Sunday, February 17, 2013

விஜயன் துரைக்கு விடை கொடுத்து தமிழ் இளங்கோவை வரவேற்கின்றோம்


வணக்கம் வலை நண்பர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த துரைராஜ் @ விஜயன் தனது பணியை மிகுந்த ஆர்வமுடன் ஏற்று மொத்தம் பதினான்கு இடுகைகளை பதிந்து சுமார் நூறு கருத்துரைகள் வரை பெற்றுள்ளார்.  

விஜயன் பதிந்துள்ள இடுகைகளின் தலைப்புகள் கீழே:
கேட்க ...ரசிக்க ..சில வலைப்பூக்கள்; பார்க்க ரசிக்க...சில வலைப்பூக்கள்.; இவர்களை தெரியுமா ??; நான் ரசித்த கவிதை பதிவுகள்:; நான் வியக்கும் பதிவர்கள் (பாகம்-2); நான் வியக்கும் பதிவர்கள் (பாகம்-1); நட்பூ; காதலர் தின சிறப்பு வலைச்சரம்:; தொழில்நுட்ப பதிவர்களுக்கு நன்றிகள்..!; வலைப்பூ தோட்டக்காரன்; அறிவியல்...அறிவு...அறிவுரை..; வலைப்பூக்களின் வாசம்:; இலவச மின் புத்தகங்கள்..; வலைச்சர ஆசிரியர் பொறுப்பு இந்த வாரம் என்னிடம்..!

மேற்கண்ட இடுகைகளில் இலவச மின் புத்தகங்கள்..; என்ற இடுகை ஆயிரம் பக்கப் பார்வைகளுக்கும் மேல் பெற்றுள்ளது. பாராட்டுக்கள் விஜயன். இத்துணை இடுகைகளையும் இணைய தள மையத்திலிருந்து பதிந்துள்ளார். 
அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு  "எனது எண்ணங்கள்" என்ற வலைப்பூவை எழுதி வரும் தி. தமிழ் இளங்கோ அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க அழைக்கின்றேன். திருச்சியில் வசித்து வரும் இவர் அரசாங்க வங்கி ஒன்றில் 29 ஆண்டுகளாக காசாளர்/எழுத்தர்/முதுநிலை எழுத்தர் எனப் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்று, இலக்கியம், பழைய தமிழ் திரைப்படங்கள், பாடல்கள், போட்டோகிராபி மற்றும் வலைப்பதிவு என பலவற்றிலும் ஆர்வமுடன் தமது ஓய்வை பயனுள்ளவையாக மாற்றி வருகிறார்.  

தி. தமிழ் இளங்கோவை வருக.... வருக... என வாழ்த்தி வரவேற்று வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

நல்வாழ்த்துக்கள் விஜயன் துரை.
நல்வாழ்த்துக்கள் தி. தமிழ் இளங்கோ.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

11 comments:

  1. கடந்த ஒரு வார காலம் சிறப்பான முறையில் வலைச்சரம் பொறுப்பாசிரியர் பணியை சிறப்பாக செய்து விடைபெற்றுச் செல்லும் விஜயன் துரை அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  2. திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.வாருங்கள் வாழ்த்துரை தாருங்கள்

    ReplyDelete
  3. சிறப்பாக பணியை முடித்த நண்பர் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    இனியவர் திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

    ReplyDelete
  4. நாளை முதல் வலைச்சர ஆசிரியராக பணியாற்ற உள்ள எங்கள் ஊராம் திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களை வருக வருக வருக என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    ஐயா அவர்களின் வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    இன்றுடன் விடைபெற்றுச்செல்லும் வலைச்சர ஆசிரியர் திரு. விஜயன் துரை அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    கவிஞரின் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    எப்போதும் போல் எனக்கு ஆதரவுக் கரம் கொடுத்து வரவேற்ற சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    திரு VGK அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  8. தி.தமிழ் இளங்கோ சார்,

    வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்!

    கரைப்புரண்டு ஓடும் காவிரியாய் பொங்கி எழட்டும் பதிவுகள்(கர்நாடக தண்ணி விடலை தமிழ்நாட்டில் கரண்ட் விடலை எங்கே பொங்கனு சொல்லிடாதிங்க)

    ReplyDelete
  9. மறுமொழி >வவ்வால் said...

    பொங்கிவரும் காவிரியாய் வரவேற்பு தந்த வவ்வால் அவர்களுக்கு நன்றி! ( இன்றைக்கு இபபடி இருக்கும் காவிரி மீண்டும் எழுவாள்! வளம் தருவாள்! )

    ReplyDelete
  10. வலைச்சர் ஆசிரியர் பணிக்கு நிறைவான வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete