Thursday, January 31, 2013

வரவேற்போம் புதியவர்களை... உற்சாகப்படுத்துவோம் அவர்களை...


ந்தப் பதிவில் வலை உலகுக்கு மிகப் புதியவர்களையும், அற்புதமான புதிய தளங்களையும் அறிமுகப் படுத்தியுள்ளேன். பதிவுலகில் சிறப்பாக செயல்பட அவர்களை ஊக்கப்படுத்துங்கள்    



ன்னுடன் பணிபுரிபவன். இளைஞன். சமீபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு நானும் அவனும் சென்றிருந்தோம். வட்டியும் முதலும் ராஜு முருகன் "யாவரும் எழுதலாம்" என்ற தலைப்பில் பேசப்போவதாக அறிவித்திருந்தார்கள். அவருடைய பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறியிருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பினான், வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். வந்து பாருங்கள் என்று. முதல் ஆச்சரியம் அவன் வலைபூ ஆரம்பித்தது. இரண்டாவது ஆச்சரியம் ராஜு முருகன் அவர்களின் பேச்சின் தாக்கத்தில் ஆரம்பித்துள்ளேன் என்று குறிபிட்டுள்ளது. 

ஒரு சிறுகதையும் எழுதியுள்ளான். ஊக்கபடுத்துங்கள். 


வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்  


திருப்பூர் தொழிற்களம் திருவிழாவில் வைத்து இவர் பழக்கம் ஏற்பட்டது. தனியாக நின்று கொண்டிருந்தார். பதிவர்களைப் படிக்கும் வாசகன். இன்னும் எழுதத் தொடங்கவில்லை. விரைவில் எழுதத் தொடங்க வேண்டும் என்று கூறினார். அவர் தொடர்ந்து படித்து வரும் பதிவர்கள் குறித்தும் பதிவுகள் குறித்தும் பகிர்ந்தார். திருப்பூர் சந்திப்பும் அங்கு இவர் சந்தித்த பதிவர்களும் உற்சாகம் கொடுக்க,  எழுதத் தொடங்கிவிட்டார்.

இவரது வார்த்தை கையாடல்கள் அருமையாக உள்ளது. இவரது பதிவைப் படித்துப் பாருங்கள். 


ஊக்கபடுத்துங்கள். வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்.


வரும் வாசகராக இருந்து பதிவர் ஆனவர் தான். மிகக் குறைவாகவே பதிவெழுதுகிறார், ஆனால் பதிவுலகில் உற்சாகமாக வலம் வருகிறார். பயணக்கட்டுரைகள் எழுதுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்று நினைக்கிறன். ஸ்கூல் பையன் சார் (பெயர் தெரியாததால் இப்படி எல்லாம் குழம்ப வேண்டி இருக்கிறது) இன்னும் நிறைய பதிவுகள் எழுதுங்கள்.   


ஊக்கபடுத்துங்கள். வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்.


குசும்பு குட்டன் என்றால் இவர் இன்னும் மகிழ்ச்சி அடைவார். இவரது பதிவுகளுக்கு இவர் வைக்கும் தலைப்புகளே கொஞ்சம் வித்தியாசமாய்த் தான் இருக்கும். நாம் படித்த ஏதேனும் ஒரு ஈசாப் நீதிக் கதையையோ அல்லது முல்லா கதையையோ அவர் பாணியில் பகிர்வார்.  முகம் காட்டாமல் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பதிவர்.

விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!


ஊக்கபடுத்துங்கள். வலையுலகில் சிறந்த பதிவராக வலம் வர வாழ்த்துக்கள்.


புதிதாக தொடங்கபட்டிருக்கும் தளம். பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்தும் கற்போம் பிரபுவும் இணைந்து தொடங்கியுள்ள தளம். 

கணிபொறி, மொபைல், மென்பொருள் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளை இங்கு பதியலாம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். தமிழ் வலையுலகில் சிறந்த கலை செல்வமாக பதில் தளம் மாற வாழ்த்துக்கள்.

பதில் தளம் பற்றி எனது பதிவு



வீடு சுரேஷ், தேவியர் இல்லம் ஜோதிஜி, ரவு வானம் சுரேஷ் இன்னும் சில பதிவர்கள் இணைந்து நடத்தும் வலைதளம் தமிழ்செடி. தமிழின் பெருமை தமிழனைத் தவிர அனைவருக்கும் புரிகிறது அதைத் தமிழனுக்கும் புரிய வைப்போம் என்னும் உயர்ந்த எண்ணத்தில் தொடங்கப்பட்ட தளம். தமிழின் தொன்மை அடங்கிய ஓலைச் சுவடிகளை ஆய்ந்து தொகுக்க இருகிறார்கள் என்பது கூடுதல் செய்தி.


பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்செடி தளம் சார்பில் விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

சென்னை பதிவர் சந்திப்பு 2012

லகெங்கும் உள்ள தமிழ் வலைப்பதிவர்கள் பங்கு கொண்டு சிறபித்த பதிவர் சந்திப்பு கடந்த வருடம் சென்னையில் நடைபெற்றது. மதுமதி அவர்களின் உழைப்பு இந்தப் பதிவர் சந்திப்பில் மிக முக்கியமானது. பதிவர் சந்திப்பு முடிந்து அனைவரும் கலைந்து அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் மதிமதி பதிவர் சந்திப்பு குறித்த அணைத்து பதிவுகள் மற்றும் கானொளிகளைத் தொகுத்து அதையே ஒரு வலைபூவாக மாற்றியுள்ளார். மிக்க நன்றி மதுமதி. 

காலம் அளிக்க முடியா பொக்கிஷம் நிறைந்த வலைபூ.     
      

Wednesday, January 30, 2013

பதிவுலகால் சாத்தியமாயிற்று ....!


இந்தப் பதிவில் நான் பதியப் போகும் நபர்கள் நண்பர்கள் பதிவர்கள் என்னைப் பொருத்தவரை சற்றே முக்கியமானவர்கள். நான் பொறாமைப்படும் லிஸ்டில் இவர்களது தனித்துவங்களும் உண்டு.  

மதுமதி என்னை முதன் முதலில் சந்தித்த பொழுது சொன்னார் "டெரர் கும்மி மாதிரி அடுத்த குரூப் பார்ம் ஆயிட்டு வருது போல". எனக்கு டெரர் கும்மி பற்றியெல்லாம் அப்போது தெரிந்திருக்கவில்லை. "நாம அப்படியெல்லாம் ஒன்னும் டெரர் வேல பாக்கலியே" என்று மனம் வேறு சிந்தித்து. அப்போது மெட்ராஸ் பவன் சிவகுமாரும் டெரர் கும்மியின் ஆயுட்கால உறுப்பினர் பட்டிகாட்டான் ஜெய்யும் டெரர் கும்மி பற்றி விளக்கம் கொடுத்தார்கள்.

 அவ்வளவு தான் உற்சாகம் பற்றிக் கொண்டது, சங்கம் வைத்து பெருமை சேர்ப்பதற்காக நாங்களும் சங்கம் ஒன்றை  தொடங்கி விட்டோம். அதன் பெயர் காமெடி கும்மி. சங்க உறுபினர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


தலபோல்  வருமா

சின்ன மலை தலபோல்  வருமா  என்னும் வலைப்பூவில் எழுதி வந்தார்(!) இனி எப்பொழுது எழுதுவார் என்று தெரியவில்லை. மின்தடை என்ற தடுமாற்றம் வந்த போதிலும், பதவி உயர்வு என்று வாழ்க்கை தடம் மாறிவிட்டதால் தற்காலிகமாக எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளார். சங்கத்தின் சுட்டிக் குழந்தை. 

சினிமா விமர்சனங்களை தனது காந்தக் குரலிலும் பதிவு செய்து வருகிறார். அதற்கான தொடர்புடைய சுட்டி.

சினிமா சினிமா ராஜ் 

ஹாலிவுட்டையும் கோலிவுட்டையும் கலந்து கட்டி பதிவாக்கி வருபவர். வெகு சமீபத்தல் அமெரிக்காவில் குடியேறி இருப்பவர். நீதி நேர்மை நியாயம் இவற்றுக்கு எதிராக குரல் கொடுபவருக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு என்றுமே இவரது ஆதரவு உண்டு. உலக சினிமா பதிவுகள் தவிர்த்து பதிவுலக அரசியல் குறித்தும் அவ்வபோது பதிவு செய்து வருபவர்.   


"தம்பி" சதீஷ் செல்லதுரை 

ந்திய எல்லைக் காவல் படையில் பாதுகாவலராகவும் பயிற்சியாளராகவும் இருக்கிறார். எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நேரம் போக மீதி நேரத்தை பதிவுலகில் செலவழிக்கிறார் தற்போது பேஸ்புக்கிலும். சிறுபான்மையினர் மற்றும் தலித் மறுமலர்ச்சி பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். எழுத்துக்கள் சற்றே காட்டமாகத் தான் இருக்கும். 

எழுத்துக்களைத் தாண்டி பழகுவதற்கு இனிமையானவர். மிலிட்ரி நெல்லைத் தமிழ் அண்ணனுக்கு. எல்லைச் சண்டை தவிர்த்து பதிவுலகச் சண்டையிலும் ஈடுபடுவதால் இவருக்கு சங்கம் சூட்டிய பெயர் தீவிரவாதி. இவருக்கு இவரே சூட்டிக் கொண்ட பெயர் கைப்புள்ள.

எல்லைப் பாதுகாப்பு படையின் வீர தீரங்களை எழுதுங்கள் என்று சொன்னாலும் அதில் மறைத்திருக்கும் அரசியலை மட்டுமே எழுதி வருகிறார். உங்கள் சக தோழனின் வீரத்தைப் பற்றியும் எழுதுங்கள் என்று மீண்டுமொருமுறை வேண்டுகோள் விடுகிறேன். 


ஹாரி பாட்டர் 

காமெடி கும்மியின் தலைவர். வெற்றிகரமாக மூன்று வலைப்பூவில் எழுதி வருகிறார் 

ஐடியா பொழுது போக்கு அம்சங்களை மட்டும் எழுத 

ஹாரி 2 ஜி பொழுது போக்கு அம்சம் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் எழுத  

கேளுங்க - பதிவுலகில் ஒரு புதிய முயற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட தளம். போதிய வரவேற்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்த் திரைப்பட பாடல்களின் திரட்டியாக மாற்றி வருகிறார். 

யுத்தம் ஆரம்பம் என்னும் ஒரு தொடர்கதை வலைப்பதிவர்கள் அனைவரும் சேர்ந்து எழுதும் தொடர்முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது. வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த யுத்தம் இப்போது எங்கு நடக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை. சற்று அதைத் தூசு தட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் சில புதிய முயற்சிகளை மனம் தளராமல் செய்ய வாழ்த்துக்கள்.



பிளாக்கர் நண்பன் 

இங்கு உங்கள் வலைபூ பழுது நீக்கித் தரப்படும் என்று பலகை அடித்து ஒட்டாத குறை தான். உங்கள் வலைப்பூவில் ஏற்படும் அனைத்து விதமான தொழில் நுட்பப் சந்தேகங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இவரது வலைப்பூவில் தீர்வு உண்டு.  கூகிள் ஆண்டவருக்கு மிகவும் பிடித்த பதிவர் என்ற போதும் இவரது மற்றுமொரு வலைபூ நண்பன் பக்கம் தொழில்நுட்பம் தவிர்த்து மற்ற பதிவுகளை இங்கு படிக்கலாம்.

இத்  தொடரின் அனைத்து பகுதிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.


விருந்தினர் பக்கம் - தொழில் நுட்பம் சார்ந்த உங்களது பதிவை இந்தப் பகுதியில் பகிர சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கிறார். 
  
வரலாற்றுச் சுவடுகள் 

தென்தமிழகத்தின் கடைகோடி பகுதியைச் சேர்ந்தவர். அறிவியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை எளிய தமிழில் உங்கள் குழந்தைக்கு நீங்கள் புரிய வைக்கக் கூடிய வகையில் எழுதி வருகிறார். சில சமயம் இவர் பதிவுகளைப் படிக்கும் பொழுது ஏதோ அறிவியல், சமுக அறிவியல்  படிப்பது போல் இருக்கும். இவர் பதிவுகளை "ஜஸ்ட் லைக் தட்" போல் படித்துவிட்டு கடந்து விட முடியாது. தெரிந்து கொள்ளும் உண்மையான ஆர்வம் இருந்தால் மட்டுமே படிக்க முடியும்.        

இவரது ரெண்டாவது உயிர்க்கோளமும்தக்சசீலம் பதிவுகளும் விரும்பிப் படித்தது. உம் பதிவுகள் காலம் அழிக்கக் கூடா பொக்கிஷங்கள். மேற்படிப்பில் வெற்றிபெற்று மீண்டும் வலையுலகுக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

கரை சேரா அலை அரசன் 

"கரை சேரா அலை" இந்தப் பெயரில் ஒரு சூட்சுமம் ஒளிந்து உள்ளது. நான்கு வரிகளை மடக்கி கவிதையாக்குவதும், போட்டோ பதிவுகள் போடுவதும் இவருக்கு விருப்பமான ஒன்று. கவிதைகளிலும், புகைப்படங்களிலும் மண் வாசனையும், காதலும் சற்றே தூக்கலாக இருக்கும்.      

செம்மண் தேவதைகள்ஊர்பேச்சு இவர் எழுதிவரும் மண்வாசனை பதிவுகள்.  

கட்டுமஸ்த்தான கட்டுகோப்பான தேகம் வேண்டி ஜிம் சென்று வரும் ஜிம் பாய். சங்கத்து அடியாள் என்று பதிவுலகில் சொல்லித் திரிகிறார். காமெடி கும்மி என்னும் தளத்தை அவ்வப்போது எங்களுக்கு நியாபகப் படுத்தும் ஒரே நபர் இவர் ஒருவர் தான். 

பிரபு கிருஷ்ணா 

வெகு சமீபத்தில் தான் இவரை எனக்குத் தெரியும். காமெடி கும்மி தான் இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது. முன்பே இவரைப் பற்றி சில இடங்களில் படித்துள்ளேன். எதன் மூலம் எப்படி இவரை அடையாளப் படுத்துவது என்று தெரியவில்லை. பசுமை விடியல் கற்போம் போன்ற தளங்களில் உற்சாகமாக இயங்கி வருகிறார். 

பசுமை விடியல் என்னும் இயக்கம் மூலம் இவர் செய்து வரும் பணிகள் மனம் திறந்து பாராட்டக் கூடியவை. தினம் ஒரு மரம், இயற்கைக் காக்கும் உறுதிமொழிகள் என்று இயங்குகிறது பசுமை விடியல். 

கற்போம் தளம் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை விளக்கங்களை எளிய தமிழில் விளக்குகிறார்கள். ஒவ்வொரு மாத பதிவுகளையும் தொகுத்து மின் இதழாகவும் வெளியிடுகிறார்கள். கற்போம் இதழுக்கு உங்கள் தொழில் நுட்ப பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. 


தற்போது குறும்படம் இயக்கும் ஆர்வத்தில்  இருக்கிறார். எண்ணம் உயர நீங்கள் உயர்வீர்கள் வாழ்த்துக்கள் பிரபு.

ஹாலிவுட் ரசிகன் 

காமெடி கும்மியில் சேரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது தலைமறைவானவர் தான் இன்று வரை வெளியில் வரவில்லை. இணையத்தில் தலைமறைவாகவே சுற்றிக் கொண்டுள்ளார்.தான் பார்த்த ஹாலிவுட் படங்களின் விமர்சனங்களை அழகாக எழுதக் கூடியவர்.

நாம டாப் டென் தமிழ்ப் படங்கள் குறித்து எழுதினால் இவர் டாப் டென் ஹாலிவுட் படங்கள் பற்றி எழுதுகிறார். இவர் மற்றும் ராஜ் எத்தனை ஹாலிவுட் படங்கள் பார்கிறார்கள். சற்றே பொறாமையாகத் தான் இருக்கிறது.      

கோழி 65, கம்பியில் கட்டி வைத்து வறுத்த கோழி எல்லாம் சாபிடுபவரா நீங்கள், இவரின் இந்தப் பதிவையும் ஒரு முறை படித்து விடுங்கள்.

கார்த்திக் பிளேட்பீடியா  

பெங்களூருவில் வசித்து வருகிறார். தற்போது தான் இவரை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அவ்வப்போது 18+ மேல் வெர்சன்களையும் பதிவில் ஆங்காங்கு தெளிப்பார். பதிவு முழுவதும் மெல்லிய நகைச்சுவையையுடன் நகரும். போட்டோ மற்றும் வீடியோகிராபி இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

சிறுவயதில் தொடங்கிய காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் இன்றளவும் இவரிடம் தொடர்கிறது. இவருடைய காமிக்ஸ் பதிவுகளுக்கு என்றே இவருக்கென்று தனிப்பட்ட வாசகர் வட்டம் உள்ளது. மேலும் காமிக்ஸ்களுக்கு கள்ள சந்தை கூட உள்ளது என்று புது புது விசயங்களைக் கொடுத்து ஆச்சரியப் படுத்துகிறார்.  

மரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய பத்து ருபாய் ஸ்பெஷல்!
லயன் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் மற்றும் சந்தா விபரங்கள்!

சங்கத்தில் சதீஷ் ராஜ் மற்றும் கார்த்திக் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள் என்று நம்பப்படுகிறது.


Tuesday, January 29, 2013

என்னைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்கள் - பகுதி 2


சேட்டைக்காரன் 


திவர் சந்திப்பின் பொழுது சேட்டைக்காரன் அரங்கினுள் நுழைந்ததும் எல்லாருமே ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். நான் தவற விட்ட தருணம் அது. சேட்டைக்காரனின் சேட்டைகளைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஒல்லியான தேகம். சிரித்த முகம். எல்லாரும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர், இல்லை கொண்டாடிக் கொண்டிருந்தனர் என்று கூட சொல்லலாம். பதிவர் சந்திப்புக்குப் பின்னும்  பலரும் தங்கள் பதிவுகளில் சேட்டைக்காரனை சந்தித்தது பற்றி எழுதிக் கொண்டிருந்தனர். ரஞ்சனி அம்மா தன் பதிவில் சக பதிவர் சமீரா சேட்டைக்காரனை பார்க்க ஆவலாய் இருந்ததாய் எழுதி இருந்தார்.  

பின்பு தான் அவர் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். இவருடைய பதிவுகளைப் படிக்கும் பொழுது என்னை அறியாமலேயே சத்தமாக சிரித்துள்ளேன், திடிரென்று நான் சிரிப்பதைப் பார்த்து என் அம்மா கூட முறைப்பது உண்டு. 

திரைவிமர்சனம் எழுதுவது எப்படி பதிவில் எவ்வளவுக்கு எவ்வளவு சினிமா விமர்சகர்களை கலாய்க்க முடியுமோ அவ்வளவு கலாய்த்து எழுதியுள்ளார்..  

கோ.கோ.சாமி: சரி, குறிச்சுக்க! எந்தத் தமிழ்ப்படத்தைப் பத்தி விமர்சனம் பண்ணுனாலும் முதல்லே ஆரம்பிக்கும்போது எடுத்த எடுப்புலேயே அந்தப் படத்தைப் பத்தி எளுதாதே!


சே.கா: சரிண்ணே!


கோ.கோ.சாமி: கும்பிள்டன் கூட்டர்சனின் "வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன்?" படத்தை நம்மால் எளிதில் மறந்திருக்க முடியாதுன்னு ஒரு ’பிட்’டோட ஆரம்பிக்கணும்.  


“சிஸ்டர், கேட்குறேனேன்னு தப்பா நினைக்காதீங்க! எதுக்கு என் உடம்புலே இத்தனை கேபிளை சொருகறீங்க? என்னையும் போதிதர்மனாக்கப் போறீங்களா?




சிவகாசிக்காரன் 



விலைமகளின் மகள். அன்னை இறந்த பின் அவள் செய்த தொழிலை மகள் செய்யும் நிலைமைக்குத் தள்ளபடுகிறாள், படித்துவிட்டு ஆச்சரியப்பட்டேன் இவ்வளவு கனமான கதையைக் கூட இயல்பாய் இவரால் எழுத முடிகிறதே என்று.  

"இருள் சூழ்ந்திருக்கும் அழுக்கான இரவில் லேசான அழுகையுடன் பொங்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மெதுவாக அடிக்கடி முத்துச்செல்வி அம்மாவிடம் கேட்பது உண்டு, “ஏம்மா இப்படி?”

எங்கோ பார்த்துக்கொண்டு அம்மா சொல்லுவாள்,”நாளைக்கு காலேல பசிக்குமே? பள்ளிக்கூடத்துக்கு காசு கெட்டணுமே?”

ரெண்டு நிமிடம் பழகிய ஒருவரின் மேல் பொறாமை வருமா? இவரின் எழுத்துக்களைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கும் வரலாம். சிவகாசிக்காரன் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் தோழர் ராம்குமார்(சிவந்தமண் காரர், சிவப்புச் சட்டைக்காரர் இல்லை.) பற்றித் தான் நான் குறிபிடுகிறேன். திருப்பூரில் வைத்து அறிமுகமானவர். 

வலை உலகில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார், இன்னும் நூறு பதிவுகளைக் கூட தாண்டவில்லை.காரணம் அளவாகத் தான் எழுதுகிறார். ஆனால் திடங்கொண்டு எழுத ஆரம்பித்தால் நாலு பதிவை சேர்த்து ஒரே பதிவாக எழுதி விடுகிறார்.          

கட்டுரைகளை விட சிறுகதைகளை சிறப்பாக எழுதுகிறார், சொல்லபோனால் சிறுகதைகளை விட கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார். இன்னும் சொல்லபோனால் இரண்டையுமே சிறப்பாக எழுதுகிறார். கூல்.

சுஜாதா சாயலில் இவர் முயன்ற கதை.. சற்றே நீளமான கதை, ஆனால் அற்புதமான நடை. இந்தக் கதை தன இவரை எனக்கு முதலில் அறிமுகம் செய்ததுஎச்சரிக்கை நீஈஈஈன்ன்ன்ன்ட்ட்டட்ட சிறுகதை(!).         

கலர்காதல் இதுவும் மிகவும் கனமான பாத்திரப்படைப்பு கருப்பாய் இருக்கும் மனைவியின் நிறத்தை  புணர்தலின் பொழுது வசதியாய் மறக்கும் கணவன்... இந்தக் கதையை படித்ததும் அவரை நோக்கி நான் கூற நினைத்தது  என்ன ஆளு யா நீ...

 உடல் சூட்டை தணிக்கும் போது மட்டும் கருப்பு வெளுப்பெல்லாம் தெரியாதே? வெறும் மிருகத்தனமான இயந்திரத்தனமான கூடல். தன் சூடு தணிந்தவுடன் பேசாமல் எழுந்து போய்விடும் அக்கறையான கணவன். எனக்கு அவன் என்னுள் சாக்கடையை பாய்ச்சியது போல் இருக்கும். ”நான் கருப்புன்னு மொதையே தெரியும்ல? அப்புறம் ஏன் என்ன கல்யாணம் செஞ்சீங்க?” என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன். மறுமுறை அப்படி கேட்கவே அஞ்சும் அளவுக்கு அடி விழுந்தது.   


மழையைப் பற்றி இவர் எழுதிய கட்டுரை. படித்தால் ரசிப்பீர்கள் மழையை 



தீராத விளையாட்டுப் பிள்ளை 


ஆர் வி எஸ்... இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மெட்ராஸ் பவன் சிவா தான். இவரின் எழுத்துக்களுக்கு மெட்ராஸ் தீவிர ரசிகர் தற்போது நானும். இவரது சிறந்த பதிவுகளாக சிவா எனக்கு சில பதிவுகளை அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் அனைத்துப் பதிவுகளுமே மிகச் சிறப்பாய் எழுதி இருக்கிறார். இவர் எழுதும் மன்னார்குடி டேஸ் எனக்கு தென்காசி மண்வாசனையைத் தூண்டுகிறது. தற்போது ராமாயணம் குறித்த தேடலில் அல்லது ஆய்வில் இறங்கியுள்ளார். 


ரிஷபன் 


இவரது கவிதைகள் ஆயிரம் அர்த்தங்கள் பேசும். நாமெல்லாம் பல பத்தி பத்தியாக தட்டுவதை பத்து வரிகளுக்குள் முடித்து விடுவார். இப்போதெல்லாம் என்னவென்று தெரியவில்லை இவரது பல கவிதைகள் பேஸ்புக்குடன் முடிந்து விடுகிறது..



திருச்சி செல்லும் பொழுது ரிஷபன் மற்றும் வை கோபாலக்ருஷ்ணன் சாரை சந்திக்கலாம் என்று வாத்தியார் சொன்னார். என்னிக்கு கூட்டிட்டுப் போகப் போறாரோ....  

ரஞ்சனி நாராயணன் 


பதிவர் சந்திப்பில் வைத்துப் பார்த்துள்ளேன், பேசியதாய் நியாபகம் இல்லை,  ஆனால் தொழிற்களம் தளத்தில் இளைஞர்களோடு இளைஞராய் எழுதும் பொழுத தான் இவர் எழுத்துக்கள் எனக்கு அறிமுக ஆயின. இயல்பாய் நம்மிடம் கதை சொல்வது போலவே இருக்கும் இவரது நடை. ஒன்றை கவனித்துப் பாருங்கள் இவரது தளத்தில் எழுத்துக்களின் அளவு சற்றே பெரியதாய் இருக்கும் எல்லாராலும் எளிதாய் படிக்க வேண்டும் என்பதற்காவே வைத்து போல் இருக்கும். வர்ட்ப்ரஸில் இயங்கிவருவதால் பின் தொடர்வது கஷ்டமாய் இருந்தது என்று பலரும் கூறியதால் சில மாதங்களுக்கு முன்பு ப்ளாக்ஸ்பாட்க்கு மாறினார். ஆனாலும் இங்கே வோர்ட்ப்ரஸில் எழுதும் பதிவுக்கான சுட்டிகளை மட்டுமே பதிகிறார்.




உற்சாகமளித்து வரும் அணைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நாளை சந்திப்போம்...  

 இதற்கு முந்தைய பகுதி 

என்னைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்கள் - பகுதி 1



என்னைப் பொறாமைப்பட வைக்கும் பதிவர்கள் - பகுதி 1



எத்தனைப் பதிவர்களைப் பற்றி என்ன வேண்டுமாலும் (நாகரிகமாக) எழுதலாம் என்ற சுதந்திரம் கிடைத்த காரணத்தால் இந்த ஆறு நாட்களும் கொஞ்சம் அதிகமாக பதிவர்களைப் பற்றி எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.

அலுவலகத்தில் பிளாக்(blog)  பிளாக்(block) செய்யப்பட்டுள்ள காரணத்தால் வீட்டில் வைத்து மட்டுமே படிக்க இயலும். எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்கள் வலையுலகில் சிறப்பாய் எழுதி வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேரை எனக்கும், என்னை அவர்களுக்கும் தெரிந்திருக்க நிச்சயமாய் வாய்ப்பில்லை. அதனால் எனக்கு நன்கு தெரிந்தவர்களைப் பற்றி முதலிலும், அதன் பின் சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர்களைப் பற்றியும் எழுத முடிவெடுத்துள்ளேன்.

நான் பொறாமைப்படும் சில பதிவர்கள் இந்த லிஸ்டில் இல்லை. அவர்களை மற்றுமொரு லிஸ்டில் இருந்து கழட்டி விட முடியாத காரணத்தால் இந்த லிஸ்டில் அவர்களுக்கு இடமில்லை.

புலவர் குரல் 


புலவர் ராமானுசம் அய்யா, பதிவர் சந்திப்பு நடைபெற பெரிதும் பாடுபட்டவர். எந்தவிதத்திலும் தடை வந்துவிடக்கூடாது என்று இவர் பார்த்து பார்த்து செய்த செயல்கள், அந்த வயதில் நான் இருந்தால் கட்டிலை விட்டு எழுந்திருந்திருப்பேனா தெரியாது. எப்போது சந்தித்தாலும் "என்ன சீனு நல்லாருக்கியா" என்று கேட்கும் வார்த்தைகளே அவ்வளவு நிம்மதி தரும். 

ற்போது தமிழ் வலை உலகில் புதுகவிதை இல்லாமல் முழு நேர மரபுக் கவிதை எழுதும் ஒரே பதிவர். எண்பது வயதிலும் உற்சாகமாய் செயல்படுகிறார். வலைப் பதிவர்களுக்கு என்று சங்கம் வேண்டும் என்று வருடங்களுக்கு முன்பே சொன்னவர். வலைப்பதிவர் சங்கம்           


பால கணேஷ் 



மின்னல் வரிகளுக்கு சொந்தக்காரர். தனக்குத் தெரிந்த வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற  ஆர்வம் உடையவர்கள் மிகச் சிலரே, அந்த மிகச் சிலரில் ஒருவர் தான் பாலகணேஷ் என்னும் வாத்தியார். தற்போது சிரிதாயணம் என்னும் புத்தகம் மூலம் எழுத்தாளர் அவதாரம் எடுத்திருப்பவர். வெரைட்டி ரைட்டர்ஸ் என்று கூறுவார்கள், எனக்குத் தெரிந்த வரையில் பதிவுலகில் இவர் அத்தனை வெரைட்டியையும் பதிந்துவிட்டார் என்று நினைக்கிறன். இங்கு நான் வெரைட்டி என்று குறிப்பிடுவது விதங்களை அல்ல சுவைகளை. 

வர் எழுதிய நடைவண்டிகள் தொடர் மிக அற்புதமாக இருக்கும். சமீபத்தில் இவரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் பகிர விரும்புவது இவரது நடைவண்டிகள் தொடரைத்தான். எழுத்தாளர் கடுகு இவருக்கு வண்டி வாங்கிக் கொடுத்த கட்டுரை படித்துப் பாருங்கள் மிக நெகிழ்ச்சியாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் முழுத் தொடரையும் படித்துப் பாருங்கள் பால கணேஷ் என்னும் பதிவர் மேல் நீங்கள் வைத்திருக்கும் அத்தனை அன்பும் மறைந்து லேசான பொறாமை எட்டிப் பார்க்கும்.  


புத்தக விமர்சனங்கள் யார் வேண்டுமானலும் எழுதி விடலாம், ஆனால் புத்தகத்தின் மையம் மாறாமல் அதை சுருக்கி கேப்ஸ்யூல் (குறு) நாவலாக மாற்றி கொடுப்பது இவரின் மற்றுமொரு கைவந்த கலை.  

வரின் மற்றுமொரு வலைபூ மேய்ச்சல் மைதானம்.. பழையன விரும்புபர்கள் விரும்பிச் செல்லலாம்.

வேண்டுகோள் : வாத்தியாரே பயணக் கட்டுரை முயன்று பார்ப்பது. இந்த திரு-எவ்வளூர் பற்றி எழுதியது எல்லாம் பயணக் கட்டுரை வகையறா கிடையாது. 

எங்கள் பிளாக் 


எங்கள் பிளாக் - யார் வேண்டுமானாலும் தங்கள் பிளாக்கை சொந்தக் கொண்டாடலாம் என்ற நல்ல எண்ணத்தில் பெயரை வைத்திருக்கிறார்கள். எங்கள் பிளாக் தனி மனித தாக்குதல்களுக்கு எங்கள் பிளாக்கில் இடம் இல்லாத உங்க வூடு தான் என்று சொல்லக் கூடியவர்கள். ஐந்திற்கும் மேலான ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் எனக்கு அறிமுகம் ஆனவர்கள் இருவர் தான். 

ருவர் உங்கள் அனைவருக்கும் பரிட்ச்சியமான ஒருவர். உங்கள் பதிவில் இவர் பின்னூட்டமிட்டிருந்தால் அதைப் படித்து அந்த பின்னூட்டத்தின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்து, மெல்லிய புன்னைகை உங்கள் இதழில் உதிரத் தொடங்கினால் அந்த ஹாஸ்யத்திற்கு சொந்தக்காரர் எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாராக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது.  

நீங்கள் பதிவு எழுத அமர்ந்தால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும், மெல்லிய ஹாஸ்யத்துடன் ஸ்ரீராம் சாரின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள், உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்ப்பது போல் உணர்வீர்கள். 

ங்கள் பிளாக்கின் மற்றுமொரு ஆசிரியர் கௌதமன் சார். இனிசியலை மறக்கவில்லை சார், கே.ஜி கௌதமன் சார். இப்போது சந்தோசம் தானே! இவரை அறிந்தவர்கள் இவரது ஞாயிறை மறக்க மாட்டார்கள். ஒவ்வொரு ஞாயிறு தோறும் ஏதேனும் ஒரு படத்தை பதிவிட்டு அதன் மூலம் கருத்து கூறுவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் கூறுவார். இவரது அலேக் அனுபவங்கள் அசோக் லைலாண்டில் இவரது வாழ்க்கையைப் பற்றிக் கூறும். அசோக் லைலாண்ட் cab (கால் டாக்சி) க்கும் மற்ற கம்பெனி cabக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவிப் பதிவர். அசோக் லைலாண்டில் ஆயுத பூஜை பற்றிய இவரது சிறப்பான பதிவு.        

அலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை!


"எங்கள்"ளின் புதிய பாணிகள் ள்பெட்டி, பாசிடிவ் செய்திகள், தாங்கள் படித்து ரசித்த புத்தகளில் இருந்து புதிர் போடுவது, சரியாக பதில் அளித்தவர்களுக்கு மட்டும் பரிசளிப்பது (இது அராஜகம்).

வேண்டுகோள் : கெளதம் சார் அலேக் அனுபவங்களுக்கு குறிசொற்கள் சேருங்கள் கண்டுபிடித்து படிப்பதற்குள் படிப்பவர்கள் அலேக்காக எஸ் ஆகி விடப்போகிறார்கள்.        

மெட்ராஸ் பவன் சிவா  


ளமையான எழுத்துக்கு சொந்தகாரர் அதே நேரத்தில் திறமையான எழுத்துக்கும் சொந்தக்காரர். பதிவர் சந்திப்பில் புதிய பதிவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர் (பதிவர் சந்திப்பு நடந்த காலகட்டத்தில் நான் புதியவன் என்பதால் அதற்கு முழு ஆதரவு வழங்கிய பாக்யவான் ஆனேன்). 

வாரத்தின் விடுமுறை நாட்களை, திரைப்படங்களுடனும் பதிவர்களுடனும் செலவழிப்பவர். மேதை பொன்னர் சங்கர் போன்ற உலக தமிழ் சினிமாக்களை பெரிதும் விரும்பிப் பார்ப்பவர். நாடகங்கள் பார்ப்பது, அதைப் பற்றி தனது பார்வைகளை எழுதுவது இவரின் மற்றொரு சிறப்பம்சம்.  

சென்ற ஆண்டு டெரர்கும்மி கும்மி நடத்திய போட்டியில் நகைச்சுவை சிங்கம் சேட்டைக்காரன் கையிலிருந்து வாங்கிய விருதை நினைத்து பெருமிதம் கொள்பவர்.



யல்பான இவரது  எழுத்தில் சென்னையின் பேருந்து வாழ்கையை வாசித்து பாருங்கள். பேருந்து இந்த வலைப்பூவில் இது இவருடைய இரண்டாவது படைப்பு. ஐ.டி இளைஞர்கள் பற்றியும் திருப்தி ஏழுமலையானையும் பற்றி வினவு தளம் எழுதியதற்கு சிவாவின் பதில் பதிவு வினவு வெஸ் வெங்கட் 

கோ - படம் திரைக்கு வருவதற்கு முன்பே இவர் ப்ரிவியு பார்த்தது போல் எழுதி பதிவுலகின் ஒட்டுமொத்த  கோபத்தையும் ஒன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட பதிவு. 

வரின் இன்னொரு தளம் நண்பேண்டா 

மதுமதி 


ரோட்டு சூரியன் வழியைத் தேர்ந்தெடுத்த ஈரோட்டுக்காரர். இவரின் இயற்பெயர் மாதேஷ் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். சில மாத நாவல் இதழ்களில் நாவல்கள் எழுதி இருப்பவர். தமிழக கவிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர். திரைப்பட பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி இவர் செய்துவரும் சேவை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.      

டி.என்.பி.எஸ்.ஸி  தேர்வுக்கு வழிகாட்டியாக இவர் எழுதி வரும் பதிவுகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.  

தற்போது அதில் மற்றுமொரு புதிய முயற்சியாக டி.என்.பி.எஸ்.ஸி வழிகாட்டிகளை வீடியோ பதிவுகளாக மாற்றி வருகிறார். 


பதிவர் சந்திப்பில் இவரது உழைப்பு அபாரம் ஆனது . ஆனால் அந்த உழைப்பைப் பற்றி பிறிதொரு சந்தர்பத்தில், பிறிதொரு பதிவில் பேச இருப்பதால் இங்கு தவிர்க்கிறேன்.

பகுதி இரண்டு இன்றே... மற்றுமொரு நல்ல பொழுதில் விரைவில் ...


Monday, January 28, 2013

திடங்கொண்டு போராடு என்னும் நான்


வலைச்சரம் என் பார்வையில்


"உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்ற வார்த்தைகளின் மூலம் தான் வலைச்சரம் அறிமுகமானது எனக்கு. எங்கோ யாரோ ஒருவர் நமது பதிவைப் பற்றி பேசியிருக்கிறார், அவர்களில் ஒருவராவது நமது பதிவை நிச்சயம் கிளிக்கி படிப்பார் என்ற அந்த ஒரு நிமிட உணர்வு எவ்வளவு புத்துணர்ச்சி கொடுத்திருக்கும். நான் முதல் முறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது என்னுள் எனக்கு ஏற்பட்ட நினைவுகள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. சொல்லப்போனால் வலைச்சரம் எனக்கு சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. 


ரு சமயம் உற்சாகம் இழந்து இனி எழுத வேண்டாம் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நேரத்தில் மற்றுமொரு பதிவர் என்னைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஏதோ ஒரு பதிவரால் நாம் கவனிக்கப் பட்டுக் கொண்டு தான் உள்ளோம் என்ற உணர்வைக் கொடுத்த சமயம் அது. 

டைபழகும் குழந்தைக்கு நடைவண்டியாகவும், தடுமாறுபவனுக்கு தோள்கொடுக்கும் தோழனாகவும், வலைச்சரம் தனது பணியை செய்து வருகிறது. அதனால் "வலைச்சரம் ஆசிரியர்" என்னும் அற்புத வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனுக்கு எனது நன்றிகள். என்னை ஊக்குவிக்கப்போகும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். 

திடங்கொண்டு போராடு என்னும் நான்



னக்கு ஆச்சரியம் தரக் கூடிய ஒரு விஷயத்தை நானே இன்று தான் கண்டுகொண்டேன், மேலும் உங்கள் யாருடனும் இதுவரை பகிர்ந்திராத ஒரு விசயத்தையும் சொல்கிறேன். நான் எனது இரண்டாவது பதிவை எழுதிய மாதமும் எனது இரண்டாவது வலைப்பூவை ஆரம்பித்த மாதமும் மார்ச் என்பதை இன்று தான் கண்டுகொண்டேன். சிறிய வித்தியாசம் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட கால அளவு மிகச் சரியாக ஒரு வருடம்.  

குழப்பிவிட்டேனா சற்றே தெளிவாகச் சொல்கிறேன்.

முதுநிலை முடித்துவிட்டு ஒரு சிறிய அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். நண்பன் செல்வமணி இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் உலவிக் கொண்டிருப்பான். எனக்கு இவற்றை அறிமுகப் படுத்தியதும் அவன் தான். அவன் படித்த பதிவுகள், அவனுக்குப் பிடித்த பதிவுகள் என்று என்னுடன் பகிர்ந்து கொண்டே இருப்பான். நான் செல்வமணி மற்றும் மணி அதிகமான பதிவுகள் படிப்போம், பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகளாக படிப்போம், யாருக்கும் பின்னூட்டம் இட்டது கிடையாது. செல்வமணியிடம் ஏதேனும் தலைப்பு கூறி எனக்கு இந்த தலைப்புகளில் தகவல் வேண்டும் தேடி கொடு என்றும் சொல்வதுண்டு. சளைக்காமல் தேடி எங்கிருந்தாவது எடுத்துக் கொடுத்து விடுவான். பதிவுலகம் பற்றி நான் முழுமையாக புரிந்து கொண்ட நாட்கள் அது.

சினிமா என்பதையும் தாண்டி தமிழில் பரவலாகப் பலவிதமான பதிவுகள் பதியப்பட்டுள்ளன என்று தெரிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. நிச்சயமாக பதிவர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரியாமலேயே தமிழுக்கான கலை சேவை செய்து வருகிறார்கள் என்பது உண்மை. செல்வா அடிகடி கேட்பான் "சீனு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன". அவன் அப்படிக் கேட்ட பொழுது, ஏழு வருடங்களுக்கு முன்பு அசோக் அண்ணன் என்னிடம் கேட்ட கேள்வி  நியாபகம் வந்தது "பிளாக் படிக்கிற பழக்கம் உனக்கு உண்டா?". என்னிடம் அந்த கேள்வியைக் கேட்ட அடுத்த நொடி "அப்படினா?" என்றேன். "உனக்குப் பிடிச்சது எல்லாம் எழுதலாம், கிட்டத்தட்ட அது டைரி மாதிரி" என்று அவர் சொல்லியது நியாபகம் வந்தது.

டைரி எழுத எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் டைரி எழுத ஆரம்பிப்பேன், அந்தப் பழம் சீக்கிரம் புளித்துவிடும். ஆனால் பிளாக் கூட டைரி போன்றது என்று அசோக் அண்ணன் என்னிடம் சொல்லிய வார்த்தைகள் மனதில் இருந்து நீங்கவே இல்லை. சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின் பொழுது கூட அய்யா நடன சபாபதி என்று நினைக்கிறன் அவர் கூட அதே கருத்தை கூறி இருந்தார்.

செல்வமணி என்னிடம் கேட்டதும் "ஆரம்பிக்கலாம் ஆனால் என்ன எழுதவது " என்று கேட்டேன். அதற்கான பதிலை இன்றுவரை அவன் என்னிடம் சொல்லவில்லை. இருந்தும் நான் ஆரம்பித்துவிட்டேன்.

"இப்படிக்கு நண்பன்" என்னும் முகவரியில் "உயிர் எழுத்து" என்னும் தலைப்பில் மார்ச் 2011 அன்று வலைபூ ஆரபித்தேன். மணி தான் ஐடியா கொடுத்தான், "எம்.சி.ஏ பத்தி எழுத்து சீனு" என்றான். அந்த வலைப்பூவில் நான் எழுதிய முதல் கட்டுரை.


இரண்டாவது பதிவு.


ந்தப் பதிவுகளை படித்ததும் மற்ற நண்பர்களுக்கும் ஆர்வ பொங்க அவர்களும் எழுதினார்கள், இன்னும் பலர் எழுத முயன்றார்கள். 

ன் எழுத்தில் ஏதோ ஒன்று குறைந்தது, எனக்கு எழுத்து நன்றாக வரவில்லை. அதில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். மற்ற நண்பர்களும் எழுதாததால் வலைப்பூ நாங்கள் நிறுத்திய இடத்தில இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூட நண்பர்கள் கேட்டார்கள் அதில் "எம்.சி.ஏ பத்தி எதாது எழுது" என்று. மீண்டும் அதில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னுள்ளும் உள்ளது.

ற்போது நான் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்ந்த நாட்களில் எனது எழுதும் ஆர்வம் குறித்து உடன் பணிபுரிந்த விக்ரமிடம் கூறுவேன். சில காட்சிகளை விவரித்து அவைகளைக் கொண்டு ஒரு கதை எழுதித் தரும்படி என்னிடம் கேட்டான். முதல் முறை நம்மையும் மதித்து ஒருவன் கேட்கிறானே என்று எழுதி விட்டேன். நான் எழுதிய அந்த முதல் கதை என்னுள் மிக அதிகமான உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. எழுதி விட்டேன், "ல்லா இருக்கு, சுமாரா இருக்கு, ன்னும் பெட்டரா ட்ரை பண்ணலாம்" என்பது போன்ற கமெண்டுகளையும் நண்பர்கள் வாயிலிருந்து வற்புறுத்தி வாங்கிவிட்டேன்.

த்தனை நாட்கள் தான் அந்தக் கதையை நான் மட்டும் படித்துக் கொண்டிருப்பது. அந்நேரம் மீண்டும் என் நியாபகத்தில் வந்தது வலைபூ. மேலும் இந்த நேரத்தில் சிறுகதை எழுதுவதில் தீராக் காதல் ஏற்பட்டு இருந்தது. "ஒரு பிளாக் ஆரம்பிக்கிறோம், சிறுகதையா எழுதித் தள்ளுறோம்" என்ற நிலையில் ஆரம்பிக்கபட்டது தான் எனது இரண்டாவது வலைபூ.

ன்ன பெயர் வைப்பது என்றே பல நாள் குழம்பிக் திடங்கொண்டு தேடிக் கொண்டிருந்தேன். மேலும் பாரதியின் வரிகளில் ஒன்று தான் எனது வலைபூ பெயராக இருக்கப் போகிறது என்பதையும் முடிவு செய்துவிட்டேன். அப்படியாக வந்த பெயர் தான் "திடங்கொண்டு போராடு". 

நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை 



லைபூ ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களில் வெறும் சிறுகதையாகத் தான் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தேன். வெறும் சிறுகதையை வைத்து மட்டும் வியாபாரம் செய்ய முடியாது என்பதை எனது இரண்டாவது பதிவே தெளிவாக்கிவிட்டது. முதல் பதிவை நண்பர்களைத் தவிர யாரும் படித்திருக்கவில்லை. சில திரட்டிகளில் இணைத்த பின் கொஞ்சம் ஹிட்ஸ் வந்தது. அந்த நேரத்தில் வெளிவந்திருந்த படம் கர்ணன். நான் மிகவும் விரும்பிப் பார்த்த படம் அது. அதையே பதிவாக எழுதினால் என்னவெண்டு தோன்றியதால் எழுதியும் விட்டேன். எனக்கு கமெண்ட் வராவிட்டாலும் அதிகமான ஹிட்ஸ் வாங்கிக் கொடுத்தது. 


நான் முதன் முதலில் எழுதிய சினிமா விமர்சனம் 



திவு ஆரம்பித்த புதிதில் 100 ஹிட்ஸ் என்பது 100 பேர் என் பதிவைப் படித்திருக்கிறார்கள் என்ற அளவில் தான் என் புரிதல் இருந்தது. அதன் பின் தெளிவு கிடைத்ததும் மீண்டும் சிறுகதைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். மூன்று மதங்களில் வலைபூ பற்றிய அறிவு சற்று அதிகமாகவே எனக்குக் கிடைத்த தளம் மூலம் என் களத்தை சற்றே விரிவு படுத்தத் தொடங்கினேன். 

சிரிபானந்தாவின் அறிமுகம் கிடைத்த நேரம் அவரைப் பற்றி எழுதிய பதிவு 


சிரிபானந்தா பற்றி மற்றுமொரு பதிவு 



பின்பு பலரும் தொடர்பதிவு மற்றும் தொடர் கதைகள் எழுதிவருவதைக் கண்டு என்னுளும் எதாவது தொடர் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது. என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நிகழ்காலத்தில் என்னோடு ஒன்றிப்  சென்னையைப் பற்றி பதிவு செய்யலாம் என்று எழுதத் தொடங்கினேன். பேஸ்புக் தோழி லாய் "சென்னையைப் பற்றி எங்களுக்கு தெரியாது கொஞ்சம் விரிவாக எழுது" என்று கொடுத்த டிப்ஸ் மூலம் சென்னை ஒரு முடிவில்லாத தொடராக சென்று கொண்டுள்ளது.

சென்னையைப் பற்றி எனது முதல் பதிவு.



ரே வாரத்தில் பொன்னியின் செல்வன் புத்தகம் முழுமையையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் பொன்னியின் செல்வனுக்கு விமர்சனங்கள் எழுதி இருப்பார்கள் என்று தெரியும், இருந்தும் நானும் எழுதினேன், ஆச்சரியம் பல புதிய தகவல்கள் பின்னூட்டங்களாகக் கிடைத்தன.




யணங்கள் என் வாழ்க்கையில் என்னிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. எவ்வளவு தூர பயணம் என்றாலும் காலம் ஒத்துழைத்தால் நான் தயார். பயணக் கட்டுரைகள் எழுத நான் தேர்ந்தெடுத்தக் கொண்ட தலைப்பு நாடோடி எக்ஸ்பிரஸ்.

ம்மையும் நம் எழுத்துகளையும் அறிமுகம்  வாய்ப்பு கிடைத்தால் யாருக்கு தான் அலுக்காது. விட்டால் நான் எழுத அத்தனை பதிவுகளையும் இங்கே லிஸ்ட் போட்டு விடுவேனோ என்று பயமாய் இருப்பாதால் அடுத்து வரும் ஒன்றுடன் முடித்துக் கொள்கிறேன்.
  
வலைபூ ஆரம்பித்த பின் ஒரு பதிவுக்காக நான் சற்றே சிரத்தை எடுத்து, தகவல்கள் தேடி ஓரளவு உருப்படியாய் எழுதிய பதிவு என்றால் அது தனுஷ்கோடியின் வரலாறு பற்றியது தான். நீங்கள் அந்தப் பதிவை படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம், ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒருமுறை சென்று வாருங்கள். பார்க்க வேண்டிய ஆழி சூழ் அமானுஷ்யம் நிறைந்த உலகு அது.







இன்னும் ஆறு நாட்கள் என்னுடன் பயணத்தில் தொடருங்கள், கடந்த ஒரு வருடத்தில் நான் கடந்து வந்த பதிவுலகப் பாதையில் நீங்களும் நானும் பயணித்த பயணத்தை திரும்பிப் பார்க்க வாருங்கள்.  
    

நாளை சிந்திப்போம் ...