Sunday, December 9, 2012

சென்று வருக சுசீலா - வருக ! வருக ! ஹாஜா மைதீன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி சுசீலா அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும், கடும் உழைப்புடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 7
பெற்ற மறுமொழிகள் : 128
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 79
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 58 ( சுய அறிமுகம் உள்ளிட்ட பதிவுகள் ) 

இவர் பல பதிவர்களை அவர்களின் தளத்திற்கே சுட்டி கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர்களீன் அனைத்துப் பதிவுகளுமே சிறந்த பதிவுகளாக இருந்தமையால் எந்தப் பதிவினையும் குறிப்பிட்டு அறிமுகப் படுத்த வில்லை. அதனால் தான் பதிவர்கள் எண்னிக்கை அதிகமாகவும் பதிவுகள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. 

சகோதரி சுசீலா அவர்களை சென்று வருக ! என வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் NKS ஹாஜா மைதீன்.   

இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தை சேர்ந்தவர். அதிரடி ஹாஜா எனும் பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக பதிவு எழுதி வரும் இவர் இதுவரை 332 பதிவுகள் எழுதி இருக்கிறார்..பெரும்பாலும் அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட பதிவுகளையே எழுதி வருகிறார். இவரது ஊரில் மினரல் வாட்டர் தொழிலை நடத்தி வரும் இவர்  தற்போது மலேசியாவில்  ஹோட்டல் தொழில் செய்து வருகிறார்..நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவு எழுதுவதை இவரது பொழுது போக்காக  மட்டுமல்லாமல் இவர்து உணர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுத்தி வருகிறார்....

நண்பர் ஹாஜா மைதீனை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சுசீலா

நல்வாழ்த்துகள் ஹாஜா மைதீன்

நட்புடன் சீனா 



8 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சுசீலா....

    வருக ஹாஜா.....

    ReplyDelete
  3. தங்களின் இவ்வார வலைச்சர
    ஆசிரியர் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருக வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள் சுசீலா

    நல்வாழ்த்துகள் ஹாஜா மைதீன்

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள் சுசீலா

    நல்வாழ்த்துகள் ஹாஜா மைதீன்

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரா. இனிய வலைச்சர வாரம் அமையட்டும்.
    வாழ்த்துடன் - வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. பாராட்டுகள் சுசிலாம்மா....

    வாழ்த்துகள் ஹாஜா மைதீன்.

    ReplyDelete