வலைச்சரத்திலிருந்து நான் விடைபெறும் முன்,உங்களிடம் சில வார்த்தைகள்...
நான்காண்டுக் காலமாகப் பதிவுலகில் நான் பெற்ற அனுபவச்சேமிப்புக்களின் குறிப்புக்களே இவை. இதன் வழி,எவருக்கும் ஆலோசனை வழங்குவதோ,அறிவுரை அளிப்பதோ என் நோக்கமில்லை;வலையுலகில் சற்று அதிகமான பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் புழங்கும் இந்தத் தளத்தில் இச்செய்திகளை வைத்தால் அவை பலரிடம் சென்று சேரக்கூடும் என்னும் நோக்கமே இவற்றை இங்கே பதிவு செய்வதற்கான மனத் தூண்டுதலை எனக்கு அளித்திருக்கிறது.
பதிவுலகம் ஒரு பரந்த வானம்.அங்கே சிறகு பரப்பித் திரியும் விருப்பம், இணையமும்,தமிழும் வசப்பட்டு...ரசனையும் எழுத்தார்வமும் கொண்ட பலருக்கும் எழுவது இயற்கைதான். பத்திரிகைகளின் மாற்று வடிவங்களைப்போலவே பெரும்பாலான வலைப்பூக்களும்,தளங்களும் இருந்தாலும்..பத்திரிகைத் துறையில் உள்ள தணிக்கை(censor) மற்றும் செம்மையாக்கம்(editing)செய்ய இங்கே எவருமில்லை.பதிவுலகுக்கு வாய்த்த மிகப்பெரிய வரம் அது; அதைச் சாபமாக்கி விடாமல் இருப்பதும் நம்மைச் சார்ந்ததே.
‘’வரங்களே சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே தவங்கள் எதற்காக’’என்கிறது அப்துல் ரகுமானின் கவிதை ஒன்று.
வானமே எல்லையெனக் கொண்டு...நாம் பார்த்ததை,நாம் உணர்ந்ததை,நாம் ஆழ்ந்து தோய்ந்ததை,நம்மைப்பாதிப்புக்குள்ளாக்கியதை என எதை வேண்டுமானாலும் எழுதும் விடுதலைவெளி நமக்கு வாய்த்திருக்கிறது.ஆனால்...அந்த சுதந்திரத்தின் மீது நமக்கும் சற்று சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகும்போது பதிவுகளின் முகங்கள் கோரமாக,அருவருப்பாக மாறிப்போய்ப் பிறர் மீதான காழ்ப்புணர்வை,தூஷணைகளை வாரித் தூற்றும் யுத்த களமாகப் பதிவுலகை ஆக்கி விடுகின்றன.அவற்றால்,எழுதுவோருக்கும் பெருமையில்லை;வாசகருக்கும் பயனில்லை.வலை எழுத்தென்பது வம்பு மடமாக மாறும் அந்தத் தருணம் தவிர்க்கப்படுவதே ஆரோக்கியமான பதிவுகளுக்கான வாயில்களைத் திறந்து வைக்கும்.
அடுத்து...பின்னூட்டங்கள் பற்றி.
பதிவுலகில் தொடர்ந்து செயல்பட ஊக்கம் நல்கி உற்சாகமளிப்பவை அவற்றைப்படிக்கும் வாசகர்கள் அவ்வப்போது இடும் கருத்துரைகளே. எழுதிய படைப்புக்கு உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினை என்பது இந்த இணைய ஊடகத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடியது; அச்சு ஊடகத்தில் காணக்கிடைக்காதது. அதுவும் கூட வலையெழுத்தின் வரங்களில் ஒன்றுதான். பிறரைப்பாராட்டியோ புகழ்ந்தோ ஒரு சொல் கூடக்கூற மனம் வராதவர்களே மலிந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அபாரம்,அற்புதம்,வாழ்த்துக்கள் போன்ற ஒற்றைச் சொற்களும் கூடக் கிடைத்தற்கரியவைதான்! மதிப்புக்கு உரியவைதான்! எனினும் நேரம் சற்றுக்கூடுதலாகக் கிடைக்கும்போது பதிவிலுள்ள ஏதேனும் ஒரு அம்சத்தைக் குறிப்பாக முன்னிறுத்தி அதைப்பாராட்டுவதாகவோ,விமரிசிப்பதாகவோ,அதன் மீதான மாற்றுக் கருத்தையோ கேள்வியையோ எழுப்புவதாகவோ பின்னூட்டங்கள் அமையுமானால் தங்கள் பதிவுகளை மெய்யாகவே வாசித்து விட்டுத்தான் கருத்திட்டிருக்கிறார்களென்ற எண்ணம் பதிவர்களுக்கும் பிறக்கும். எழுதப்பட்ட பொருளின் மீதான விவாதம் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவும் அது உதவும்.
கையிலிருக்கும் ரிமோட்டை இயக்கித் தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்களை ஓயாமல் மாற்றி மாற்றிப் பார்ப்பதைப்போல இணையத்தில் உலவும்போதும் பலப்பல வலைகளுக்குள் மாறி மாறிக் கூடு பாய்ந்து கொண்டிருக்கும் வேக சஞ்சாரிகளின் கவனம் பெறுபவை பெரும்பாலும் சிறிய பதிவுகளாகவே இருந்து விடுகின்றன. உழைப்பைக் கொட்டி ஆழ்ந்து நுணுகி எழுதப்படும் சற்று நீண்ட பதிவுகளைக் கண்டால்,பாம்பைக்கண்டதைப்போல தூர விலகிப்போய் விடுபவர்களே பலர். இன்றைய வாழ்வுப்போக்கின் அவசர கதியில் நேரம் கிடைக்காமலிருப்பதும் அதற்கு ஒரு காரணம் என்றாலும் அதன் காரணமாகவே சில நல்ல பதிவுகளையும் நாம் தவற விட நேர்கிறது.அது பற்றியே,கடந்த ஆறு நாட்களாகக் கவனம் பெறக்கூடியவையும்,கவனம் பெறாமல் நழுவிப்போனவையுமான அத்தகைய பல பதிவுகளை நான் பெரிதும் முன்னிலைப்படுத்த விரும்பினேன்.
இறுதியாக நான் விரும்பி வாசிக்கும் - அடிக்கடி செல்லும் பிற தளங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டு என் பணியை நிறைவு செய்கிறேன்.....
சமையல்குறிப்புக்களைக் கூட இலக்கிய ரசனையோடும்,நகைச்சுவை உணர்வோடும் இணைத்து வழங்கும் தாளிக்கும் ஓசை( இதில் இப்போது பதிவுகள் ஏன் வருவதில்லை தெரியவில்லை;ஆனாலும் இதிலுள்ள பதிவுகளே அதிகம்தான்),
இறுதியாக.....

அரசியல்,சமூகம் சார்ந்த கட்டுரைகளைத் தருக்க பூர்வமான வாதங்களோடும்,துணிவோடும்,நடுநிலையோடும் அளிக்கும்ஞாநியின் ’ஓ’ பக்கங்கள்,
‘தீம்தரிகிட’இதழின் ஆசிரியரும்,பரீக்ஷா நாடக அமைப்பை நடத்தி வருபவருமான இதழியலாளர் ஞாநி |
பெண்ணியக் கருத்துக்களை மையப்படுத்தி அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரலாகப் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப்பெண்கள் நடத்தி வரும்ஊடறு,
நாட்குறிப்புக்களைக் கூடக் கதை போன்ற சுவாரசியத்துடன் சொல்லும் கனடா எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் தளம்,
இணையம் கற்போம் என்ற நூலை எழுதியவரும் கல்வித் துறையில் இருப்போரை இணைய வெளிக்குள் ஈர்ப்பதில் வல்லவருமான
பேராசிரியர் மு.இளங்கோவனின் தளம்,
சமையல்குறிப்புக்களைக் கூட இலக்கிய ரசனையோடும்,நகைச்சுவை உணர்வோடும் இணைத்து வழங்கும் தாளிக்கும் ஓசை( இதில் இப்போது பதிவுகள் ஏன் வருவதில்லை தெரியவில்லை;ஆனாலும் இதிலுள்ள பதிவுகளே அதிகம்தான்),
எட்வின் |
இணையத்திலும் வலைப்பதிவு எழுதும்போதும் கையாளக்கூடிய உத்திகளை மிக இலகுவாக முன் வைத்து அவற்றை நாம் கற்றுக்கொள்ள உதவும் வந்தேமாதரம்,
சமூகச்சிந்தனை கொண்ட எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி கவிஞர் திலகபாமாவின் சூரியாள்,
சிங்கப்பூர் பெண் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனின் கமலகானம்,
மதுரையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் உஷாதீபனின் வலைப்பூ
ஆனந்தவிகடனில் பணியாற்றுபவரும்,வெட்டுப்புலி நாவலாசிரியருமான தமிழ்மகனின் தளம்,
தொடர்ந்து பல ஆன்மீகப் பயணக்கட்டுரைகளைப்பதிக்கும்http://natarajar.blogspot.in,
மற்றும்,
கோமதி அரசின் திருமதி பக்கங்கள்
பி.கு;
எல்லாக் கட்டுரைகளுக்கும் சில வரையறைகள் உண்டென்பதால் நான் செல்லும் எல்லா வலைத் தளங்களையும் என்னால் குறிப்பிட இயலவில்லை என்பது சிறிது மனக்குறைதான்!

இந்த மாய உலகின் சஞ்சாரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களையும்,அவர்களின் படைப்புக்கள்,மற்றும் அனுபவங்களையும் பலரோடும் பகிர்ந்து கொள்ள வலைச்சரத்தை அரங்கமாக்கி எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்த நண்பர் திரு சீனாவுக்கும்,வருகை புரிந்து ஊக்க மொழிகளால் நாளும் உற்சாகமளித்த உள்ளங்களுக்கும் நன்றி....நன்றி...
மிக்க நன்றி ஒரு சிறந்த வாரத்திற்கு.
ReplyDeleteஇறையருள் நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
விடைபெறும் நாளில் முகவுரைப்பகுதியில் பல நிறை குறைகளை அழகாக சுட்டிக்காட்டியதோடு மட்டும் அல்லாமல் நீங்கள் வலைச்சர பொறுப்பேற்ற காலங்களில் என்னால் அரியா பலவகைப்பட்ட வலைச்சரங்களை பார்க்க கூடியதாக உள்ளது அதில் இருந்து எம் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பலவைகப்பட்ட சிந்தனைகள் பலவகைப்பட்ட கருத்துக்கள் கிடைக்கப் பெற்றது, வாழ்த்துக்கள் அம்மா,மேலும் இந்த எழுத்துலகில் நீங்கள் வெற்றி வாகை சூட எனது வாழ்த்துக்கள்
இன்று பதியப்பட்ட படைப்புக்கள் அனைத்தும் அருமை தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலை வாசிப்புப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் முழுதும் ஏற்புடையதே. முக்கியமாக வலை தந்திருக்கும் எண்ண வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்தும் பக்குவம் பற்றிய கருத்து. பின்னூட்டங்களை எழுத விரும்புவோர் கூட எழுத முடியாமல் தவிப்பதையும் சில நேரம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteதாளிக்கும் ஓசை எனக்கும் மிகவும் பிடித்த தளம் - நிறுத்தம் தற்காலிகமாக இருக்க விரும்புகிறேன்.
இந்த ஒரு வாரமாக தங்களின் பணி சிறப்பாக இருந்ததும்மா. எங்களுக்கும் இனிமையாக இருந்தது.
ReplyDeleteஅன்பின் சுசீலா - லேபிள் போடவில்லை போலிருக்கிறாது - லேபிள் போடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இன்றே இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து இத்தளத்தின் நிர்வாகியாகுங்கள்.
ReplyDeleteபெருமையும் ஏனைச்சிறுமையும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் . என்றார் வள்ளுவர்.
மனிதனாக நாம் பிறந்ததைப் பெருமைப் படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் நமது எண்ணங்களே. எழுத்துக்களே.
அவ்வெண்கள், எழுத்துக்கள் எவ்வாறாக இருக்கின்றன, இருக்கவேண்டுமென உள்ளங்கை நெல்லிக்கனி போல்
உரைத்திட்ட உணர்த்திட்ட உங்கள் எண்ணங்களும் எழுத்துக்களும் எழுத்துலகத்துக்கு இன்றியமையாதவை.
இதன் தொடர்ச்சியாக,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எனும் வள்ளுவன் வாக்கும்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் எனும் முதுமொழியும் நம் உள்ளங்களில் பரவி நிற்பதை உணர்கிறோம்.
எழுத்துக்கள் மட்டுமா மேன்படவேன்டூம். ஒரு வகையில் ஆம். ஏன் எனின், ஒன்று அவை தான் நமை யார் என
அறிமுகப்படுத்துபவை. அவையிலே முன் நிறுத்துபவை. அழியாப் புகழ் தருபவை.
எண் என ஏன் சொன்னார் வள்ளுவர் ? கணிதம் தெரிவது வாழும் உயிர்க்கு கண் என எழுதியுள்ளாரோ வள்ளுவர் எனத்
துல்லியமாய்ச் சிந்திப்பின் , வள்ளுவர் சொன்ன எண் எனப்படுவது பெயர்ச்சொல் இல்லை, வினைச்சொல்லோ எனவும்
தோன்றுகிறது.
எழுத்து வடிவம், எண்ணங்களுக்குப்பின்னே வருவது. ஆகவே எழுத்தை இரண்டாவதாகவும் எண்ணை முதலாகவும்
குறியிட்டதால், எண் என்பது எண்ணங்கள் அவை ஆற்று வரும் எழுத்து வடிவங்கள், எழுத்துக்கோர்வைகள், வார்த்தைகள்,
வாக்கியங்கள், வண்ணமிகு கவிதைகள், வியக்க வைக்கும் கட்டுரைகள் யாவையுமே.
காளிங்கர் தமது உரையில் " எண் என்பது இருமை இன்பமும் தமது உள்ளத்தால் தெரிந்து பிரித்து எண்ணிக்கொள்வது "
என்றே எழுத நோக்குகையில்,
எண் என்ப என வள்ளுவன் கூறப்போனது, கூறியது, எண்ணங்களையே எனசொல்ல இயலும்.
பரிமேலழகரோ அறியாதார் சொல்லுவது எண் எனவும், அதையே அறிந்தவர் சொல்லுவது எழுத்தெனவும் பகர்வார்.
அந்த எண்ணங்கள் எழும் உள்ளம் பாலையாய் இராது பசுமையாய் இருக்கவேண்டும்.
வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையதூயர்வு.
எண்ணங்கள் சிற்ப்பென அமைய, எழுத்து சிறப்பாகும்.
நீங்கள் காட்டிய வழியில் வலை நடக்குமா ?
தெரியவில்லை.
எனினும்
உங்கள் எண்ணங்களும், எழுத்தும் பல்லாண்டு பல்லாண்டு பவனி வரும்.
பாரிலே புகழ் தரும் படைப்புக்களுக்கு உறு துணையாய் நிற்கும்.
நீவிர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.
எழுத்துக்களிலே இசையை மலரச்செய்யும் உங்களது வல்லைமையை கண்டு வியக்கிறேன்.
ஒரு கணமேனும் உங்களுடன் இந்த முதியவன் அளவளாவி தன் வணக்கத்தையும் நன்றியையும்
கூற கடமைப்பட்டுள்ளான். முடிந்தால், தங்கள் தொலைபேசி எண்ணையோ இ மெயில் குறிப்பையோ
எனக்கு அனுப்பவும்.
நன்றி.
சுப்பு தாத்தா. ( சுப்பு ரத்தினம்)
ReplyDeleteமுன் எழுதிய பின்னூட்டத்தில் விட்டுப்போனது
meenasury@gmail.com
subbu thatha.
படுகை.காம் வந்து உங்கள் பதிவுகளைச் செய்தால் பலன் கிடைக்க ஆவன செய்து தருகிறேன்...
ReplyDeleteதொடர்பு கொள்ள ஆதித்தன் 900302100
ஆன்லைன் ஜாப் சைட் படுகை.காம் விசிட் www.padugai.com
சிறப்பான பகிர்வும்மா.
ReplyDeleteதொடர்ந்து தங்களது தளத்தில் சந்திப்போம்.....
சிறப்பான பகிர்வுகள், இவர்களில் பலரை தொடர்ந்து வாசித்தே வருகின்றேன். சிலர் புதியவர் எமக்கு, நன்றிகள்.
ReplyDeleteஒரு வார காலமாக சிறப்பான வலைதளங்களை அறிமுகப்படுத்தி தங்களின் பணியை செவ்வனெ செய்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிகவும் நன்றி மேடம். நீங்கள் அறிமுகபடுத்தியுள்ள முக்கால்வாசி வலைத்தளங்கள் எனக்கு புதியவைதான். ஞாநி அவர்களின் வலைதளத்தின் உள்ளே நுழைய முடியவில்லை. சில முறை முயன்று பார்த்தேன். உங்கள் எழுத்தின் மேல் மிகுந்த மரியாதை எனக்குண்டு. அதனால் நீங்கள் அறிமுகபடுத்தியுள்ள தளங்களும் சிறப்பானவைகளாகத்தான் இருக்கும். நிச்சயம் படிக்கிறேன். நன்றி.
ReplyDeleteவலைச்சரத்தின் இந்த ஒரு வாரம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
இந்தப்பதிவுக்கும்,சென்ற ஆறு பதிவுகளுக்கும் வருகை புரிந்து ஊக்குவித்த அனைவருக்கும் என் அன்புன்,நன்றியும்.மீனாக்ஷி,ஞாநியின் தளத்துக்குள் செல்லப் புகுபதிவு செய்ய வேண்டுமென எண்ணுகிறேன்.
ReplyDeleteஇன்று தான் நான் ஊரிலிருந்து வந்தேன். நீங்கள் தொடுத்த வலைச்சரத்தைப் படித்தேன். எடுத்த பொறுப்பை மிக மிகச்சிறப்பாய் செய்து விட்டீர்கள்.
ReplyDeleteஎன் தளத்தையும் உங்கள் விருப்பமாகய் பகிர்ந்தமைக்கு
நன்றி.
பதிவுலகைப் பற்றி அழகாய் அற்புதமாய் கருத்து சொல்லி விட்டீர்கள்.
உங்கள் அனுபவங்கள் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயன்படும்.
வாழ்த்துக்கள்.