Friday, December 28, 2012

வகுப்பு- ஐந்தாம் நாள்

வகுப்பு-5  பாடம்-4



அனைவர்க்கும் காலை வணக்கம்!

வகுப்புக்குள்ள நுழைஞ்சவுடனே பாடமா? நீங்க எதாவது கதை பேசிட்டு அப்புறமா பார்க்கலாமில்லன்னு நீங்க கேட்கிறது புரியுது. என்ன பண்றது தலைமை ஆசிரியர் வகுப்புல சும்மா கதை எல்லாம் பேச கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டாரு. அதனால கிளம்பறப்ப அவர்கிட்ட பனிஷ்மெண்ட் வாங்கினாலும் பரவாயில்லைன்னு கதை பேசலாம் சரியா...?

இப்ப  சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?

1)  புலவர் ராமானுசம் ஐயா

சொல்லவே வேண்டாம். அனைவரும் அறிந்த மூத்த பதிவர்.
சமூக அவலங்களை சொல்லிய இந்த இரு பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

கற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகரே உணர்வீரா ? திருந்தலென்றோ

உண்ணுகின்ற உணவுதனை தந்தோ னின்றே – நஞ்சு உண்ணுகின்றான் சாவதற்கே கொடுமை யன்றே!


2) அவர்கள் உண்மை யில் மதுரை தமிழன் அவங்க பல்சுவை பதிவுகள் அட்டகாசமாயிருக்கும்! உலகம் இன்னும் ஏன் அழியலைன்னு இவர்  சொல்லியிருக்கற காரணம் என்னன்னா...
உலகம் ஏண்டா அழியலை.....

நட்புன்னா இப்படிதான் இருக்கனும்....
இப்படி ஒரு நட்பா?உறவா ?ஆண் பெண் இருவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு


3) சும்மா   தேனம்மை லஷ்மணன் அவர்களின் இந்த கவிதை மனதை கனக்க செய்தது.
கிளம்பவேண்டிய நேரம்

குண்டா இருக்கிறவங்களுக்கு...
அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்

4)தமிழ் ராஜாவின்  தமிழ்த்தொட்டில்  
கண்ணாடியின் கேள்வி

காதலிக்க பழகலாம் என்றேன்


5)  குறையொன்றுமில்லை   
லக்ஷ்மி அம்மா அவங்க சிறுகதைங்க நல்லா இருக்கு. ஒரு  நாள்  நான் என் குடும்பத்துடன் சரவண பவனில் சாப்பிட்டு கொண்டிருந்த போது அங்கே வந்த ஹோட்டல் சர்வரிடம் என் குட்டீஸ்  ஒரு கேள்வியை கேட்டது  . " அங்கிள் இது மாதிரி டேஸ்ட்டா சமைக்க எங்க மம்மிக்கு சொல்லி தர முடியுமா?ன்னு. அவ்வளவுதான் எங்க வீட்ல அவருக்கு ஓரே சிரிப்பு. ஆனா சர்வர் மட்டும் சிரிக்காம, " அப்படி எல்லாம் சொல்ல கூடாதும்மா.. அம்மா கையில் சாப்பிடறப்ப அது தண்ணி சாதமா இருந்தாலும் அந்த ருசிக்கு ஈடு இணை இந்த உலகத்துல எதுவுமில்ல.. நான் எங்கோ ஊரை விட்டு பிழைக்க தூர வந்திருக்கேன். அம்மா கையால சாப்பிட முடியலை என்று உருக்கமாக சொன்னார். இந்த கதையிலும்.....
ருசி


6)   பத்து பதிவாவது பகிரனும்னு படிக்க  ஒரு நாளெல்லாம் ஓடிவிடுகிறது. ஆனால்  செந்தில்குமார் 
சொல்கிற இந்த புத்தகத்தை படிக்க  ஆரம்பிச்சா...   
இந்த தகவலையும் தெரிஞ்சுக்கலாம் உலகின் மிகப்பெரிய புத்தகம்

7) இவள் இவள் பாரதியின்
மக்கள் மனதின் புலம்பலாக..
மறக்க முடியுமா?

விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரையில்...
கிளறிய குப்பையில் கிளம்பிய பூதம்!

8) சே.குமாரின்  மனசு  - க்குள் இருந்த கதையை..
விசாலம் அக்கா - அதீதத்தில்...

கவிதையை...
காதல் நெஞ்சம்

9) கடுகு தாளிப்பு         தாளித்து   கொட்டியதில் இந்த செய்தி
ஒரு மனிதர்:16000 புத்தகங்கள்!

10) தென்றல்  
சசிகலா எதை விருப்பமில்லை என்று சொல்கிறார்...
விருப்பமில்லை எனக்கு




மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!

41 comments:

  1. இந்த வாரம் வலைச்சரத்தில் எனது பதி்வை அறிமுகம் செய்த சகோதரி உஷா அன்பரசு, வேலூர்
    http://tamilmayil.blogspot.com அவர்களுக்கு நன்றி! & எனது அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எல்லாருக்கும் வாழ்த்துகள். இங்க என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிம்மா

    ReplyDelete
  3. யப்பப்பா! புதுசு புதுசா நிறையபேர எங்கள் கண் முன்னால் கொண்டுவந்து நிருத்திட்டிங்க, இன்னும் எவ்வளவோ படிக்கனும்போல் இருக்கிறது. சரியாக நேரம் கிடைக்காததுதான் எனது பிரச்சினையே!

    அருமையான பாடம். தொடருங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. First five and last two are very very closer to me! enjoyable blogs. I will see others. Good introductions Teacher! My Heartiest Wishes to all of them!

    ReplyDelete
  5. VERY GOOD MORNING TEACHER !

    அச்சச்சோ! இன்னிக்கும் எடுத்த உடனேயே நேரிடையாகப் பாடம் மட்டும் தானா?

    ஜாலியாக ஏதாவது சுவையாகக் கதை சொல்லி விட்டு பிறகு பாடத்தை ஆரம்பிக்கும் நல்ல ஒரு எழுச்சியான டீச்சரைப்போய் இப்படி வழுவட்டையாக மாற்றி விட்டார்களே! ;(((((

    ’எழுச்சி’யென்ற வார்த்தை உங்கள் அனைவருக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

    ஆனால் இது என்ன “வழுவட்டை” என்ற ஒரு புதிய வார்த்தை போட்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

    அதைப்பற்றிய என் விளக்கம் காண் இதோ இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்:
    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html
    ”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.! புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.” உதயம்:

    எச்சரிக்கை:

    ரஸித்துப்படித்து சிரித்துத்சிரித்து உங்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல.

    >>>>>>>>>>>>>

    ReplyDelete
  6. ஆசிரியை நடத்திய பாடங்கள் அத்தனையும் அருமை என சொல்ல்வதில் எனக்கு பெருமை

    ReplyDelete
  7. வகுப்பு ஐந்து ! பாடம் நான்கு !!

    வழக்கம் போல அருமையோ அருமை.

    இன்று என்னால் நூற்றுக்கு ஐம்பது மார்க் மட்டுமே பெற முடிகிறது.

    தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள 10 பதிவர்களில் 5 பேர்களை மட்டுமே எனக்குப் பரிச்சயம் உண்டு.

    Only Serial Nos: 1, 2, 3, 5 and 10.

    அவர்களைப்பற்றி கொஞ்சம் பேசி இந்தப்பதிவினை என்னால் இயன்றவரை மேலும் கலகலப்பாக்குவேன்.

    >>>>>>>>>>>>

    ReplyDelete
  8. மேலும் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன;

    அதன் பிறகு லீவு தான் ஜாலி தான் என டீச்சராகிய தாங்களும் மற்ற மாணவர்களும் கூட ஒரே குஷியாக இருக்கலாம்.

    இதை நினைத்தால் எனக்கு துக்கமாவும் ஒரே அழுகை அழுகையாகவும் வருகிறதூஊஊ.

    அதனால் இப்போது
    ”நீண்ட இடைவேளை”
    அழுது ஓய்ந்த பிறகு
    மீண்டும் வருவேன்.

    ஜாக்கிரதை! ;)))))

    அன்புடன் VGK

    >>>>>>>>>>>>

    ReplyDelete
  9. //என்ன பண்றது தலைமை ஆசிரியர் வகுப்புல சும்மா கதை எல்லாம் பேச கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டாரு.

    அதனால கிளம்பறப்ப அவர்கிட்ட பனிஷ்மெண்ட் வாங்கினாலும் பரவாயில்லைன்னு கதை பேசலாம் சரியா...?//

    அன்புள்ள தலைமை ஆசிரியர் ஐயா,

    வணக்கம் ஐயா.

    மிகவும் புத்திசாலியான இந்தக்குழந்தை [மாணவி] ஆசிரியராக கதாபாத்திரம் ஏற்று நம் நாடகத்தில் நடிக்க வந்ததே மிகவும் பெரிய விஷயம் ... ஐயா.

    அதனால் அந்தக்குழந்தையின் போக்கில் அதனை மனம் விட்டு வசனம் பேச அனுமதியுங்கள், ஐயா.

    As a very Special case, தங்களின் ஸ்பெஷல் பவரை உபயோகித்து, சற்றே விதிமுறைகளைத் தளர்த்தி உதவுங்கள், ஐயா.

    இதைவிட்டால் பிறகு அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போகும் ஐயா.

    இந்தக் குழந்தைக்குப் பனிஷ்மெண்ட் ஏதும் கொடுத்து விடாதீர்கள், ஐயா.

    ஏதாவது பனிஷ்மெண்ட் கொடுப்பதாக இருந்தால், அதை எனக்குக் கொடுங்கள், ஐயா.

    ”இனி அடுத்த ஓராண்டுக்கு எந்த ஒரு பதிவரையும் வலைச்சர ஆசிரியராக ஆக்க தாங்கள் பரிந்துரை செய்யக்கூடாது”

    எனச் சொல்லுங்கள் ஐயா,
    அதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    என்றும் தங்கள் அன்புள்ள,
    வை. கோபாலகிருஷ்ணன்

    >>>>>>>>>

    ReplyDelete
  10. முதியவன் வயதில் !புதியவன் வலையுலகில்! என்னையும் இங்கே சுட்டியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  11. வந்து பிரஸண்ட் கொடுத்த உங்க எல்லோருக்குமே ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  12. வை.கோ சார் எப்படி.. எப்படி..இதெல்லாம்..ம்.. ம்.தூள் கிளப்புங்க!

    ReplyDelete
  13. // இன்று என்னால் நூற்றுக்கு ஐம்பது மார்க் மட்டுமே பெற முடிகிறது.
    //

    ம்..ம்...

    என்னம்மா..?

    அழறேன் சார்..

    அச்சச்சோ அழாதேம்மா.. நூத்துக்கு நூறு போட்டிடறேன்.

    வை.கோ சார் வாழ்க!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. வகுப்புக்கு வந்து அப்படியே பின்னூட்டங்கள் படிப்பவர்கள் கூடவே இள நீர், மோர் மற்றும் பழச்சாறுகளை பக்கத்திலேயே வைத்திருக்கவும். ( தாய் நாட்டு பற்றை ஜூஸு ல கூட காண்பிக்கிறோம்ல...) வை.கோ சார் பின்னூட்டங்கள் படிக்கிறவங்களுக்கு வயிற்று வலி நிச்சயம். ! அட சிரிச்சி...சிரிச்சி... ஒரு நிமிஷம் யார்ப்பா அது ஒரு எள நீயை வெட்டுங்க!

    ReplyDelete
  16. அறிமுகமானவர்ளின் பதிவுகள், புதியவர்களின் (அதாவது எனக்கு) பதிவுகள் என கலந்து கட்டி கொ(சு)ட்டியமைக்கு நன்றி ஆசிரியர் அவர்களே!

    ReplyDelete
  17. இன்று அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. புலவர் இராமானுசம் ஐயா..said...
    //முதியவன் வயதில் !புதியவன் வலையுலகில்! என்னையும் இங்கே சுட்டியதற்கு மிக்க நன்றி!//


    உஷா அன்பரசு... said

    ஐயா தாங்கள் என் வகுப்பிற்கு அழைத்த சிறப்பு விருந்தினர். தங்களை வரவேற்பதில் பெருமை!
    வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  19. //1) புலவர் ராமானுசம் ஐயா
    சொல்லவே வேண்டாம். அனைவரும் அறிந்த மூத்த பதிவர்.
    சமூக அவலங்களை சொல்லிய இந்த இரு பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.//

    ஐயா அவர்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு.

    இந்த வயதிலும் என்னமாய் எழுதுகிறார் என்று நான் வியப்பதும் உண்டு.

    எழுத்துலகில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, மிகப்பெரிய அளவில் எழுத்தாளர் மாநாடு நடத்தியபோது, இவரின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்துள்ளது.

    ஐயா அவர்கள் மேலும் பல்லாண்டுகள் சிறப்பாக இதே உற்சாகத்துடன் வாழ்ந்து மற்ற எல்லாப்பதிவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,

    ஐயாவுக்கு என் நமஸ்காரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவரை இன்று முதல் பதிவராகக் கொண்டு வந்து சிறப்பித்துள்ளதற்கு, வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    >>>>>>>>>>

    ReplyDelete
  20. //2) அவர்கள் உண்மை யில் மதுரை தமிழன்//

    இவர் என் அன்புத்தம்பி. தோளுக்கு மேல் வளர்ந்துள்ள அன்புத்தம்பியை அண்ணனால் கண்டிக்க முடியுமா? தண்டிக்க முடியுமா?

    நீங்களே சொல்லிவிட்டீர்கள்

    //அவங்க பல்சுவை பதிவுகள் அட்டகாசமாயிருக்கும்! // என்று.

    அதனால் இவரின் அட்டகாசமான பதிவுகளை அவ்வப்போது படித்து மனதுக்குள் மகிழ்வதுண்டு.

    ஒருசில சமயங்களில் மட்டும் கருத்து அளிப்பதும் உண்டு.

    என் பதிவுகளில் சற்றே நகைச்சுவைக்காக [சாம்பர் ரஸம் முதலியவற்றில் கொஞ்சம் மணமான பெருங்காயம் சேர்ப்பது போல] நான் என்னிடம் உள்ள 100% குறும்புத் தனங்களில், ஒரு அரை சதவீதமோ ஒரு சதவீதமோ மட்டும் என் பதிவுகளில் அள்ளித் தெளிப்பது உண்டு.

    அந்த 0.5 To 1% நகைச்சுவைகளுக்காகவே, இவர் எனக்கு வைத்துள்ள பெயர்:

    “குறும்புக்காரன் இளைஞன்”
    என்று. ;)))))

    என் 100% முழு நகைச்சுவைகளையும் [குறும்புகளையும்] நான் எடுத்துவிட்டால் போச்சு.
    அதன் பிறகு யாராலும் பதிவுகளே எழுத முடியாது. ஜாக்கிரதை என்று இவரிடம் நான் சொல்லியுள்ளேன்.

    அதற்குக்கூட ஓர் பெண் பதிவர், எனக்கு மெயில் மூலம் ஓர் யோசனை சொல்லியிருந்தார்.

    அதாவது நான் அத்தகைய குறும்புகளை என் சொந்தப் பெயரில் எழுதாமல், வேறு ஏதாவது புனைப்பெயரில் கட்டாயம் எழுத வேண்டுமாம்.

    எப்படியெல்லாம் ரஸிகர்கள் இருக்கிறார்கள், என மனதுக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

    ஆனாலும் அது போலெல்லாம் புனைப்பெயரில் அசிங்கங்களை எழுதி சமுதாயத்தை ஒருபோதும் நான் கெடுக்க மாட்டேன்.

    நம் எழுத்தில் எப்போதும் ஓரளவு நாகரீகம் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்,

    பிறரிடம் நான் எதிர்பார்ப்பதும் அதுவே.

    >>>>>>>>>>

    ReplyDelete
  21. என் நெருங்கிய நண்பரும் பதிவருமாகிய ஒருவர் சொன்னார்:

    ”நம் படைப்புகளை நமக்குப் பிறந்த நம் பெண் குழந்தை இப்போது நம் அருகே அமர்ந்து படிக்கப்போகிறது என்று மனதில் நினைத்து, நாம் எழுத வேண்டும்” என்று.

    இதில் எல்லாமே அடங்கியுள்ளது தானே?

    இதை எல்லோரும் தயவுசெய்து புரிந்து கொண்டு எழுதுங்கள்.

    அதுபோல நாகரீகமாக எழுதுபவர்களுக்கு மட்டுமே, கருத்து அளித்து உற்சாகம் கொடுங்கள்.

    மற்றவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணியுங்கள் என்பதே நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்பும் இன்றைய தகவல்.

    இதில் பெண்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்திச்சொல்ல விரும்புகிறேன்.

    ஒருவர் தன் வலைத்தளத்துக்கு வந்து கருத்தளித்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் எழுதும் எந்த ஒரு அபத்தமான பதிவுக்கும் போய் நாமும் கருத்தளித்துத்தான் ஆக வேண்டும் என நினைக்காதீர்கள்.

    இதனால் உங்கள் பெயர் கெடும். உங்களைப்பற்றி IMAGE SPOIL ஆகும்.

