வலைப்பதிவில் பதிவர்களுக்கு மட்டுமன்றி தமிழில் தேடும் அனைவருக்கும் ஒரு வரமாக
இண்டர்நெட் அளித்த கொடை கூகிள் (GOOGLE ) ஆகும். நான் எனது பதிவுகளில்
கூகிளில் இருந்து படங்களை எடுத்து கையாளும்போது அந்த படத்தை எடுத்தவர்களுக்கோ
அல்லது உதவிய கூகிளுக்கோ நன்றி சொல்லிவிடுவேன். கூகிள் தமிழில் வந்த பிறகுதான்
தமிழ் வலைப்பதிவில் ஒரு மறுமலர்ச்சி உண்டானது. இன்றைக்கு கூகிள் இல்லையேல் பல
பதிவர்கள் இல்லை. எனவே கூகிளுக்கு நன்றியைச் சொல்வோம்.
இன்றைய எனது அறிமுக வலைப்பதிவுகள்:
பழைய திரைப் படங்களிள் ஒவ்வொன்றிலும் குடும்பத்திற்கு தேவையான ஒரு நீதி அல்லது
மையக் கருத்து இருக்கும். அதுபோல எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்கள் எழுதிவரும் ஒரு
பக்கக் கதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நீதி அல்லது படிப்பினை இருக்கும். சமீபத்தில் நான் அவரது
வலைப் பதிவில் படித்த கதை தனக்கே தெரிகிறபோது http://kbjana.blogspot.com/2012_11_01_archive.html
பதிவின்
பெயர் : வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com
எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நூலகத்தில் பிலோ இருதயநாத் எழுதிய பயணக்
கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். இதயம் பேசுகிறது மணியன் அவர்கள் எழுதிய பயணக்
கட்டுரைகளை அவ்வப்போது படிப்பதுண்டு. அதே போல நமது பதிவர் வெங்கட் நாகராஜ்
அவர்களின் பயணக் கட்டுரைகளைப் படிக்கும்போது ஆர்வமாக உள்ளன. ஃப்ருட்சாலட் என்ற தலைப்பில் தொடர்ந்து சினனச்
சின்ன துணுக்கு துண்டுகளை கோப்பையில் தருகிறார். அண்மையில் இவர் படங்களுடன் தந்த தக்கர் பாபா பழங்குடியினர் அருங்காட்சியகம்
அனைவரும் படிக்க வேண்டும். http://venkatnagaraj.blogspot.com/2012/12/blog-post_16.html
இவரது குடும்பம் பதிவு உலக குடும்பம். இவர், இவரது மனைவி மற்றும் மகள் அனைவரும்
வலைப்பதிவர்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான்.
நான் இருந்தது கோவையில். திருமணம் ஆனபின்பு தில்லியில் உள்ளேன். என்ன இருந்தாலும் கோவை கோவைதான். நம்ம ஊரு போல வருமா? – என்று சொல்லுகிறார் இந்த பதிவர்.
இந்த வலைப் பதிவை எழுதிவரும் சகோதரி சாந்தி
மாரியப்பன் அவர்கள் "வல்லமை" இணைய இதழின் துணையாசிரியை. இவர் வலைப்பதிவுகளில் எழுதுவதோடு பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் பதிவு செய்து வருகிறார் “ ஒவ்வொன்றும் ஒருவிதம் “ என்ற பதிவில் பல பறவைகளின்
படங்களைக் காணலாம்.
இந்த பதிவினைத் தருபவர் திரு.காளிதாஸ் முருகையா அவர்கள், தஞ்சை மண்ணுக்கு சொந்தக்காரர். கவிதை, கட்டுரைகளை தனது வலைப் பதிவில் தருபவர். இவர் எழுதிய கதை சொல்லும் கொள்ளிடம் என்ற பதிவில் பல வண்ணப் படங்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையைக் கொஞ்சும்.
இந்த வலைப்பூவைத் தரும் சகோதரி எழில் அவர்கள் வாசித்தல் எழுதுதல் மற்றும் சமூகசேவைகளில் ஆர்வம் கொண்டவர். சுற்றுப்புறச் சூழல், கவிதைகள், எங்கேயோ கேட்ட குரல்கள் என்று சமூகத்தை அலசுகிறார். இவரது மழைக்கால நினைவுகள் (http://nigalkalam.blogspot.com/2012_10_01_archive.html என்ற தலைப்பில் கண்ட சில வரிகள்
இப்போதும் வருகிறது
மழை நாட்கள்
எந்தத் திட்டுமில்லை,தடையுமில்லை
ஆனாலும் மழையில் நனையத்
தோன்றவில்லை
நினைவுகள் மட்டுமே நனைகின்றன
மழை நாட்கள்
எந்தத் திட்டுமில்லை,தடையுமில்லை
ஆனாலும் மழையில் நனையத்
தோன்றவில்லை
நினைவுகள் மட்டுமே நனைகின்றன
பதிவின்
பெயர் : வேர்களைத் தேடி
.திருச்செங்கோடு,
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு இரா.குணசீலன் அவர்கள் தனது வ்லைப் பதிவுகளில் பொருத்தமான படங்களுடன் இலக்கிய கட்டுரைகள் தருகிறார். எனது
பதிவுகள் காப்பி அடிக்கப்பட்ட சமயம் // “தேனீ சேமித்து வைத்த தேனைத் திருடலாம்
ஆனால் தேனீயிடமிருக்கும் முயற்சியை யாரும் திருடமுடியாது என்பது என் புரிதல் நண்பரே..தங்களால் இன்னும் பல பயனுள்ள, இதைவிட சிறந்த கட்டுரைகளை வழங்கமுடியும்..” // என்று ஆறுதல் தந்து உற்சாகப்படுத்தியவர்.
ஆனால் தேனீயிடமிருக்கும் முயற்சியை யாரும் திருடமுடியாது என்பது என் புரிதல் நண்பரே..தங்களால் இன்னும் பல பயனுள்ள, இதைவிட சிறந்த கட்டுரைகளை வழங்கமுடியும்..” // என்று ஆறுதல் தந்து உற்சாகப்படுத்தியவர்.
பதிவின் முகப்பில் தனது பத்து இடுகைகளைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று - ஐந்திணைப்பெயர் மூலம் http://www.gunathamizh.com/2009/05/blog-post_08.html
காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள் - என்று தனது தளத்தில் குறிப்பிடுகிறார்.
தான் கேள்விப்பட்ட ஒரு நிகழ்வு ஒன்றினை இங்கே இலக்கிய நயத்தோடு சொல்லுகிறார்.
http://subbuthatha.blogspot.in என்ற வலைத்தளம்
ஒன்றையும் எழுதி வருகிறார். அதிலும் பல அனுபவ மொழிகள், சித்தாந்தங்கள் என்று வலம் வருகின்றன.
அப்பாதுரை அவர்கள் நசிகேத வெண்பா, அபிராமி அந்தாதி,
மூன்றாம் சுழி, கலர் சட்டை நாத்திகன்
என்ற நான்கு பதிவுகளில் எழுதி வருகிறார்.இவர் எழுதிய நசிகேத வெண்பா ( தமிழில் கடோபனிஷது) இவரது உழைப்பில் உருவானது. மூன்றாம் சுழி என்ற பதிவில் இசை, இலக்கியம், கட்டுரை, நினைவுகள் என்று எழுதி வருகிறார். தீப்பெட்டியில் கால எந்திரம் http://moonramsuzhi.blogspot.in/2009_11_01_archive.html என்ற கட்டுரையில் அந்தக் கால தீப்பெட்டி லேபில்கள் பற்றி
பேசுகிறார்.
புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது என்று, வலைப்பதிவு எழுத வந்த கதையை// திரும்பிப் பார்க்கையில் எனக்கே மலைப்பாக இருக்கிறது. பிலாக் எழுதுவதைச் சொல்கிறேன். மூன்று வருடங்களுக்கு மேலாக எழுதி வந்திருக்கிறேன். // என்று விவரிக்கிறார். இனி
வலைப்பக்கம் எழுதமாட்டேன் மீண்டும் சந்திப்போம் http://moonramsuzhi.blogspot.in/2012/04/blog-post_28.html
என்று சொன்னவர் இப்போதும் எழுதுகிறார். தொடரட்டும்
ஸ்ரீ என்ற பெய்ரில் இணைய நண்பர்களுக்காக இந்த பதிவர் எழுதி வருகிறார். திருத்தலங்களைப் பற்றியும் அவற்றின் புகைப் படங்களையும் இவருடைய பதிவுகளில் காணலாம். கோயிலுள் நுழைந்து வலம் வரும்போது காணும் காட்சிகள் அனைத்தையும் படங்களாகக் காணலாம். உதாரணத்திற்கு இந்த பதிவு.
பதிவின் பெயர் : பாமரன் பக்கங்கள்... http://paamaranpakkangal.blogspot.com
பெயர் வாசு பாலாஜி (பாலா) எதார்த்தமாகவும் நல்ல நகைச்சுவை உணர்வோடும் எழுதும் பதிவர் இவர். கேரக்டர் - திருமதி ராஜம் ஆறுமுகம்..
என்ற பதிவில்
நகைச்சுவையும் சோகமுமாய் ஒரு பாத்திரத்தை வரைந்துள்ளார்.
ஹூன்டாய் கார்களின் விலை, வாகனவியல் நுட்பங்கள் ,
ஆட்டோமொபைல் துளிகள், சுசுகி ஸ்விஃபட், யமாஹா 250சிசி பவர்ஃபுல் பைக் என்று அலசுகிறார் இந்த ஆட்டோமொபைல் தமிழன்.
பதிவின்
பெயர் : சித்திரக் கதை
சின்ன வயதில் நாம் படித்த மாயாவி, மந்திரவாதி
மண்ட்ரெக், வேதாளம், கேப்டன் டைகர்,ரிப்கெர்பி முதலான கதநாயகர்களின் சாகசங்கள்
நிரம்பிய சித்திரக் கதைகளை நினைவு படுத்துகிறார் இந்த பதிவை எழுதி வரும் பதிவர் சிவா அவ்ர்கள். பொன்னி காமிக்ஸ், லயன்
காமிக்ஸ், முத்து காமிக்ஸ், மாயாஜால் காமிக்ஸ், அமர்சித்திரக் கதைகள்
முதலானவற்றில் வந்த சித்திரக் கதைகளை படங்களுடன் வெளியிட்டுள்ளார்.
பதிவின்
பெயர் : சேட்டைக்காரன்
வலைப் பதிவுகளில் சேட்டைக்காரன் செய்யும் சேஷ்டைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆரம்பத்தில் இவர் வெளியே முகம் காட்டாமல் இருந்தார். அப்போது இவருடைய பதிவுகளில் நையாண்டி சற்று தூக்கலாகவே இருந்தது. இவருடைய நகைச்சுவை தர்பார் ஒன்று...
தனது அனுபவங்களை வேடிக்கையாகவும் நகைச்சுவை உணர்வோடும் எழுதி வருகிறார்.. மெட்ராஸ்
தமிழில் சந்திரபாபு குரலில் சொல்வதானால் “படா தமாஷா கீதுப்பா”. அடிக்கடி தன்னைப் பற்றிய விவரத்தில் ( Profile) தனது புகைப் படத்தை மாற்றிக்
கொண்டே இருப்பார். அவர் எழுதிய பல நகைச்சுவையான பதிவுகளில் இங்கு இரண்டு மட்டும்.
வலைப்பதிவிற்கு தேவையான பல தொழில் நுட்பங்களை இந்த பதிவில் காணலாம்.என்னுடைய வலைப் பதிவில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் திடீரென்று காணாமல்
போயிற்று. அப்போது இந்த பதிவின் ஆசிரியர் திரு. சசிகுமார் எழுதிய ”பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in
.au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி “ என்ற கட்டுரை எளிமையான முறையில் தீர்வு சொன்னது.
www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html
அவர் சொன்னபடி செய்து எனது பதிவில் தமிழ்மணம்
ஓட்டுப்பட்டையை மீண்டும் கொண்டு வந்தேன்.
முத்துக்களாய் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடுவானம் இனி அடிக்கடி தொடுகிறேன்...
ReplyDeleteஅப்பாதுரை அவர்களின் "கலர் சட்டை நாத்திகன்" தளம் இன்று தான் தெரியும்... (மூன்றே பதிவுகள்)
இதே போல் சித்திரக்கதை சிவா அவர்களின் தளமும்...
நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
எமது தளத்தினை அறிமுகம் செய்த ஐயா தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி....
ReplyDeleteஇது எனக்கான முதல் அறிமுகம் என நினைக்கிறேன்..அறிமுகம் செய்த தங்களுக்கும் மீண்டும் நன்றி....
எனது தளத்தையும், எனனவளின் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் சிலர் எனக்குப் புதியவர்கள். அவர்களையும் இனி படிக்கிறேன்....
மீண்டும் நன்றிகளுடன்!
எனது வலைப்பதிவையும், என்னையும் பற்றி குறிப்பிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும், நான் பெரிதும் வியந்து பின்தொடரும் சில முன்னோடிகளுடன் எனது பெயரும் வந்திருப்பது பெருமிதம் அளிக்கிறது. மிக்க நன்றி! மிக்க நன்றி!
ReplyDeleteமுத்து போன்ற சில பதிவுகளை எடுத்து கோர்த்த மாலை, இன்றைய பதிவு. பாராட்டுக்கள் சார்.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா... அறிமுகமாகியிருக்கும் மற்ற வலைப்பதிவுலக நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசித்திர கதை சிவா அவர்கள் அனைவரின் இளமை காலத்தை மீட்டுக் கொண்டு வந்து விட்டார். நிறைய பதிவர்கள் அறிந்தவர்கள். அறியாத பதிவர்கள் வலைத்தளம் சென்று படிக்கிறேன். நன்றி.எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
கூகிள் தமிழில் வந்த பிறகுதான் தமிழ் வலைப்பதிவில் ஒரு மறுமலர்ச்சி உண்டானது. இன்றைக்கு கூகிள் இல்லையேல் பல பதிவர்கள் இல்லை. எனவே கூகிளுக்கு நன்றியைச் சொல்வோம்.//
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை.
நானும் கூகிளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
வலையுலக ஜாம்பவான்களுடன் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅறிமுகமான மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteமறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
மறுமொழி > Raya durai said.. (ஆடோமொபைல் தமிழன்)
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
மறுமொழி > சேட்டைக்காரன் said...
மறுமொழி > NIZAMUDEEN said...
மறுமொழி > ezhil said...
மறுமொழி > கோமதி அரசு said... (1, 2 )
மறுமொழி > அமைதிச்சாரல் said...
வலைச்சரம் வந்து கருத்துரை தந்த பதிவர்களுக்கு நன்றி!
என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் .. மகிழ்ச்சியான பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteஎனது தளத்தையும், என்னவரின் தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி சார்...
ReplyDeleteபலதரப்பட்ட விஷயங்கள் குறித்து எழுதினாலும் வழக்கம் போல் சமையல் பதிவாக இல்லாமல் வேறு பதிவும் அறிமுகம் ஆனது குறித்து மிக்க மகிழ்ச்சி...:)
தெரியாத சில தளங்களையும் சென்று பார்க்கிறேன்.
இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டு, வலைச்சரத்தில் தொடுக்கப்பட்டுள்ள, அனைத்து பதிவர்களுக்கும், என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் என் நன்றிகள்.
இன்றைய அறிமுகப்பதிவர்ககைப்பற்றி வாசிக்கும் போது நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற உணர்வுவந்தது.
ReplyDeleteஇதில் சுப்பு- தாத்தாவுடன் சமீபத்தில் தொடர்பு கெண்டேன் என் ஊகம் சரியென்றே எண்ணுகிறேன்.
மிக்க நன்றி.
எல்லோருக்கும் இறையாசி நிறையட்டும். தங்களிற்கும் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அருமையான அறிமுகங்கள்! முக்கிய பதிவுகளை தேடிப்பிடித்து படிப்பவர்களுக்கு மிகவும் எளிதான வழியாக இருக்கிறது. சிறந்த வலைப் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். பதிவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபலர் அறிந்தவர்கள் சிலர் அறியாதவர்கள் எனக்கு! அறிமுகத்திற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஉங்க ஊட்டுக்கு வந்து ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டுப்போலாம்னு வீதிக்கு வந்தா
ReplyDeleteவூரு முழுக்க ஸ்ட்ரைக்காமே !!
ஸோ இன்டர்னெட் மூலமாவே சொல்லிடறேன்.
இந்த தாத்தாவையும் நிமித்தி உக்கார வச்சதுக்கு
நன்றி திரு. இளங்கோ அவர்களே !! என் வலையில் நான் பதிவினை எழுதி முடிக்குமுன்னரே வந்து விட்டு போய்விட்டீர்கள் என
நினைக்கிறேன். அசரீரி என்ன என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
நான் எழுதி வரும் பதிவுகள் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக நன்றி.
ReplyDeleteசில அறிந்திராத பதிவுகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். வலைச்சரத்தின் பயன் இதுவே.
இந்த வாரம் இன்னும் வலுப்பெற வாழ்த்துக்கள், இளங்கோ ஐயா.
சிறப்பானவர்கள் அனைவரையும் நன்கு தொகுத்து தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
மறுமொழி > கே. பி. ஜனா... said...
ReplyDeleteமறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
மறுமொழி > கோவை2தில்லி said...
வலைச்சரம் வந்து கருத்துரை தந்த பதிவர்களுக்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1 )
ReplyDeleteதிரு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
சுருக்கமாக முடித்து விட்டீர்கள்!
மறுமொழி > kovaikkavi said...
ReplyDelete// இன்றைய அறிமுகப்பதிவர்களைப் பற்றி வாசிக்கும் போது நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற உணர்வுவந்தது. //
வலைப்பதிவு என்னும் பெருங் கடலில் யாருமே ஒன்றுமில்லை! நீங்களும் ஒரு மூத்த பதிவாளர்தான் ( SENIOR BLOGGER).. WORDPRESS – இல் கருத்துரை இடுவது பற்றி நானும் சுப்பு தாத்தாவும் எழுதி இருந்ததை படித்து இருப்பீட்கள் என்று நினைக்கிறேன்.
"தொடுவானம்",மேலும் பலரால் தொடப் படக் கூடும்.பல பதிவர் முத்து களையும் மாணிக்கங்களையும் அறிமுகம் செய்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி.சுணங்கி இருந்த எனக்கு பெரும் உற்சாகம் அளிக்கிறது.மேலும் சிறந்த வலைப் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு என் அய்யா திரு.இளங்கோ அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteமறுமொழி > ஆர்.வி. ராஜி said...
ReplyDeleteமறுமொழி > Sasi Kala said...
மறுமொழி > s suresh said...
வலைச்சரம் வந்து கருத்துரை தந்த அன்பு பதிவர்களுக்கு நன்றி!
மறுமொழி > sury Siva said...
ReplyDelete// உங்க ஊட்டுக்கு வந்து ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டுப் போலாம்னு வீதிக்கு வந்தா வூரு முழுக்க ஸ்ட்ரைக்காமே !!ஸோ இன்டர்னெட் மூலமாவே சொல்லிடறேன். இந்த தாத்தாவையும் நிமித்தி உக்கார வச்சதுக்கு நன்றி திரு. இளங்கோ அவர்களே !! //
நீங்கள் ஊரு விட்டு ஊரு வந்து கஷ்டப்பட வேண்டியதில்லை.. தங்களது நன்றிக்கு நன்றி!
// என் வலையில் நான் பதிவினை எழுதி முடிக்குமுன்னரே வந்து விட்டு போய்விட்டீர்கள் என
நினைக்கிறேன். அசரீரி என்ன என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ? //
நீங்கள் எழுதி வெளியிட்ட ( PUBLISHED ) உங்கள் பதிவினைப் படித்துவிட்டுத்தான் கருத்துரை தந்து இருந்தேன்.
மறுமொழி > அப்பாதுரை said...
ReplyDeleteமறுமொழி > மாதேவி said...
பதிவர்களின் அன்பான வருகைக்கு நன்றி!
மறுமொழி > Kalidoss Murugaiya said...
ReplyDelete// "தொடுவானம்",மேலும் பலரால் தொடப் படக் கூடும்.பல பதிவர் முத்து களையும் மாணிக்கங்களையும் அறிமுகம் செய்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி.சுணங்கி இருந்த எனக்கு பெரும் உற்சாகம் அளிக்கிறது //
தொடுவானம் தொட்டுவிடத் தொட்டுவிட தொடரும். தங்கள் அன்பிற்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோ,
ReplyDeleteஎனது வலைப்பக்கத்தை சிறப்பான விளக்கத்தோடு அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். வாய்ப்பளித்த வலைச்சரத்துக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
மறுமொழி > ஸ்ரீ.... said...
ReplyDeleteகருத்துரை தந்த அன்பு பதிவருக்கு நன்றி!
என் சித்திரக்கதை தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ஏனைய பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDelete