Monday, January 14, 2013

முத்துக்கள்!!

முதலில் வலைச்சர ஆசிரியராய் பணி செய்ய என்னை இரண்டாம் முறையாக அன்புடன் அழைத்த அன்புச் சகோதரர் சீனா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியினை இங்கே தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

வலைப்பதிவுலக சகோதர சகோதரியர் அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்! தித்திக்கும் சர்க்கரைப்பொங்கலாய் இனிமையுடனும் ஆரோக்கியத்துடனும் அனைத்துச் செல்வங்களுடனும் உறவுகளின் அன்பு சூழ உங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஆனந்தம் பொங்கி பெருகட்டும்!!

எல்லோரும் பொங்கலைக் கொண்டாடி முடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

பொங்கல் என்பதை நினைக்கும்போதே ஊரின் நினைவு தானாக வந்து விடும். சின்ன வயதில் பெற்றோருடன் கொண்டாடிய பொங்கல்- எந்த விதக்கவலையும் அறியாமல் கரும்பைக்கடித்து, புத்தாடை அணிந்து சிரித்து மகிழ்ந்து நாட்கள் அவை! அப்போதெல்லாம் தபால்காரர் கொண்டு வரும் பொங்கல் வாழ்த்துக்களை வாங்க எனக்கும் என் சகோதரிக்கும் ஒரு பெரிய போட்டியே நடக்கும். அவசர அவசரமாக அந்த வாழ்த்துக்களைப் பிரித்து அவற்றில் வரையப்பட்டிருந்த வண்ன வண்ன பூக்களை தடவித் தடவி ரசித்த காலம்!

அப்புறம் புகுந்த வீட்டில் புது மணப்பெண்ணாய் பொங்கல்! மாமியார் ஒரு பெரிய பானையில் தன் மகன்களுடன் பேசியவாறே பொங்கல் கிளறியதை விழி விரிய பார்த்தது, வாசலடைத்துக் கோலம் போட்டு ரசித்தது, மறுநாள் காலை, தண்ணீரில் இரவே ஊறப்போட்டிருந்த வெண் பொங்கலை கட்டித்தயிர் விட்டு ரசிக்க ருசிக்க சாப்பிட்டது என்று மகிழ்ந்த காலம்!

கன்னிப்பொங்கலன்று மாலை ஆற்றங்கரைக்கு கட்டு சாதங்களுடன் சென்று கதை பேசி சிரித்த காலம்!

அதன் பின் இங்கே பாலைவனத்தில் வாழ்க்கை! 36 வருடங்களுக்கு முன் இங்கு வந்த போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டிடங்கள்! எங்காவது தமிழ்க்குரலைக் கேட்டால் போதும், ஓடிப்போய் அவர்களிடம் பேசுவோம்! பொங்கலுக்கு கிட்டத்தட்ட 25 பேர்களாவது சாப்பிட வருவார்கள். ரசித்து சாப்பிட்டு, சில சமயம் பார்சலும் கட்டி வாங்கிக்கொண்டு, ஊர் ஞாபகமும் குடும்ப நினைவுகளுமாய் கதைகள் பேசிப்பிரிவார்கள். வருடங்கள் ஏற ஏற அதெல்லாமும் தேய்ந்து போயிற்று!

எங்களின் உணவகத்தில் பொங்கலன்று சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கலுடன் சித்திரான்னங்கள் ஐந்து வகைகள், சாம்பார், ரசம், கறி வகைகள், கரும்பு என்று மணக்கும்! தலைவாழை இலை போட்டு அனைத்தும் பரிமாறுவார்கள்! நம் ஆட்கள் சாப்பிட்டு விட்டு ‘ ஊரிலிருந்த மாதிரி இருந்ததுங்க!’ என்று சொல்லி விட்டு செல்வார்கள்!

என்ன இருந்தாலும் நம் ஊரில் பொங்கல் என்றால் அது தனி சுகம் தான்!

