் தருணங்கள் இருக்கிறது தெரியுமாப்பா? ஆமாம் உறக்கத்தில் நம் முகம் குழந்தையைப்போல் அமைதியாக அழகாக இருக்கும்… அதேபோல் மனம் விட்டு சிரிக்கும்போதும் நம் சிரிப்பில் அந்த குழந்தைச்சிரிப்பு மிக அழகாய் வெளிப்படும்…
அறிமுகப்படுத்தப்பட்டதில் நிறைய தளங்கள் நான் அறிந்த அருமையான தளங்கள்….ஹுஹும் அட்டகாசமான பதிவர்கள்… இத்தனை பிரபலமானவர்களுடன் கதம்ப உணர்வுகள் தளத்தினையும் அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு நன்றிகள்பா…
தன்னலம் கருதாத ஒரு சேவையாக நம் அன்பு நண்பர் திண்டுகல் தனபாலன் என்னிடம் வந்து வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை அன்புடன் சொன்னமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா…
நேற்றே வலைச்சரம் வந்து பதிவிடமுடியாமைக்கு வருந்துகிறேன். சட்டென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது அதனால் தாம்பா இன்று தாமதமாக வந்து பார்க்கும்படி ஆனது…
அற்புதமான சந்திரபுஷ்கரணி, புன்னைமரம், குள்ளமான ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் பற்றிய தகவல்கள் எல்லாம் அறியத்தந்து இன்றைய காற்றை விகசிக்கவைத்து வலைச்சரத்தில் தென்றலை உலவ விட்டமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..
இன்று மனம் கவர் பதிவர்களாக மிளிரும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா..
அற்புதமான பதிவர்கள் இடையே நானும்… சந்தோஷத்தில் மனம் நிறைகிறது….
ReplyDeleteஇதில் நான் அறிந்தவர்களில்….
மணிராஜ் இராஜராஜேஸ்வரி: ஆன்மீகத்தில் அதிக ஞானமோ விஷயமோ தெரியாமல் இருந்த எனக்கு நிறைய கற்பகவிருட்சம் போல் தினம் தினம் தன் தளத்தில் அசத்திக்கொண்டிருப்பார்… என்ன சந்தேகம் கேட்டாலும் உடனே நிவர்த்தியும் செய்துவைப்பார்…. ஸ்நேகிதி என்ற ஒற்றைச்சொல் ஹுஹும் பொருந்தாது.. என் மனதுக்கினிய அன்புத்தோழி… ம்ம்ம் இது கரெக்ட்…. வாஞ்சையான இவரின் அன்புநலன் விசாரிப்பு நான் ரசித்த மனம் இவருடையது…
குறைஒன்றுமில்லை லக்ஷ்மிம்மா: என்ன ஒரு தாய்மையான சிநேகிதமான பதிவுகள்…. ரொம்ப உரிமையுடன் தாயாக வாஞ்சையுடன் தலைகோதும் அற்புதமானவர்…. பதிவுகளில் கூட மனதை அசைத்துவிடுபவர்… சமையலில் கூட அசத்தலாக படங்களும் இட்டு புதிது புதிதாய் நம்மை ரசிக்கவும் வைத்துவிடுபவர்….
முத்துச்சிதறல் மனோம்மா : இவரின் ரசிகை நான்… இவரின் சிரிப்புக்கு… இவரின் எழுத்துக்கு…. இவரின் பேச்சுக்கு…. எத்தனை சிறிய வயதென்றாலும் மரியாதையுடனே பேசும் இந்த புன்னகையரசியின் மனதில் அன்பைத்தவிர வேறெதுவும் காண இயலவில்லை என்னால்… தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச்சொல்லி நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் நேரமானது தெரியாமல் ரசனையுடன் பேசிக்கொண்டே இருந்தார்… இந்த அன்புக்குரலை என்றும் என்னால் மறக்கவே முடியாது…. இவரின் தளத்தில் போனால் சிதறிக்கிடக்கும் பொக்கிஷமாக முத்துகள் அத்தனையும் சொத்துகளாக நாம் எடுத்துக்கொள்ளத்தரும் சிந்தனை வடிவங்கள்…
கீதமஞ்சரி கீதம் : குழந்தைக்குரலுக்கு சொந்தக்காரி என் மனதில் என்றும் அன்புடன் நிலைத்திருக்கும் அன்புக்காரி… கவிதையில் அம்மாவை உணர்ந்து ரசித்து இட்ட கவிதை இன்றும் மனதிலே நிற்கிறது… தொலைபேசியில் பேசினாலோ குழந்தையை உறக்கத்தில் எழுப்பினதும் அழகாய் பேசுமே அதுபோல் பேசி சிரித்து என் மனம் நிறைத்த என் அன்புச்சுரங்கம்… இவர் தளத்தில் கவிதைகள் எல்லாம் உணர்வுடன் நடமாடிக்கொண்டே இருக்கும்…. நம்மையும் கைப்பிடித்து இழுத்து உட்காரவைத்து சொக்கட்டான் ஆடவைக்கும் அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரி….
அட நிலாமகள் : அசத்தல் பின்னூட்டங்கள் இடுவார்… ரசித்து வாசித்ததுண்டு இவரின் பின்னூட்டங்களை… ஒருமுறை இவர் தளமும் சென்று வாசித்திருக்கிறேன்.. ப்ரமிக்க வைத்திருந்தார் தம் எழுத்துகளில்..
மாதங்கி : ரசனையான பதிவர்…..
ஹுசைனம்மா: இவரின் தளம் சென்றதில்லை.. ஆனால் அப்பாதுரையின் சமீப பதிவில் ஹுசைனம்மாவின் அட்டகாசமான பதிவு படித்து பிரமித்தேன்.. அட்டகாசம்…. செல்லவேண்டும் இவர் தளமும்…
கற்றலும் கேட்டலும் ராஜி: இவரைப்பற்றி இவர் தக்கசமயத்தில் செய்த உதவிப்பற்றி அறியப்பெற்றேன் ஒருமுறை…. இவரின் தளம் இனி சென்று படிக்கவேண்டும்….
கோவை டு தில்லி : கோவை டு தில்லி என்று தான் சொல்வாங்க ஆனா நம்மை பழமை காலத்துக்கே அழைத்துச்சென்றுவிடுவார்கள் வாஞ்சையுடன்…. நம் குழந்தைக்காலத்துக்கும் கைப்பிடித்து அழைத்துச்செல்வார்… விளையாடி மகிழவைப்பார்…. உடல்நலம் சரியில்லையா சட்டென நம் பாட்டிவைத்திய முறையில் கஷாயத்தை சுடச்சுட அன்புடன் பகிர்வார்…. தோழமையான அன்புத்தோழி…
வல்லிம்மா சொன்னது போல அத்தனையும் ரத்தினங்களே…. வியக்கவைத்து நம்மை அவருடனே பயணிக்கவைக்கும் அற்புத எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்…
சாலமன் சித்ரா” ஆனா என்னமா சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார் தன் எழுத்துகளில்
சாகம்பரி: இவரின் எழுத்தும் படித்திருக்கிறேன்.. அசத்தல், அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாத அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்
மிடில்க்ளாஸ்மாதவி : இவர் வலைச்சரத்தில் அசத்திய நாட்கள் நினைவுக்கு வருகிறது..
இன்னும் நான் அறியாத தளம் சென்று பார்க்கிறேன்பா…
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அனைவருக்குமேப்பா...
//அப்பாதுரை said...
ReplyDeleteஅனேகமாக எல்லாப் பதிவர்களையும் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இதுல எனக்குத் தெரிஞ்சு தன்னுடைய பதிவளவுக்கு, சில சமயம் பதிவை விடக் அதிகமாக, பின்னூட்டம் எழுதுறவங்க மஞ்சுபாஷிணி தான். (இப்ப வை.கோ அந்த இடத்தை நைசா பிடிக்கப் பாக்கறாரு :)//
அச்சச்சோ அச்சச்சோ அப்பாதுரை அப்பாதுரை....
//sury Siva said...
ReplyDelete. //பெருமாளும் தாயாரும் ஏகாந்தமாய் உலவும் இடம் என்று ஐதீகம். உள்ளே போய் அமர்ந்தால் ...//
ஏன் ஸ்வாமி !! அவா ஏகாந்தமா உலவுற இடத்துலே .. நீங்க போய் டிஸ்டர்ப் பண்ணலாமா ?
அடுத்த த்டவை அரங்க நாதனைச் சேவிக்க வரும்பொழுது இந்த மாதிரி
அந்தரங்கமான ஏகாந்த ஸ்தலங்களிலே வாசலிலே
" டோன்ட் டிஸ்டர்ப்" போர்டு போடச்சொல்லணும்.
// காற்று காதில் சொல்லிப் போகும் எத்தனையோ விஷயங்களைத்தான் நாம் கதையாகவோ, கவிதையாகவோ....//
காற்றிலே பிறப்பது கவிதையா - இல்லை
காற்றிலே பறப்பது கவிதையா ?
இன்றைய நாட்களில்
இணையத்தில் பறப்பதெல்லாம்
கவிதையே. காதல் கவிதையே .
இருந்தாலும்
இதையும் கேட்பீர். .
கோவர்த்தன கிரிதாரி கண்ணன் ஓர் நாள்
குழலெடுத்தான் இசைத்தான். புவியேழையும்
அசைத்தான். ஆடச்செய்தான். அந்தக்
" காற்றினிலே வரும் கீதம் "
கேட்டதும் ஓடி வந்த
கோகுலத்து கோபியர்
மயங்கி நின்றாராம்.
அந்தக்
காற்றைக் கேட்டேன்.
காற்றே நீ கதையா ? கவிதையா ?
கண்ணடித்து சொல்லிற்று.
இல்லை இல்லை ..
நின் கவிதைக்கு நான் ஒரு விதை.
நின் காதலுக்கு துணை.
சுப்பு தாத்தா.//
அசத்துறீங்க அப்பா கவிதை வரிகளில்..... அடேங்கப்பா திருக்கண்ணமுது சாப்பிட்ட சந்தோஷம் எனக்கும்....
//நிலாமகள் said...
ReplyDeleteவை.கோ. சாருக்கு தங்கை அல்லவா மஞ்சு! சுப்பு ஐயா கவிதை அழகு. ஹுசைனம்மா பெண்கள் பற்றி சொன்னது அபாரம். என் கட்டுரை ஒன்றின் முத்தாய்ப்பாய் வைத்துக்கொள்ள விழைகிறது மனம். தனபாலன் சாருக்கு எனது நன்றியும்.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா... நிலா நிலா ஓடிவா..
//Geetha Sambasivam said...
ReplyDeleteஇத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்களது எளிமை.. சக பதிவர்களின் படைப்புகளை வாசித்து.. ரசித்து.. அழகாய் பின்னூட்டமும் போடுகிறார்கள்.//
எங்கே! :( என்னாலே முடியறதில்லை. பல சமயங்களிலும் படிப்பதோடு சரி. :)
மஞ்சுபாஷிணியால் எப்படி முடிகிறது என ஆச்சரியமாகவே இருக்கு. அதுவும் மூன்று, நான்கு பின்னூட்டங்கள் வெகு சரளமாய்ப் போடுகிறார். விவரணைகளும் அபாரம்.
இன்றைய அறிமுகங்கள் பலரும் அறிந்தவர்களே. நன்றி.//
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கீதா.... உடல்நலம் நன்றாயிருந்து மனம் அமைதியாக இருந்தால் என் டார்கெட் ஒரு நாளைக்கு பத்து... ஆனால் என் உடல்நலம் ஒத்துழைப்பதில்லை.. மனசு மட்டும் கருத்திடு கருத்திடு என்று பரபரத்துக்கொண்டே இருக்கிறதுப்பா...
தலைப்போ : காற்று
ReplyDeleteகடந்த அரைமணி நேரமாக
அது புயலாக வீசுகிறது.
”பின்னூட்டப்புயல்” ;)
”பின்னூட்ட ராணி” ;)
மஞ்சுவின் வருகையைத்தான் சொல்லுகிறேன்.
புயலுக்குப்பின் இப்போ சற்றே அமைதியானது.
அதனால் என்னால் இங்கு நுழைய முடிந்தது.
VGK
//இதுல எனக்குத் தெரிஞ்சு தன்னுடைய பதிவளவுக்கு, சில சமயம் பதிவை விடக் அதிகமாக, பின்னூட்டம் எழுதுறவங்க மஞ்சுபாஷிணி தான்.//
ReplyDeleteஅதே! அதே !! சபாபதே !!!
திரு. அப்பாதுரை சார் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்.;)
//(இப்ப வை.கோ அந்த இடத்தை நைசா பிடிக்கப் பாக்கறாரு :)//
நான் மிகச்சாதாரணமானவன், சார்.
மஞ்சுவுக்கு முன்னால் நான் பஞ்சு போல பறந்தே போய் விடுவேன், சார்.
என்னுடையதெல்லாம் மொத்தமாகக் கூட்டினால், அதுவும் ஒருசிலரோட பதிவுகளில் மட்டும், சுமார் ஒரு மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும்.
ஆனால் என் அன்புத்தங்கை மஞ்சுவோடது எல்லாமே, ஒவ்வொன்றும் குறைந்தபக்ஷம் ஒரு கிலோமீட்டர் நீளமாவது இருக்கும்.
So, மஞ்சு மஞ்சு தான். ! ;)))))
VGK
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமஞ்சுவின் வருகையைத்தான் சொல்லுகிறேன்.
புயலுக்குப்பின் இப்போ சற்றே அமைதியானது.
அதனால் என்னால் இங்கு நுழைய முடிந்தது.
VGK//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா....
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஆனால் என் அன்புத்தங்கை மஞ்சுவோடது எல்லாமே, ஒவ்வொன்றும் குறைந்தபக்ஷம் ஒரு கிலோமீட்டர் நீளமாவது இருக்கும்.
So, மஞ்சு மஞ்சு தான். ! ;)))))
VGK//
ஐயோ அண்ணா அண்ணா....
This comment has been removed by the author.
ReplyDeleteநிலாமகள் said...
ReplyDelete//வை.கோ. சாருக்கு தங்கை அல்லவா மஞ்சு! //
எல்லா விஷயங்களிலும் எனக்கு மஞ்சு தங்கையே தான்.
ஆனால் பக்கம் பக்கமாக பின்னூட்டம் இடுவதில் மட்டும் எனக்கு அவங்க அக்கா.
நான் அவங்க தம்பி
VGK
”அக்காவா கொக்கா” ன்னு ஒரு நகைச்சுவை கதை [குட்டியூண்டு கதை தான்] எழுதியது நினைவுக்கு வந்தது.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html
அன்புடன்
VGK
@மஞ்சுபாஷிணி
ReplyDeleteஎன் தளத்தினை படிக்க விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி :-)
@மஞ்சுபாஷிணி
ReplyDeleteஎன் தளத்தினை படிக்க விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி :-)