வலைசரம் ஆசிரியராக என்னையும் ஊக்கப்படுத்தி எழுத வைத்த சீனா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது பலத்தரப்பட்ட ஜாம்பவான்களும் ஜாம்பவாட்டிகளும் பொறுப்பு வகித்த ஒரு பொறுப்பாகும், எனவே மரியாதை கலந்த பயம் மனதில் இருந்தபடியால் சற்றே எட்டிநின்று பார்த்து விட்டு பலமுறை ஓடிவிடுவது வழக்கம்.
ஆனாலும் என்னையும் சீனா அய்யா விடாமல் தேடிப்பிடித்து உங்கள் நடுவில், லைம் லைட்டில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார், நன்றிகள் அய்யா....!
என்னைப்பற்றி வலையுலகில் சிலருக்கு தெரிந்திருந்தாலும், தெரியாதவர்களுக்கு பாமரனாகிய என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் சற்று மனதுக்கு பெருமையே...!
எனது குடும்ப பூர்வீகம் விருதுநகர் மாவட்டம், முப்பாட்டனுக்கும் அப்பாட்டன் அதுக்கும் முப்பாட்டனுக்கும் அப்பாட்டனும் வந்து குடியேறியது கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் என்னும் ஊரில், அம்மா திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தை [[கூடங்குளம் அருகில்]] சேர்ந்தவர், என் மனைவி அதே திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் அலங்காரப்பேரியை சேர்ந்தவர்.
நான் செட்டில் ஆகியிருப்பது மும்பை என்னும் யுத்தபூமியில், வேலை செய்வது வளைகுடா நாட்டில் ஒன்றான பஹ்ரைனில், எனக்கு இரண்டு குழந்தை செல்வங்கள் உண்டு.
அன்பு, பாசம், நேசம், அழுகை, வருத்தம், ஏமாற்றங்கள், கோபங்கள், வெறுப்புகள், காதல்[கள்...!] அதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்பு, நட்புகள்........ இவைகள் யாவும் நான் அனுபவித்ததும், என்னை சுற்றி நடந்தவைகளையும்தான் நான் அதிகமாக என் வலைத்தளங்களில் எழுதி வருகிறேன்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக என்னை சுற்றி நடக்கும் நடந்த சிரிப்பு காமெடி சம்பவங்களையுமே கூடுதலாக எழுதவேண்டும் என்று நினைப்பேன்.
பதிவை வாசிக்க வருபவர்களுக்கு ஒரு மருந்தாக ஒரு ரிலாக்ஸாக இருக்கவேண்டும் என்றே முயற்சிப்பதும், சிலவேளைகளில் நாட்டு நடப்பைப்பார்த்து பொங்குவதும் உண்டு...
பதிவுலகம் எனக்கு அநேக நட்புகளையும், உயிர் நண்[பி]பர்களை தந்திருக்கிறது என்பதை எந்த மகா சபையிலும் நின்று உரக்க சொல்லமுடியும் என்னால்...!
அதேப்போல புத்தகப்பிரியனாக இருந்த என்னை எழுதவைத்து, வலையுலக நண்பர்கள் வாரி அணைத்தும் சேர்த்தும் கொண்டார்கள் நட்பால்...!
அப்படியே பல வலையுலக ஜாம்பவான்கள், ஜாம்பவாட்டிகளையும் சந்திக்கவும், அலைபேசியிலும், சாட்டிங்கிலும் நலம் சுகம் விசாரிக்கவும் செய்ததும் இதே பதிவுலகம்தான்.
எல்லார் பற்றியும் வொவ்வொரு நாளும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி வணக்கம் உங்கள் எல்லார் ஆதரவிற்கும் அன்புக்கும்....!
வலைச்சரம் நிர்வாகிகள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...நன்றிகள்....
அப்படியே எனது மூன்று பதிவுகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி, நாளையில் இருந்து எனக்கு பிடித்தவர்களையும், உங்களுக்கும் பிடிக்கும் வண்ணம் பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் நன்றி வணக்கம்...!
[[பச்சபுள்ள கையில அருவாளை தூக்கி கொடுத்துட்டாயிங்கப்பா]]
அருவா தூக்கினாலும் எங்களை சிரிக்க வைக்கும் வாத்தியாருக்கு
ReplyDeleteஎனது வாழ்த்துக்கள்
பதிவுலகம் எனக்கு அநேக நட்புகளையும், உயிர் நண்[பி]பர்களை தந்திருக்கிறது என்பதை எந்த மகா சபையிலும் நின்று உரக்க சொல்லமுடியும் என்னால்...!
ReplyDeleteஎங்களுக்கும் ஓர் நல்ல சகோதரரையும் காவல் தெய்வமாகக் கொடுத்துள்ளது
இந்த வலைத்தளம் என்பதை நாங்களும் பெருமையாகச் சொல்வோமில்ல :)
வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் வேட்டை சிறப்பாகத் தொடரட்டும் ........................
தங்களுடைய ஆவலுடன் வரவேற்கிறோம்.
ReplyDeleteதங்களை ஆவலுடம் வரவேற்கிறோம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா
ReplyDeleteஅன்பின் மனோ - நல்லதொரு துவக்கம் -- அனைத்து அறிமுகங்களுக்கும் சுட்டியினைச் சூடி சென்று படித்து மறுமொழிகளும் இட்டு விட்டென். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்களது சுய அறிமுகம் அருமை...
ReplyDeleteபாசககார நண்பா... உனக்கு நல்வரவும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளும்! அருவா தூக்குற நீயி பச்சப்புள்ளன்னு யார்யா சொன்னது? நீரும் ஒரு ஜாம்பவான் தான் ஓய்! அசத்துங்கோ.... நானும் கூடவே தொடர்ந்து வரேன்!
ReplyDeleteதி - திரும்பிப் பார் - நல்ல மனிதர்கள் வாழ்க்கையை
ReplyDeleteரு - ருசித்துப் படி - நல்ல புத்தகங்களை
நெ - நெகிழ்ச்சியாயிரு - வாழ்க்கையில்
ல் - இல்லாதவர்களை நினை - நினைவு கூறப்படுவாய்
வே - வேலையில் உண்மையாயிரு - உயர்த்தப்படுவாய்
லி - லில்லியைப் போல் நிமிர்ந்து நில் - தீமைக்கு எதிராக
வணக்கம்... சுய அறிமுகம் சரியா...? அசத்துங்க... வாழ்த்துக்கள்...
vaazhthukkal nanpAa..!
ReplyDeleteநஞ்சை நிலங்களை நாடுக
ReplyDeleteநன்றாய் விளைந்த நெற்பயிர்களை
நற்பயிர்களை அறிந்து
நும் அரிவாளால் அரிந்து
தருக.
சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com
ReplyDelete//கையில அருவாளை தூக்கி கொடுத்துட்டாயிங்கப்பா]]//
நஞ்சை நிலங்களை நாடுக
நன்றாய் விளைந்த நெற்பயிர்களை
நற்பயிர்களை அறிந்து
நும் அரிவாளால் அரிந்து
தருக.
சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.in
ஷார்ப்னர் தூக்கவே பயப்படும் புள்ள கைல ஏன்யா அருவாள தந்தாங்க???
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள்...தொடருங்க...தொடருகிறேன்...வேற என்ன சொல்ல..எல்லாம் கலிகாலம் என்பதைத்தவிர...ஹிஹி!
ReplyDeleteவாழ்த்துகள் மக்கா.,
ReplyDeleteநகம் வெட்டவே அருவா வைத்திருக்கும் ”மனோ” வாழ்கோ!
ReplyDeleteஹாஹா.. ஜமாயிங்கோ. அசத்தல்
ReplyDeleteவித்தியாசமான அறிமுகம்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை சுய அறிமுகம். நடத்துங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணே :-)
ReplyDeleteஅப்பப்பா பயமாயிருக்கு அருவாளைப் பார்க்க.!
ReplyDeleteஇவ்வாரத்திற்கு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாங்க மக்கா வாங்க..!
ReplyDeleteஉங்களது பதிவுக்குச் சென்றேன் ஆகஸ்டு 12 டயரியை தொலைத்த கதையின் இறுதியிலே !!
ReplyDeleteஉங்களது இந்த கருத்தினை ரசித்தேன்
// ஏழரை சனி நின்னு டங்கு டங்குன்னு ஆடி கண்ணுக்குள்ளே விரலை அல்ல காலையே விட்டு ஆட்டுதே.....?//
ஏழரை ஆண்டு சனியும் மூன்று ராசிகளில் நின்று போகும் நமது ராசிக்கு முன்னால், ராசியில், அடுத்தது, என்று. .ஒவ்வொன்றும் இரண்டரை ஆண்டு. மூத்த சனி என்ன செய்யபோகிறதோ என்று நடுங்க வைக்கும் ஜன்ம சனி பக்கத்தில் இருந்தே உயிரை வாங்கும். அடுத்த மூன்றாவது கட்ட சனி எப்ப கூட இருந்தே கவுத்துடும்.
இது சனியை பற்றிய குறிப்பு. அவ்வளவே
சுப்பு தாத்தா
வாருங்கள் மனோ!
ReplyDeleteஅருவாளை போட்டு என் வழி தனி வழி ன்னு சொல்லிட்டீங்கள். வாழ்த்துகள். ஒரு வித்தியாசமான வலைச்சர வாரத்தை எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகளுக்குப் போய் படித்துவிட்டு வந்தேன். உங்கள் டைரியுடன் எனது மனமும் தொலைந்துபோனது. எத்தனை அரிய பொக்கிஷம், காணாமல் போய்விட்டதே என்று மனசு அரற்றுகிறது. படிக்கிறவங்களுக்கே இப்படின்னா உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
அங்கு காமெண்ட்ஸ் போட முடியவில்லை. அதனால் இங்கு எழுதுகிறேன்.
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்!
அருவாளின் அதிரடியான பணியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் இந்தவாரம்! வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
ReplyDeleteவாழ்த்துகள் மனோ.. ஜமாய்ங்க :)
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமனோ(அண்ணா)
நல்ல அறிமுகம் இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் மனோ(அண்ணா) அவர்களை வருக வருகவென்று அன்புடன் வரவேற்கிறேன் இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகம் அசத்தல்! வாழ்த்துக்கள்!
ReplyDeletewelcome mano....welcome.......
ReplyDeleteasaththunga,....
கலக்கலான அறிமுகம் மனோ. அறுவாள் தான் கொஞ்சம் பயமுறுத்துது! :)
ReplyDeleteமக்கா வணக்கம்....
ReplyDeleteசிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....
வாழ்த்துக்கள் மக்கா...
வாருமைய்யா........ வந்து எல்லாத்தையும் எடுத்து வுடுங்க.......
ReplyDelete/////தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteமக்கா வணக்கம்....
சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....
வாழ்த்துக்கள் மக்கா...//////
ஆமா மக்கா, நீங்க கலக்குற கலக்குல, மந்த கதில இருக்கற பதிவுலகம் பழைய நிலைக்கு வரனும்.... போட்டு தாக்குங்க...!
வந்துட்டாரய்யா,வந்துட்டாரு!வாங்க நாஞ்சிலாரே!ஒரு வாரம் வெட்டு, குத்துதான்! கலக்குங்க ,தல!
ReplyDeleteவாழ்த்துக்கள் மனோ சகோ ..துவக்கமே சூப்பர்ப். தொடர்ந்து கலக்குங்கள்
ReplyDeleteநல்வரவு மனோ!
ReplyDeleteஉங்களின் சுய அறிமுகப் பதிவு மூன்றுமே அருமை...தொடர்கிறேன் இனி ..
ReplyDeleteஹா...ஹா அருவாள்.
ReplyDeleteஇப்பொழுதே சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். வாழ்த்துகள்.
தாயும், தாரமும் திருநெல்வேலியா இருக்கும்போது அருவா எடுக்க யோசிக்கலாமா மனோ...
ReplyDeleteநாங்களும் அருவாளும் கையுமாத்தான் வலைச்சரத்துக்குள்ளே நுழையுறோம்
ReplyDeleteவாங்க .. வாங்க ..
ReplyDeleteஇப்ப நீங்களும் வாத்தியார்தான்
This comment has been removed by the author.
ReplyDeleteஅறிமுக படலம் அசத்தல் மனோ சார்!
ReplyDeleteபுத்தகப் பிரியர்கள் என்றால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் ஆளுமைக்குள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். எல்லோருடைய எழுத்தையும் அளந்து அளைந்து வருவதில் இருக்கும் சுகமே தனி தான். நீங்களும் அதே போல் தான் என்பது தெரிகிறது. வாழ்த்துகள்!!
சல்மா என்ற தனித்த பெயரே பெண்மையின் ஆளுமைக்கான அடையாளமாக கருதுகிறேன். கடைசிப் பெயரின் சார்பு நிலையை தவிர்த்து தன்னுடைய இருப்பின் உறுதியை ஒற்றைப் பெயரிலேயே அழுத்தம் திருத்தமாக காட்டுவது போல் எனக்குள் ஒரு கருத்தை ஊன்றியவர் சல்மா. அவருடைய எல்லாக் கவிதைகளையும் படிக்க கிடைத்ததில்லை...சிலவற்றைத் தான் படித்திருக்கிறேன். படைத்தவை அத்தனைக்கும் முரண்கருத்து கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவருடைய ஆளுமை படைப்புகளில் தெரியும்..
தமிழால் வாழ்ந்தவர், வளர்ந்தவர் என்றால் உங்க தலீவர் தான்...ஆனால் வெளியில் தம்பட்டம் அடித்துக் கொள்வது தன்னால் தான் தமிழே வாழ்கிறது என்பது....அது தான் சகிக்க முடியாத கோபத்தை தருகிறது.
இப்போது தான் நேரம் கிடைத்தது உங்கள் முதல் பதிவு படிக்க....இனி எல்லாவற்றையும் படித்துவிட்டு தான் வந்து பின்னூட்டம் எழுதுவேன்... வலைச்சரத் தொடுப்பு இனிதே நிகழ வாழ்த்துகள் சார்!!
மறக்காமல் அந்த அட்டைக் கத்தி அருவாளையும் வலைச்சரத்துக்கு எடுத்து வந்திருக்கீங்க பாருங்க...அங்க தான் சார் நீங்க நிற்கிறீங்க :) :):):):):):):)
ReplyDeleteவாழ்த்துக்கள்,இன்று தான் வலைச்சரத்தில் எழுதுவது தெரியவந்தது..நேரம் கிடைக்கும் பொழுது பார்வையிடுகிறேன்.
ReplyDelete