Sunday, December 16, 2012

போகாதே ஞாயிற்றுக்கிழமையே !...........

ஞாயிறு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோசம்தான்...குழந்தைகளுக்கு இன்று தூக்கம் இல்லை..ஆனால் பெரியவர்களுக்கு இன்றுதான் அதிக நேரம் தூக்கம்...எவ்வளவு இன்பம் இன்று இருக்கிறதோ அதே கவலையும்,பரபரப்பும் நாளை திங்ககிழமை என்ற ஒரு நினைவு பெரும்பாலும்  அதே குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுத்திவிடும் ஒரே ஆற்றல் ஞாயிற்றுக்கிழமைக்கு  மட்டுமே உண்டு...

ஞாயிறு  மட்டும் 48 மணி நேரமாக இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்ற எண்ணத்துடன்தான் பெரும்பாலானோர் அன்று உறங்க செல்கின்றனர் என்றால் அது மிகையல்ல..!

ஞாயிறு என்ற சொல் தமிழில் சூரியனை குறிக்கும் .....

இன்றைய பதிவர்களும் அவர்களின் பதிவுகளையும் கொஞ்சம் பார்ப்போம்...

உங்கள் சகோ  ஹசன்  என்ற அருமையான தலைப்பில் அசத்தலாக நம் உள்ளத்தை தொடும்படி எழுதி வருகிறார் நம் சகோ ஹசன்...அவரின் பதிவுகளில் எனக்கு பிடித்தவை


மனிதர்களை அவர்கள் மனம் மகிழும்படி  அடையாளப்படுத்துங்கள் 


பில் கேட்ஸுக்கு ஒரு கடிதம்-அக்மார்க் மொக்கை


மனசாட்சி   எனும் வலைப்பூவில் நகைச்சுவை ,சினிமா,நக்கல் நையாண்டி என கலந்து கட்டி எழுதி வருகிறார் நண்பர் முத்தரசு .அவரின் பதிவுகளில் சில..

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டோ? - சில யோசனைகள்


உண்மையான காதல் பயம்



டீக்கடை   யில் கிடைக்கும் சூடான வடை,பஜ்ஜி போல சூடான பதிவுகளை தந்து கொண்டு இருந்த சிராஜ் இப்போது ஏனோ அதிகமாக எழுதுவதில்லை...அவரின் பதிவுகளில் என்னை கவர்ந்தவை

பயோ டேட்டா....சராசரி இந்தியக் குடிமகன்


கலைஞருக்கு நன்றி... மிக்க நன்றி....


உஷா அன்பரசு  என்ற வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி உஷா அவர்களின் பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு

அந்த மூன்று சொற்களை நீங்க சொல்வீங்களா..?

எலி வளையானாலும் தனி வளை..!..



எண்ணங்களுக்குள் நான்  என்ற தலைப்பில் சினிமா,சமூகம்,அரசியல்  பற்றி ரசிக்கும் வகையில் எழுதி வருகிறார் சகோ பாருக் ..அவரின் பதிவுகளிலிருந்து..


பூர்விகா மொபைலின் பகல் கொள்ளை


கும்கி- நல்ல முயற்சி.....


இந்த பதிவர்கள் உங்களையும்  கவர்வார்கள் என்ற நம்பிக்கையோடு எனது இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்...இன்னும் நிறைய நண்பர்களின் பதிவுகளை  பற்றி குறிப்பிட ஆசை..ஆனால் எனக்கு நேரமில்லாத காரணத்தினால்தான் தினமும் 4அல்லது 5 பதிவர்களை பற்றி குறிப்பிட்டேன்...

வலைச்சரத்தில் ஆசிரியராக எழுதுவதற்கு முன்,எழுதியதற்கு பின் என இரண்டு வகைகளாக என் பதிவுலக வாழ்க்கை அமையும் என்பதில் சந்தோசம் எனக்கு..வலைச்சர ஆசிரியர் பொறுப்பை கொடுத்த அய்யா சீனா  அவர்களுக்கும்,தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றி...


இந்த ஆசிரியர் பொறுப்பை என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்து இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் நண்பர்களே...நன்றி...

எனது இன்றய பதிவையும் ஒரு எட்டு வந்து கொஞ்சம் படித்து பாருங்களேன்...

இந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையா போச்சுப்பா?!....

14 comments:

  1. எனது வலைப்பூவை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி காஜா.

    சனிபதிவில் ஏழரைக்கு வியக்கம் வரலையே....ஏக்கத்துடன்....

    ஞாயிறு பதிவும் அறிமுகங்களும் கலக்கல்

    ReplyDelete
  2. நன்றி முத்தரசு...அதே பதில் கிடைக்காத ஏக்கம் எனக்கும் இருக்கிறது..ஹி ஹி....

    ReplyDelete
  3. என் வலைப் பதிவை அறிமுகப் படுத்தியதிற்கு நன்றி!

    ReplyDelete
  4. நேர நெருக்கடியில் இன்னும் அதிக பதிவர்களை அறிமுகப்படுத்த முடியவில்லை என்றாலும் இந்த ஒரு வாரம் உங்கள் பொறுப்பு சிறப்பாகவே இருந்தது.

    ReplyDelete
  5. நன்றி உஷா அன்பரசு..

    ReplyDelete
  6. ஞாயிறு என்றால் சந்தோசமும், அப்பப்ப வரும் நினைவுகளையும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். அருமை அத்தோடு புதிய பதிவர்களின் அறிமுகமும் அருமை.

    ReplyDelete
  7. //அய்யா சீனி//

    நீங்கள் பெயர் சூட்டியது சீனா சாருக்குத் தெரியுமா?

    ReplyDelete
  8. நன்றி semmalai akash,நிஜாம் ...

    எழுத்துப்பிழையை திருத்தி விட்டேன்..நன்றி

    ReplyDelete
  9. சிறந்த தொகுப்பு சகோ

    ReplyDelete
  10. இதுவரை படித்திராத பலரின் வலைதளங்களுக்கு உங்கள் மூலம் சென்று படித்து வந்தேன்.
    புதிய அனுபவம் இது.
    நல்லபடியாக பொறுப்பை நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. எல்லாமே அருமையான தொகுப்புகள்...

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள்! நன்றி! ஏழரை சனி என்பது சனி கிரகம் ஒரு நபருக்கு ஏழரை ஆண்டுகள் தாக்கம் தரும் என்பதை குறிக்கும். அவர் ராசிக்கு முந்தைய ராசி அவருடைய ராசி, அவருக்கு அடுத்த ராசி என ஒரு ராசிக்கு இரண்டரை வருடங்கள் வீதம் தங்குவார் சனி. மொத்தம் ஏழரை ஆண்டுகள். இதைத்தான் ஏழரை சனி என்கிறோம். ஏதோ எனக்குத் தெரிந்த விளக்கம் இது! நன்றி!

    ReplyDelete
  13. உங்கள் ஆதரவுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பர்களே...

    ReplyDelete