வகுப்பு-4 பாடம்-3
அனைவர்க்கும் காலை வணக்கம்!
நீங்க தனியா எதாவது க்ளாஸ் எடுத்து எங்களை மொக்கை போடாதீங்கன்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் நேரா விஷயத்துக்கு வந்துடறேன். ஆனாலும் வகுப்பு விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி பேசிவிட்டுதான் கிளம்புவேன்.
இப்ப சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?
1) கற்றலும் கேட்டலும் என்ன கத்துகிட்டாங்க... கேட்கலாம்னு சென்று கேட்டதில்... ராஜி நிறைய சொன்னாங்க.
கடிகார முள்ளில் பூவாய்.....
விஷுக்கனி
2) மெல்லியல். (வீழ்வேனென்று நினைத்தாயோ!!! )
தினம் தொலைக்காட்சிகளில் விவசாயியின் தற்கொலை செய்தியாய் வந்து விட்டு போகிறது. மனம் வருந்திய உணர்வுகளை சொல்லியிருக்கிறார் ராபர்ட்
செத்துப் போ விவசாயியே ...
செத்துப் போ விவசாயியே 2
மனம் கவர்ந்த கவிதையும்
குழலினிது யாழினிது!!!
பாச உணர்வுகளையும்
அக்காவை அதிகம் பிடித்த நாட்கள் "
3) தளிர்! எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும்! சுரேஷ் வரைந்த
ஹைக்கூ கவிதைகள்
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
பிகரை மெயின்டைன் பண்ணுறது அவ்வளவு சுலபமல்ல.. இவர் +2 முடிச்சவுடனே எப்படி மெயின்டைன் பண்ணியிருக்காருன்னு மலரும் நினைவுகளா சொல்லியிருக்காரு..
நான் “பிகரை மெயிண்டெய்ன்” பண்ணிண கதை!
4) ஆச்சி ஆச்சி ஒரு குற்றவாளி கிட்ட கேட்ட
மரண வாக்குமூலம்
பேருந்து பயணங்களை அசைப் போட்டால் நிறைய விஷயங்கள் கிடைக்கும். இவரின்
என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-4
5) அக்கம் பக்கம் பார்த்து போகும் போது அமுதா கிருஷ்ணா இப்படி எல்லாம் தமிழ் எழுத்தை ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க... என்னத்த சொல்ல..
இந்த “க” படும் பாடு
அந்த காலத்து பெண்கள் இப்படி எல்லாம் இருந்திருக்காங்க என்று நினைக்கும் போதே ஆச்சரியமாத்தானிருக்கு...
தமிழ்நாட்டு அம்மாக்கள் (1950,60களில்)
6) இனியவை கூறல் கலா குமாரனால்
செல்போன் டவர்களால் காணாமல் போன பறவையை இந்த கதையிலாவது காண முடிந்தது.
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி
இதையும் படிக்கலாம்...
நம்மை நாமே ஏன் கிச்சுக்கிச்சு மூட்டி கொள்ள முடிவதில்லை ?
7) காக்கை சிறகினிலே அகல் ஓளியில் பிரகாசித்த
குறுங்கவிதைகள்
எனது குருங்கவிதைகளில் சில ... பாகம் 8
சில நல்ல விஷயங்கள் செய்யும் போது கேலியும், கிண்டல்களும் வந்தாலும், அந்த நல்ல விஷயத்தை நோக்கி தொடர்ந்து இவர் செய்யும் பயணம் பாராட்டத்தக்கது.
சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்
8) வேர்களைத்தேடி முனைவர் குணசீலன் உங்க எல்லாருக்குமே தெரியும். அவரின் எல்லா பதிவுகளும் சிறப்பு வாய்ந்தவை.
காதல்னா சும்மாவா..?
துன்பத்தில் இன்பம் காண........
காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.
9) கடவுளை நாம் எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம் அவர் எங்கு உள்ளார் என்று சொல்கிறது குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்
- யின் பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்!-2
குசும்பா ஒரு கதையும் குசும்பு அதிகம்தான்!
10) ரவிஉதயன்
சின்ன சின்ன கவிதைகள் அத்தனையும் ரசனை மிக்கதாய்...
நிலவொளியில் காய்கின்றன
அம்மாவின் இசை
ஆனந்தவிகடனில் வெளியான கவிதை
புழுநகர்கிறது
மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!
இதில் ஓரிருவரைத் தவிர இதரர்களின் பதிவுகளை படித்ததில்லை.உடனே பார்க்கிறேன்.
ReplyDeleteஆசிரியரிடம் நீங்க நல்லா பாடம் நடத்துரீங்கன்னு சொல்ல முடியுமா? முடியும் ஆம்,உங்களிடம் சொல்ல முடியும் நீங்க நல்லா படம் நடத்தும் ஆசிரியர்ன்னு.பாராட்டுக்கள்
ReplyDeleteசகோதரர் முரளிதரன் அவர்களே மிக்க நன்றி! இன்று முதல் வருகை புரிந்து கருத்திட்டமைக்கு!
ReplyDeleteகவியாழி சார் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி! இருந்தாலும் உங்களை போன்றோர் வழி காட்டுதல் வேண்டும்! மிக்க நன்றி!
ReplyDeleteவலைச்சர நான்காம் நாள்
ReplyDeleteவகுப்பில் வந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்!
ReplyDeleteAmudha Krishnan, Kala kumaran, Ravi Udhyayan... new to me. tks. Salute to your Rasanai Teacher. Kalakungal.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவரும் சிறந்த பதிவர்கள்! என்னுடைய வலைப்பூவையும் எழுத்துக்களையும் மீண்டும் ஒரு முறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி கவுரவித்தமைக்கு மிக்க நன்றி! தொடரட்டும் உங்கள் சீரிய பணி! நன்றி!
ReplyDeleteஎனது வலைபக்கத்தை வலைசரத்தில் அறிமுகம் செய்து கௌரவித்ததில் மகிழ்கிறேன் உஷா அவர்களே.. மிக்க நன்றி..
ReplyDeleteஆஹா! இன்றைய பாடத்தில் வந்த பதிவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் பதிவின் பக்கம் போனதேயில்லை! அருமைங்க நீங்க எப்படித்தான் எல்லா பதிவுகளையும் படிச்சிங்களோ?
ReplyDeleteஅருமையான பாடம் நிறைய படிக்க கிடக்கிறது என்பதை சொல்லிட்டிங்க.. முடிந்தவரை நேரம் கிடைக்கும்போது சென்று படிக்கிறேன்.
வாழ்த்துகள்.
இன்று அறிமுகப் படுத்தப்படும் அனைத்து வலைப்பதிவர்களுக்கும், அறிமுகப்படுத்தும் உஷா அன்பரசு அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஓரிருவரைத் தவிர அனைவருக்கும் நான் புதுசு.
1. ‘கற்றலும் கேட்டலும்’ ராஜி - இவங்களப் போலவே இவங்க கவிதைகளும் அழகு. (இங்க கொடுத்துள்ள இரண்டை மட்டும்தான் படித்தேன்) நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்கிறேன் ராஜி.
கோவிச்சுக்காதீங்க. ஒவ்வொன்றா படிச்சு பிறகு எழுதறேன். அப்பப்ப வருவேன்.
என் வலைப்பூவையும் சரத்தில் தொடுத்து அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
ReplyDelete2. மெல்லியல். (வீழ்வேனென்று நினைத்தாயோ!!! )
ReplyDeleteதிரு ராபர்ட்டுக்கு வாழ்த்துக்கள்.
சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவுகள்.
2. மெல்லியல். (வீழ்வேனென்று நினைத்தாயோ!!! )
ReplyDeleteதிரு ராபர்ட்டுக்கு வாழ்த்துக்கள்.
சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவுகள்.
அன்புள்ள திருமதி உஷா அன்பரசு அவர்களே,
ReplyDeleteவணக்கம்.
நானும் இந்த வாரத்தின் என்றைக்காவது ஒரு நாள் மிகச்சரியான நேரத்திற்குள்,
நம் உஷா டீச்சர் உள்ளே நுழைவதற்குள், வகுப்பறைக்கு முதல் மாணவனாக ஆஜர் கொடுக்கணும் என்று தான் ஆசைபடுகிறேன். ஆனால் அது முடிவதில்லை.
அதற்கான காரணங்கள் டீச்சருக்கே நன்றாகத்தெரியும்.
உலகம் தூங்கும் போது நான் விழித்திருக்கிறேன்.
உலகம் விழித்தெழும் போது நான் உறங்கச்செல்கிறேன்.
நம் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்க வேண்டியவனோ என்னவோ நான்.
>>>>>>>>
இன்றைய நான்காம் நாள் வ்குப்பின் மூன்றாம் பாடத்தினை டீச்சர் நல்லாவே வடிவமைத்துள்ளீர்கள்.
ReplyDeleteஅதற்கு என் அன்பான பாராட்டுக்கள். இனிய நல் வாழ்த்துகள்.
இந்தச் சீனாக்காரங்களே, இப்படித்தான். நமக்கு ஏதாவது மறைமுகமாக தொந்தரவு கொடுப்பவர்கள்.
எல்லைத்தகராறுகள் வேறு அவ்வப்ப்போது நடைபெறுவது உண்டு.
எல்லை பற்றிய நிபந்தனைகளை விதித்துக்கொண்டுள்ளோம். அதை மீறக்கூடாது என்ற அச்சுறுத்தல் கொடுப்பது வழக்கம் தான்.
அதனால் டீச்சர் தன் போக்கில் சுவை கலந்து பாடங்களை நடத்த முடியாமல் போகிறது. நேரிடையாக சிலபஸ்ஸில் உள்ள பாடத்தினை கடந்த இரண்டு நாட்களாக ந்டத்த வேண்டியுள்ளது.
நான் இங்கு நம் அன்பின் சீனா சாரைப்பற்றி ஏதோ மறைமுகமாகச் சொல்லுகிறேனோ என யாரும் தவறுதலாக நினைக்கக்கூடாதூஊஊ.
அவர் தான் நமது தலைமை ஆசிரியர், மிகவும் நல்லவர், வல்லவர். தங்கமானவர்.
அவரிடம் தாங்கள் தனிப்பட்ட முறையில் பேசினால் எல்லைத்தாவாக்குள் அடங்குபவைகளை நிச்சயமாக
அவர் அனுமதிப்பார்.
இவ்வாறு அவருடன் பேசி முன அனுமதி பெற்றுவிட்டால், எங்களுக்கு டீச்சரின் அடுத்த மூன்று நாட்களுக்கான பாடங்களைப் படிக்க மேலும் சுவையாக இருக்கக்கூடும்.
ஸ்டூடன்ஸ் ஆகிய எங்களுக்கு பாடம் போரடிக்காமலும் தூக்கம் வராமலும் இருக்கும்.
எனவே அன்பின் சீனா ஐயா அவ்ர்களிடம் விதிமுறைகளைப்பற்றி பேசி கொஞ்சூண்டாவது தளர்த்தச்சொல்லுங்கோ.
உங்களுக்காக நான் வேண்டுமானால் பேசட்டுமா?
ஸ்டூடண்ட் ஆகிய நான் பேசுவதை விட டீச்சராகிய நீங்கள் பேசுவது தான் நல்லது.
>>>>>>>>>
//நீங்க தனியா எதாவது க்ளாஸ் எடுத்து எங்களை மொக்கை போடாதீங்கன்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் நேரா விஷயத்துக்கு வந்துடறேன். //
ReplyDeleteமொக்கை போடுவதா?
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
அப்படின்னா என்ன டீச்சர்?
மொக்கைப்பதிவர்கள் என்றெல்லாம் கூடச் சொல்லுகிறார்கள்.
ரொம்ப நாளாக எனக்கு இந்த சந்தேகம் உள்ளது.
சரி, அதை விடுங்கோ.
நமக்குள் தனியாகப்பேசிக்கொள்ளலாம்.
//ஆனாலும் வகுப்பு விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி பேசிவிட்டுதான் கிளம்புவேன்.//
ஆமாம், நீங்கள் பேசிவிட்டுத்தான் போக வேண்டும்.
இல்லாவிட்டால், அதாவது பேச்சுரிமை மறுக்கப்பட்டால் எல்லோரும் பொங்கி எழுவோம்.
ஆகாய விமானம், ரயில், பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்ற எதுவுமே ஓடாது. ஓடவிடவும் மாட்டோம்.
பதிவர்கள் ஒன்றிணைந்து போராடினால் போச்சு.
எல்லாமே ஸ்தம்பித்துப் போய்விடும்.
தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். ஸ்டூடன்ஸ் பவர் பற்றி தெரியாதவர்களும் உண்டோ! ;)))))
>>>>>>>
இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டு சிறப்பித்துள்ள 10 பதிவர்களில் எனக்கு மூன்றே மூன்று பேர்களுடன் மட்டுமே பரிச்சயம் உண்டு. அதாவது Serial Nos:
ReplyDelete1, 4 and 8 மட்டுமே.
அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.
அடையாளம் காட்டியுள்ள டீச்சருக்கு வணக்கங்கள் + நன்றிகள்.
>>>>>>>>>
3) தளிர்! எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும்!
ReplyDeleteமுகப்பில் இருக்கும் குட்டிப் பாப்பாவைப் போலவே பதிவுகளும் அழகு.
ஹைகூ கவிதைத் தோரணம் அழகோ அழகு.
நல்ல மெயிண்டெயின் பண்ணினாருப்பா பிகரை.
வாழ்த்துக்கள் சுரேஷ்
//1) கற்றலும் கேட்டலும்
ReplyDeleteஎன்ன கத்துகிட்டாங்க...
கேட்கலாம்னு சென்று கேட்டதில்... ராஜி நிறைய சொன்னாங்க.//
அடடா, முதன் முதலாக இங்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளவர் ’நம்பர் ஒன்’ பதிவரே.....
திருமதி ராஜி மேடம் அவர்கள்.
இவ்ர் என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள என் அன்பு மகள்.
அன்பு மகள் என்கிறீர்கள்; ஆனால் மேலே "திருமதி ராஜி மேடம்" என அழைத்துள்ளீர்களே என உங்களுக்கெல்லாம் கேட்கத்தோன்றும். நியாயம் தான்.
மகனோ, மருமகளோ, பேரனோ, பேத்தியோ நான் மரியாதை கொடுத்துத்தான் அழைப்பது உண்டு.
பேரனைப்பார்த்து,
வாங்க சார்! செளக்யமா?
நல்லா விளையாடினீங்களா?
என்ன விளையாட்டு விளையாடினீங்க? இப்போ சாப்பிடுறீங்களா? அல்லது ஹோம் வொர்க்கை இப்போ முடிக்கபோறீங்களா?
என்று அன்புடன் கேட்கும் போது அவனுக்கு என்மீது ஓர் அலாதியான சந்தோஷம் ஏற்படுகிறது.
தாத்தாவைக் கட்டிப்பிடித்துக் கொள்வான். தொந்தியில் வந்து சாய்வான்.
”கதை சொல்லு தாத்தா” எனக் கேட்பான்.
இவையெல்லாம் நம் அன்பினை செலுத்தும் ஓர் தனி வழியாக நான் நினைக்கிறேன்.
சொந்தப்பேரன் பேத்தியைக்கூட
போடா வாடா .... போடீ வாடீ
என மரியாதைக்குறைவாக அழைக்கக்கூடாது என்பது எனது கொள்கை.
தங்களின் அன்பு மகளாகிய என்னை Just ராஜி என்றே அழையுங்கள் என இவர்களே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.
நான் மேலே சொன்ன கதையையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன்.
>>>>>>>>
சரி இப்போ விஷயத்து நான் வருகிறேன்.
ReplyDeleteஇந்தக் “கற்றலும் கேட்டலும்” என்ற வளைத்தளத்தின் திருமதி ராஜி அவர்கள், மிகவும் புத்திசாலியானவர்.
அருமையான பல படைப்புகள் இதுவரை இவர் கொடுத்துள்ளவர்.
இப்போதெல்லாம் அதிகமாக வலைப்பக்கம் வர முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள்.
இவரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எழுத்துலகில் முழு நேரமாக இறங்கினார்களானால் இவருக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.
இவரையும் இவரிடமுள்ள பல்வேறு அழகிய குணாதிசயங்களையும் என் பதிவுகளின் பின்னூட்டப்பகுதியில் பல இடங்களில் தெரிவித்துள்ளேன்.
அதுபோல நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த நாட்களில், தன்னுடைய அழகான பின்னூட்டங்களால், என்னை மிகவும் உற்சாகப்படுத்தியவரும் இவரே.
இவர் வருகை தந்து பின்னூட்டம் இடாவிட்டால் என் அடுத்த பதிவை நான் அப்போதெல்லாம் வெளியிடவே மாட்டேன்.
அந்த அளவுக்கு எங்களுக்குள் ஓர் நெருக்கம் ஏற்பட்டிருந்த காலக்கட்டம் அது.
இதைப்புரிந்துகொண்ட அவர்கள் ஒருநாள் என்னைத்தொடர்பு கொண்டு, தன் குடும்பப் பொறுப்புக்களை யெல்லாம் எனக்கு எடுத்துச்சொல்லி, நான் அவ்வாறெல்லாம் பதிவுகள் வெளியிடாமல் இடைவெளி கொடுக்கக்கூடாது என்று எனக்கு அன்புக்கட்டளை இட்டுவிட்டார்கள்.
>>>>>>
என் அன்பு மகள் ராஜி தேனினும் இனிய குரல் கொண்டவர்.
ReplyDeleteகர்நாடக இசைக்கச்சேரிகளில் மிகவும் நாட்டம் உள்ளவர்.
மிகச்சிறந்த பாடகியும் ஆவர்.
சமீபத்தில் இவருடைய பதிவு ஒன்றில் இவருடைய வீணா கானத்தினை நாம் ரஸித்துக்கேட்டு இன்புறும் பாக்யம் பெற்றோம்.
இவர் எனக்குச் செய்துள்ள உபகாரங்கள் ஏராளம்.
எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் இருக்கும் என் அன்பு மகள் ராஜி நீடூழி வாழ்க என என் மனமார வாழ்த்துகிறேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இப்போது இடைவேளை ஆனால்
மீண்டும் வருவேன். ஜாக்கிரதை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
4. ஆச்சி, ஆச்சி
ReplyDeleteபதிவுகள் ரொம்ப ஜோராச்சு.
மரண வாக்கு மூலம் -சூப்பர்
மறக்க முடியாத பேருந்து நினைவுகள் - எல்லோர் நினைவிலும் இதுபோல் கண்டிப்பாக இருக்கும். நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
இன்றைய அறிமுகங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் சகோதரி..
ReplyDeleteவை.கோ ஐயா வணக்கம்..எப்படியிருக்கீங்க? உங்கள் தொடர் பின்னூட்டங்களால்தான் வலைச்சரம் இன்னும் சிறப்பாக பூத்துக் குலுங்குகிறது என நினைக்கிறேன்..தொடர்ந்து உற்சாகம் கொடுங்கள்..
ReplyDeleteயாரோ உங்களுக்கு பின்னூட்டப்புயல் என்று பட்டம் கொடுத்ததாக கேள்விப்பட்டேனே உண்மையா?::))
5. அக்கம் பக்கம் - அமுதா கிருஷ்ணன்
ReplyDelete‘க’ படு பாடு - வித்தியாசமான கோணத்தில் சிந்திச்சிருக்காங்க.
தமிழ் நாட்டு அம்மாக்கள் - நம்ப அம்மா, பாட்டிகளை நினைவு படுத்தும் பதிவு.
வாழ்த்துக்கள் அமுதா
6. இனியவை கூறல் - கலாகுமாரன்
ReplyDeleteவிருந்தாளியை நன்கு வரவேற்று பாதுகாத்திருக்கிறார்.
கிச்சு கிச்சு - வித்தியாசமான பதிவு
வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDelete7. காக்கைச் சிறகினிலே
ReplyDeleteகுறுங்கவிதைகள் அருமை.
உபகாரம் செய்யப்போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொள்வது மனிதனுக்கு வாடிக்கைதானே.
இவரது நற்பணி நல்ல முறையில் தொடர வாழ்த்துக்கள்.
பதிவர் அறிமுகம் மிக நன்று.
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
என்னோடு அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அறிமுகத்திற்கு நன்றி உஷா.
ReplyDelete8. வேர்களைத் தேடி
ReplyDeleteமுனைவர் குணசீலன்
கேக்கணுமா? தமிழ் வல்லாடுது.
இவரது பதிவுகள் எனக்கு எம். ஏ தமிழ் வகுப்புக்ளை ஞாபகப் படுத்துகிறது.
வாழ்த்துக்கள்
9. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் -
ReplyDeleteகுட்டிக்கதைத் திரட்டுகள் அருமை.
This comment has been removed by the author.
ReplyDelete“கற்றலும் கேட்டலும்” திருமதி ராஜி அவர்களின் அன்புக் கட்டளைக்காகவே நான் எழுதிய தொடர்பதிவு:
ReplyDelete“பெயர் காரணம்” அதாவது ஏன் எனக்கு ”வை. கோபாலகிருஷ்ணன்” என்ற பெயர் வந்தது என்பதனைப் பற்றிய மிகச்சிறிய நகைச்சுவைக் கட்டுரை.
இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html
>>>>>>>>>
நான் இவரைப்பற்றி என் பதிவின் பின்னூடங்களில் பலமுறை சொல்லியுள்ளேன்.
ReplyDeleteஅவற்றில் உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு சில பதிவுகளுக்கான இணைப்புகள் இதோ:
http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html HAPPY இன்று முதல் HAPPY:
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html உடம்பெல்லாம் உப்புச்சீடை [புதிது]
http://gopu1949.blogspot.in/2011/02/8-8.html உடம்பெல்லாம் உப்புச்சீடை [பழசு]
http://gopu1949.blogspot.in/2011/07/of-2011.html என் 100 ஆவது பதிவு - இந்த நாள் இனிய நாள்
இவ்வளவு தூரம் பழகியுள்ள என் அன்பு மகள் ராஜியும் நானும் இன்னும் நேரில் சந்திக்கும்
பாக்யம் கிடைக்கவில்லை.
இவர் சென்னையில் தான் உள்ளார்.
>>>>>>>>>
இந்த கீழ்க்கண்ட என் பதிவினில் [COMMENT NO. 1] நான் என் அன்பு மகள் ராஜி யின் அழகான வியப்பளிக்கும் மிகச்சிறந்த குணத்தினைப்பற்றி மற்றவர்களுக்காகக் கூறியுள்ளதை தயவுசெய்து படியுங்கள்:
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/12/2-of-3.html
தாயுமானவள் பகுதி 2 of 3
பரிசுபெற்ற, நான் எழுதிய
முதல் சிறுகதை:
1] வை.கோபாலகிருஷ்ணன்
December 5, 2011 2:31 PM
அன்புடையீர்,
04.12.2011 காலை முதல் 05.12.2011 இரவு வரை என் கணினியில் ஒரு விசித்திரமான பிரச்சனை ஏற்பட்டிருந்தது.
அதாவது மின்னஞ்சல் தொடர்பு உள்ளது.
