எங்கள் கிராமத்து மாட்டுப்பொங்கல்!!! [ மீள் பதிவு]
முதல் நாளே ஊர்ப் பஞ்சாயத்தில் கூடி, சீட்டுப் போட்டுக் குலுக்கி யார் வீட்டு மாட்டிற்கு முதல் மரியாதை செய்வது என்று தீர்மானித்து விடுவார்கள். அன்று காலை, ஒவ்வொரு வீட்டிலும் மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை கூராக சீவி விட்டு, அதில் கொப்பி போட்டு, குஞ்சமும் சலங்கையும் வைத்துக் கட்டி, வண்ணங்களால் அழகூட்டி, நெட்டி மாலைகள் அணிவித்து, பொட்டிட்டு தயாராக வைத்திருப்பார்கள்.
மாட்டுத் தொழுவங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு கோலமிடப்படும். மாலையில் முதல் மரியாதை கொடுக்கப்பட்ட மாடுதான் முதலில் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். மாடுகளுக்கென்று உள்ள திடலுக்கு அது முன்னால் போய்ச் சேரும். பின்னாலேயே மற்ற மாடுகளும் வந்து சேர்ந்ததும் பூசாரி வந்து, பொட்டு வைத்து பூஜை செய்வார். தார தப்பட்டைகள் முழங்கும். பிறகு எல்லா மாடுகளையும் அவிழ்த்து விடுவார்கள். அவைகள் திமிறிக்கொண்டே நாலு கால் பாய்ச்சலில் வீட்டை நோக்கி ஓடி வர, அதன் பின்னாலேயே இளைஞர்கள் அவற்றை விரட்டிக்கொண்டே ஓடி வர, முறைப்பெண்கள் அவர்கள் மேல் மஞ்சள் தண்ணீர் விசிறியடிக்க, ஊரே கொண்டாட்டமாக இருக்கும்!!!
மாணிக்கம்:
நவரத்தினங்களுள் ஒன்று. தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன.
இது ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்றும், ஹிந்தியில் மாணிக் என்றும் அழைக்கப்படும். புராண நூல்களில் இதற்கு குருவிந்தம், பதுமராகம், ரவிமணி, ஹாரநாயகம் என்ற பெயர்களும் உண்டு. இது பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் கல். ரோஸ் அல்லது சிகப்பு நிறமாக ஒளி ஊடுறவும் தன்மையுடனும் அதே நேரம் முழு சிவப்பு நிறத்தில் ஒளி ஊடுறவா கல்லாக இரு விதமாகவும் கிடைக்கும்.
இனி மாணிக்கங்கள் போன்ற பதிவர்கள்……!!!
புவியியல், காகிதம் பிறந்த கதை, ஓஸோன் மண்டலம் என்று யாருமே
தொடாத விஷயங்களைத் தொடுவதும் மட்டுமல்லாமல் அவைகளைப்பற்றி புள்ளி விபரங்கள் அனைத்தும் கொடுத்து நம்மை வியக்கச் செய்கிறார் வரலாற்றுச்சுவடுகள்! [ இவர் பெயர் தெரியவில்லை!]. அனைவருக்குமே தெரிந்து கொள்ள வேண்டிய உபயோகமான பதிவுகள் வழங்கி வரும் இவருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்!
திரைப்படங்கள், அனுபவங்கள், உணர்வுகள், இலக்கியம் என்று அனைத்துத் தரப்பிலும் தொட்டு அழகாக எழுதியிருக்கும் திரு.சுரேஷ் கண்ணன், மறைந்த எழுத்தாளர் ரா.சு.நல்ல பெருமாள் பற்றி இங்கே அழகாக எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருப்பது போலவே நானும் சிறுவயதில் அகிலன், கல்கி, ரா.சு.நல்லபெருமாள், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் எழுத்துக்களைத் தேடித்தேடி படித்து, மனப்பார்வை அகலமாகி, பிற எழுத்துக்களையும் நேசிக்கத் தொடங்கியவள் என்பதால் இவரின் பதிவை மிகவும் ரசித்தேன்!
மனதில் உறுதி வேண்டும் என்ற தனது வலைப்பூவின் தலைப்புக்கேற்றவாறு சமீபத்தில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரமான நிகழ்வைப்பற்றிய தன் மன உணர்வுகளை இங்கே ஆணித்தரமாக சொல்லி, பதறுது நெஞ்சே என்று குமுறியிருக்கிறார் மணிமாறன்!
திரு.முரளீதரனின் வெண்பா ஓவியர் மாதவனின் ஓவியத்திற்கு அதிக அழகு சேர்க்கிறது. சிறு வயதில் ஓவியர்கள் மாதவன், நடராஜன் ஓவியங்களைக் கண்டு மயங்கிப்போய் ஏகலைவன் போல தானாகவே ஓவியம் வரைய ஆரம்பித்த ‘ மலரும் நினைவுகள் ‘ மனதில் விரிவதைத் தடுக்க முடியவில்லை!!
தந்தையைப்பற்றி- அவரின் குணாதிசயத்தை, அன்பின் பெருமையை, தமிழறிவை, நகைச்சுவை ரசனையை மிகுந்த அன்புடன் ஷைலஜா இங்கே அன்புள்ள அப்பா என்று நினைவு கூறுகிறார்!
ஜாதகம் பார்ப்பதன் சாதகங்கள், பாதகங்களை இங்கே அலசி ஆராய்ந்திருக்கிறார் சுடர்விழி! ஜாதகங்கள் சாதகமா, பாதகமா என்று கேட்டிருக்கிறார்!
சமீரா இங்கே தனிமையும் தவிப்புமாக இருக்கும்போது மாரடைப்பு வந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்!
நரிக்குறவர்களின் சுதந்திர வாழ்க்கையைப்பார்த்து பொறாமைப்படுகிறார் இங்கே திரு.சுரேஷ்குமார். நமது நடைமுறை வாழ்க்கையின் சமூக அவலங்களைப்பார்த்து குமுறும் இவர் சமூக மேல்தட்டில் இருப்பவர்கள் எல்லோருமே நாட்டின் சுதந்திர அடிமைகள் என்கிறார்!
‘ தற்போதெல்லாம் சிறு குழந்தைகள் கூட மழையை ரசிப்பதில்லை என்ற ஆற்றாமையுடன் வித்தியாசமான ரசனையாய் ‘ சீண்டுவார் யாரும் இல்லாமல் மழை அழுதுகொண்டே சாக்கடையில் ஓடுகிறது.’ என்று புலம்பி எழுதியிருக்கிறார் ராம் குமார் இங்கே! நம் மீதே மழைச்சாரல் தெறிக்கிற மாதிரி இருக்கிறது இவரின் எழுத்து!
ஆச்சி கொடுத்த சீர் வரிசையாக, மனிதர்கள் எப்படியெல்லாம் வாழக்கூடாது, எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை இங்கே அம்பாளடியாள் இரண்டடுக்கு கவிதையில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். தீப ஒளியின் பின்னணியில் இந்தக் கவிதை நம் நெஞ்சோடு கலக்கிறது!
என்ன வளம் இல்லை என் திருநாட்டில்? வெளி நாட்டில் பல்லாண்டுகளாய் வாழும் என் மனதில் அடிக்கடி தோன்றும் சிந்தனைகளையே இங்கே உலக அதிசயங்களும் இந்தியாவும் என்ற தலைப்பில் அழகாக பதிவிட்டிருக்கிறார் அனுசுயா. நம் நாட்டின் கலைப்பொக்கிஷங்களை இனியாவது பராமரித்துக் கொண்டடுவோமா?
ஆஹா! நீங்கள் ஓவியரா?மகிச்சி அம்மா!
ReplyDeleteமாணிக்கங்கள் பட்டியலில் என்னையும் சேர்த்தது அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
இன்றைய மாணிக்கங்களில் சிலரை நான் வாசித்ததில்லை.இனி அவர்கள் வலைதளத்திற்கும் செல்வேன். நன்றி
இனிய மாணிக்கங்கள் தந்து இந்த நாளையும் இனிய நாளாக்கிய அன்பு சகோதரிக்கு நன்றி ...மாணிக்கங்களை சென்று பார்கிறேன் ....நன்றி
ReplyDeleteஅந்த மஞ்சு விரட்டும், மஞ்சள் நீராட்டும்
ReplyDeleteமறக்க முடியாத அனுபவங்கள் அம்மா...
அழகழகான முத்துக்களின் அறிமுகம்....
வாழ்த்துக்கள் அம்மா...
மாட்டுப் பொங்கல்,மாணிக்கம் பற்றிய பகிர்வு அருமை. அறிமுகப்படுத்திய பதிவர்களும் பதிவுகளும் மாணிக்கம் போன்று பளிச்சென்று இருக்கு.
ReplyDeleteமாணிக்கங்கள் அருமை.
ReplyDeleteஅவற்றில் சில எனக்குப் புதுமை.
நன்றி.
மாணிக்கங்கள் எல்லாருமே எனக்குப்புதுசுதான். எல்லாரையும் போயி பார்க்கணும். பகிர்வுக்கு நன்றிங்க. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய அறிமுகங்கள்.. நன்றி மனோம்மா.
ReplyDeleteஉங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தன்யனானேன், அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ, ஏனைய அறிமுகங்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇரணாடாம முரையாக வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வன நிறைவேற்றிட வாழ்த்துக்களக்கா!மாணிக்ககங்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவை.
ReplyDeleteமுதல் மாணிக்கம் வரலாற்று சுவடுகளுக்கும், மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! அறிமுகம்செயததற்கு நன்றி!
ReplyDeleteVery nice. many of them are very familiar to me. no doubt, they are real manikkangal. tks for best introductions ma.
ReplyDeleteஅறிமுக மாணிக்கங்களிற்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வலைச்சரத்தில் இன்று அறிமுகமான அனைவருக்கும் என் இனிய
ReplyDeleteவாழ்த்துக்கள் .என்னையும் அறிமுகம் செய்து வைத்த ஆசிரியருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்!.....
கிராமத்து மாட்டுப் பொங்கல் கண் முன்னே விரிந்தன அழகாய்.
ReplyDeleteமாணிக்கங்கள் எல்லாம் அருமை.
திரு முரளிதரன் மூங்கில் காற்று தெரியும், நன்கு எழுதுவார்., அம்பாளடியாள் பதிவுகளும் படித்து இருக்கிறேன் அருமையாக கவிதைகள் எழுதுவார்.
மற்றவர்கள் பதிவை வாசிக்க வேண்டும்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
தனது பெயரைச் சொல்லாமல், தனது வித்தியாசமான, பயனுள்ள பதிவுகளால் மட்டுமே பதிவுலகத்தில் தனது முத்திரையைப் பதித்து வரும் வரலாற்றுச் சுவடுகள் முதல் மாணிக்கமாக வலைச்சரத்திற்கு ஒளி கூட்ட மிகவும் தகுதியானவர்.
ReplyDeleteதிரு முரளிதரன், திருமதி ஷைலஜா, திருமதி அம்பாளடியாள், செல்வி சமீரா என்று எனக்குத் தெரிந்த பதிவர்கள் மாணிக்கங்களாக அறிமுகம் ஆகி இருப்பது அளவில்லா ஆனந்தத்தைக் கொடுக்கிறது.
மற்ற மாணிக்கங்களையும் போய் படிக்கிறேன்.
எல்லோருக்கும் பாராட்டுக்கள்!
என்னை அறிமுகப்படுத்தியதற்கும், இன்னும் பலரின் அறிமுகம் கிடைக்க வைத்ததற்கும் மிக்க மகிழ்ச்சி & நன்றி.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்னை மாணிக்கமாக்கி அவையில் ஒளிர வைத்துவிட்டீர்கள்
ReplyDeleteமிக்க நன்றி திருமதி மனோ சுவாமிநாதன் மற்ற மாணிக்கங்களுக்கும் வாழ்த்துகள்!
மாணிக்கமான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//ஒவ்வொரு வீட்டிலும் மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை கூராக சீவி விட்டு, அதில் கொப்பி போட்டு, குஞ்சமும் சலங்கையும் வைத்துக் கட்டி, வண்ணங்களால் அழகூட்டி, நெட்டி மாலைகள் அணிவித்து, பொட்டிட்டு //
ReplyDeleteஅழகாக வர்ணித்துள்ளீர்கள். ;)
//தார தப்பட்டைகள் முழங்கும். பிறகு எல்லா மாடுகளையும் அவிழ்த்து விடுவார்கள். அவைகள் திமிறிக்கொண்டே நாலு கால் பாய்ச்சலில் வீட்டை நோக்கி ஓடி வர, அதன் பின்னாலேயே இளைஞர்கள் அவற்றை விரட்டிக்கொண்டே ஓடி வர, முறைப்பெண்கள் அவர்கள் மேல் மஞ்சள் தண்ணீர் விசிறியடிக்க, ஊரே கொண்டாட்டமாக இருக்கும்!!!//
ReplyDeleteஅடேங்கப்பா ... சூப்பரோ சூப்பர் தான்.
>>>>
//இது ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்றும், ஹிந்தியில் மாணிக் என்றும் அழைக்கப்படும். புராண நூல்களில் இதற்கு குருவிந்தம், பதுமராகம், ரவிமணி, ஹாரநாயகம் என்ற பெயர்களும் உண்டு. //
ReplyDeleteமாணிக்கம் பற்றிய அருமையான பல தகவல்கள் .. அசத்தலோ அசத்தல்.
>>>>>
இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள, மாணிக்கங்கள்
ReplyDeleteபோன்ற பதிவர்கள் அனைவருக்கும்,
என் அன்பான பாராட்டுக்கள் _+ வாழ்த்துகள்.
வணக்கம்
ReplyDeleteமனோ சாமிநாதன்
இன்று வலைச்சரம் மாட்டுப்பொங்கல் சிறப்புடன் ஒளிக்கிறது நல்ல அழகான மாடுகள் அதன் கொம்புகள் அழகு இன்று அறிமுகம் கண்ட வலைப்பூவாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் அதை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteமனோ சாமிநாதன்
இன்று வலைச்சரம் மாட்டுப்பொங்கல் சிறப்புடன் ஒளிக்கிறது நல்ல அழகான மாடுகள் அதன் கொம்புகள் அழகு இன்று அறிமுகம் கண்ட வலைப்பூவாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் அதை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//தனது பெயரைச் சொல்லாமல், தனது வித்தியாசமான, பயனுள்ள பதிவுகளால் மட்டுமே பதிவுலகத்தில் தனது முத்திரையைப் பதித்து வரும் வரலாற்றுச் சுவடுகள் முதல் மாணிக்கமாக வலைச்சரத்திற்கு ஒளி கூட்ட மிகவும் தகுதியானவர்.//
ReplyDeleteமிக்க நன்றி அம்மா, தங்களை போன்ற பெரியோர்களின் ஆசியுடன் பதிவுலகில் முன்னேறி இன்னும் மேலே வருவேன்!
நன்றிகளுடன், வரலாற்று சுவடுகள்
இனிய அறிமுகங்கள்.. நன்றி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் மகிழ்வுக்கும் அன்பார்ந்த நன்றி முரளீதரன்!!
ReplyDeleteஅருமையான கருத்துரை அளித்த சகோதரர் ரியாஸிற்கு மனமார்ந்த நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மகேந்திரன்!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஆசியா!
ReplyDeleteவருகை தந்து பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றி துளசி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி பூந்தளிர்!
ReplyDeleteபாராட்டிற்கு அன்பு நன்றி சாந்தி!
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்களுக்கு மகிழ்வு கலந்த நன்றி மலர்!
ReplyDeleteவருகை தந்து கருத்துரையிட்ட வரலாற்றுச்சுவடுகளுக்கு உளமார்ந்த நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸாதிகா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி அப்துல் பசித்!
ReplyDeleteவருகைக்கு உளமார்ந்த நன்றி சகோதரர் பாலகணேஷ்!
ReplyDeleteநல்வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி வேதா!
ReplyDeleteவருகைக்கு அன்பு நன்றி அம்பாளடியாள்!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!
ReplyDeleteபாராட்டுக்களுக்கும் வரலாற்றுச் சுவடுகள் பற்றிய இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரி ரஞ்ச்னி!
ReplyDeleteஇனிய வருகைக்கு அன்பு நன்றி ராம்குமார்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஷைலஜா!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி நிஜாமுதீன்!
ReplyDeleteவிரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
ReplyDeleteபாராட்டுக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி ரூபன்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துரையிட்டதற்கும் அன்பு நன்றி காஞ்சனா!
ReplyDeleteமாணிக்கங்களாய் ஒளிரும் அறிமுகங்கள் அருமை .. பாராட்டுக்கள்...
ReplyDelete