Tuesday, December 18, 2012

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்!-காரஞ்சன்(சேஷ்)

வலைச்சர அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்! இந்த நாள்  நம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் நாளாக அமையப் பிரார்த்திக்கிறேன்.

நேற்று என்னுடைய அறிமுகப் பதிவைப் பார்த்து, வரவேற்பளித்து உற்சாகமளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்!

இன்று "இருளும் ஒளியும்" எனும் தலைப்பில் போட்டோக்கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளேன். (பட உதவி: கூகிளுக்கு நன்றி!)

 
இருளும் “ஓளி”யும்
ஒருபுறம் ஒளியும்
மறுபுறம் இருளுமாய்
உலகம் இருப்பதை
உரைக்குதோ உன்முகம்!      
ஒளிவெள்ளம் பெருகிவர
ஒளியாத இருளுண்டோ?
எத்தகைய தடைவரினும்
ஏற்றுநீ எதிர்கொள்வாய்!   
 
எண்ணையும் திரியும்
இணைந்தெரிந்து இருள்நீக்க
காலத்தே ஏற்றிடு நீ
கல்வியெனும் நல்விளக்கை!  
   
உன்போல் அறிவொளிகள்
உலகெங்கும் உதித்திட்டால்
கல்லாமை இருளெங்கும்
சொல்லாமல் அகலாதோ?   
                 -காரஞ்சன்(சேஷ்)     
 
ii)  படித்ததில் பிடித்தது!                    
 
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….
 
 வசதியாகத்தான் இருக்கிறது மகனே
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் !
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு
 சலனமின்றி நீவெளியேறிய போது,
முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ
கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி 
புறப்பட்ட  காட்சி ஞாபகத்தில் எழுகிறது!
 
 முதல் தரமிக்க இந்த இல்லத்தை
தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
 
இதுவரையில் ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்
 என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை
 மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது.
 
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!
 
 இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்
உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு உறவுகள் இதுதானென்று!
இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது.. எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில்அடங்கியுள்ளது
(நண்பர் அனுப்பிய மின்னஞ்சல்-நண்பருக்கு நன்றி!)
 
III) மனதை நெகிழச் செய்யும் காணொளி ஒன்று: தயவுசெய்து காணத்தவறாதீர்கள்!

 சாப்பாடு தயார்: 


IV) சிந்தனைக்கு:
 
 
இவர்களின் பதிவுகளை இன்று படிப்போமா?  
 
1. தனக்கே உரித்தான பாணியில் கதையாகட்டும், நகைச்சுவையாகட்டும்  பகிர்வதில்  தனித்திறம் கொண்ட திரு வைகோ அவர்களின் வலைப்பூவில் நகைச்சுவையாக, சுவையான அடை செய்வது எப்படி? என விவரிக்கிறார். படித்து இன்புறுங்கள்!
"அடடா என்ன அழகு அடையைத் தின்று பழகு" 

2. பயணக்கட்டுரை, பொக்கிஷங்கள், நகைச்சுவை சம்பவங்கள் இவற்றைப் பகிர்வதில் இவருக்கு இணை இவர்தான்.  பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் கனவில்

மும்தாஜ் வந்துவிட்டால் 


3.பனிரெண்டாம் வகுப்பில் பயிலும் செல்வி நிரஞ்சனா மாணிக்கம் அவர்களின் வலைப்பூ  

எண்ணங்களின் ஓர் மலர்க்கொத்து!  
அதில் வண்ணம் காட்டும் வானவில்-

 4. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
திரு பட்டாபி இராமன் அவர்களின் அனுபவ ஞானம் அறியுங்கள்.
இதே கருத்து என்னுடைய படைப்புகளில்:
5. காரிகை கற்றுக் கவிதை படைத்தலின் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என வேடிக்கையாகக் கூறுவார்கள்.
எது கவிதை? அறிய வாருங்கள் திரு ரமணி அவர்களின் வலைப்பூவிற்கு

6. இது சுண்டைக்காய் மேட்டர் எனச் சொல்பவர்களுக்கு சுண்டைகாயின் மகத்துவமான மருத்துவ குணம் பற்றி அறிய மிடில் க்ளாஸ் மாதவியின் வலைப்பூவிற்கு வாருங்கள்.

என்ன நண்பர்களே! இரண்டாம் நாள் சந்திப்பில் தங்களுக்கு பிடித்த விஷயங்கள் இடம்பெற்றிருந்ததா? அறியும் ஆவலில் நான்! அனைவருக்கும் நன்றி!


நாளை சந்திப்போம்!

என்றும் அன்புடன்

காரஞ்சன்(சேஷ்)

49 comments:

  1. சகோ ..!
    சேஷாத்ரி ...!

    முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
    உங்கள் பணி சிறக்க!

    நல்ல ஜாம்பவாங்களைதான்-
    அறிமுகம் செய்துள்ளீர்கள்!

    அந்த காணொளியை கொஞ்சமே பார்த்தேன் !
    மிகவும் எதார்த்தமாக இருந்தது...
    பதாகை வைத்த்ருப்பவரை பார்த்தவுடன் ஏனோ!?
    என் மனம் சுட்டது...

    உங்கள்
    கவிதையும் மிக அருமை....

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு.

    அடடா இந்த மும்தாஜ் சும்மாவே இருக்க விடமாட்டேங்கறாரே.... :)

    அறிமுகத்திற்கும் மிக்க நன்றி நண்பர் சேஷாத்ரி.

    ReplyDelete
  3. சீனி அவர்களே! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. //அடடா இந்த மும்தாஜ் சும்மாவே இருக்க விடமாட்டேங்கறாரே.... :)// தங்களின் வருகைக்கு மிக்க நன்றி திரு வெங்கட்நாகராஜ்
    அவர்களே!

    ReplyDelete
  5. mcm எழுதக்காணோமே?

    ReplyDelete
  6. எல்லாமே அருமை.
    மனதை நெகிழச்செய்யும் காணொளி தான் உண்மை.
    காதாபாத்திரங்கள் எல்லாம் பேசாமல் நம் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. Thanks for the reference!

    Mr.Appadurai - does mcm mean me?!!

    ReplyDelete
  8. அறிமுகங்கள் எல்லாமே சிறப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வயிற்று பிரச்சினை

    அதைதான் இயற்கையும் செய்துகொண்டிருக்கிறது
    பூகம்பத்தால் அனைத்தையும் விழுங்குகிறது
    பிறகு எரிமலையாய் வெடித்து சிதறி புதியதீவுகள் உண்டாக்குகிறது
    அண்டத்தில் உள்ளதுதானே பிண்டமும்
    அதனால்தான் மனிதனும் அதை செய்து கொண்டிருக்கிறான்
    யதார்த்தமான வரிகளும்
    கற்பனையும் அருமை
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. தங்களின் வருகைக்கு நன்றி திரு அப்பாதுரை அவர்களே!

    ReplyDelete
  11. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!

    ReplyDelete
  12. தங்களின் வருகைக்கு நன்றி திருமதி லக்‌ஷ்மி அம்மா அவர்களே!

    ReplyDelete
  13. தன்ங்களின் வருகைக்கு நன்றி திருமதி மாதவி அவர்களே!

    ReplyDelete
  14. தங்களின் வர்ருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு பட்டாபிராமன் அவர்களே!

    ReplyDelete

  15. மனதை நெகிழச்செய்யும் குறும்படம் ... காதாபாத்திரங்கள் எல்லாம் பேசாமல் நம் மனதை தொட்டுவிட்டார்கள்.
    வயதான காலத்திலும் கடினமாக உழைத்து அதன் வருமானத்தில் கிடைத்ததை பகிர்ந்து உண்ட அந்த அன்புதான் மிகவும் நெகிழச் செய்துவிட்டது.

    பகிர்வுக்கு மிக நன்றி, இந்த நாள் மிக இனிமையாக கழிய எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete

  16. மனதை நெகிழச்செய்யும் குறும்படம் ... காதாபாத்திரங்கள் எல்லாம் பேசாமல் நம் மனதை தொட்டுவிட்டார்கள்.
    வயதான காலத்திலும் கடினமாக உழைத்து அதன் வருமானத்தில் கிடைத்ததை பகிர்ந்து உண்ட அந்த அன்புதான் மிகவும் நெகிழச் செய்துவிட்டது.

    பகிர்வுக்கு மிக நன்றி, இந்த நாள் மிக இனிமையாக கழிய எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. meals ready
    படமில்லை .நான் அந்த பாத்திரமாக மாறிவிட்டேன்.
    நடிப்பும்,காட்சிகளும் அருமை. படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்
    வறுமையிலும் செம்மை என்பார்கள்.
    அந்த வயதான் மாது தன் உணவில் தன்னுடன் இருக்கும் பூனைக்கும் அளித்து மகிழ்கிறாள்
    அந்த வயதான முதியவரும் ஒரு குழந்தை தனக்கு அளித்த சாக்லேட்டை தன மனைவிக்கு அளிக்க அவள் அதில் அதில் பாதியை புன்னகையோடு.தன் கணவனுக்கு தரும் காட்சி அற்புதம்
    அன்பின் வெளிப்பாடுகள் அருமை.

    ReplyDelete
  18. My Dear Mr. E S Seshadri Sir,

    வணக்கம்.

    தங்களின் இன்றைய
    “இருளும் ’ஒளி’யும்” கவிதையும், அதற்கான படத்தேர்வும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.

    >>>>>>

    ReplyDelete
  19. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் அறிமுகங்களும் காணொளியும் சிறப்பு.

    ReplyDelete
  20. //ii) படித்ததில் பிடித்தது!
    அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….//

    இதில் அந்தத்தந்தையின் உணர்வுகள் மிக அழகாக மிகப்பொருத்தமாக எழுதப்பட்டுள்ளன.

    அதை செதுக்கி அருமையாகத்தந்துள்ள தங்களின் நண்பரைக் கட்டிப்பிடித்து உம்மா கொடுக்கணும் போல் உள்ளது எனக்கு.

    பகிர்வுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    >>>>>>

    ReplyDelete
  21. பொதுவாக காணொளிகளையெல்லாம் பார்க்கும் பொறுமை இல்லாதவன் நான்.

    ஆனால் இன்று நீங்கள் கொடுத்துள்ள இந்தக்காணொளியைக்கண்டேன். கண்கலங்கிப்போனேன்.

    பேச்சே இல்லாத இந்தக்குறும்படத்தில் பல்வேறு செய்திகள் உள்ளன. என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

    ஏழ்மை, வறுமை, முதுமை, ஒரு ஜான் வயிறு, அன்பு, பண்பு, கஷ்டம், பாசம் என அனைத்தையும் அல்லவா வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

    அப்பப்பா! அசந்து போனேன் நான். காணொளியைக் காண வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    குறும்படம் எடுத்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து வணங்க வேண்டும் என என் மனம் துடிக்கிறது.

    >>>>>>>>

    ReplyDelete
  22. இன்று அறுசுவை போல ஆறு பதிவர்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளீர்கள்.

    ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்பார்கள். ஐந்தில் நால்வரை நான் ஏற்கனவே அறிவேன்.

    ஒருவர் மட்டுமே பாக்கி. ஸ்ரீ ராமரை அதுவும் ஸ்ரீ பட்டாபிராமரைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

    பிராப்தம் இருந்தால் தரிஸிக்கிறேன்.

    >>>>>>

    ReplyDelete
  23. //1. தனக்கே உரித்தான பாணியில் கதையாகட்டும், நகைச்சுவையாகட்டும் பகிர்வதில் தனித்திறம் கொண்ட திரு வைகோ அவர்களின் வலைப்பூவில் நகைச்சுவையாக, சுவையான அடை செய்வது எப்படி? என விவரிக்கிறார். படித்து இன்புறுங்கள்!

    "அடடா என்ன அழகு அடையைத் தின்று பழகு" //

    அடடா, முதல் அறிமுகமே நானா?

    அவசரத்தில் அதை நான் கவனிக்கவே இல்லை, சார்.

    நன்றியோ நன்றிகள்.

    >>>>>>


    ReplyDelete
  24. இன்று தங்களால் சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டுள்ள, என் அன்புக்குரிய சக பதிவர்கள் ஐவருக்கும் என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இரண்டாம் நாள் வலைச்சரத்தினை அழகாகத் தொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  25. ஒரு சில வலைப்பூ இன்றைய அறிமுகத்தில் தெரியும்.
    அனைவருக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete


  26. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. ஒரு நாளிலேயே நிறைய பதிவுகளை அறிமுகப்படுத்தும் போது படிப்பவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போகலாம். மேலோட்டமாக பார்த்து விட்டு போகலாம். அழகாக 6 பதிவுகளை கொடுத்திருக்கிறீர்கள்.இதையே பின்பற்றலாம். சுவாரஸ்யம் குறையாத பதிவுகள் எல்லாமே! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  28. நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு… வாழ்க்கை இதுதானென்று!
    நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இதுதானென்று..//

    கற்றுக்கொடுக்கும் கலையுடன் வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  29. அத்தனையும் முத்துக்கள் அருமையான பதிவுகள்

    ReplyDelete
  30. வணக்கம்
    காரஞ்சன்

    1ம் நாளைப்போல 2ம் நாளும் வலைச்சரம் அழகான பதிவுகளுடன் ஒளிர்வதை காணக்கூடியதாக உள்ளது அதிலும் இருளும் ஒளியும் என்ற கவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அனைத்துப் பதிவுகளையும்,தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  31. புலவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  32. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சசிகலா மேடம்!

    ReplyDelete
  33. திரு பட்டாபிராமன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  34. திரு கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  35. திரு கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  36. திருமதி இராஜைராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றீ!

    ReplyDelete
  37. அவர்கள் உண்மைகள்: தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  38. திருமதி உஷஆன்பரசு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. திரு ரூபன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  40. திரு வைகோ அவர்களுக்கு!
    தங்களின் கருத்துரைகள் கண்டேன்!
    வரவுக்கும் ஊக்கமளிப்பதற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  41. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  42. கமன்ட் போடும் நண்பர்கள் அப்படியே தமிழ்க்ம்னத்தில் ஒரு ஓட்டு போட்டால் இந்த பதிவு பலரை சென்று அடையும் அல்லவா ?

    ReplyDelete
  43. "என் ராஜபாட்டை" ராஜா அவர்களே! தங்களின் வருகைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  44. அருமையான பகிர்வுகள், வாழ்த்துகள் தொடருங்கள்.

    ReplyDelete
  45. கவிதைகள் அருமை.

    அறிமுகங்கள் அழகு...

    தொடருங்கள் தொடர்கிறோம்...

    ReplyDelete
  46. நன்றி திரு செம்மலை ஆகாஷ் அவர்களே!

    ReplyDelete
  47. நன்றி திரு சே.குமார் அவர்களே!

    ReplyDelete
  48. என்னையும் சிறந்த பதிவர்களுடன்
    இணைத்து அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. நன்றி திரு ரமணி ஐயா அவர்களே1

    ReplyDelete