Saturday, February 23, 2013

6. வலைச்சரம் ஆறாம் நாள்: வலைப் பதிவு ஒரு கலை



வலைப்பதிவைப் படிப்பதும் அதில் எழுதுவதும் இப்போது ஒரு சிறந்த பொழுது போக்கும் அம்சமாக மாறி வருகிறது. இப்போது அரசியலுக்கும் வலைப்பதிவு தேவைப் படுகிறது.. நான் வலைப்பதிவை ஒரு கலையாகவே காண்கிறேன். அதில்  பைத்தியம் கிடையாது. வலைப்பதிவர்கள் அனைவரும் அவரவர் வழியில் நன்றாகவே எழுதுகிறார்கள். படிக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் கருத்துரை இட நேரம் இருப்பதில்லை. மாறிவரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப வலைப்பதிவும் மாறி வருகிறது. நமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

பதிவின் பெயர் : நாச்சியார்

திருமதி ரேவதி நரசிம்ஹன் என்ற வல்லிசிம்ஹன் அவர்கள்
கண்டது, கேட்டது, நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது. “ என்று எழுதி வருகிறார்.  நானும் ஒரு நட்சத்திரம் என்று http://naachiyaar.blogspot.in/2011/10/blog-post_17.html
தான் வலைப் பக்கம் வந்த கதையைச் சொல்லுகிறார்.

சென்ற ஆண்டு (2012) சென்னையில் நடைபெற்ற சென்னையில் நடைபெற்ற பதிவர் மாநாடு குறித்து இவர் எழுதிய பதிவு இது.
வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

பதிவின் பெயர் : ஹரணி பக்கங்கள்.......
 
தஞ்சை கரந்தை பேராசிரியர் ஒருவரின் பக்கங்கள் இவை. தனது தந்தையின் கவிதைகளை இங்கே மகன் தந்தைக்கு ஆற்றும் விதமாக இங்கே தந்துள்ளார். என் அப்பாவின் கவிதைகள்... http://thanjavur-harani.blogspot.in/2012/02/blog-post.html

 


பதிவின் பெயர் : சினிமாப் பாடல்கள் http://cinemapadalkal.blogspot.com (சந்த்ரவதனா)

இந்த பதிவில் சந்த்ரவதனா அவர்கள் பல தமிழ் திரைப் படப் பாடல்களை எழுத்து வடிவத்தில் தந்துள்ளார். சினிமா பாட்டு புத்தகம் போல படிக்கலாம்.
http://familytree-chandravathanaa.blogspot.in என்ற பதிவில் தனது குடும்பம் என்ற ஆலமரத்தின் மூல வேர்களைத் தொகுத்துள்ளார். இது ஒரு புதிய வழி காட்டலாகத் தெரிகிறது.

இவரது Profile – இல் இவருடைய பல வலைப் பதிவுகளைக் காண முடிகிறது.


பதிவின் பெயர் : R P ராஜநாயஹம்   http://rprajanayahem.blogspot.in

இவரது வலைத்தளம் உலக இலக்கியம், சங்கீதம்,உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, அரசியல், செக்சுவாலிட்டி, சுய அனுபவங்கள், போன்ற பன்முக விஷயங்கள் அடங்கியது. இவர் எழுதிய பதிவுகளை முழுதும் படித்தால்தான் நான் சொல்வதன் உண்மை தெரியும். நான் மாணவனாக இருந்த காலத்தில் கேள்விப்பட்ட தமிழ் சினிமா உலகின் செய்திகளையும் இலக்கியங்கைப் பற்றியும் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் இருந்த எம்.கே.தியாகராஜர் பற்றிய ஒரு பதிவு.

ஒருமுறை, திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருக்கும் எம் கே தியாகராஜ பாகவதர் அடக்கம் செய்து இருக்கும் சமாதியை காணச் சென்று இருக்கிறார். அந்த சமாதியானது அங்கு கழிவறையாக பயன்பட்டு வருவது கண்டு மனிதன் நொந்துவிட்டார். எம்.கே. தியாகராஜ பாகவதர் தங்கத் தட்டில் சாப்பிட்ட வாழ்வினையும் இப்போது அவரது சமாதி இருக்கும் நிலையினையும் எண்ணி ஒரு பதிவில் எழுதியுள்ளார்.



பதிவின் பெயர் : சட்டப் பார்வை
http://sattaparvai.blogspot.in  (அட்வகேட் P R ஜெயராஜன்) 
           
சேலம் அட்வகேட் P R ஜெயராஜன் அவர்கள் தனது பார்வையில் சட்டத்தைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் இங்கு பேசுகிறார்.
சேலம் பிறந்த கதை http://sattaparvai.blogspot.in/2010/05/blog-post.html என்ற பதிவில் சேலம் நகருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பதைச் சொல்லியுள்ளார். மேலும் மதனப் பெண் என்ற வலைப்பதிவு ஒன்றையும் எழுதி வருகிறார். இதில் முழுக்க முழுக்க குடும்பப் பிரச்சினைகளை முன்வைத்து பதிவுகள் தந்துள்ளார். 


பதிவின் பெயர் : சிட்டுக்குருவி 
http://vimalann.blogspot.in ( விமலன் )  

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்று தனது வலைபதிவில் ஏகப்பட்ட விஷயங்களை அள்ளி தருகிறார் விருதுநகரில் இருக்கும் விமலன் அவர்கள்.
சாரக்காத்து என்ற தலைப்பில் தனது சைக்கிள் கனவை அழகாக சொல்லுகிறார். http://vimalann.blogspot.in/2011/05/blog-post_24.html
//அனைத்து குடும்பங்களிலும் பங்கு வகிக்கும் ரத்தமும்,சதையுமற்ற ஓர் குடும்ப  உறுப்பினராக  இன்றளவும்  காட்சி   தருகிற  ஒரு   பொருளாயும், பயன்பாட்டிலுள்ள உயிர் திணைபோல் ஆகிப்போன எனது சைக்கிளின் பரிதாப நிலைபற்றி,,,,,,,,,  //


பதிவின் பெயர் : அவார்டா கொடுக்கறாங்க? http://awardakodukkaranga.wordpress.com


RV என்ற ராமஸ்வாமி வைத்தியனாதன் என்பவரும் அவரது நண்பர் பக்ஸ் என்பவரும் இணைந்து எழுதும் தளம். அன்றும் இன்றும், எம்ஜிஆர் பக்கம், சிவாஜி பக்கம், திரை உலக வரலாறு, 1950 - இலிருந்து என்று பழைய புதிய தமிழ் திரைப்பட விவரங்களை இந்த தளத்தில் காணலாம். இடையிடையே ஹாரி பாட்டர், ஸ்கைபால் என்று ஆங்கில படங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மலரும் நினைவுகளாக பழைய தமிழ் படங்களை நினைப்பவர்கள் இந்த தளம் சென்று பார்க்கலாம்.



பதிவின் பெயர் : மதன்மணிஅன்பைத்தேடி.....
http://thamizhmagan.blogspot.com  ( .மணிகண்டன்)

ஈரோட்டுக்காரர். தமிழ் இலக்கிய மாணவன். ( கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி.திருச்செங்கோடு ) இவர் தனது வலைப்பூவில் தமிழ் இலக்கிய மணம் கமழ எழுதுகிறார். மாணவர் என்பதால் இவர் அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை என்று நினைக்கிறேன். தனக்கு தமிழார்வம் ஊட்டிய தமிழாசிரியர்களைப் பற்றி தமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல் என்ற பதிவில் http://thamizhmagan.blogspot.in/2010/11/blog-post_25.html சொல்லுகிறார். இணையத்தோடு இணைந்து வாழுங்கள் என்று இவருக்கு வழிகாட்டியவர் வலைப்பதிவர் வேர்களைத் தேடிமுனைவர் இரா.குணசீலன் என்பதில் மிக்க மகிழ்ச்சி!

பதிவின் பெயர் : கவிதை வீதி...  
http://kavithaiveedhi.blogspot.com (சௌந்தர்)

இந்த வலைப் பதிவின் சொந்தக்காரர் கவிதைவீதி சௌந்தர் அவர்கள். இவர் கவிதை, கட்டுரை, அரசியல், அனுபவம் என்று வலைப் பதிவில் கலக்குகிறார். எம்ஜிஆர் பற்றிய தகவல்களை
என்ற பதிவில் காணலாம். 


மோகனன் என்பவர் நாட்டுப்புற, கிராமியப் பாடல்களையும், பழைய திரைப்பாடல்களையும் இங்கு தொகுத்து தந்துள்ளார். பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

செவலக் காளை ரெண்டு பூட்டிஎன்ற புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடலுக்கு முன்னுரையுடன் ஒலி வடிவில் தந்த பக்கம் இது: http://moganaraagam.blogspot.in/2011/06/blog-post.html

பதிவின் பெயர் : வல்லத்தான்...
http://duraigowtham.blogspot.in (துரை கௌதம்)

தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊர்க்காரர். இவரது பதிவுகளில் அதிகம் இடம் பெறுவது சினிமா செய்திகள்தான் என்று நினைக்கிறேன். தஞ்சை நகரத்தைப் பற்றியும், அதன் அருகில் உள்ள தனது ஊர் வல்லம் பற்றியும் நிறைய தகவல்கள் தருகிறார். ஒரு பழைய தமிழ் திரைப்பட விமர்சனத்தை அமுத வள்ளி-1959 http://duraigowtham.blogspot.in/2012/06/1959.html என்ற பதிவில் படிக்கலாம். இந்த படத்தில் “ஆடைகட்டி வந்த நிலவோ” என்று கணீர் குரலில் பாடி நடித்தவர் டி ஆர் மகாலிங்கம்.

பதிவின் பெயர் : தமிழ்ஸ்டுடியோ

// இன்றைய நிலையில் ஒரு குறும்படம் எடுப்பது என்பது யாருக்கும் எட்டாக் கனியல்ல. // என்று குறும்படத்தைப் பற்றி பேசுகிறது இந்த தளம்.  தமிழில் குறும்பட ஆவணப் படங்களுக்கான அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகள், படங்களை திரையிடல் போன்ற செய்திகளை இந்தத் தளத்தில் காணலாம்.

பதிவின் பெயர் : அன்புடன்

நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும் என்று, இந்த வலைத்தளத்தில் சினிமா, அரசியல் என்று தனது பார்வையை வீசுகிறார் வர்மா அவர்கள். திரைக்கு வராத செய்தி, தடம் மாறிய தமிழ்ப் படங்கள் என்று பழைய தமிழ் திரைப்படங்கள், கமல் ரஜினி கால சினிமா செய்திகளை காணலாம்.

நடிகை விஜயகுமாரி பற்றிய செய்திகள் கொண்ட இரண்டு பதிவுகள்:
தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 11 http://varmah.blogspot.in/2011/11/11.html
திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள் http://varmah.blogspot.in/2011/12/blog-post_21.html



பதிவின் பெயர் : பாரதி பயிலகம் வலைப்பூ

http://www.bharathipayilagam.blogspot.in (தஞ்சாவூரான்)


சுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்களின் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ. பொதுத்துறை ஒன்றில் 38 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். தஞ்சாவூரான் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

கரிச்சான்குஞ்சு என்ற பழைய எழுத்தாளர் பற்றி இவருடைய தோற்றம் தலையில் குடுமி, வேதப் படிப்பு, நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனக் கீற்று, ஆனால் இவர் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி. என்று அறிமுகம் செய்கிறார்.

கரிச்சான்குஞ்சு

உலக வரலாற்றில் நடந்த சம்பவங்களைப் பற்றி ஒரு கட்டுரை.
உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்



 





51 comments:

  1. அறியாத சில தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. வணக்கம்
    தி. தமிழ் இளங்கோ(சார்)

    இன்று அறிமுகமான பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete


  3. ஈழத்தின் ஜான்சி ராணி போல் விளங்கும்
    சந்திரவதனா அவர்கள் வலையை அறிமுகம் செய்தது இவ்வாரத்தின் தலையாய சிறப்பு என்றே சொல்லவேண்டும்.

    இவர் ஒன்றல்ல, இரண்டல்ல, தனது பத்து வலைப்பதிவுகளிலே பல துறைகளில் தனது வல்லமைக்கு சான்றாகக்
    காட்டுகின்றார்.

    தமிழகம் முழுவதுமே இவர் சொல்வதெல்லாவற்றையும் கவனிக்கவேண்டும்.

    இறுதிப்போரை நேரில் கண்ட சிவரூபன் என்னும் படலத்தை வலைச்சரம் வாசிக்கும் தமிழ் மக்கள் எல்லோரும்
    படிக்கவேண்டும்.
    இவரது பதிவு இங்கே உள்ளது.

    http://thamileelam.blogspot.in/

    கலிங்கத்துப்போர் முடிந்த உடன் அரசன் அசோகன் அங்கு யுத்த பூமியிலே நடந்து சென்றான். பிணங்கள் மத்தியிலே.
    அவை அவன் மனதிலே ரணங்களை உருவாக்க, அவன் முடி துறந்தான், இனி வாழ் நாள் முழுவதும் இம்மக்களை நேசிப்பேன்.
    அன்பு ஒன்று தான் மனித வாழ்வின் லட்சியம் என புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி
    என பௌத்த மதம் சார்ந்தான்.

    ஆனால், அந்த புனித மதத்தைச் சார்ந்தவர் எனத் தமைக்கூறிக்கொள்பவர் செய்தது என்ன?

    இங்கே காணுங்கள். நெஞ்சை பிளக்கும் காட்சிகளை அன்று நடந்த வேதனைகளை கொடுமைகளை காணுங்கள்.
    உங்களாலும் என்னாலும் வலைச்சரம் படிக்கும் ஆயிரமாயிரம் உள்ளங்களாலும் இந்தச் சூழ் நிலையிலிருந்து
    ஒரு சொட்டு கண்ணீர் விடுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய இயலாது இன்று. நான் நன்றாக அறிவேன்.

    இருந்தாலும் இந்தக் கதை கேளுங்கள்.

    திரு இளங்கோ அவர்களே !!
    சந்திர வதனா அவர்களை அறிமுகப்படுத்தி தமிழர்கள் எண்ணங்களில் ஒரு விழிப்புணர்வை நீங்கள்
    ஏற்படுத்தி இருந்தால், அதுவே உங்கள் வாரத்தின் தலையாய நிகழ்ச்சி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. தேடித்தேடி அற்புதமான வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. ஆஹா இம்புட்டு பேரும் இங்கேதான் இருக்கீங்களா? ஒருமுறை எங்கட வீட்டுக்கும்(http://www.googlesri.com/)வாங்களன்.

    ReplyDelete
  6. தஞ்சாவூரான் அவர்களை நான் ஒரு நாற்பது ஆண்டுகளாக நன்கு அறிவேன்.
    அவரது இலக்கிய பணி போற்றுதற்குரியது.

    பாரதியின் இலக்கியச் சிறப்புகளை இன்றைய தலைமுறை நன்கே அறியும் வண்ணம்
    அவ்வப்போது சிறப்புச் சொற்பொழிவுகள் மூலம் நற்பணி செய்து கொண்டு இருக்கிறார்.
    அவரை வாழ்த்துவதற்கு வயதில்லை. ஆக வணங்குவோம்.

    அவரது இராம காதை என்னும் இன்னொரு பதிவு கம்ப இராமாயணம் .
    அழகான நடையிலே இராம கதை சொல்லப்பட்டு இருப்பதையும் பார்க்கலாம்.
    அனுபவிக்கலாம்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  7. புதிய பதிவுகள் சிறப்பான பதிவுகளுக்கு சுப்பு தாத்தா வின் கருதும் மகுடம் சூட்டுகிறது வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  8. வலைப்பதிவர்கள் அனைவரும் அவரவர் வழியில் நன்றாகவே எழுதுகிறார்கள். படிக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் கருத்துரை இட நேரம் இருப்பதில்லை. //

    நீங்கள் சொல்வது உண்மை. அவரவர் வழியில் பதிவர்கள் எல்லோரும் நன்றாக எழுதுகிறார்கள். அனைத்தையும் படித்து கருத்து சொல்ல முடிவதில்லை.

    எப்படி இப்படி அருமையாக எழுதுகிறார்கள் என்று வியந்து போவது உண்டு.

    என்னை சகோதரியாக ஏற்றுக் கொண்ட வல்லி அக்கா தவிர மற்றவர்கள் பதிவுகளை படித்தது இல்லை.
    மற்ற பதிவர்களின் சிறந்த பதிவுகளை படிக்க ஆவல்.
    படித்துவிடுகிறேன் .
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவர்கள் பதிவுகளை குறிப்பிட்டதற்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    சுப்பு சார் அருமையாக பின்னூட்டம் அளித்து இருக்கிறார்.
    //தமிழர்கள் எண்ணங்களில் ஒரு விழிப்புணர்வை நீங்கள்
    ஏற்படுத்தி இருந்தால், அதுவே உங்கள் வாரத்தின் தலையாய நிகழ்ச்சி.//
    உண்மை, உண்மை.

    ReplyDelete
  9. அன்பிற்குரிய திரு தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு வணக்கம்.

    தங்கள் எனது சட்டப்பார்வை (http://sattaparvai.blogspot.in/) மற்றும் மதனப்பெண் (http://jayarajanpr.blogspot.in/)
    வலைப்பதிவுகளை இனம்கண்டு பெருமைப்படுத்தி வலைச்சரத்தில் அடையாளப் படுத்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தங்கள் கருத்துரைக்கும் நன்றி சொல்கின்றேன்.

    வாழ்க...! தங்கள் பணி சிறக்க....!!

    ReplyDelete
  10. எனது இரண்டு வலைப்பக்ககங்கள் வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ளது என்ற சங்கதியை சேதியாக தெரிவித்த திரு ரூபன் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. மறுமொழி >திண்டுக்கல் தனபாலன் said...

    எனது வலைத் தளத்திற்கு வந்து எப்போதும் ஊக்கம் தரும், சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > 2008rupan said...

    வலைச்சரம் பணி நிறைவுற்றதும் உங்கள் பக்கம் வந்து பார்வையிடுகிறேன்.

    ReplyDelete
  13. மறுமொழி > sury Siva said.. (1)
    .
    சுப்புத் தாத்தாவின் கருத்துரைகளைத் தொகுத்தாலே பல பதிவுகள் போடலாம். அந்த அளவுக்கு அவரது கருத்துரைகளில் நிறைய தகவல்கள். இவ்வாரத்தின் தலையாய சிறப்பு என்று, சகோதரி சந்திரவதனாவின் பதிவைப் பற்றிய எனது அறிமுகப் பதிவை பாராட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // தேடித்தேடி அற்புதமான வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்.. //

    கடந்த ஐந்து வருடங்களாக நான் பார்வையிட்ட இணையதளங்களின் முகவரிகளைத் தனியே தொகுத்து, ஒரு கோப்பில் (FILE) வைத்து இருந்தேன். அது இப்போது உதவியாக இருந்தது. சகோதரியின் பாராட்டுக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > Yarl Manju said...
    வலைச்சரம் வந்து கருத்துரை தந்த அன்பு பதிவருக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > sury Siva said... ( 2 )

    // தஞ்சாவூரான் அவர்களை நான் ஒரு நாற்பது ஆண்டுகளாக நன்கு அறிவேன். அவரது இலக்கிய பணி போற்றுதற்குரியது. //

    // அவரை வாழ்த்துவதற்கு வயதில்லை. ஆக வணங்குவோம். //

    பாரதி பயிலகம் தஞ்சாவூரான் பற்றிய தகவலுக்கும் அவரைப் பாராட்டிப் பேசியதற்கும் நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > கோவை மு சரளா said...

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி >Advocate P.R.Jayarajan said... (1, 2 )

    அட்வகேட் அவர்களுக்கும், தங்கள் பதிவில் சேதி சொன்ன திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  20. இன்று தங்களால் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  21. அற்புதமான அனைவருக்கும் புதிய அறிமுகங்களாக தொகுத்து அளித்த விதம் பாராட்டுக்குரியது. நன்றிங்க.

    ReplyDelete
  22. மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said...

    வலைச்சரம் ஆறாம்நாள் தொடர்ந்து வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தும் VGK அவர்களுக்கு நன்றி!

    தாங்கள் ஆரம்பத்தில் தொடங்கிய VGK என்ற வலைத் தளத்தை (http://vaigopalakrishnan.blogspot.com ) இன்று எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் உள்ள ஒரே பதிவு.

    செவ்வாய், 19 அக்டோபர், 2010
    கத்தி (ப் ) பேசினால்:
    காய்கறி பழங்களை நறுக்கும் போது
    என் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்
    தின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் !

    கவனக்குறைவாக இருக்கும் போது
    இவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு !

    ஆக்கபூர்வமாகவும் செயல் படுவேன்
    அதே சமயம் அழிக்கவும் பயன் படுவேன்
    என்னைக் கையாள்பவர் செயல்படியே தான்
    எப்போதும் என் இயக்கமும் !

    சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து
    கொம்பு சீவி விடுகிறார்கள் !

    பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "க த் தி " !!


    ReplyDelete
  23. நான் அறியாத சில தளங்களை இன்று தங்கள் அறிமுகத்தில் அறிந்து கொண்டேன்.
    நன்றி!

    ReplyDelete
  24. திரு.வை.கோ. அவர்களின் கத்தி கவிதை வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோ சார்,

    இன்றும் பல அருமையான, கலவையான பதிவுகளை தொகுத்து சிறப்பித்துள்ளீர்கள்.

    சந்திரவதனா அவர்கள் சமையல் முதல் அனைத்து துறையிலும் பதிவிடும் பல்கலைப்பதிவர், நிறைய பதிவுகள் வைத்திருக்கும் முன்னோடி தமிழ்ப்பதிவராவர், அவர்களை மீண்டும் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அறிமுகம் அமைந்துள்ளது.

    முட்டைக்கணவாய் பதிவு இன்னும் எனக்கு நினைவில் இருக்கு :-))

    # தஞ்சாவூரான் என்றப்பெயரில் இன்னொரு வலைப்பதிவரும் இருக்கிறார், அல்லது இருவரும் ஒருவரே தானா? , நான் தனித்தனியாக படித்துவிட்டு , வேற வேற பதிவர்கள் என நினைத்துவிட்டேனோ?

    ReplyDelete
  26. //பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "க த் தி " !!//

    கத்தி எடுப்பவனுக்கும்

    கத்தி கத்தியே மற்றவரை மாய்ப்பவனுக்கும்

    குறள் ஒன்று சொல்லவேண்டும்.

    காது கொடுத்துக் கேளும்.

    "ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
    காத்து ஓம்பல். சொல்லின் கண் சோர்வு."

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  27. //# தஞ்சாவூரான் என்றப்பெயரில் இன்னொரு வலைப்பதிவரும் இருக்கிறார், அல்லது இருவரும் ஒருவரே தானா? , நான் தனித்தனியாக படித்துவிட்டு , வேற வேற பதிவர்கள் என நினைத்துவிட்டேனோ?//

    வேறு

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  28. வலைச்சரத்தில் எனது வலைப்பதிவு வெளியானது எதிர்பாரத இன்ப அதிர்ச்சி. பிரபல்யமானவர்களின் வலிப்பூக்களுடன் என்னையும் இணைத்தது ம் இக்க மகிழ்ச்சியாக உள்ளது.வலிச்சரத்தை பார்வையிடுவேன்.புதிய வலைச்சரங்களை அறிமுகப்படுத்தும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. என்னுடைய வலைத்தளத்தில் நான் எழுதும் Carnal thoughts என்ற பகுதி sexual desire பற்றிய ஆழ்ந்த விரிந்த பார்வையை முன் வைக்கும் சுருக்கமான பதிவுகள்.சினிமா கிசு கிசு அல்ல என்பதை முழுமையாய் படித்தால் தெரிய வரும்.சினிமாவுலக நிகழ்வுகளும் ஒரு சில இந்த பகுதியில் உண்டுதான். Carnal thoughts என்பதன் அர்த்தமே தெரியாமல் எழுதியுள்ளீர்கள். மேலோட்டமாக தீர்ப்பிட வேண்டாம்.
    என் வலைத்தளம் உலக இலக்கியம், சங்கீதம்,உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, அரசியல், செக்சுவாலிட்டி, சுய அனுபவங்கள், போன்ற பன்முக விஷயங்கள் அடங்கியது. A Multi-dimensional blog.

    http://rprajanayahem.blogspot.in/2012/08/what-piece-of-work-is-man.html

    ReplyDelete
  31. சிலர் புதியவர்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நல்ல அறிமுகங்களைத் தருகின்றீர்கள் பாராட்டுகள்.

    ReplyDelete

  32. **** மறுமொழி > RP RAJANAYAHEM said...******

    // என்னுடைய வலைத்தளத்தில் நான் எழுதும் Carnal thoughts என்ற பகுதி sexual desire பற்றிய ஆழ்ந்த விரிந்த பார்வையை முன் வைக்கும் சுருக்கமான பதிவுகள்.சினிமா கிசு கிசு அல்ல என்பதை முழுமையாய் படித்தால் தெரிய வரும்.சினிமாவுலக நிகழ்வுகளும் ஒரு சில இந்த பகுதியில் உண்டுதான். Carnal thoughts என்பதன் அர்த்தமே தெரியாமல் எழுதியுள்ளீர்கள். மேலோட்டமாக தீர்ப்பிட வேண்டாம். //

    மன்னிக்கவும்! தவற்றினை சுட்டி காட்டியமைக்கு நன்றி! தாங்கள் சுட்டி காட்டிய தவற்றினை சரி செய்து விட்டேன். உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன்! தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி >Sasi Kala said...

    எனது வலைத் தளத்திற்கு வந்து, எப்போதும் எனது பதிவுகளுக்கு கருத்துரை தந்து பாராட்டும் சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > NIZAMUDEEN said... (1,2 )

    சகோதரரின் வருகைக்கும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது கவிதையை பாராட்டியமைக்கும் நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > வவ்வால் said... (2)
    // இன்றும் பல அருமையான, கலவையான பதிவுகளை தொகுத்து சிறப்பித்துள்ளீர்கள்.//

    தங்களின் பாராட்டுரைக்கு நன்றி!

    // சந்திரவதனா அவர்கள் சமையல் முதல் அனைத்து துறையிலும் பதிவிடும் பல்கலைப்பதிவர், நிறைய பதிவுகள் வைத்திருக்கும் முன்னோடி தமிழ்ப்பதிவராவர், அவர்களை மீண்டும் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அறிமுகம் அமைந்துள்ளது.//

    சந்திரவதனா அவர்கள் எழுதிய பதிவுகள் அனைத்தையும் ஒருநாள் படிக்கிறேன்.

    ReplyDelete
  36. மறுமொழி > sury Siva said... (1, 2 )

    திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது கவிதையை பாராட்டிய சுப்பு தாத்தா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  37. மறுமொழி > வர்மா said...

    // வலைச்சரத்தில் எனது வலைப்பதிவு வெளியானது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. பிரபல்யமானவர்களின் வலைப்பூக்களுடன் என்னையும் இணைத்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. //

    தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  38. இன்றைய சரத்தில் சிலர் மட்டுமே எனக்குப் புதியவர்கள்.

    ரொம்பவே சிறப்பான பணி உங்களுடையது.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  39. மறுமொழி > துளசி கோபால் said...

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  40. அன்புள்ள தமிழ் இளங்கோ மற்றூம் ரூபன்,

    அவார்டா கொடுக்கறாங்க தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! முடிந்தால் இந்த இரண்டு தளங்களையும் பாருங்கள்.

    http://siliconshelf.wordpress.com/

    http://koottanchoru.wordpress.com/

    ஆர்வி

    ReplyDelete
  41. //தி.தமிழ் இளங்கோ said...
    மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said...

    வலைச்சரம் ஆறாம்நாள் தொடர்ந்து வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தும் VGK அவர்களுக்கு நன்றி!

    தாங்கள் ஆரம்பத்தில் தொடங்கிய VGK என்ற வலைத் தளத்தை

    (http://vaigopalakrishnan.blogspot.com )

    இன்று எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் உள்ள ஒரே பதிவு.

    செவ்வாய், 19 அக்டோபர், 2010

    கத்தி (ப் ) பேசினால்:
    =====================

    காய்கறி பழங்களை நறுக்கும் போது
    என் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத் தின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் !

    கவனக்குறைவாக இருக்கும் போது
    இவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு !

    ஆக்கபூர்வமாகவும் செயல் படுவேன்
    அதே சமயம் அழிக்கவும் பயன் படுவேன்

    என்னைக் கையாள்பவர் செயல்படியே தான் எப்போதும் என் இயக்கமும் !

    சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து கொம்பு சீவி விடுகிறார்கள் !

    பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,

    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "க த் தி " !!

    -oOo-

    வணக்கம் ஐயா, ஆம் ஐயா,

    வலைப்பூ ஆரம்பித்த புதிதில் வேறு ஏதோ மற்றொரு பெயரில் தளம் ஒன்றும் உருவாக்கிக் கொடுத்திருந்தார் என் அருமை நண்ப்ர் திரு. ரிஷபன் அவர்கள்.

    நானும் அதில் ஓர் “சோதனை முயற்சி” யாக ஓர் கவிதை எழுதியிருந்தேன்.

    அதன் பிறகு நான் அதில் வேறு எந்தத்தலைப்பிலும் எதுவும் எழுதவில்லை.

    அதை அகஸ்மாத்தாக தாங்கள் பார்த்து இங்கு குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    அதையும் இங்கு வருகை தந்து பலரும் பாராட்டிப்பேசியுள்ளது அதை விட மகிழ்ச்சியாகவே உள்ளது.

    தங்களுக்கும், இதைப்பற்றி எடுத்துக்கூறி சிலாகித்துக் கருத்துக்கள் அளித்துள்ள மற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  42. மறுமொழி > RV said...
    // அவார்டா கொடுக்கறாங்க தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! முடிந்தால் இந்த இரண்டு தளங்களையும் பாருங்கள். //

    உங்கள் மூன்று தளங்களுக்குமே நான் வந்துள்ளேன். ஆனால் கருத்துரைகள் தந்ததில்லை. நன்றிக்கு நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,

    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "க த் தி " !! //

    உங்களுக்குள்ளும் நகைச்சுவையோடு ஒரு கவிஞர் இருக்கிறார். அவரை வலைப்பதிவுக்கு வருக வருக என வரவேற்கிறேன்! நான் அவனில்லை என்று சொல்லிவிட வேண்டாம்.


    ReplyDelete
  44. //தி.தமிழ் இளங்கோ said...
    மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    ******
    பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,

    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "க த் தி " !!

    ******

    //உங்களுக்குள்ளும் நகைச்சுவையோடு ஒரு கவிஞர் இருக்கிறார். அவரை வலைப்பதிவுக்கு வருக வருக என வரவேற்கிறேன்! நான் அவனில்லை என்று சொல்லிவிட வேண்டாம்.//

    வணக்கம் ஐயா,

    அவ்வாறு சொல்ல மாட்டேன், ஐயா.

    நான் கவிஞன் என்றோ அல்லது கவிஞன் அல்ல என்றோ என்றும் சொல்ல மாட்டேன், ஐயா.

    அதுபோல எதை எதையோ எழுதிவிட்டு கவிதை என்று சொல்பவர்களையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை, ஐயா.

    என் பார்வையில் நல்ல கவிதை என்றால் அது எப்படியிருக்க வேண்டும் என்பதையும் ஓரிடத்தில் சொல்லியுள்ளேன் ஐயா.

    இந்த கீழ்க்கண்ட இணைப்பினில் நான் எழுதியுள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் தயவுசெய்து படியுங்கள், ஐயா.

    http://tamilyaz.blogspot.com/2013/01/jail.html?showComment=1357800274070#c8005532307025519952

    [தெளிவாக, படித்தவுடன் பாமரனுக்கும் புரியும் வண்ணம் உள்ளது மட்டுமே கவிதை.

    அதில் கவித்துவமும் வேண்டும், நகைச்சுவையும் வேண்டும், மிகவும் சுலபமாக பிறருக்கு புரியவும் வேண்டும்.

    இவையெல்லாம் இல்லாத மீதியெல்லாம் என்னைப்பொறுத்தவரை கவிதை அல்ல. அது _________ ]

    தங்களின் ஊக்குவிப்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நன்றிகள், ஐயா.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  45. அன்பின் திரு இளங்கோ,
    என் பதிவை இவ்வளவு அழகாக அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
    மனம் நிறைந்த நன்றி. வலைச்சரம் சிறப்பாக ஒவ்வொரு நாளும் புதுமைகளைக் கொடுக்கிறது.

    பல பதிவுகள் நான் அறியாதவை. உங்கள் அக்கரை மனத்தை நிறைக்கிறது.வாழ்த்துகள்.

    ReplyDelete
  46. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் குறிப்பிட்ட இணைப்பினைப் படித்தேன். நன்றி!

    ReplyDelete
  47. மறுமொழி > வல்லிசிம்ஹன் said...

    // பல பதிவுகள் நான் அறியாதவை. உங்கள் அக்கரை மனத்தை நிறைக்கிறது.வாழ்த்துகள். //

    சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  48. எனது வலைப்பூவை அழகாக அறிமுகம் செய்ததற்கும், அதை எனக்குத் தெரியப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி இளங்கோ.

    ReplyDelete
  49. சுப்பு தாத்தா, வவ்வால்,
    உங்கள் இருவருக்கும் மனதார்ந்த நன்றி.

    ReplyDelete
  50. திரு. இளங்கோ அவர்களுக்கு

    எனது பணிவான நன்றிகள்

    ReplyDelete
  51. வலைச் சரத்தில் பல பதிவரை சரம்சரமாக தொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete