Tuesday, February 26, 2013

மனதிற்கும் வாசிப்புக்கும் நிறைவைத் தரும் அய்யாக்களின் செவ்வாய் இன்று...!

கோமதி நடராஜன், ஹா ஹா ஹாஸ்யம் என்ற பெயரில் நல்ல நல்ல நகைச்சுவை தொகுப்புகளை அவரது பதிவுகளில் பதித்து வருகிறார். சிரிப்பு மன ஆரோக்கியத்துக்கு மருந்து, மன ஆரோக்கியம் இருந்தால், உடல் ஆரோக்கியம் தானே வரும் என்று தொடங்கி கிச்சு கிச்சு மூட்டுகிறார் படிச்சு பாருங்கள். மணிமேகலை பதிப்பகத்தில் இவரது புத்தகங்களும் வெளி வந்துள்ளது என்பது இன்னும் கூடுதல் சிறப்பு...! காமெடியை மிகவும் ரசிக்கும் அக்கா...!


நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு
[[அய்யாக்கள்னு சொல்லிட்டு என்னய்யா கோமதி அக்காவை அறிமுகப்படுத்திறியேன்ன்னு கேக்காதீக, அக்காவுக்கும் என் மனசுல அய்யாக்களுக்கு உள்ள மரியாதை எப்பவும் உண்டு...!]]


புலவர் சா ராமாநுசம் அய்யா அவர்கள், கவிதைகளில் சாடல், கோபம், வெறுப்பு, காதல், அன்பு என முப்பரிமாணங்களிலும் கவிதைகள் இயற்றி அசத்தி வருகிறார். ரசித்து படித்து மகிழ்வேன்...!



காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!

அய்யா ரமணி அவர்கள், அவரும் கவிதைகளில் "தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து போல" பலவிதமாக கலந்து கலக்குகிறார், எனக்கு அவரை குரு  என்றே அழைப்பது மிகவும் பிடிக்கும். தீதும் நன்றும் பிறர் தரா வரா என்று எழுதி வருகிறார்...!

சலிப்பில் விளையும் விழிப்பு

ரத்னவேல் அய்யா அவர்கள், இவரை இரண்டுமுறை சந்தித்தும் சரியாக அளவளாத சந்தர்ப்பமாக அமைந்தது மனசுக்கு இன்னும் கஷ்டமாகவே இருக்கிறது, இவர் ஒரு சமூக ஆர்வலர் மட்டுமில்லை விலங்குகள் பறவைகள் மீது அதிக பாசம் உள்ளவர், மற்றும் நமக்கு மிகவும் பிரயோசனமுள்ள பதிவுகளை ஷேர் செய்து நமக்கு காட்டுவதில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர். பேஸ்புக்கிலும் கலக்கி வருகிறார்...!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள் http://rathnavel-natarajan.blogspot.com/2012/04/blog-post_30.html

சென்னை பித்தன், நான் பேச நினைப்பதெல்லாம் என்ற தலைப்பில் எழுதி, இப்போது எழுதுவதை விட்டுவிட்டார், இவர் மீண்டும் பதிவுலகில் கலக்கவேண்டும் என்பது எனது ஆசை, இவரை தல என்றே பாசமாக அழைப்பேன், அதற்க்கு பிறகுதான் எல்லாரும் இவரை பதிவுலக அஜித்தாக கொண்டாடி, கொண்டாடுகிறார்கள், இவர் எழுத்துகள் பாமரனுக்கும் புரியும்படியாக இருக்கும், சிரிப்பு எழுதினால் அன்று முழுவதும் வயிறு நிறைய சிரிக்க வைப்பதில் கில்லாடி...!
இழந்த சொர்க்கங்கள்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!!

கக்கு மாணிக்கம், பகிர்தலும் நன்றே, பொன் மாலை பொழுது என்ற தலைப்பில் எழுதி வருகிறார், நாட்டு நடப்புகளையும், மக்களின் அறியாமைகள், அரசியல்வாதிகள், டெக்னிகல் விஷயங்கள் பற்றி எழுதி வருகிறார், என்னை மிகவும் கலாயிக்கும் உரிமை பெற்றவர்களில் இவரும் ஒருவர்...!
இனி எவருக்கும் வேண்டாம் பாரத ரத்னா....

உணவு உலகம் சங்கரலிங்கம், சாப்பிடும், வாங்கும் உணவு பொருட்கள் தரமானதுதானா..? தரமில்லாததை எப்படி கண்டுபிடிப்பது என்பதை நமக்கு விளக்கி சொல்வதோடு, தரமில்லாத உணவு பொருட்களை விற்போர் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து உள்ளே தூக்கிப்போடும் நெல்லை மாநகராட்சி ஆபீசர் இவர்.

தமிழக தென் மண்டலத்தில் [[நெல்லை பதிவர் சந்திப்பு]] முதன் முதலாக பதிவர்கள் சந்திப்பு நடத்தி அசத்தியவர், பதிவர்கள் மீது மிகவும் பாசம் கொண்டவர், இவர் அருகில் இருந்தால் பயமே இருக்காது, தாயின் அருகில் இருப்பது போன்றே எனக்கு தோன்றும், அம்புட்டு அன்பு கொண்டவர், ஊர் போனால் இவரை சந்திக்காமல் நான் திரும்புவதே கிடையாது, நான் போகலைன்னா ரயில்வே [[மும்பை போகும் போது]] ஸ்டேசனுகே சிற்றுண்டி கொண்டு வர செய்து கொடுத்துவிட்டுதான் செல்வார்.

ஆபிசருக்கும் அண்ணன் கக்கு மாணிக்கத்துக்கும் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அய்யாக்களின் மரியாதை எப்பவுமே உண்டு, இருந்தாலும் அவர்களை எங்கள் நண்பர்கள் வட்டத்தில் கொண்டுவந்து கலாயிப்பது ஜாலி என்று அவர்களை கடத்திவிட்டோம் [[ஹி ஹி]] நண்பர்கள் அதிரடிக்குள்...!

http://www.unavuulagam.in/2011/06/blog-post_13.html
பதினெட்டு பட்டியும் நெல்லையில் கூடிய நாள்......நிறைய பதிவர்களின் லிங்க் இங்கே இருக்கிறது போயி பார்த்துக்கொள்ளுங்கள்.

சீனா அய்யா, இவரைப்பற்றி நான் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை உங்களுக்கு நல்லாவே தெரியும், அய்யாவின் சேவையும், பொறுமையும் என்னை வியக்க செய்யும் விஷயங்கள், நெல்லை பதிவர் சந்திப்பில் அய்யாவை சந்தித்தாலும் நிறைய பேசமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு நெஞ்சில்...!

படரும் அறிமுகங்கள் இனியும்.....











39 comments:

  1. அனுபவப் பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப் பாணியை பின்பற்றி வருபவர்கள்.
    இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது.
    நல்ல தொடக்கம் மனோ சார்!

    ReplyDelete
  2. வயதிலும் அனுபவத்திலும் மூத்த பதிவர்கள்! முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியவர்கள்! அனைவரையும் தொகுத்து அழகாகப் பகிர்ந்தமைக்கு நன்றி! சூப்பர் மனோ!

    ReplyDelete
  3. அனைத்தும் விரும்பிப் படிக்கும் தளங்கள்... மூத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. naanum virumpi padikkum sonthangal...

    oru silar enakku puthithu....

    ayya cheena avarkalai intruthaan paarththen
    ungal pakirvaal !

    mikka nantri sako..!

    ReplyDelete
  5. அன்பின் மனோ - அய்யாக்களின் ( கக்கு மாணீக்கம் உள்ளிட்ட ) அறிமுகம் ( ?? ) அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. சுக்கு மாணிக்கம் இளைஞர் என்று அல்லவா நினைத்து இருந்தேன்....

    ReplyDelete
  7. அனைத்தும் அருமையான அறிமுகங்கள்... அறிமுகமானவர்கள்....

    ReplyDelete
  8. வாவ்!!!!! அய்யாக்களின் அறிமுகங்கள் அருமை!

    ReplyDelete
  9. மூத்த பதிவர்களின் அறிமுகங்கள்....

    அனைவரையும் தொடர்ந்து படிக்கிறேன்.... தொடரட்டும் அறிமுகங்கள்.... :)

    ReplyDelete
  10. எனக்கு பலரும் புதியவர்கள். படித்தேன். நன்றிகள் மனோ அண்ணா.

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள்..

    ReplyDelete
  12. மனோ.....

    மூத்த பதிவர்களின் அறிமுகங்கள்....
    இதுல நீரும் இல்ல வரணும்....!!!!!

    நேத்திக்கே அறிமுகம் என்றாலும்....இன்னிக்கும்
    உம்மை நான் அறிமுக படுத்துகிறேன்.....

    மூத்த பதிவர்களின் அறிமுகங்கள்....

    மனோ....நெஞ்சில்..மனோ...இவரையும் சேர்த்துக்குங்க....
    வாசகர்களே...!!!!!!!

    (கொய்யால சாவு...!!!)

    ReplyDelete


  13. முதற்கண் வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றதற்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்! அத்துடன் என்னையும் அறிமுகப் படுத்தி பெருமை சேர்த்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

  14. //இவர் அருகில் இருந்தால் பயமே இருக்காது, தாயின் அருகில் இருப்பது போன்றே எனக்கு தோன்றும்//

    அடுத்த அ.கி.மு.க. தலைவர் ஆபீசர்தான்னு சொல்லுங்க!!

    ReplyDelete
  15. மனோ,

    வலைச்சர ஆசிரியராக "பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    முதல் ரவுண்டிலேயே என்றும் "யூத்" பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    //இவர் அருகில் இருந்தால் பயமே இருக்காது, //

    நீங்கலாம் பக்கத்திலே இருந்தா அவருக்கு தானே பயம் வரும்,ஆனாலும் வெளியில காட்டிக்காம சிரிச்சா மாதிரி மெயிண்டெயின் வேற செய்யனும், ரொம்ப கஷ்டம் தான் :-))

    ReplyDelete
  16. அறிமுகத்துக்கு நன்றி மனோ!உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது.நிச்சயம் மீண்டும் எழுதுவேன்!
    தொடரும் அறிமுகங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  17. மூத்த பதிவர்களின் அறிமுகம் அருமை!கக்கு மாணிக்கத்தின் சமீபத்திய புகைப்படம்(நரைத்த மீசையுடன்) கிடைக்கவில்லையா!

    ReplyDelete
  18. அனைவர்களும் தெரிந்த அறிமுகங்கள்.

    மூத்த பதிவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  19. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் பாஸ்
    பலர் அறிந்தமுகங்கள் தான்

    ReplyDelete
  20. கலக்கல் அறிமுகங்கள்...வலைத்தள ஜாம்பவான்களின் கோர்வை...நச்...நன்றி மனோ அண்ணே!

    ReplyDelete
  21. விக்கி, நக்கீரன் மாதிரி சில மூத்த பதிவர்கள் விடுபட்ட மாதிரி இருக்கே?

    ReplyDelete
  22. மூத்த பதிவர்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம்,அருமையான அறிமுகம் மனோ என்னைப்போன்ற புதுமுகங்களுக்கு.

    ReplyDelete
  23. அனுபவ அறிமுகங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  24. சென்னை பித்தன் said...
    அறிமுகத்துக்கு நன்றி மனோ!உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது.நிச்சயம் மீண்டும் எழுதுவேன்!
    தொடரும் அறிமுகங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்//

    பெரிய சந்தோஷமே எனக்கு இதுதான் தல, நீங்க வரணும் பழைய சென்னை பித்தனாக...நன்றி...!

    ReplyDelete
  25. மகிழ்ச்சி. வாழ்த்துகள் மனோ.
    அறிமுகம் செய்த்தற்கு மிக்க நன்றி. இனிமேல் வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும். சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். நெல்லை சந்திப்பு இன்னும் நெஞ்சில் நிற்கிறது.

    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. அருமையான அய்யாக்களின் அறிமுகங்கள் நகைச்சுவை அம்மணியின் தலைமையில் வெகு சிறப்பு.

    திருமதி கோமு அவர்களின் பதிவு படித்துவிட்டு சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

    செவ்வாய்கிழமையை சிரிப்புடன் தொடங்கியதற்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்!


    ReplyDelete
  27. மூத்தவர்கள் பலரையும் பவனி வரவிட்டு விட்டீகள் தொடரட்டும் பணி !

    ReplyDelete
  28. முன்னவர்கள், மூத்தவர்களை அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  29. புலவர் ஐயா தவிர மற்றையோர் எனக்கு புதியவர்கள்.நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகள் அனைத்தும் பிரமாதமாக உள்ளது.
    இனி எவருக்கும் வேண்டாம் பாரத ரத்னா என்ற பதிவு என்னை மிகவும் கவர்ந்தது

    ReplyDelete
  30. நல்லது...

    இன்னும் நல்லதா நடக்கட்டும்...

    ReplyDelete
  31. அறிமுகங்களா இவை !!
    அறிய வேண்டிய நூலகங்கள் இவை.

    அது சரி ...
    அருவா கையிலே இருக்கா இல்லை தூக்கி போட்டாச்சா ?
    சொன்னாத்தானே
    சுதந்திரமா மனசு நிம்மதியா
    கருத்து சொல்லலாம் !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  32. இந்த வயதிலும் எழுதும் இவர்களை போற்றுவோம்

    ReplyDelete
  33. மனோ!வலைச்சரத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

    வலைச்சர அறிந்த முகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. நான் பிறகு வருகிறேன்........மன்னிக்கவும்.....

    என் நிலைமை அப்படி.............!!!!!!!!!!!!!

    ReplyDelete
  35. அண்ணனை பஹ்ரைன் வந்தும் காண முடியவில்லை .... வலைசரத்தில் அண்ணனை காண்பது மிகவும் சந்தோசமாக உள்ளது....

    அந்திசாய திங்களொன்றில் கூடி அளவிலா
    தடையெலாம் தாண்டி தவழ்ந்து மகிழ்ந்தோம்
    நிலவின் மடியில் களித்து கதைபுரண்டு
    காவியத்துள் நீளுதெங்கள் நட்பு.......

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் சகோ சிறப்பாகத் தொடரும் தங்கள் பணிக்கு !
    இன்று அறிமுகமான அனைத்து வலைத்தள நட்புகளுக்கும்
    என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  37. இணையம் புளங்கத் தொடங்கி 20 வருடங்களாகியும் இன்னும் அரிவரியில் குந்திக் கொண்டிருப்பது போலவே உணருகிறேன்...இத்தனை ஜாம்பவான்களின் அறிமுகப்படலத்தைப் படிக்கும் போது....கோமதி அக்கா என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பவர் எங்களோடு முகநூலிலும் நட்பு வட்டத்துக்குள் இருப்பவர் தானே??? ஆகா அவராயின் மகிழ்ச்சி..ஏன் எனில் அவருடைய நகைச்சுவையான நிலைத்தகவல்கள் பலவற்றுக்கு நான் முகமறியாத ஒரு ரசிகை...!! :)

    ReplyDelete
  38. அய்யாக்கள் அனைவரின் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன்...
    அனைவருக் மிகச்சிறப்பானவர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete