ப்ரீ பீரியடு
என்ன வகுப்பை காணோம் ...ன்னு பார்க்கிறீங்களா? நாளைக்கு ஆசிரியர் வந்துட போறாரு. இன்னிக்கு ஒரு நாளாவது உங்களை ப்ரீயா அரட்டை அடிக்க விட்டுடலாம்னுதான் வை.கோ ஐயா கிட்ட " ஐயா.. நாங்க இன்னிக்கு பூரா கதை பேசி சிரிச்சிட்டிருக்கோம் நீங்க சீனா ஐயா கிட்ட அடுத்த ஆசிரியர் யாருன்னு கேட்டுகிட்டு ஒரு அரை மணி நேரத்துக்கு பேசிகிட்டே அந்த பக்கமா கூட்டிகிட்டு போயிடுங்க. அதுக்குள்ள கதையெல்லாம் முடிஞ்சி நல்லா புள்ளையா அமைதியா பாடம் படிக்க ஆரம்பிச்சிடறோம்னு சொன்னேன். வை.கோ ஐயாவும் சரின்னு போனவர், அடுத்த பத்து செகண்டுல இரண்டு பேருமே திரும்பி வந்துட்டாங்க. சீனா ஐயா பெரிய மனசு பண்ணி " போங்க.. போங்க.. எப்படியோ இன்னிக்கு ஒரு நாள் விட்டுடறேன்.. புது வருஷம் வேற பொறக்க போகுது சந்தோஷமா கதை பேசிக்கங்க. நானும் இப்படி உட்கார்ந்து கேட்டுக்கிறேன். ஆனா உங்களை மாதிரியே எல்லாரும் நாளைக்கு இப்படி கேட்டுகிட்டு வரக்கூடாது. அதுக்கு இந்த ஸ்கூல் சட்டத்தில இடமில்ல... என்றார்.
அப்பாடா... ஒரு வழியா தலைமை ஆசிரியர் கண்டிஷனை தளர்த்திட்டார்.
சைலண்ட்ஸ்.... அதுக்குள்ள இப்படி சத்தம் போட்டா எப்படி? என்ன இன்னிக்கு வகுப்பு இப்படி நிரம்பி வழியுது? ஓ.. புரிஞ்சிடுச்சி... புரிஞ்சிடுச்சி... அப்பாடா இந்த புள்ள தொல்லை தீர்ந்துடுச்சின்னு வழியனுப்ப வந்த கூட்டம்தான்னு! எப்படியோ புது வருஷத்தில நீங்க சந்தோஷமாயிருக்கனும். இன்னும் ஒரு நாள்தான் இருக்கு நியூ இயர் பிறக்க அதனால சீரியஸா உங்களுக்கு பாடம் எதுவுமில்ல! உங்களை அழகு படுத்தி பார்க்கனும்னு,இன்னிக்கு மொத்தம் நகைக்கடைங்களுக்கும் அழைச்சிட்டு போறேன்..... எவ்வளவு வேணும்னாலும் நகை (எடுத்து)க்கலாம்...!
இவங்க எல்லாம் பெரிய 'நகை' கடைக்கு சொந்தக்காரங்க...இந்த மொத்த ' நகை' களையும் அணிந்து அழகா சிரிங்க! அழகா இருங்க!!
1) வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு வரம். பதிவுலகில் நகைச்சுவைக்கு ஒரு இலக்கணமா இருப்பவர் நம்ம வை.கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள்.
உனக்கே உனக்காக [நகைச்சுவைக் கவிதை]
”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” பகுதி-1 / 2
‘எலி’ஸபத் டவர்ஸ் [பகுதி 1 / 8]
வாய்விட்டுச்சிரித்தால்
அமுதைப்பொழியும் நிலவே !
சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]
இவை ஒரு சாம்பிளுக்குதான் வை.கோ சார் வலைப்பக்கம் போனிங்கன்னா தாராளமாய் சிரிக்க ஏராளமாய் கொட்டி கிடக்கு!
2)மின்னல் வரிகள் பால கணேஷ் என்று சொன்னாலே சரிதா நினைவுக்கு வந்திடுவாங்க. சரிதாவோட அவங்க பண்ற காமெடி இருக்கே விழுந்து விழுந்து சிரிக்கலாம். பார்த்துங்க அடி படாம சிரிங்க.
சரிதாவின் சங்கீதம்!
சரிதாவும், செம்மொழியும்
பொருட்காட்சியில் சரிதா!
3)சேட்டைக்காரன்
கொழுக்கட்டையும் செய்வாள் பத்தினி.
வீ.ஆர்.எஸ். வெங்கடசாமி
மாப்பிள்ளை வந்தார் ..... மாப்பிள்ளை வந்தார்
கடுக்கண் வருங்கால் நகுக
4) ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
கோவில் இல்லா ஊரில்
ஜட்ஜ்மெண்ட் டே
டேய் சீனாப்பயலே
5)அப்பாவி தங்கமணி
வரும் ஆனால் வராது
டிட் யூ மிஸ் மீ [த்ங்கமணி ரங்கமணி சீரியல்ஸ்]
தக்குடு கல்யாண வைபோவமே
6) கற்றலும் கேட்டலும் “ராஜி”
நான் என்ன சாதுவா ? சாதா தானா
உதயம் தியேட்டரும் தேவர் மகனும்
7) ஆச்சி ஆச்சி
கொன்று குவித்திடுவோம் [நகைச்சுவைக் கவிதை]
8)அருணா செல்வம் கதம்ப வலையில்
“சோ“வ்வைத் தெரியுமா...? (நகைச்சுவை நிகழ்வு)
9)தமிழா...தமிழா..
வாய் விட்டு சிரிங்க...
10) நிஜாமுதீன்
நகைச்சுவை; இரசித்தவை 13
எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)
இந்த ஒரு வாரம் உங்களோட வகுப்பில கலந்துகிட்டது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அனுபவம். என் அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். எனக்கு பள்ளி ஆசிரியரா ஆகறதை விட பத்திரிக்கை ஆசிரியரா விருப்பமா இருந்துச்சி..எத்தனையோ கனவுகளை சுமந்தாலும் வாழ்க்கையின் எல்லைக்குள் சில கனவுகளையும் சுருக்கி கொண்டுதான் வாழ முடிகிறது என்னை போல் சில பெண்களால்..! இருந்தாலும் வருத்தமில்லை. இந்த எல்லைக்குள்ளும் என் சின்ன கனவுகளையாவது வெளிப்படுத்தி எழுத்துலகில் எட்டி பார்த்துக்கொண்டிருக்கிறேன்! வெறும் லட்சியத்தை மட்டுமே வாழ்க்கையாக நினைக்காமல், வாழ்க்கையோடு லட்சியத்திற்கும் சிந்திப்பதும் இன்னும் அருமை!
