Sunday, December 16, 2012

N.K.S. ஹாஜா மைதீன் காரஞ்சன்( சேஷ்) என்ற சேஷாத்ரியிடம் பொறுப்பினை ஓப்படைக்கிறார்.

சென்று வருக ! N.K.S. ஹாஜா மைதீன் 

வருக ! வருக ! காரஞ்சன் ( சேஷ்) என்ற சேஷாத்ரி.ஈ.சி

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற N.K.S. ஹாஜா மைதீன், தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

எழுதிய பதிவுகள்                                         : 7
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் : 35
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள்    : 75
பெற்ற மறுமொழிகள்                                : 109

N.K.S. ஹாஜை மைதீனை சென்று வருக ! என வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்க இருக்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் காரஞ்சன் ( சேஷ் ) என்ற சேஷாத்ரி.ஈ.சி. 

இவர் காரஞ்சன் சிந்தனைகள் என்ற தளத்தில் எழுதி வருகிறார். 

இவர்     அரசுப் பள்ளிகளில் படித்து- கிராமத்தில் வளர்ந்து- தற்போது தொலைத்தொடர்புத் துறையில் துணை கோட்டக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழில் ஆர்வம் உண்டு- திரு வெங்கட்நாகராஜ் அவர்கள் இவர் மாமனாரை ஒரு வலைப்பூ தொடங்கச் சொல்ல அதற்கு உதவி செய்யும் தருணத்தில் இவர் மாமனார் அவர்கள் இவரையும் ஒரு வலைப்பூ தொடங்கி எழுதச் சொன்னார். கடந்த ஆண்டு முதல் எழுதி வருகிறர. மனதில் தோன்றும் நற்சிந்தனைகளை கவிதை வடிவில் தந்து வருகிறார்.-
 
நண்பர் காரஞ்சன் ( சேஷ்) என்ற சேஷாத்ரி.ஈ.சி அவர்களை வருக! வருக !  வாழ்த்தி வரவேற்று - ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்வதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் N.K.S. ஹாஜா மைதீன் 

நல்வாழ்த்துகள் காரஞ்சன் (சேஷ்) என்கிற சேஷாத்ரி.ஈ.சி

நட்புடன் சீனா  

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. புதிதாக நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திரு. ஈ.எஸ். சேஷாத்ரி அவர்களை

    வருக! வருக!! வருக!!!

    என்று சொல்லி மனதார வரவேற்கிறேன்.

    தங்கள் வலைச்சரப்பணி வெற்றிகரமாக அமைய என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    சிறப்பாக பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

    அன்புடன்,
    VGK


    ReplyDelete
  3. இருவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒருவார பணியை செம்மையாக நிறைவேற்றிய திரு ஹாஜா மைதீன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
    புது ஆசிரியர் திரு சேஷாத்ரி அவர்களுக்கு நல்வரவு!

    ReplyDelete
  5. வரவேற்கும் நல் இதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! விடைபெறும் திரு ஹாஜா மைதீன் அவர்களுக்கு என் பாராட்டுகள்! நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  6. இவ்வாரத்தில் பணியைச் செவ்வனே செய்த ஹாஜா மைதீன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    வரும் வார ஆசிரியர் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. ஆசிரிய வாரத்திற்கு இனிய நல்வாழ்த்து காரஞ்சன் சேஷாத்ரி அவர்களே!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. சேஷாத்ரி வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. புதிதாக பொறுப்பேற்க வரும் திரு காரஞ்சன் சேஷாத்ரி அவர்களை வரவேற்கிறேன்

    ReplyDelete
  10. உங்கள் ஆதரவுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பர்களே....புதிதாக பொறுப்பேற்கும் நண்பருக்கு வாழ்த்துக்க்கள்...

    ReplyDelete