    உதாரணமாக ஒரு ஆபாசமான அபத்தமான தலைப்போ, விஷயங்களோ, அசிங்கமான படங்களோ உள்ள பதிவுக்குச்சென்று ஒரு பெண் கருத்து எழுதும் போது, அதே பதிவுக்கு வருகை தரும் மற்ற பலரும் [ஆண்கள்] உங்க்ளைப்பற்றி என்ன நினைப்பார்கள் என சற்றே சிந்தியுங்கள்.

    இதில் ஒருசில பெண் பதிவர்களுக்கு ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களை நான் கேள்விப்பட்டு,வருந்தியுள்ளதால் இதனை இங்கு எல்லோருக்கும் பொதுவாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

    என் அன்புத்தம்பி ... தங்கக்கம்பீ “அவர்கள் உண்மைகள்” அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். வாழ்க!

    >>>>>>>>>>>>

    //மீண்டும் இடைவேளை//

    ReplyDelete
  22. இந்த பதிவர் அறிமுகத்தில் இடம் பெற்ற பதிவர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று என்னையும் இதில் அறிமுகப்படுத்திய சகோதரிக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  23. என்னை எப்போதும் நிழல்போல் தொடர்ந்து வரும் என் அன்புத்தம்பி ”அவர்கள் உண்மைகள்” அவர்களே!

    வணக்கம். மேலே உங்களைப்பற்றிய என் பாராட்டுப்பகுதியில் நான் ஏதேதோ எழுதியுள்ளதாக தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்.

    அவைகளெல்லாம் பற்றிய என் விரிவான எண்ணங்களையும் கருத்துக்களையும் தனிப்பதிவாகவே
    தர நான் நினைத்திருந்தேன்.

    பிறகு நமக்கு எதற்கு ஊர் வ்ம்பு? யாரோ எப்படியோ போய்த் தொலையட்டும், நமக்கென்ன என நினைத்துப் பேசாமல் இருந்து விட்டேன்.

    இருந்தாலும் இது விஷயத்தில் என் ம்னம் சமாதானம் அடையவே
    இல்லை.

    அதனால், எனக்குள், என் மனதுக்குள், பல நாட்களாக ஏற்பட்டிருந்த மிகப்பெரியதோர் பூகம்பத்தின் ஒரு சிறு துளியைத்தான் மேலே உங்களுக்கான என் பாராட்டுப்பகுதியில் தெளித்துள்ளேன்.

    அதுவும் இன்று புதிதாக எழுதத் துவங்கியுள்ள பெண் பதிவர்களுக்கு இது ஓர் முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணத்தினால் மட்டுமே இதை இன்று நான் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

    குறிப்பாகப் பெண்கள் தங்களுக்கு வரக்கூடும் பிரச்சனைகளை ’வரும்முன் காப்பது தான் நல்லது’ அல்லவா.

    தாங்கள் என்னை ஒருபோதும் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு.

    அந்த உரிமையில் தான் உங்களுக்கான பகுதியில் அதை இன்று இணைத்துள்ளேன்.

    என்றும் அன்புடன் தங்கள்
    ”குறும்புக்கார இளைஞன்”
    VGK

    >>>>>>>>>>>>>>

    ReplyDelete
  24. //3) ”சும்மா” திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள்.//

    சும்மா சொல்லக்கூடாதுங்க.

    சும்மா ஜோராவே எழுதுறாங்க.

    சும்மா இவங்க எவ்வளவு பதிவுகளை மிகவும் அஸால்டா எழுதுறாங்க.

    திரும்பிப்பார்த்தால் தினமும் ஒரு பதிவு இருக்கும். அது மட்டுமா?

    இவங்களை அடிக்கடி நான் பத்திரிகைகளிலும் பார்ப்பதுண்டு.

    பாரதியின் கனவு இவர்கள் மூலமே நனவாகியுள்ளது என்று நாம் சொல்லலாம்.

    ”புதுமைப்பெண்களடி ...... பூமிக்குக்கண்களடி ........ “

    என்பதற்கு இவர்களை விட ஓர் சிறந்த எடுத்துக்காட்டும் உண்டோ! ;)))))

    இவர்களின் பல படைப்புக்களை நான் தொடர்ந்து படித்துக் கருத்துக்களும் இட்டுள்ளேன்.

    இவரின் பல படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

    இவரும் உங்களைப்போலவே ஓர் அஷ்டாவதானி தான்.

    யாருக்குமே சரிவர லேஸில் புரிந்து கொள்ள முடியாத பங்குச்சந்தை நிலவரம் முதற்கொண்டு இவர் எடுத்துரைக்காத தலைப்புகள்
    ஏதும் இல்லை எனலாம்.

    எனக்கு இவர்கள் மீதும், இவர்களுக்கு என் மீது நல்லதோர் பதிவுலக நட்பு உண்டு.

    இந்த [2012] ஆண்டில் நாங்கள் ஒருவொருக்கொருவர் விருதுகளைப் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டுள்ளோம்.

    >>>>>>>>>>

    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நான் சென்ற ஆண்டு இறுதியில் 31.12.2011 அன்று “நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி” என்ற தலைப்பில் ஓர் பதிவு எழுதியிருந்தேன்.

    இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    அது என்னுடைய 200 ஆவது சிறப்புப்பதிவு.

    அதற்கு எனக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றன.

    அதற்கு என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நம் திருமதி தேனம்மை லக்ஷ்மணன அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம் இதோ:

    -=-=-=-=-=-=-=-=-=-=-

    தேனம்மை லெக்ஷ்மணன்
    December 30, 2011 5:45 PM

    //நான் இதுவரை நேரில் சந்திக்காத, அந்த அன்பு உள்ளங்கள் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தப்பகுதியில் இருந்தாலும், அவர்கள் இன்று போல என்றும் மகிழ்ச்சியுடனும், மன
    நிம்மதியுடனும், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன். - VGK //

    மிக்க நன்றீ .. கோபால் சார். உங்க ஆசிர்வாதம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

    காரசாரமாகவும், அங்கங்கே நச்சென்றும், சில இடங்களில் இனிப்பாகவும் நல்ல சுவை..:)

    மின்னிதழ்கள் அனைத்திலும் தமிழ் மணத்திலும் வந்தமைக்கு பாராட்டுக்கள்.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..

    அப்புறம்.. ஒரு முக்கியமான விஷயம்.. உங்க நிலைமைதான் எங்க நிலைமையும்.. ப்லாகில் உக்காந்தாலே நம்மை ஏதோ ப்லாக் அடிமைகளைப் பார்ப்பது போல பாக்குறாங்க.. ஒய் ப்ளட்...

    ஹாஹாஹா சேம் ப்ளட்.. ஓகே டோண்ட் ஒர்ரி.. நம்ம திறமைகள் எல்லாம் அவங்களுக்கு சீக்கிரம் புரியும்.. நம்ம சாதனைகளை கைதட்டி அவங்களும் வரவேற்கும் காலம் வரும்..

    இந்தவருடம் எனக்கு கிடைத்த நல்ல நட்புக்களில் நீங்களும் ஒருவர். கடவுளுக்கு நன்றி.. வாழ்க

    வளமுடன்.. நலமுடன்..:)

    -=-=-=-=-=-=-=-=-=-

    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து, எழுத்துலகிலும் மேலும் மேலும் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள். வாழ்க வாழ்கவே!

    >>>>>>>>>>

    மீண்டும் இடைவேளை

    >>>>>>>>>>

    ReplyDelete
  26. //5) ”குறையொன்றுமில்லை”
    திருமதி லக்ஷ்மி அம்மா அவர்கள்//

    இவர்களிட்ம் எனக்கு தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. இவர்களிடம் எப்போதும் நிரம்பி வழிவது தாய்ப்பாசம் மட்டுமே.

    இவர்கள் ”பள்ளிக்குச்சென்று நான் முறையாக கல்வி படித்தது இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு தளத்திற்கு இரு தளமாக வைத்துக்கொண்டு வலைத்தளத்தினில் சக்கைபோடு போட்டு வருகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

    ஏராளமானவர்களின் பதிவுகளுக்கும் சோம்பல் இல்லாமல் வருகை தந்து கருத்துக்களும் சொல்லி வருவது இவர்களின் தனிச்சிறப்பாகும்.

    என்னிடம் பலமுறை அலைபேசியிலும், மின்னஞ்சலிலும், சுட்டிகளிலும் அன்புடன் பேசியுள்ளார்கள்.

    ஒரு நாள் நள்ளிரவு இவர்களை திருச்சி இரயில் நிலையத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு அளித்தார்கள். ஆனால் அன்று என்னால் அங்கு போய் சந்திக்கப் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.

    அதற்காக நான் வருந்தினேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

    >>>>>>>>>>

    ReplyDelete
  27. நேற்றைய வலைச்சரத்தில் என்னை இந்த திருமதி லக்ஷ்மி அம்மா அவர்கள் ஒரு அருமையான கேள்வி கேட்டுள்ளார்கள்.

    அது இதுவரை என்னிடம் யாரும் கேட்காததோர் கேள்வி.

    அதற்கு நான் விரிவான என் ப்தில்களை நேற்று நள்ளிரவில் கொடுத்துள்ளேன். படிக்காதவர்கள் போய்ப் படித்துக்கொள்ளலாம்.

    இணைப்பு இதோ:
    http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_3106.html

    >>>>>>>>>

    ReplyDelete
  28. ”குறையொன்றும் இல்லை” என்ற வலைத்தளத் தலைப்பினில் இவர்கள் ”தமிழ் விரும்பி” யாகத் தமிழில் எழுதி வந்தாலும், இவர்களுக்கும், மற்ற எல்லோரையும் போலவே, [என்னையும் போலவே] மனதில் நிறைய மனக்குறைகள் உண்டு.

    குறைகளும், மனக்குறைகளும் இல்லாதோர் யார் இருக்கிறார்கள்
    இந்த நம் பூமியில்?

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைகள் தான். குறையென்று நினைப்போருக்கு அது குறையாகவும், அந்தக்குறையையே நிறையாக மாற்றிக்கொள்வோருக்கு அது நிறையாகவும் உள்ளது.

    எல்லோரும் அதுபோல குறையை நிறையாக மாற்றிக்கொள்ள முடிவது இல்லை. மாற்றிக்கொள்வோர் புத்திசாலிகள் தான்.

    என்னிடம் அலைபேசியில் பேசும் போது அவர்களின் ஒருசில மனக்குறைகளை பகிர்ந்து கொண்டார்கள். நான் ஆறுதல் கூறினேன்.

    இருப்பினும் இந்த அம்மாவுக்கு மனோ வலிமை மிகவும் அதிகம் உள்ளது.

    எதிலும் ஓர் ஆசை, ஆர்வம், இன்றும் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற துடிப்பு நிறைந்தவராக இருக்கிறார்.

    மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன்.

    வாழ்க்கையில் பல எதிர் நீச்சல்கள் போட்டு வந்துள்ளார்கள். அவற்றை இவரின் பல பதிவுகளிலும் எழுதியுள்ளார்கள்.

    அவற்றையெல்லாம் எழுத ஓர் துணிவு வேண்டும். அது இவர்களிடம் நிறையவே உள்ளது.

    இவர்களின் பல்வேறு அனுபவங்கள் பிறருக்கு நல்லதொரு பாடமாக இருக்கக் கூடும்.

    என்னால் கூட என் மறுப்பக்கத்தை, துயரங்களை, மனக்குறைகளை இதுபோல துணிந்து பதிவிட முடிவது இல்லை. நான் அதை விரும்புவதும் இல்லை. நம் கஷ்டங்கள் நம்மோடு போகட்டும். அதை பிறருக்குச் சொல்லி அவர்களையும் வருந்தச்செய்ய வேண்டாம் என நினைத்து, சந்தோஷங்களை மட்டுமே என் பதிவுகளில் கொடுத்துக்கொண்டு வருகிறேன்.

    பிறரை சிரிக்க வைக்க முயல்கிறேன். சிரிப்பு நடிகர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நிறைய துயரங்களும் துக்கங்களும் உண்டு தானே!

    அது போலத்தான் இதுவும்.

    என் அன்புக்கும் மரியதைக்கும் உரிய திருமதி லக்ஷ்மி அம்மா அவர்கள் எங்கிருந்தாலும் [இப்போது மும்பையிலோ, சிங்கப்பூரிலோ, ஈரோட்டிலோ நான் அறியேன் பராபரமே] வாழ்க!வாழ்க!!வாழ்க!!!

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>
    மீண்டும் இடைவேளை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  29. இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் நிறைவான இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  30. ”குறையொன்றும் இல்லை” திருமதி லக்ஷ்மி அம்மாளின் “ருசி” கதையைச் சுருக்கமாக தங்கள் வலைச்சர அறிமுகத்தில் படித்ததே எனக்கு மிகவும் ருசியோ ருசியாக இருந்தது.

    மிக்க நன்றி.

    ஸ்பெஷல் நன்றி, டீச்சர், தங்களுக்கும் திருமதி லக்ஷ்மி அம்மாவுக்கும்..

    >>>>>>>>>>

    ReplyDelete
  31. //10) ”தென்றல்”
    சசிகலா எதை விருப்பமில்லை என்று சொல்கிறார்...
    ”விருப்பமில்லை எனக்கு” //

    *இந்த வண்ணத் திரைப் பேருந்தில் பலிகொடுக்க உடன் எடுத்துச் செல்லும் ஆட்டுடன்...... பயணிக்க சற்று கூட விருப்பமில்லை எனக்கு .
    - சசிகலா*

    தென்றலாக வருடும் வரிகள் !
    நன்றியோ நன்றிகள். - VGK


    தங்களின் வலைச்சரத்தின் மூலம் இந்தப்பதிவினை நான் இப்போது படித்தேன்.

    அவர்களுக்கும் ஓர் பின்னூட்டம் கொடுத்துள்ளேன். அது இன்னும் அவர்களால் பார்வையிட்டு வெளியிடப்படவில்லை.

    இது இன்றைய வலைச்சரத்திற்கு உங்களால் மிகவும் நல்லதொரு தேர்வு. பாராட்டுக்கள்.

    “வாடிய பயிரைக்கண்டே வாடிய” நம் வடலூர் வள்ளலார் வாழ்ந்த பூமியில் உயிர்க்கொலைகள்.

    அதுவும் கடவுள் பெயரைச்சொல்லி.

    இதை என்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதே கருத்தினை வலியிறுத்தி நான் ஒரு படைப்பு [என் அனுபவம்]
    தமிழ்மணத்தில் நான் ஒரு வார நட்சத்திரப் பதிவராக மின்னியபோது கொடுத்திருந்தேன்.

    தலைப்பு: பிரார்த்தனை.

    இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_874.html

    கவிதாயினி Ms. சசிகலா அவர்களின் பதிவுகளை நான் அவ்வப்போது பார்வையிடுவது உண்டு.

    சிலசமயம் பின்னூட்டங்களும் கொடுத்தது உண்டு.

    நன்றாகவே எழுதுகிறார்கள்.

    இவர்களின் கவிதைகளில் பலவும் தென்றலாக நம்மை வருடிச்செல்வதும் உண்டு.

    கவிதாயினி Ms. சசிகலா அவர்களை வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    >>>>>>>>>>>

    ReplyDelete
  32. இன்றைய வலைச்சரப் பணியினை இனிதே முடித்துள்ள தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    அடுத்த பதிவினில் சந்திப்போம்.

    அன்புடன் தங்கள்,

    VGK

    -oOo-

    ReplyDelete
  33. இன்று வகுப்பிற்கு வந்து கருத்திட்ட அனைவர்க்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  34. திருமதி லக்ஷ்மி அம்மாள் என்னிடம் கேட்ட ஓர் கேள்வியும் அதற்கான விளக்கமான என் பதிலும் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளது.

    http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_26.html

    வலைச்சரம் புதன் 26.12.2012
    ---------------------------

    [மேலே நான் என் வேறொரு பின்னூட்டத்தில் கொடுத்துள்ள இணைப்பு தவறுதலாக உள்ளது. தவறுக்கு வருந்துகிறேன் VGK]

    ReplyDelete
  35. வை.கோ சார் பலரையும் வாழ்த்தி இன்னும் நிறைய எழுதும் உற்சாகத்தை தரும் உங்களுக்கு மிக மிக நன்றி! கடவுள் அருளால் உங்களுக்கு எல்லா நலங்களும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  36. //உஷா அன்பரசு said...
    வை.கோ சார் பலரையும் வாழ்த்தி இன்னும் நிறைய எழுதும் உற்சாகத்தை தரும் உங்களுக்கு மிக மிக நன்றி!

    கடவுள் அருளால் உங்களுக்கு எல்லா நலங்களும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்!//

    Thank you Teacher !;)))))

    ReplyDelete
  37. NIZAMUDEEN said...

    //வாழ்க வை.கோ. சார்//

    Thanks a Lot, Mr. Nizamudeen Sir.

    ReplyDelete
  38. மூன்று நாட்களாக வேலை காரணமாக இணையப் பக்கம் வரவில்லை. நண்பர் செம்மலை அவர்கள் என்னை தாங்கள் அறிமுகப்படுத்திய விவரம் தெரிவித்திருந்தார்.

    மீண்டும் ஒரு முறை வலைச்சரத்தில் எனது அறிமுகம்... அறிமுகம் செய்த் உங்களுக்கு எனது நன்றிகள்.... அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி உஷா அன்பரசு ..:) புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும். :)

    ReplyDelete