வலைச்சரம் ஆசிரியர் பணி ஆரம்பித்த இரண்டாவது நாளே எதோ ஒரு பெரிய பொறுப்பை சுமப்பது போன்ற உணர்வு, இருந்தும் சக பதிவர்களாகிய நீங்கள் கொடுத்த உற்சாகம் என்னை சிறப்பாக இயங்கச் செய்தது. இன்றுடன் வலைச்சர ஆசிரியர் பணி நிறைவடைகிறது. வலைச்சர வாரம் குறித்த எனது பதிவை அடுத்த வாரம் திடங்கொண்டு போராடுவில் விரிவாக பதிவு செய்கிறேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனனுக்கு சிறப்பான நன்றிகள். மீண்டும் பதிவுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் அதற்கு வாழ்த்துக்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளாவது இட வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்திற்கு இரண்டு என்ன மூன்று பதிவுகள் கூட வெளியிட்டிருக்கலாம். எதிர்பாரா சில அலுவல்களால் திட்டமிட்ட சில வலைச்சர பதிவுகள் சுருங்கியது, சில பதிவுகள் காணமலேயே போகியது. இந்த வாரத்தில் எனக்கு இரவு நேரப் பணி இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. மேலும் இதோ இந்தப் பதிவை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி பயணித்துக் கொண்டுள்ளேன். இதுவும் சற்றும் எதிர்பாரதா பயணம்.
கொடுத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டேனா என்று தெரியவில்லை, நான் அறிமுகப்படுத்திய பதிவர்களில் ஒரே ஒருவராவது உங்களுக்குப் பிடித்தவராக இருந்திருந்தால் நான் பாக்யவான் ஆவேன்.
வலைச்சரம் நம்மால் நமக்காக நம்மவர்களால் நடத்தப்படும் தளம். வலைச்சர ஆசிரியர்களுக்கு ஊக்கமளித்துவரும் உங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றிகள்.
இந்தப் பதிவில் மிக சமீபத்தில் நான் தொடர ஆரம்பித்திருக்கும் பதிவர்கள் மற்றும் வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டு நான் தொடர இருக்கும் பதிவர்களின் பட்டியலை மட்டும் தருகிறேன்.
கோகுல் - மனதோடு மட்டும் பதிவர் சந்திப்பில் வைத்து அறிமுகம். தற்போது மிகக் குறைவாகவே பதிவுகள் எழுதி வருகிறார்.
மனசாட்சி - கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வருகிறார். மனசாட்சியுடன் வளம் வந்தவர் தற்போது கோவை முத்தரசாக வளம் வருகிறார்
தளிர் சுரேஷ் எழுதி வரும் பேய்கள் ஓய்வதில்லை தொடரை படித்து வருகிறேன்
பூக்கூடை மின்னல் வரிகள் மூலம் அறிமுகம். கடந்த இருந்து தனது வலையுலகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். தேடல் மற்றும் தனது அனுபவம் சார்ந்த பதிவுகள் எழுதி வருகிறார்.
நிஜாம் பக்கம் நிஜாமும் ரூபனும் வலைச்சரம் மூலம் அறிமுகம். இனி வரும் நாட்களில்.
அருளினியன் பதிவுகள் கற்போம் பிரபு மூலம் அறிமுகம். கடந்த மூன்று வருடங்களாக பதிவுலகில் இருந்தாலும், மிகக் குறைவாகவே பதிவுகளைப் பதிவு செய்கிறார்.
சக பதிவர்கள் உங்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான். இருக்கும், பணி சுமையில் நம் எல்லாராலும் எல்லா பதிவுகளையும் படிக்க இயலாது, ஒருவேளை நீங்கள் படிக்கும் ஒருவரின் பதிவுகளில் நிறை குறை எது இருப்பினும் நேரம் எடுத்து தட்டிக் கொடுங்கள் அல்லது சுட்டிக் காட்டுங்கள்.
கடந்த ஒருவாரமாக வலைச்சரத்தில் என்னுடன் பயணித்த மீண்டுமொருமுறை மனமார்ந்த நன்றிகள் .
நல்ல முறையில் வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக முடித்து விடைபெறும் தங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசீனு(அண்ணா)
ஒரு வாரகாலம் பல தடைகளுக்கு மத்தியில் சிறப்பாக பணியை செய்து அறியாத பல பல புது முகங்களை அறிமுகம் செய்த சீனு(அண்ணா) உங்களுக்கு எனது நன்றிகள் அத்தோடு இன்று என்னுடைய வலைப்பக்கத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியண்ணா அத்தோடு இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான பணிக்கு வாழ்த்துகள் சீனு.
ReplyDeleteஇன்று தான் உங்கள் ஒவ்வொரு பதிவையும் படிக்கப் போகின்றேன்.
ReplyDeleteஉங்கள் பகிர்வுகளை வாசிக்கிறேன்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பித்த விதமும் முடித்தவிதமும் நன்றாக இருந்தது சிறப்பான பணிக்கு வாழ்த்துகள் சீனு.
ReplyDeleteவாழ்த்துகள் சீனு...
ReplyDeleteஅழகா தொடங்கி அருமையா முடிச்சிருக்கீங்க!
ReplyDeleteஅருமை சீனு...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
ஆசிரியர் பணியை செம்மையாக செய்தமைக்கு நன்றி நண்பா! தொடர்ந்து திடங்கொண்டு போராட வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிரமங்களிடையே சிறப்பாகப் பணியாற்றியமைக்காக பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்ப அதிர்ச்சியாய் என் வலைப்பூவையும் குறிப்பிட்டமைக்கு மனம் கனிந்த நன்றிகள்.
தி.கொ.போ.வில் தொடர்வோம்.
நன்றி சீனு
ReplyDeleteஆசிரியர் பணி சிறப்பு வாழ்த்துகள்
பல அறிமுகங்களைத் தந்திருந்தீர்கள்.
ReplyDeleteஉங்கள் பணிக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் "பாக்யவான்" சீனு.,பாராட்டுகளும்.,
ReplyDelete
ReplyDeleteநானும் பதிவர் ! நானும் பதிவர் ! நானும் பதிவர் !//
நானும் புதிய பதிவர்தான் உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்தேன் அருமை.ஆனால் உங்களின் தராசில் எனது நிலை என்ன என்றே தெரியவில்லைநானும் அடிக்கடிப் பதிவுகளை பதிந்து வருகிறேன்.நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பதிவர்களும் தகுதியானவர்கள் எனும்போது மகிழ்ச்சியாய் உள்ளது, நன்றி பாராட்டுகிறேன்.
சிறப்பான முறையில் தொடங்கி முடித்துள்ளீர்கள் சகோ வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான வலைச்சரப் பணிக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி சீனு...
ReplyDeleteபணிச்சுமைகளுக்கு இடையேயும் தரமான பதிவர்கள் பலரை அடையாளம் காட்டி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்! என்னைப்பற்றியும் தொடரை பற்றியும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியை அருமையாக செய்தீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்று அறிமுகம் ஆனவர்களுக்கும் வாழ்த்துகள்.
வலைச்சர ஆசிரியர் பணியை நிறைவாகச் செய்து நினைவில் நிற்கும் ஒரு வாரத்தைத் தந்து விட்டாய் சீனு. என் மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்! என் நண்பர் தாஸ் எழுதும் பூக்கூடையை அறிமுகப்படுத்தியதற்கு சந்தோத்துடன் அநேக நன்றி!
ReplyDeleteCongrats Seenu. Excellent work despite your tight work schedule.
ReplyDeleteவாழ்த்துக்கள்! :)
ReplyDelete