ஆனால் என் வலைப்பூவினுள் என்னால் செல்ல முடியவில்லை.
பிறர் வலைப்பூக்களுக்கும் என்னால் செல்ல முடியவில்லை.
Google Chrome மூலமும் Internet Explorer மூலமும் போய் என் வலைப்பூவுக்குச்செல்ல gopu1949.blogspot.com என்று அடித்து enter தட்டினால் கீழ்க்கண்ட தகவலே வந்து கொண்டிருந்தது. அது போல பிறரின் வலைப்பூவுக்குச் சென்றாலும், அதே போலவே சொல்லி வந்தது.
===========================
Oops! Google Chrome could not connect to gopu1949.blogspot.com
Try reloading: gopu1949.blogspot.com
Additional suggestions:
Access a cached copy of gopu1949.blogspot.com
Go to blogspot.com
Search on Google:
Google Chrome Help - Why am I seeing this page?
©2011 Google - Google Home
============================
நான் மிகவும் வெறுத்துப்போய் விட்டேன். ஆனால் மேலே வந்துள்ள தகவலில் ”Go to Blogspot.com" என்பதை கிளிக் செய்தால் என்னுடைய Dash Board க்கு மட்டும் செல்ல முடிகிறது.
பிறரால் கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டங்களை மட்டும்
Dash Board இல் காண்பிக்கப்படும் ”கருத்துரைகளைப்பார்க்க” என்ற பகுதி மூலம் சென்று படிக்க முடிகிறது.
ஆனால் என் வலைப்பக்கத்தையோ, பிற பதிவர்களின் வலைப்பக்கங்களையோ பார்க்க முடியாமல், நானும் பிறருக்கு பின்னூட்டம் இடமுடியாமல் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தேன்.
இதை என் மெயில் தகவல் மூலம் அறிந்த என் அன்புக்குரிய [கற்றலும் கேட்டலும்] திருமதி ராஜி அவர்கள், எனக்காக அவர்களின் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, என்னை பலமுறை மெயில் மூலம் தொடர்புகொண்டு,
”மன்ம் தளர வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்” என்று ஆறுதல் அளித்து வந்தார்கள்.
எவ்வளவோ முயற்சிகள் நான் மேற்கொண்டும் ஒன்றும் சரிவராமல் போகவே சலிப்படைந்து கணினியை Switch Off செய்துவிட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
பிறகு என் தொலைபேசி எண்ணை வேறொரு பதிவரிடமிருந்து பெற்று, என்னை முதன் முதலாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மிகவும் பொறுமையாக, அழகாக, ஒரு நல்ல அன்பான டீச்சரம்மா, ஒரு சிறிய LKG படிக்கும் குழந்தைக்கு புரியும்படியாக பாடம் சொல்லித்தருவது போல, என்னை விட்டே கம்ப்யூட்டரில் மாற்றி மாற்றி ஏதேதோ செய்யச்சொல்லி, கடைசியில் வெற்றிகரமாக என் பிரச்சனைகளை தீர்த்து வைத்து மிகப் பெரிய உதவி செய்துவிட்டார்கள்.
அவர்களின் இந்த ”காலத்தினால் செய்த உதவி” யாலேயே என்னுடைய கணினியிலிருந்தே, இப்போது இந்தப்பதிவை, நான் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 6.12.2011 அன்று வெளியிட முடிந்துள்ளது.
வலையுலகத்துடன் கடந்த ஓராண்டாக தினமும் தொடர்ந்து பழகிவிட்டதால், அதன் தொடர்பு எல்லைக்கு அப்பால் நாம் மட்டும் தனியே தள்ளப்படும் போது, அது ஏனோ சகித்துக்கொள்ளவே முடியாத கஷ்டமாகி விடுகிறது.
அந்த அளவுக்கு, அதற்கு இப்படி நாம் அடிமையாகி விட்டமோ என நினைத்தால் மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.
எப்படியோ என்னுடைய இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, என்னை மகிழ்வித்த, என் பேரன்புக்குரிய திருமதி ராஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கு முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
vgk
>>>>>>>>>>>>
2] raji December 5, 2011 6:02 PM
ReplyDeleteதங்களுக்கு ஏற்பட்ட கணினி பிரச்சனையை ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் தீர்த்திருக்கப் போகிறார்.
எனினும் தங்கள் நன்றிக்கு என் வணக்கங்கள் :)
>>>>>>>>>>>>
3] வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteDecember 6, 2011 7:44 AM
//raji said...
தங்களுக்கு ஏற்பட்ட கணினி பிரச்சனையை ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் தீர்த்திருக்கப் போகிறார்.
எனினும் தங்கள் நன்றிக்கு என் வணக்கங்கள் :)//
இது தங்களின் தன்னடக்கத்தையே காட்டுகிறது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
பிறரின் பிரச்சனைகளை தனது பிரச்சனைபோல நினைத்து, எப்படியாவது உதவ வேண்டும் என்று உண்மையாக மனதில் நினைத்து, உதவிட முன்வர வேண்டுமானால், உதவி பெறுபவர் மேல் உதவி செய்பவருக்கு மிகுந்த நட்பும், அன்பும், பாசமும் பொங்கி வழிந்திட வேண்டும்.
அத்தகைய ஒரு பாசம் மிகுந்த நபராகிய தங்களுடன் நான் நட்பு கொண்டுள்ளது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.
மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும், மனமார்ந்த ஆசிகளும் உங்களுக்கு!
தாங்கள் சீரும் சிறப்புமாக என்றும் எல்லா இன்பங்களும் பெற்று நீடூழி வாழ்க! என வாழ்த்தி மகிழ்கிறேன்.
பிரியமுள்ள vgk
>>>>>>>>>>>>>>
4) ஆச்சி ஆச்சி
ReplyDeleteஇவரின் சொந்த ஊர் [தாய் வீடு] நாகப்பட்டிணம். தற்சமயம் வாழ்வது டெல்லி ஹரியானா -
இவர் என் அன்புச்சகோதரி.
எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் இருப்பவர்.
மேற்படி “கற்றலும் கேட்டலும்” திருமதி ராஜி அவர்கள் மூலமே இவர்கள் எனக்குப் பழக்கமானார்கள்.
என்னிடம் மிகுந்த பாசமுடையவர் மட்டுமல்ல, மிகவும் உரிமை எடுத்துக்கொள்பவரும் கூட. என்னைக் கிண்டல் செய்வார், கேலி செய்வார். என்னைப்போலவே நகைச்சுவை உணர்வு இவருக்கும் அதிகமாக உள்ளதை நான் நன்கு அறிவேன். தங்கமான மனதுடையவர்.
>>>>>>>>>>
10. ரவி உதயன்
ReplyDeleteஅருமையான கவிதைகள்
அம்மாவின் இசை’ கவிதையில் ஒரு அம்மாவாக என்னையே நான் பார்த்தேன்
வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு இந்த் என் அன்புச்சகோதரிக்கு மிக அழகானதோர் பெண்
ReplyDeleteகுழந்தை பிறந்தது.
நான் எழுதிய “ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” என்ற் நாடகத்தின் சிறுசிறு 18 பகுதிகளையும் படத்துடன் பார்த்துவிட்டு, படித்து விட்டு, மனதினால் வேண்டிக்கொண்டு, பிரஸவத்திற்குச் சென்ற ஆஸ்பத்திரியில் ஒரு MIRACLE நடந்துள்ளது.
அந்த நாடகத்தின் இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2012/04/1.html ப்குதி 1 of 18
http://gopu1949.blogspot.in/2012/04/18.html பகுதி 18 of 18
>>>>>>>>>>>>
கோபாலகிருஷ்ணன் சார்,
ReplyDeleteமடமடவென்று இன்றைக்கு அறிமுகமான பதிவர்களின் பதிவுகளைப் படித்து
யார் அனுமதியும் இல்லாமல் இங்கு அவர்களைப் பாராட்டி பதிவுகள் போட்டு விட்டேன்.
தவறேதும் இல்லையென்றால் நேற்று, முந்தாநாள் அறிமுகமானவர்களின் பதிவுகளைப் படித்து கருத்து தெரிவிக்கிறேன்.
ஆச்சியை டெலிவெரிக்கு அட்மிட் செய்ய வேண்டிய அவசரம் ஏற்பட்ட அந்த ஆஸ்பத்தரியின் பெயர்
ReplyDelete“சங்கரா நர்ஸிங் ஹோம்”.
இவரை முதன் முதலாக அந்த ஆஸ்பத்தரியில் வரவேற்றதும்
ஓர் மிகப்பெரிய ஆதிசங்காரின் திருவுருவப்படம்.
இதில் மேலும் நடைபெற்ற எவ்வளவோ வியப்பளிக்கும் விஷங்களை என்னுடன்
மனம் திறந்து பகிர்ந்து
கொண்டார்கள்.
குழந்தை பிறந்ததும் அடுத்த அரைமணி நேரத்தில் முதல் தகவல் எனக்கே அளிக்கப்பட்டது.
ஃபோனில் என்னுடன் இந்த இனியசெய்தியினைப்பற்றிச் சொன்னதும் அவரே ...
நம் ஆச்சியே தான்.
அந்தக்குழந்தையின் புகைப்படத்தினை ’வருங்காலப்பதிவர்’ என சுட்டிக்காட்டி என் பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளேன்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
[Serial No. 32 out of 108]
என்னுடைய பதிவுகள், அவற்றிற்கு வரும் பின்னூட்டங்கள், அதற்கு நான் பொறுமையாக எழுதிவரும் பதில்கள் என பலவிஷயங்களைப்பற்றி என்னுடன் காரசாரமாகவே விவாதிப்பார்.
இவரும் தானாகவே முன்வந்து எனக்கு என் பதிவுகளை தமிழ்மணம் + இன்ட்லி போன்ற திரட்டிகளில் இணைத்துக் கொடுத்து உதவினார்.
[இப்போது தமிழ்மணமும் இன்ட்லியும் என் வலைத்தளத்தில் காணாமல் போய் விட்டன என்பது வேறு விஷயம். அதைப்பற்றியெல்லாம் நான் எப்போதுமே கவலைப்படுவதும் இல்லை என்பதும் மற்றொரு விஷயம். ;)))))) ]
இவர் எனக்குச் செய்துள்ள உதவிகளையும் என் ஒருசில பதிவுகளில் ஆங்காங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இதோ அதற்கான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html
“HAPPY இன்று முதல் HAPPY”
http://gopu1949.blogspot.in/2011/07/of-2011.html
என் 100 ஆவது பதிவு -
“இந்த நாள் இனிய நாள்.”
இந்த என் அன்புச்சகோதரியையும் நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை.
என் அன்புச்சகோதரி ”ஆச்சி” எனப்படும் Thirumathi BS Sridhar அவர்கள் எப்போதும் செளக்யமாக சந்தோஷமாக எல்லா வளங்களும், நலங்களும் பெற்று நீடூழி வாழ்க
என வாழ்த்துகிறேன்.
>>>>>>>>>>>.
மீண்டும் மற்றொரு இடைவேளை
>>>>>>>>>>>
//JAYANTHI RAMANI said...
ReplyDeleteகோபாலகிருஷ்ணன் சார்,
//மடமடவென்று இன்றைக்கு அறிமுகமான பதிவர்களின் பதிவுகளைப் படித்து யார் அனுமதியும் இல்லாமல் இங்கு அவர்களைப் பாராட்டி பதிவுகள் போட்டு விட்டேன்.//
இதில் யார் அனுமதியும் உங்களுக்குத் தேவையில்லை தான். ஆனாலும் அது போல தாங்கள் செய்யணும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.
//தவறேதும் இல்லையென்றால் நேற்று, முந்தாநாள் அறிமுகமானவர்களின் பதிவுகளைப் படித்து கருத்து தெரிவிக்கிறேன்.//
தவறேதும் இல்லை தான். ஆனால் அவ்வாறு செய்ய வேண்டாம்.
நீங்கள் படிக்கும் பதிவுகளிலேயே உள்ள பின்னூட்டப்பெட்டியில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
அது தான் அந்தப்பதிவருக்கு மகிழ்ச்சி அளிக்கும். இங்கு நீங்கள் எழுதுவதால் என்ன பயன்.
நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருப்பதன் நோக்கமே வேறு.
பிறகு உங்களை மெயில் மூலமாக நான் தொடர்பு கொள்கிறேன்.
அன்புடன் VGK
வருகை தந்து கருத்துக்களை கூறி வகுப்பை மகிழ்வாக்கிய அனைவர்க்கும் மிக்க நன்றி!
ReplyDeleteவருகை தந்து கருத்துக்களை கூறி வகுப்பை மகிழ்வாக்கிய அனைவர்க்கும் மிக்க நன்றி!
ReplyDeleteவருகை தந்து கருத்துக்களை கூறி வகுப்பை மகிழ்வாக்கிய அனைவர்க்கும் மிக்க நன்றி!
ReplyDeleteவகுப்பில் தொடர்ந்து ரகளை செய்த வை.கோ.சார், ஜெயந்தி ரமணி மேடம் இவர்களுக்கு கூடுதல் மார்க்(நன்றி!)
ReplyDelete//8) "வேர்களைத்தேடி"
ReplyDeleteமுனைவர் குணசீலன்
உங்க எல்லாருக்குமே தெரியும்.
அவரின் எல்லா பதிவுகளும் சிறப்பு வாய்ந்தவை.//
நான் இவரைப்பற்றி சொல்ல வந்ததை தாங்களே தங்கள் அறிமுக உரையில் சொல்லி விட்டீர்கள்.
மிகவும் நல்ல மனிதர்.
மிகவும் அழகான பயனுள்ள பதிவுகளாகத்தருபவர்.
2011ம் ஆண்டின், ஒரு காலக்கட்டத்தில், இவரின் பல் பதிவுகளுக்கு என்னால் சென்று தொடர்ச்சியாகக் கருத்தளிக்க முடிந்தது.
அப்போது என்னுடைய தொடர் வருகையைப் பாராட்டி இவர் எனக்கு “தமிழ்த்தேனீ” என்று விருது அளித்து மகிழ்வித்தார்.
அதுவே பதிவுலகில் 2011 ஆண்டு நான் வாங்கிய முதல் விருது ஆகும்.
நண்பர் முனைவர் திரு. குணசீலன் அவர்களை வாழ்க ! என வாழ்த்தி மகிழ்கிறேன்.
>>>>>>>>
>>>>>>>>>>>>>
நம்ம வழக்கம் போல தாமதமா வந்ததுல வகுப்பே முடிஞ்சு போச்சே!!!! ஏதேனும் சிறப்பு வகுப்பு உண்டா டீச்சர்???? வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி டீச்சர். :-) :-)
ReplyDeleteவகுப்பில் தொடர்ந்து ரகளை செய்த வை.கோ.சார், ஜெயந்தி ரமணி மேடம் இவர்களுக்கு கூடுதல் மார்க்(நன்றி!) // என்ன டீச்சர் இது ரகளை செய்தவங்களுக்கு தண்டனை குடுக்காம கூடுதல் மார்க் குடுக்குறீங்க???? ஒ ஒ இது அன்பான ரகளை அதுனாலயா?? ம் ம் ம்...
ReplyDelete//Madhu Mathi said...
ReplyDeleteவை.கோ ஐயா, வணக்கம்.. எப்படியிருக்கீங்க?//
வாங்க மதுமதி சார். வணக்கம்.
நான் நல்லா இருக்கேன்.
நீங்க நல்லா இருக்கீங்களா?
[மீண்டும் தாடி வளர்த்துக் கொண்டீர்களா? பதிவர் மாநாட்டுக்கு வந்த பலரும் தங்களை தாடி இல்லாமல் பார்த்ததாக மிகவும் குறைபட்டுக்கொண்டனர். அதனால் மட்டுமே கேட்கிறேன்.
தவறாக ஏதும் நினைக்க வேண்டாம். ;))))) ]
//உங்கள் தொடர் பின்னூட்டங்களால்தான் வலைச்சரம் இன்னும் சிறப்பாக பூத்துக் குலுங்குகிறது என நினைக்கிறேன்..//
நினைத்தால் மட்டும் போதாது சார்.
“நினைத்தேன் ... வந்தாய் ...
நூறு .... வயது;
கேட்டேன் [பின்னூட்டம்] தந்தாய் ... ஆசை மனது”
என்று பாட்டுப்பாடணும்..
பாட வேண்டியது நீங்கள் அல்ல .. நம் வலைச்சர ஆசிரியர் ..
அதாவது நம் டீச்சரம்மா அவர்கள்.
//தொடர்ந்து உற்சாகம் கொடுங்கள்.//
சகலகலாவல்லியான இவர்களை தேடிப்பிடித்து, மஸிய வைத்து, வலைச்சர ஆசிரியராகக் கொண்டுவர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டுமே தெரியும்.
அதனால் தொடர்ந்து உற்சாகம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது என் கடமை தானே.
நிச்சயமாகக் கொடுத்துக்கொண்டே இருப்பேன் ... உற்சாக பானத்தை ;)
[அதாவது பின்னூட்டம் என்ற உற்சாக பானத்தை ;)))))
காசா பணமா செலவு? ஆர்வம், பொறுமை, நேரம், மின்சாரம், பழுதில்லாத க்ணினி ஆகியவை இருந்தால் மட்டும் போதும் தானே? ]
//யாரோ உங்களுக்கு பின்னூட்டப்புயல் என்று பட்டம் கொடுத்ததாக கேள்விப்பட்டேனே உண்மையா?::))//
யாரோ இல்லை சார், சாக்ஷாத் நம் திருமதி உஷா அன்பரசு டீச்சரம்மா அவர்கள் தான் கொடுத்துள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகத்தின் அடியில் உள்ளது. சந்தேகமாக இருந்தால் போய்ப்பாருங்கோ சார்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.
தாங்கள் என்னுடன் சென்னையிலிருந்து அலைபேசியில் பேசியது இன்னும் என் காதுகளில் இனிமையாக ஒலிக்கின்றது, சார்.
அன்பான வாழ்த்துகள் ....
அன்புடன்
VGK
வந்துட்டேன் டீச்சர். இன்றைய வகுப்பில் முன் அறிமுகம் உள்ளவர்களும் அறியாதவர்களும் உளர்.
ReplyDeleteஇணைப்புகள் தந்தமைக்கு நன்றி!
Robert said...
ReplyDelete// வகுப்பில் தொடர்ந்து ரகளை செய்த வை.கோ.சார், ஜெயந்தி ரமணி மேடம் இவர்களுக்கு கூடுதல் மார்க்(நன்றி!) // என்ன டீச்சர் இது ரகளை செய்தவங்களுக்கு தண்டனை குடுக்காம கூடுதல் மார்க் குடுக்குறீங்க???? ஒ ஒ இது அன்பான ரகளை அதுனாலயா?? ம் ம் ம்...//
ஆமாம்... ஆமாம்
இன்னும் இரண்டு நாள்தான் என் வகுப்பு இருக்கும்.. இன்னும் ரகளை பண்ணலாமே!
லேட்டா வந்தாலும் வகுப்பு கட் அடிக்காம வாங்க!
ReplyDeleteநாளைய வகுப்புக்கு தவறாம வந்துடுங்க!
ReplyDeleteநான் ஒரு சில கதைகளே எழுதியுள்ளேன். உஷா அன்பரசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteஎல்லோரது பதிவுகளையும் உடனுக்குடன் படித்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய அன்பு உள்ளம் ஜெயந்தி ரமணி அவர்களுக்கும். தொடர்பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திவரும் திரு.VGK சார் அவர்களுக்கும் பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!
ReplyDeleteதிரு.VGK அவர்களின் பின்னூட்டங்களில் இருந்து பல சங்கதிகளை அறிந்துகொண்டேன் நன்றி!!
ReplyDeleteகலாகுமரன் said...
ReplyDelete//எல்லோரது பதிவுகளையும் உடனுக்குடன் படித்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய அன்பு உள்ளம் ஜெயந்தி ரமணி அவர்களுக்கும். தொடர்பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திவரும் திரு.VGK சார் அவர்களுக்கும் பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!//
”ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி” எனச்சொல்லுவார்கள்.
அது எனக்கே பொருந்துமோ என நான் நினைத்துக்கொள்வேன்.
இப்போது VGK என்ற ஆண்டியுடன், ஜெயந்தி என்ற AUNTY யும் சேர்ந்து கொண்டுள்ளார்களோ? ;)))))
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் எங்கள் நன்றிகள்.
இப்படிக்கு,
VGK ஆண்டியும் ஜெயந்தி AUNTY யும்.
கலாகுமரன் said...
ReplyDelete//திரு.VGK அவர்களின் பின்னூட்டங்களில் இருந்து பல சங்கதிகளை அறிந்துகொண்டேன் நன்றி!!//
வாருங்கள் திரு.கலாகுமரன் அவர்களே.
என் பின்னூட்டங்களில் இருந்து பல சங்கதிகளை அறிந்துகொண்டேன் என்று சொல்லியிருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களைப்போலவே எல்லோரும் எல்லா சங்கதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் இந்தப்பின்னூட்டங்களின் நோக்கம்.
சம்பந்தப்பட்டவர்களாவது நிச்சயம், சில சங்கதிகளை அறிந்து கொண்டால் எனக்குப்போதும்.
அவர்களும் அறிந்து கொண்டுள்ளார்கள் என்ற அறிகுறி நேற்றும் இன்றும் ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது அறிந்து உள்ளுக்குள் மகிழ்கிறேன். ;)))))
இதுவே என் முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ;)
இதை நான் ஜாடைமாடையாக இங்கு வெளிப்படுத்த வாய்ப்பளித்த தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள்.
அன்புடன்
VGK
"கற்றலும் கேட்டலும்"
ReplyDeleteதிருமதி ராஜி அவர்கள்
அனுப்பியுள்ள
குறுஞ்செய்தி.
SMS from Mrs. Raji Madam
Thank you very much for your kind information Sir.
I read that but I am unable to drop my comment in that.
Tomorrow I will try again.
RAJI 27.12.2012 21:01:16
-ooOoo-
//4) ஆச்சி ஆச்சி
ReplyDeleteஒரு குற்றவாளி கிட்ட கேட்ட
மரண வாக்குமூலம்
பேருந்து பயணங்களை அசைப் போட்டால் நிறைய விஷயங்கள் கிடைக்கும். இவரின்
என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-4//
==================================
திருமதி ஆச்சி அவர்கள் அலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்த தகவல்.
==================================
தகவல் தெரிவித்ததற்கு நன்றி சார்.
என்னுடைய இரு பதிவுகளை நேற்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தாங்களும் திருமதி ஜெயந்தி அவர்களும் எழுதியுள்ள கருத்துக்கள் முழுவதும் படித்தேன். ரஸித்தேன்.
உங்களுக்கு என் நன்றிகள்.
திருமதி ஜெயந்தி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கவும்.
வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறவும்.
ஒருசில தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் இந்த வாரம் முழுவதும் என் கருத்துக்களை கணினி மூலம் நேரிடையாக வலைச்சரத்துக்கு அனுப்ப இயலாமல் உள்ளேன்.
அன்புடன்
ஆச்சி
28 12 2012
10:28 Hrs.