அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமைச் சகோதரி மனோ சாமிநாதன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் பதிவுகளை புது முறையாக தனது முத்துச்சிதறல் என்ற தளத்தின் பெயருக்கேற்ப - வலைச்சரப் பதிவுகளை - முத்துக்கள், மாணிக்கங்கள், புஷ்பராகங்கள், மரகதங்கள், பவளங்கள், வைரங்கள், மற்றும் வைடூரியங்கள் எனத் தலைப்பிட்டு - ஒவ்வொரு தலைப்பினைப் பற்றியும் ஒரு சிறு அறிமுகமும் கொடுத்து - பிறகே பதிவர்களின் பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
இவ்ர் எழுதிய பதிவுகள் : 7
அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 76
அறிமுகப்படுத்திய பதிவுகள் : 76
சுய அறிமுகப் பதிவுகள் : 5
பெற்ற மறுமொழிகள் : 394
சகோதரி மனோ சாமிநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் பதிவர் மொஹமது ரியாஸ்.
மொஹம்மத் ரியாஸ் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்.. பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஒரு சிறிய கிராமத்தில்தான்.
இப்போது அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் 3 வருட காலமாக வேலை பார்க்கிறார்.
சின்ன வயதிலிருந்தே ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆவல் உடையவர்.! அதன் காரணமாக 2010 யிலிருந்து இணையத்தில் இந்த வலைப்பதிவுகள் மூலம். தனக்குப்பிடித்த, ரசித்த விடயங்களை
"நான் வாழும் உலகம் “ என்ற தளத்தில் எழுதி வருகிறார்.. இது வரை 250 பதிவுகள் எழுதியிருக்கிறார். . கவிதைகள்,பிடித்த சினிமா, பிடித்த பாடல்கள், நகைச்சுவை என இவருக்கு எழுதப் பிடிக்கும்.
நண்பர் மொஹமது ரியாஸினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சகோதரி மனோ சாமிநாதன்
நல்வாழ்த்துகள் மொஹமது ரியாஸ்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteஅன்புச் சகோதரர் சீனா அவர்களுக்கு!
ReplyDeleteதங்களின் நல்வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி!
அன்புள்ள திரு.மொஹமது ரியாஸ் அவர்களுக்கு!
ReplyDeleteநாளையிலிருந்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் உங்களுக்கு என் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!
நல்வாழ்த்துகள் சகோதரி மனோ சாமிநாதன்
ReplyDeleteநல்வாழ்த்துகள் மொஹமது ரியாஸ்
அறிமுகத்திற்கும் மிக்க நன்றி சீனா ஐயா..
ReplyDeleteஒரு வாரகாலமாக சிறப்பாக பல பதிவுகளை அறிமுகம் செய்த திருமதி மனோ சாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நாளைமுதல் என்னுடைய பொறுப்பை தயவுடன் செய்ய நினைக்கிறேன்.
நல்வாழ்த்துகள் மனோ சாமிநாதன் அம்மா.
ReplyDeleteநல்வாழ்த்துகள் மொஹமது ரியாஸ்
திருமதி மனோவுக்கு இதயம் நிறைந்த பாராட்டுகள்.
ReplyDeleteதிரு மொஹமது ரியாஸ்-ஸிற்கு நல்வரவு!
ஒரு வாரம் பதிவு போடாவிட்டால் மறந்திடுமா?
ReplyDeleteதிருமதி மனோவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
ReplyDeleteதிரு மொஹமது ரியாஸ்-ஸிற்கு வாழ்த்துக்கள்.
சென்ற வார ஆசிரியர் திருமதி மனோ சாமிநாதன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் முகம்மது ரியாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.....
vaazhthukkal...
ReplyDeletemano saaminaathan avarkalukkum....
riyas avarkalukkum ....