Thursday, December 13, 2012

வியக்க வைக்கும் வியாழன்....!

வியாழன் ...சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் ....பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, பூத வடிவான வியாழன் 9:50 மணி நேரத்தில் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.

பூமிக்கு ஒரு நிலா....ஆனால் வியாழனுக்கு 16 நிலா!

சூரிய வெளிச்சத்தை எதிர்ஒளிக்கும் திறமையில், சந்திரன், வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடிதான் வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும், வியாழன் பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் பளு [Mass] பூமியைப் போல் சுமார் 318 மடங்கு மிகையானது. புவி ஈர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.

நன்றி:இணையச்செய்திகள் 



தமிழில் வியாழன் என்று மிகப் பெரிய கோளாகிய வியாழனுக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.

பதிவர்கள் சிலரை பற்றி பார்ப்போம்....

முஹம்மது ஆசிக் -citizen of  world என்ற நண்பர் நாட்டு நடப்புகள்,அரசியல்,சமூகம் என ரவுண்டு கட்டி எழுதிவருகிறார்...பெரும்பாலும் எல்லாராலும் அறியப்பட்டவர்தான் அவர் இருந்தாலும் அவரின் பதிவுகளில் என்னை கவர்ந்தவை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...

உம்மன் 'சாண்டி' & 'நீலம்' சஞ்சீவரெட்டி : புயலானது ... எப்படி ?!


'சீனியர் சிட்டிசன்' : அரசின் சலுகைகள்


Traffic ராமசாமி-நீதி மன்றம்-CMDA-ஆக்ஷன் சீ(ல்)ன்.....




தோழர் வழிப்போக்கன் என்ற நண்பர் அரசியல்,சமூகம் போன்றவற்றில் நிலவும் தவறுகளை சுட்டி காட்டி எழுதி வருகிறார்..அவரின் பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு...


யாகமும்.....ஜெப ஆராதனையும்



வல்லரசு கனவு கானும் இந்தியாவில் மாதம் பதிணைந்து ரூபாய் சம்பளம் தரும் மாநில அரசு..??????????




ரூபனின் எழுத்துபடைப்புக்கள்  என்ற தலைப்பில் எழுதி வரும் இவரது பதிவினை சமிபத்தில்தான் பார்த்தேன் ..பார்த்தவுடன் அவரது எழுத்து பிடித்துவிட்டது..

அவரின் பதிவுகளில் சில









மனதில் உறுதி வேண்டும்  என்ற  வலைப்பூவில் அரசியல்,சமூகம்,சினிமா ,சிறுகதை என எல்லாவற்றையும் கலந்து கட்டி எழுதி வருகிறார் மணிமாறன் என்ற நண்பர்...

அவரின் பதிவுகளில் சில....


திருந்தவே திருந்தாதா தினமலர்...?


கலகலவென்று சிரியுங்கள்-கலக்கலான காமெடி கும்மி.


ரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...


நாளை சந்திப்போம் நண்பர்களே ....

13 comments:

  1. இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.ஹாஜா.
    அப்புறம், தாங்கள் குறிப்பிட்டதில், முதல் பதிவின் தலைப்பில், "எப்படி..?!" என்ற கடைசி வார்த்தை விடுபட்டுள்ளது சகோ.

    ReplyDelete
  2. நணபர் NKS.ஹாஜா மைதீன் அவர்களுக்கு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும் வாழ்த்துக்களும் தங்களுக்கு உரித்தாகுக!!

    ReplyDelete
  3. சகோ ஆசிக் உங்கள் பதிவுகளை இங்கு நான் அறிமுகப்படுத்தவில்லை ..குறிப்பிட்டு காட்டி உள்ளேன்...தலைப்பை திருத்திவிட்டேன்....நன்றி

    ReplyDelete
  4. அருமையான தகவலையும், புதிய பதிவர்களையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஹாஜா மைதீன்(அண்ணா )

    இன்று பதிவிடப்பட் பதிவுகள் அனைத்தும் அருமையான தளங்கள் நான் அறியாத தளங்கள் இன்று என் படைப்புக்களையும் உலகமறியச் செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா அனைத்துப்பதிவுகளையும் தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. புது புது தகவல்களுடன் பதிவர் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்ல பதிவு
    மிக்க நன்றி.


    Tamil Latest Movie News

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி தோழர் வழிப்போக்கன்

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி கசாலி அண்ணா....

    ReplyDelete
  10. வருகை தந்து பின்னூட்டமிட்ட நண்பர்கள் semmalai akash,2008rupan,s suresh M. Shanmugam ஆகியோருக்கு நன்றி

    ReplyDelete
  11. வியாழன் பற்றிய உங்களது தகவல்கள் அருமை.
    வலைச்சரத்தில் புதிதாக வருவோரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களது படைப்புடன் கூடிய அறிமுகம் வணக்கத்துக்குரியாது.
    தொடருங்கள்

    ReplyDelete
  12. வலைச்சரத்தில் என் வலைப்பூவைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete