இந்தப் பதிவின் மூலம் நான் பகிரும் பதிவர்களில் சிலரை நீங்கள் அறிந்திருக்கலாம். சிலரை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் கடந்திருக்கலாம். கார சாரமான விவாதங்களைக் கூட சற்றே மென்மையாகத் தான் பகிர்வார்கள் அதனால் என்னுடைய பார்வையில் இவர்கள் மென்மையானவர்கள்.
விஜயன்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இளம் பதிவர். பூர்வீகம் ராமேஸ்வரம் என்பதால் வலைபூவிற்கும் கடற்கரை என்று பெயர் வைத்துள்ளார். சென்னை பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்.
இணையத்தின் ஆதி முதல் இன்றைய நாள் வரையான வளர்ச்சிப் பாதையை ஆச்சரியம் நிறைந்த மாய உலகம் என்னும் பெயரில் தொடராக எழுதி வருகிறார். அற்புதமான தொடர். வார்த்தை இவரிடம் வசபட்டுள்ளது. சலிப்பு தட்டாமல் எழுதி வருகிறார். இந்தத் தொடருக்கு பின்னால் இருக்கும் இவரது உழைப்பு ஆச்சரியப் பட வைக்கிறது.
செழியன்
நெல்லையையைச் சேர்ந்த படித்துக் கொண்டிருக்கும் இளைஞன். அவருடைய செம்மொழி என்னும் வலைபூவிலும், தொழிற்களம் தளத்திலும் எழுதி வருகிறார். கல்லூரி மூலம் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல சிறப்பான திட்டங்களை வகுத்து அதன்படி செயல்படுகிறது இவர்களது குழு.
அந்தப் பதிவு உங்கள் பார்வைக்கு.
உதவிக் கரம் வேண்டுகிறோம். . .
யுவராணி தமிழரசன்
கிறுக்கல்கள் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். கல்லூரிப் படிப்பு முடித்து தனது அடுத்த படிக்காக காத்திருக்கிறார். அதிகம் எழுதுவதில்லை, தற்போது எழுதுவதே இல்லை இருந்தும் இயல்பான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். டெரர் கும்மி குழுவினரிடம் இருந்து சிறந்த அறிமுக பதிவர் விருது பெற்றவர்.
அவருடைய அற்புதமான ஒரு பதிவு
மீதமாய் போவேனோ நானும்!
கண்மணி - அன்போடு
கண்மணி, கண்மணி - அன்போடு என்னும் தளத்தில் எழுதி வருகிறார். சென்னை பதிவர் சந்திப்பில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். திருப்பூர் தொழிற்களம் விழாவில் வர்ணனையாளராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அழுத்தமான கருத்துகளை கொண்ட பதிவுகளை பதிவ்ற்றி வருகிறார்.
குடந்தையூர் சரவணன்
கும்பகோணம் சரவணன் சாருக்கு சொந்த ஊர். பதிவர் சந்திப்பில் வைத்துப் பழக்கம். மிகவும் சாந்தமான மனிதர். பதிவர் சந்திப்பு முடிந்து சில நாட்கள் கழித்து அவரே என்னைத் தொடர்பு கொண்டு பேசியது, மிகவும் மகிழ்ச்சி அளித்த விஷயம். குறும்படங்கள் இயக்கம் ஆர்வத்தில் இருக்கிறார்.
மனதில் உறுதி வேண்டும்
மணிமாறன் மனதில் உறுதி வேண்டும் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். "தம்பி" சதீஷ் செல்லத்துரை மூலம் அறிமுகமானவர். இயல்பான நடைக்கு சொந்தக்காரர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மையமாக வைத்து இவர் எழுதிய சிறுகதை.
ஹைடெக் நரகம்..... ( சிறுகதை )
சிறுகதை.
ஆத்மா
சிட்டுகுருவியாக இருந்தவர். சமீபத்தில் ஆத்மாவாக உரு எடுத்துள்ளார். இலங்கை வாழ் பதிவர். கட்டுரைகளைப் போல் கவிதைகளையும் சரளமாக எழுதக் கூடியவர். சுனாமியின் நேரடி அனுபவத்தை இவரது இந்தப் பதிவுகளில் படியுங்கள்.
சசிகலா
சகோதரி சசிகலா, பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே என்னை "வலைச்சரம் ல எழுதுங்க" என்று உற்சாகப் படுத்தியவர். அந்த நேரத்தில் என்னால் இயலவில்லை, சென்னை பதிவர் சந்திப்பில் இவரது கவிதைத் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டது
டி என் முரளிதரன் மூங்கில் காற்று
சமீபத்தில் இவரது வலைப்பூவின் பெயரை மூங்கில் காற்று என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் தீவிர வாசகர். படித்த புத்தகங்கள் அனுபவங்கள் என்று தனக்குப் பிடித்த பலவற்றையும் பகிர்ந்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் நேற்றுதான் வலைப்பூவிற்கு வந்தேன்.நீங்கள் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றது தற்போதுதான் அறிந்தேன்.எல்லாவற்றையும் படித்து வருகிறேன்.
என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சீனு...
மென்மையானப் பதிவர்கள் மட்டுமல்ல இவர்களில் எனக்கு ஏற்கனவே பழக்கமான சிலர் மேன்மையானவர்களும் கூட.
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள மென்மையான பதிவர்களுக்கும், மேன்மையான பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
உங்களுக்கு என் நன்றிகள்.
அண்ணனை என்னைய என்று அறிமுகம் செய்து அப்பப்ப பதிவுலகில் எங்களுக்கு ரோடு போட்டு வெளிச்சம்தரும் தம்பி சீனு வாழ்க...
ReplyDeleteசசிகலா, முரளிதரனைத் தவிர மற்ற அனைவரையும் இன்றுதான் அறிந்து கொண்டேன் புதியவர்களை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteஅனைவருக்கும் மென்மையான வாழ்த்துகள்!!!
ReplyDeleteஅனைவருமே அருமையான பதிவாளர்கள்.
ReplyDeleteமணி மாறன் பகிர்ந்த விஸ்வரூபம் பதிவு செம...
அனைத்து அறிமுகங்களும் மிகவும் பழக்கமானவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteயுவராணி தமிழரசன் அவர்களின் இணைப்பு மட்டும் சரி செய்ய வேண்டும்...
புதிய பதிவர்களை அறிமுகம் செய்து அவர்களை ஊக்கப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது
ReplyDeleteஅருமையான பதிவாளர்கள் அறிமுகங்கங்களுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteஇன்றைக்கு வலைசரத்தை அலங்கரிக்கும் திருவாளர்கள் விஜயன், செழியன், முரளிதரன், குமாரி கண்மணி, திருமதி சசிகலா தெரிந்தவர்கள்.
ReplyDeleteதெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் பாராட்டுக்கள்.
இவர்களைப் பற்றி எழுதிய உங்களுக்கு வாழ்த்துகள், சீனு!
தென்றலையும் அறிமுகபடுத்தியது கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ. சக தோழர் தோழியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிலர் தெரிந்தவர்கள் சிலர் புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான பதிவர்கள்! பலரது தளங்களுக்கு சென்றுள்ளேன்! சிலர் புதியவர்கள்! அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteசிறப்பானவர்கள் அறிமுகத்திற்கு நன்றி .
ReplyDeleteகற்போமிற்காக கட்டுரை தந்த போது விஜயன் அறிமுகமானார். மற்ற அனைவரும் புதியவர்கள் எனக்கு.
ReplyDeleteவாழ்த்துகள் அனைவருக்கும்.
ஒரு சிலர் தவிர எனக்குப் புதியவர்களும் நிறைய இருக்கின்றனர். மெதுவாகப் பார்வையிட்டு கருத்துச் சொல்கிறேன் சீனு. உங்களால் இன்று அறிமுகமான மென்மையான அனைவருக்கும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteநண்பர் சரவணன்,
ReplyDeleteபதிவர் முரளிதரன் இருவரும் அறிமுகம்.
புதியவர்களையும் பார்க்கிறேன்.
என்னையும் இந்தப் மென்மையானவர்கள் பட்டியலில் சேர்த்ததற்கு மகிழ்ச்சி.இருவரைத்தவிர மற்றவர் நான் அறிந்தவர்கள்.அந்த இருவரையும் படித்து விடுகிறேன். நன்றி சீனு.
ReplyDeleteகடற்கரை முக்கியமான தளமாக உருவாகும் என்று நம்புகின்றேன். உங்களைப் போலவே கண்மணி தனது வயதை விட நேர்த்தியான சிந்தனைகளுக்கு சொந்தமானவர். மற்றவர்களை தொடர்கின்றேன்.
ReplyDeleteஇந்த பதிவு சிறப்பான நபர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
நல்ல அறிமுகங்கள். தெரியாத சிலரை தெரிந்து கொண்டேன்....
ReplyDeleteஅட, என்னைப் பற்றியும் எழுதியமைக்கு நன்றி
ReplyDeleteஎன்னைப் பற்றி எழுதியமைக்கு நன்றி சீனு
ReplyDeleteமிக்க நன்றி அறிமுகத்திற்கு :) :)
ReplyDelete