பத்திரிக்கை ஆசிரியர் அளவிற்கு நான் வளரவில்லை என்றாலும் வலைச்சர பக்க ஆசிரியராகவாவது ஒரு வார காலத்திற்கு கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு! இன்னும் நிறைய நல்லா பண்ணியிருக்கனும்னுதான் என் உள் மனசு சொன்னது... இருந்தாலும் அலுவலகம், குடும்பம் இரண்டுக்குமிடையே சமாளித்து ஒரளவு ஆவது செய்ய முடிந்ததே என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பிரபல பதிவர்கள் எல்லாருக்குமே நல்லா தெரியும். ஆனா நல்லா எழுதர புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தனும்னுதான் சில பதிவுகளை தேடிப்பிடித்தேன். நிறைய பிரபல பதிவர்களும், நல்ல பதிவுகளும் விடுபட்டிருக்கலாம்.. நேரமில்லாத காரணத்தினால். அவர்களெல்லாம் தவறாக எண்ண வேண்டாம்.
இந்த வகுப்பை விட்டு கிளம்பறது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. நீங்க யாரும் என்னை மறக்க மாட்டிங்கன்னு நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் ! மிக்க நன்றி! அனைவர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
****************
வை.கோபால கிருஷ்ணன் ஐயா, அன்பின் சீனா ஐயா உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் , நன்றியும்!
***************
நேத்து ஒரு சர்ப்ரைஸ்னு சொன்னேன் அல்லவா அதுக்கு வர்றேன்!
ஒரு நாள் கூட லீவ் எடுக்காம தொடர்ந்து வகுப்புக்கு வந்து சிறப்பித்த இவங்களுக்கு
PUNCTUALITY AWARD
1) வை.கோபால கிருஷ்ணன்
2)பால கணேஷ்
3)லஷ்மி
4)ஆகாஷ்
*****************
பின்னூட்டத்தில் போட்டி போட்டுக்கொண்டு பேசிய இவர்களுக்கு
சிறந்த விமர்சகர் அவார்டு
1) வை.கோபால கிருஷ்ணன்
2) ஜெயந்தி ரமணி
*******************
ஸ்பெஷல் அவார்டு
முரளிதரன்
( வலை உலகுக்கு என்னை அறிமுகம் செய்தவர் என் வலைப்பூவை முதலில் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியவர்)
வை.கோ ஐயா, அன்பின் சீனா ஐயா! அவர்களுக்கு மீண்டும் மிகப்பெரிய நன்றி
விடை பெறுகிறேன்.....
எப்போதும் உங்கள் உள்ளங்களில்! சந்திப்போம்!!
எல்லாமே அற்புதம் ஆசிரியரும் என்னைபோன்ற மாணவர்களும் இந்த பகுதியில் நன்கு கற்றுவிட்டு சந்தோசமாய் இருக்கிறோம் நன்றி உஷா அன்பரசு அவர்களே
ReplyDeleteஅட சீனா சாரையும் அழைத்து வந்திட்டீங்களா? பலே!
ReplyDelete1]
ReplyDeleteஆஹா! இன்னிக்கு ஃப்ரீ பீரியடாமே !
அப்போ நமக்கெல்லாம் 'ஜாலிலோ ஜிம்கானா' தான்.
”ஹாப்பி இன்று முதல் ஹாப்பி” என்று பாடணும் போல உள்ளதே!!
யாராவது ஸ்வீட் வாய்ஸ் உள்ளவங்க தயவுசெய்து பாடுங்களேன்.
என் அன்பு மகள்
“கற்றலும் கேட்டலும்” ராஜிக்கு ஸ்வீட் வாய்ஸ் உண்டு தான்.
ஆனாக்க அவங்க இந்த வாரம் பூராவும் க்ளாஸுக்குக் கட் அடிச்சுட்டாங்க.
இருப்பினும், கிளாஸுக்கு முழுவதும் கட் அடித்துள்ள அவங்களையும் நம்ம டீச்சர் மறக்காமல், இந்த வாரத்திலேயே இரண்டு நாட்கள் அடையாளம் காட்டி சிறப்பிச்சுட்டாங்க.
[என் அன்பு மகள் என்று நான் சொல்லிவிட்டதால் இருக்குமோ? ;))))) ]
அதற்காக என் அன்பு மகள் ராஜி சார்பில் நான் டீச்சருக்கு இரட்டிப்பு நன்றி சொல்லிக்கிறேன். .
>>>>>>>>>
2]
ReplyDelete//வை.கோ ஐயாவும் சரின்னு போனவர், அடுத்த பத்து செகண்டுல இரண்டு பேருமே திரும்பி வந்துட்டாங்க. சீனா ஐயா பெரிய மனசு பண்ணி " போங்க.. போங்க.. எப்படியோ இன்னிக்கு ஒரு நாள் விட்டுடறேன்.. புது வருஷம் வேற பொறக்க போகுது சந்தோஷமா கதை பேசிக்கொள்ளுங்க. நானும் இப்படி உட்கார்ந்து கேட்டுக்கிறேன்” என்றார்.//
அன்பின் சீனா ஐயா போன்ற ஒரு பெரிய மனுஷ்யரைத் தனியே ஒதிக்கிக்கொண்டு போய் செட்-அப் செய்து ஒரேயடியாகக் கவிழ்க்க, பத்தே செகண்டு எனக்குப் போதும்ன்னு சொல்றீங்களா ..... டீச்சர்?
தப்பு ....... தப்பு, அவரு ரொம்ப நல்ல மனுஷ்யர். தங்கமானவர்.
அவ்வளவு சுலபமாக அவரை யாரும் செட்-அப் பண்ணவோ, கவிழ்க்கவோ, மஸியல் செய்யவோ ..... ஸாரி .... மனம் மஸியச்செய்யவோ முடியாதூஊஊஊஊஊஊ.
எப்படிச் சொல்றேன்ன்னு கேட்கிறீங்களா?
அவர் ஊர் அதுபோல!
இன்னிக்கு நம்ம தமிழ் நாட்டுப் பொண்ணுங்க எல்லாம் தாவணியே போடுவது இல்லை.
எல்லாம் ஒரே மிடி, சுடிதார், நைட்டி, ஜீன்ஸ் அது இதுன்னு போட ஆரம்பிச்சுட்டாங்க.
ஆனாலும் இன்றும் மாட்டுக்கே கூட தாவணி அணிவித்து மகிழ்கிற ஊரைச் சேர்ந்தவருங்க நம்ம தலைமை ஆசிரியர் அன்பின் சீனா ஐயா.
மதுரை மாட்டுத்தாவணி பற்றி உங்களுக்கெல்லாம் தெரியுமோ தெரியாதோ, எனக்கு நல்லாவே தெரியும்.
எனக்குத்தெரியும்ன்னு நான் சொன்னது இளம் பெண்கள் அணியும் தாவணியை அல்ல.
மாட்டுத்தாவணி என்ற மதுரை பஸ் ஸ்டாண்டை மட்டுமே.
[அய்யோ ... ஒரு வழியா சமாளிச்சுட்டேன். ;))))) ]
>>>>>>>>>>
அற்புதமான ஒரு வாரம் இவ்வளவு வரவேற்பை மிகச் சிலரே பெற்றிருப்பார்கள் கருதுகிறேன்.ஒரு நல்ல படைப்பாளியின் வலைப்பதிவை முதலில் தொடர்ந்தவன் என்ற வகையில் பெருமை அடைகிறேன்.
ReplyDeleteநிச்சயம் சிகரங்களை எட்டுவீர்கள் வாழ்த்துக்கள்.
3]
ReplyDelete//என்ன இன்னிக்கு வகுப்பு இப்படி நிரம்பி வழியுது? ஓ.. புரிஞ்சிடுச்சி... புரிஞ்சிடுச்சி... அப்பாடா இந்த புள்ள தொல்லை தீர்ந்துடுச்சின்னு வழியனுப்ப வந்த கூட்டம்தான்னு! //
எங்க டீச்சர் ரொம்ப புத்திசாலி. டக்குன்னு எல்லாவற்றையும் புரிச்சுக்கிறாங்க! ;)))))
இதைத்தான் கற்பூர புத்தின்னு சொல்லுவாங்க.
கற்பூரம் அருகில் தீக்குச்சியைக் கொண்டுபோனால் டக்குனு அது பத்திக்கும்.
அதனால் டக்குனு புரிஞ்சுக்கிறவங்களை கற்பூர புத்தி உள்ளவங்கன்னு சொல்றாங்க.
அதுபோலெல்லாம் எல்லோரும் எல்லாவற்றையும் புரிஞ்சுக்கிட்டா ரொம்ப கஷ்டமாகிடும்ன்னு தான், கோயிலில் கற்பூரம் உபயோகிக்கவே தடை போட்டிருப்பாங்களோ! ;))))).
>>>>>>>>>>.
4]
ReplyDelete//உங்களை அழகு படுத்தி பார்க்கனும்னு, இன்னிக்கு மொத்தம் நகைக்கடைங்களுக்கும் அழைச்சிட்டு போறேன்..... எவ்வளவு வேணும்னாலும் நகை (எடுத்து)க்கலாம்...! //
எனக்குப்புரிஞ்சி போயிடுத்து.
[கற்பூர புத்தி அல்லவா எனக்கும் .... அஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ;))))) ]
நகைக்கடைன்னு இவங்க சொல்ல வரது என்ன்வென்றால் புன்னகையை வரவழைக்கும் நகைச்சுவையைப்பற்றி மட்டுமே இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
எப்பூடீஈஈஈ என் கணிப்பு.? [எல்லோரும் ஜோராக் கைத்தட்டுங்கோ]
>>>>>>>>>
5]
ReplyDelete//எனக்கு பள்ளி ஆசிரியரா ஆகறதை விட பத்திரிக்கை ஆசிரியரா விருப்பமா இருந்துச்சி.//
நீங்கள் நினைத்தால் எதுவாக வேண்டுமானாலும் இப்போதும் ஆகலாம்.
உங்களுக்கு அதற்கான எல்லாத்திறமைகளும் ஒருங்கே உள்ளன.
தாங்கள் தற்போது மிடில் ஏஜ் க்ரூப்பில் மட்டுமே இருப்பதால், நிச்சயமாக ஒரு நாள், தாங்கள் விரும்பிய பத்திரிகை ஆசிரியர் ஆவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதுவும் அந்த வாய்ப்பு தங்களைத்தேடி தானாகவே வந்துசேரும்.
ஒருசில குறிப்பிட்ட பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள், போதும்.
அட்வான்ஸ் வாழ்த்துகள்.
>>>>>>>>>>
6]
ReplyDelete//எத்தனையோ கனவுகளை சுமந்தாலும் வாழ்க்கையின் எல்லைக்குள் சில கனவுகளையும் சுருக்கி கொண்டுதான் வாழ முடிகிறது என்னை போல் சில பெண்களால்..! //
ஆம், அப்படித்தான் உள்ளது இன்றைய பெண்களின் நிலை. நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களுக்கான பிரத்தேயகப் பிரச்சனைகள் ஏராளம் தான்.
அது நிச்சயமாக ஒருநாள் மாறும். மாறத்தான் வேண்டும்.
இதில் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
ஒருவருக்கொருவர் நல்லதொரு புரிதல் வேண்டியுள்ளது.
இதில் ஒவ்வொருவரின் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி அமைந்து விட்டால், மனதில் சுமக்கும் கனவுகளைச் சுருக்கிக்கொள்ளத்தான் நேரிடுகிறது.
>>>>>>>>>
7]
ReplyDelete//இருந்தாலும் வருத்தமில்லை. இந்த எல்லைக்குள்ளும் என் சின்ன கனவுகளையாவது வெளிப்படுத்தி எழுத்துலகில் எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறேன்! வெறும் லட்சியத்தை மட்டுமே வாழ்க்கையாக நினைக்காமல், வாழ்க்கையோடு லட்சியத்திற்கும் சிந்திப்பதும் இன்னும் அருமை! //
அது தான் தங்களின் தனிச்சிறப்பு என்கிறேன். ஸ்பெஷல் பாராட்டுக்கள். மேலும் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்.
>>>>>>>>
8]
ReplyDelete//பத்திரிக்கை ஆசிரியர் அளவிற்கு நான் வளரவில்லை என்றாலும் வலைச்சர பக்க ஆசிரியராகவாவது ஒரு வார காலத்திற்கு கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு! //
எங்களுக்கும் சந்தோஷமாகவே இருந்தது / இருக்கிறது.
// இன்னும் நிறைய நல்லா பண்ணியிருக்கனும்னுதான் என் உள் மனசு சொன்னது..//
அது உள் மனசாக ... அது உள்ளே இருப்பதால், அது அப்படித்தான் சொல்லும்.
வெளியே வந்து பார்த்தால் அதில் உள்ள கஷ்டங்கள் அதற்குத் தெரியும்.
>>>>>>>>>
9]
ReplyDelete//பிரபல பதிவர்களை எல்லாருக்குமே நல்லா தெரியும் ஆனா நல்லா எழுதும் புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தனும்னுதான் சில பதிவுகளை தேடிப்பிடித்தேன். நிறைய பிரபல பதிவர்களும், நல்ல பதிவுகளும் விடுபட்டிருக்கலாம்.. நேரமில்லாத காரணத்தினால். அவர்களெல்லாம் தவறாக எண்ண வேண்டாம். //
ஆமாம். சிறந்த பதிவர்களையும், சிறந்த பதிவுகளையும் ஓடிஓடித் தேடித்தேடி தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலை தான்.
இதில் உள்ள கஷ்டங்கள் சிரமங்கள் அனைவருக்குமே தெரியும்.
இதை எல்லோருமே உணர்ந்து ஒப்புக்கொள்வார்கள்.
தவறாக ஒருபோதும் நினைக்கவும் மாட்டார்கள்.
>>>>>>>>
10]
ReplyDelete//இந்த வகுப்பை விட்டு கிளம்பறது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. நீங்க யாரும் என்னை மறக்க மாட்டிங்கன்னு நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் !//
மனதுக்கு கஷ்டமாக இருக்கத்தான் செய்யும்.
தேவைப்படும் போது தாங்களே பின்னொருநாள் வலைச்சர ஆசிரியராக மீண்டும் அழைக்கப்படுவீர்கள், நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களால்.
அதனால் கவலை ஏதும் பட வேண்டாம்.
யாரும் உங்களை மறக்க மாட்டார்கள்.
உங்களின் வலைத்தளத்தினிலே வந்து சந்திப்பார்கள்.
அதனால் அந்த நம்பிக்கையோடு நீங்கள் நிம்மதியாக விடை பெற்றுச்செல்லலாம்.
>>>>>>>>
11]
ReplyDeleteஅருஞ்சுவை சாப்பாடு போலவே நகைச்சுவையை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
மனிதன் ஒருவனால் மட்டுமே சிரித்து வாழ முடியும். சிரிக்கவும் சிந்திக்கவும் முடியும்.
மற்ற விலங்குகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தச்சிரிப்பு என்பது.
அது மனிதனுக்கு மட்டுமே வரமாகக் கிடைக்கப்பட்டுளளது.
எனவே மனிதராகப்பிறந்த நாம், தினமும் சற்று நேரமாவது சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதனால் நம் மன அழுத்தம் குறைவதாக்ச் சொல்லுகிறார்கள்.
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் வாய் விட்டுச் சிரித்தல் மிக மிக அவசியமாகும்.
தினமும் ஒரு அரை மணி நேரமாவது, நகைச்சுவைக் காட்சிகளை கண்ணால் கண்டும், காதால் கேட்டும், வாயால் வாசித்தும் வாய் விட்டுச்சிரித்தல் வேண்டும்.
’வாய் விட்டுச்சிரித்தாலே நோய் விட்டுப்போகும்’ என்பார்கள்.
எங்கள் ஊரில் ”சிரிப்போர் சங்கம்” என்றே வைத்து சிறப்பாக அனைவரும் சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள் .......
ஐ மீன் நடத்துகிறார்கள்.
மாதம் ஒரு நாள் கூடுவார்கள். பல்வேறு நகைச்சுவைப் பேச்சாளர்கள் மேடை ஏறிப்பேசுவார்கள்.
அனைவரும் சிரித்து கைதட்டி மகிழ்வார்கள்.
தனக்குத்தானே சிரிப்பவனையும் , தனக்குத்தானே பேசுபவனையும் உலகம் வேறு மாதிரியாகப் பார்க்கும்..
அதனால் இதுபோல கூட்டமாகக்கூடி பேசியும் சிரித்தும் மகிழ்கிறார்கள்.
>>>>>>>>
12]
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள பதிவர்களில் கடைசி ஓரிருவர் தவிர மற்ற அனைவருமே எனக்கு மிகவும் பரிச்சயமானவர்களே.
பதிவுலகில் ’நம்பர் ஒன்’ நகைச்சுவை எழுத்தாளரான திரு வேணு சார் [சேட்டைக்காரன்] அவர்களுடன் மற்ற எங்கள் அனைவரையும் இன்று தாங்கள் இணைத்து வலைச்சரத்தினை தொடுத்டுள்ளது, எங்களுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாக உணர்கிறோம்.
அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>>>>>>
13]
ReplyDeleteஆஹா, பங்ச்சுவாலிடி அவார்ட் + சிறந்த விமர்சகர் அவார்ட் என ஏதேதோ புதுமையாக் அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
ஏற்கனவே ”பின்னூட்டப்புயல்” என்ற பட்டம் வேறு எனக்குத் தனியாக ஸ்பெஷலாகக் கொடுத்துள்ளீர்கள்.
இவ்வாறு பரிசுகளையும் பட்டங்களையும் அள்ளித்தந்துள்ள தங்க மனஸுக்காரராகிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிக்ள்.
>>>>>>>>
14]
ReplyDeleteஇன்று அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து நகைச்சுவைப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
>>>>>>>>
15]
ReplyDeleteஎன்னுடன் கூடவே இன்று சிறந்த விமர்சகர் அவார்ட் பெற்று, பயந்த சுபாவம் உள்ளவனான எனக்கு, ஓர் உற்ற துணையாக வந்துள்ள, என் அன்புக்குரிய திருமதி ஜயந்தி ரமணி அவர்களுக்கு என் அன்பான இனிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
>>>>>>>>>
16]
ReplyDeleteஎன்னுடன் கூடவே பங்க்சுவாலிடி அவார்ட் பெற்றுள்ள மற்ற மூவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
>>>>>>>>>>
17]
ReplyDelete//ஸ்பெஷல் அவார்டு
முரளிதரன்
( வலை உலகுக்கு என்னை அறிமுகம் செய்தவர் என் வலைப்பூவை முதலில் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியவர்)//
ஸ்பெஷல் அவார்டு பெற்றுள்ள திரு முரளிதரன் அவர்களுக்கு என் அன்பான ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
>>>>>>>>
ஆஹா எனக்கும் பங்க்சுவாலிட்டி அவார்டா. வெரிகுட் வெரிகுட்
ReplyDelete18]
ReplyDeleteபல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே என் மீதுள்ள அன்பினால் மட்டுமே, இந்த வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்க முன்வந்து, ஒரு சவாலாக அதனை ஏற்று, ஓரளவு மிகச் சிறப்பாகவே செய்து முடித்துக்கொடுத்துள்ள திருமதி உஷா அன்பரசு டீச்சர் அவர்களுக்கு, என் ஸ்பெஷல் நன்றிகள்.
நம் அன்பும், நட்பும் இதுபோலவே நம் வலைத்தளங்களில் பின்னூட்டம் மூலம் தொடரட்டும்.
2013 புத்தாண்டுக்கு அன்பான நல்வாழ்த்துகள் கூறி, தங்களுக்கு [என் ஆனந்தக்கண்ணீருடன்] பிரியாவிடை கொடுக்கிறேன்.
BYE FOR NOW!
பிரியமுள்ள
VGK
-oOo-
>>>>>>>>
19]
ReplyDeleteதற்சமயம் நேரிடையாகப் பின்னூட்டக்கருத்துக்கள் ஏதும் கொடுக்க முடியாத நிலையில் உள்ள திருமதி ஆச்சி மேடம் அவர்கள் சார்பில் வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு என் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.
இந்த ஒரே வாரத்தில் இருமுறைகள் திருமதி ஆச்சி மேடம் அவர்களை, வலைச்சரத்தில் அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது அவர்களுக்கு மிகவும் மன மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்துள்ளது, எனறு என்னிடம் அலைபேசியில் கூறி மகிழ்ந்தார்கள். .
>>>>>>>>>
20]
ReplyDeleteதற்சமயம் நேரிடையாகப் பின்னூட்டக்கருத்துக்கள் ஏதும் கொடுக்க முடியாத நிலையில் உள்ள, என் அன்பு மகள் திருமதி ராஜி மேடம் [கற்றலும் கேட்டலும்] அவர்கள் சார்பில், வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு அன்பு கலந்த நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.
இந்த ஒரே வாரத்தில் இருமுறைகள் திருமதி ராஜி மேடம்
[கற்றலும் கேட்டலும்] அவர்களை, வலைச்சரத்தில் அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது அவர்களுக்கு மிகவும் மன மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது, எனறு என்னிடம் SMS செய்தி மூலம் கூறி மகிழ்ந்தார்கள்.
>>>>>>>>>
21]
ReplyDeleteஅனைத்துப் பதிவர்களுக்கும், என்னுடைய நெருங்கிய தோழர்களுக்கும்,
தோழிகளுக்கும்
என் மனமார்ந்த இனிய அன்புடன் கலந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
WISHING YOU ALL
”A VERY VERY VERY HAPPY
NEW YEAR - 2013”
பிரியமுள்ள
VGK
oooooooooooooo
விடுமுறையை சிரித்து, மகிழ்ந்து, சுகமாய் அனுபவித்து பொழுதை பயனுற போக்கிட, வலைச்சர ஆசிரியராய் இறுதி நாளில் நகைச்சுவையை தேர்ந்தெடுத்தது சிறப்பு டீச்சர்.
ReplyDelete//அனைத்து நகைச்சுவை பதிவர்களுக்கும்//
ReplyDeleteவை.கோ. சார் அவர்கள் என்னையும் நகைச்சுவை பதிவர் என்று குறிப்பிட்டது மகிழ்ச்சியாய் உள்ளது. தங்கள் பாராட்டுக்களுக்கும் நன்றி சார். (3)
;)))))
ReplyDeleteசுபம்
;)))))
வை.கோ. சார் சொன்னதுபோல், நான் நகைச்சுவை பதிவர்தான்.
ReplyDeleteஎனது 108 பதிவுகளில் 38 நகைச்சுவைகளும் 'குண்டப்பா மண்டப்பா' என்று 8 பதிவுகளும் ஆக 44 பதிவுகள் நகைச்சுவை பதிவுகள்தான். வை.கோ. சாரும் மற்ற பதிவர்களும் வந்து படித்து, கூற வேண்டுகிறேன் கருத்து. (?!) (4)
வை.கோ. சார் நகைச்சுவையின் உச்சம். நானோ நகைச்சுவையின்
ReplyDeleteமிச்சம், சொச்சம், எச்சம். அவருடன் நானும் அறிமுகம் என்பது என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழை(டி)த்துச் சென்று விட்டது. திரும்பவே பெரும் தொல்லையாகி விட்டது. (5)
உஷா அன்பரசு அவர்கள் மீண்டும் எப்போது வலைச்சர ஆசிரியர் ஆவார் என ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
ReplyDelete(6)
உஷா அன்பரசு அவர்கள் மீண்டும் எப்போது வலைச்சர ஆசிரியர் ஆவார் என ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
ReplyDelete(6)
கண்டிஷனை தளர்த்திட்ட தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteசிறப்பாகப் பணி புரிந்து மன நிறைவுடன் இன்று விடை பெறும் உஷா அன்பரசு அவர்களுக்கு பாராட்டுக்கள். (7)
ReplyDeleteஉங்களை அழகு படுத்தி பார்க்கனும்னு, இன்னிக்கு மொத்தம் நகைக்கடைங்களுக்கும் அழைச்சிட்டு போறேன்..... எவ்வளவு வேணும்னாலும் நகை (எடுத்து)க்கலாம்...!/
ReplyDeleteநகைகளை எடுத்துக்காட்டி நகைக்கச்செய்தமைக்கு இனிய பாராட்டுக்கள்..
மனம் நிறைந்த இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்...
இதுக்குதான் நான் நேற்றே சொன்னேன் இன்னும் ஒரு வாரம் படம் நடத்துங்கன்னு, இப்பா பாருங்க மனசு கஷ்டத்தோட வெளியில போறீங்க...
ReplyDeleteஉண்மையிலையே நீங்க வகுப்பு ஆசிரியரா இருக்க வேண்டியவங்க, மாணவர்களை கஷ்ட படுத்தாம புரிந்துக்கொண்டு அருமையாக பாடம் நடத்தி வந்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி.
நல்ல பக்குவம் இருக்கிறது. உங்களைப்போல நல்ல ஆசிரியர்களை தமிழகம் இழந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
எனக்கும் அவார்டு கொடுத்ததற்கு மிக்க நன்றி. நிறைய தெரிந்துகொண்டேன்.
நிறைய படைப்பாளிகளையும் புரிந்துக்கொண்டேன்.
மிக்க நன்றி.
போய்ட்டு வாங்க..மீண்டும் சந்திப்போம்.
மேடம்,இதையும் படிச்சிட்டு போங்களேன்
ReplyDeletehttp://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html
இன்னிக்கு வகுப்புக்கு தாமதமா வர வேண்டிய சூழ்நிலை. இருந்தாலும்கூட எனக்கு இங்க பங்ச்சுவாலிட்டி அவார்ட் டீச்சர் தந்திருக்கறதைப் பாக்கறப்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. என் உளம் நிறைந்த நன்றிங்க! சேட்டைக்காரன் (எ) வேணு அவர்கள் நகைச்சுவை எழுத்தில் எனக்கு முன்மாதிரி. நான் வலையில் எழுதுவதற்கு உந்துசக்தியாய் இருந்தவர்/இருப்பவர் அவரே. அவருடனும் வைகோ ஸார் போன்ற சீனியர்களுடனும் என் ‘நகை’களும் இடம் பெற்றதை பெருமையாகவும் மகிழ்வாகவும் உணர்கிறேன். அதற்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி!
ReplyDeleteஇந்த ஒரு வாரம் சீக்கிரமா போய்டுச்சே, இந்த டீச்சர் மறுபடி வரணுமேன்னு நிறையப் பேர் கேக்கறதைப் பாக்கறப்ப சந்தோஷமா இருக்கு. (அவங்கள்ல நானும் ஒருத்தன்கறதால). அருமையாக ஆசிரியப் பணியை நிறைவேற்றிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள் மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமகிழ்வுடன் கூடிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஅதென்ன இப்படிச் சொல்லிட்டீங்க டீச்சர்...! அருமையான எழுத்துத் திறன் படைத்த உங்களுக்கு பத்திரிகை ஆசிரியர் பணிங்கறது எட்டாக்கனி அல்ல. சீக்கிரமே நீங்கள் எட்டிப் பறிக்கப் போகிற கனிதான். (சுமாரான நானே ஒரு பத்திரிகைக்கு உதவி ஆசிரியரா இருந்துட்டேன்). வரும் ஆண்டில் அந்தவிருப்பம் நிறைவேற என் நல்வாழ்த்துகள் உங்களுக்கு!
ReplyDeleteத.ம. 2
ReplyDelete//NIZAMUDEEN said...
ReplyDeleteஅட சீனா சாரையும் அழைத்து வந்திட்டீங்களா? பலே!//
என்னைக் கதை கேட்டு ஜாலியாக வகுப்பறையில் இருக்க விடாமல், சீனா ஐயாவுடன் என்னைக் கோர்த்து விட்டு, அவரை எங்காவது தனியே அழைத்துக் கொண்டு தூரச்செல்லுடா கோபாலகிருஷ்ணா என, நம் டீச்சர் துரத்தி விட்டுடாங்கோ.
எனக்கு ஒரே அழுகையா வந்திடுச்சு.
பிறகு நான் தான் சீனா ஐயாவை 10 நொடிகளில் நம் வகுப்பறைக்கு அழைத்து வந்தேனாக்கும்.
நீங்க “பலே” சொல்வதானல் எனக்குத்தான் சொல்லணும். ;)
NIZAMUDEEN said...
ReplyDelete//அனைத்து நகைச்சுவை பதிவர்களுக்கும்//
வை.கோ. சார் அவர்கள் என்னையும் நகைச்சுவை பதிவர் என்று குறிப்பிட்டது மகிழ்ச்சியாய் உள்ளது. தங்கள் பாராட்டுக்களுக்கும் நன்றி சார். (3)//
தங்கள் நன்றிக்கு என் நன்றிகள், நண்பரே!
//NIZAMUDEEN said...
ReplyDeleteவை.கோ. சார் சொன்னதுபோல்,
நான் நகைச்சுவை பதிவர்தான்.
எனது 108 பதிவுகளில் 38 நகைச்சுவைகளும் 'குண்டப்பா மண்டப்பா' என்று 8 பதிவுகளும் ஆக 44 பதிவுகள் நகைச்சுவை பதிவுகள்தான்.
வை.கோ. சாரும் மற்ற பதிவர்களும் வந்து படித்து, கூற வேண்டுகிறேன் கருத்து. (?!) (4)//
பாராட்டுக்கள் நண்பரே ! ;)))))
38 + 8 = 46 என்பதே சரி
38 + 8 = 44 என்பது தவறு
நகைச்சுவையில் சிறந்த நீங்கள் கணக்கில் வீக்கோ? ;)))))
”அவன் போட்ட கணக்கு” என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன். படியுங்கோ:
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html
// NIZAMUDEEN said...
ReplyDeleteவை.கோ. சார் நகைச்சுவையின் உச்சம்.
நானோ நகைச்சுவையின்
மிச்சம், சொச்சம், எச்சம். //
உச்சம், மிச்சம், சொச்சம், எச்சம் என்ற அடுக்குத் தொடர் வார்த்தைகளிலேயே தங்களின் நகைச்சுவையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
//அவருடன் நானும் அறிமுகம் என்பது என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழை(டி)த்துச் சென்று விட்டது. //
அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் ஒரு சாதாரணமானவன் தான்.
//திரும்பவே பெரும் தொல்லையாகி விட்டது. (5)//
அடடா, அது கிடக்கட்டும்.
நம் டீச்சர் அம்மா எங்கே?
காலையிலே எங்கோ வகுப்பறையை விட்டு, பாத் ரூம் பக்கம் போனாங்கோ.
மணி மூணு ஆச்சு, ஆளையே காணோமே?
ஒரே கவலையா இருக்கூதூஊஊஊஊஊஊ எனக்கூஊஊஊஊஊஊஊ ;)))))
//பால கணேஷ் said...
ReplyDeleteசேட்டைக்காரன் (எ) வேணு அவர்கள் நகைச்சுவை எழுத்தில் எனக்கு முன்மாதிரி.
நான் வலையில் எழுதுவதற்கு உந்துசக்தியாய் இருந்தவர்/இருப்பவர் அவரே.
அவருடனும் வைகோ ஸார் போன்ற சீனியர்களுடனும் என் ‘நகை’களும் இடம் பெற்றதை பெருமையாகவும் மகிழ்வாகவும் உணர்கிறேன். //
அடடா, நீங்க வேறு சார்.
சேட்டை ... சேட்டை தான் சார்.
அவர் மிகப்பெரிய நகைச்சுவை மலை சார்.
அவருக்கு முன் நானெல்லாம் சும்மா சார்.
ஆனாலும் அவரே பலமுறை என் பதிவுகளுக்கு வருகை தந்து என் நகைச்சுவைகளை, தன்னுடைய நிறைய பின்னூட்டங்கள் மூலம் பாராட்டியுள்ளதை என் பாக்யமாகக் கருதி மகிழ்கிறேன்.
உதாரணமாக இதோ சில இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2011/03/4.html [5 முறை]
http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html [7 முறை]
http://gopu1949.blogspot.in/2011/03/6.html [4 முறை]
http://gopu1949.blogspot.in/2011/03/7.html [8 முறை]
http://gopu1949.blogspot.in/2011/03/8.html [9 முறை]
இந்த என் ஒரே கதைக்கு மட்டும் 39 முறைகள் நம் சேட்டைக்காரன் அவர்கள் வருகை தந்து பாராட்டியுள்ளார்.
நான் அவரின் பின்னூட்டத்திற்கு இறுதியாக எழுதியிருந்த பதிலில் ஒன்று இதோ:
********
வை.கோபாலகிருஷ்ணன்March
26, 2011 1:56 AM
திரு. சேட்டைக்காரன் அவர்களே
இந்த நகைச்சுவைத்தொடரின் பகுதி-1 ஆரம்பம் முதல் பகுதி-8 கடைசிவரை, தினமும் பலமுறை வந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் இந்தத்தொடருக்கு மட்டும் மொத்தம் 39 முறைகள் பின்னூட்டம் அளிக்க வந்து அனைத்து எதிர்கட்சியினரையும் விட முன்னனியில் இருக்கிறீர்கள்.
அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் vgk
********
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே, சார்.
அன்புடன்
VGK
அடடா வெளியூர் சென்றதால் தங்கள் பதிவுகளை பார்க்க முடியவில்லை தென்றலின் அறிமுகம் கண்டேன் நன்றிங்க. முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.
ReplyDeleteசிறந்த பதிவர்களின் சிறந்த நகைச்சுவை பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! ஏழுநாட்கள் போனதே தெரியவில்லை! அருமையான வாரமாக அமைந்தது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉஷா அன்பரசு
இன்று வலைச்சரப்பணியின் இறுதி நாள் 7(ஏழு)நாட்களும் சிறப்பாக பலவகைப்பட்ட வலைத்தளங்களை அறிமுகம் செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
இன்று அறிமுகமான அனைத்தும் அருமை
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@ வை.கோ. சார்!
ReplyDeleteஎனது தவறினை ஒத்துக் கொள்கிறேன். இப்ப சரியா, பாருங்கள் : நகைச்சுவை 36 + குண்டப்பா மண்டப்பா 8 =44 .
எனது பதிவுகளில் தங்கள் விமரிசனங்களை எதிர்பார்க்கிறேன்.
(9)
@ வை.கோ. சார்!
ReplyDeleteதங்களின் கூற்றுப்படியே... தங்களுக்கு 'பலே'!
(10)
This comment has been removed by the author.
ReplyDelete//NIZAMUDEEN said...
ReplyDelete@ வை.கோ. சார்!
எனது தவறினை ஒத்துக் கொள்கிறேன். இப்ப சரியா, பாருங்கள் : நகைச்சுவை 36 + குண்டப்பா மண்டப்பா 8 =44 .//
கரெக்டூஊஊ, கரெக்டூஊஊ
நான் வாயால ஒரு முறை கூட்டிப்பார்த்துட்டேன்.
பிறகு விரல் விட்டு ஒரு முறை கூட்டிப்பார்த்துட்டேன்.
பிறகு கால்குலேட்டரில் ஒரு முறை கூட்டிப்பார்த்துட்டேன்.
ஒரு 44 பேர்களிடமும் சரிதானா விடை, என்று கேட்டுட்டேன்.
எல்லோருமே 44 என்று தான் சொல்லுகிறார்கள்.
சரி அவர்களெல்லாம் கிடக்கிறார்கள்,
நம் உஷா டீச்சர் வரட்டும்
கேட்கலாம் என்று
காத்திருந்தேன் .. காத்திருந்தேன் ...... காலமெல்லாம் ..... காத்திருந்தேன்....
அவங்களைக்காணவில்லை.
கண்ணே எனக்குப் பூத்துப்போச்சு.
இன்னும் அரை மணியில் அவங்க வராட்டி நான் போலீஸில் புகார் கொடுத்துட்டு நேராக வேலூருக்கே பொடி நடையாப் போய்ப் பார்த்துவிட்டு வருவதாக நேர்த்திக்கடன் செய்துள்ளேன்
[வேண்டிக்கொண்டுள்ளேன்.]
//எனது பதிவுகளில் தங்கள் விமரிசனங்களை எதிர்பார்க்கிறேன்.
(9)//
எதிர்பாருங்கோ
எதிர்பாருங்கோ
ஆனால் கடைசியில்
ஏமாறாதீங்கோ.
முயற்சிக்கிறேன் நண்பரே !
>>>>>>>>
//NIZAMUDEEN said...
ReplyDelete@ வை.கோ. சார்!
தங்களின் கூற்றுப்படியே... தங்களுக்கு 'பலே'! (10)//
நன்றி!
நீங்களும் ‘பலே’ ஆளு தான்.
அப்படியும் இப்படியுமாக ஒரு பத்துப் பின்னூட்டம் கொடுத்து அசத்திட்டீங்கோ.
டீச்சர் நல்லபடியா வரட்டும்.
அவங்களிடம் சொல்லி ஒரு துண்டு சாக்பீஸ், உங்களுக்கு பரிசாக வாங்கித்தரேன்.
அது உங்களுக்கு மட்டுமே தான்.
வேறு யாரிடமும் சொல்லிடாதீங்க.
பரம இரகசியமா வெச்சுக்குங்க !!
மணி ராத்திரி 7.40 ஆச்சு. இன்னும் இந்த டீச்சரையே காணுமேன்னு நானே ஒரே கவலையா இருக்கேன்.
நீங்க என்னிடம் வந்து ‘பலே’ சொல்லுறீங்க.
போலீஸில் நான் புகார் கொடுக்கும் போது, அவங்க, நீங்க யாரைச் சந்தேகப்படறீங்க கேட்டாங்கன்னா, உங்கள் பெயரைத்தான் நான் சொல்லப்போகிறேன்.
”ஒரு துண்டு சாக்பீஸ் வேண்டி டீச்சர் கடத்தல் - மாணவர் நிஜாமுதீனைத் தேடி போலீஸ் வலைவீச்சு”
என்று தான் நாளை காலை கொட்டை எழுத்துக்களில் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியே வந்தாலும் வரலாம்.
எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கோ.
அதனால் நீங்க தப்பிக்க ஒரே வழி:
சீக்கரமா டீச்சரைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டியாங்க, ப்ளீஸ்.
எனக்கும் கூட டீச்சரைக் காணலியேன்னு ரொம்பக் கவலையாத்தான் இருக்கு வை.கோ. ஸார்...!
ReplyDelete//பால கணேஷ் said...
ReplyDeleteஎனக்கும் கூட டீச்சரைக் காணலியேன்னு ரொம்பக் கவலையாத்தான் இருக்கு வை.கோ. ஸார்...!//
நீங்கக் கவலைப்படாதீங்கோ பால கணேஷ் சார்.
டீச்சர் எப்படியும் வந்திடுவாங்கோன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
இன்று முழுவதும் ஏராளமான வேலைகள் Tight Programmes இருக்குன்னு நேற்றைக்கே எனக்கு மெயில் மூலம் சொன்னாங்கோ.
அதனால் தான் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
எப்படியும் ஒரு 4 மணிக்குள் வந்துடுவாங்கோன்னு நினைச்சேன். ஆனால் மணி 8 ஆச்சு. அது தான் கவலையா இருக்கு.
ஸ்கூல் பெல்லை அடிச்சிட்டு நாமெல்லாம் வீட்டிக்குப்போய் சாப்பிட்டுத் தூங்க வேண்டியது தான் போலிருக்கு.
கடைசி நாள் ஆனதினாலே இந்த டீச்சரின் போக்கே சரியில்லை.
பார்ப்போம் .... நான் பொடிநடையா வேலூர் புறப்படத்தயார் நிலையில் இருக்கிறேன். இதுவரை வேலூரே போனதில்லை. அங்கு எப்படிப் போய் இவங்களை எங்கு தேடுவேனோ ...
ஒன்னுமே புரியலே.....
உலகத்திலே ..........
என்னவோ நடக்குது ...ன்னு
பாட்டுப்பாட வேண்டும் பொலிருக்கு.
வை.கோ சார், பால கணேஷ் சார் என்ன இது... என்ன இது.. இப்படி டி.வி. பேப்பர் எல்லாம் விளம்பரம் கொடுத்திட்டிங்க என்னை காணவில்லை என்று... நான் கொஞ்சம் வெளியில் வேலையா போய்விட்டேன். பேப்பர்ல, டி,வியில் விளம்பரத்தை பார்த்தவங்க என்னை பிடிச்சி இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க... ஸாரி...ஸாரி உங்க கிட்ட சொல்லாம் போனதுக்கு சாரி. நாந்தான் வந்துட்டேன்ல இப்ப கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க...!
ReplyDelete//ஒரு துண்டு சாக்பீஸ் வேண்டி டீச்சர் கடத்தல் - மாணவர் நிஜாமுதீனைத் தேடி போலீஸ் வலைவீச்சு”
ReplyDeleteஎன்று தான் நாளை காலை கொட்டை எழுத்துக்களில் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியே வந்தாலும் வரலாம்.
எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கோ.
அதனால் நீங்க தப்பிக்க ஒரே வழி:
சீக்கரமா டீச்சரைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டியாங்க, ப்ளீஸ்.//
- வை.கோ சார் நீங்க கிளப்பி விட்டதில பயந்து அவரும் கோட்டை முழுக்க தேடினாராம்.
பேரன்களுக்கு பள்ளி விடுமுறை அதனால் உங்கள் வகுப்புகளுக்கு தவறாமல் வரமுடியவில்லை உஷா டீச்சர்!மன்னிக்கவும்.
ReplyDeletePUNCTUALITY AWARD, சிறந்த விமர்சகர் விருது + அதிகப் பின்னூட்டம் போட்டவர் (என்னுடையதையும் சேர்த்துப் போட்டு)விருதும் திரு வைகோ வுக்கு!
ஒரு வாரம் எல்லோரையும் மிகச் சிறப்பாக கவர்ந்து விட்டீர்கள், உங்களது எழுத்து நடையால்.
பாராட்டுக்கள் உஷா டீச்சர்!
வாருங்கள் ஜோதிஜி!
// கடைசி நாள் ஆனதினாலே இந்த டீச்சரின் போக்கே சரியில்லை.
ReplyDelete// வை.கோ சார் நான் கையை நீட்டுகிறேன்.. ஸ்கேல் எடுத்து அடிச்சிடுங்க... ம்.. ம்..!
இத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது
ReplyDeleteநன்றி! நன்றீ!!!
//இன்று வலைச்சரப்பணியின் இறுதி நாள் 7(ஏழு)நாட்களும் சிறப்பாக பலவகைப்பட்ட வலைத்தளங்களை அறிமுகம் செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைத்தும் அருமை
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
ரொம்ப நன்றி தொடர்ந்து வருகை புரிந்ததற்கு!
முரளிதரன் சார் உங்க வாழ்த்திற்கு மிக்க நன்றி! உங்க வலைப்பக்கத்தை படித்துவிட்டுதான் நான் இன்னமும் நிறைய எழுத ஆரம்பித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி! மிக்க நன்றி!
ReplyDeleteஉஷா அவங்களுக்கு என் வாழ்த்துக்கள். நான் அடிக்கடி இந்த பக்கம் வருவது உண்டு ஆனால் இப்ப கொஞ்சம் நாட்களாக வர இயலவில்லை. நான் 7 நாட்களும் இதில் பங்கு பெற முடியல்லை டிச்சர். ஆனல் அவசியம் நான் எல்லாம் படிக்கிறேன். நல்ல நகைசுவையோடு நிறய்ய பதிவுகள் போட்டிருக்கும் நம்ம வை.கோ அவர்களுக்கு நன்றி. உஷா அவங்களுக்கும் நன்றி நல்லா எழுதி விட்டிருக்கிங்க.`
ReplyDelete"நான் ஒரு நகைச்சுவை எளுத்தாளனா ? போங்க டீச்சர் ...வெக்க வெக்கமாய் இருக்கு !!"
ReplyDeleteமிக்க நன்றியுடன்
ஆர்.ஆர்.ஆர்.
இந்த வார ஆசிரியப் பணியை வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் செய்து முடித்த உஷா அன்பரசுக்கு வாழ்த்துக்கள். இந்த வாரம் வேறு பணி காரணமாக பள்ளிக்கு (வலைச்சரத்திற்கு) நிறைய விடுப்பு போட்டுவிட்டேன் . டீச்சர் என்னை மன்னிச்சுடுங்க . இந்த வாரம் உங்க பாடத்தையெல்லாம் படிச்சுடறேன். இந்த வாரம் ஆசிரியப் பணி ஏற்கும் ஜோதிஜி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteVijiskitchencreations said...
ReplyDelete//உஷா அவங்களுக்கு என் வாழ்த்துக்கள். நான் அடிக்கடி இந்த பக்கம் வருவது உண்டு ஆனால் இப்ப கொஞ்சம் நாட்களாக வர இயலவில்லை.//
வாங்கோ திருமதி விஜி மேடம். நல்லா இருக்கீங்களா? தங்களின் முயலாமை + இயலாமையைப் புரிந்துகொண்டோம். வருகைக்கு நன்றிகள்.
//நான் 7 நாட்களும் இதில் பங்கு பெற முடியல்லை டிச்சர். ஆனால் அவசியம் நான் எல்லாம் படிக்கிறேன்.//
படியுங்கோ படியுங்கோ. ஆங்காங்கே ஏதாவது கொஞ்சம் கருத்துக்களையும் அள்ளித்தெளியுங்கோ.
//நல்ல நகைச்சுவையோடு நிறைய பதிவுகள் போட்டிருக்கும் நம்ம வை.கோ அவர்களுக்கு நன்றி. உஷா அவங்களுக்கும் நன்றி. நல்லா எழுதி விட்டிருக்கீங்க.//
உங்களுக்கும் எங்கள் நன்றிகள்
அன்புடன்,
VGK &
உஷா அன்பரசு.`
ஆரண்ய நிவாஸ் ரொம்ப அழகா வெட்க படறிங்க.. !
ReplyDeleteஎழில், நீங்க பள்ளிக்கு விடுப்பு போட்டு டீச்சரை கவனிக்கலைன்னாலும் பரவாயில்லை.. வகுப்பில் வை.கோ சாரின் அட்டகாசத்தை மட்டுமாவது கேட்டு விட்டு போங்க.. !
ReplyDeleteஎன் வகுப்பிற்கு இத்தனை வரவேற்பு கொடுத்த உங்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஎனது இரு பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் .வண்டி வண்டியாக பின்னுட்ட தகவல்களை அள்ளி வழங்கியிருக்கும் கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு ராஜி அவர்களுடன் இணைந்து நன்றிகளை தெரிவிக்கின்றோம்.(பின்னூட்ட மாமணி வாழ்க !!!!!!!! இது பின்னணி கோஷம் )
ReplyDeleteஜெயந்தி ரமணி அவர்களுக்கும் நன்றிகள்.
thirumathi bs sridharsaid...
ReplyDeleteவாங்கோ, வாங்கோ! ஆச்சி மேடம்.
வணக்கம்.
செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?
//எனது இரு பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் .//
த்ங்களின் இரு பதிவுகள் மட்டுமல்ல. தாங்களும் நம் அன்புக்குரிய திருமதி ராஜி [கற்றலும் கேட்டலும்] மேடமும், இந்த் ஒரே வாரத்தில் இரண்டு நாட்கள், வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளீர்கள். அதை கவனித்தீர்களா?
அம்ருதா குட்டியையும், யக்சிதாஸ்ரீ குட்டியூண்டையும் கவனிக்கவே உங்களுக்கு நேரம் போதாது. இதை எங்கே கவனித்திருக்கப்போகிறீர்கள். ! ;)))))
//வண்டி வண்டியாக பின்னுட்ட தகவல்களை அள்ளி வழங்கியிருக்கும் கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு ராஜி அவர்களுடன் இணைந்து நன்றிகளை தெரிவிக்கின்றோம்.//
ஆஹா, மிகப்பெரிய ரயில் வண்டி, நெடும் தூரம் ஒருவாரமாகப் பயணம் செய்த வண்டி, தான் போய்ச்சேர்ந்து நிற்கவேண்டிய கடைசி ஸ்டேஷனுக்கு சற்று முன்பாவது, ஓடிவந்து கடைசிபெட்டியில் தொத்திக்கொண்டு, கருத்துச்சொல்லியுள்ளதற்கு, உங்களுக்கும் அவங்களுக்கும் என் நன்றிகள்.
//(பின்னூட்ட மாமணி வாழ்க !!!!!!!! இது பின்னணி கோஷம் )//
அப்படியா? இந்தப்பின்னணி கோஷம் என் காதில் மட்டும் விழவில்லையே!
இத்தனைக்கும் நான் செவிடு அல்ல.
எனக்கு பாம்புச்செவி என்பார்கள், எங்கள் வீட்டில். காரியச்செவிடு என்றும் கிண்டல் அடிப்பார்கள்.
காரியச்செவிடு என்றால், தனக்கு ஆதாயமாக உள்ள விஷயங்களை மட்டும் காதில் வாங்கிக்கொள்வது. ஆதாயமில்லாத ஆர்வமில்லாத அனாவஸ்ய விஷயங்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் செவிடு போல இருந்து விடுவது.
//ஜெயந்தி ரமணி அவர்களுக்கும் நன்றிகள்.//
இந்த திருமதி ஜெயந்தி ரமணி அவர்களும் உங்களைப்போலவும், நம் திருமதி ராஜியைப்போலவும், திருமதி உஷா அன்பரசு போலவும் எப்போதும் ஒரே பிஸியாக உள்ளவர்கள். ஆனால் ரொம்ப ரொம்ப நல்லவர்கள் + வல்லவர்கள்.
குடும்பம், உத்யோகம், எழுத்துலகம் போன்ற பல வேலைகள். இருப்பினும் அவ்வப்போது என் தொடர்பு எல்லைக்குள் இருப்பவர்கள் தான்.
தங்கள் நன்றிகளை அவர்களிடம் நான் நிச்சயமாகச் சேர்த்து விடுகிறேன்.
பிரியமுள்ள
கோபு
Thanks a lot for mentioning about my posts. Happy New year to everyone
ReplyDelete