இப்போது என் பதிவுகளுக்கு வருகிறேன்! வலைப்பூ ஆரம்பித்து எழுத நினைத்ததே உள்ள உணர்வுகளுக்கு ஒரு வடிகால் தேடித்தான்! அவை எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம், அனுபவங்களாக, சிந்தனைகளாக, குறிப்புகளாக, ரசனைகளாக…! நமக்கு வடிகால் கிடைக்கும்போதே, யாருக்கேனும் அந்த‌ எழுத்துக்கள் உபயோகமானதாகி விட்டால் அது கூடுதல் சந்தோஷம்! நல்ல சிந்தனைகள் யாருக்கேனும் உரமாகி விட்டால், யாருக்கேனும் மயிலிறகு போல இதமாக வருடிக்கொடுத்தால் அது இன்னும் பேரானந்தம்! அப்படித்தான் பதிவுகளை நான் பார்க்கிறேன் ஒரு நல்ல சினேகிதியைப்போல!!

என்னுடைய சில பதிவுகள்!


வாழ்க்கையில் அன்பின் இலக்கணம் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வடிவாய்ப் புரியும்! ஆனால் அத்தனையையும் அடித்துப்போட்டு, இந்த அந்தி வெய்யில் தாகத்துக்கு இதமாய் மனதில் பிரவாகமாய் அந்த அன்பை உணர்ந்த போது எழுந்தது தான் இந்த கவிதை!


இன்றைக்கு முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன! வயதான பெற்றோர்கள் எந்த அளவிற்கு வேதனைகளை அனுபவிக்கிறார்கள் என்பதைக்காணும்போதெல்லம் மனம் கனக்கிறது! அவர்கள் நிலைமைகளை விளக்கி இளயவர்களுக்கு இதில் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்!

பாலைவன வாழ்க்கை!

இந்தப்பாலைவன வாழ்க்கையின் இலாப நஷ்டங்களை இங்கே விவரித்திருக்கிறேன்.

15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது! இன்னும் ஆறாத ரணம்! அதை இங்கே பதிவாக்கி வடிகால் தேட முயற்சித்திருக்கிறேன்!


23 ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் பக்கத்து நாடான குவெய்த்தில் ராணுவத்துடன் இராக் புகுந்து ஆக்ரமித்தது. அந்த நொடியில் பல பேரின் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. பல தேசத்தவர்கள் இருக்க இடமின்றி, வெளியேற வழியின்றி தவித்துப்போனார்கள். நம் இந்தியர்களும் அனுபவித்த கஷ்டங்கள் எத்தனை எத்தனையோ? அந்தக் கதையின் ஒன்று தான் இந்த இளைஞனின் கதை!

வைரங்களாய், மாணிக்கங்களாய்,  பவளங்களாய்,  கோமேதகங்களாய், மரகதமாய், புஷ்பராகமாய் பதிவுலக வானில் மின்னுகின்ற பதிவர்களை நாளையிலிருந்து பார்ப்போம்!  

66 comments:

  1. முத்துக்கள் அளித்து வலைச்சர தோரணத்தை விலையை உயர்த்தி விட்ட அன்பு சகோ திருமதி. மனோ சாமிநாதன் அவர்களே வருக வருக ..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

    வலைச்சரத்தில் முத்துக்களுடன் தொடர்ந்த தாங்கள் மேலும் தங்கம்,வைரம் வைடுரியங்கள் சேர்த்து விலைமதிப்பு அற்றதாய் இந்த தோரணத்தை ஆக்கபோகிரீர்கள் என்பது உறுதி ...வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
  2. இன்று ஒரு சந்தோஷ தகவலும் நன்றியும் உங்கள் அனைவருக்கும் ......சென்ற வாரம் தமிழ் மனம் டாப் 20 இல் வலைச்சரம் 5வது இடத்தில இருந்ததது ,இந்த வாரம் இரண்டு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி ........இதற்க்கு உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் ...

    மேலும் வலைச்சரத்தில் இந்த வாரம் முழுவதும் பின்னூட்டம் இட்டு மகிழ்வித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  3. பதிவுலுக வள்ளல் அன்பு ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே ............
    எனக்கு நேற்று இனிக்க இனிக்க கரும்பு தந்தவரே கோடான கோடி நன்றிகள் ஐயா
    வலைச்சரத்தில் எனது இறுதி பதிவில் தாங்கள் அளித்த அணைத்து கருத்துக்களும் கரும்புகள் தான் எனக்கு !
    இந்த வாரம் முழுவதும் என் மனதை மகிழ்ச்சியில் பொங்க வாய்த்த உங்கள் பின்னூட்டங்கள் அனைத்துமே சக்கரை பொங்கல் தான்

    உங்கள் வாழ்த்துக்கள் ஆசிகள் எல்லாம் கிடைத்த பேரின்பத்தில் என்றும் அன்புடன் ரியாஸ்

    ReplyDelete
  4. இனிய வணக்கம் மனோ அம்மா...
    தித்திக்கும் இனிய பொங்கல் திருநாளில்
    ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும்
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும்...
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நல்வரவு மனோ!

    பொங்கல் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்,அன்பு அக்கா, உங்கள் எழுத்துக்களை வாசிக்கின்ற பொழுது உங்கள் இனிமையான குரலில் கேட்பது போன்றே இருக்கிறது.அற்புதமான முன்னுரை.தொடருங்கள் ஆவல் பொங்க..காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  7. மனோ அம்ம இந்தவார வலைச்சர ஆசிரியராக இரண்டாவ்து முறையாக வந்திருக்கிறீர்களா? ஏற்கனவே நல்ல அனுபவம் இருந்திருக்கும். இந்த வாரமும் சிறப்பான பதிவர்களை அரிமுகப்படுதுவீங்கன்னு ஆவலுடன் காத்துகிட்டு இருக்கோம்மா. பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் எல்லாருக்கும்.

    ReplyDelete
  8. பொங்கல் மலரும் நினைவுகள் அருமை. இளமைக்கால பொங்கல் போல் எப்போதும் வராது. அது ஒரு பொற்காலம்.

    உங்களுக்கும் உங்கள் அன்பு குடுமப்த்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    வைரங்களாய், மாணிக்கங்களாய், பவளங்களாய், கோமேதகங்களாய், மரகதமாய், புஷ்பராகமாய் பதிவுலக வானில் மின்னுகின்ற பதிவர்களை நாளையிலிருந்து பார்ப்போம்! //

    நாளை நவரத்தினமாய் ஜொலிக்கும் பதிவர்களை பார்க்க ஆவல்.
    தொடர்கிறேன்.

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்லதொரு பொங்கல் கொண்டாட்ட காலத்திலே
    இன்னுமொரு கொண்டாட்டமாக ஆசிரிய பணி !
    சிறக்க , சிறப்பிக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    அன்புடன்
    நாடிகவிதைகள்

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. பொங்கல் கொண்டாடியபடியே வலையில் நுழைந்தால் மனோம்மா வலைச்சர ஆசிரியர் என்கிற இனிப்புப் பொங்கல் இங்கே! டபுள் பொங்கல் கொண்டாடிய சந்தோஷத்துடன் உங்களுக்கு என் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். உங்களின் எழுத்துகளுக்கு அறிமுகமே தேவையில்லை. நீங்கள் அறிமுகம் செயயவிருக்கும் முத்து, வைரம், கோமேதகங்களை பெற்றுக் கொள்ள ஆவலுடன் நான்...!

    ReplyDelete
  13. அன்பின் மனோ - அறிமுகங்கள் அருமை - தொடர்க் பணீயினை - இனிய பொங்கல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. முத்தாய் ஜொலிக்கப்போகும் இந்த வாரத்துக்கான ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. வாங்கம்மா!...
    வந்து அடுத்த 6 நாட்களும் நல் அறிமுகங்கள் தாங்கம்மா!!

    ReplyDelete
  16. வைரங்களாய், மாணிக்கங்களாய், பவளங்களாய், கோமேதகங்களாய், மரகதமாய், புஷ்பராகமாய் பதிவுலக வானில் மின்னுகின்ற அறிமுகங்களுக்கு வலைச்சர வாழ்த்துகள்..

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  17. @ ரியாஸ் அஹமது


    தங்கள் பின்னூட்டத்தில் சிறு கருத்துப் பிழை ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.

    // விலைமதிப்பு அற்றதாய் //

    "விலை மதிப்பிட முடியாததாய்" என்று இருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  18. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

    அக்கா, சென்ற முறையைப் போல இப்போதும் முத்துச்சிதறல்களை அள்ளிக்கொள்ளக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. //முதலில் வலைச்சர ஆசிரியராய் பணி செய்ய என்னை இரண்டாம் முறையாக அன்புடன் அழைத்த அன்புச் சகோதரர் சீனா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியினை இங்கே தெரிவித்துக் கொள்ளுகிறேன்.//

    என் அன்புக்குரிய வலைச்சர தலைமை ஆசிரியர் திரு. சீனா ஐயா அவர்களுக்கு நானும் இங்கு என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

    என் அன்புக்குரிய சகோதரியாகிய தங்களை வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறேன்.

    தங்களின் இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக அமைய என் மனமார வாழ்த்துகிறேன்.

    >>>>>>>

    ReplyDelete
  20. //வலைப்பதிவுலக சகோதர சகோதரியர் அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

    தித்திக்கும் சர்க்கரைப்பொங்கலாய் இனிமையுடனும் ஆரோக்கியத்துடனும் அனைத்துச் செல்வங்களுடனும் உறவுகளின் அன்பு சூழ உங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஆனந்தம் பொங்கி பெருகட்டும்!!//

    தங்களின் இந்த இனிப்பான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

    //எல்லோரும் பொங்கலைக் கொண்டாடி முடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!//

    ஆம் கொண்டாடி மகிழ்கிறோம்.

    அதனலேயே என் வருகையில் இன்று மிகவும் தாமதம்.

    இடைவேளைக்குப்பின் மீண்டும் வருவேன்

    >>>>>

    ReplyDelete
  21. பொங்கல் திருநாளில் வலைச்சர ஆசிரியராக பணி ஏற்கும் தங்களை சிறப்பாக பணியாற்ற, பொங்கல் வாழ்த்து சொல்லி வரவேற்கிறேன்.

    ReplyDelete
  22. //சின்ன வயதில் பெற்றோருடன் கொண்டாடிய பொங்கல்- எந்த விதக்கவலையும் அறியாமல் கரும்பைக்கடித்து, புத்தாடை அணிந்து சிரித்து மகிழ்ந்து நாட்கள் அவை!//

    சிறு வயது நினைவலைகளை அசைபோட்டுச் சொன்னது அழகு தான்.

    //அப்போதெல்லாம் தபால்காரர் கொண்டு வரும் பொங்கல் வாழ்த்துக்களை வாங்க எனக்கும் என் சகோதரிக்கும் ஒரு பெரிய போட்டியே நடக்கும். அவசர அவசரமாக அந்த வாழ்த்துக்களைப் பிரித்து அவற்றில் வரையப்பட்டிருந்த வண்ன வண்ன பூக்களை தடவித் தடவி ரசித்த காலம்!//

    ஆஹா, அவை எவ்வளவு ஒரு மகிழ்ச்சியளிக்கும் நமக்கு. அவை என்றும் நமக்கு நீங்காத நினைவுகள் தான்.

    >>>>>>>>

    ReplyDelete
  23. //அப்புறம் புகுந்த வீட்டில் புது மணப்பெண்ணாய் பொங்கல்! மாமியார் ஒரு பெரிய பானையில் தன் மகன்களுடன் பேசியவாறே பொங்கல் கிளறியதை விழி விரிய பார்த்தது, வாசலடைத்துக் கோலம் போட்டு ரசித்தது,//

    பிறந்த வீட்டை மறக்கச்செய்யும், அடுத்த இந்த இளமைப் பருவத்திலும் ஓர் தனி இன்பம் தான். சுகம் தான்.

    இவைகளையும் நல்ல மலரும் நினைவுகளாக வெகு அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

    >>>>>>

    ReplyDelete
  24. //அதன் பின் இங்கே பாலைவனத்தில் வாழ்க்கை! 36 வருடங்களுக்கு முன் இங்கு வந்த போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டிடங்கள்! எங்காவது தமிழ்க்குரலைக் கேட்டால் போதும், ஓடிப்போய் அவர்களிடம் பேசுவோம்!//

    36 வருடங்களுக்கு முன்பு அவ்வாறு பாலைவனமாக இருந்திருக்கலாம்.

    நானும் ஒத்துக்கொள்கிறேன். இன்று தான் சோலைவனமாக ஆகிவிட்டதே மேடம்.

    சொர்க்க பூமியாக அல்லவா திகழ்கிறது.

    எத்தனை எத்தனை உழைப்புக்களால் நவீன தொழில் நுட்பங்களால் வானத்தைத் தொட்டிடும் கட்டங்கள், வழிக்கிச்சென்றிடும் சாலைகள், உலகில் உள்ள அத்தனை மொழி பேசும் ஜனங்கள் என எவ்வளவு அருமையாக மாறியுள்ளது!

    அங்கு சென்று 45 நாட்கள் தங்கியிருந்த எனக்கு, திரும்ப ஊர் திரும்பவே பிடிக்கவில்லை.

    ஒவ்வொன்றையும் ரஸித்து மகிழ்ந்தேன். அந்த என் பயணக்கட்டுரை முடிக்கவே முடியாமல் பாதியில் நிற்கிறது.

    அந்த அளவுக்கு ஆச்சர்யமான குறிப்புக்களை ஆயிரக்கணக்கில் நான் சுருக்கமாக எழுதி வந்துள்ளேன்.

    துபாய் தமிழ்சங்க நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டேன். அதன் ஆண்டு விழாவினில் சிறப்பு விருந்தினராக கெளரவிக்கப் பட்டேன்.

    அதைப்பற்றி மட்டும் கொஞ்சமாக என் பதிவினில் [அதில் படங்களே அதிகம்] எழுதியுள்ளேன்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/07/5.html

    >>>>>>>>>

    ReplyDelete

  25. @ ரியாஸ் அஹமது


    தங்கள் பின்னூட்டத்தில் சிறு கருத்துப் பிழை ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.

    // விலைமதிப்பு அற்றதாய் //

    "விலை மதிப்பிட முடியாததாய்" என்று இருக்கலாம் அல்லவா?
    தவறுக்கு வருத்துகிறேன் ...மன்னிக்கவும்

    ReplyDelete
  26. //எங்களின் உணவகத்தில் பொங்கலன்று சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கலுடன் சித்திரான்னங்கள் ஐந்து வகைகள், சாம்பார், ரசம், கறி வகைகள், கரும்பு என்று மணக்கும்! தலைவாழை இலை போட்டு அனைத்தும் பரிமாறுவார்கள்! நம் ஆட்கள் சாப்பிட்டு விட்டு ‘ ஊரிலிருந்த மாதிரி இருந்ததுங்க!’ என்று சொல்லி விட்டு செல்வார்கள்!//

    இதைக்கேட்க [சாப்பாட்டு ராமனாகிய] எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    நான் அங்கு தங்கியிருந்த போது நம்மூர் “ஹோட்டல் சரவண பவன்” கிளை ஒன்று மிக அருகிலேயே இருந்ததாலும், அங்கு இட்லி, பஜ்ஜி, ஸ்பெஷல் ரவா, பூரி மஸால், வெங்காய ஊத்தப்பம் போன்ற எனக்குப்பிடித்த அனைத்து டிபன் ஐட்டங்களும் அருமையான சாம்பார் + கெட்டிச்சட்னியுடன் கிடைத்து வந்ததாலும், எனக்கு ஊரை விட்டு ஊர், நாடை விட்டு நாடு வந்துள்ளோம் என்ற எண்ணமே கொஞ்சமும் எற்படாமல், மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

    ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை என் வயிற்றால் நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.

    >>>>>>

    ReplyDelete
  27. //என்ன இருந்தாலும் நம் ஊரில் பொங்கல் என்றால் அது தனி சுகம்
    தான்! //

    அது என்னவோ மறுக்க முடியாத உண்மை தான்.

    சொர்க்கமே ஆனாலும் சொந்த ஊர் போலாகுமா?

    >>>>>>>

    ReplyDelete
  28. //வலைப்பூ ஆரம்பித்து எழுத நினைத்ததே உள்ள உணர்வுகளுக்கு ஒரு வடிகால் தேடித்தான்!//

    இதைச் சொல்லிச் சொல்லியே என்னையும் ஓர் வலைப்பூ தொடங்க வைத்தவர்களும் நீங்கள் தான்.

    மறக்க முடியாத நாட்கள் அவை. ;)

    மற்ற எல்லோரும் நான் வலைப்பூ தொடங்கிய பிறகே எனக்குப் பழக்கம் ஆனார்கள்.

    ஆனால் நீங்கள் மட்டும் அதற்கு முன்பாகவே எனக்குப்பழக்கம் ஆகியிருந்தீர்கள்.

    சந்தோஷமாக உள்ளது.

    என் முதல் பதிவுக்கு முதலில் வந்து பின்னூட்டம் கொடுத்திருந்ததும் நீங்கள் தான்.

    இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

    தங்களின் பின்னூட்டம் இதோ:

    மனோ சாமிநாதன்
    January 5, 2011 at 9:45 AM

    இந்தக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் படும் துயரத்தை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்க்கை அன்பால் மட்டுமே மதிப்பிடப்பட்டது ஒரு காலம்! இன்றைய வாழ்க்கை பெரும்பாலானவர் இல்லங்களில் சுயநலத்தாலும் பணத்தாலும் மட்டுமே மதிப்பிடப்படுகிறது!

    >>>>>>>

    ReplyDelete
  29. // அவை எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம், அனுபவங்களாக, சிந்தனைகளாக, குறிப்புகளாக, ரசனைகளாக…!

    நமக்கு வடிகால் கிடைக்கும்போதே, யாருக்கேனும் அந்த‌ எழுத்துக்கள் உபயோகமானதாகி விட்டால் அது கூடுதல் சந்தோஷம்!

    நல்ல சிந்தனைகள் யாருக்கேனும் உரமாகி விட்டால், யாருக்கேனும் மயிலிறகு போல இதமாக வருடிக்கொடுத்தால் அது இன்னும் பேரானந்தம்! //

    மிகவும் அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

    அவை அத்தனையும் உண்மையே.

    இந்தத்தங்களின் கருத்துக்களும் எனக்கு பேரானந்தம் அளிக்கின்றன.

    >>>>>>>

    ReplyDelete
  30. தங்களின் இன்றைய சுய அறிமுகங்கள் எல்லாமே மிகச்சிறப்பானவைகள் தான்.

    நேரம் கிடைக்கும் போது மீண்டும் ஒரு முறை சென்று படிக்க உள்ளேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    //வைரங்களாய், மாணிக்கங்களாய், பவளங்களாய், கோமேதகங்களாய், மரகதமாய், புஷ்பராகமாய் பதிவுலக வானில் மின்னுகின்ற பதிவர்களை நாளையிலிருந்து பார்ப்போம்!//

    நவரத்தினங்களான இவற்றில் சிலவற்றை காண எனக்கு ஒரே சந்தோஷமாக உள்ளது.

    ’பவழங்களாய்’ என்றதும் என் நகைச்சுவைச் சிறுகதை
    “பவழம்” என் நினைவுக்கு
    வந்து சற்றே சிரித்துக்கொண்டேன்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_445.html ”ப வ ழ ம்”

    நாளை மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  31. //ரியாஸ் அஹமது said...
    பதிவுலுக வள்ளல் அன்பு ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே ............
    எனக்கு நேற்று இனிக்க இனிக்க கரும்பு தந்தவரே கோடான கோடி நன்றிகள் ஐயா.

    வலைச்சரத்தில் எனது இறுதி பதிவில் தாங்கள் அளித்த அனைத்துக் கருத்துக்களும் கரும்புகள் தான்
    எனக்கு !

    இந்த வாரம் முழுவதும் என் மனதை மகிழ்ச்சியில் பொங்க வாய்த்த உங்கள் பின்னூட்டங்கள் அனைத்துமே சக்கரை பொங்கல் தான்.

    உங்கள் வாழ்த்துக்கள் ஆசிகள் எல்லாம் கிடைத்த பேரின்பத்தில் என்றும் அன்புடன் ரியாஸ்//

    வாங்க, வணக்கம் நண்பரே.

    தங்களின் எழுத்துக்களில் உள்ள தரத்தினை நான் நன்கு ரஸித்து மகிழ்ந்து மனப்பூர்வமாகவே பல இடங்களில் பாராட்டி எழுதினேன்.

    குறிப்பாக உங்கள் வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள 4-5 பதிவுகள் மிகவும் எனக்கு மனதுக்குப் பிடித்ததாகவே அமைந்திருந்தன.

    அந்த அழகான அபூர்வமான அசத்தலான எழுத்துக்களுக்காக மட்டுமே நான் நிறைய பின்னூட்டங்கள் அங்கு உங்கள் தளத்தில் கொடுத்திருந்தேன்.

    தங்களின் நட்பு வலைச்சரத்தின் மூலம் எனக்கு புதிப்பிக்கப்பட்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி தான்.

    என்றும் அன்புடன்
    VGK

    ReplyDelete
  32. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  33. வருக வருக என வரவேற்று தொடர்கிறோம் .

    ReplyDelete
  34. வாருங்கள் மனோ!
    உங்கள் அனுபவ முத்துக்களை எங்களுடன் இந்த ஓர் வாரம் முழுக்க பகிர இருப்பது தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி.

    சிறப்பாக ஒரு வார ஆசிரியப் பணியை முடித்த ரியாஸ் அஹமது அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. வணக்கம்
    மனோ சாமிநாதன்

    பொங்கல் நாளில் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை ஒரு வாரகாலம் சிறப்பாக பணியாற்ற வருக வருகவென்று அன்புடன் அழைக்கின்றோம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய அன்புச் சகோதரன் (ரியாஸ்) அவர்களுக்கு எனது நன்றிகள் உதித்தாகட்டும் (நானும் ,ரியாஸ்)இருவரும் அப்பஅப்ப சந்திக்கும் பாக்கியம் கிடைக்குது)
    தொடருகிறேன் பதிவுகளை,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  36. பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலாய் வலைச்சரத்தில் உங்கள் பதிவுகள்.... தொடரட்டும் இனிப்பான பகிர்வுகள் வாரம் முழுவதும்...

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. மனோ மேடம் அவர்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
    2 வது முறை வருகை என்னை போன்றோருக்கு மேலும் நிறய்ய இனிய அருமையான உங்கள் எழுத்து நடையை ரசிக்கும் அன்பு சகோதரியாகிய நான் உங்கள் அருமை முத்தான முத்துக்களை நிங்க கோர்க்க அதை நான் ரசிக்க தயாராகி வருகிறேன்.
    வலைசரத்திற்க்கும் நன்றி.
    நாளையிருந்து ஒரே முத்து குவியலகள். ஒரே சந்தோஷமா இருக்கு.


    ReplyDelete
  38. முத்துச்சிதறலில் அனைவருக்கும் தேவையான அருமையான முத்துக்களை வழங்கி கொண்டு இருக்கும் மனோ அக்காவுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. அன்பான‌ வ‌ர‌வேற்பிற்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் ரியாஸ்!

    ReplyDelete
  40. வாழ்த்துக்க‌ளுக்கு இனிய‌ ந‌ன்றி மகேந்திர‌ன்!
    உங்க‌ளுக்கும் என் இனிய‌ பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்!

    ReplyDelete
  41. வ‌ர‌வேற்பிற்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் நெஞ்ச‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி துள‌சி!
    உங்க‌ளுக்கும் என் இனிய‌ பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்!என் வலைப்பூ சென்று என் பதிவினை வாசித்து அதற்கு பின்னூட்டமும் அளித்திருந்ததற்கும் என் இனிய‌ நன்றி!

    ReplyDelete
  42. முன்னுரைக்கான‌ பாராட்டிற்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி ஆசியா!

    ReplyDelete
  43. உங்க‌ள் எதிர்பார்ப்பை ஓர‌ளாவாவ‌து பூர்த்தி செய்வேன் என்று ந‌ம்புகிறேன் பூந்த‌‌ளிர்! வ‌ருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் உளமார்ந்த நன்றி !!

    ReplyDelete
  44. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு! என் வலைப்பூ சென்று என் பதிவுகளை வாசித்து அதற்கு பின்னூட்டமும் அளித்திருந்ததற்கும் என் இனிய‌ நன்றி!
    நீங்கள் சொல்லியிருப்பது போல அந்த பொற்காலமெல்லாம் திரும்ப வராது! அதன் நினைவுகள் மட்டுமே நெஞ்சில் தேங்கி நிற்கிறது!
    உங்க‌ளுக்கும் என் இனிய‌ பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள்!

    ReplyDelete
  45. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஸ்வராணி!

    ReplyDelete
  46. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி நாடிநாராயணன்!

    ReplyDelete
  47. அன்பான வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி அவர்கள் உண்மைகள்!!

    ReplyDelete
  48. பொங்கல் உங்கள் வருகையால் கலகலப்பானது சகோதரர் பாலகணேஷ்! இனிய வாழ்த்துக்களுக்கும் உங்க‌ள் பின்னூட்டம் கொடுத்திருக்கும் உற்சாகத்திற்கும் அன்பார்ந்த நன்றி! உங்களுக்கும் உள‌மார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்! இங்கும் பொங்கல் கொண்டாட்டங்கள், விருந்தினர் வ‌ருகை என்றிருந்ததால் பதிலெழுத தாமதம்!

    ReplyDelete
  49. அன்புச் சகோதரர் சீனா அவர்களுக்கு,

    வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பான நன்றி!
    உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  50. வருகைக்குக் கருத்துரைக்கும் இனிய நன்றி நிஜாமுதீன்!

    ReplyDelete
  51. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!
    உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  52. இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  53. அன்புள்ள சகோதரர் நடனசபாபதி அவர்களுக்கு,
    தங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!!
    உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  54. மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் விரிவான பின்னூட்டங்களுக்கும் அன்பான நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
    உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  55. வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ஏஞ்சலின்!

    ReplyDelete
  56. மகிழ்வான கருத்துரைக்கு என் அன்பு நன்றி சகோதரி ரஞ்சனி!

    ReplyDelete
  57. பொங்கல் வாழ்த்துக்களுக்கும் வரவேற்பிற்கும் இனிய நன்றி ரூபன்!!

    ReplyDelete
  58. இனிமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!
    உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  59. இனிய, விரிவான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி விஜி!!

    ReplyDelete
  60. வாழ்த்துக்க‌ளுக்கு இனிய‌ ந‌ன்றி ஜ‌லீலா!

    ReplyDelete
  61. தாங்கள் குறிப்பிட்டுள்ள தங்களது பதிவுகளில் காற்றுக் குமிழி மட்டும் நான் படித்திராதது.எனவே இப்போதுதான் அதைச் சென்று படித்தேன்.மனம் தாங்கவில்லை.அதை படித்த பின் பின்னூட்டத்தில் வேறேதுவும் என்னால் எழுத இயலவில்லை

    ReplyDelete
  62. தாங்கள் குறிப்பிட்டுள்ள தங்களது பதிவுகளில் காற்றுக் குமிழி மட்டும் நான் படித்திராதது.எனவே இப்போதுதான் அதைச் சென்று படித்தேன்.மனம் தாங்கவில்லை.அதை படித்த பின் பின்னூட்டத்தில் வேறேதுவும் என்னால் எழுத இயலவில்லை

    ReplyDelete
  63. வாழ்த்துக்கள் மனோ மேடம்.

    ReplyDelete
  64. பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்றாலும் சில நினைவுகள் மட்டும் நீங்குவதில்லை. நீர்க்குமிழி வாழ்க்கையை நினைவுபடுத்தும் “காற்றுக் குமிழிகள்” பதிவு.


    ReplyDelete
  65. எல்லா நாளும் படிக்க முடியாவிட்டாலும் ஓரிரு நாட்களாவது வந்து போவேன் ஆனால் பொங்கலைத் தொடர்ந்த உறவுக் கடமைகளில் இன்றுதான் வலைச்சரத்துள் நுழைந்தால் இன்ப அதிர்ச்சி . வைடூரிய நாளில் அறிமுகமாகியிருக்கிறது என் பதிவு. மிக்க நன்றி தோழி. உங்களின் காற்றுக் குமிழிகள் படித்தேன். சில நேரங்களில் சிலவற்றிற்கு நாம்தான் காரணமோ என்ற மன உளைச்சல் பெண்களுக்கே உரித்தான பாசப் போராட்டமா ? மற்ற பதிவுகளையும் , மற்றோரின் பதிவுகளையும் தொடர்கிறேன் நன்றி

    ReplyDelete