Sunday, December 2, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

ரிஷபன் வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை சுசீலாவிடம் ஒப்படைக்கிறார். 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ரிஷபன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் அறிமுகப் படுத்த வேண்டிய பதிவுகளைத் தேடிப் படித்து, தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார். அத்தனையும் அருமையான பதிவுகள். 

இவர் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், மழை, மனிதர்கள் என்ற தலைப்புகளில் ஏழு பதிவுகள் இட்டு - முன்னூற்றுப் பதினைந்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.   

இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 75
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 79

ரிஷபனின் பணியினைப் பாராட்டி, வாழ்த்தி, சென்று வருக என வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சகோதரி சுசீலா அவர்கள். 

கல்லூரியில் இளநிலைப்படிப்பில்-B.Sc.,-வேதியல் படித்தாலும் இலக்கிய ஆர்வத்தால் தமிழ் முதுகலைக்குள் புகுந்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.மதுரை பாத்திமாக்கல்லூரியில் 1970-2006வரை, 36 ஆண்டு காலப் பேராசிரியப்பணி. 

தற்போது ஓய்வு பெற்று, மைய அரசுப்பணியிலிருக்கும் மகள் குடும்பத்தாரோடு தில்லியில் வாசம். அடுத்து அவர்களுக்கு எங்கே மாற்றல் வருகிறதோ அங்கு செல்லும் நாடோடி வாழ்க்கையே இனி என்பதால் ‘யாதும் ஊர்..யாவரும் கேளிர்’ என்ற கொள்கையை உடையவர். 

சங்ககாலம் முதல் சமகாலம் வரையிலான தமிழிலக்கியத்தின் சகல துறைகளிலும் ஆர்வமுடையவர். 

சிறுவயதிலிருந்தே கதை எழுதும் ஆர்வம் உண்டென்பதால் அதற்கேற்ற முதிர்ச்சி ஓரளவு கை கூடியபிறகு 100 சிறுகதைகள் வரை எழுதி இருக்கிறார். அவற்றில் 70க்கும் மேற்பட்டவை பிரசுரமாகியிருக்கின்றன. சில கதைகள் பரிசுகளையும் பெற்றிருக்கின்றன.

சிறுகதைத் தொகுப்புக்களும், இலக்கியம், பெண்ணியம் ஆகிய துறை சார்ந்த 2 கட்டுரைத் தொகுப்புக்களும்  நூல்வடிவிலான இவரது பங்களிப்புக்கள்.

பணி ஓய்வு பெற்றபின் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயெவ்ஸ்கியின் உலகப்புகழ்பெற்ற இரு பெரும் நாவல்களை [குற்றமும் தண்டனையும், அசடன்] ஆங்கிலவழி தமிழாக்கம் செய்திருக்கிறார். அவை மதுரை பாரதி புத்தக நிலையத்தாரால் பதிப்பிக்கப்பெற்று முன்னணி எழுத்தாளர்களாலும், விமரிசகர்களாலும் அங்கீகாரத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

2008 இல் கணினியைக் கையாளக் கற்று நவ.2008 முதல் வலைப்பூ எழுதி வருகிறார்.  இலக்கியக்கூட்டங்களிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் சொற்பொழிவாற்றியதும் உண்டு.

பயணம் செய்வதும் இவருக்குப் பிடித்தமானதென்பதால் இந்தியாவில் உள்ள இடங்களோடு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை,மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

இவரது எழுத்தாற்றல், பேச்சாற்றல், படைப்பாற்றல் அனைத்தும் வலைச்சரத்தில் இவ்வார முழுவதும் வெளிப்படும் என  நினைத்து, இவரை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 

வருக ! வருக ! வளமான கருத்துகளைத் தருக  சகோதரி சுசீலா ! 

நல்வாழ்த்துகள் ரிஷபன் !

நல்வாழ்த்துகள் சுசீலா !

நட்புடன் சீனா 

14 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சிறப்பாக பணியை முடித்த ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி..

    வருக சுசீலா எம் ஏ அவர்களே... சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஏழு நாட்களில் ஸ்ரீரங்கத்தின் அற்புதங்களை தன் அழகிய வசீகர எழுத்தால் எல்லோரையும் ரசிக்கவைத்து அருமையான பதிவர்களை தேடி தேடி எமக்கு பகிர்ந்து சிறப்பாக வலைச்சர ஆசிரியப்பணி ஏற்ற ரிஷபனுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

    வாய்ப்பளித்தமைக்கு சீனா அண்ணாவுக்கும், பரிந்துரைத்த வை.கோ அண்ணாவுக்கும் அன்புநன்றிகள்....

    இனி வரும் வலைச்சர ஆசிரியர் பணி ஏற்கும் சுசீலா அவர்களுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....

    ReplyDelete
  4. இந்த வார வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக நிறைவேற்றி நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் திரு. ரிஷபன் அவர்களுக்கு நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    நாளை முத்ல் வலைச்சர ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்கும் பேராசிரியரும் முனைவருமான திருமதி சுசிலா அவர்களை வாழ்த்தி வருக வருக வருக என வரவேற்கிறோம்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  5. இந்த வார ஆசிரியர் எங்கள் ஊர்க்காரர், வரும் வார ஆசிரியரும் எங்கள் ஊர்க்காரர் தான்!

    ஸ்ரீரங்கம் - தில்லி என இரண்டுமே எனது ஊர் தான் இப்போது...

    ரிஷபன் ஜிக்கு பாராட்டுகள்.

    சுசீலாம்மாவுக்கு வாழ்த்துகள். ஒரு வாரம் அசத்தலான வாரமாக இருக்கப்போகிறது. எங்களுக்கு டபுள் ஓகே....

    ReplyDelete
  6. வாருங்கள் சகோதரி சுசீலா அவர்களே தாருங்கள் உங்களது தரமான விமர்சனத்தை

    ReplyDelete
  7. வாங்க சுசீலா மேடம்.. உங்கள் வரவு நல்வரவாகுக..

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கும் வரவேற்புக்கும் நன்றி நண்பர்களே.தங்கள் எதிர்பார்ப்புக்களை என்னால் இயன்ற அளவு நிறைவு செய்ய முயல்கிறேன்.

    ReplyDelete
  10. மிக சிறப்பாக ஒரு வாரத்தை பூர்த்தி செய்த திரு ரிஷபன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    வரும் வாரத்தை பொறுப்பேற்று நடத்த உள்ள திருமதி சுசீலாவிற்கு நல்வரவு!

    ReplyDelete
  11. வணக்கம் சுசீலாம்மா! நான் உங்களிற்குப் புதிய இலங்கையள். வலைச்சர வாரத்திற்கு இனிய நல்வாழ்த்துடன் டென்மார்க்கிலிருந்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. அன்பு வரவேற்புக்கு நன்றி....

    ReplyDelete
  13. வலைச்சரகத்திற்கு நன்றி ஒரு வட்டத்திற்குள் இயங்கிய என்னை வெளியுலகைக் காணச் செய்தமைக்கு. பல புதிய அறிமுகங்களை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. சுசிலா அம்மாவின் பெண்ணியப் பதிவுகளை சென்ற மாதம் தான் படித்தேன் அருமையான ஆய்வுரை.அவரின் வலைப்பக்கத்தில் அப்போது மறுமொழி தடைசெய்யப்பட்டிருந்தது. அவர்களின் எழுத்துக்களை படிக்க ஆவலாக உள்ளேன். வாருங்கள் அம்மா...

    ReplyDelete