Thursday, November 8, 2012

கவிதை சொல்லிகள்


காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.

பழந்தமிழன் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல வடிவங்களைக் கையாண்டான்.

• பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் பெரும்பாலும் ஆசிரியப்பாவால் பாடப்பட்டவையாகும்.
• சிலப்பதிகாரம் நிலைமண்டில ஆசிரியத்தால் ஆனது.
• நீதி நூல்கள் வெண்பா யாப்பால் அமைந்தவை.
• சீவக சிந்தாமணி, கம்பராமாணயம் விருத்தப்பாவால் ஆனவை.
• தேவார, திவ்ய பிரபந்தங்கள் இசை விருத்தத்தால் ஆனவை.
• பிள்ளைத் தமிழ் கழிநெடிலடிச் சந்தவிருத்தத்தால் ஆனது.
• உலாவும்,தூதும் கலிவெண்பாவால் ஆனவை.
• பரணி தாழிசையால் ஆனது.
• கோவை நூல்கள் கட்டளைக் கலித்துறையால் ஆனவை.
• பிற்கால நாடகங்கள் கீர்த்தனையால் ஆனவை.


மரபுக் கவிதைகளில் பெயர் பெற்ற சான்றோர்கள்.

“வெண்பாவில் புகழேந்தி, பரணிக்கோர் செயங்கொண்டார்
ஒண்பாவிற்கு உயர்கம்பன், கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் வசைபாடக் காளமேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காசால் ஒருவர் பகரொணாதே“

தனிப்பாடல்.

வெண்பா – புகழேந்தி (நளவெண்பா)
விருத்தம் – கம்பர் (கம்பராமாணம்)
சந்தம் – படிக்காசுப்புலவர் (சந்தப் பாடல்கள்)
கோவை, உலா, அந்தாதி – ஒட்டக்கூத்தன் (மூவருலா)
கலம்பகம் – இரட்டையர்கள்.

கருத்து – ஓட்டுநர்
கவிதை வடிவம் – ஊர்தி

ஊர்தி எந்த அளவுக்கு காலத்துக்கு ஏற்றதாய் இருக்கவேண்டுமோ அதுபோல 
கருத்தும் இயைபுடையதாகவே இருத்தல் வேண்டும்.

இன்று...
பலரிடம் ஊர்தி இருக்கிறது
ஓட்டத் தெரியவில்லை!

ஓட்டத் தெரிந்தவர்களிடம் 
ஊர்தியில்லை!

ஓட்டத்தெரிந்தவர்களிடம் உள்ள ஊர்தியே இன்றைய காலப் பாதையில் தொடர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

பழந்தமிழ்க் கவிஞர்கள் இதனை நன்கு உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

தன் கருத்துக்கு ஏற்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஒரு கவிதை காலம் கடந்தும் போற்றப்பட கருத்துடன் இயைபுடைய வடிவம் அடிப்படைத் தேவையாகும்.

ஓசை நயமிக்க கவிதைகள் காலவெள்ளத்தில் புறந்தள்ளப்பட்டுவிடும்!
கருத்தாழமிக்க கவிதைகளே கரைசேரும் என்பதையும் இளங்கவிஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்!

இன்று இணையத்தில் தமிழால் கவிதை சொல்லும் கவிதை சொல்லிகளைக் காணஇருக்கிறோம்..


முதல்முறை வலைச்சரப்பணியாற்றும்போது கவித்தமிழ் என்ற தலைப்பில் சில கவிஞர்களை அறிமுகம்செய்தேன். அவர்களையே மீண்டும் அறிமுகம்செய்யாமல் புதிய கவிஞர்களை இன்றைய கவிதைசொல்லிகள் என்னும் தலைப்பில் அறிமுகம் செய்ய இருக்கிறேன்.

21.அருமை நண்பர் முரளிதரன் அவர்களின் எதுகவிதை என்ற கவிதையில், விற்பனை செய்ய விரைவாய் எழுதுவது அல்ல கவிதை! கற்பனை செடியில் பூக்கும் கவின்மிகு கருத்து கவிதை! என்று நயம்பட உரைக்கிறார்.

22.அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களின் வசந்தமண்டபம் என்னும் வலைப்பதிவை தமிழுலகம் நன்கறியும். தம் கவிதைகளால் தமிழரின் மரபுகளை அழகுபட மொழியும் இவர் தம் கவிதைகளில் அழகிய தமிழ்ச்சொற்களையும் இனம்காட்டிச் செல்கிறார். இவரின் கிழக்கும் மேற்கும் என்ற கவிதை அதற்குத்தக்க சான்றாக்கும்.

23.வே.சுப்பிரமணியன் அவர்களின் தண்ணீர்ப்பந்தல் என்னும் வலைப்பதிவில் சிறைவாசி என்னும் கவிதை சாட்டையால் அடித்ததுபோல உண்மையை சத்தமாகச்சொல்கிறது.


24.நண்பர் சீனி அவர்களின்கவிதை என்ற வலைப்பதிவில் யார்வகுத்தது என்ற கவிதை நம் மனதைத் தொட்டுப்பார்க்கவைப்பதாக அமைகிறது.


25.கவிஞர் செய்தாலி அவர்களின் கிளைகளின் துக்கம் என்னும் கவிதை நம் மனதிலும் துக்கத்தை விதைத்துச்செல்கிறது.


26.அன்பர் இரமணி அவர்களின் தீதும் நன்றும் பிறர்தரவாரா என்ற வலைப்பதிவை பலரும் அறிந்திருப்பீர்கள். அவரின் விளங்குவதும் விளங்காததும் என்ற கவிதையில் சுடும் உண்மையைப் பதிவுசெய்துள்ளார்.


27.நண்பர் ரியாஸ்அகமது அவர்களின் நுனிப்புல்லில் ஒரு பனித்துளி என்ற வலையின் பெயரே கவிதைபோல உள்ளது. அவருடைய பெருமை கொள்ளாதே கொல்லும் என்ற கவிதையில் வெற்றி வேண்டவே வேண்டாம் என்கிறார் ஏன் என்று கேளுங்களேன்.


28.வலையுலகம் நன்கறிந்த பெண்கவிஞர் தேனம்மை இலக்சுமணன் ஆவார். இவரது டைரி கிறுக்கல்கள் என்ற வலைப்பதிவில் மீன் என்ற கவிதை வெளியிட்டிருக்கிறார். அந்தக்கவிதையில் மீனோடு சேர்ந்து நம் மனமும் நீந்திச்செல்கிறது.


29.சசிகலா அவர்களின் தென்றல் என்ற வலைப்பதிவில் அரிதினும் அரிதான பெண்பிறவி குறித்த கவிதை போற்றத்தக்கதாகவுள்ளது.


30.நண்பர் ரிஷான் அவர்களின் வீழ்தலின் நிழல் என்னும் கவிதை நம்மை  சிந்தனையில் ஆழ்த்துவதாக உள்ளது.



என்ற கருத்தை இன்றைய சிந்தனையாகத் தங்கள் முன்வைக்கிறேன்.

46 comments:

  1. 'ஓசை நயமிக்க கவிதைகள் காலவெள்ளத்தில் புறந்தள்ளப்பட்டுவிடும்!
    கருத்தாழமிக்க கவிதைகளே கரைசேரும்'

    என்ற கருத்து இளம் கவிஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லாக் கவிஞர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.

    கவிதை சொல்லிகள் ஒவ்வொருவரும் தம்தம் பாணியில் சிறப்பு பெற்றவர்களாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

    எல்லா கவிதை சொல்லிகளுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. கவிதை அற்புதமான கருத்துக்களுடன் தென்றலையும் அறிமுகபடுத்தியது கண்டு மகிழ்ந்தேன்.
    அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. அனைத்தும் சிறந்த தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  4. தாங்கள் கவிதைக்கு தந்துள்ள விளக்கம் எல்லாக் கவிஞர்களும் மனதில் கொள்ளத் தக்கது.நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள கவிதைகள் அனைத்தும் அருமை. தொடர்க உங்கள் பணி

    எனது கவிதையையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி முனைவர் ஐயா!

    ReplyDelete
  5. மிக்க நன்றி அண்ணா! திறமைமிக்க படைப்பாளர்களின் படைப்புக்களுடன் எனது படைப்பையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா! இதில் சிலர் நன்கு பரிச்சயமானவர்கள் என்றாலும், நான் காணத்தவறிய படைப்பாளர்களையும் தங்களின் மூலம் கண்டுகொண்டேன். மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete
  6. இந்த தலைப்பில் என்னை அறிமுகம் செய்து இருப்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. நன்றி நன்றி ...
    இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
    எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உணமையான வாழ்த்துக்கள் கிடைப்பது மிகவும் அரிதான காலத்தில் ஊக்குவிக்க கிடைத்த அற்புதமான இடம் வலைச்சரம் ! நன்றி நன்றி

    ReplyDelete
  7. அய்யா முனைவர் அவர்களே!

    உங்களை போன்ற படித்தமக்கள்-
    பிடித்தது என்றாலே-
    என்னை போன்ற சாமானியனுக்கு மிக்க மகிழ்வே!

    நீங்கள் மற்ற மக்களுக்கும்-
    அறிமுகம் செய்ததில் மிக்க-
    நெகிழ்ச்சி!

    மற்ற கவிதை சொல்லிகளும்-
    நான் நேசித்து படிக்கும்-
    நல்ல கவிதையாளர்கள்!
    என்னை அறிமுகம் செய்தமைக்கும்-
    அனைத்து கவிதையாளர்களுக்கும்-
    வாழ்த்துக்கள்!

    உங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. அனைத்து படைப்புக்களுமே அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. என்னையும் சிறந்த பதிவர்களுடன் சேர்த்து
    அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தாங்கள் அறிமுகம் செய்துள்ள அனைவரும்
    நான் தொடர்பவர்கள் என சொல்லிக் கொள்வதில்
    பெருமை கொள்கிறேன்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. கவிதைகளின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. சிறப்பான கவிஞர்களையும் சிறப்பான கவிதைகளையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  13. மிக்க நன்றி முனைவரே
    மற்ற தோழமை உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அனைத்து பதிவர்களுமே சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வணக்கம் முனைவரே

    எண்ணங்களை கருவாக்கி
    நற்சொல் வடிவத்தால் உருவாக்கி
    சீர்மிகு பொருளால் தருவிக்கும்


    சிறந்த படைப்பாளிகளுடன்
    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்.....

    அறிமுகமாகிய அனைவருக்கும் எனது
    மனம் கனிந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. அன்பின் முனைவர்.இரா.குணசீலன்,

    உங்களது அருமையான பதிவில் எனது வலைத்தளத்தையும் சேர்த்துக் கொண்டதில் மகிழ்கிறேன்.
    மிகவும் நன்றி.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete
  17. நல்ல தேர்வு;நல்லபதிவு

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு .தேர்வு செய்யப்பட்ட அனைத்து வலைத்தள
    நெஞ்சங்களுக்கும் உங்ககளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத்
    தெரிவிப்பதில் மனம் மகிழ்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  19. அறிமுகத்துக்கு நன்றி குணா :)

    ReplyDelete
  20. தலைப்பே மிக அற்புதம் குணசீலா...

    கவிதைசொல்லிகள்.....

    சிறப்பான அறிமுகங்கள்... அதில் நான் அறிந்த முத்துக்களும் உண்டு......

    கடைசியில் கொடுத்த சிந்தனைமுத்து மிக மிக அற்புதம்...

    ஜனங்க இதை யோசிப்பாங்களா?

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் குணசீலனுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...

    ReplyDelete
  21. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி இரஞ்சனி நாரயணனன்

    ReplyDelete
  22. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி சசிகலா.

    ReplyDelete
  23. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  24. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி முரளிதரன்.

    ReplyDelete
  25. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி சுப்பிரணியன்.

    ReplyDelete
  26. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி ரியாஸ் அகமது.

    ReplyDelete
  27. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி தொழிற்களம் குழு.

    ReplyDelete
  28. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி இரமணி ஐயா.

    ReplyDelete
  29. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி இராஜேஸ்வரி.

    ReplyDelete
  30. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி மாதேவி.

    ReplyDelete
  31. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி சுரேஷ்

    ReplyDelete
  32. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி செய்தாலி.

    ReplyDelete
  33. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி இலட்சுமி அம்மா.

    ReplyDelete
  34. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  35. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete
  36. தங்களை வலையுலகில் மீண்டும் காண்பது பெரிதும் மகிழ்வளிப்பதாக உள்ளது சென்னைப் பித்தன் ஐயா.

    ReplyDelete
  37. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி அம்பாளடியாள்

    ReplyDelete
  38. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி தேனம்மை இலட்சுமணன்.

    ReplyDelete
  39. வணக்கம்,
    இரா,குணசீலன்(சார்)

    இன்று அனைத்து பதிளும் கவிதை சார்ந்தவை மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் பற்றியதாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி,
    அனைத்து தளங்களும் அருமையானது வாழ்த்துக்கள்(சார்)
    சிறு வேலையின் நிமிர்தம் காரணமாக என்னுடைய பின்னூட்டம் தாமதமாகியது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  40. //பொருட்களைப் பயன்படுத்துங்கள்
    மனிதர்களை நேசியுங்கள்.

    மாறாக பொருட்களை நேசித்து
    மனிதர்களைப் பயன்படுத்தாதீர்கள்.//

    அழகோ அழகு ! ;)))))

    நல்ல பல அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  41. தங்கள் தொடர்வருகைக்கு நன்றி ரூபன்

    ReplyDelete
  42. தங்கள் மேலான வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

    ReplyDelete
  43. இன்றைய நாள் முன்னுரை எனக்கு மிக பிடித்துள்ளது. சனி ஞாயிறில் இது முழுதும் வாசிக்க (மற்றைய நாளில் நேரமில்லை) எண்ணியுள்ளேன்.
    அனைவருக்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  44. மகிழ்ச்சி இலங்காதிலகம்.

    ReplyDelete
  45. அன்பின் குணா

    கவிதை எழுதும் கவிஞர்களை அறிமுகப் படுத்தியமை நன்று - நல்வாழ்த்துகள் குணா - நட்புடன் சீனா

    ReplyDelete