Wednesday, November 7, 2012

கொன்றால் பாவம்! தின்றால் போச்சு!


·         பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது. இறுதியில் நீண்ட நேர முயற்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.. மனிதர்களிடம் தொலைந்து போன கருணை... (முகநூலில் கண்டசெய்தி)


                       குட்டி ஆடு தப்பிவந்தா குள்ள நரிக்குச் சொந்தம்;
குள்ளநரி தப்பி வந்தா கொறவனுக்குச் சொந்தம்;

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்;

சட்டப்படி பாக்கப் போனா எட்டடிதான் சொந்தம்...
என்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று எட்டு அடிகூட சொந்தமில்லை. இறந்தவுடன் மின்மயானத்தில் இட்டு சாம்பலாக்கிவிடுகிறார்கள். இருந்தாலும் மனிதன் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடுகிறான்.


        புலால் மறுத்தல் என்னும் அதிகாரமே வகுத்துள்ளார் வள்ளுவர். அவர் சொன்னகுறளில்,

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

ஆகியன சிந்திக்கத்தக்கன

 வீட்டுக்கு விருந்தினர் வருகை
எதிர்வீட்டுக்கோழி
தப்பி ஓட்டம்
என்றொரு துளிப்பா உண்டு
சிலர் பேச்சுவழக்கில் சொல்வதுண்டு..
பறக்குறதுல விமானம்..
மிதக்குறதுல கப்பலத் தவிர எல்லாத்தையும் சாப்பிடுவேன் என்று..

·         தாவர உண்ணிகளுக்கு பற்கள் தட்டையாக இருக்கின்றன
·         புலால் உண்ணிகளுக்கு பற்கள் கூர்மையாக இருக்கின்றன
·         ஆனால் மனிதனுக்கு ஏன் பற்கள் தட்டையாகவும் கூர்மையாகவும் தெரியுமா?
மனிதன் இரண்டையும் சாப்பிடுபவன் என்பதால் தான் என்று சொல்லும் மனிதர்கள் பலரையும் காணமுடிகிறது.

ஒருபக்கம் கொன்றால் பாவம் என்போர்
இன்னொருபக்கம் தின்றால் போச்சு என்போர்
இவ்விருசாராருக்கும் இடையே உயிரிரக்கம் போராடிக்கொண்டிருக்கிறது.
அறிவியல் சொல்கிறது
வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும்
அல்லன செத்துமடியும் என்று.

இன்றைய பதிவுகளில், மனிதாபிமானம், சீவகாருண்யம், உயிரிரக்கம் குறித்த சிந்தனைகளை  காணஇருக்கிறோம்.

11. முத்துச்சரம் என்னும் வலைப்பதிவில் கூடுஇங்கே குருவி எங்கே? என்ற பதிவின் வழியே முத்துலஷ்மி அவர்கள் பத்து குருவிகள் தின இடுகைகளைத் தொகுத்துவழங்கியிருக்கிறார்.

12. கோமதி அரசு அவர்களின் திருமதிபக்கங்கள் என்னும் வலைப்பதிவில் உலகசிட்டுக்குருவிகள் தின இடுகை மலரும் நினைவுகளாக இருக்கிறது.

13. ராம்மலர் பக்கத்தில் ஜீவகாருண்யம் என்ற தலைப்பிலான கவிதை இனிமையானதாக இருக்கிறது.

14. வேல் மகேஷ் அவர்களின் வலைப்பதிவில் ஜீவகாருண்யம் என்னும் இடுகை உயிரிரக்கத்தை உணர்த்திச்செல்வதாக அமைகிறது.

15. சிவம் ஜோதி அவர்களின் சாகாக் கல்வி என்னும் வலைப்பதிவில் கொல்லாநெறி குறித்த கவிதை வழியே தமிழ்இலக்கியங்கள் எடுத்தியம்பும் அன்பியல் கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

16. அமு.செய்யது அவர்களின் மழைக்கு ஒதுங்கியவை என்னும் வலைப்பதிவில் நான்வெஜ்-ஜீவகாருண்யம் குறித்த கட்டுரை வாழ்வின் பல்வேறு நுட்பங்களை அழகுபட மொழிகிறது.

17. நண்பர் விச்சு அவர்களின் காக்கை பிடித்தல் என்னும்  கட்டுரையில் “வீட்டு மொட்டை மாடியில் வடாம் காயவைக்கும்போது எதுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ காகத்திற்கு பயப்படுவார்கள். ஆனால் அந்த காகத்தினை கூப்பிட்டு விரதமிடும் நாளில் மட்டும் உணவும் வைப்பார்கள். (ஆனா வடாம் திங்கக்கூடாது.. என்ன ஞாயம் இது) என இவர் கேட்கும் கேள்வி நியாயமானதாக இருக்கிறது.

18. தினேஷ்மாயா அவர்ளின் மனிதநேயம் என்னும் பகிர்வில் தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைக்கு பார்த்தால், இவ்வுலகை தினமும் பல கோடிமுறை அழிக்கவேண்டுமே.  என்ற சிந்தனை உண்மையை உணரச்செய்வதாக உள்ளது.

19. நண்பர் சுரேஸ் அவர்கள் வீடு என்னும் வலைப்பதிவில் எழுதிவருகிறார். இவர் எழுதிய மனிதம் மறந்த மனிதர்கள் என்னும் பதிவு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

20. வேதா இலங்காதிலகம் அவர்களின் மட்கும் மனிதம் என்னும் கவிதை மனிதத்தைச் சீர்தூக்கிப்பார்க்கிறது.


ஆயிரம் அறிவுரைகளைவிட சிறு உதவி மேலானது

என்ற சிந்தனைகளை இன்று தங்கள் முன்வைக்கிறேன்.

..../\.....நாளை சந்திப்போம்..../\.....

41 comments:

  1. நல்ல அறிமுகங்கள். பாராட்டுகள்.

    //ஆயிரம் அறிவுரைகளைவிட சிறு உதவி மேலானது//

    மிகச்சரியான உண்மை.

    ReplyDelete
  2. நெஞ்சு நெகிழவைத்த கதை. அறிமுகங்களில் பல நான் இதுவரை அறியாதவை. இன்றே படித்து விடுகிறேன். பொன்மொழி அருமை.

    ReplyDelete
  3. nalla vilakkam
    ayya!

    arimukangalai thodaranum ayya!
    nantri!

    ReplyDelete
  4. ஆயிரம் அறிவுரைகளை விட சிறு உதவி மேலானது என்று நீங்கள் முடித்திருப்பது மனதில் பதிந்தது, அருமை முனைவரையா. தெரியாத சில தளங்கள் உள்ளன. பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. நல்ல சிந்தனைகளுடன் இன்றைய நாள்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமையான சிந்தனைகள் முனைவர் அவர்களே...

    ReplyDelete
  7. வாழ்த்துகள்....முனைவர்.இரா.குணசீலன்.

    ReplyDelete
  8. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  9. என் வலைத்தளம், பதிவு அறிமுகதிற்கு மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  10. படங்களை பார்த்தபோது சிலிர்த்து விட்டது. படித்த போது மனம் உருகிவிட்டது.
    அருமையான கருத்து. பட்டுக்கோட்டையின் இந்த அருமையான பாடல் வெகு பிரசித்தம்.
    அறிமுக வலைபூக்கள் எல்லாமே புதியது. அறிமுகத்துக்கு நன்றி.
    கடைசி படமும் கருத்தும் சிறப்பு.
    வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. சிங்கம் பற்றிய செய்தி நெகிழ வைத்தது. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சிங்கம் பற்றிய செய்தி ஆச்சர்யப் படுத்தி நெகிழ வைத்தது. நீங்கள் சுட்டியுள்ளதில் நிறைய புதிய தளங்கள்.

    ReplyDelete
  13. ஆயிரம் அறிவுரைகளைவிட சிறு உதவி மேலானது அருமையான கருத்தை விதைத்த பதிவுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. இரண்டாம் முறையாக ஆசிரியர் பதவி வகிக்கும் தங்களுக்கு என் வாழ்த்துகள்.

    சிங்கம் பற்றிய செய்தி ஆச்சரியப்படுத்துகிறது. அறிவுரைகளை விட சிறுஉதவி மேலானது என்பது எத்தனை பெரிய உண்மை.

    ReplyDelete
  15. சிங்கத்திடம் இருக்கும் மனிதத்தில் ஆரம்பித்து, பட்டுக் கோட்டையாரின் பாடலுடன், மட்கும் மனிதத்துடன் முடித்த விதம் மனதைத் தொட்டது.

    மனித நேயத்தை சுட்டிக் காட்டிய இன்றைய சரம் ஜொலிக்கிறது.


    வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

    ReplyDelete
  16. முனைவர் அவர்களின் மொழி நடையும், இணையத் தளங்களை அறிமுகம் செய்யும் பாங்கும் அருமை. ராம்மலர் என்ற அருமையான இணையத்தை ஒரே ஒரு தடவை மட்டுமே பார்வையிட்டேன், நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டது. சகோதரி வேதா இலங்காதிலகம் அவர்களும் தமிழுக்குத் தொண்டு செய்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வலைப் பதிவுகளுக்கும், இணையத் தளங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    "ஒன்றுபட்டு உயர்வோம்"

    அந்திமாலையின் சார்பில்
    இ.சொ.லிங்கதாசன்
    www.anthimaalai.dk

    ReplyDelete
  17. வணக்கம்
    இரா,குணசீலன்(சார்)

    இன்று அனைத்துபதிகவுகளும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது,
    வாழ்த்துக்கள்
    எல்லா தளங்களும் அறியாதவை,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. சிங்கம் பற்றிய கதை மனதை உருக்கியது. அனைத்துமே
    அப்படித்தான் சீவ காருணயம் மிகவாகக் கூறப்பட்டது.
    காலையில் பார்த்தேன் புதிய பதிவு வரவில்லை.
    இப்போது மாலை ஆறரைக்குத்தான் பார்த்தேன்.
    என்னையும் அறிமுகம் செய்துள்ளீர்கள் மிக்க நன்றி.
    வழக்கமாக அந்தப் பக்கத்தை முகநூலில் போடுவேன்.
    இப்போது தான் வந்ததால் சிரம பரிகாரம் முடியச் செய்வேன்.
    இறையாசி நிறையட்டும்
    மற்றைய அறிமுகவாளர்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  19. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி அமைதிச்சாரல்

    ReplyDelete
  20. மகிழ்ச்சி..
    தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி முரளிதரன்.

    ReplyDelete
  21. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி சீனி.

    ReplyDelete
  22. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி கணேஷ் ஐயா.

    ReplyDelete
  23. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி மாதேவி.

    ReplyDelete
  24. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி விச்சு

    ReplyDelete
  25. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி சுரேஸ்

    ReplyDelete
  26. மகிழ்ச்சி.
    தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி மீனாஷி

    ReplyDelete
  27. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி ராம்வி.

    ReplyDelete
  28. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

    ReplyDelete
  29. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  30. மகிழ்ச்சி.
    தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி கோவை2டெல்லி

    ReplyDelete
  31. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இரஞ்சனி நாராயணன்.

    ReplyDelete
  32. மிக்க மகிழ்ச்சி லிங்கதாசன்.

    ReplyDelete
  33. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி ரூபன்.

    ReplyDelete
  34. மகிழ்ச்சி இலங்காதிலகம்.

    ReplyDelete
  35. மனிதம் பேசும் பதிவர்கள் பற்றிய
    அறிமுகம் மிக நன்று முனைவரே....

    ReplyDelete
  36. ஆயிரம் அறிவுரைகளை விட சிறு உதவி மேலானது..
    சிறப்பான கருத்துடன் முடித்தவிதம் அருமை.

    ReplyDelete
  37. நல்லதொரு தொகுப்பு. சிங்கத்தின் தாயுள்ளம் பற்றிய பகிர்வு அருமை. எனது வலைப்பதிவு குறித்த அறிமுகத்துக்கு நன்றி. வலைப்பூவின் பெயரையும் எனது பெயரையும் குழப்பிக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது. முடிந்தால் என் பெயரை சரியாகக் குறிப்பிடக் கேட்டுக் கொள்கிறேன்:)!

    வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்! தொடருங்கள்.

    ReplyDelete
  38. ஆயிரம் அறிவுரைகளை விட சிறு உதவி மேலானது..//

    உண்மைதான் நீங்கள் சொல்வது.
    வலைச்சர ஆசிரியர் போறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    என் சிட்டுக்குருவி பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  39. //ஆயிரம் அறிவுரைகளைவிட சிறு உதவி மேலானது//

    அருமையான கருத்து. பதிவுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  40. சிங்கத்தை பார்த்தால் யாருக்குமே பயமா இருக்கும்... தப்பிக்க ஓடுவோம்... மான் உள்பட.....

    மிருகங்கள் கூட தன் பசிக்கு மட்டும் தான் மற்ற மிருகங்களை கொன்று தின்றுகிறது. ஆனால் மனிதர்களோ தன் சுயநலத்திற்காக மனிதனே மனிதனை வேட்டையாடும் இந்த காலக்கட்டத்தில் இந்த அருமையான படப்பகிர்வும் சிங்கத்தின் போராட்டமும் அதன் நேசத்தன்மையும் அதனிடம் இருக்கும் கருணைப்பார்த்து மனிதர்கள் கற்கவேண்டும் என்று சொல்லவைத்த மிக அற்புதமான விஷயம் பகிர்ந்தது நன்று குணசீலா...

    சிறப்பான அறிமுகங்கள்.... சிறப்பான வலைதளங்கள்.....

    சிந்தனைப்பகிர்வு படிப்பினையை உணர்த்துகிறதுப்பா...

    சின்ன உதவி அதுவும் தக்க சமயத்தில் செய்யப்படும் உதவி எத்தனை பெரிய விஷயம் என்பதை அறியமுடிகிறது..

    சிறப்பான பகிர்வுக்கு குணசீலனுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நல்ல உள்ளங்களின் தளங்கள் பகிர்வுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete