நண்பர்களே நலமா !முதலில் நான் மிகவும் ரசித்த பிரபல பதிவுகளுக்கு மீண்டும் சிறகு தந்து மகிழ ஆசைபடுகிறேன் ...
அமுதவன் பக்கங்கள்
இந்த பெயரில் எழுதி வரும் இவர் ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள் தந்தவர் இப்போது பதிவுலகிலும் எழுதி வருகிறார் .. இவர் எழுதிய பல பதிவுகள் எனக்கு பிடிக்கும் அதிலும் பின் வருவது ரொம்ப புதிய தகவலாக இருந்தது ...
இந்த தளத்தில் புலவர் ஐயா தினமும் மரபு கவிதைகள் மூலம் நம்மை மகிழ்வித்து வருகிறார். அதில் மனதுக்கு பிடித்தது என்று சொன்னால் எல்லாமே தான் . மிக சமிபத்தில் மின்சார பிரச்சனையை கூட நடுநிலையுடன் கவிதை வடிவில் ஆட்சியார்களே ரசிக்கும் வகையில் தந்தது பிடித்து இருந்தது
எத்தனை நாட்கள் பொறுப்பார்கள்
இது மிக முக்கியமான தளம். தியரி என்பது கணிப்பு மட்டுமே அது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். ஆனால் உலகே டார்வின் தியரியை சரி என்று சொல்லி நம் அனைவர் மனதிலும் பதிய வைத்துவிட்டார்கள்! டார்வினின் கணிப்பு தவறு என்று மிக எளிமையாக பல பதிவுகள் மூலம் சொல்லி இருக்கார் நண்பர் ஆசிக் .. அதில்
உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
வை.கோபாலகிருஷ்ணன் இன்றைய தலைப்பு ஐயாவுக்கு மிக மிக பொருத்தம் பல்சுவை வித்தகர் இவர்.சமையல் குறிப்பு எழுதினால் கூட அதில் தனித்துவம் இருக்கும்.
மேலே உள்ள காணொளி பிரபலங்களுக்கும் இனி பிரமாதபடுத்த போறவங்களுக்கும் ஹி ஹி .....இந்த மாதிரி பதிவுலகில் ஏற்கனவே நட்சத்திரங்களாக மகுடம் சூடி சாதனை நாயகர்கள் பலரை ரசித்து படித்து வருகிறோம்.அவர்களை இங்கே அறிமுகம் செய்வது என்பது சூரியனுக்கு டார்ச் லைட் அடிப்பது மாதிரி.எனவே அவர்களின் வாழ்த்துக்களுடன் இனி புதியவர்களின் பதிவுகளை பார்ப்போம்.
ப்ளாக் என்றால் என்ன ? இதை தானே முதல்ல சொல்லணும் ,அதை நம்ம நண்பர் சேலம் ரவி விளக்கமா சொலுறார் கேட்டுக்கோங்க.இவர் மிகவும் புதியவர் இன்டர்நெட் டிப்ஸ் மற்றும் கணிணி தகவல்கள் பல தருகிறார் ...
Cindrella கனவுகள்
இந்த தளத்தில் கவிதைக்கள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது ...மிகவும் ரசித்து படித்து வருகிறேன் ..நீங்களும் பாருங்களேன் உதாரணம் வேண்டுமா இதோ ஒன்று
இந்த தளத்தில் பல விஞ்ஞானம் மற்றும் பொது அறிவு தகவல்கள் தருகிறார் நண்பர் Dineshsanth Sundaralingam.அதில் புருவம் உயர்த்த வைத்தவை ...
பூவிழி என்ற வலைப்பூவில் நண்பர் மலர் பாலன் அவர்கள் கவிதை கொலைகள் செய்கிறார் , மருத்துவ அறிவியல் விளக்கங்கள் தருகிறார். மிகவும் புதியவர் மென்மேலும் சிறப்பாக செயல்பட நாம் அனைவரும் வாழ்த்துவோமே ...
கேனக்கிறுக்கன் என்று தன்னை தானே தாழ்த்தி சொல்லி உயரபறக்கும் சிகா.லெனின் அவர்களின் பதிவுகள் மிரள வைக்கிறது படித்து பார்த்து சொல்லுங்களேன் ............
புதுகை ரவி இவரின் முதல் பதிவு இது டெல்லி மெட்ரோ பயணம்னு ரொம்ப டைமிங்கா தொடங்கியுள்ள நல்ல கட்டுரை தந்து ருக்கிறார்.இவருக்கு ஊக்கம் அளிப்போமே .............
நான் சுயநலக்காரன் என்று சொல்லி இருக்கேன்ல இந்த வாரம் முழுதும் என் தளத்தில் மீள்பதிவுகள் தர போகிறேன் ..அதில் இன்று பத்திரிக்கைகளில் வரும் ஒரு பக்க கதைகள் போல கவிதைகள் படைக்க முயன்று வருகிறேன் ..அதில் நான் எழுதிய முதல் முயற்சி இதோ ..
அன்பு நண்பர்களே ,அருமை சகோதரர்களே இன்றைய அறிமுகங்கள் பலரை சென்று அடைய வாக்களியுங்கள் ,மேலும் அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இன்றைய அறிமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது யாரை என்றும் கருத்தில் இங்கு சொல்லுங்கள் .இதுவே வலைச்சரத்திற்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும் ...............
நண்பர்களே நாளை சந்திப்போமா .............
நண்பர்களே நாளை சந்திப்போமா .............
வணக்கம்
ReplyDeleteரியாஸ் அஹமது(அண்ணா)
இன்றும் 1ம்நாள் போல 2ம் நாளும் சிறப்பாக நான் அறியாதஅரிய வகையான வலைத்தளங்களை அறிமுகம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா அனைத்துப் பதிவுகளையும் தொடருகிறேன்
மலேசியாவில் எந்த மாநிலத்தில் உள்ளீர்கள் நானும் மலேசியாதான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஎன்னுடைய தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ...
உங்களின் பணி சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
நான் வலைபதிவுக்கே மிகவும் புதிய முகம். உங்க அறிமுகம் எல்லாரையும் ஒவ்வொருவராகப்போயி பார்க்கிறேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநியாயமான அறிமுகம் புலவரையா இந்த வயதிலும் எவ்வளவு சிறப்பாகவும் சிந்திக்கும்படியும் எழுத்துப் பிழையின்றி சுத்த தமிழில் எழுதிவருகிறார்,வைகோ,பூவிழி போன்றோரின் அறிமுகமும் அசத்தலானதே.வாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவர்களில் புலவர் ஐயா, கோபால்கிருஷ்ணன் சார் இருவரையும் தெரியும் சிறப்பாக எழுதுவார்கள். மற்றவ்ர்களை படித்து விட்டு அவர்கள் தளத்தில் கருத்து இடுகிறேன்.
நன்றி. வாழ்த்துக்கள்.
இனிய தம்பீ! என்னை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதிற்கு, மிக்க நன்றி!
ReplyDeleteசென்றமுறை நான் மலேசியா வந்த போது தங்களை சந்திக்க யியலாமல் போய்விட்டது. ஆனால் நான் மே மாதம் மலேசியாவுக்கு குடும்பதோடு வருகிறேன்.அங்கு சிலவிபரங்கள் தேவைப்படுவதால் கீழே என் மெயில் முகவரி தருகிறேன் அதற்கு தங்களது மெயில் முகவரியை அனுப்பினால் நான் விபரம் எழுதுகிறேன்.
jram1932@gmail.com
அவசியம் எழுத வேண்டுகிறேன்
அன்பு நண்பரே !
ReplyDeleteகாலை வணக்கம்.
”சூர்யனுக்கு எதுக்கு டார்ச் லைட்!!”
இன்றைய தங்களின் தலைப்பு மிக அருமை.
மீண்டும் சற்று தாமதமாக வருவேன்.
>>>>>>>>
நன்றி ரியாஸ் அஹமது அவர்களே.
ReplyDeleteதாங்கள் கொடுத்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
புதுகை ரவி
இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ள புலவர் ஐயாவை பதிவர் விழாவில் சந்தித்தேன்.
ReplyDeleteஅவரது பணிவு என்னை வியக்க வைத்தது. அவரை சந்தித்தது பெரும் பேறு என்றே நினைக்கிறேன்.
திரு கோபு அவர்களின் பல பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
பதிவர்களுக்கு உற்சாக பின்னூட்ட சத்து கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே!
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தலைப்பே வசிகரிக்குது ஜி...தொடருங்கள்
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ReplyDelete>>>>>>>>
ஆதித்யா டீ.வி. விளம்பரம் போலவே நம் பதிவர்கள் யாரையும்
ReplyDelete’அசைச்சுக்க முடியாது’
என்று காட்டியுள்ள காணொளி மிகவும் பொருத்தம் தான்.
>>>>>>>
”மீண்டும் ஒரு காதல் take off !” கவிதை பார்த்தேன், படித்தேன், மகிழ்ந்தேன். கருத்தளித்தும் விட்டேன்.
ReplyDeleteஆரம்பம் முதல் அவளைப்பற்றிய வர்ணனைகள் ஜோராகவே இருந்தது.
என்னுடைய முதல் விமானப்பயணத்தினையும் எனக்கு நினைவு படுத்தியது.
மனதைக் கொஞ்சம் இம்சைப்படுத்தியது.
பிறகு விமானம் உயரத்தில் பறக்கப்பறக்க தங்களின் கவிதை வானில் நானும் கூடவே பறப்பது போல உணர்ந்தேன்.
இறங்குமிடத்தில் அப்படி ஒரு சோகம் .... எனக்கும் தான்.
சோகம் ...... ஸோ வாட்?
காதலும்
நிலைதிருப்ப்பதால் இன்றும்
வானிலேயே மிதக்கிறோம் !
நல்லதொரு முடிவு.
அது தான் உண்மைக்காதல். அது என்றும் வாழ்க! வாழ்க!! தங்களின் இது போன்ற அழகிய எழுத்துக்களிலாவது.
>>>>>>>>
//வை.கோபாலகிருஷ்ணன் இன்றைய தலைப்பு ஐயாவுக்கு மிக மிக பொருத்தம் பல்சுவை வித்தகர் இவர்.சமையல் குறிப்பு எழுதினால் கூட அதில் தனித்துவம் இருக்கும்.//
ReplyDelete”அடடா ..... என்ன அழகு !
அடையைத்தின்னு பழகு !!”
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
என்ற என் லேடஸ்டு பதிவினைப் படிச்சுட்டீங்க போலிருக்கு.
அடையினை தின்று ருசிபார்த்திருப்பதற்கு என் அன்பான நன்றிகள்.
இது தான் நான் எழுதியுள்ள முதல் சமையல் குறிப்பு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பின்னூட்ட எண்ணிக்கை என் பதில்கள் உள்பட 200 ஐ நெருங்கிக்கொண்டு இருப்பதே, இந்த என் முதல் முயற்சிக்கான மாபெரும் வெற்றியாக நானும் நினைத்து மகிழ்கிறேன்.
>>>>>>>>>>
//“மறக்க மனம் கூடுதில்லையே” இது 4 பகுதிகளாக வெளியான காதல் கதை. கற்பனைக்கும் நிஜத்திற்கும் ஒரு கல்யாணமே நடத்தி இருதார் எங்கள் அன்பு ஐயா... விருந்துக்கு இன்னும் கிளம்பலையா? ....//
ReplyDeleteகற்பனைக்கும் நிஜத்திற்கும் நான் கல்யாணம் செய்து வைத்துள்ளேனா?
ஆஹா, தங்களின் இந்த வரிகள் என்னை எங்கேயோ கொண்டு சென்று விட்டது.
தங்களி அழகிய சொல்லாடல் என்னை மயக்கி விட்டது ! ;)))))
நன்றியோ நன்றிகள்.
இந்த என் மிகச்சிறப்பான காதல் கதைக்கு, நான் இந்த
”மறக்க மனம் கூடுதில்லையே”
என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்த பிறகு, என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தோழியும், என் நலம் விரும்பியுமான ஒருவரிடம், நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சரி தானா? என ஓர் சந்தேகம் கேட்டேன்.
உடனே மிகவும் சரியே என ஒப்புதல் அளித்து என்னை உற்சாகப் படுத்தினார்கள். அவர்களையும் என்னால் எப்போதுமே
“மறக்க மனம் கூடுதில்லையே” !;)
அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.
இன்றைய தங்களின் இந்த சிறப்பான அறிமுகத்தில் அவர்களுக்கும் சரிபாதி பங்கு உண்டு தானே! ;)))))
அன்புத் தோழியே! என்னில் சரிபாதியை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
என்னையும் மகிழச்செய்யுங்கள்.
ப்ளீஸ்....
>>>>>>
அன்பு நண்பர் ரியாஸ் அஹமது அவர்களே,
ReplyDeleteஇன்றைய தங்களின் வலைச்சரம் சிறப்பாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தொடர்ந்து நாளையும் சந்திப்போம்.
அன்புள்ள
V G K
-oOo-
ரியாஸ்அஹமது அவர்களே ,
ReplyDeleteநன்றி நன்றி நன்றி
நான் உங்கள் வலைபூவை பார்வை இடுபவள் தான் ,ஆனால் இன்றுஎன் வலைப்பூவை நீங்கள் பார்வை இட்டு என்னை உங்கள் தளத்தில் அறிமுகபடுத்தி மற்றவரையும் பார்வை இடவைத்து என்னை மகிழ்ச்சி கடலில் அழ்த்திவிட்டீர்கள் நான் என்னை மேலும் வளர்த்து கொள்ள உங்கள் அறிமுகம் தூண்டுகிறது மேலும் மேலும் உங்கள் தூண்டுகோல் கொடுக்கப்படவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
//கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteநியாயமான அறிமுகம் புலவரையா இந்த வயதிலும் எவ்வளவு சிறப்பாகவும் சிந்திக்கும்படியும் எழுத்துப் பிழையின்றி சுத்த தமிழில் எழுதிவருகிறார்,வைகோ,பூவிழி போன்றோரின் அறிமுகமும் அசத்தலானதே.வாழ்த்துக்கள்//
ஐயா, வணக்கம். தங்களின் இந்த தனிச்சிறப்பான வாழ்த்துகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அன்புடன்
VGK
//கோமதி அரசு said...
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவர்களில் புலவர் ஐயா, கோபால்கிருஷ்ணன் சார் இருவரையும் தெரியும். சிறப்பாக எழுதுவார்கள்.
மற்றவ்ர்களை படித்து விட்டு அவர்கள் தளத்தில் கருத்து இடுகிறேன்.
நன்றி. வாழ்த்துக்கள்.//
திருமதி. கோமதி அரசு அவர்களே!
வாருங்கள், வணக்கம்.
தங்களின் இந்த பின்னூட்டமும் எனக்கு மிகவும் சிறப்பாகவே உள்ளது.
நன்றியோ நன்றிகள்.
அன்புடன்
VGK
அத்தனை அறிமுக உறவுகளிற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அத்தனை அறிமுக உறவுகளிற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
Ranjani Narayanan said...
ReplyDelete//திரு கோபு அவர்களின் பல பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
பதிவர்களுக்கு உற்சாக பின்னூட்ட சத்து கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே!//
தாங்கள் WORDPRESS இல் எழுதி சமீபத்தில் 2013 இல் வெளியிட்ட பதிவு ஒன்றுக்கு, நான் விடிய விடிய கண்விழித்து 10 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் அளித்தும் அவை தங்களின் அந்தத்தளத்தில் கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ மாயமாக மறைந்து விட்டன.
அவற்றைக்கண்டு பிடித்துக்கொண்டு வர தாங்களும் எந்த முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளாததால், நான் உங்களுடன் [தற்காலிகமாக] ”டூ - காய்” விட்டுள்ளேன், என்பது உங்களுக்கே தெரியும்.
Blogspot இல் எழுதினால் தான் இனி நானும் பின்னூட்டமிட வருவேன் என்றும் சொல்லியிருக்கிறேன்.
எனினும் இங்கு வந்து என்னைப் பாராட்டியுள்ளீர்கள்.
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதனால் இன்று ஒருநாள் மட்டும் உங்களுடன் நான் “சேத்தி - பழம்”
விட்டுள்ளேன் - பதில் கொடுத்துள்ளேன்.
நீங்க செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா, திருமதி ரஞ்ஜு மேடம்?
இங்கு வருகை தந்து என்னைப் பாராட்டியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
தங்கள் சிபாரிசுக்கு நன்றி ரியாஸ். சூரியன் டார்ச்லைட் என்று என்னென்னமோ சொல்லியிருக்கிறீர்கள் தங்கள் அன்பிற்கும் என் நன்றி.
ReplyDeleteThank U a lot Riyas Ahmed :))))
ReplyDeleteஅன்பு நண்பர்களே மிக்க நன்றி ...உங்கள் அனைவரின் அன்பிலும் நான் திக்கு முக்காடி போய்விட்டேன் ரொம்ப ரொம்ப நன்றி அனைவருக்கும் ...
ReplyDeleteமேலும் இன்றைய தலைப்பை பாராட்டி உள்ளீர்கள் நன்றி, இது என் சொந்த கற்பனை அல்ல முன்பு கலைஞர் கருணாநிதி அவர்களின் பாராட்டு விழா ஒன்றில் நடிகர் பார்த்திபன் அவர்கள் மேடையில் பேச தொடங்கும் போது சொன்னது...இன்றைய பதிவுக்கு பொருத்தம் என்பாதால் சொன்னேன் ...
அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்களிடம் நேற்று முதல் பல ஆஸ்கர் விருதுகள் வாங்கிவிட்டேன் நன்றி ஐயா
ReplyDeleteகுழந்தையின் கிறுக்கல் என்றே என் எழுத்தை எண்ணி வந்தேன் இப்ப உங்கள் பாராட்டுகள் மூலம் கொஞ்சம் பெரிய குழந்தை ஆகிவிட்டேன் நன்றி நன்றி .. (இனி சுவற்றில் கிறுக்க மாட்டேன் ஹி ஹி ) நன்றி நன்றி ஐயா
நண்பர் அமுதவன் அவர்களே உங்களுக்கு நான் ஏன் சிபாரிசு செய்ய போகிறேன் உணகளிடம் வாழ்த்து வாங்க தான் இங்கே அழைத்தேன் நன்றி
புலவர் ஐயா உங்களிடமும் வாழ்த்து வாங்க தான் அழைத்தேன் வந்து சிறப்பித்ததற்க்கு நன்றி ..
வளைக்கும் சலம் சகோ ஆஷிக் வந்து சிறப்பித்து சென்றதற்கு நன்றி
வலைச்சரத்தின் துணையுடன் பல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள் அன்பின் சீனா ஐயா மிக்க நன்றி ...
ReplyDeleteஇன்று அறிமுகம் ஆனா அனைவரின் வெற்றிகளிலும் தமிழ் தாய் பூரிபார்கள்,தாயுள்ளத்தோடு நானும் இங்கே கருத்திட்ட அனைவரும் சந்தோசம் கொள்வோம்
நன்றி நன்றி நன்றி
அன்பின் ரியாஸ் அஹமது - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - புதுப் பதிவர்கள் உள்ளிட்ட பல பதிவர்களின் பதிவுகள் அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கின்றன. அததனை சுட்டிகளையும் சுட்டி, அங்கு சென்று, பார்த்து, படித்து, இரசித்து மகிழ்ந்து, அங்கேயே மறுமொழிகளும் இட்டிருக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் சீனா ஐயா ...இது நீங்கள் தந்துள்ள வாய்ப்பு இதை முடிந்த அளவு சிறப்பாக செய்து உங்களுக்கு சிறப்பு சேர்ப்பேன். என் தவறுகளை பொருத்து அருளவும்
ReplyDeleteநன்றி நன்றி
பலர் எனக்கு புதியவர்கள் சென்று பார்த்து வருகிறேன். தொடருங்கள் தங்கள் பணியை.
ReplyDeleteசுபத்ராவின் கவிதைகள் அடடா என்ன அழகு காதல் ததும்புகிறது நன்றிங்க பகிர்ந்தமைக்கு.
ReplyDeleteகலக்குறே ரியாஸ். வாழ்த்துக்கள். தொடரட்டும் உன் பணி
ReplyDeleteகலக்குறே ரியாஸ். வாழ்த்துக்கள். தொடரட்டும் உன் பணி
ReplyDeleteதவிர்க்க இயலாத முக்கிய பதி(வர்களின் பதி)வுகளை நறுக் அறிமுகம், இன்று. மிக்க நன்று!
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
Thank U Sasi Kala akka :)
ReplyDeleteஇன்றைய அசத்தலான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..
ReplyDelete