Sunday, February 24, 2013

7. வலைச்சரம் ஏழாம் நாள்: நாள் என் செய்யும்?



இறைவனால் படைக்கப்பட்ட எல்லா நாளுமே நல்ல நாள்தான். இது நல்லநாள் இது கெட்டநாள் என்று எதை வைத்துச் சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்போடு விடிகிறது. நாளும் ஒரு அனுபவத்தோடு முடிகிறது.


நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
                        - குமரகுருபரர் (கந்தர் அலங்காரம்)

வலைப்பதிவு என்பது தனி உலகம். தொடர் ஓட்டம் ( Relay Race)  போல. எழுதிக் கொண்டே இருப்பவர்கள் ஒரு கால கட்டத்தில் நின்று விடுகிறார்கள். புதிதாக வருவர்கள் தொடர்கிறார்கள். இருந்தாலும் பதிவுக் கோப்பை வழிந்தபடியேதான் இருக்கிறது. தீருவதில்லை. எல்லா பதிவர்களையும் இங்கு என்னால் காட்ட இயலவில்லை. ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் ஒரு பதிவு போடலாம். ஆனால் அதற்கான நேரமும் இடமும் போதாது.

அண்மையில் தமிழ் மணம்  தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) முழுப் பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள முதல் நூறு பதிவுகளுக்கு மட்டும் அவற்றின் இணையதள முகவரிகளை இணைத்து ஒரே பதிவில் தொகுத்தேன். (நன்றி: தமிழ்மணம்) http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html அதில் 100 பதிவர்களை காணலாம்.

கடந்த ஒருவார காலம் வலைச்சரத்தில் என்னை உற்சாகப்படுத்திய, எனது பதிவுகளை விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம்!
இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

பதிவின் பெயர்: எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நான் படித்த அவரது ஒரு கட்டுரையை மட்டும் இங்கு சொல்ல வந்தேன்.

வாசிப்பு ஆசை அதிகம் உள்ளதால் நிறைய புத்தகங்களையும் வீட்டில் சேர்த்து வைக்கிறோம். நமக்குப் பின் இந்த புத்தகங்கள் கதி? நமது பிள்ளைகள் என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு விடையாக இவரது இந்த பதிவு.

// புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது,//


பதிவின் பெயர் : துளசிதளம்

வீடு திரும்பல் மோகன் குமார்அவர்கள் துளசி-கோபால் அவர்களின் மணிவிழா சிறப்பு பதிவு  ஒன்றை  எழுதி இருந்தார்கள். அப்போது இவரது வலைத்தளம் சென்று படித்தேன். எனது கருத்துரைகள் எழுதியதில்லை.
மூத்த பதிவரின் மணிவிழா நிகழச்சியை அவரே (துளசி கோபால் அவர்களே) சொல்கிறார். பல பதிவர்களின் மகிழ்ச்சியை இங்கே காணலாம்.
பதிவின் பெயர் : SIVAPARKAVI 

சினிமா விமர்சனம் தொடங்கி பல பொது கட்டுரைகளைத் தந்துள்ளார். எனது பதிவு ஒன்றிற்கு இவர் தந்த கருத்துரை இது...

// கம்பெனி சீக்ரெட்ஸ்ன்னா…. இந்த பதிவுலகில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்தப் பதிவு // என்று தொடங்கி பதிவு உலகில் தனது அனுபவங்களைச் சொல்கிறார்.

பதிவின் பெயர் : கரிசக்காடு
http://udhayasankarwriter.blogspot.in  ( உதயசங்கர் )
இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். சிந்தனையாளர். தான் சார்ந்த மண்ணைச் சார்ந்து தனது பதிவின் பெயரை வைத்துள்ளார். .நா.சு.வும் சி...வும்
என்ற கட்டுரையில் க.நா.சுவின் இலக்கியப் பணி பற்றி பேசுகிறார்.

பதிவின் பெயர் : தமிழன் வீதி
http://tamilanveethi.blogspot.in ( தோழன் மபா )

மகேஷ் பாபு பத்மனாபன் என்ற தோழன் மபா அவர்கள்.  விளம்பர உலகம்!  மற்றும் கவிதை வீதி என்ற வலைப் பதிவுகளிலும் படைப்புகள் வருகின்றன.

மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் குத்தாலம் மற்றும்  மாதிரிமங்கலம் தாண்டினால்   வரும் திருவாலங்காடு இவரது ஊர். அந்த ஊரைப் பற்றி ஒரு பதிவு.


பதிவின் பெயர் : முனைவர் நா.இளங்கோ -மலையருவி

முனைவர் N.இளங்கோ. புதுவை தமிழ்ப் பேராசிரியர் இவர். தனது பதிவுகளில் தமிழ் இலக்கியம், புதுச்சேரி, மானிடவியல் என்று பல தலைப்புகளில் எழுதியுள்ளார். நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரை....


பதிவின் பெயர் : இணையக் குயில்
http://duraidaniel.blogspot.in ( துரை டேனியல்)

தன்னைப் பற்றி “புதுமையை விரும்புபவன் பழமையை விட்டுவிடாதவன். ஏதோ மாறுதலுக்காக அல்ல உண்மையான மாற்றங்களுக்காக சிந்திப்பவன்என்று சொல்லிக் கொள்ளும் இவர் இந்த பதிவில் பழமையையும் புதுமையையும் இணைத்து சிந்தித்து  எழுதிய சில குறிப்புகள்.
http://duraidaniel.blogspot.in/2012/10/blog-post_28.html




பதிவின் பெயர்: நினைவில் சில...கனவுகள்!
http://semmalai.blogspot.com  ( செம்மலை ஆகாஷ்)

இளம் பதிவரான இவர் சமையல்,அனுபவம்,தொழில் நுட்பம் என்று எழுதி வருகிறார். அவர் எழுதிய ஒரு பதிவு கீழே
 
 


http://kumarimainthan.blogspot.in  ( குமரிமைந்தன் )

நான் வலைப் பதிவுகளை படிக்க ஆரம்பித்த காலத்தில் இவரது உணர்ச்சிபூர்வமான கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன். குமரி மைந்தன் என்பவர் 1984 இல் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.(See Profile) 2005 முதல் வலைப்பதிவாளர். இப்போது அவருக்கு நிச்சயம் வயது எண்பதை நெருங்கியிருக்கும். முதுமையின் காரணமாக இவர் இப்போது  2009 இற்குப் பிறகு அதிகம் எழுதவில்லை என்று நினைக்கிறேன்  மேலும் குமரிக் கண்ட அரசியல் என்ற வலைப்பூவும் இவருடையதே ஆகும்.

நமது நாடு முன்னேற முடியாமல் போனதற்கு காரணம்வருமான வரி விதிப்புமுறையே காரணம் என்பதனை  வெற்றிடம் http://kumarimainthan.blogspot.in/2009/07/blog-post_05.html என்ற பதிவில் தெளிவாகக் காட்டுகிறார்.

குமரி மைந்தன் படைப்புகள் பலவும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் அமைந்தவை. குமரிக் கண்ட ஆய்வுகள், மதுரையை எரித்தது யார்?, ஓங்கலை(சுனாமி) போன்ற தலைப்புகளில் அவர் எழுதியவற்றைச் சொல்லலாம்.

பதிவின் பெயர் : ஸ்கூல் பையன்

பதிவின் முகப்பில்பேரு போட்டோ எல்லாம் பார்த்து என்னை சின்னப்பையன்னு நினைச்சிராதீங்க. இது எங்கப்பாவோட blogஎன்று ஒரு சிறிய அறிமுகம். பதிவுகளைவிட மற்றவர்கள் பதிவில் இவரது கருத்துரைகளை மட்டுமே காணமுடிகிறது. எனவே அண்மையில் இவர் எழுதிய ஸ்டார் ஹோடல் ஒன்றில் சாப்பிட்ட அனுபத்தினைஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னைஎன்ற பதிவினையே இங்கு தெரிவு செய்கிறேன்.


இந்த பதிவர் தனக்கு இருக்கும் திறமைக்கு இன்னும் எழுதலாம். வாருங்கள்! வரவேற்கிறோம்1



பதிவின் பெயர் : Dondus dos and donts
http://dondu.blogspot.in (டோண்டு ராகவன் )

அண்மையில் மறைந்த வலைப்பதிவர் டோண்டு ராகவன் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் தனக்கு வந்த புற்றுநோய் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார். இதில் நோயின் தன்மை தெரிந்தும் தெளிவாக இருந்த அவரது மனவுறுதியைக் காணலாம்.
புற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்
http://dondu.blogspot.in/2012/10/blog-post.html

அந்த பதிவில் எனது கருத்துரையை எழுதி இருந்தேன்.சென்ற ஆண்டு திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS) என்று ஒரு பதிவு எழுதினேன். அப்போது அவர் எனது பதிவில் எழுதிய கருத்துரை:

dondu(#11168674346665545885) said... இப்படம் பற்றி நான் இட்ட பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.in/2010/09/blog-post_898.html அன்புட்ன், டோண்டு ராகவன்  3 October 2012 15:34

அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி!







39 comments:

  1. அன்பின் தமிழ் இளங்கோ - அருமையான அறிமுகங்கள் - சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நம்மில் ஒருவராக இருந்து அண்மையில் நம்மைப்பிரிந்து மேலுலகம் சென்ற அமரர் டோண்டு அவர்களை இங்கே வலைச்சரத்தில் 'அறிமுகம்' செய்து நினைவு கூர்ந்தது கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது.

    இந்தவாரம் உங்கள் ஆசிரியர் பணி அதி சிறப்பு என்பதோடு, என்னையும் நினைவில் கொண்டமைக்கு நன்றிகள் இளங்கோ.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா... கருத்துரைகளுக்கு இணையாக பதிவு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்கிறது... கடுமையான பணிச்சுமை மற்றும் நேரமின்மையின் காரணமாக அதிகம் என்னால் உட்கார்ந்து யோசிக்க முடிவதில்லை. வெளியிடும் ஒவ்வொரு பதிவும் தரமானதாக இருக்கவேண்டும் என்ற கூடுதல் காரணம் வேறு.

    இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன். இந்த அங்கீகாரத்தைக் காரணம் காட்டியாவது அதிகம் எழுத முயற்சிக்கிறேன்... மிகவும் நன்றி ஐயா...

    ReplyDelete

  4. // புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது,//

    எங்கள் வீட்டில் நடப்பதை படம் பிடித்து சொன்னது போல் இருந்தது.

    எனது வீட்டில் அவ்வப்பொழுது புத்திர செல்வங்கள் வெளி நாடுகளிலிருந்து வரும்போதெல்லாம் அவர்கள் செய்யும் முதற்காரியம் வீட்டில் நான் சேகரித்து வைத்துள்ள புத்தகங்களை எல்லாம் எப்படி வெளியே தள்ளுவது என்பதே. அவர்கள் வருவதற்கு முன்பே அவற்றினையெல்லாம் ஒரு கட்டு கட்டி பரண் மேல் வைத்து அதற்கு அந்தப்புறம் இந்தப்புறம் எல்லாம் பித்தளை, செம்பு, ஈயம் அன்று அந்தக்கால பாத்திரங்களை எல்லாம் வைத்து அவர்கள் திரும்பிப்போன பின் திரும்பவும் எடுத்து அடுக்கி வைப்பதே எனக்கு பழகிவிட்டது.

    இந்த கால இளைஞர் மனப்பான்மையே யூஸ் அன்ட் த்ரோ. உபயோகித்தபின் தூக்கி எறியுங்கள்.
    வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை அனுபவிக்கிறோம். உபயோக்கிறோம். அத்தனையும் தூக்கி எறிந்து விட்டால், மிஞ்சுவது சூனியமே.

    நிற்க. திரு. எஸ்.ராமக்ருஷ்ணன் அவர்கள் பதிவுலகிலே ஒரு மணி நேரம் உலாவினேன். அவரது தமிழ் நடை இனிய தென்றல் காற்று மேனியை இதமாக வருடுவது போல் இருக்கிறது. அங்கேயே இருந்திடலாம் என்று தோன்றிற்று இருப்பினும் திரு இளங்கோ அவர்கள் சுட்டிக்காட்டிய பலர் வலைக்கும் செல்லவேண்டுமே என்பதால் இப்பொழுதைக்கு வெளியே வந்தேன்.

    திரு ராமகிருஷ்ணன் அவர்கள் காட்டிய மேற்கோள் ஒன்று ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே சொல்லப்பட்டு வந்தது தான்.

    Never lend books, for no one ever returns them; the only books I have in my library are books that other people have lent me.
    பு
    நமது புத்தகங்கள் மற்றவர் வீடுகளிலும் மற்றவர் புத்தகங்கள் நமது வீடுகளிலும் இருப்பது எல்லோருடைய அனுபவமே. எனது இளைய சகோதரன் ஹைதராபாதிலிருந்து வந்தான். என் புத்தக அலமாரியிலிருந்து சித்தர் பாடல் நூல் ஒன்றை எடுத்தான். எனக்கு சித்தர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் நான் இதை எடுத்துப்போகிறேன், அடுத்து வருகையில் திருப்பி விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் கண்களில் முதற்பக்கத்தில் அவனது கையெழுத்தும் அவன் அந்தப்புத்தகத்தை வாங்கிய தேதியும் இடமும் இருந்தது.

    ஹி...ஹி... என்று நான் இளித்தேன்.

    இதே கருத்தில் வட மொழியில் ஒரு வாசகம் இருக்கிறது.

    புஸ்தகம் வனிதா விருத்தம் பர ஹஸ்தே கதம் கதம் புன்ஹ ஆகச்சேது ஜீர்ணாஹ ப்ரஷ்டா கண்டிதஹ.

    இதை அவரவர் புரிந்துகொள்ளவேண்டிய வாசகம்.

    நிற்க. ஸப்ஜெக்டுக்கு வாங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

    திரு இராமகிருஷ்ணன் அவர்கள் இலக்கிய வானில் ஒரு பால் வெளி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. முற்பின்னூட்டத்தில் கடைசி வாக்கியம் ஒன்று விட்டுப்போயிற்று. ஆதலின் திரும்ப வருகிறேன்.

    திரு இராமகிருஷ்ணன் அவர்கள் இலக்கிய வானில் ஒப்பிட இயலாத ஒரு பால் வெளி.
    நானோ கூவத்தின் ஒரு சிறு துளி.
    அவரைப்பற்றி கருத்திடக்கூட எனக்கு அருகதை இல்லை.
    ஒத்துக்கொள்வதற்கோர் எனக்கு தயக்க‌மும் இல்லை.
    கரைகடல் ஆமையை கிணற்றில் ஆமை ஒன்று கேட்டதாம்:

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. இனிய வாரம்.
    அழகிய அறிமுகங்கள்.
    இறுதியில்,
    அமரர் டோண்டு ராகவன் அவர்களை நினைவு கூர்ந்தது நெகிழ்வு.

    ReplyDelete
  7. இந்த வாரத்தில் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. கரிசக்காடும் மலை அருவியும் இன்று தான் சென்று வந்தேன்... நன்றி...

    டோண்டு ராகவன் அவர்களுக்கு அஞ்சலிகள்...

    மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    மிகவும் சிறப்பாக பல வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
  9. இன்று தங்களால் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  10. டோண்டு ராகவன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...

    அவரையும் இங்கு இன்று நினைவு கூர்ந்துள்ளது தஙக்ளின் தனிச்சிறப்பு.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. //இறைவனால் படைக்கப்பட்ட எல்லா நாளுமே நல்ல நாள்தான். இது நல்லநாள் இது கெட்டநாள் என்று எதை வைத்துச் சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்போடு விடிகிறது. நாளும் ஒரு அனுபவத்தோடு முடிகிறது.//

    அழகானதொரு உண்மையை அற்புதமாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்.

    இந்த வார வலைச்சரப்பணியினை வெகு சிறப்பாக, வித்யாசமான முறையில் தொடுத்துக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    சம்பந்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே தகவல், அதுவும் ஒரு நாள் முன்பாகவே தெர்வித்திருந்தது, அதைவிட சிறப்பு.

    இது போன்ற திட்டமிட்ட செயல்களே நல்லதொரு வெற்றியைத்தரும் என்பது எனது அனுபவமும் கூட.

    பாராட்டுக்கள் ஐயா.

    அன்பான வாழ்த்துக்கள்.

    நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
  12. என் பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! அனைத்து அறிமுகங்களும் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. மிக்க நன்றி நண்பரே! என்னுடைய பதிவையும் புகைப்படத்தையும் இங்கு பகிர்ந்து சிறப்பித்ததற்கு நன்றி. கொஞ்ச நாட்களாக அதிக வேலைப்பளு காரணமாக வலைப்பதிவு பக்கம் வரவில்லை. இன்று வந்து பார்த்தார் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது மேலும் எழுத தூண்டுகிறது.

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்தமைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  15. தி.தமிழ் இளங்கோ சார்,

    நல்ல தொகுப்பு.அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,டோண்டு அவர்களுக்கு நல்ல நினைவேந்தல்.

    நாள் என்ன செய்யும்னு கோளறுப்பதிகம் திருநாவுக்கரசர் கூட பாடி இருக்கார்,ஆனால் பொது ஜனம் தான் நாள்,கோள்,கிழமை,வடக்கே சூலம்,தெற்கே மூலம்னு சம்பிரதாயம் பார்த்து வீணாப்போறாங்க என்ற பகுத்தறிவூட்டும் கருத்தையும் எளிமையாக வலைச்சர தொகுப்பில் கொண்டுவந்துவிட்டீர்கள்,நன்று!

    ReplyDelete
  16. இறைவனால் படைக்கப்பட்ட எல்லா நாளுமே நல்ல நாள்தான். இது நல்லநாள் இது கெட்டநாள் என்று எதை வைத்துச் சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்போடு விடிகிறது. நாளும் ஒரு அனுபவத்தோடு முடிகிறது.
    //

    நீங்கள் சொல்வது உண்மை.
    காலை நல்ல பொழுதாய் விடிய வேண்டும் என்று படுக்கிறோம். நல்லபொழுதாய் முடியும் போது இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.


    இன்றைய நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    வலைச்சர வாரம் இனிதாக நிறைவு பெற்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    //சம்பந்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே தகவல், அதுவும் ஒரு நாள் முன்பாகவே தெர்வித்திருந்தது, அதைவிட சிறப்பு.

    இது போன்ற திட்டமிட்ட செயல்களே நல்லதொரு வெற்றியைத்தரும் என்பது எனது அனுபவமும் கூட.//

    திரு. வை. கோபலகிருஷ்ணண் சார் சொன்னது போல் முன்னதாக தகவல் கொடுத்தது சிறப்புதான்.


    ReplyDelete
  17. அருமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் -
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  18. சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. மறுமொழி >cheena (சீனா) said...

    // அன்பின் தமிழ் இளங்கோ - அருமையான அறிமுகங்கள் - சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    அன்பின் சீனா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > துளசி கோபால் said...

    // இந்தவாரம் உங்கள் ஆசிரியர் பணி அதி சிறப்பு என்பதோடு, என்னையும் நினைவில் கொண்டமைக்கு நன்றிகள் இளங்கோ. //

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இனி உங்கள் வலைத்தளம் வருவேன்.

    ReplyDelete
  21. மறுமொழி > ஸ்கூல் பையன் said...

    தங்களின் கருத்துரைக்கு நன்றி! முடிந்தவரை எழுதுங்கள்.

    ReplyDelete
  22. நல்ல அறிமுகங்கள். சிலரை தெரியும், தெரியாதவர்களை தெரிந்து கொண்டேன்.

    ஊரில் இல்லாததால் மூன்று நாட்கள் இணையத்தை பார்க்கவில்லை. இன்று எல்லாவற்றையும் படித்துப் பார்க்கிறேன்.

    அறிமுகமான பதிவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    முத்தாய்ப்பாக திரு டோண்டு ராகவனுக்கு அஞ்சலி செலுத்தி எல்லோர் மனதையும் நெகிழ்த்தி விட்டீர்கள்.

    மிகச் சிறப்பானதொரு வாரமாக அமைந்ததற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. மறுமொழி > sury Siva said... (1 )

    // இந்த கால இளைஞர் மனப்பான்மையே யூஸ் அன்ட் த்ரோ. உபயோகித்தபின் தூக்கி எறியுங்கள். வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை அனுபவிக்கிறோம். உபயோக்கிறோம். அத்தனையும் தூக்கி எறிந்து விட்டால், மிஞ்சுவது சூனியமே.//

    உண்மையைத்தான் சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  24. மறுமொழி > sury Siva said... (2 )

    // திரு இராமகிருஷ்ணன் அவர்கள் இலக்கிய வானில் ஒப்பிட இயலாத ஒரு பால் வெளி. //

    அவருடைய கட்டுரைகளை அனுபவித்து படித்தவன் நான். உங்கள் பாராட்டிற்கு ஒரு பாராட்டு!

    ReplyDelete
  25. மறுமொழி > NIZAMUDEEN said... (1, 2 )

    கருத்துரை தந்த அன்பு பதிவருக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // மிகவும் சிறப்பாக பல வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல... //

    சகோதரின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3)

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் நலனறிய ஆவல்!
    அன்பினாலே உண்டாகும் வலை காரணமாக என் வலைக்கு வந்து வாழ்த்துரை தந்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > துரைடேனியல் said...

    பதிவரின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > semmalai akash said...

    வேலைப்பளுவுக்கு இடையிலும் வந்து கருத்து தந்த சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    அன்புடன் வந்து பாராட்டிய பதிவருக்கு நன்றி! நான் உங்கள் வலைப்பக்கம் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. வருகிறேன்.

    ReplyDelete
  31. மறுமொழி > வவ்வால் said...

    // நல்ல தொகுப்பு.அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,டோண்டு அவர்களுக்கு நல்ல நினைவேந்தல். //

    வவ்வால் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  32. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சிலர் புதியவர்கள் சென்று கண்டுகொள்வேன்.

    இவ்வாரம் சிறப்புறுவாரமாக பல அறிமுகங்களையும் தந்திருந்தீர்கள்.
    பலரையும் கண்டுகொண்டோம்.

    சிறப்புற பணியை முடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  33. மறுமொழி > கோமதி அரசு said...

    // இன்றைய நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    வலைச்சர வாரம் இனிதாக நிறைவு பெற்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள். //

    சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > kovaikkavi said...

    உங்கள் கணினிப் பிரச்சினை சரி செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இனி உங்கள் வலைத்தளம் வருவேன்.

    ReplyDelete
  35. மறுமொழி > s suresh said...
    கருத்து தந்த சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  36. வணக்கம்
    தி,தமிழ் இளங்கோ(சார்)

    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு ஒருவார காலம் பல சிரமங்களுக்கு மத்தியில் பல வகைப்பட்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்துவைத்த உங்களுக்கு மிக்க நன்றி (சார்) தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  37. மிக நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. மறுமொழி > 2008rupan said...
    மறுமொழி > உதய சங்கர் said...

    வருகை தந்து கருத்துரை சொன்ன பதிவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  39. மிக்க நன்றி சார் ! என்னைப் பற்றிய தங்களது அறிமுகப் பதிவு எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. நிறைய எழுத வேண்டும் என்று மனதிற்குள் பூச்சி பறந்துக் கொண்டு இருந்தாலும், பணிச் சுமை நம்மை ஆக்கிரமித்து செயல்பட முடியாமல் செய்துவிடுகிறது.

    உங்களது இத்தகைய முயற்சி ஒரு நல்லதொரு தூண்டுதலாகவே பதிவருக்கு இருக்கும் என்பது மகிழ்ச்சி. தங்களது முயற்சிகள் மேலும் பல வெற்றி அடைய எனது வாழ்த்துகள்.
    நன்றி!!!
    அன்புடன்
    தோழன் மபா.

    ReplyDelete