Thursday, December 20, 2012

வலைச்சரத்தில் நான்காம் நாள்-காரஞ்சன்(சேஷ்)

வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம்!
இன்று நான்காவது நாளாக உங்களுடன் நான்!
கடந்த மூன்று நாட்களாக வருகை புரிந்து, பதிவுகளை படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்! என்பது வள்ளுவரின் வாய்மொழி.
ஆதலால் இன்று ஒரு போட்டோக் கவிதை ஓய்வுண்டோ எனும் தலைப்பில் பகிர்ந்துள்ளேன். (பட உதவி: கூகிளுக்கு நன்றி!)


                                                                                ஓய்வுண்டோ?
 
கயிற்றுக் கட்டில்மேல்
கால்மேல் கால்போட்டு
கனவில் ஆழ்ந்தீரோ?
மனக்கணக்கில் ஆழ்ந்தீரோ?

உழைப்பின் மிகுதியால்
உண்டான களைப்போ?
உழவுத் தொழிலின்மேல்
உள்ளத்தில் அலுப்போ?

வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுப் பசிபோக்க
போராடி நெல்விளைத்து-வைக்கோல்
போராக்கி வைத்துவிட்டீர்!
 
உழவே தொழிலென்று
உமைப்போல் பலருண்டு!
சார்ந்து இருப்பதிலும்
சங்கடம் மிகஉண்டு!

இருப்பவர் இத்தொழிலில்
இயந்திரம் புகுத்திவிட்டார்!
இல்லாத உழவரெலாம்
சொல்லொணாத் துயரமுற்றார்!

 வேற்று வேலைசெய்ய
விரும்பிச் செல்பவர்கள்
ஏற்ற கூலிதந்தும்-உழவை
ஏற்க வருவதில்லை!

 உழுபவன் கணக்கிட்டால்
உழக்கும் மிஞ்சாது!
உழுபவன் ஓய்ந்துவிட்டால்
உலகே இயங்காது!            

                          -காரஞ்சன்(சேஷ்)
II) படித்ததில் பிடித்தது!

தன்னம்பிக்கை
சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.
“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டி ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிறோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.
இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியை ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசூல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.
சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.
“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது”

(நன்றி: மீரா நீலகண்டன் அவர்களின் மின்னஞ்சல்)


III) காணொளி :


(ஒவ்வொன்றும் 5 நிமிட அளவே)  தவறாமல் பாருங்களேன்!
தன்னம்பிக்கை ஒன்றே தன் துணை என்று கூறும் இவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!

அகவிழி-பாகம்1  
அகவிழி-பாகம்2
அகவிழி-பாகம்3
அகவிழி-பாகம்4
அகவிழி-பாகம்5

நிச்சயம் அனைவருள்ளும் ஒரு தாக்கத்தை  ஏற்படுத்தினார் அல்லவா!
காணொளியைப் பரிந்துரைத்த என் மகளுக்கு நன்றி!


IV) இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்க்கலாமா?
 
1. அம்மாவுக்கு இணை அம்மாதான். திருமதி கீதமஞ்சரி அவர்களின் பதிவினைப் படியுங்களேன்!  அம்மா என்றொரு மனுஷி.
 
2. திருக்குறள் மேற்கோள்கள் அதிகம் குறிப்பிட்டு எழுதும் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவு:மனித வாழ்வில் நழுவ விடக்கூடாதது எது?
 
3. குறையொன்றும் இல்லை திருமதி லஷ்மி அம்மா அவர்களின் பயண அனுபவம் மற்றவர்கள் புதிய இடத்திற்கு/நாட்டிற்குசெல்கையில் கவனத்தில் கொள்ள வேண்டிய  பயனுள்ள விஷயங்கள்.
 
4. மார்கழிப்பூமலர்வதைப் பார்க்க கவியாழி கண்ணதாசன் அவர்களின் வலைப்பூவிற்கு வாருங்கள்! அவரின் மற்றுமொரு ஏக்கம்

அம்மா வருவாயா?

5. ரங்குவின் வழிகேட்கும் யுக்திகளைப் படிக்கடிக்க அநன்யாவின் எண்ண அலைகள் வலைப்பூவிற்கு வாருங்கள்.
 
6. T.N.முரளிதரன் அவர்களின் பயனுள்ள பதிவு!

இன்றைய பகிர்வுகள்  உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். பிடித்திருப்பின்  தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
 
நாளை சந்திப்போம்!
 
 
                                                                      --காரஞ்சன்(சேஷ்)
 
 
 

 

 

32 comments:

  1. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி !

    அறிமுகப்படுத்தியுள்ள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது! //
    உண்மை உழவனும் ஓய்வெடுத்தால் உலகமே பட்டினி கிடக்கும் நாள் வெகு தூரமில்லை

    மார்கழி பூவை நுகர்ந்தமைக்கு நன்றி .இன்னும் வேறு கோணத்திலும் கவி படைத்து வருகிறேன் என்பது உங்களுக்கும் தெரியும் ? கவிஞரின் பார்வையில் கான்பதேல்லாமே கவிதைதான்

    ReplyDelete
  4. நன்றி திரு.சேக்கனா M.. நிஜா அவர்களே!

    ReplyDelete
  5. நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!

    ReplyDelete
  6. உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது!

    உணமையை உரக்க
    உலகுக்கு உணர்த்தும் வரிகள் !

    வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. தங்களின் வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    ReplyDelete
  8. இன்றைய வலைச்சரமும் அருமை. பாராட்டுக்கள்.

    அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  9. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!

    ReplyDelete
  10. உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது! //

    உண்மைதான் .
    அருமையான கவிதை. படம் பொருத்தமாய் இருந்த்து.

    தன்னம்பிக்கை ஒன்றேயே துணையாக கொண்டவரின் கணொளி தாக்கத்தை ஏற்படுத்தியது, ஒருமணிக்கு ஒரு மணி பாட்டு காதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அந்த யானைமுகத்தான் அவருக்கு நல் வழி காட்ட வேண்டும்.
    உங்கள் மக்ளுக்கு நன்றி.
    இன்று குறிப்பிட்ட பதிவர்கள் ஒருவரை தவிர அனைவருமே தெரிந்தவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    நாள்தோறும் அருமையான செய்திகளை அள்ளித் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஒவ்வொரு பதிவரையும் தேடிப்பிடித்து சிறப்பானவர்களை அறிமுகப்படுத்துவதில் தங்களின் கடுமையான உழைப்பு தெரிகிரது என்னையும் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்துயதற்கு நன்றி

    ReplyDelete
  12. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!

    ReplyDelete
  13. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி திருமதி லக்‌ஷ்மி அம்மா அவர்களே!

    ReplyDelete
  14. உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது!

    உணருவோர் யாருமில்லை சிறப்பான அறிமுகங்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  15. தங்களின் வருகைக்கு நன்றி சசிகலா மேடம்!

    ReplyDelete
  16. கவிதை வரிகள்-உண்மை வரிகள்... வாழ்த்துக்கள்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...

    எனது தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  17. தங்களின் வருகை மகிழ்வளித்தது ஐயா! காணொளி பார்த்தீர்களா ஐயா!
    தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  18. ''..உழுபவன் ஓய்ந்துவிட்டால்

    உலகே இயங்காது!..''

    உழவு பற்றிய வரிகள் மிக நன்று. நல்வாழ்த்து.
    அறிமுக பதிவர்கள் இன்றும் சில தெரிந்தவர்கள் உளர்
    அனைவருக்கும் வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. வணக்கம்
    காரஞ்சன் (சேஷ்)

    இன்று அறிமுகமான தளங்கள் எல்லாம் எனக்கு புதியவை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் இன்று பகிரப்பட்ட வலைச்சர சொந்தங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. உங்களின் பகிர்வும் பதிவர்களின் பகிர்வும் இரண்டுமே அசத்தல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. நநன்றி திரு சுரேஷ் அவர்களே!

    ReplyDelete
  22. திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  23. நன்றி திரு நாடி நாராயணன் மணி அவர்களே!

    ReplyDelete
  24. சிறப்பான அறிமுகங்கள். காணொளியை சேமித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  25. அன்பு நண்பர் திரு. சேஷாத்ரி சார்

    அகவிழி பற்றிய ஐந்து காணொளிகளையும் என் இரு விழிகளால் இப்போது பார்த்து முடித்து விட்டேன்.

    அருமையாக எடுத்துள்ளார்கள்.

    வெள்ளரி ஓடை கிராம சூழ்நிலைகளும், பனைமரத்தொழிலாளிகளின் வாழ்க்கையினையும் நன்கு உணர முடிந்தது.

    தன்னம்பிக்கை ஒன்றே தன் துணை என்று கூறும் அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை தான்.

    இதனைப் பரிந்துரைத்த தங்களின் மகளுக்கு என் நன்றிகளையும், பாராட்டுக்களையும் கூறவும்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  26. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. தன்னம்பிக்கை ஒன்றே தன் துணை என்று கூறும் அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை தான்.
    இதனைப் பரிந்துரைத்த தங்களின் மகளுக்கு என் நன்றிகளையும், பாராட்டுக்களையும் கூறவும்.
    அன்புடன்
    VGK//

    தங்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது! என் மகளிடம் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து விட்டேன்! நன்றி தெரிவித்தாள்!
    கவிதை பிடித்திருந்ததா ஐயா?
    தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  28. //வேற்று வேலைசெய்ய
    விரும்பிச் செல்பவர்கள்
    ஏற்ற கூலி தந்தும் - உழவை
    ஏற்க வருவதில்லை!//

    ஆம் உண்மை தான். விவசாயக் கூலிவேலை செய்ய இன்று ஆட்களே கிடைப்பது இல்லை.

    பருவமழை இன்மை. ஆற்றுப்பாசனத்திற்கு நீர் இன்மை.

    பம்ப்செட்டுக்கு மினசாரம் இன்மை என பல்வேறு தொல்லைகள் தான் இன்று
    நம் விவசாயிகளுக்கு.

    அப்படியே பாடுபட்டுப் பயிரிட்டு பொருட்களை சந்தைக்கு அனுப்பினாலும், நியாயமான உரிய தொகை கிடைக்காமல் அவஸ்தையும் உள்ளது.

    //உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது!//

    படத்திற்கு தகுந்தாற்போல அழகான கவிதையைப் படைத்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  29. “எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது” என்பதை அறியச்செய்யும் அந்த மின்னஞ்சலில் தங்களுக்கு வந்துள்ள கதையும் நல்லாயிருக்கு.

    பகிர்வுக்கு ந்ன்றிகள். vgk

    ReplyDelete
  30. கதை, கவிதை, காணொளி அனைத்தையும் படித்து அழகாக தங்களின் கருத்தினைப் பதிந்தமைக்கு நன்றி திரு. வைகோ சார்!

    ReplyDelete
  31. கவிதை மிகநன்று. நண்பரே! நல்ல அறிமுகங்கள்! எனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete