Sunday, February 17, 2013

கேட்க ...ரசிக்க ..சில வலைப்பூக்கள்


பாடல் தளங்கள்: 

ஒரு வாரம் முழுக்க படிப்பு சம்பந்தமான தளங்களை பார்த்தாகி விட்டது.இன்றைய சரத்தில் பாடல் வலைப்பூக்கள்.

திரைப்பாடல்கள்


பாடல்களை கேட்கும் போது ,அது நம் மனதிற்கு பிடித்துப்போகும் போது,அப்பாடல் வரிகளை நாம் முனுமுனுப்பதுண்டு,பல நேரங்களில் பாடலின் வார்த்தை நமக்கு பிடிபடாமல் பாடாய் படுத்தும், அது போன்ற சந்தர்ப்பங்களில்.நாம் பாட்டு புத்தகங்களை நாடுவதுண்டு.பாடல் வரிகளை இலவசமாக ,பாடலுடன் சேர்த்து பந்தி வைக்கும் தளம்
தேன்கின்னம்: இத்தளத்தில் நேயர் விருப்பம் ஆப்ஸன் மூலம் பிடித்த பாடல் பற்றிய மனு கொடுக்க முடியும் விடியோ இணைப்பும் உண்டு..புதிய பாடல் பழைய பாடல் என்று அனைத்து பாடல்களும் இங்கு இருக்கும்..பாடலை எழுதியவர்,படம் பெயர் ,,இசை அமைப்பாளர் பெயர்,படம் வந்த ஆண்டு...!என பல தகவல்களையும் இலவச இணைப்பாக தருகிறார்கள்.


இந்த வலைப்பூவில் நாங்கள் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறோம்... இங்கே பழைய பாடல்கள், புதிய பாடல்கள், கர்னாடக சங்கீதம் எல்லாமே இருக்கும்.என்று தன்னை பற்றிய சுய விளக்கத்துடன் நம்மை வரவேற்கிறது இந்த வலைப்பூ.நீங்கள் ரசித்த பாடல் இங்கு கிடைக்கலாம் போய் பாருங்கள்


பாடலின் கதை,பாடல் ஏற்படுத்திய தாக்கம்,பாடல் வரிகள்,பாடலுக்கு உயிரளித்த பாடகர்,இசையமைப்பாளர்,கவிஞர் என பாட்டிற்காகவே இயங்கும் வலைப்பூ
 தமிழ் என்னும் தேனை இசை மூலம் பருக இங்கு செல்ல்லாம்


டி.வி சீரியல் பாடல்கள் : டி.வி. சீரியல்களில் வரும் பாடல்களில் சில நமக்கு ரொம்ப பிடித்துப்போகும்,அது எங்கே கிடைக்கும் என்று தேடத்தோன்றும்.சீரியல் பாடல்களில்
எனக்கு சிந்துபைரவி நாடகத்தில் வரும் "அன்புக்கரங்களில் அடைக்கலம் ஆகும் அழகிய பொம்மை"பாடல்,காதலிக்க நேரமில்லை நாடகத்தில் வரும் "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு" போன்ற பாடல்கள் பிடிக்கும்.டி.வி சீரியல் பாடல்கள் இந்த முகவரியில் கிடைக்கிறது.

கர்நாடிக இசை:

நம் மனதை லேசாக்கும் மாய வித்தை இந்த கர்நாடிக இசைக்கு உண்டு




பக்தி ஸ்பெசல்:

கண்ணன் பாடல்கள்: மாயக்கண்ணனின் புகழ் பாடும் பல பாடல்கள் இந்த வலைப்பூவில் கிடைக்கின்றன.


வலைச்சரத்தில் இன்று எனக்கு கடைசி தினம் .இன்றுடன் வலைச்சர ஆசிரியர் பணி நிறைவடைகிறது ....


இசையோடு விடைபெறுகிறேன் .....

உங்களின் மேலான ஆதரவுக்கு இந்த விஜயன்.துரை  யின் நன்றிகள் 


8 comments:

  1. இனிய இசைத் தளங்களின் அறிமுகங்கள்...
    நன்றி!
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோ.!

    ReplyDelete
  3. அன்பு விஜயன்,
    இசையுடன் உங்கள் ஒரு வார வலைச்சர பொறுப்பினை வெற்றிகரமாக முடித்திருக்கிறீர்கள்.

    நானும் பங்களிப்பாளராக இருக்கும் இசைப்பாவின் அறிமுகத்திற்கு நன்றி!

    உங்கள் பதிவு உலகப் பயணம் வெற்றி நடை போட்டுத் தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. நண்பா , வாழ்த்துக்கள், கொஞ்சம் வேலைப் பளு அதிகம் ,

    ReplyDelete
  5. அதான் , சரியாக பதில் அளிக்க முடிய வில்லை.

    ReplyDelete
  6. சிறப்பாக முடித்தீர்கள் நண்பா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அருமை. சிறப்பான அறிமுகங்கள்.

    ReplyDelete