இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப்
பொறுப்பேற்ற திருப்பூரினைச் சார்ந்த அருமை நண்பர் ஜோதிஜி தான் ஏற்ற பொறுப்பினை
அவரது விருப்பப்படி நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் பல்வேறு காரணங்களினாலும். கடும் பணிச்
சுமையினாலும் சற்றே வழக்கத்திற்கு மாறாக புது முறையில் வலைச்சரப் பதிவுகளை எழுதி
இருக்கிறார். இப்புது முறைக்கான
காரணத்தினையும் என்னிடம் அலைபேசியில் தெளிவாக - நானும் உடன்படும்படியாகக்
கூறினார்.
இவர் எழுதிய பதிவுகள் : 7
அறிமுகம் செய்த பதிவர்கள் : 45
பெற்ற மறுமொழிகள் : 165
நண்பர் ஜோதிஜியினை வாழ்த்தி வழி அனுப்புவதில்
பெரு மகிழ்சி அடைகிறேன்.
நாளை துவங்கும்
வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் - மலேசியாவில் வசிக்கும்
நண்பர் ரியாஸ் அகமது.
ரியாஸ் அகமது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவr. கடந்த ஏழு வருடங்களாக மலேசியாவில் இருக்கிறார். .முதலில் ஒரு நாணயம் மாற்றும் கடையில் வேலை செய்து வந்தவர். தற்போது அதே தொழிலை சொந்தமாக சிறுதொழிலாக செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்காளாக பதிவுலகில் எழுதி வருகிறார். இது வரை 160 பதிவுகள் எழுதி இருக்கிறார்.இதில் ஆறுமுறை வலைச்சரத்தில் அறிமுக படுத்தபட்டு இருக்கிறார்.!
வாசிக்கும் பழக்கம் அதிகமுண்டு ஆனால் எழுத முடியும் என்ற நம்பிக்கை விதை வலைச்சர அறிமுகங்கள் தான் கொடுத்தது !
நண்பர் ரியாஸ் அஹமதை வருக ! வருக ! பொறுப்பேற்க
வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஜோதிஜி திருப்பூர்
நல்வாழ்த்துகள் ரியாஸ் அஹமது
நட்புடன் சீனா
vaazhthukkal!
ReplyDeleteriyas avarkalukkum!
jothi ji avarkalukkum..
ரியாஸ் அஹமது அவர்கள் வருகிறார்கள் என சொன்னதோடு ,அவரது வலைப்பதிவின் சுட்டியும் இணைத்திருக்கலாம், இப்போ "who is riaz ahmad?" என தேட வேண்டியதா இருக்கு :-))
ReplyDeleteநாளைக்கு தானா தெரியப்போவுது இப்ப எதுக்குன்னு சொல்லுறிகளா, அதுவுஞ்செரிதேன் :-))
வரவுங்களுக்கு ஒரு வாழ்த்தும்,போறவுங்களுக்கு ஒரு பாராட்டும் கொடுப்போம்!
வாழ்த்துகள்.
ReplyDeleteநேற்றுவரை முற்றிலும் மாறுபட்ட புதிய முறையில் பணியாற்றி விடை பெற்றுச் செல்லும் வலைச்சர ஆசிரியர் திரு. ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கும், நாளை முதல் வலைச்சரத்தில் பொறுப்பேற்றுக்கொள்ளும் புதிய வலைச்சர ஆசிரியர் திரு. ரியாஸ் அஹமது அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் வவ்வால் - எப்பொழுதும் புதிய ப்திவரை அறிமுகப் படுத்தும் பொழுது அவரது தளத்தின் சுட்டி கொடுப்பது வழக்கம். நேற்று அடிக்கடி ஏற்பட்ட மின் தடையும் - கணினியின் ஒத்துழையாமை இயக்கமும் இந்த சிறு பதிவினை இடவே இரண்டு மணி நேரம் ஆகி விட்டது - நள்ளிரவு - அதிகாலை 01:30 மணிக்குத்தான் போனால் போகிறதென்று கணினி ஒத்துழைத்தது.
ReplyDeleteசரி கணினித் திரையின் இடது பக்கம் அவரது தளத்தின் சமீபத்தைய 5 பதிவுகள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன்வே - அவை தங்கள் பாரவைக்குப் பட வில்லையா ?
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வலைச்சரத்தில் இருந்து வேண்டுமானால் ஜோதிஜி விடை பெறலாம் ஆனால் பதிவு உலகை நல்ல முறையில் கொண்டு செல்லும் ஒரு மிக நல்ல தலைமை ஆசிரியர் அவர் ஆவார். பதிவுலகில் அவர் ஒரு ஸ்டார்.. வாழ்த்துகள் ஜோதிஜி ...உங்களை தொடர்ந்து வருகிறோம் வாழ்க வளமுடன். டாலர் நகரம் புத்தக வெளியிட்டு விழா மிகவும் சிறப்பாக நடை பெறவும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ReplyDeleteஏற்றுக்கொண்ட பணியினை சிறப்பாக நிறை வேற்றிய ஜோதிஜி அவர்களுக்குப்பாராட்டுக்கள். புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletewelcom riyaz
ReplyDeleteவலைச்சரத்தின் சென்ற வார ஆசிரியரின் சிறப்புப் பணிக்கும், புதிய ஆசிரியரின் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதிரு ஜோதிஜி அவர்களுக்கு பிரியாவிடையும், திரு ரியாஸ் அவர்களுக்கு நல்வரவும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜோதிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்வரவு ரியாஸ் அஹமது.