வகுப்பு:3 பாடம்-2
அனைவர்க்கும் காலை வணக்கம்! வகுப்பு சுவாரஸ்யமாக உள்ளதா? உங்கள் கருத்துக்கள் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். வகுப்பை சற்று கலகலப்பாக்குங்கள்..! இனி மனம் கவரும் பதிவுகளை படித்து மகிழ்வோம்!
அனைவர்க்கும் காலை வணக்கம்! வகுப்பு சுவாரஸ்யமாக உள்ளதா? உங்கள் கருத்துக்கள் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். வகுப்பை சற்று கலகலப்பாக்குங்கள்..! இனி மனம் கவரும் பதிவுகளை படித்து மகிழ்வோம்!
1) நிகழ்காலம் எழில் அவர்கள் நல்ல சமூக சிந்தனையாளர். விவசாயம், விவசாயி பற்றிய அவரின் சமூக சிந்தனை என்னை பெரிதும் யோசிக்க வைத்தது.
ரூபாய் நோட்டையா தின்னப் போறீங்க?
நான் - http://nigalkalam.blogspot.in/2012/09/blog-post.html
ரூபாய் நோட்டையா தின்னப் போறீங்க?
நான் - http://nigalkalam.blogspot.in/2012/09/blog-post.html
4) எனது எண்ணங்கள்
என்று தமிழ் இளங்கோ ஐயாவின் இரண்டு,
பதிவை ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கியிருக்கிறார். பாராட்டு பட்டத்தை!
திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும்
கோளாறு எங்கிருந்து வருகிறது ...
யாரிடம் கோளாறு?
5) திருவரங்கத்திலிருந்து...........
ரஞ்சனி நாரயணன் நகைச்சுவையாய்..
'...............லாம்..... தலாம்......எழுதலாம்..........ப்ளாக் எழுதலாம்.......'
சிறுகதை
அத்தையும் ராகி முத்தையும்!
6) நினைவில் சில...கனவுகள்!
செம்மலை ஆகாஷ் எழுதின இந்த தொடர்கதை இன்னமும் என் மனசை விட்டு நீங்கவில்லை. அழுத்தமான உணர்வுகளின் சங்கமம். (முழு பாகத்தையும் தொடர்ந்து படிக்கலாம்)
" என்ன வாழ்க்கைடா இது!" பாகம் 1
குடும்பத் தலைவி நல்லாருந்தாதான் குடும்பம் சந்தோஷமாய் இருக்க முடியும் இதை புரிந்து சொல்லி இருக்கிறார்.
உணர்வுகள்!
7) ஜெயதேவ்
விஷயத்தை ஆராய்ந்து விறு விறுப்பாக எழுதுபவர்.ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமரலாஜி- கோடீஸ்வரனாவதற்கு 100% நிச்சயமான வழி எது?
எதோ சீரியஸா சொல்றாருன்னு நினைச்சி இந்த பக்கம் போனிங்க அவ்வளவுதான் ... கலப்புத் திருமணங்களால் மிகவும் பாதிக்கப் படுவது குழந்தைகளே- படத்துடன் நிஜக் கதை.
8) Ideas of ஹாரி டாப் ஹிட்ஸ் பற்றி எழுதி கலக்கிட்டு இருக்காரு. இவர் எழுதின பொய் ஒன்று உண்மையா மனசை கனக்க வச்சிடுச்சி.
பதிவர் விரும்பி சொன்ன பொய்கள்
9) கவிதை வீதி சௌந்தரின் நந்தவனத்தில் மலர்ந்த கவிதைப்பூக்களில் இரண்டு
இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்...!
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இணைந்திருப்போம்...
10) என் ராஜபாட்டை ராஜா இப்படி எல்லாம் கூட வகுப்பு எடுப்பாரா? அது சரி. சீரியஸா க்ளாஸ் எடுத்தா குறட்டை சத்தம் கேட்கும்தானே..!
கேட்டான் பார் ஒரு கேள்வி…! நான் அழுவதா ? சிரிப்பதா?
குழந்தை வளர்ப்பை பற்றி சீரியஸா சொல்லிவிட்டு கடைசியில் ?!
உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?
மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!
வணக்கம்
ReplyDeleteஉஷா அன்பரசு
இன்று 3ம் நாள் பலவகைப்பட்ட பதிவுகளை பார்க்க மிக்க சந்தோசமாக உள்ளது இன்றைய பதிவில் சில தளங்கள் அறிந்தவை சிலது அறியாதவை அழகாக தொகுத்துவழங்கிய உங்களுக்கும் பதியப்பட் வலைப்பூ
படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறன் பதிவுகளை,
3 நாட்களும் வகுப்பு அட்டகாசமாக இருக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்! முதல்ல பிரசண்ட் தந்து கருத்தை சொல்லிட்டிங்க மிக்க நன்றி!
உங்க வலைப்பக்கம் பார்த்தேன். சில கருத்துக்கள் கூறவேண்டும்!
எழில். செம்மலை ஆகாஷ். ஜெயதேவ் தளங்கள் இதுவரை நான் சென்றிராதவை. அவசியம் பார்க்கிறேன் டீச்சர். நல்லறிமுகங்கள் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் திருமதி உஷா அன்பரசு அவர்களே!
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்குங்க, எனது வலைப்பதிவையும் கவனித்துக்கொண்டுதான் வருகிறீர்கள்.
"என்ன வாழ்க்கைடா இது!" இந்த தொடர்கதைதாங்க என்னை எழுத வைத்தது, இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட தொடர்கதை, இதில் அஜய் என்ற கதாபாத்திரம்தான் நான்.
நீங்கள் பகிர்ந்துள்ள சக தோழர்களின் சில பதுவுகளை படித்திருக்கிறேன். நல்ல நல்ல பதிவுகளை தொகுத்து வழங்கி இருக்கிறிர்கள் நன்றி.
தாதமாக வந்ததற்கு மன்னிக்கவும் டீச்சர்!
ReplyDeleteஇளைஞர்களுக்கு மத்தியில் என்னையும் அடையாளம் காட்டியது 2௦ வயது (இன்னும் கூட குறைக்கலாம்!) குறைந்தாற்போல இருக்கிறது.
நன்றி உஷா டீச்சர்!
தங்களோட கருணையால் எனக்கும் வலைச்சரத்தில் அறிமுகம் கிடைத்துள்ளது, மிக்க நன்றி உஷா!! நீங்க அறிமுகப் படுத்தியிருக்கும் பல பதிவுகள் இதுவரைக்கும் நான் படிக்காதவை, [நிகழ்காலம் எழில் , முத்துச்சிதறல்] அவற்றை படிக்கணும்கிற எண்ணம் தற்போது வந்துள்ளது, நன்றி.
ReplyDeleteசில முக்கிய பதிவர்களின் பதிவுகளில் குறிப்பிட்ட பதிவுகளை
ReplyDeleteஅடையாளமிட்டீர்கள் இன்றைய வகுப்பில். நல்ல வ(தொ)குப்பு.
எங்க வலைப்பூவுக்கும் வந்து படித்து...
கூறுங்கள் கருத்து.!!!
நல்லதொரு அறிமுகங்கள் தொடருங்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteமூன்றாம் நாள் வகுப்புக்கு நான் பிரசெண்ட் அட்டெண்டன்ஸ் போட்டுடுங்க என்னுடைய பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வித்தியாசமான பல தளங்கள் அறிமுகம் எனக்கு.. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரத்தில் எனது பதி்வை அறிமுகம் செய்த சகோதரி உஷா அன்பரசு, வேலூர்
ReplyDeletehttp://tamilmayil.blogspot.com அவர்களுக்கு நன்றி!
சிறப்பான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஅன்புள்ள திருமதி உஷா அன்பரசு அவர்களே!
ReplyDeleteஇன்றைய தங்களின் வலைச்சரப் பணிகளும் மிகவும் அருமையாகவே அமைந்துள்ளது.
இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
பாராட்டுக்கள். இனிய வாழ்த்துகள்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
>>>>>>>>>
//வகுப்பு சுவாரஸ்யமாக உள்ளதா? உங்கள் கருத்துக்கள் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். வகுப்பை சற்று கலகலப்பாக்குங்கள்..! //
ReplyDeleteகலகலப்பாக ஆக்கிட்டாப்போச்சு!
கவலையே பட வேண்டாம்.
வகுப்பு மிகவும் சுவாரஸ்யமாகவே போய்க்கொண்டிருக்கிறது.
>>>>>>>>>>>>
இந்தப் பத்துப் பதிவர்களில் ஏழு பதிவர்களுடன் ஓரளவுக்கு எனக்கு அறிமுகம் உண்டு.
ReplyDeleteஒருமுறையாவது அவர்களின் வலைப்பக்கம் நானும், என் வலைப்பக்கம் அவர்களும் வருகை தந்தது உண்டு.
மீதி மூவரையும் நான் பிறகு போய்ப் பார்ப்பேன்.
>>>>>>>>>>>>>
அந்த நான் சொன்ன ஏழு பேர்களில் குறிப்பாக நால்வர் எனக்கு மிகவும் வேண்டியப்பட்டவர்களாக அமைந்துள்ளனர்.
ReplyDeleteஅந்த நால்வரில் ஒவ்வொருவருடனும் எனக்கு இதுவரை ஏற்பட்டுள்ள தொடர்புகள் ஒவ்வொரு விதமான சுவையுடன் கூடியவைகள் தான்.
அவற்றில் சிலவற்றை இன்று நான் பகிர்ந்துகொண்டு இந்தப்பதிவினை கலகலப்பாக முயற்சிக்கிறேன்
>>>>>>>>>>>>>
//2) தீதும் நன்றும் பிறர் தர வாரா...
ReplyDeleteதிரு ரமணி ஐயா அவர்கள்.//
இவரின் மற்றொரு பெயர்
“யாதோ ரமணி” அவர்கள்.
இதற்கான ”பெயர் காரணம்” பற்றி இவரே எழுதியிருந்தார்.
அந்தப்பதிவினைப் படித்ததும் எனக்கு ஓர் புது உற்சாகம் ஏற்பட்டது.
நாம் எழுதும் படைப்பு கதையா, கவிதையா, கட்டுரையா எனவே சில எழுத்தாளர்களுக்கு சந்தேகம் வந்துவிடும்.
இதுபோன்ற தம் எழுத்துக்கு ஓர் பாராட்டோ அங்கீகாரமோ கிடைக்குமோ கிடைக்காதோ
என சந்தேகமும் கூடவே வந்துவிடும்.
இந்த நம் ரமணி சார் அவர்களின் “யாதோ ரமணி” என்ற பெயர்க் காரணத்தைப் படித்துப்பார்த்தால் போதும்.
நமக்கு அந்த பயமெல்லாம் நீங்கி ஓர் தெளிவு கிடைக்கும்.
நாமும் எழுத்துலகில் இவரைப்போல பல படைப்புகள் துணிச்சலுடன் கொடுக்க உற்சாகம் பீறிட்டு வரும்.
அருமையானதொரு குணமுள்ள அபூர்வ மனிதர் இந்த நம் திரு.ரமணி சார் அவர்கள்.
அருமை நண்பர் கவிஞர்
திரு “யாதோ ரமணி” சார் வாழ்க!
>>>>>>>>>>
//3) முத்துச்சிதறல் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்//
ReplyDeleteநான் பதிவுலகுக்கு அடி எடுத்து வைத்த 02.01.2011 க்கு முன்பே இவருடன் எனக்கு மின்னஞ்சல் மூலம் அடிக்கடி தொடர்புகள் உண்டு.
என்னையும் பதிவிடச்சொல்லி வற்புருத்திக் கேட்டுக்கொண்டவர்களும் இவர்களே.
என் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்து உற்சாகப்படுத்தியவரும் இவரே.
இவரும் திருமதி உஷா அன்பரசு அவர்களைப்போலவே சுறுசுறுப்புடன் இயங்கும் ஓர் அஷ்டாவதானி.
[அஷ்டாவதானி என்றால் ஒரே நேரத்தில் எட்டு வேலைகளை உற்று நோக்கி, கவனம் செலுத்தி, அனைத்திலும் தன் நினைவாற்றல் மற்றும் தனித்திறமைகள் போன்றவற்றால் வெற்றிவாகை சூடுபவர் என அர்த்தம்]
இவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர்
மற்றும் ஓவியரும் கூட.
பல்வேறு விஷயங்களைப்பற்றி அழகாக முத்து முத்தாக கோர்த்து
[சிதறிய முத்துக்களை ஒருங்கிணைத்து]
தன் பதிவுகளில் தருபவர். பல்வேறு தனித்திறமைகள் வாய்ந்தவர்.
நான் இதுவரை நேரில் சந்தித்துள்ள, வெளிநாட்டில் வாழும் முதல் பதிவர் இவர் மட்டுமே தான்.
அது ஒரு மிகவும் சுவையான இனிய சம்பவம்.
என்னுடைய ஏதோ ஒரு பதிவின், பின்னூட்டப்பகுதியில் இதை நான் சற்றே விவரித்துள்ளேன்.
இவரின் அன்பான வேண்டுகோளுக்காக மட்டுமே நான் இதுவரை மூன்று தொடர்பதிவுகள் எழுதியுள்ளேன்.
[1] உணவே வா! .... உயிரே போ!!
[2] முன்னுரை என்னும் முகத்திரை
[3] மழலைகள் உலகம் மகத்தானது
அருமைச்சகோதரி திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் வாழ்க!
>>>>>>>
//4)எனது எண்ணங்கள்
ReplyDeleteதிருச்சி திரு. தமிழ் இளங்கோ ஐயா//
நானும் திருச்சியில்,
இவரும் திருச்சியில்.
ஆனாலும் நாங்கள் இன்னும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்தது இல்லை.
அதற்கான வாய்ப்பு இன்றுவரை அமையவும் இல்லை,
எங்கள் தொடர்பெல்லாம் வலைப்பதிவின் பின்னூட்டப்பகுதிகளிலும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் மட்டுமே.
இவருக்கு என் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அது நான் செய்துள்ள பாக்யமாக நினைக்கிறேன்.
என்னையே தலைப்பாக்கி “திருச்சியும் பதிவர் வை. கோபாலகிருஷ்ணனும்” என ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையே எழுதி பதிவிட்டு என்னை தன் அன்பினால் ஆட்கொண்டு விட்டவர்.
பழகுவதற்கு மிகவும் அருமையான நண்பர்.
அருமை நண்பர் திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா ... வாழ்க!
>>>>>>>>>>>
//5)திருவரங்கத்திலிருந்து... திருமதி. ரஞ்சனி நாரயணன் அவர்கள். நகைச்சுவையாய்..
ReplyDelete'......லாம்..... தலாம்... எழுதலாம்... ப்ளாக் எழுதலாம்....'//
இவர் மிகவும் ஜாலி டைப்பானவர்.
அறுபதைத் தொட்டு விட்டாலும் இன்றும் தன் எழுத்துக்களில் இவர் ஆறு வயது குழந்தை போல குதூகுலம் கொண்டவர்.
விசித்திரமானவர். வியக்கச்செய்பவர்.
இவருக்கு WORD PRESS இல் இரண்டும் BLOGSPOT இல் ஒன்றுமாக மூன்று வலைத்தளங்கள் உள்ளன.
இவரின் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் மூன்று என்ன முப்பது வலைத்தளங்கள் கூட வைத்துக்கொள்ளலாம் தான்.
பின்னூட்டம் தரும் எனக்குத்தான் சற்றே கஷ்டமாக உள்ளது.
ஏனென்றால் ஒரு தளத்தில் தான் ஏற்கனவே எழுதியதை மற்றொரு தளத்தில் மீண்டும் வெளியிட்டால் எனக்குக் குழப்பம் ஏற்படுவது இயற்கை தானே.
உதாரணமாக இங்கு நீங்கள் மேலே கொடுத்திருக்கும் பதிவு முதன் முதலில் WORD PRESS இல் இவர்களால் எழுதப்பட்டு எனக்கு நள்ளிரவில் மெயில் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
நான் அன்று இரவு முழுவதும் தூங்காமல் பத்துக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் எழுத, இவர்கள் அவற்றிற்கு உடனுக்குடன் பதில் எழுத, அந்த பதிலுக்கு நான் திரும்ப பதில் எழுத, நாங்கள் இருவருமே அன்று தூங்காமல் விழித்திருந்து பொழுதே விடிந்து விட்டது.
அதற்கு நான் பின்னூட்டமிட்ட பதிவினை தாங்கள் இங்கு அறிமுகம் செய்யாமல், இவர்கள் BLOGSPOT இல் அதையே திரும்ப வெளியிட்டுள்ள பதிவைப்போய், அறிமுகம் செய்துள்ளீர்கள்.
அதில் நான் ஒரே ஒரு கமெண்ட் மட்டும் கொடுத்து விட்டு ஒதுங்கிக்கொண்டுள்ளேன்.
இவருடைய அதே பதிவுக்கு நான் கொடுத்துள்ள பின்னூட்டங்களை படித்தி ரஸிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணைப்ப்க்குச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
Wordpress இல் ஓர் இணைப்பு [நகைச்சுவை]
http://ranjaninarayanan.wordpress.com/2012/10/26/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4/
தலைப்பு: ”லாம்.... எழுதலாம் ... ப்ளாக் எழுதலாம்” [நகைச்சுவை]
திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் வாழ்க!
>>>>>>>>>>>>
நாளைய தங்களின் சிறப்பான அறிமுகங்களுக்காக வழிமேல்
ReplyDeleteவிழி வைத்துக் காத்திருக்கும்
............
உங்கள் அன்புள்ள
VGK
-oOo-
தங்கள் அறிமுகமும் அதைத்தொடர்ந்து
ReplyDeleteபதிவுலக பிதாமகர் வை.கோ அவர்களின்
விரிவான அறிமுகமும் மிக்க மகிழ்வளித்தது
.
தங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட பதிவர்கள்
அனைவரும் நான் விரும்பித்தொடரும்
பதிவர்களாயிருந்ததும் அவர்களுக்கிணையாக
என்னையும் இணைத்து அறிமுகம் செய்தது
கூடுதல் மகிழ்வளித்தது. மிக்க நன்றி
எவ்வளவு பேரை, வலைத்தளங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதுவே ஒருஸந்தோஷம்தான்
ReplyDeleteஉஷா அன்பரசு
ReplyDeleteவணக்கம்.
எங்களோட வலைத்தளத்தை எல்லாம் அறிமுகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.
என்னுடை வலைத்தளத்தை இன்னும் அழகு படுத்தத் தெரியவும் இல்லை, நேரமும் இல்லை என்று எப்போதும் ஆதங்கப் படுவேன்.
ஆனால் கருத்துச் செறிவும், எழுத்துச் செறிவும்தான் தேவை என்று எனக்கு உணர்த்திய திரு கோபாலகிருஷ்ணன் சாருக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.
வலைத் தோழர்களே, தோழியர்களே என் வலைப் பதிவிற்கு வருகை தாருங்கள். நானும் கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது உங்கள் தளங்களுக்கு வருகை தருகிறேன்.
என் வலைத்தளம் http://manammanamviisum.blogspot.in/
வாழ்த்துக்களுடன் நன்றி.
அன்புள்ள திருமதி.உஷா அன்பரசு அவர்களுக்கு!
ReplyDeleteஇன்றைக்கு என் வலைப்பூவினை அறிமுகம் செய்திருப்பதற்கு என் இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன் ! வலைச்சர ஆசிரியர் பதவியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க என் அன்பு வாழ்த்துக்கள்!!
அன்புடையீர்,
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
http://ranjaninarayanan.wordpress.com/2012/10/26/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4/
WORDPRESS இல்,மேற்படி இணைப்பில், திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் எழுதியிருந்த நகைச்சுவையான கனவுப் பதிவினைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அதற்கு நான் அளித்துள்ள பின்னூட்டங்களும் அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்களும், அந்த அவ்ர்களின் பதிலகளுக்கு நான் அளித்துள்ள பதில்களும் கூட மிகவும் சுவையாகவே இருக்கும்.
அதனை இங்கு நான் ஒவ்வொன்றாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த என் சிறு முயற்சி திருமதி உஷா அன்பரசு அவர்களின் வேண்டுகோள்படி இந்த அவர்களின் பதிவினை மேலும் கலகலப்பாக்க மட்டுமே.
ஆசிரியர் அவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிவதே நல்லதொரு மாணவனுக்கு அடையாளம் அல்லவோ .... அதனால் மட்டுமே! ;)
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் படித்து மகிழுங்கள். மற்றவர்கள் என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்.
அன்புடன்
VGK
>>>>>
1] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete1:29 முப இல் ஒக்ரோபர் 27, 2012
மிகவும் நகைச்சுவையான கனவுப்பதிவு. எனக்கும் இதுபோல இன்னும் என்னவெல்லாமோ கனவுகள் வரும்.
வெளியில் சொல்லிக்கொள்ள கொஞ்சம் வெட்கமாக இருக்கும்.
தொடரும்…….
2] ranjani135
ReplyDelete10:11 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
அப்படின்னா என்ன? அதான் ‘வெட்கம்’ என்றீர்களே அதைத்தான் கேட்கிறேன்!
3] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete5:33 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
வெட்கம் என்றால் என்னவென்று விவரித்துச் சொல்லவும் எனக்கு வெட்கமாகவே உள்ளதுங்க.
அதனாலே ப்ளீஸ் என்னை விட்டுடுங்க!
வேறு யாரிடமாவது கேட்டுத்தெரிஞ்சிக்கோங்கோ! ))))
அன்புடன்
vgk
இந்த சிறுவனையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி டீச்சர்.
ReplyDeleteமிகவும் அருமையான பதிவர்களை அறிமுகம் செய்து கவுரவம் செய்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDelete4] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete1:39 முப இல் ஒக்ரோபர் 27, 2012
//60, 70, 80 களில் நானும் சின்னவளாகத்தான் இருந்தேன்…//
ஆஹா! அப்போ எனக்கு முறையே ஸ்வீட் 10, 20. 30 வயதுகள் அல்லவா! ஸ்வீட்டோ ஸ்வீட் தான்.
உங்களுக்கு மட்டும் என்ன! அப்போ முறையே 8.18. 28 தான்.
இன்னும் அதிக ஸ்வீட் தான். )))
//மனதில் நினைத்துக் கொண்டு ‘இப்பவும் மனசளவில் சின்னவள்தான்….ஹி….ஹி….’ என்றேன்.//
அதில் என்ன சந்தேகம் மேடம்.
நாம் மனதளவில் என்றும் மார்க்கண்டேயனே தான்.
என்றும் பதினாறே தான்.
//(நாளைக்குப் போய் ‘டை’ அடித்துக் கொண்டு வரவேண்டும்…)//
தயவுசெய்து அதுமட்டும் வேண்டாம் மேடம்.
இளமையில் நம் நடையழகு!!
முதுமையில் நம் நரையழகு!!!!
என்பார்கள்.
ஆனால் முதுமையிலும் நம் நடை [எழுத்துநடை] அழகே என்று நாம் அடித்துச்சொல்லலாம்.
இளைஞர்களுக்குச் சவாலே விடலாம். கவலையே படாதீங்கோ.
தொடரும்……..
5] ranjani135
ReplyDelete10:13 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
சும்மா ஜோக்குக்காக எழுதியது. ‘டை’ அடித்துக் கொள்ளுவதில்லை.
முதுமையையும் நல்லவிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவள் நான்.
6] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete5:34 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
மிக்க மகிழ்ச்சி!
7] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete1:45 முப இல் ஒக்ரோபர் 27, 2012
//‘நீங்க என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’
‘திரு வை.கோ. சொன்னார்…நீங்கள் ப்ளாக் எழுதுகிறீர்களாம்….’
‘ஓ! ஓ! வைகோ ஸாரா? என்னோட பரம விசிறி ஸார் அவர். எனக்கு கூடிய சீக்கிரம் ‘விசிறிகள் மன்றம்’ கூட ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்!’ //
ஆஹா! சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களின் பரம விசிறி தான் நான்.
இல்லாவிட்டால் இப்போ நடு ராத்திரி மணி 1.30 க்கு எனக்கும் சொப்பனத்தில் நீங்கள் ஓர் புது பதிவு இட்டிருப்பதாகத் தெரிந்து திடுக்கிட்டு எழுந்து வந்து தங்களின் மெயில் பார்த்து, வரிசையாகப் பின்னூட்டம் இடுவேனா?
தொடரும்…..
அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு!
ReplyDeleteஎன்னைப்பற்றி விரிவான அறிமுகம் கொடுத்திருப்பதற்கு அன்பு நன்றி! உங்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் வளமுறச்செய்யும்.
உங்கள் வலைப்பூவை மிகச் சிறப்பானதாக ஆக்கியதற்கும் நிறைய நட்புள்ளங்கள் பின் தொடர்ந்திருப்பதற்கும் முழுக்க முழுக்க உங்கள் உழைப்பும் திறமையும் தான் காரணங்களென்றாலும் ஒரு சின்ன அணில் மாதிரி நானும் ஒரு சிறிய காரணமாக அமைந்திருப்பதில் எனக்கு என்றுமே ஒரு பெருமிதம் உண்டு. அதையும் இங்கே தெரிவித்திருப்பதற்கு என் உளமார்ந்த நன்றி!!
8] ranjani135
ReplyDelete10:16 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
நான் பதிவு போட்டவுடன் உங்களுக்கு மெயில் அனுப்பிவிட்டேன் – அப்புறம் மறந்து விடப் போகிறோமே என்று.
நீங்கள் உடனே இத்தனை பின்னூட்டங்கள் போடுவீர்கள்
என்று எதிர் பார்க்கவில்லை.
ப்ரெசென்ட் மேம்
ReplyDelete9] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete5:38 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
//நீங்கள் உடனே இத்தனை பின்னூட்டங்கள் போடுவீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.//
நானும் தான்.!
ஏதோ எழுத ஆரம்பித்தேன்.
எழுதிக்கொண்டே போனேன்.
சற்றே ஹனுமார் வால் போல
நீண்டு விட்டது.
vgk
10] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete1:54 முப இல் ஒக்ரோபர் 27, 2012
இங்கு இப்போதும் வழக்கம் போல் கரண்ட் கட்.
எப்போதுமே
“இருட்டு உள்[ளு]
முரட்டுப்பொண்ணு
சுருட்டுப்பாய்”
என்பது போல ஆகிவிட்டது எங்கள் தமிழ்நாட்டின் நிலை.
கையில் விசிறி, எமெர்ஜென்ஸி லாம்ப், இன்வெட்டெர், லாப்டாப் பேட்டரி இவைகளின் துணையுடன், கொசுக்களின் ரீங்காரத்துடன்,
நான் இவற்றை டைப்பிக் கொண்டிருக்கிறேன்.
ஏன் ஏன் ஏன் ஏன் ?????
தங்களின் விசிறிகள் மன்றம் ஆரம்பித்து அதற்குத் தலைவர் ஆகவேண்டும் என்ற வெறியல்லவோ காரணம். ))))
அதனாலேயே எப்போதும் நான் விசிறியும் கையுமாவே இருக்கிறேன்;
அதுவும் என் வீட்டில் ஒன்றுக்கு இரண்டு உபத்ரவத்திற்கு மூன்று என ஸ்பிலிட் ஏ.ஸி. போட்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 7000 முதல் 8000 வரை எலெக்ட்ரிக் பில் கட்டிவந்தும்.;(
தொடரும்………
11] ranjani135
ReplyDelete10:20 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை.
எப்படி இருந்தாலும் எனக்கு விசிறிகள் மன்றம் ஆரம்பித்து விடுங்கள்.
அடாது கொசுக்கள் ரீங்காரம் செய்தாலும், விடாது கரண்ட் போனாலும் …..ஓகே ஸார்?
12] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete5:57 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
மனதுக்குள்ளேயே சிவனுக்கு
மிக அழகாகக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார் ஓர் தீவிரபக்தர் என்று நாயன்மார்கள் சரித்திரத்தில் படித்திருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
அதுபோலவே நானும் ஒரு பதிவருக்கு [அம்பாளுக்கு] என் மனதுக்குள் கோயில் கட்டி, விசிறிகள் மன்றம் ஆரம்பித்து, நானே அதன் தலைவராகவும், நானே அதன் செயலாளராகவும், நானே அதன் பொருளாளராகவும், நானே அவருக்கான அனைத்துலக விசிறிகளாகவும் இருந்த
அனுபவம் எனக்கு உண்டு.
அவரைத் தவிர வேறு யாருக்கும் தீவிர ரஸிகராகவோ, விசிறியாகவோ, தலைவராகவோ வேறு பதவிகளிலோ, இருக்க என் மனம் இடம் தராமல், இன்றும் சற்றே என்னைத் தடுத்து வருகிறது.
அதனால் பிறகு பார்ப்போம். கோச்சுக்காதீங்கோ!
vgk
12] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete5:57 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
மனதுக்குள்ளேயே சிவனுக்கு
மிக அழகாகக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார் ஓர் தீவிரபக்தர் என்று நாயன்மார்கள் சரித்திரத்தில் படித்திருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
அதுபோலவே நானும் ஒரு பதிவருக்கு [அம்பாளுக்கு] என் மனதுக்குள் கோயில் கட்டி, விசிறிகள் மன்றம் ஆரம்பித்து, நானே அதன் தலைவராகவும், நானே அதன் செயலாளராகவும், நானே அதன் பொருளாளராகவும், நானே அவருக்கான அனைத்துலக விசிறிகளாகவும் இருந்த
அனுபவம் எனக்கு உண்டு.
அவரைத் தவிர வேறு யாருக்கும் தீவிர ரஸிகராகவோ, விசிறியாகவோ, தலைவராகவோ வேறு பதவிகளிலோ, இருக்க என் மனம் இடம் தராமல், இன்றும் சற்றே என்னைத் தடுத்து வருகிறது.
அதனால் பிறகு பார்ப்போம். கோச்சுக்காதீங்கோ!
vgk
12] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete5:57 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
மனதுக்குள்ளேயே சிவனுக்கு
மிக அழகாகக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார் ஓர் தீவிரபக்தர் என்று நாயன்மார்கள் சரித்திரத்தில் படித்திருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
அதுபோலவே நானும் ஒரு பதிவருக்கு [அம்பாளுக்கு] என் மனதுக்குள் கோயில் கட்டி, விசிறிகள் மன்றம் ஆரம்பித்து, நானே அதன் தலைவராகவும், நானே அதன் செயலாளராகவும், நானே அதன் பொருளாளராகவும், நானே அவருக்கான அனைத்துலக விசிறிகளாகவும் இருந்த
அனுபவம் எனக்கு உண்டு.
அவரைத் தவிர வேறு யாருக்கும் தீவிர ரஸிகராகவோ, விசிறியாகவோ, தலைவராகவோ வேறு பதவிகளிலோ, இருக்க என் மனம் இடம் தராமல், இன்றும் சற்றே என்னைத் தடுத்து வருகிறது.
அதனால் பிறகு பார்ப்போம். கோச்சுக்காதீங்கோ!
vgk
13] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete2:19 முப இல் ஒக்ரோபர் 27, 2012
//‘திருப்திதான். ஆனாலும் தினம் தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரு அரிப்பு…’
‘அரிப்பா? மருத்துவரைப் போய் பாருங்கள்….!’//
இது மிகச்சிறந்த எல்லா எழுத்தாளர்களுக்கும் உள்ள ஓர் ஆரோக்கியமான அரிப்பு தான்.
கவலை வேண்டாம்.
[உங்களைப்பேட்டி காண கனவில் வந்தவனுக்கு இந்த அரிப்பைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் ஓர் மக்குப் ப்ளாஸ்திரி.]
//‘ஸார், ஸார் நீங்க தப்பாகப் புரிஞ்சுண்டு இருக்ககீங்க! எழுத வேண்டும் என்று மனசுல சதா ஒரு குடைச்சல்….//
குடைச்சல் இருக்கட்டும். அதை நானும் வரவேற்கிறேன்.
தினமும் ஓர் பதிவு வீதம் எழுதுங்கோ. எழுதி Draft ஆக சேமியுங்கோ.
அதில் ஒன்றும் தப்பே இல்லை.
ஆனால் தினம் ஒரு பதிவு என தயவுசெய்து வெளியிடாதீங்கோ.
அதுக்கு மதிப்போ வரவேற்போ நிச்சயம் இருக்காது.
இது என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.
2011 இல் மட்டும் நான் இப்படித்தான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் ஒரு பதிவு கொடுத்து வந்தேன்.
மொத்தம் அன்0த ஆண்டில் 200 பதிவுகள்.
அதற்கு ஒவ்வொன்றுக்கும்
ஒரு 20 முதல் 50 வரை மட்டுமே பின்னூட்டங்கள் வந்து கொண்டிருந்தன.
2012 ஆரம்பத்தில் ஜனவரி முதல் ஏப்ரில் வரை நான்கே மாதங்களில் தினம் ஒரு பதிவு வீதம் மேலும் சுமார் 100 பதிவுகள் கொடுத்து வந்தேன்.
அப்போதும் சுமார் 50 பின்னூட்டங்களே வந்தன. பிறகு புதிய பதிவுகள் ஏதும் கொடுக்காமல் நீண்ட இடைவெளி கொடுத்து விட்டேன்.
அப்படியும் சிலர் [தூங்கும் புலியாக இருந்து வந்த என்னை] விருதுகள் தருவதாகச் சொல்லி இடறி விட்டனர்.
எழுந்த நான் விருது அளித்தவர்களுக்கு நன்றி கூறி மட்டும் ஒருசில பதிவுகள் கொடுத்து வந்தேன்.
அவ்வாறு கொடுக்கப்பட்ட விருதுகள் ஒன்றல்ல இரண்டல்ல … 2012 இல் மட்டும் 12 விருதுகள்.
கடைசியாகக் கிடைத்த 10,11,12 ஆகிய விருதுகள் ஒவ்வொன்றையும் 108 பதிவுகர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
உங்களுக்குக்கூட அதில் 2-3 விருதுகள் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அதில் ஒரு சாம்பிள் இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
அதற்கு வந்து குவிந்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை
[என் பதில்கள் உள்பட] 219
தொடரும்………
4] ranjani135
ReplyDelete10:27 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
நிஜம்தான் நீங்கள் சொல்வது. தினம் எழுதினாலும் படிக்க ஆள் வேண்டுமே!
நீங்கள் சொல்வதுபோல எழுதுவதை சேமித்து வைத்துக் கொள்ளுகிறேன்.
விருதுகள் உங்களைத் தேடி வருகின்றன என்றால் அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனசு யாருக்கு வரும்?
நிஜமாகவே நீங்கள் ‘Vaiko the Great’ தான்.
எனக்கும் மூன்று விருதுகள் உங்கள் மூலம் கிடைத்தன.
என்றென்றும் நன்றி உடையவளாக இருப்பேன்.
15] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete6:05 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
புரிதலுக்கு மிக்க நன்றி. vgk
>>>>
16] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete2:33 முப இல் ஒக்ரோபர் 27, 2012
பகிர்வதற்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள் கொட்டிக் கிடப்பினும், நான் பேசாமலேயே, புதிய பதிவுகள் ஏதும் தராமலேயே இருந்து வந்தேன். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
முக்கியமான காரணம் என் மேலிடத்தின் [தர்மபத்தினி அவர்களின்] குறுக்கீடுகள் மட்டுமே.
நான் இந்த ப்ளாக்கைக் கட்டிக்கொண்டு அழுவது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
[அவளைக்கட்டிக்கொண்டு அழுவது எனக்குப்பிடிக்கவில்லை என உடனே நினைத்து விட வேண்டாம். என் ஸ்வீட் 21-22 அவளின் ஸ்வீட் 17-18 இல் எங்களுக்குத் திருமணம் ஆகி 40 ஆண்டுகள் முழுதாக முடிந்து விட்டது. திருமண நாள் : 03 07 1972.
இன்றும் எங்கள் இல்வாழ்க்கை மிகவும் ஸ்வீட் ஆகவே ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஸ்வீட் என்றால் சாதாரண ஸ்வீட் அல்ல. தினமும் இரண்டு வேளையும் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவளுக்கு ஸ்வீட்.
தினமும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு
எனக்கும் ஸ்வீட் ... எங்கள்
இருவர் இரத்தத்திலும் கூட]
தொடரும்…….
17] ranjani135
ReplyDelete10:31 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
இதேபோல எப்போதுமே இருவரும் ஸ்வீட் ஸ்வீட்டாக இருக்க, 40 வருட தாம்பத்திய வாழ்க்கை மேலும் மேலும் சிறக்க அம்பாளை பிரார்த்திக்கிறேன்.
18] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete6:12 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
தங்களின் பிரார்த்தனைகளுக்கு
[அதுவும் அம்பாளிடம் ]
மிக்க நன்றி.
vgk
>>>>>>>>
19] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete2:45 முப இல் ஒக்ரோபர் 27, 2012
பிறகு சமீபத்தில் 2012 செப்டம்பரில் ஒன்றும் அக்டோபரில் ஒன்றுமாக இரண்டே இரண்டு பதிவுகள் மட்டும் கொடுத்தேன்.
அதுவும் எனக்கு ஆங்கிலத்தில் வந்திருந்த நகைச்சுவையான சம்பவங்களை தமிழாக்கம் செய்து, அதில் எனக்கே உரித்தான நகைச்சுவைகளையும் சேர்த்துக் கொடுத்திருந்தேன்.
நீண்ட நாட்களுக்குப்பின் நான் பதிவுகள் கொடுத்ததும், வாசக நண்பர்களுக்கு, ஒரே குஷி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் எப்போதாவது தான் வரும் …. ஆனால் ரஸிகர்கள் கூட்டம் அலை மோதும் அல்லவா.
அதுபோல என் சமீபத்திய 2 பதிவுகளுக்கு வந்துள்ள பின்னூட்டங்கள் [என் பதில்கள் உள்பட] இதுவரை முறையே 175 + 170 எனக் குவிந்து போய்விட்டன.
எனவே தினமும் ஒரு பதிவு வீதம் கொடுக்க நினைப்பதை தாங்களும் சற்றே மறுபரிசீலனை செய்யுங்கள்.
அவ்வாறு தினமும் கஷ்டப்பட்டு ஓர் பதிவு கொடுப்பதால் நமக்கு ஓர் மதிப்போ மரியாதையோ இருக்காது.
மிகத்தரமான பதிவாக மாதம் ஒன்றோ அல்லது இரண்டோ கொடுப்பது தான் சாலச்சிறந்தது, என்ற தேவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
வேறு யாரிடமும் தயவுசெய்து சொல்லி விடாதீர்கள், ப்ளீஸ்.
தொடரும்………
20] ranjani135
ReplyDelete10:08 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
நீங்கள் என்னுடன் ரகசியமாகப் பகிர்ந்து கொண்ட தேவ ரகசியத்தை நானும் இனிமேல் கடைப்பிடிக்கிறேன்.
நீங்கள் சொல்வது மிக மிக சரி.
தினமும் ஏதாவது போடுவதை விட தரமாக ஒன்று அல்லது இரண்டு போடுவது சுலபமாகவும் இருக்கும்.
நூற்றுக் நூறு ஒப்புக் கொள்ளுகிறேன்.
நல்ல அறிவுரைக்கு நன்றி!
>>>>
21] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete6:19 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
எல்லோரும் எல்லாவற்றையும் இதுபோல சுலபமாக தனக்கு நன்மைதானே என்று நினைத்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதனால் நானும் யாருக்கும் இப்போதெல்லாம் எந்த ஒரு ஆலோசனைகளும் சொல்வது கிடையாது.
நான் சொல்வதை நல்லதொரு அறிவுரையாக பாஸிடிவ் ஆக தாங்கள் ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
vgk
>>>>>
22] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete3:06 முப இல் ஒக்ரோபர் 27, 2012
எனக்கு ஓர் தங்கையோ அல்லது பெண் குழந்தையோ பிறக்கும் பாக்யம் சுத்தமாக எனக்குக் கிடைக்கவில்லை.
அந்தக்குறையைப் போக்க இந்த வலையுலகில் நிறைய தங்கச்சிகளும், பெண் குழந்தைகளும் எனக்கு வாய்த்துள்ளார்கள்.
அதில் ஓர் குழந்தையே என் அன்பின் “மஞ்சு” என்கிற ”மஞ்சு பாஷிணி”.
இவங்க குவைத்தில் இருந்தாலும், இங்கு என்னுடன் திருச்சியிலேயே எங்காத்திலேயே இருப்பது போல
ஓர் பிரமை எனக்கு.
அந்த அளவுக்கு தினமும் தொலைபேசியிலும், மின்னஞ்சல் சுட்டிகளிலும் தொடர்பு.
இரவு தூங்கினீங்களா அண்ணா, காஃபி சாப்பிட்டீங்களா அண்ணா, டிபன் சாப்பிட்டீங்களா அண்ணா, சாப்பாடு சாப்பிட்டீங்களா அண்ணா என வேளாவேளைக்கு நல்லதொரு ஆத்மார்த்தமான அன்பான விசாரிப்புகள்.
இந்த என் அன்புத்தங்கை “மஞ்சு”
01 10 2012 முதல் வலைச்சர ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டதுடன், சும்மா இல்லாமல் எனக்கே எனக்கென்று ஒரு முழுநாள் முழுவதுமாக [02 10 2012] ஒதுக்கி கீழ்க்கண்ட பதிவின் மூலம் என் மீது பாசமழையைப் பொழிந்து தள்ளி விட்டாள்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455
அந்த ஒரே நாளில் அங்கு வந்து குவிந்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை [மஞ்சுவின் பதில்கள் உள்பட] 126. இது வலைச்சரச் சரித்திரத்திலேயே ஒரு Record Break என்று சொல்லுகிறார்கள்.
தொடரும்………
23] ranjani135
ReplyDelete10:05 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
நீங்கள் எல்லா பதிவர்கள் மேலும் காட்டும் அக்கறையே இத்தனை பின்னூட்டங்களுக்கும் காரணம்.
உங்களது தோழமை கிடைத்ததற்கு ரொம்பவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நான்!
>>>>>
24] ranjani135
ReplyDelete10:34 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
நானும் அன்பு மஞ்சுவின் வலைச்சர பதிவுகள் பார்த்தேன்.
உங்களது அத்தனை இடுகைகளின் (95) இணைப்பையும் எப்படிக் கொடுத்தாரோ என்று வியந்து போனேன்.
>>>>>>
25] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete6:24 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
தங்களின் புரிதலுக்கு மிகவும் சந்தோஷம்.
நல்ல நட்புகள் அமைய நானும் புண்ணியம் செய்துள்ளேன் என்பதே எனது எண்ணமும்.
இதே நட்பு என்றும் நீடிக்கப் பிரார்த்திப்போமாக!
vgk
>>>>>
26] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete3:13 முப இல் ஒக்ரோபர் 27, 2012
என் அன்புத்தங்கை மஞ்சுவுக்காகவும், மேலும் என் மீதும் என் எழுத்துகள் மீதும் மிகுந்த ஆவலுடன் உள்ள ஒருசிலருக்காகவும் நானும் தொடர்ச்சியாக பதிவுகள் தர முடியாமல் இருப்பினும் மாதம் ஒருமுறை ஒரே ஒரு பதிவாவது வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன்.
அதற்காவது எனக்கு ப்ராப்தம் இருக்க வேண்டும்.
இறையருளும் [குறிப்பாக அம்பாள் அருளும் ] கைகூடி வரவேண்டும்
என பிரார்த்திக்கிறேன்.
தங்களின் இந்தப்பதிவு சூப்பரோ சூப்பராகவே உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..
தொடரும்…….
27] ranjani135
ReplyDelete10:02 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மேலும் உங்கள் எழுத்துக்கள் மேலும் பரிவு உடையவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
>>>>>>>
28] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete6:29 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
// உங்கள் மேலும் உங்கள் எழுத்துக்கள் மேலும் பரிவு உடையவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.//
நிச்சயமாக ! பருப்பில்லாமல் கல்யாணமா? ))))
-=-=-=-=-
[தங்கள் மகளின் கல்யாணம் பற்றி தாங்கள் நகைச்சுவையாக எழுதிருந்த முதல் பதிவும் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.
சிரித்துக்கொண்டே இதைப் பின்னூட்டமாக டைப் அடிக்கிறேன்]
vgk
>>>>>
29] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete6:58 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
//நானும் அன்பு மஞ்சுவின் வலைச்சர பதிவுகள் பார்த்தேன். உங்களது அத்தனை இடுகைகளின் (95) இணைப்பையும் எப்படிக் கொடுத்தாரோ என்று வியந்து போனேன்.//
மஞ்சு ஓர் தனிப்பிறவி. பிறரிடம் அன்பையும் பாசத்தையும் பொழிவதைத்தவிர வேறு ஏதும் அறியாத குழந்தை குணம் கொண்டவள்.
நான் 07.09.2012 அன்று பல்வேறு சோகங்களிலும், மனவருத்தங்களிலும், துயரங்களிலும் மூழ்கி தத்தளித்தபோது, என்னைத்தடுத்தாட்கொண்டு, ஆறுதல் அளித்து அன்று முதல் இன்று வரை தொடர்ந்து தினமும் என்னைக் கண்காணித்து வருபவள்.
தக்க நேரத்தில் என் தவிப்பை உணர்ந்து என்னைக் காப்பாற்ற நினைத்து மஞ்சு மூலம்
MIRACLE நடத்தி
உதவியுள்ளார் என் குருநாதர்.
எனக்கும் இந்த மஞ்சுவின் நட்பு இன்று வரை மிகவும் வியப்பளிப்பதாகவே உள்ளது.
vgk
>>>>>>
30] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete3:22 முப இல் ஒக்ரோபர் 27, 2012
//பின்குறிப்பு:
நான் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் என்னை மன்னிப்பார்களாக!//
இது மட்டும் தான் எனக்குப்பிடிக்கவில்லை.
நமக்குள் இதெல்லாம் தேவை தானா? மேடம். மனம் திறந்து சொல்லுங்கோ, ப்ளீஸ்.
[அப்புறம் பெங்களூர் விஜயநகர் “இந்திரப் ப்ரஸ்தா” ஏ.ஸி. ரெஸ்டாரண்ட் மாடிக்கு நாம் சேர்ந்து போகவேண்டும்.
அதை மட்டும் மறந்துடாதீங்கோ. கீழே கையேந்தி பவன் போல எப்போதும் ஒரே கூட்டமாக இருக்கும். அதனால் அங்கே வேண்டாம். அதன் மாடிக்கு மட்டுமே நாம் செல்ல வேண்டும்]
பிரியமுள்ள
VGK
[இதையெல்லாம் நான் அடித்து முடிப்பதற்குள் வெள்ளிக்கிழமை
போய் சனிக்கிழமை விடிந்து விட்டது.
இப்போது இங்கே அதிகாலை மணி 03.20
Good Night அல்லது Good Morning எதையாவது உங்கள் செளகர்யப்படி எடுத்துக் கொள்ளுங்கோ! ))))) ]
>>>>>
31] ranjani135
ReplyDelete10:00 பிப இல் ஒக்ரோபர் 27, 2012
அடடா! இரவெல்லாம் தூங்கவில்லையா?
நிச்சயமாக இந்திரப்பிரஸ்தா மாடிக்கே போகலாம்.
>>>>>>
32] VAI. GOPALAKRISHNAN
ReplyDelete7:09 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
//அடடா! இரவெல்லாம் தூங்கவில்லையா?//
பணி ஓய்வு பெற்றதிலிருந்து, அதுவும் குறிப்பாக பதிவுலகுக்கு வந்ததிலிருந்து, பெரும்பாலும் இரவு நேரங்களில் தூக்கம் வருவது இல்லை.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள், எப்படியும் தூங்கி விடுவேன்.
அதிலிருந்து ஆரம்பித்து சுமார் 6 மணி நேரங்கள் முதல் 8 மணி நேரங்கள் வரை தூங்கிப்போவேன்.
காலையில் எழுந்திருக்க மிகவும் தாமதமாகும்.
அதன் பிறகு பகலிலெல்லாம் தூங்கவே மாட்டேன்.
ஏதோ HAPPY RETIRED LIFE ஓடிக்கொண்டு வருகிறது.
அதிகாலை எழுந்திருந்து பஸ் பிடித்து, அலுவலகம் சென்ற நாட்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தே போய் விடும் போல் உள்ளது.
//நிச்சயமாக இந்திரப்பிரஸ்தா மாடிக்கே போகலாம்.//
தாங்கள் இவ்வாறு சொன்னதே போய் வந்தது போல மகிழ்ச்சியளிக்கிறது. ))))) சந்தோஷம் + நன்றி.
>>>>>>>>
33]
ReplyDeleteஅன்பு நண்பர்களே!
இதுவரை பொறுமையாக இவற்றை அனுமதித்தற்கு மிக்க நன்றி.
இத்தோடு பின்னூட்டங்கள் முடியவில்லை.
இதே போல மேலும் பல பதிவர்கள் வருகை தந்து மேலும் 33 பின்னூட்டங்கள் கொடுத்துள்ளனர்.
அதிலும் என்னைப்பற்றி அதிக செய்திகள் இடம் பெற்றுள்ள்ன.
விருப்பம் உள்ளவர்கள் போய்ப் படித்துக்கொள்ளலாம்.
[அனைவரும் ஆளுக்கு ஒரு கல்லை தங்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளதை நானும் கற்பனை செய்து பார்க்கிறேன்.
பின்னூட்டம் போன்று உற்சாகம் அளிக்கும் டானிக் வேறு எதுவும் இல்லை என்பது பதிவர்களாகிய உங்கள் எல்லோருக்குமே தெரியும்.
அதனால் தங்கள் கைகளில் இப்போது உள்ள கற்களை ஓரமாகத் தூர எறியுங்கள்.]
அன்புடன் VGK
Ramani said...
ReplyDelete//தங்கள் அறிமுகமும் அதைத்தொடர்ந்து
பதிவுலக பிதாமகர்
வை.கோ அவர்களின்
விரிவான அறிமுகமும்
மிக்க மகிழ்வளித்தது//
அன்புள்ள திரு. ரமணி சார்,
வாருங்கள், வணக்கம்.
நேற்று வலைச்சர ஆசிரியர் என்னை பதிவுலகப் பின்னூட்டப்புயல் என்றார்.
தங்கத்துடன் சேர்ந்து ஜொலிக்கும் வைரம் என்றார்.
இன்று நீங்கள் என்னை “பதிவுலக பிதாமகர்” என்று சொல்லுகிறீர்கள்.
யாதோ யாதோ யாதோ ......?
மொத்தத்தில் இதன் பின்னனியில் ஏதோ ஏதோ எதோ சில சதிவேலைகள் நடக்கின்றனவோ என அஞ்சி நடுங்குகிறேன், ஐயா.
Any how, Thanks a Lot, Sir.
அன்புடன்
VGK
JAYANTHI RAMANI said...
ReplyDelete//உஷா அன்பரசு
வணக்கம்.
எங்களோட வலைத்தளத்தை எல்லாம் அறிமுகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.//
வாங்கோம்மா.... வாங்கோ.
உங்களைக்காணோமேன்னு நானும் திருமதி உஷா அன்பரசு மேடமும் நேற்றிலிருந்து எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா?
நல்லவேளை இப்போதாவது வரத்தோணிச்சே! சந்தோஷம் தான்.
அப்புறம், நல்லா இருக்கீங்களா, செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா? அது தான் முக்கியம்.
உங்கள் பேத்தி ’லயா’க்குட்டியும் செளக்யமா?
//என்னுடைய வலைத்தளத்தை இன்னும் அழகு படுத்தத் தெரியவும் இல்லை, நேரமும் இல்லை என்று எப்போதும் ஆதங்கப் படுவேன்.//
அதெல்லாம் ஒண்ணும் அழகு படுத்த வேண்டாம். ஏற்கனவே இயற்கையாகவே நல்லா அழகாத்தான் உள்ளது. ;)))))
//ஆனால் கருத்துச் செறிவும், எழுத்துச் செறிவும்தான் தேவை
என்று எனக்கு உணர்த்திய திரு கோபாலகிருஷ்ணன் சாருக்கு
மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.//
அடடா, சும்மா இருங்கோ!
இந்த நான் உங்களுக்கு மட்டும் சொன்ன தேவ ரகசியத்தைப் போய், இப்படி எல்லோருக்கும் தெரியும்படியா ஓபனாச் சொல்லிட்டீங்களே!!
OK OK உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
VGK
JAYANTHI RAMANI said...
ReplyDeleteஆமாம். எதற்காக வரிசையா மூணு தடவை வருகை தந்து ஒரே கருத்துக்களை மூணு தடவை சொல்லியிருக்கீங்க?
2-3 நாட்களாக நாம் வராமல் போயிட்டோமே, வீட்டு வேலைகள் ஆபீஸ் வேலைகள் என்று ரொம்பவும் பிஸியா இருந்துட்டோமேன்னு, அடுத்தடுத்து மூன்று தடவையா?
அதுவும் நல்ல ஐடியா தான். ஒரு விஷயத்தை ஒரு தடவைக்கு மூணு தடவை சொன்னால் எல்லோருக்கும் நன்னா மனஸுக்குப்புரியும்.
உங்களின் இதைப்பார்த்த நானும் என் ஒரு பின்னூட்டத்தை ஒரு தடவைக்கு மூணு தடவையாக் கொடுத்துள்ளேன்.
எல்லாம் நன்மைக்கே!
பிரியமுள்ள
VGK
அருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
தொடருங்கள்... தொடர்கிறோம்...
மனோ சாமிநாதன் said...
ReplyDelete//அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு!//
வாங்கோ அன்புச் சகோதரியே, வணக்கம். நல்லா இருக்கீங்களா?
//என்னைப்பற்றி விரிவான அறிமுகம் கொடுத்திருப்பதற்கு அன்பு நன்றி! உங்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் வளமுறச்செய்யும்.//
ரொம்பவும் சந்தோஷம், மேடம்.
//உங்கள் வலைப்பூவை மிகச் சிறப்பானதாக ஆக்கியதற்கும் நிறைய நட்புள்ளங்கள் பின் தொடர்ந்திருப்பதற்கும் முழுக்க முழுக்க உங்கள் உழைப்பும் திறமையும் தான் காரணங்களென்றாலும்//
அப்படியாச் சொல்றீங்கோ?
இல்லை மேடம் ... நான் எப்போதுமே சாதாரணமானவன் தான்.
//ஒரு சின்ன அணில் மாதிரி நானும் ஒரு சிறிய காரணமாக அமைந்திருப்பதில் எனக்கு என்றுமே ஒரு பெருமிதம் உண்டு. அதையும் இங்கே தெரிவித்திருப்பதற்கு என் உளமார்ந்த நன்றி!!//
சின்ன அணில் என்பது என்னவோ உண்மை தான், தங்களை நான் நேரில் சந்தித்ததால் மட்டும் இதனை ஒத்துக்கொள்கிறேன்.
சிக்கனமாக உணவருந்தி, உடம்பை சிக்கென வைத்துக்கொண்டு, சின்ன அணில் போல் மிகவும் சுறுசுறுப்பாகவே இருந்தீர்கள்.
தங்களின் ஆற்றலிலும், எழுத்துக்களிலும், வலைப்பதிவுகளிலும், மற்ற அனைத்து தொழிற் திறமைகளிலும்,
தொழிலதிபராகிய தாங்கள் அணில் அல்ல யானையும் சிங்கமும் சேர்ந்த மஹா திறமைசாலி என்பது எனக்குத் தெரியும் .. இது இங்கு மற்றவர்களுக்காக மட்டுமே.
பிரியமுள்ள,
வை.கோபாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன் சார்
ReplyDelete'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் வடிவேலு 'மணிக்கொரு முறை நீ மங்குணி என்பதை நிரூபித்து விடுகிறாய்' என்று சொல்வது போல், மீண்டும் ஒரு முறை நான் கத்துக்குட்டி என்று நிரூபித்து விட்டேன். மூன்று முறை பதிவு போட்டேன் என்பது தெரியாமலே போட்டிருக்கிறேன்.
JAYANTHI RAMANI said...
ReplyDelete//கோபாலகிருஷ்ணன் சார்
'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் வடிவேலு 'மணிக்கொரு முறை நீ மங்குணி என்பதை நிரூபித்து விடுகிறாய்' என்று சொல்வது போல், மீண்டும் ஒரு முறை நான் கத்துக்குட்டி என்று நிரூபித்து விட்டேன். மூன்று முறை பதிவு போட்டேன் என்பது தெரியாமலே போட்டிருக்கிறேன்.//
அதனால் பராவாயில்லை மேடம்.
தயவுசெய்து அவற்றை DELETE செய்யாதீங்கோ. வரிசையாக அழகாக உள்ளன. நான் நம் திருமதி உஷா மேடத்திடமும் DELETE செய்ய வேண்டாம் எனச்சொல்லியுள்ளேன்.
இதெல்லாம் மிகவும் சகஜம்.
நாம் கஷ்டப்பட்டு போடும் கமெண்ட் ஒரு முறைகூட போய்ச்சேராமல் சமயத்தில் எங்கோ காணாமல் போய் கழுத்தை அறுக்கும்.
இதுபோல பலமுறையும் போய் விடுவதும் உண்டு.
என் பதிவு ஒன்றுக்கு ஒருவர் கொடுத்த பின்னூட்டம் 12 முறை அடுத்தடுத்து வந்திருந்தது.
இதெல்லாம் ஏதோ நமக்கு அப்பாற்பட்ட SYSTEM கோளாறுகள்.
அவை எல்லாமே அப்படியே இருகட்டும்.
கத்துக்குட்டி என்றெல்லாம் உங்களை நீங்களே சொல்லிக் கொள்ளாதீர்கள்.
பலரும் [நான் உள்பட] இன்றுவரை கத்துக்குட்டிகளே தான்.
அன்புடன்
VGK
சுவாரஸ்யம்.
ReplyDeleteபின்னூட்டங்கள்.
நன்றி வை.கோ.சார்.
சுவாரஸ்யம்.
ReplyDeleteபின்னூட்டங்கள்.
நன்றி வை.கோ.சார்.
சுவாரஸ்யம்.
ReplyDeleteபின்னூட்டங்கள்.
நன்றி வை.கோ.சார்.
சுவாரஸ்யம்.
ReplyDeleteபின்னூட்டங்கள்.
நன்றி வை.கோ.சார்.
//NIZAMUDEEN said...
ReplyDeleteசுவாரஸ்யம்.
பின்னூட்டங்கள்.
நன்றி வை.கோ.சார்.//
மிக்க நன்றி NIZAMUDEEN Sir.
நீங்க இதையே நாலு முறை சொல்லி அசத்திட்டீங்க!
[நானும் திருமதி ஜெயந்தி மேடமும் இனி பயப்படவே வேண்டாம், ;))) ]
வகுப்புக்கு வந்து களைகட்ட வைத்த உங்க அனைவர்க்குமே மிக்க நன்றி! இன்னும் உங்க நிறைய நண்பர்கள், தோழிகள் அனைவரையும் ப்ரெஸ்ண்ட் கொடுக்க சொல்லுங்க. அப்பதான் வகுப்பு கலாட்டா கலக்கலாய் இருக்கும். மூன்று நாட்களாய் வகுப்புக்கு வந்தவர்கள் தொடர்ந்து கட் அடிக்காம வந்துடுங்க!
ReplyDeleteநன்றி!
கோபால கிருஷ்ணன் சார் உங்க பின்னூட்டம் ஸ்..பா.. கண்ணை கட்டுதே..! எப்படி சார் இப்படி பின்னறீங்க?!
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்/ கோபால் சார் ஒரு சின்ன ரிக்வெஸ்ட். வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு நிறையா பேரை பரிந்துரை செய்து பெரிய கிங்க் மேக்கரா இருக்கீங்க. ஏன் நீங்களே கிங்காக அந்த அரியாசனத்தில் அமர மாட்டிங்கரிங்க. இத்தனை பின்னூட்டம் எவ்வளவு சுவாரசியமா போட நேரம் கிடைக்கும் போது ஆசிரியர் பணிக்கும் உங்களால நேரம் ஒதுக்க முடியுமே
ReplyDeleteஅன்புள்ள வைகோ ஸார்
ReplyDeleteநீங்கள் எனது பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தையும், நான் அதற்குப் போட்ட பதிலையுமே, இந்த வலைச்சர வகுப்பிற்கு பின்னூட்டமாகப் போட்டு....
அசத்தி விட்டீர்கள்!
உஷா அன்பரசு said...
ReplyDelete//கோபால கிருஷ்ணன் சார் உங்க பின்னூட்டம் ஸ்..பா.. கண்ணை கட்டுதே..!//
அடடா, கண்ணைக் கட்டுதா?
இந்த ஆள் வராவிட்டாலும் க்ளாஸ் ரூமில் ஒரு கலகலப்பே இல்லை..
வந்தாலும் ஒரே தொல்லை ......
என்று தோன்றுகிறதா டீச்சர்?
//எப்படி சார் இப்படி பின்னறீங்க?!//
எங்க வீட்டுக்குப்பக்கத்து வூட்டுலே ஒரு அம்மா தன் மகளுக்கு இரட்டைப் பின்னல் பின்னுவாங்கோ.
அதை நான் பார்த்து மிகவும் ரஸித்துக்கொண்டே இருப்பேன் ... என் சின்ன வயசிலே!
அதனால் மட்டுமே இப்போ இங்கு பின்ன முடிகிறதூஊஊ! ;)))))
எனக்குத்தான் இரட்டைப்பின்னல், ஜிமிக்கி, கொலுசு, ரவாலாடு இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்ன்னு சொல்லியிருக்கேனே!
’மறக்க மனம் கூடுதில்லையே’
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
அன்புடன்
VGK
Lakshmi said...
ReplyDeleteவாங்கோ மேடம். வணக்கம். நல்லா இருக்கீங்களா? இப்போ சிங்கப்பூரிலா அல்லது மும்பையிலா?
”எங்கிருந்தாலும் வாழ்க!”
//கோபால் சார், ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.//
REQUEST எல்லாம் எதற்கு மேடம்? நீங்கள் எனக்கு COMMENT கொடுப்பது போலவே COMMAND டும் செய்யலாமே! ;)))))
//வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு நிறைய பேரை பரிந்துரை செய்து பெரிய கிங்க் மேக்கரா இருக்கீங்க.//
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது மேடம்.
நெருக்கடி ஏற்படும்போது மட்டும் நம் அன்பின் சீனா ஐயா அலைபேசியில் என்னை அழைப்பார்.
தகுந்த நபர் ஒருவரை பரிந்துரை செய்யுங்களேன் என்பார்.
அவருக்கு நான் செய்துவரும்
ஏதோ என்னால் ஆனதோர் சின்ன உதவி.
அதுவும் இதற்கு நான் தான் சரியான நபர் என்று வித்திட்டவரும் தாங்கள் தான். அதைப்பற்றி சற்றே விப்ரமாக என் அடுத்த பதிலில் தருகிறேன்.
//ஏன் நீங்களே கிங்காக அந்த அரியாசனத்தில் அமர மாட்டேன் என்கிறீங்க.//
நான் மிகச் சாதாரணமானவன் மேடம்.
கிங் போஸ்ட் அரியாசனம் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.
அதில் எனக்கு விருப்பமும் இல்லை.
//இத்தனை பின்னூட்டம் எவ்வளவு சுவாரசியமா போட நேரம் கிடைக்கும் போது ஆசிரியர் பணிக்கும் உங்களால நேரம் ஒதுக்க முடியுமே!//
எனக்கு நேரம் ஒரு பிரச்சனையே இல்லை.
வேலை என்று ஒன்று பொறுப்பு எடுத்துக்கொண்டால் அதை
PERFECT ஆக முடிக்கும் வரை நான் ஓயவே மாட்டேன். தூங்கவே மாட்டேன்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். எனக்கு இதில் மனம் இல்லை. இஷ்டம் இல்லை.
அதற்கு எவ்வளவோ காரணங்களும் உண்டு.
சிலவற்றை உங்களிடன் நான் ஏற்கனவே தொலைபேசி + மெயில் மூலம் சொல்லியிருக்கிறேன் என்று ஞாபகம் உள்ளது.
>>>>>>>>
VGK To Mrs. LAKSHMI Madam [2]
ReplyDeleteதாங்கள் 06.06.2011 முதல் 12.06.2011 வரை வலைச்சர ஆசிரியராக இருந்தீர்கள்.
அதன் பிறகு [அதாவது 13.06.2011 முதல்] உங்களுக்குப்பிறகு என்னை ஆசிரியராகக் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தீர்கள்.
நான் நழுவிக்கொண்டேன்.
பிறகு தாங்களும் திரு. சீனா ஐயா அவர்களும் என்னை தொலைபேசியில் தினமும் தொடர்பு கொண்டீர்கள்.
நான் பதவி ஏற்றுக்கொள்ளா விட்டாலும் தகுந்த, விருப்பம் உள்ள ஒரு நபரை 20.06.2011 முதல் 26.06.2011 வரை பதவி ஏற்க, என் வாயால் பரிந்துரைக்குமாறு திரு சீனா ஐயா அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
நான் மிகப்பொருத்தமான ஒருவரைப் பரிந்துரைத்தேன்.
நான் பரிந்துரைத்தவர் பெயரைக் கேட்டதும் அவர் அன்று சற்றே தயங்கினார்.
நான் யாரைப் பரிந்துரைத்தேனோ அவரும் சற்று தயங்கினார்.
இருப்பினும் என் மீது கொண்ட அன்புக்காக, எனக்காக மட்டுமே துணிச்சலுடன் ஒரு சவாலாக அந்தப்பணியை ஏற்றுக் கொண்டார்.
நான் அன்று பரிந்துரைத்தவர் என்ன சாதாரணமானவரா?
இதோ அவரைப்பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன். கேளுங்கோ ...
>>>>>>>>
VGK to LAKSHMI Madam [3]
ReplyDeleteநான் வலைச்சர ஆசிரியராக நியமிக்க பரிந்துரைத்த அந்தப்பெண்மணி The Right Man for the Right Job என்பது போல, இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவரே.
அவரால் மட்டுமே எதையும்
அழகாக, நேர்த்தியாக, விரைவாக, வித்யாசமாக, துடிப்புடன், ஆக்கபூர்வமாக, அமைதியாக, வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.
“மெய் வருத்தம் பாரார்;
பசி நோக்கார்’
கண் துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்;
செவ்வி அருமையும் பாரார்;
அவமதிப்பும் கொள்ளார்;
கருமமே கண்ணாயினார்”
என்பதற்கு எடுத்துக்காட்டானவர் அவர்.
>>>>>>>>>>
VGK to LAKSHMI Madam [ 4]
ReplyDeleteஅவ்ர் 20.06.2011 முதல் பொறுப்பேற்றுக்கொண்டு மிகச்சிறப்பாகப் பணியாற்றினார்.
அவர் அகர வரிசையில்
‘அ’ முதல் [உதாரணம்: அட்ரா சக்க] ஆரம்பித்து, ஆயுத எழுத்தான ஃ வ்ரை பெரும்பாலும் அனைத்துப் பதிவர்களையும் மிகச்சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்.
தங்களைப்போலவே அவரும் தினமும் இரண்டு பதிவுகள் வீதம் காலையில் ஒன்று மாலையில் ஒன்றாகக் கொடுத்து அசத்தினார்.
எனக்குத் தெரிந்த வரை அதிக அளவில் பதிவர்களை அறிமுகம் செய்து வைத்த அவரின் சாதனையை யாரும் இதுவரை முறியடித்ததாகத் தெரியவில்லை.
இந்தச் சிங்கக்குட்டியின் சீற்றத்தைக்கண்ட திரு. சீனா ஐயா அவர்களே அசந்து போனார்.
பரிந்துரை செய்த என்னையும் வெகுவாகப் பாராட்டினார்.
அத்தோடு விடவில்லை எனக்கு இந்தப்பணி. இன்று வரை அது தொடர்கதையாகிப்போனது
>>>>>>>>>>
VGK to LAKSHMI Madam [ 5 ]
ReplyDeleteஅதன் பிறகு திரு. சீனா ஐயா அவர்கள் என்னை அடிக்கடி தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள்.
அவருக்கு நெருக்கடி ஏற்படும் சமயங்களிலெல்லாம் என் பரிந்துரையில் யாராவது ஒரு பதிவ்ரை வலைச்சர ஆசிரியர் ஆக்குவது என்பது ஒரு எழுதப்படாத சட்டம் போல் ஆகிவிட்டது.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த என் முதல் பரிந்துரை இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மாதம் ஓரிரு பதிவர்கள் வீதம் என் பரிந்துரையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒருவரை Just பரிந்துரை செய்து விட்டு நான் ஒதுங்கிக்கொள்ளவே முடியாது.
இதன் பின்னனியில் நான் பல வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நான் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யும் ந்பருக்கு முதலில் இதில் விருப்பம் இருக்க வேண்டும்.
சிலருக்குத் திறமையிருந்தும் ஒருவித பயமும் தயக்கமும் இருக்கும்.
அவருக்குள்ள பயத்தினை முதலில் நான் போக்க வேண்டியதாக் உள்ளது.
பிறகு அவருக்கு ஒருசில ஆலோசனைகள் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறெல்லாம் ஒருவரை மனதளவில் தயார் செய்து, அவரும் அதற்கு தன்னை முழுவதுமாக தயார்செய்து கொண்டபிறகே,
நான் அவரைப் பரிந்துரை
செய்வது வழக்கம்.
இவ்வாறெல்லாம் செய்து ஒருவரை வலைச்சர ஆசிரியராக்கி விட்டு நான் ஒதுங்குவதும் கிடையாது.
அவருடைய செயல்பாட்டினை தினமும் கண்காணித்து பாராட்டி உற்சாகப்படுத்தி வருவதும் என் வேலையாகிறது.
இவ்வாறு மிகச்சிறந்த தரமான 20 பதிவர்களை கடந்த 19 மாதங்களில் என்னால் கொண்டு வர முடிந்துள்ளது.
இனிமேல் இந்தப்பணியிலிருந்து நான் சற்று விலகிக்கொள்ளலாம் என நினைத்துள்ளேன்.
அன்பின் சீனா ஐயாவிடம் இதை எப்படிச்சொல்வது என்று தான் சற்று தய்க்கமாக உள்ளது.
>>>>>>>>>
VGK to LAKSHMI Madam [ 6 ]
ReplyDeleteஇதுவரை என் பரிந்துரையில் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று அந்தப்பணியினை
மிக அழகாக செய்துள்ளவர்களின் பட்டியல் இதோ:
02] திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்
03] திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
04] திருமதி ஆச்சி அவர்கள்
05] திருமதி ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்கள்
06] திருமதி ராஜி அவர்கள்
[கற்றலும் கேட்டலும்]
07] திருமதி சாகம்பரி அவர்கள்
08] திருமதி ரமாரவி அவர்கள்
09] திருமதி ஷக்திப்ரபா அவர்கள்
10] திருமதி கோமதி அரசு அவர்கள்
11] திருமதி ஸாதிகா அவர்கள்
12] திருமதி கீதமஞ்சரி அவர்கள்
13] செல்வி நுண்மதி அவர்கள்
14] திருமதி மஞ்சு பாஷிணி அவர்கள்
15] திருமதி ரஞ்ஜினி நாராயணன் அவர்கள்
16] ஆரண்யநிவாஸ்
திரு. ஆர். ராமமூர்த்தி அவர்கள்
17] செல்வி யுவராணி அவர்கள்
18] திரு. ரிஷபன் சார் அவர்கள்
19] திரு. E.S. சேஷாத்ரி
[காரஞ்சன் சேஷ்] அவர்கள்
20] திருமதி உஷா அன்பரசு அவர்கள்.
அனைவருக்கு என் அன்பான நன்றிகள். வாழ்த்துகள்.
அன்புடன்,
VGK
-oOo-
Ranjani Narayanan said...
ReplyDelete//அன்புள்ள வைகோ ஸார் ..
நீங்கள் எனது பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தையும், நான் அதற்குப் போட்ட பதிலையுமே, இந்த வலைச்சர வகுப்பிற்கு பின்னூட்டமாகப் போட்டு.... அசத்தி விட்டீர்கள்!//
ஆமாம் மேடம். அந்த என் பின்னூட்டங்களும் அதற்கான தங்களின் பதிலும், ஒருசில
தங்களின் பதில்களுக்கு என்
பதிலும் சுவையானவை,
தங்களின் அந்தப் பதிவைப் போலவே மிகவும் நகைச்சுவையானவை.
அவை அனைவராலும் ரசிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதால் இங்கு அதை அப்படியே வெளியிட்டு விட்டேன்.
அன்புடன் தங்கள்,
VGK
உங்கள் அறிமுகங்கள் எல்லாமே அருமை!
ReplyDeleteஇத்தனை பின்னூட்டங்கள் மலைக்க வைக்கிறது...! மிக்க நன்றி!
ReplyDeleteஎனக்கு இன்று தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னூட்டமே மலைக்கும் மிக அழகான உணர்வுப்பூர்வமான பகிர்வுகள்.உஷா அன்பரசு நல்ல நல்ல அறிமுகங்கள்..பகிர்வுகள் அருமை.
ReplyDelete