Sunday, January 20, 2013

வைடூரிய‌ங்க‌ள்!!!

சகோதரர் சீனா அவர்களுக்கு நான் மறுபடியும் நன்றி சொல்ல வேண்டும்!

ஏழு நாட்கள்! அனுபவங்கள், விசாலமான பார்வை இவற்றை சீதனமாகத்தந்த ஏழு நாட்கள்! எத்தனை பதிவர்கள்! கவித்துவம் மிக்க பதிவுகள்! நகைச்சுவையில் இழைந்த எழுத்துக்கள்! சோகங்களில் தோய்ந்த கதைகள்! வலியிலும் உணர்ச்சிப்பிரவாகமாய் வந்து விழுந்த அனுபவங்கள்! நல்லறிவுத்தெளிவைக் கொடுத்த அவற்றையெல்லாம் நவ ரத்தினங்களாய் கோர்ப்பதற்கு மனதிற்கு மகிழ்வாக இருந்தது! பெருமிதமாக இருந்தது!
இதற்கெல்லாம் காரணமாய் இருந்த, எனக்கு இத்தகைய நல்வாய்ப்பு தந்த சகோதரர் சீனா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி!



தினந்தோறும் எனக்கு அருமையான பின்னூட்டம் தந்து, என்னை உற்சாகப்படுத்திய சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன், திரு. பால கணேஷ், ரூபன், திருமதிகள் ரஞ்சனி நாராயணன், துளசி, கோமதி அரசு, அமைதிச்சாரல், பூந்தளிர், சகோதரர் வெங்கட், ஆதி வெங்கட், திருமதிகள் வேதா, ஸ்ரவாணி, ஆசியா ஓமர், ஏஞ்சலின், திரு.தமிழ் இளங்கோ,  
திருமதி. ராஜராஜேஸ்வரி! மற்றும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி!

அடுத்து என் வலைப்பூவைப்பற்றிச் சொல்ல வேண்டும். கடந்த 2 வருடங்களாகவே நான் அடிக்கடி தமிழ்நாடு செல்ல வேண்டி வந்ததால் நான் விரும்பிய அளவு என்னால் மற்ற‌வர்களின் தளங்களுக்குச் சென்று பின்னூட்டங்கள் கொடுக்க முடிந்ததில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாது எனக்கு அவ்வப்போது பின்னூட்டங்கள் கொடுத்து ஊக்கமும் உற்சகமும் தொடர்ந்து அளித்து வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் பின் தொடர்வோர்க்கும் உளமார்ந்த நன்றி!



இங்கே இறுதியாக வைடூரியங்களைப் பதித்து விட்டு அன்புடன் விடைபெறுகிறேன்!!

வைடூரியம் [ CAT'S EYE]

வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது.
இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு  CAT'S EYE என்ற ஆங்கிலப் பெயர் வந்தது.



 மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும். வைடூரியம் அணிந்தால் தீராத நோய்கள் தீரும் என்று சொல்லப்படுகிறது.

இனி வைடூரிய‌ங்க‌ள் போல் த‌க‌த‌க‌க்கும் ப‌திவ‌ர்க‌ள்....!!!

நகைச்சுவையான எழுத்து தான் இவரது ஸ்பெஷல்! அதை விட்டு வெளியில் வந்து, சின்ன வயதில் உறவுக்காரக் குழந்தைகளுடன் கிணற்றங்கரையில் எரிச்ச குழம்பும் பழைய அமுதுமாய் பாட்டி கையால் வாங்கி சாப்பிட்டது, அதே இடத்தில் காயப்போட்டிருந்த வடாம் மாவை தின்றது, தாத்தா, பாட்டியுடன் பல்லாங்குழி ஆடியது என்று ஏக்கமாக மலரும் நினைவுகள் சிலவற்றை எழுதியிருக்கிறார் சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!. எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த கிணற்றங்கரை, ரயில் விளையாட்டு,  என்று நிச்சயம் நிறைய இருக்கும் ஆனனல் இத்தனை சுவரஸ்யமாகச் சொல்லத் தெரியுமா என்று தெரியவில்லை! இவரின் ஊதி ஓடும் ரயில் பதிவைப்படித்துப்பாருங்கள்!!

தனது மதுரைப்பயணத்தை சுகமான மலரும் நினைவுகளுடனும் இலேசான‌ சோகத்துடனும் அழகாக விவரிக்கிறார் திரு.அனந்து இங்கே!

முழுக்க முழுக்க தன் கிராமத்து நினைவுகளால் ஏக்கம் கொண்டிருக்கும் திரு.அரசன் தன் கிராமத்தைப்பற்றி அழகாக இங்கே எடுத்துரைக்கிறார்!

600 பதிவுகளுக்கு மேல் எழுதி வரும் ஜலீலா சமையல் குறிப்புகள் எழுதுவதில் வல்லவர். அதையும் தவிர மருத்துவக்குறிப்புகள், கட்டுரைகள் என்று எழுதி கலக்குகிறார். இங்கே துபாயில் பாச்சிலர்ஸ் வாழ்க்கை என்று மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறார்!

திருமதி.ராஜலக்ஷ்மியின் அருமையான பதிவு இது! இன்றைய குழந்தைகளிடமிருந்து காணாமல் போன குழந்தைத்தனத்தை எங்கிருந்து மீட்டுத் தருவது என்று கேட்கிறார் இவர் காண‌வில்லை என்ற‌  பதிவில்! படித்துப்பாருங்கள். இன்றைய யந்திர வாழ்க்கையை பிட்டு பிட்டு வைத்திருக்கிறார்.

அந்தக் கால தாலாட்டுப்பாடல்கள் தனி சுகம். அதையெல்லாம் மிக‌ அருமையாக விவரித்து, இந்தக்கால தாய்மாட்களுக்கு சீரியல்கள் தான் பெரிதாயிருக்கிரது என்றும் ஆதங்கம் கொள்கிறார். நியாயம் தானே?’‘ மாமன் அடிச்சாரோ மல்லியப்பூ செண்டாலே? அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே?’ போன்ற ஆத்மார்த்தமான பாடல்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதை நினைக்கும்போது இது போன்ற எத்தனையோ நல்ல விஷ‌யங்கள் காலப்போக்கில் காற்றில் மறைந்து விட்டதை நினைத்து அவரைப்போல ஆதங்கம் தான் பெருகுகிறது..

பதிவர்கள் மன உளைச்ச‌லிலிருந்து விடுபட பல யோசனைகள் சொல்லி ஒரு வித்தியாசமான பதிவை எழுதியிருக்கிறார் கிராமத்து காக்கை!

தாயின் பிரிவை நினைத்து மனம் கலங்கி உருகி நெகிழ்கிறார் ரூபன் இங்கே!

சகோதரர் கே.பி.ஜனாவின் ஒரு பக்க சிறுகதைகள் எல்லமே ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாயிருக்கும். இந்த விளையும் பயிர் கூட அப்படித்தான். அவசியம் படித்துப்பாருங்கள்!!

இந்த சிறுகதை ‘ தோடுக்கார தாத்தா’ மனம் நெகிழ வைக்கிறது. எழில் அருமையாய் எழுதி நம்மை மனம் கலங்க வைக்கிறார்!

"குழந்தைகள் உலகில் போட்டி பொறாமையில்லை.சூதுவாது இல்லை.வஞ்சகம் இல்லை.அடுத்தவனுடையதை தட்டிப்பறிக்கும் ஆவேசமில்லை.தனக்குதனக்கு என்று ஒதுக்கி பதுக்கி வைத்துக்கொள்ளும் களவாணித்தனம் இல்லை.அங்கு எல்லாமே திறந்த புத்தகம்தான்.எந்தப்பக்கத்தையும் எவரும் வாசிக்கலாம்..எந்தப் பக்கத்திலும் எவரும் எழுதலாம்.அவர்களின் விரிந்துகிடக்கும் வானத்தில் கொட்டிக்கிடக்கும் அழகிய வண்ணங்களை எவரும் எடுத்து பூசிக்கொள்ளலாம்..எவருக்கும் பூசிவிடலாம்.” என்று குழந்தைகள் உலகை மிக அருமையாக விவரிக்கிறார் திரு.கருணா! அதை நிரூப்பிப்பது போல சிறந்த ஒரு குறும்படமும் உங்களுக்காக அன்பு என்ற தலைப்பில் காத்திருக்கிறது இங்கே!

பொதுவாக எந்த நல்ல விஷயத்தையும் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுவது வழக்கம். வீடு நன்கிருந்தால் நாடு நன்கிருக்கும்  என்பதும் முதுமொழி. இப்போதெல்லாம் குழந்தைகள் தமிழ் மொழி கற்று எழுதுவதும் படிப்பதும் அரிதாகி விட்டது. இங்கு ரமா நம் தாய்மொழியை மறந்து விடாமல் தன் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களின் தமிழார்வத்தை வளர்த்து, நல்ல விஷயத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறார்!

உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி இங்கே கோவி.கண்ணன் விரிவாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.

தந்தைக்கே உபதேசம் செய்த முருகக்கடவுள் போல, இங்கே அன்னைக்கே உபதேசம் செய்யும் மகனின் வார்த்தைகள் ‘ அவன் பெரியவன்!’ என்ற பூரிப்பைக் கொடுக்கிறது அந்த தாயின் மனதிற்கு! கிருஷ்ணப்ரியா மிக அழகாக எழுதியிருக்கிறார் இங்கே!




 

66 comments:

  1. வணக்கம்
    மனோ,சாமிநாதன்

    1 வாரகாலமும் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக பணியற்றி பலவகைப்பட்ட பதிவுகளை வாசக உள்ளங்களுக்கு பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி

    இறுதி நாள் அன்று என்னுடைய பதிவையும் வலையுலகத்துக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி, அத்தோடு இன்று அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
    தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்களும், அறியத் தந்த உங்களுக்கு நன்றியும்! வலையுலகில் எங்கள் வட்டத்தை விரிவு செய்யும் வலைச்சரத்துக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  3. வைடுரிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் . வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .

    புஷ்பராகங்கள் முதல் வைடுரியம் வரை அத்துனையையும் தமிழ் மனம் என்னும் கடையில் இணைத்து முதல் வியாபாரத்திற்கும் (முதல் ஒட்டு) சிறிய உதவி செய்து உங்களுக்கு அணில் போல இருந்து பெருமை கொள்கிறேன் ... சீதைக்கும் அணில் உதவியது உலகம் அறியட்டும் ! வாய்பளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. இனி புஷ்பரகங்களையும் மரகதங்கள்,தங்கங்கள்,வைரம்,வைடுரின்யகள் அனைத்தையும் உங்களின் வலைப்பூவில் தேடி வருவோம் ..........

    ReplyDelete
  5. மிக்க நன்றி ரூபன். அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  6. வணக்கம்.
    மனோசாமினாதன்,
    உங்களுடைய பல அலுவல்களுக்கிடையில் என் எழுத்தை நினைவு வைத்திருந்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    வலைசரத்தில் அறிமுகமான அனைவருக்கும் என்னுடைய
    வாழ்த்துக்கள்.

    நன்றி,
    ராஜி.

    ReplyDelete
  7. ஏழு நாட்களும் மிக அருமையாக போனது.

    வைடூரியங்கள் செய்தி அருமை.

    நல்ல நல்ல வலைத்தளங்களை (நான் படிக்காத) பகிர்ந்தீர்கள் மறு படி படிக்க நான் பதிவு செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் நன்றிவுரை அழகாய் இருக்கிறது.

    இன்று நீங்கள் பகிர்ந்து கொண்ட வைடூரியங்களுக்கு வாழ்த்துக்கள். மூன்று பேர் வலைத்தளங்களை படித்து கருத்து தெரிவித்து இருக்கிறேன். மீதி பதிவர்களின் பதிவுகளுக்கும் போய் இன்று படித்து கருத்து தெரிவித்து விடுவேன்.

    உங்கள் ஒருவார வலைச்சர பொறுப்பை அழகாய் அற்புதமாய் செய்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள் மனோ.
    உங்கள் வலைத்தளத்தில் சந்திப்போம்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  8. வைடூரிய‌ங்க‌ள் போல் த‌க‌த‌க‌க்கும் ப‌திவ‌ர்க‌ள் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. இன்று இரண்டு வைடூரியங்கள் எனக்கு தெரிந்தவர்கள். அவர்கள் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம், திருமதி. ஜலீலா அவர்கள். நீங்கள் பகிர்ந்து கொண்ட அவர்கள் பதிவையும் படிக்கிறேன்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. வலைச்சர ஆசிரியை பணிக்கு நல்வாழ்த்துகள்

    தங்களது வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பதிவில் ஒன்றையும் இணைத்து அறிமுகம் கொடுத்ததற்கு மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள்.... தெரியாத சிலரின் பதிவுகளையும் படிக்க வேண்டும்.... படித்து விடுகிறேன்.

    த.ம. 2

    ReplyDelete
  13. உண்மையி்ல் உங்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆட இந்த கிரவுண்டைத் தந்த சீனா ஐயாவுக்கு நாங்களும் நன்றி சொல்லத்தான் வேண்டும். ரத்தினம், முத்து, பவளம், வைடூரியம் என நவரத்னக் கற்களைத் தந்து அசர வைத்து விட்டீர்கள். இன்று ஜொலிக்கும் வைடூரியங்களில் எனக்குப் புதியவர்களை சந்திக்கிறேன். உங்களுக்கும் உங்களால் அறிமுகம் பெற்ற அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. மிகச் சிறப்பாக நவரத்ன மாலை தொடுத்து இருக்கிறீர்கள்.
    நாங்கள் அதை மணி மகுடமாக்கி உங்களுக்கு சூட்டி மகிழ்கிறோம்.
    உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
    நன்றி !

    ReplyDelete
  15. நன்றி திரு மனோ சாமிநாதன்

    ReplyDelete
  16. என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு என் நன்றி. மகிழ்ச்சி.

    ReplyDelete

  17. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, வலைப்பூவில் அறிமுகம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!
    ஸ்கூலுக்கோ..ஆஃபீஸ்க்கோ போவது போல லேட்டாகி, (இன்று முதலில் அறிமுகப் படுத்திய என்னை) கட்டோ கடைசியில் நன்றி கூற அமைந்ததிற்கு,
    மன்னிக்க வேண்டுகிறேன்!


    ReplyDelete
  18. மிக மிக மிக அருமையான வாரமாக இருந்தது. சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றமைக்கு நன்றிகள் மனோம்மா.

    ReplyDelete
  19. இந்த வாரம் சிறப்பான வாரமாக எங்களுக்கு இருந்தது. வைடூரியம் பற்றிய தகவல்கள் அருமை. அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள். இனி உங்கள் தளத்தில் சந்திப்போம்.

    ReplyDelete
  20. நீங்கள் இன்று பகிர்ந்து கொண்ட எல்லா பதிவர்களையும் படித்து விட்டேன் . எல்லாம் மனதை தொட்ட பதிவுகள். உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள். இன்றைய வைடூரியங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நீங்கள் இன்று பகிர்ந்து கொண்ட எல்லா பதிவர்களையும் படித்து விட்டேன் . எல்லாம் மனதை தொட்ட பதிவுகள். உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள். இன்றைய வைடூரியங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. நவரத்தினங்களை கோர்த்து அழகான மாலையாக்கி கொடுத்துட்டீங்க. உங்க கடும்கையான உழைப்பு இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.தெரிகிறது.

    ReplyDelete
  23. நவரத்தினங்களை கோர்த்து அழகான மாலையாக்கி கொடுத்துட்டீங்க. உங்க கடும்கையான உழைப்பு இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.தெரிகிறது.

    ReplyDelete
  24. நவரத்தினங்கள் பற்றிக் கூறி பல தகவல்கள் தந்த ஆசிரிய வாரம் இனிமை . இன்றைய அறிமுகங்களோடு தங்களிற்கும் வாழ்துடன்அன்பு நன்றி கூறுவது
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி மனோ சுவாமிநாதன் மேடம்,

    காலை வணக்கங்கள்.

    ஒரு வாரம் அதற்குள் ஓடிப்போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கு ஏற்படுகிறது.

    இந்த வார வலைச்சரத்தினை, உங்களுக்கே உரிய முறையில், மிகவும் கண்ணியமாக, அழகாக நேர்த்தியாக தொடுத்து முடித்துள்ளீர்கள்.

    நன்றி தெரிவித்தலுக்காகக் காட்டியுள்ள படங்களிலேயே, உங்கள் மனம் பூத்துக்குலுங்கும் புஷபங்களாக விளங்குவதையும், அதில் நறுமணம் வீசுவதையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது

    >>>>>>>

    ReplyDelete
  26. //வைடூரியம் [ CAT'S EYE]

    வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும்.

    இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. //

    வைடூரியத்தின் அமைப்பினையும் அழகினையும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ;)

    //இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும்.

    இதனாலேயே வைடூரியத்திற்கு CAT'S EYE என்ற ஆங்கிலப் பெயர் வந்தது.//

    பெயர் காரணமும் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். ;)

    // மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.

    வைடூரியம் அணிந்தால் தீராத நோய்கள் தீரும் என்று சொல்லப்படுகிறது.//

    ஆஹா, இதில் உள்ள மருத்துவப் பயன்களையும் சொல்லி விட்டீர்கள்.

    இவற்றைப் பற்றியெல்லாம் கடந்த ஒருவாரமாகத் தொடர்ந்து பேசிவரும் தங்களுக்கும், தினமும் வருகை தந்து வலைச்சரத்தினைச் சிறப்பித்துள்ள எல்லோருக்குமே, வைரம் அல்லது வைடூரியம் வாங்கித்தர வேண்டும் போல எனக்கோர் எழுச்சி ஏற்படுகிறது.

    இருப்பினும் ”தலை இருக்க வால் ஆடக்கூடாது” என்பார்கள்.

    அதனால் நம் தலையாகிய, வலைச்சர தலை’மை’
    ஆசிரியராகிய என் அன்பின்
    சீனா ஐயா, அவர்களீடம் இந்தப்பொறுப்பினை ஒப்படைத்து விட்டேன்.

    அவரே நம் அனைவருக்கும் வைரம் + வைடூரியம் வாங்கித்தந்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதூஊஊஊ. ;)))))

    >>>>>>

    ReplyDelete
  27. வைடூரியத்தை தாங்கள் படத்தில் காட்டியுள்ளது, வின்னை நோக்கி சீறிப்பாய்ந்த வின்கலம் [ராக்கெட்] ஒன்று நடுவில் தொழிற்நுட்பக் கோளாறுகளால் சிதறிப்போனது போல உள்ளது.

    சிறப்பாகவே ஜொலிக்கும் கலரில் காட்டி அசத்தியுள்ளீர்கள். ;)

    >>>>>>>

    ReplyDelete
  28. நவரத்தினங்களாக மிளிரும் பதிவர்களைப் பற்றி உங்கள் அறிமுகமும், அவர்களது புதிவுகளுமாக ஓரு வாரம் போனதே தெரியவில்லை.

    கூடிய விரைவில் மூன்றாவது முறை வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்க வாழ்த்துகள்!

    திரு ரூபன், திரு ஜனா, திரு கிராமத்துக் காக்கை, திருமதிகள் ராஜி, ரமாரவி, ஜலீலா இவர்கள் தெரிந்தவர்கள்.

    மற்றவர்களின் தளங்களை சீக்கிரம் பார்த்துவிடுகிறேன்.

    சுவாரஸ்யமாக நவரத்தினங்களைப் பற்றிய செய்தியுடன் புதுமையான வாரமாக அமைத்து கொடுத்து அசத்திவிட்டீர்கள் மனோ.


    உங்களது ஓவியத்திறமையையும் கண்டு ரசித்தோம்.

    வாழ்த்துகள்!

    திரு சீனாவுக்கும் நன்றி!

    ReplyDelete
  29. ”வைடூரிய‌ங்க‌ள் போல் த‌க‌த‌க‌க்கும் ப‌திவ‌ர்க‌ள்....!!!”

    வரிசையில் இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

    >>>>>>>

    ReplyDelete
  30. பிரபலமான எழுத்தாளர்களுக்கு இடையே ஆங்காங்கே

    “இளமதி” [இளையநிலா]

    ”திருமதி சிவகாமி” [பூந்தளிர்-3”]

    மற்றும்

    ”திருமதி ராஜலக்ஷ்மி பரமேஸ்வரன்”
    [அரட்டை]

    போன்ற என்னிடம் மிகவும் பிரியமுள்ள, புத்தம்புதிய எழுத்தாளர்களின் வலைத் தளங்களையும், விடாமல் தாங்கள் அறிமுகம் செய்திருந்தது எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

    அதற்காக அவர்கள் மூவரின் சார்பிலும் தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    வலைச்சர வாரத்தை இனிமையாக தொடுத்து முடித்துக் கொடுத்துள்ள தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள் +
    வாழ்த்துகள் +
    நன்றிகள்.

    பிறகு நாம், நம் வழக்கமான முறையில் சந்திப்போம், பேசுவோம்.

    பிரியமுள்ள தங்களின்

    அன்புச்சகோதரன்
    வை. கோபாலகிருஷ்ணன்
    -oOo-

    ReplyDelete
  31. அன்பு அக்கா, இந்த வாரம் முழுவதும் அருமையான பகிர்வுகளோடு முத்து,மாணிக்கம்,புஷ்பராகம்,மரகதம்,பவளம்,வைரம்,வைடூரியம் என்ற ஏழு ரத்தினங்கள் பதித்து வலைச்சரத்திற்கு மேலும் அழகும் ஒளிர்வும் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.
    வைடூரியம் பெயருக்கேற்றவாறு அசத்தலான பதிவர்களை அறிமுகப்படுத்தியமை அருமை.மனமார்ந்த வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் அக்கா.

    ReplyDelete
  32. அம்மா....

    வைடூரியங்கள் எல்லாம் ஜொலிக்கின்றன....

    அருமையான வாரமாக இந்த வார வலைச்சர வாரத்தை ஆக்கிவிட்டீர்கள்..

    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  33. ரத்தினங்களாக ஒளிவீசியது வாரம் வாழ்த்துகள்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பார்ந்த நன்றி ரூபன்!

    ReplyDelete
  35. வருகைக்கு அன்பு ந‌ன்றி நிலாமகள்!

    ReplyDelete
  36. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி ரியாஸ்!
    அணில் உவமானம் அழகாயிருக்கிறது! என் வலைப்பூவிற்கு நீங்கள் கூறியுள்ள‌து போல அவசியம் வருகை தாருங்கள்!

    ReplyDelete
  37. வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ஐயப்பன்!

    ReplyDelete
  38. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராஜி! உங்கள் ' காணவில்லை' பதிவு என்னை மிகவும் பாதித்தது என்பது உனமை! அதனால் தான் உங்களுக்கு பெருமை சேர்க்கும் அந்தப்பதிவோடு உங்களை அறிமுகப்ப்டுத்தினேன்!

    ReplyDelete
  39. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி கோமதி அரசு! அவசியம் நீங்கள் சொன்னது போல இனி நமது வலைப்பூக்களில் நமது உறவு தொடரட்டும்!

    ReplyDelete
  40. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  41. வருகைக்கு அன்பு நன்றி கோவி.கண்ணன்!

    ReplyDelete
  42. வருகைக்கு இனிய நன்றி ச‌கோதரர் வெங்கட்!

    ReplyDelete
  43. வ‌ருகைக்கும் ந‌ல்வாழ்த்துக்க‌ளுக்கும் ம‌ன‌ம் திற‌ன்த‌ பாராட்டிற்கும் இத‌ய‌ம் கனிந்த‌‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் பால‌க‌ணேஷ்!

    ReplyDelete
  44. வ‌ருகைக்கும் என‌க்கு ம‌ணிம‌குட‌ம் சூட்டிய‌த‌ற்கும் உள‌மார்ந்த‌‌ ந‌ன்றி ஸ்‌ர‌வாணி!

    ReplyDelete
  45. வ‌ருகைக்கு அன்பு ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் ஜ‌னா!

    ReplyDelete
  46. ரொம்ப‌வும் த‌ன்ன‌ட‌க்க‌மாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள் ச‌கோத‌ர‌ர் ராம‌மூர்த்தி! வ‌ருகைக்கு அன்பு ந‌ன்றி!

    ReplyDelete
  47. பாராட்டிற்கு ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி சாந்தி!

    ReplyDelete
  48. பாராட்டிற்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  49. வருகைக்கு அன்பு நன்றி பூந்தளிர்!

    ReplyDelete
  50. வருகைக்கு அன்பு நன்றி வேதா!

    ReplyDelete
  51. வழ‌க்கம்போல மிக அருமையான பின்னூட்டம் தந்து விட்டீர்கள் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! உங்களின் மனந்திறந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  52. பாராட்டுக்க‌ளுக்கு நெஞ்ச‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி ச‌கோத‌ரி ர‌ஞ்ச‌னி நாராய‌ண‌ன்!

    ReplyDelete
  53. வாழ்த்துக்க‌ளுக்கும் பாராட்டுக்க‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி ஆசியா!

    ReplyDelete
  54. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  55. ஏழு நாட்களும் மிக அருமையான அறிமுகங்கள்.. ரத்னமாய் ஜொலித்த பதிவுகள்..

    நாட்கள் போனதே தெரியவில்லை..
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  56. //தினந்தோறும் எனக்கு அருமையான பின்னூட்டம் தந்து, என்னை உற்சாகப்படுத்திய சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன், திரு. பால கணேஷ், ரூபன், திருமதிகள் ரஞ்சனி நாராயணன், துளசி, கோமதி அரசு, அமைதிச்சாரல், பூந்தளிர், சகோதரர் வெங்கட், ஆதி வெங்கட், திருமதிகள் வேதா, ஸ்ரவாணி, ஆசியா ஓமர், ஏஞ்சலின், திரு.தமிழ் இளங்கோ மற்றும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி! //

    இந்தப்பட்டியலில் ஓர் மிகப்பிரபலமான தெய்வீகப்பதிவர் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    அவர்களின் பின்னூட்டமும் ஏழு நாட்களும் இடம் பெற்றுள்ளன.

    அதுவும் 17ம் தேதியே மூன்று முறை வருகை தந்து கருத்தளித்துள்ளார்கள்.

    15ம் தேதிக்கு பதிலாக 16ம் தேதியும்,
    18ம் தேதிக்கு பதிலாக 19ம் தேதியும் தாமதமான வருகை தந்துள்ளதால் ஒருவேளை இவரின் பெயர் வருகைப் பதிவேட்டில் பதிய விட்டுப் போயிருக்கலாம்.

    இருப்பினும் தங்கள் சார்பில் நான், அவர்களுக்கு என் மனமர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
  57. திருமதி மனோ சாமிநாதன் இந்த வாரம் தான் ஏற்ற பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றி, மன நிறைவோடு விடைபெறுகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  58. என் தவறினைச் சுட்டிக் காண்பித்ததற்கு என் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! இரவு 12 மணிக்கு தூக்ககலக்கத்தில் பதிவெழுதியதால் இந்தப்பிழை ஏற்பட்டு விட்டதென நினைக்கிறேன். வருந்தவும் செய்கிறேன். இப்போது அந்தப்பிழையை சரி செய்து விட்டேன்.

    ReplyDelete
  59. இப்போது தான் கவனித்தேன் மாதேவி, கடந்த 3 நாட்களாக கடைசியில் வந்து பதிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!

    ReplyDelete
  60. பாராட்டிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  61. பாராட்டிற்கும் அடிக்கடி வந்து ஊக்கப்படுத்தியதற்கும் என் அன்பு ந்ன்றி நிஜாமுதீன்!

    ReplyDelete
  62. //மனோ சாமிநாதன் said...
    என் தவறினைச் சுட்டிக் காண்பித்ததற்கு என் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! //

    தவறு என்பது அனைவருக்குமே ஏற்படும் சகஜமான ஓர் விஷயம் தான், சகோதரியே.

    //இரவு 12 மணிக்கு தூக்ககலக்கத்தில் பதிவெழுதியதால் இந்தப்பிழை ஏற்பட்டு விட்டதென நினைக்கிறேன்.//

    இருக்கலாம். நானும் [பகல் 12 மணிக்கும்] அதே தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் தான், இப்போது இதனை மிகவும் தாமதமாக கவனித்துள்ளேன்.

    // வருந்தவும் செய்கிறேன்.//

    வருத்தமே படாதீங்கோ மேடம். எல்லாம் நன்மைக்கே.

    நான் என் உயிரினும் மேலாக, தெய்வம் போல, சாக்ஷாத் அம்பாள் போல என் மனதினில் எப்போதும் நினைத்துவரும் அந்த தெய்வீகப் பதிவரின் பெயர் தங்களால் முதலில் விடுபட்டுப்போனதும், பிறகு அதை நான் கவனித்து ஞாபகப்படுத்தியது கூட நமக்கும் அப்பாற்பட்ட தெய்வ சங்கல்பமே இது, என்பது எனக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும்.

    அவர்கள் மேல் எனக்குள்ள பேரன்பையும் அக்கறையும் நான் வெளிப்படுத்த, ஏதோ எனக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    // இப்போது அந்தப்பிழையை சரி செய்து விட்டேன்.//

    நன்றி! இப்போது தான் எனக்கும் “செந்தாமரையே செந்தேன் நிலவே” பாடல் போல மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்கள் பிரியமுள்ள சகோதரன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  63. மனோ அக்கா உங்கள் முத்து சிதறலுக்கு ஏற்றார் போல் இந்த வாரம் முழுவதும் மிக அருமையாக ஓவ்வொருத்தரையும் அவரவர் பதிவுக்கு ஏற்றார் போல் மேன்மை படுத்தி இருக்கீங்க.
    இந்த விலை மதிக்க முடியாத வைடூரியத்தோடு என்னையும் சேர்த்து அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி + மிக்க மகிழ்சி.


    எல்லா பதிவுகளை கண்டிப்பாக பிறகு வந்து படிக்கிறேன்.

    இந்த வாரம் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு
    ஜலீலா

    பேச்சுலர் ஈவண்ட் வெற்றியாளர்களையும் எல்லோரும் வாழ்த்தலாமே

    http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html

    ReplyDelete
  64. அக்கா... உங்களின் நேற்றைய என் கருத்துப் பகிர்வுக்கு நீங்கள் தந்த பதில் பகிர்வை இன்றுதான் பார்த்தேன்.. நான் வலை உலகில் இப்ப கிட்டடியில் பிறந்த ஒரு மழலை...:) சிரித்துவிடாதீர்கள்!

    எனக்கு இங்கெல்லாம் எப்படி நடந்துகொள்வது என்றுகூட சரியாகத் தெரியவில்லை. அதனால்தான் நேற்றே நீங்கள் தந்த பதில் கருத்தினை இப்பொழுதுதான் பார்க்கின்றேன்... இப்போ புரிந்திருக்கும் என் ஆற்றலைப் பற்றி.. இதைப்போய் தன்னடக்கம் அது இதுன்னு பெரீய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள்...:) மிக்க நன்றி அக்கா என் மேல் இருக்கும் உங்கள் அன்பிற்கு!

    நீங்கள் தந்த லிங் இப்பவும் இங்கு எனக்கு வேலை செய்யுதில்லை...:( வருத்தமாக இருக்கிறது.. நானும் வேறெங்காலும் இதை பெறமுடியுமான்னு பார்க்கிறேன். எனக்காக லிங் தந்து உதவியதற்கும் மிக்க நன்றி.

    இன்றுடன் உங்கள் பணி முடிவடைகின்றதா.... எவ்வளவு பதிவர்களை மிக துல்லியமாக அவதானித்து அக்கறையுடன் தொகுத்து அருமையாக சிறப்பித்திருக்கின்றீர்கள். திறமைசாலிதான் நீங்களும்...

    மென்மேலும் இன்னுமின்னும் இப்படி பல பணிகளைச் செய்து நீண்ட நெடிய புகழுடன் வலயுலகில் வலம்வர மனமார வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete
  65. மனோ மேடம். சூப்பரா எல்லா விலைமதிப்புள்ள கற்களையும் உங்க அழகான எழுத்து நடையோடு எழுதி அசத்திட்டிங்க. நானும் நம்ம வலைசரம் வழி உங்க எழுத்து முத்துகளால் 7 கற்களால் நல்ல நல்ல தகவல்களும் நல்ல புதிய நட்புகளும் கிடைக்க பெற்றதர்க்கு உங்களுக்கு நன்றி,அதே போல் நம்ம வலைசரம் மிக்க பயனுள்ள ஒரு வலை டைரி. வலைசரத்திற்க்கும் என் நன்றி.

    ReplyDelete