ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்குவிற்பான் என்பது எனக்குப் பிடித்த பொன்மொழியாகும்.
ஒரு விளக்கு ஒளிவிட்டு எரிய அகல், திரி, எண்ணை மட்டும் இருந்தால் போதாது அவ்விளக்கானது தொடர்ந்து எரிய தூண்டுகோல் என்பது அடிப்படைத்தேவையாகும்.
நீரின்றி அமையாது உலகு என்பதுபோல மறுமொழியிட்டு ஊக்குவிப்பவர்கள் இன்றி இயங்காது வலையுலகு.
மறுமொழியிடுவோர் பலவகைப்படுவர்.
31. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் உங்களின் மந்திரச்சொல் என்றபதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவாகும்.
32.மஞ்சுபாஷிணி அவர்கள் கதம்ப உணர்வுகள் என்னும் வலையில் எழுதிவருகிறார்.அவர்களின் அன்புப் பிணைப்பு என்னும் கதை எதிர்பர்க்கமுடியாத திருப்பங்களைக் கொண்டது.
33. வை.கோபால கிருஷ்ணன் அவர்களின் சிரித்து வாழவேண்டும் என்ற இடுகை நகைச்சுவையை வாரி வாரி வழங்குகிறது.
34. இரஞ்சனி நாராயணன் அவர்களின் பிளாஸ்டிக் அழிவிலிருந்து உலகைக் காக்கமுடியுமா என்ற பதிவு காலத்துக்கேற்ற சிந்தனையாகவுள்ளது.
35. வெங்கட் நாகராஜ் அவர்கள் தம் வலையில் பதிவேற்றும் நிழற்படங்களைப் பார்ப்பதற்காகவே இவர் வலைக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு.
36. எஸ்.சுரேஸ் அவர்களின் ஹைகூ கவிதைகள் சிந்திக்கத்தகனவாக உள்ளன.
37. பாலகணேஷ் அவர்களின் வலைப்பதிவை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். நான் உயிரோடு இருக்கிறேனா என்று இவரது பதிவைப் பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
38. அமைதிச்சாரல் பதிவில் நிழற்படங்களை நீண்ட நேரம் கண்டு மகிழ்ந்தேன்.
39. கோவை2தில்லி வலைப்பதிவில் நான் கண்ட ஆடைகளின் மீது மோகம் என்ற இடுகை உண்மையைப் புலப்படுத்துவதாக இருந்தது.
40. வரலாற்றுச் சுவடுகள் என்னும் வலைப்பதிவின் பெயருக்கு ஏற்ப இவர் பல்வேறு வரலாற்றுச் சுவடுகளைப் பதிவுசெய்துவருகிறார்.
ஒரு விளக்கு ஒளிவிட்டு எரிய அகல், திரி, எண்ணை மட்டும் இருந்தால் போதாது அவ்விளக்கானது தொடர்ந்து எரிய தூண்டுகோல் என்பது அடிப்படைத்தேவையாகும்.
நீரின்றி அமையாது உலகு என்பதுபோல மறுமொழியிட்டு ஊக்குவிப்பவர்கள் இன்றி இயங்காது வலையுலகு.
மனம் விட்டுப் பாராட்ட ஒரு சிறந்த மனம் வேண்டும்.
மறுமொழியிடுவோர் பலவகைப்படுவர்.
- முழுமையாகவும், ஆழமாகவும் படித்து மனம் விட்டுப் பாராட்டுபவர்கள்
- மேலோட்டமாகப் படித்து மறுமொழியிடுவோர்.
- வருகையைப் பதிவு செய்வோர்.
- நிறையை மட்டும் சுட்டிச் செல்வோர்
- குறையை மட்டும் சுட்டிச் செல்வோர்
- வாக்களித்துவிட்டேன் எனப் பதிவுசெய்வோர்
என மறுமொழியிடுவோரைப் பாகுபடுத்தி உணரமுடியும்.
உண்மையான பாராட்டு ஒரு பதிவரை உயரத்துக்கு அழைத்துச்செல்லும்
பொய்யான பாராட்டு ஒரு பதிவரை தவறான பாதைக்குஅழைத்துச்செல்லும்
என்னும் சிந்தனையை முன்வைத்து..
மறுமொழியிட்டு ஊக்குவிக்கும் பதிவர்களை ஊக்குவிக்கும் சிறப்புப்பதிவாக இன்றைய தொகுப்பை வெளியிடுகிறேன்.
நான் கண்டவரை பின்வரும் பதிவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு.
இவர்கள் யாரும் தன் வலைப்பதிவுக்கு மறுமொழி அதிகமாக வரவேண்டும் என்பதால் பலபதிவுகளுக்கும் சென்று மறுமொழியிடுவதில்லை.
எங்கு சிறந்த பதிவு கண்களுக்குத் தென்பட்டாலும் மனம் திறந்து பாராட்டும் பண்புடையவர்கள். அதனால் இன்றைய பதிவு இவர்களுக்காக..
31. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் உங்களின் மந்திரச்சொல் என்றபதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவாகும்.
32.மஞ்சுபாஷிணி அவர்கள் கதம்ப உணர்வுகள் என்னும் வலையில் எழுதிவருகிறார்.அவர்களின் அன்புப் பிணைப்பு என்னும் கதை எதிர்பர்க்கமுடியாத திருப்பங்களைக் கொண்டது.
33. வை.கோபால கிருஷ்ணன் அவர்களின் சிரித்து வாழவேண்டும் என்ற இடுகை நகைச்சுவையை வாரி வாரி வழங்குகிறது.
34. இரஞ்சனி நாராயணன் அவர்களின் பிளாஸ்டிக் அழிவிலிருந்து உலகைக் காக்கமுடியுமா என்ற பதிவு காலத்துக்கேற்ற சிந்தனையாகவுள்ளது.
35. வெங்கட் நாகராஜ் அவர்கள் தம் வலையில் பதிவேற்றும் நிழற்படங்களைப் பார்ப்பதற்காகவே இவர் வலைக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு.
36. எஸ்.சுரேஸ் அவர்களின் ஹைகூ கவிதைகள் சிந்திக்கத்தகனவாக உள்ளன.
37. பாலகணேஷ் அவர்களின் வலைப்பதிவை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். நான் உயிரோடு இருக்கிறேனா என்று இவரது பதிவைப் பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
38. அமைதிச்சாரல் பதிவில் நிழற்படங்களை நீண்ட நேரம் கண்டு மகிழ்ந்தேன்.
39. கோவை2தில்லி வலைப்பதிவில் நான் கண்ட ஆடைகளின் மீது மோகம் என்ற இடுகை உண்மையைப் புலப்படுத்துவதாக இருந்தது.
40. வரலாற்றுச் சுவடுகள் என்னும் வலைப்பதிவின் பெயருக்கு ஏற்ப இவர் பல்வேறு வரலாற்றுச் சுவடுகளைப் பதிவுசெய்துவருகிறார்.
என்ற கருத்தை இன்றைய சிந்தனையாகத் தங்கள் முன்வைக்கிறேன்.
பின்னூட்டத்தால் ஊக்குவித்து சிறப்பிப்பவர்களை அருமையாய் அறிமுகப்படுத்திய தளங்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteமறுமொழியிடுவோரை வகைப்படுத்திவிட்டீர்களா! அதனால் மறுமொழி இடவே யோசிக்க வைத்துவிட்டீர்கள். இருந்தாலும் ”உண்மையான பாராட்டு ஒரு பதிவரை உயரத்துக்கு அழைத்துச்செல்லும்
ReplyDeleteபொய்யான பாராட்டு ஒரு பதிவரை தவறான பாதைக்குஅழைத்துச்செல்லும்” அழகான சிந்தனை . அறிமுகப்படுத்திய பதிவர்களும் சிறப்பானவர்கள்தான். இறுதியில் சொன்ன கருத்தும் சிறப்புதான்.
”உண்மையான பாராட்டு ஒரு பதிவரை உயரத்துக்கு அழைத்துச்செல்லும்
ReplyDeleteபொய்யான பாராட்டு ஒரு பதிவரை தவறான பாதைக்குஅழைத்துச்செல்லும்”
சிறப்பான சிந்திக்க வைத்த வரிகள். அறிமுகங்களும் சிறப்பானவர்கள்.
அற்புதம்...
ReplyDeleteதொடருங்கள் என்னுடைய வாழ்த்துக்கள்..
அற்புதம்...
ReplyDeleteதொடருங்கள் என்னுடைய வாழ்த்துக்கள்..
எனது வலைப்பூவினையும் எனது மனைவியின் வலைப்பூவினையும் [கோவை2தில்லி] ஒரே நாளில் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே....
ReplyDelete'மறுமொழியிட்டு ஊக்குவிக்கும் பதிவர்களை ஊக்குவிக்கும் சிறப்புப்பதிவில்' என்னையும் சேர்த்திருப்பது மிகப் பெரிய உவகையைக் கொடுக்கிறது முனைவர் அவர்களே!
ReplyDeleteபலமுறை தங்களது தளத்திற்கு வந்து பல பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
உங்கள் எழுத்தைப் பற்றி என் கருத்தா என்று யோசித்து பேசாமல் வந்திருக்கிறேன்.
பதிவுலக ஜாம்பவான்களில் மத்தியில் என் அறிமுகம்!
என்னவென்று சொல்லி என் நன்றியறிதலை தெரிவிப்பேன் முனைவரே?
சென்ற வாரம் 'எங்கள் பிளாக்' மூலம் அறிமுகப்படுத்த பட்ட போது வேடிக்கையாக ஒரு பின்னூட்டம் போட்டேன்:
அடுத்த வார ஆசிரியரிடம் சொல்லுங்கள் என்னை அறிமுகப்படுத்த; தொடர்ச்சியாக மூன்றாவது முறை அறிமுகம் ஆகி hat trick அடிக்க ஆசை என்று!
திரு சீனா அவர்கள் கொடுத்த அரியாசனமும் தாங்கள் இப்போது கொடுத்திருக்கும் சரியாசனமும் சிலிர்க்க வைக்கிறது.
எனது எழுத்துக்களுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்த தங்களுக்கு என்ன சொல்லி நன்றியைத் தெரிவிப்பேன்?
என்னுடைய இந்த வார்த்தைகளையே நன்றியாகக் கொள்ளுவீர்களாக!
மறுமொழியாளர்களின் முக்கிய பதிவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதங்கள் அன்பிற்கு மிக்க நன்றி முனைவர் சார்...!
ReplyDeleteமிக்க அன்புடன்
வரலாற்று சுவடுகள்!
பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களை ஊக்குவிப்போர் பட்டியலில் என் பெயரையும் சேர்த்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
//என்னை சந்திப்பவர்கள்
ReplyDeleteவெற்றியடையாமல் போவதில்லை
இப்படிக்கு - தோல்வி //
பின்னூட்டமிடும் நானே அந்தத் தோல்வியாக இருப்பதாகவும்
என்னை தன் தரமான பதிவுகள் மூலம் சந்தித்தவர்கள், நான் அவர்களுக்குக் கொடுத்த பின்னூட்டங்களால் வெற்றியடையாமல் போனதில்லை
எனவும் நினைத்து மனதில் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன்.
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
மின்வெட்டு அதிகம் என்பதால் உடனே வர முடியவில்லை...
ReplyDeleteசிறப்பாக அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சிறப்பான கருத்தோடு முடித்துள்ளீர்கள்...
நன்றி...
tm8
நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் அறிமுகம் இல்லாவிடினும் தேடி வந்தடையும். அப்படிதான் நான் புதிதாக வலை உலகத்திற்கு வந்து சில வலைப் பூக்களை தொடர்கிறேன்.அதில் வலைச்சரமும் ஒன்று. நல்ல விஷயங்களை பாராட்ட முன் வர நல்ல மனம் வேண்டும். பாராட்டுதல் கூட ஒரு நல்ல பண்புதான். அந்த பாராட்டு முகஸ்துதிக்காக இல்லாத பட்சம். நன்றி!
ReplyDeleteதரமான தங்கமான ஜொலிக்கும் பதிவுகள் கொடுப்பவர்களுக்கு பின்னூட்டங்கள் தொடர்ச்சியாகக் கொடுத்து ஊக்குவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைந்தவன் / தொடர்ந்து மகிழ்ச்சியடைபவன் நான்.
ReplyDeleteபிற பதிவர்களின் அயராத கடும் உழைப்பினைப்பாராட்டி, அவர்களின் மிகச்சிறப்பான பதிவுகளை அடையாளம் கண்டு, முழுவதுமாகப் படித்து, ஏதோ நம்மால் முடிந்த அளவுக்கு, பின்னூட்டமிட்டு அவர்களைத் தொடர்ச்சியாக உற்சாகப் படுத்துவதில், எனக்கும் ஓர் உற்சாகம் ஏற்பட்டது / ஏற்படுகிறது / இனியும் ஏற்படும் என்பதே உண்மை.
அதே போல என் பதிவுகளுக்கு தொடர்ச்சியாக வருகை புரிந்து, முழுவதுமாகப் படித்து, ரஸித்து வெகுவாகப் பாராட்டி ஊக்குவித்தவர்களை நான் எப்போது என் நினைவில் நிறுத்தி, மனதால் நன்றிகூறி மகிழ்வதுண்டு.
பதிவினை முழுவதுமாகப் படித்துப்பார்த்து, உண்மையாக கொடுக்கப்படும் பின்னூட்டங்களே, எழுத்தாளருக்கும், பதிவருக்கும் கிடைக்கும் மிகச்சிறந்த உற்சாக பானமாகும்.
>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>
ReplyDeleteHello,
Ira, kunacilan (Sir)
Registration for the registration of bloggers who comment about special lead is very happy to host you, sir oruvarakalam very calm and neutral and records Congratulations to you,
- Thank you -
- With love -
- Ruben -
//இவர்கள் யாரும் தன் வலைப்பதிவுக்கு மறுமொழி அதிகமாக வரவேண்டும் என்பதால் பலபதிவுகளுக்கும் சென்று மறுமொழியிடுவதில்லை.
ReplyDeleteஎங்கு சிறந்த பதிவு கண்களுக்குத் தென்பட்டாலும் மனம் திறந்து பாராட்டும் பண்புடையவர்கள். அதனால் இன்றைய பதிவு இவர்களுக்காக..//
தங்களின் மேற்கண்ட வாசகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அந்த மிகச்சிறப்பான வாசகத்தின் கீழ் என் பெயரினைக் கொண்டு வந்துள்ளதற்கு, என் மனமார்ந்த நன்றிகள், முனைவர் ஐயா. ;)))))
வாழ்த்துக்கள் முனைவரே தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .பலரையும் அறிமுகம் செய்துகொள்ளும் இத் தருணம் தமிழ் வாழ பாடு படும் இன்னொருவர் இவரது
ReplyDeleteகவிதைகளையும் உங்கள் பார்வைக்கு முன்னிறுத்திச் செல்கின்றேன் .http://bharathidasanfrance.blogspot.com/2012/11/blog-post_9.html
மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .
//மனம் விட்டுப் பாராட்ட ஒரு சிறந்த மனம் வேண்டும், எனவும்,
ReplyDeleteமறுமொழியிடுவோர் பலவகைப்படுவர் எனவும் சொல்லி,
அவ்வாறு மறுமொழியிடுவோர்களை ஆறு விதமாகப் பிரித்துக் காட்டியுள்ளீர்கள்.
அவைகளில் முதன்மையானதான
”முழுமையாகவும், ஆழமாகவும் படித்து மனம் விட்டுப் பாராட்டுபவர்கள்”
என்ற தலைப்பின் கீழே நான், எப்போதும் இருக்க விரும்புகிறேன். அதனாலேயே என்னால் பல பதிவர்களின் பதிவுகளுக்கு சென்றவர நேரம் இல்லாமல் போய் விடுகிறது.
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
என்னைத்தவிர தாங்கள் குறிப்பிட்டுள்ள் ஏனைய ஒன்பது பேர்களில் பலரையும், நானும் நான் சென்றுவரும் பல பதிவுகளில் பார்த்துள்ளேன்.
ReplyDeleteஅனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>
தாங்கள் குறிப்பிடுள்ள 10 பதிவர்களில் திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள், சற்றே தனித்தன்மை வாய்ந்தவர் ஆவார்.
ReplyDeleteபடைப்புக்களை, ஓர் முழு ஈடுபாட்டுடன் வாசித்து, வரிக்கு வரி ரஸித்து, மிகவும் ஆத்மார்த்தமாக, மிகப்பெரிய பின்னூட்டம் கொடுப்பவர்.
பதிவின் மொத்த நீள, அகல, ஆழத்தைவிட, இவரின் பின்னூட்டம், இன்னும் நீள அகல ஆழமாகத் தோற்றமளிக்கும்.
பிறரை [அதாவது படைப்பாளியை] தன் பின்னூட்டங்களால சந்தோஷப் படுத்துவதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்கும் மட்டுமே பிறவி எடுத்துளவர், என்று சொன்னால் மிகையாகாது.
இதற்காக இவர் செல்வழிக்கும் பொன்னான நேரம், உழைப்பு, பொறுமை முதலியன மிகவும் அதிகம்.
தன் கைவிரல்கள் வலிக்கும் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பார்.
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
//உண்மையான பாராட்டு ஒரு பதிவரை உயரத்துக்கு அழைத்துச்செல்லும்//
ReplyDeleteநிச்சயமாக!
அதுபோல பெரும்பாலான சமயங்களில் என் பின்னூட்டங்களின் மூலம் நிறைகளை மட்டுமே கூறுவது உண்டு.
தவிர்க்க இயலாத சமயங்களின் ஒருசில குறைகளையும், சிறுசிறு எழுத்துப்பிழைகளையும் கூட, எனக்குத்தெரிந்தவரை சுட்டிக்காட்டுவதும் உண்டு.
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் வித்யாசமானவை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK
வித்தியாசமான முறையில் அறிமுகங்கள். அதில் என்னுடைய தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி :-)
ReplyDeleteஒரு பொன்மொழி மூலம் அருமையான கருத்தை தந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
ReplyDeleteகற்றுக்கொண்டேன் ஒரு படம் நன்றி நண்பரே!
இன்றைய அறிமுகங்கள் அனைவரும்
ReplyDeleteதங்கள் கருத்துக்களால் நம்மை ஊக்குவிப்பவர்கள்
என்பது நிதர்சனம்......
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இதை எல்லோரும் உணர்ந்தால் நல்லவை நடக்கும். பொய்யான பூசி மெழுகல்கள் நிறைய நடக்கிறது தான். மாலையில் தான பதிவை வாசிக்க முடிந்தது. நல்வாழ்த்து. பதிவர்களிற்கும் இனிய நல் வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
நல்ல பதிவு.
ReplyDeleteஎன் அன்புச்சகோதரிகளான
ReplyDelete’மஞ்சு’வுக்கும்
’ரஞ்சு’ வுக்கும்
இடையே அவர்களின் பாசவலையில் நான் ஏற்கனவே மாட்டிக்கொண்டுள்ளேன்.
அந்த அவர்களின் பாசம் என்ற குளங்களில் பாசமிகுதியால் நான் எவ்வாறு வழுக்கி விழுந்துள்ளேன் என்பதை இந்தக் கீழ்க்கண்ட இரண்டு இணைப்புக்களில் நீங்களும் காணலாம்:
மஞ்சுவின் பாசம்:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455
ரஞ்சுவின் நேசம்:
http://ranjaninarayanan.wordpress.com/2012/10/26/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4/
இந்த “மஞ்சு” “ரஞ்சு” இருவருக்கும் இடையிலேயே என் பெயரையும் இங்கு இந்தப்பதிவினில் தாங்கள் சுட்டிக்காட்டியிருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
அன்புடன்
VGK
கருத்துக்களால் அனைவரையும் ஊக்குவிப்பவர்கள்.
ReplyDeleteஅவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்று சொன்னீர் முனைவரையா. எந்தப் பதிவையும படித்து அதன் விஷயத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் மேலோட்டமாகப் பாராட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உங்களின் பல பதிவுகளில் கூட எனக்குப் புரியாத பொழுது கருத்திடாமல் சென்று பின்னர் புரிந்து கொண்டு வந்து தாமதக் கருத்திட்டதும் உண்டு. தமிழமுதம் பருக இவ்வளவு சிரத்தை இல்லாவிடில் எப்படி? சில சமயங்களில் வேலைப்பளுவின் அழுத்தத்தில் நிறையத் தளங்களுக்குச் செல்ல இயலாமல் போகும்போது வருந்துவதும் உண்டு நான். பல வல்லுனர்களுக்கிடையில் என்னையும் நீங்கள் நினைவில் கொண்டதில் மிகமிகமிக மனநிறைவும் மகிழ்ச்சியும் எனக்கு. உங்களுக்கு என் இதயத்தின் அடியாழத்திலிருந்து மகிழ்வுடன் நன்றி மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் ராஜி. கோபால் சார். சாரல், பால கணேஷ், வரலாற்றுச் சுவடுகள், மஞ்சுபாஷிணி , ராமலெக்ஷ்மி, எல்லாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன் குணா. என்னையும் ஊக்குவிப்பவர்கள் இவர்கள்தான். :)
ReplyDeleteதொடர்ந்து மூன்றாவது முறையாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி என்னை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி! அறிமுகப்பதிவர்கள் அனைவரும் சிறந்தவர்கள் வாழ்த்துக்கள் ஐயா! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழக்கும் நன்றி விச்சு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி சௌந்தர்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்
ReplyDeleteதங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் அனுபவம் இன்றைய இளம்பதிவர்களுக்கு அடிப்படைத்தேவை அம்மா.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஏற்புக்கும் நன்றி இரஞ்சணி நாரயணன்.
தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி சி்த்திரவீதிக்காரன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி வரலாற்றுச்சுவடுகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் தொடர்ந்துவெளியிட்ட ஒன்பது மறுமொழிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் ஐயா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி மாதேவி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் கணேஷ் ஐயா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் தேனம்மை இலக்சுமணன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் சுரேஸ்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் தனபாலன்
ReplyDeleteஎன்னையும், என் கணவரையும் ஒரேநாளில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிகவும் நன்றிங்க.
ReplyDeleteதங்கள் பணி சிறக்கட்டும்.
முதல் வரியே மிக இஷ்டமாகிவிட்டது குணசீலா.... இந்த பொன்மொழியை முதன்முதலாக இப்போது தான் உங்கள் மூலமாக அறிகிறேன்... ஊக்குவிப்பது என்பது எத்தனை சிறப்பான விஷயம் என்பதை உணரமுடிகிறதுப்பா....
ReplyDeleteபடைப்பாளர்களின் எழுத்துகளை மதிக்கிறேன்.... எத்தனை அற்புதமான சிந்தனைகளை நம் எல்லோருக்கும் பயன்பெறும்படி பகிர்கிறார்கள்.... அந்த அளவுக்கு கண்டிப்பா எனக்கு எழுத வராது.... ஆனால் எழுத்துகளின் மகத்துவத்தை அதை படைத்தோரின் உன்னதமான இந்த திறமையை பாராட்டுவது இஷ்டமான விஷயம் எனக்கு.....
மிக அருமையாக வகைப்படுத்தி சொல்லி இருக்கீங்கப்பா....
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அற்புதமானவர்களிடையே என் தளமும் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் குணசீலா....
வலைச்சரத்தில் என் தளம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை வை.கோபாலக்ருஷ்ணன் அண்ணா எனக்கு மெயில் அனுப்பி தகவல் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த அன்பு நன்றிகள் அண்ணாவுக்கு....
சிறப்பான விஷயங்களை எல்லோரும் ரசிக்கும்படி பகிர்ந்து.... அறிமுகங்களைக்கூட மிக அருமையாக சிறப்பாக மேன்மைப்படுத்தி சொன்னது மிக அழகு குணசீலா...
இறுதிவரி இன்று என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்க்கவைக்கும்படி ஒவ்வொரு நாளும் இருந்ததால்.. இன்றும் பார்த்தேன்....
மிக மிக அற்புதம்.... தோல்வியின் நிலையை கடந்தவர்களுக்கு வெற்றியின் இலக்கை தொடுவது இலகுவாகிறது.... அனுபவப்பாடமாகிறது.... இதை மிக எளியவரியில் எல்லோருக்கும் புரியும் வகையில் பகிர்ந்தது வித்தியாசமான அற்புத சிந்தனை வரிகளானதுப்பா...
இன்றைய ஊக்கப்படுத்தும் வரிகளில் தொடங்கி அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தளங்களின் அன்பு உள்ளங்களுக்கும் இறுதி சிந்தனைமுத்துக்கும் மனமார்ந்த அன்பு நல்வாழ்த்துகள் குணசீலா....
மனம் நிறைந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்பா....
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதாங்கள் குறிப்பிடுள்ள 10 பதிவர்களில் திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள், சற்றே தனித்தன்மை வாய்ந்தவர் ஆவார்.
படைப்புக்களை, ஓர் முழு ஈடுபாட்டுடன் வாசித்து, வரிக்கு வரி ரஸித்து, மிகவும் ஆத்மார்த்தமாக, மிகப்பெரிய பின்னூட்டம் கொடுப்பவர்.
பதிவின் மொத்த நீள, அகல, ஆழத்தைவிட, இவரின் பின்னூட்டம், இன்னும் நீள அகல ஆழமாகத் தோற்றமளிக்கும்.
பிறரை [அதாவது படைப்பாளியை] தன் பின்னூட்டங்களால சந்தோஷப் படுத்துவதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்கும் மட்டுமே பிறவி எடுத்துளவர், என்று சொன்னால் மிகையாகாது.
இதற்காக இவர் செல்வழிக்கும் பொன்னான நேரம், உழைப்பு, பொறுமை முதலியன மிகவும் அதிகம்.
தன் கைவிரல்கள் வலிக்கும் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பார். //
மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா... உண்மையே அண்ணா...
தங்கள் வருகைக்கும் ஏற்புக்கும் நன்றி கோவை2டெல்லி.
ReplyDeleteநன்றி உஷா அன்பரசு.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி மகேந்திரன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி அமைதிச்சாரல்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி செம்மலை ஆகாஷ்
ReplyDeleteஅன்பின் குணா
ReplyDeleteஊக்குவிப்பவர்களைப் பாராட்டும் விதமான பதிவு நன்று - நற்செயல் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
அன்பின் குணா
ReplyDeleteதோல்வி அடைபவர்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள் - இது சத்தியமான சொற்றொடர். பதிவு நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
தங்கள் வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி சீனாஐயா.
ReplyDelete