“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!”
இது என் வலைபக்கத்தில் இருக்கும் கவிஞர் வாலி ஐயாவின் வரிகள் இவை !ஊக்குவிப்பதை ஒரு அழகிய பண்பாக அதையே கண்போல பாவித்து வரும் தளம் வலைச்சரம்!இங்கே நான் இந்த ஆண்டை ஆசிரியராக தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைக்றேன்! பொறுப்பாசிரியர் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும் நன்றி சொல்ல வார்த்தை தேடி தோற்கிறேன்! பதிவுலக்கு மட்டும் நீங்கள் நன்மை செய்யவில்லை தமிழுக்கே ஆற்றும் தொண்டு இது! உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும் இறைவன் தர பிராதிக்குறேன்!
சரி இப்ப தலைப்புக்கு வருகிறேன் ! இந்த வீடியோவை பாருங்களேன் !
இந்த காணொளியில் உள்ளது போல் நாமும் அங்கீகாரம் நாடி.. தேடி.. தேடி ,ஒரு கட்டத்தில் பதிவுலக அரசியலில் சிக்கி கொள்கிறோம்.பதிவுலக அரசியல் என்பது என்ன ? நீ எனக்கு கமென்ட் போட்ட நான் போடுவேன் நீ வாக்களித்தால் நானும் வாக்களிப்பேன் என்கிற மனப்பாங்கு தாங்க அது ! மேலும் இப்ப புதுசா ஒரு குழுவா செயல்பட்டு மகுடம் சூட்டிகொள்வதும் கூட நடக்குது !இதை தவிர்க்க நினைத்தால் நாம் தனிமரம் ஆகிவிடுகிறோம்! அப்படி நான் தனிமரமாக இருந்த போது கிடைத்தது தான் இந்த ஆசிரியர் பொறுப்பு. விடுவேனா இதோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நானும் தோப்பாக முயற்சிக்க போகிறேன் சுயநலத்துடன் .. அட பயப்புடாதிங்க சுயநலம் இன்னைக்கு மட்டும் தான் நாளை முதல் அறிமுகங்கள் இருக்கு ...
என்னை பதிவுலகில் எழுத கைபிடித்து கூட்டி வந்தது நண்பர் ரஹீம் கசாலி அவர்கள் தான்! (அட திட்டாதிங்க அவர் அவர் செய்த ஒரே தவறு இது தான் மன்னிச்சுடுங்க ப்ளீஸ் )
நான் என் தளத்திற்கு முதலில் வைத்த பெயர் வயைபாயுதே சுடதோனுதே .. விகடனில் வரும் வலைபாயுதே போல செயல் பட தாங்க நினைத்தேன் .. படிக்க படிக்க எழுதவும் ஆசை வந்து கட்டுரைகள் எழுதினேன் ..கிடைத்தது வலைச்சர அறிமுகம் அமாங்க இதுவரை ஆறு முறை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தபட்டுள்ளேன்.என்னை ஊக்குவித்த நண்பர்கள் முறையே நண்பர் கவிதை வீதி சௌந்தர் ,நண்பர் ராஜபாட்டை ராஜா ,ரமணி ஐயா, சென்னைபித்தன் ஐயா,முனைவர் இரா.குணசீலன் ,நண்பர் ஹாஜா மைதீன் ஆகியோர்.உங்கள் அனைவருக்கும் இன்று நன்றி கூற கடமைபட்டுள்ளேன் !
நான் ஒரு அரைவேக்காடு தாங்க . அதுனால தான் தலைப்பே நுனிபுல்லில் பனித்துளி ன்னு உண்மையை சொல்லி எழுதிக்கொண்டு இருக்கேன்!
நான் எழுதியதில் நான் நேசிக்கும் பலர் என்னை உச்சி முகர்ந்து பாராட்டிய கவிதை இது ...
இன்று எனக்கு மரணம் தற்கொலை
அட பயந்துட்டீங்களா இதோ காதல் சொல்லுறேன்
அரசியல் ஈடுபாடு இல்லை .. அரசியல் கவிதை படைத்தது பாப்போம் என்ற முயற்சி தான் இவை இரண்டும்
சினிமாவில் டைரக்ட்டர் ஆக சில காலம் முயற்சி செய்தேன்.ஆனா விதி வலியது சினிமா உலகம் பிழைத்து கொண்டது ! விட்ட குறை பதிவுலகில் இதோ ....
மேலும் அதிகமான பேஜ் வியுவ்ஸ் கிடைத்த பதிவு இதுங்க ..இது தலைப்புக்கு கிடைத்த மரியாதை ,இது கிசு கிசு அல்ல சிறுகதை தான் ..
கதாப்பாத்திரங்களின் பெயர்கள் சொல்லாமல் நான் எழுதிய முதல் சிறுகதை இது ..
இவை தவிர வழக்கமான கருபொருள்களை தவிர்த்து சில வித்தியாசமான கவிதைகள் படைத்தது இருக்கிறேன் அவை இந்த வாரம் முழுதும் என் தளத்தில் மீள் பதிவுகளாக ... படித்து பாருங்களேன் ..
புதிய அறிமுகங்களுடன் நாளை சிந்திப்போம் நண்பர்களே ............
வாழ்த்துக்கள் ரியாஸ்!
ReplyDeleteவலைசரத்தில் உங்களை பற்றிய அறிமுகம் அருமை! உங்கள் பதிவுகள் இன்று தான் பார்கிறேன். இனி தொடர்கிறேன்...
எழுத்து நடை அருமை !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
வாழ்த்துக்கள் ரியாஸ். இந்த வாரம் சிறப்புடன் பணி செய்திட வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்கள் அறிமுகம் அசத்தலாக இருக்கிறது
ReplyDeleteதம்பி ரியாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete//நீ வாக்களித்தால் நானும் வாக்களிப்பேன் என்கிற மனப்பாங்கு தாங்க அது ! மேலும் இப்ப புதுசா ஒரு குழுவா செயல்பட்டு மகுடம் சூட்டிகொள்வதும் கூட நடக்குது !இதை தவிர்க்க நினைத்தால் நாம் தனிமரம் ஆகிவிடுகிறோம்!//
கமெண்ட்சையும் வாக்கையும் எதிர்பார்த்து பதிவு எழுதாதீர்கள் தம்பி. உங்கள் மனதிற்கு பிடித்ததை படித்ததை உங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து எழுதிவாருங்கள் அது நன்றாக இருக்கும் பட்சத்தில் ஆட்டோமெடிக்காக பலரும் படிக்க வருவார்கள். கமெண்ட்ஸ், எழுதுபவனுக்கு மிக உற்சாகம் அளிப்பவைதான் அதை மறுக்கவில்லை ஆனால் அதை மட்டும் எதிர்பார்த்து பதிவு எழுதாதீர்கள்.
தனிமரமாக இருந்தாலும் தனித்து இருங்கள் அதுதான் எளிதாக எல்லோர்கண்களிலும் படும்.. நான் யாருக்கும் ஒட்டு போடுவதில்லை அது போல எனக்கும் எந்தவித ஒட்டுகளும் வருவதில்லை இருந்த போதிலும் என்பதிவுகளுக்கு வரும் எண்ணிக்கை குறையாமல் வந்து கொண்டிருக்கிறது.. நான் எனக்கு நேரம் கிடைக்கும் போதுமட்டும் மற்றவர்களுக்கு பின்னுட்டம் அளிப்பேன். அது போல நீங்களும் நேரம் கிடைத்தால் மற்றவர்களின் பதிவிற்கு பின்னுட்டம் இடுங்கள்.
நீங்கள் தமிழ்மணத்தில் மகுடம் சூடுவதை பற்றி கவலைபடாமல் எழுதுங்கள் நிச்சயம் ஒரு நாள் முதல் 50 க்குள் வருவீர்கள். எந்தவித ஒட்டும் இல்லாமல் குழும கூட்டங்கள் இல்லாமல் அதில் நானே வந்துள்ளேன். உங்கள் நண்பர்களிடம் சொல்லி ஒட்டுப் போட்டு முதலிடம் வரலாம் அதனால் என்ன லாபம் அந்த நபர்கள் மட்டுமே ஒட்டு போட்டும் கமெண்ட்ஸும் போடுவதால் உள்ள பயன் படிப்பவர்களின் எண்னிக்கையில் ஒன்று இரண்டு கூடும் அவ்வளவுதான் அதனால் வோட்டுகளை பற்றி கவலைபடாமல் நீங்கள் எழுதும் பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்தி வாருங்கள்.. நிச்சயம் வெற்றி பெருவீரகள் தம்பி
வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள், தோழரே... அறிமுகம் அருமை..
ReplyDeleteஉங்களின் அறிமுகம் மூலமாக உங்களை என் வட்டத்தில் இணைத்து கொண்டேன்.
அனைவருக்கும் நன்றி !நன்றி நன்றி !
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க வந்த ரியாஸ் அஹமது (நுனிபுல்லில் ஓர் பனித்துளி !! http://tamilyaz.blogspot.com ) அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் ஊக்கு விற்றாலும் பாக்கு விற்றாலும் நாங்கள் வாங்க தயார்!
ReplyDeleteAvargal Unmaigal உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா ! நீங்கள் சொல்வதையே கடைபிடித்து வருகிறேன்... எழுதுவதும் ஆத்மதிருப்திக்கே என்பதால் வருத்தம் ஏதும் இல்லை.வலைச்சரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றம் வரலாம் என்றே சொன்னேன்.ஜோதிஜி அவர்கள் விடைபெற்ற போதும் இந்த கருத்தையே அழகாக சொல்லி சென்றார் http://blogintamil.blogspot.com/2013/01/7.html .. மீண்டும் நன்றி அண்ணா
ReplyDeleteவித்தியாசமான அறிமுகம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்ன விதம் அழகு இது தான் உண்மையில் சுய அறிமுகம் சிறப்புங்க. அவர்கள் உண்மைகள் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.
ReplyDeleteவாருங்கள் ரியாஸ்!
ReplyDeleteஜோதிஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுப் போயிருக்கிறார். உங்களிடமிருந்தும் ஒரு வித்தியாசமான வாரத்தை எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்!
அன்பு நண்பர் ரியாஸ் அஹமது அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
தாங்கள் இந்த வார வலைச்சர ஆசிரியரானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
என் அன்பான பாராட்டுக்கள் + இனிய வாழ்த்துகள்.
>>>>>>>>
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.காணொளி அருமை.
ReplyDeleteமேலே என் அன்புத்தம்பி .. தங்கக்கம்பீ “அவர்கள் உண்மைகள்” வெகு அழகாக எழுதியுள்ள கருத்துக்களை நானும் அப்படியே முன்மொழிந்து வழிமொழிந்து கொள்கிறேன்.
ReplyDelete>>>>>>>>>
2011 ஏப்ரில் மாதம் முதல் 2011 டிஸம்பர் மாதம் வரை 9 மாதங்கள் மட்டுமே தமிமணத்திலும் இன்ட்லியிலும் என் பதிவுகள் இணைக்கப்பட்டு இருந்தன.
ReplyDeleteஅதற்குள் என் 50 க்கும் மேற்பட்ட பதிவுகள் இன்ட்லியில் பிரபலப்படுத்தப்பட்டன.
அதுபோல அந்த 9 மாதங்களுக்குள் நான் தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவர் ஆக்கப்பட்டேன்.
அந்த நட்சத்திரப்பதிவராக இருந்த நவம்பர் 2011, ஒரே வாரத்தில், நான் 28 பதிவுகள் கொடுத்து சாதனை படைத்ததாகச் சொன்னார்கள்.
அந்த வாரத்தில் மிகச்சிறந்த பதிவர் என்ற முதல் ரேங்கும் எனக்கே கிடைத்ததாகச் சொன்னார்கள்.
அந்த ஆண்டின் மிகச்சிறந்த ஒட்டு மொத்த எழுத்தாளர்களில் எனக்கு 15 ஆவது ரேங்க் தமிழ்மணத்தில் கொடுத்திருந்தார்கள் எனவும் கேள்விப்பட்டேன்..
இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு தமிழ்மணம் என்றால் என்ன?, இன்ட்லி என்றால் என்ன?, அதில் வோட் அளிப்பது என்றால் என்ன? அதுபோல பிறர் நமக்கு வோட் அளிப்பது அதை நாம் பெறுவது என்றால் என்ன? அதனால் என்ன பயன்? என்ற எந்த விபரங்களுமே எனக்கு இன்று வரை புரியாத ஓர் புதிராகும்.
என் வலைத்தளத்தினை தமிழ் மணத்திலும் இன்ட்லியிலும் இணைத்துக்கொடுத்ததும் வேறு ஒருவர்.
அவர் என்னை வற்புருத்தி என் வலைத்தளத்தின் ID + PASSWORD முதலியனவற்றைக் கேட்டுப்பெற்று அவர்களாகவே இணைத்துக் கொடுத்தார்கள்.
பிறகு 01 01 2012 அன்று என் வலைத்தளத்திலிருந்து இந்த தமிழ்மணம் + இன்ட்லி ஆகிய வோட் பட்டைகள் எங்கோ காணாமல் போய் விட்டன.
காணாமல் போய் இப்போது ஒரு வருடம் ஆகியும் நான் அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை.
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
இதைப்பற்றியெல்லாம் எந்தக்கவலையும் படாமல் நாம் ஏதாவது எழுதிக்கொண்டே போக வேண்டும்.
என் அன்புத்தம்பி “அவர்கள் உண்மைகள்” மேலே சொல்லியுள்ளபடி, ஒரு நாள் நீங்களும் மற்றவர்களால் நிச்சயம் உணரப்படுவீர்கள். புகழின் உச்சிக்கே வருவீர்கள்.
>>>>>>>>
ரியாஸ் அகமது உமது ஆசிரிய வாரம் சிறப்புற
ReplyDeleteஇனிய வாழ்த்து.
( மலேசிய பயணம் எழுதியுள்ளேன் வலையில் பார்க்கலாம்.
வேதா. இலங்காதிலகம்.
http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html
ReplyDeleteஎன்னுடைய மேற்படி இணைப்பினில் “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற காதல் காவியம் நான் எழுதியிருந்தேன்.
அதன் நான்கு பகுதிகளையும் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் படித்து பல கருத்துக்களும் எழுதியிருந்தீர்கள்.
அதில் இந்த மூன்றாவது பகுதிக்கு தாங்கள் கொடுத்திருந்த இரண்டு பின்னூட்டங்களை நான் வெகுவாக ரஸித்து மனதில் பத்திரமாக இன்றும் வைத்துக்கொண்டுள்ளேன்.
oooooooo
1] ரியாஸ் அஹமது
June 22, 2011 10:07 PM
truth is stranger than fiction
என்று சொல்வார்கள் ...அந்த மாதிரி நிஜத்தை வாசகர்களின் எண்ணங்களுக்கு கடத்தி மிக பெரிய சாதனை செய்து விட்டீர்கள் ஐயா,கண்ணியமான வாழ்க்கை கண்ணியமான எழுத்து ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.
2] ரியாஸ் அஹமது
June 22, 2011 10:13 PM
**மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என ] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள்.**
for me the most touching part in this post.. அந்த பெண்ணின் கணவனும் பாக்கியசாலியே இந்த அன்பில் பத்து சதவிதம் கணவனிடம் பகிர்ந்தாலும் போதுமே ஐயா.. அடுத்த முறை பார்த்தால் சொல்லுங்கள் நீ துரதிஷ்டசாலி இல்லை என்று.
oooooooooo
அந்த ஓரளவு உண்மைக்கதையை [என் அனுபவக்கதையை] படித்த உங்களுக்கே இவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றியுள்ளபோது, அந்த கதாபாத்திரத்துடன் உண்மையாகவே பழகி, இந்த உண்மைச் சம்பவங்களை அனுபவித்த எனக்கு எப்படியிருந்திருக்கும் என நினைத்துப்பாருங்கள்.
>>>>>>>>>
தாங்கள் இதுபோல எனக்கு என் பல பதிவுகளுக்கு கருத்துக்கள் கூறி மகிழ்வித்திருந்தும், என்னால் தங்களின் பதிவுகள் பக்கம் வர இயலவில்லை.
ReplyDeleteஅதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
>>>>>>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteதங்களின் சுய அறிமுகமும், ஆதங்கங்களும் மிகவும் அருமையாய உள்ளன.
ReplyDeleteஇந்த வார தங்களின் வலைச்சரப்பணி மிகவும் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.
அன்புடன் தங்கள்,
VGK
அருமையான தலைப்பை வைத்து அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள் ஜி
ReplyDeleteநீங்க கலக்குங்க நண்பா ...
ReplyDeleteநானும் உங்களை போல வளரும் பதிவர்தான் ... நீங்க நல்லா எழுதுறிங்க அதான் உங்களை பாராட்டுறோம் . மற்றவர்களை பற்றி கவலை படாதிங்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் . தொடர்ந்து கலக்குங்கள்
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள் நீண்ட விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நிறைந்தது நன்றி நன்றி
ReplyDeleteநீங்கள் என் கருத்துகளை ஞாபகம் வைத்து இருப்பது பிரமிப்பை ஏற்படுத்தியது ஐயா,அதை ரசித்தது பெருமையும் அளிக்கிறது ஐயா ..நன்றி
ஐயா நீங்கள் என் தளத்திருக்கு வந்து என் எழுத்தின் மேல் நம்பிக்கை தந்த நாட்களும் இருக்கிறது அவை நான் ஆஸ்கர் பெற்றதற்கு சமம் நிஜமாக சொல்கிறேன் ஐயா. நன்றி
வலைச்சரத்தில் நான் முதலில் கூறியுள்ள கவிதைக்கும் வந்தீர்கள் மேலும் இன்று என் வலைப்பூவில் மீள்பதிவாக பகிர்ந்துள்ள கவிதைக்கும் வந்து சிறப்பிதீர்கள் ஐயா நன்றி நன்றி
அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி இந்த வாரம் முழுவதும் உங்கள் ஆதரவை நாடும் நண்பன் சகோதரன் ரியாஸ்
ReplyDeleteசுய அறிமுகம் நல்லா இருக்குங்க. ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//ரியாஸ் அஹமது said...
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள் நீண்ட விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நிறைந்தது நன்றி நன்றி//
மிக்க நன்றி, நண்பரே.
நீங்கள் என் கருத்துகளை ஞாபகம் வைத்து இருப்பது பிரமிப்பை ஏற்படுத்தியது ஐயா,அதை ரசித்தது பெருமையும் அளிக்கிறது ஐயா ..நன்றி //
அது எப்படி என்னால் மறக்க முடியும்
[மறக்க மனம் கூடுதில்லையே ;)))]
அந்த என் சிறுகதைப்பகுதியினை ஒருசிலர் படித்துள்ளார்கள்.
நிறைய கருத்துக்களும் எழுதியுள்ளார்கள்.
அதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.
அதில் உங்களைப்போன்ற ஒருசிலர் எழுதியுள்ள கருத்துக்கள் மிகவும் ஆத்மார்த்தமானவை.
இது போல என் எழுத்துக்களை முழுவதுமாக ரஸித்துப் படித்து மனம்திறந்து ஆத்மார்த்தமாகக் கருத்துக்கள் கூறுபவர்களை நான் தெய்வமாக நினைப்பவன்.
அவர்களை என்னால் என்றுமே மறக்க முடியாது.
அத்தகைய வாசக நண்பர்களின் ஆத்மார்த்தமான கருத்துக்களைவிட ஒரு சிறப்போ, பரிசோ, பட்டமோ, வோட்டுக்களோ, பிரபலமாக வேண்டும் என்ற என்னமோ எனக்கு எப்போதுமே கிடையாது.
என்னைப்பொருத்தவரை நான் எழுதிய அந்தக்கதையைப் படித்து ரஸித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே.
படிக்க வாய்ப்பு கிட்டாதவர்கள் எல்லோரும் துரதிஷ்டசாலிகளே,
என நான் நினைத்துக்கொள்வதுண்டு.
இதுபோல நாம் நினைத்துக்கொண்டு, எழுதிக்கொண்டே செல்ல வேண்டும் என்பதைத் தங்க்ளுக்கு அறிவுருத்த மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
ஏற்கனவே வாய்ப்பு இழந்தவர்களுக்காக என் அந்தக் காதல் காவியத்தின் முதல் பகுதிக்கான இணைப்பினை இங்கு மீண்டும் தருகிறேன்.
”மறக்க மனம் கூடுதில்லையே!”
[காதல் அனுபவம் சிறுகதை]
இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
>>>>>>>>>>
VGK to Mr. ரியாஸ் அஹமது Sir
ReplyDeleteதொடர்ச்சி.
//ஐயா நீங்கள் என் தளத்திருக்கு வந்து என் எழுத்தின் மேல் நம்பிக்கை தந்த நாட்களும் இருக்கிறது அவை நான் ஆஸ்கர் பெற்றதற்கு சமம் நிஜமாக சொல்கிறேன் ஐயா. நன்றி //
நினைவூட்டலுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நண்பா.
அடடா, ஆஸ்கார் விருதா? ;)))))
அச்சா, பஹூத் அச்சா.
//வலைச்சரத்தில் நான் முதலில் கூறியுள்ள கவிதைக்கும் வந்தீர்கள் மேலும் இன்று என் வலைப்பூவில் மீள்பதிவாக பகிர்ந்துள்ள கவிதைக்கும் வந்து சிறப்பிதீர்கள் ஐயா நன்றி நன்றி //
அங்கு இப்போது மீண்டும் சென்று பார்த்தேன். தாங்கள் சொல்வது உண்மைதான். நான் தான் மறந்து போய்விட்டேன். மகிழ்ச்சி, மகிழ்ச்சி.
நீங்கள் காட்டியுள்ள காணொளியும் நான் ஏற்கனவே பார்த்து ரஸித்த ஒன்று தான்.
அதையும் தங்கள் வலைப்பதிவினில் தான் பார்த்திருப்பேனோ என்னவோ!
சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. மீண்டும் இங்கு கண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
நன்றியுடன் VGK
வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteAvargal Unmaigal முன்வைத்த கருத்துகள் எனக்கும் ஏற்புடையவை.
ReplyDeleteதனி மரமாயினும் தனிப் பயனுள்ள பதிவுகளை வெளியிட்டிருக்கிறீர்கள்.
தோப்பில் கலக்கும் வாய்ப்புக் கிடைத்த பின்னரும் சிறந்த பதிவுகளை எழுத என் மனப்பூர்வ வாழ்த்துகள்.
இது பிரதிபலன் கருதிய பதிவல்ல என்பதை மறவாதீர்கள்.
அற்புதமான துவக்கம்...
ReplyDeleteதன்னை தாழ்த்துகிறவனே உயர்தத்ப்படுவான்....
வெற்றியடைய வாழ்த்துக்கள்...
ஆரம்பமே அற்புதம்.துணிவாய் தொடருங்கள் துணையாய் இருக்கிறோம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உங்கள் வாராமா வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் ரியாஸ் - சுய அறிமுகம் அருமை - 8 பதிவுகள் - அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள் - அத்தனையும் அருமை - சுட்டியினைச் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - மகிழ்ந்து - மறுமொழி இட்டு - வந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteரியாஸ் அஹமது (அண்ணா)
இன்று வலைச்சரப் பொறுப்பேற்றதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது முதலாம் நாள் நல்ல பதிவாக அமைந்துள்ளது இன்று அறிமுகமான தளங்கள் அனைத்தும் எனக்கு புதியவை வாழ்த்துக்கள் அண்ணா தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !
ReplyDeleteஅன்பின் சீனா ஐயா ,அன்பின் வை.கோபாலகிருஷ்ணன் ஐயா , அன்பு தம்பி ரூபன் அவர்களே உங்கள் பொன்னான நேரத்தை என் எழுத்தை சிறப்பிக்க தந்து என்னை இன்ப கடலில்
மூழ்க வைதுவிடீர்கள் ..இனி என்றும் மூழ்காமல் இருக்க பாடுபடுவேன் நம் நட்பும் என் எழுத்தும் நன்றி நன்றி
வணக்கம்
ReplyDeleteரியாஸ்(அண்ணா)
நீங்கள் மலேசியாவில்தான் உள்ளீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் கைபேசி இலக்கத்தை என் ஈமெயில் முகவரிக்கு rupanvani@yahoo.comஅனுப்புங்கள் பேச,நானும் மலேசியாதன்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-