வியாழனின் அதிரடி பதிவர்களையும் சந்திப்போம் வாருங்கள்....
மெட்ராஸ் பவன் சிவகுமார், என் இனிய நண்பன், கலாயிப்பதில் வல்லவர் என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர், இவரும் என்னை எப்படியாவது சென்னை வரவைத்துவிட வேண்டும் என்று மிகவும் வருந்தி அழைப்பது உண்டு, எனக்குதான் நேரம் சமயம் சரியாக அமையவில்லை, போனில் இவரோடு பேசினால் என் போன் பேலன்ஸ் அவுட்டாகிவிடும் அளவுக்கு நான்ஸ்டாப்பாக பேசுவார், அவர் அம்மாவும் இவரைப் போலவே மிகவும் அன்புள்ளவர்கள், நான் போனில் அவர்களிடம் பேசியது என் பாக்கியம்...!
இவரது எழுத்துகள் அதிகமதிகம் சினிமா பற்றிதான் இருக்கும் இருந்தாலும், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக தனது சொந்த அனுபவங்களை எழுதி வந்தார் மிகவும் உருக்கமான பதிவுகள் அவை, அதனால் ஒரு மனிதனாவது மனம் திருந்தி இருந்தால் அந்த புண்ணியம் சிவகுமாருக்குதான், படித்துதான் பாருங்களேன் அவர் பதிவுகளை...!
------------------------------ ------------------------------ -------
நண்பன் செங்கோவி, சொற்களை தொலைக்க வந்தேன், சொல்லற சும்மா இருக்க என்று பதிவு எழுதி இருக்கிறார், இவர் பதிவுகளில் இலக்கியங்கள் ஆங்காங்கே வந்து எட்டிப்பார்த்தாலும், எளிமையாக எழுதுவதில் கில்லாடி, அது அரசியலாகட்டும், விமர்சனமாகட்டும், தப்பு செய்தவன் யாரா இருந்தாலும் இவரிடம் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது பதிவுலக நியதி...!
http://sengovi.blogspot.com/ 2013/02/blog-post_11.html
------------------------------ ------------------------------ -------
பிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்னும் தலைப்பில் எழுதி வரும் தம்பி பிரபாகரன், ஆளை போட்டோவில் பார்த்தால் எதோ அந்நியன் கெட்டப்பில் இருந்தாலும் ரொம்ப ரொம்ப சாப்ட்டான ஆளுன்னு சொல்லலாம், ஆனால் எழுத்தில் அதிரடி தூள் பறக்கும்...
பயணங்கள் தொடர், சுற்றுலாக்கள் போனதின் பதிவுகள், அங்கேயுள்ள அழகும், அநியாயங்களையும் அட்டகாசமாக சுட்டி காட்டுபவர், சினிமா விமர்சனங்களும் அடிக்கடி எழுதுகிறார், அது என்னவோ எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் மண்டை காஞ்சாலும் போயி பார்த்து விடுவது இவரின் இயல்புன்னு நினைக்கிறேன், ஒரு அந்தமான் பிரயாணம் பற்றி எழுதி இருக்கார் போயி படிங்க பார்ப்போம்...!
------------------------------ ------------------------------ ------
கோகுல் மனதில் கோகுல், தோன்றதை எழுதுவோம், பிடிக்கிறதை படிப்போம் என்றும், சொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல் என்று பதிவுகள் எழுதுகிறார், படிக்கும் மாணவர்கள் விரும்பிதான் படிகளில் தொங்குகிரார்களா என்று பொங்கி இருக்கிறார் வாங்க பிடியுங்க படியுங்க...!
------------------------------ ------------------------------ ----
சத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ், என சரண்டர் ஆகி அஞ்சாசிங்கம்னு போரையும் வச்சிகிட்டு பொங்கி பாய்ந்து வரும் நண்பன் செலவின் ஆனந்த்...நேரில் நாங்கள் பார்த்திராவிட்டாலும்,போனில் நாங்கள் பேசாவிட்டாலும் எங்கள் அலைவரிசைகள் எப்போதும் ஒருப்போலவே செயல்படுவது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருக்கும்...!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த [[காதலர்கள்]] ஒரு கொடுமையை, உண்மை சம்பவத்தை கண்டு பொங்கி எழும்பியதை சொல்லி இருக்கார் படியுங்கள் சென்னை காதலர்கள் உஷாரடையுங்கள்...!
------------------------------ ------------------------------ -------
நான் ஒரு எழுத்தாளனும் அல்ல, கவிஞனும் அல்ல, மொழி ஆர்வலனும் அல்ல ஆனால் நேர்மையாக வாழத்துடிக்கும் ஒரு கிராமத்தான் என்று மம்பட்டி தூக்கி கிளம்பி இருக்கிறார் நண்பன் சதீஷ்...
சங்கவி என்ற பெயரில் அருமையாக எழுதி கலக்கி வருகிறார், அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் மசாலாபோல இவர் பதிவுகள் முக்காலும் பல்சுவைகளின் களஞ்சியமாகவே இருக்கும், இடையிடையே கவிதைகள் எழுதி அசத்துவார், பெண்களின் அழகை மிகவும் ரசிப்பவர் என்பது அவர் எழுத்துகளிலும், கவிதைகளிளும் நன்றாகவே புலப்படும், பேஸ்புக்கிலும் கலக்கி வருகிறார்...!
------------------------------ ------------------------------ -----
என்ன ஆண்கள் மட்டும்தான் அதிரடி பண்ணுவாய்ங்களா ஏன் நாங்க பண்ண மாட்டோமான்னு கலத்தில் குதித்து நிற்பது எங்கள் தங்கச்சி ராஜி, காணாமல் போன கனவுகள் என்று பதிவுகள் எழுதிட்டு இருக்காங்க, அன்பான, கோபக்கார தங்கச்சியும் பாசக்கார தங்கச்சியும் எனக்கு இவங்க...!
பலவிதமான காமெடி பதிவுகள் கவிதைகள் நாட்டு நடப்பு என்று கலந்து கட்டி கட்டு சோறாக தருகிறார்கள், வாங்க நீங்களும் போயி சற்று ருசித்துப் பாருங்கள்...!
பழத்தை சொல்லுங்க உங்களைப் பற்றி ஒன்று சொல்லுறேன்'ன்னு புதுசா ஒரு ஜோதிடம் சொல்றாங்க.
http://rajiyinkanavugal.blogspot.com/2012/03/blog-post_21.html
----------------------------------------------------------------
மதுரைத்தமிழன், "அவர்கள் உண்மைகள்" என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார்...!
வீட்டுக்கதவை திறக்காமலே உங்கள் வீட்டுக்குள் நுழையும் ஆபத்து என்று பதிவு எழுதி நம்மை உஷார் படுத்துகிறார், வாங்க என்னான்னு அதையும் தெரிந்து கொள்வோம்...!
-----------------------------------------------------------------
வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதும் நண்பர் இவர், பஹ்ரைனில்தான் இருக்கிறார் இருப்பினும் நாங்கள் சந்திக்க இயலவில்லை, எங்கே இருக்கிறார் என்றும் இப்போது தெரியவில்லை...!
இவர் வரலாற்று பதிவுகளை நமக்கு சொல்லித்தருகிறார், உலகின் முதல் பல்கலைகழகம் தக்சசீலா அழிந்துபோன வரலாறு, உலகத்திலேயே முதன் முதலாக ராக்கெட்டை கண்டுபிடித்தது திப்பு சுல்தான்தான் என்று நாமறியாத பல விஷயங்களை சொல்கிறார், வாருங்க அவரையும் போயி பார்த்துருவோம்...!
---------------------------------------------------------------
நண்பரும் வாத்தியுமான ராஜா, என் ராஜபாட்டை என்னும் தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார், திருநெல்வேலியில் ஆபிசரின் வீட்டு விஷேசத்திற்கு இவர் வந்தபோது இவரோடு நெருக்கமாக அளவளாவ முடிந்தது, மிகவும் அமைதியானவராக இருக்கிறார் அதே வேளையில் கிண்டல் பண்ணினால் மவுனமாக சிரிக்க வைப்பார்.
எழுத்து என்று வந்துவிட்டால், எழுத்து தப்பாக போனாலும் பரவாயில்லை என்று போட்டு கும்மி எடுத்து விடுவார், சினிமா தகவல்கள், நமக்கு பிரயோசனமான சில தகவல்களை நமக்கு சேர் செய்தும் காட்டும் பதிவர்...!
வாங்க அங்கே போயும் நாலு அப்பு அப்பிட்டு வருவோம் நம்ம வாத்தியை.
அறிமுகங்கள் வருவார்கள் அருவாள் சகிதம்...
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !....அருமையான தேர்வு மேலும்
ReplyDeleteசிறப்பாகத் தொடரட்டும் சகோ ...நன்றி அப்கிர்வுக்கு .
அதிரடி வியாழன்
ReplyDeleteஉண்மையிலேயே அதிரடியாக இருக்கிறது...
பதிவுகளில் அதிரடியாய்
கருத்துக்களை தூவிவரும்
சிறந்த பதிவர்களின்
அறிமுகங்கள் இன்று...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
எல்லா பதிவர்களும் அருமையான பதிவுகளை தந்துள்ளார்கள் என்பதை இந்த வலைசரதில்தான் அதுவும் நீங்கள் குறிப்பிட்ட பின்புதான் அறிய முடிகிறது. உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதனி முத்திரை பதித்த வலைப் பதிவர்கள். பொருத்தமான குறிப்புகளுடன் சிறப்பான அறிமுகம்.
ReplyDeleteஅனைவருமே அறிந்த அதிரடியான பதிவர்கள்... அருமை...
ReplyDeleteஅனைவருமே அதிரடி நண்பர்கள்... வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
ReplyDeleteஎலோறும் நல்ல நண்பர்கள் தான்
ReplyDeleteசெங்கோவி பாஸ் எழுதிய மன்மத லீலைகள் தொடரை மறக்கமுடியுமா? பதிவுலக வரலாற்றில் ஒரு தொடருக்கு வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது அந்தத்தொடராகத்தான் இருக்கும்
அப்பறம் கோகுல் அவரின் பதிவுலக ஆரம்பகாலம் தொட்டு என் பதிவுலக ஆரம்பகாலம் தொட்டு ஒன்றாக பயணித்திருக்கின்றோம் பதிவுலகில்.
எப்போதும் ஒரு சமூக அக்கறையுடன் கூடிய பதிவுகளை சுவாரஸ்யமாக தருவதில் கோகுலுக்கு நிகர் அவர்தான்
அருமையான அறிமுகங்கள்
அதிரடி வியாழனில் ,அறிமுகமான அனைவருமே அதிரி புதிரியான பதிவர்கள் தான், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமெட்ராஸ் பவன் எதைப்பத்தி எழுதினாலும் அதில் நகைச்சுவை மிளிரும்.
பிலாசபி, அனைத்து வகையிலும் குசும்பு காட்டுவார்,அஞ்சா ஸிங்கம் கொஞ்சமாக எழுதினாலும் கொலைமிரட்டலாக கலக்கிடுவார் :-))
சங்கவி யதார்த்தமாக பதார்த்தம் சுடுவதில் வல்லவர் :-))
மற்றப்பதிவர்களின் பதிவெல்லாம் படிச்சிருக்கேன், தொடர்ந்து படிக்க முடிவதில்லை.
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி . . .நன்றி. . .பெரிய தலைகளுடன் இந்த சிறியவனையும் சேர்த்தமைக்கு. . .
ReplyDeleteதொடர்ந்து அருவாளுடன் கலக்குங்கள். . .
ReplyDeleteமனோ சார் மதுரை சரவணன் அவர் ஆசிரியர் அவர் மதுரையில் இருந்து பதிவுகள் எழுதி வருகிறார் அவரின் வலைதள முகவரி http://veeluthukal.blogspot.com/
ReplyDelete. நான் மதுரைத்தமிழன் என்ற புனைப் பெயரில் "அவர்கள் உண்மைகள்" http://avargal-unmaigal.blogspot.com/ என்ற வலைத்தளத்தை அமெரிக்காவில் இருந்து எழுதி வருகிறேன் . 2 பேரும் ஒரே ஆள் அல்ல
நெல்லை சந்திப்பை மறக்க முடியுமா??? சிபி,செளந்தர்,நான்,நீங்க இனைந்த்து வேடந்தாங்கள் கருனை இன்டர்காமில் கலாய்த்ததை மறக்கமுடியுமா??
ReplyDeletesuperb introductions
ReplyDeleteAvargal Unmaigal said...
ReplyDeleteமனோ சார் மதுரை சரவணன் அவர் ஆசிரியர் அவர் மதுரையில் இருந்து பதிவுகள் எழுதி வருகிறார் அவரின் வலைதள முகவரி http://veeluthukal.blogspot.com/
. நான் மதுரைத்தமிழன் என்ற புனைப் பெயரில் "அவர்கள் உண்மைகள்" http://avargal-unmaigal.blogspot.com/ என்ற வலைத்தளத்தை அமெரிக்காவில் இருந்து எழுதி வருகிறேன் . 2 பேரும் ஒரே ஆள் அல்ல//
சாரி நண்பா பெயர் மாற்றம் வந்து விட்டது, ஆனால் நான் அறிமுகப்படுத்தியது "அவர்கள் உண்மைகள்" பதிவுகள்தான். ரைட்டு, மதுரைத்தமிழன்தான் மதுரை சரவணன் என்று வந்துவிட்டது இப்போதே மாற்றி விடுகிறேன் நன்றி நண்பா...
பலே பலே...ஆல் மிரட்டல்ஸ் ஆன் லைன்....கலக்கிட்டீங்க மனோ அண்ணே!
ReplyDeleteநன்றி மக்கா!
ReplyDeleteசிவகுமார் பிறந்தநாளன்று அவருக்கு நல்லதோர் பரிசு.
நன்றி மக்கா ..நாம் ஒரு முறை போனில் பேசி இருக்கிறோம் ..
ReplyDeleteவிக்கி தக்காளி நெல்லை வந்திருந்த போது நான் அவருக்கு போன் போட்டு அதை நீங்கள் எடுத்து பேசினீர்கள்...................
அண்ணனுக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகத்திற்கு மிக்க நன்றி மனோ அண்ணே, நிச்சயமாக நாம் ஒரு நாள் சந்திப்போம்!
ReplyDeleteஏனைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!
நமது சகாக்கள் குறித்து எழுதியதற்கு நன்றி அண்ணே. இந்த ஆண்டாவது சந்திப்போம் என நம்புகிறேன்.
ReplyDeleteஅதிரடி அறிமுகங்கள்.
ReplyDeleteஅதிரடி வியாழன் அறிமுகங்களுக் -காகத்தான் முதல் நாளே அருவாளை தூக்கினீங்களா?
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களிலும் சிலரைத் தெரியும். சிலரைத் தெரியாது.
எல்லோருக்கும் வாழ்த்துகள்.
நிதானமாகப் படிக்க வேண்டும்.
ராஜியின் கனவுகள் இணைப்பை சரி செய்யுங்கள் ப்ளீஸ்!
ReplyDeleteRanjani Narayanan said...
ReplyDeleteராஜியின் கனவுகள் இணைப்பை சரி செய்யுங்கள் ப்ளீஸ்!//
அய்யோ மேடம், எம்புட்டோ முயற்சி பண்ணிப் பார்த்தும் ராஜி தங்கச்சி லிங்க் ஒப்பன் ஆகமாட்டேங்குது ஸோ அந்த லிங்க மாத்திரமே கொடுக்க முடிந்தது, கூகுள் சர்ச்'ல இந்த லிங்க போட்டீங்கன்னா தங்கச்சி பிளாக் தெரிஞ்சிரும், ஸாரி மேடம்.
அதிரடிப்பதிவர்களிற்கு இனிய வாழ்த்து...
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மிக நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteநான் பின் படிக்கும் நண்பர்கள்செங்கோவி,கோகுல்,அஞ்சாசிங்கம்,சிவகுமார்,பிரபாகர்.ராஜி,அவர்கள் உண்மை பலர் இன்று அறிமுகம் ஆனதில் மகிழ்ச்சி தொடரட்டும் அருவாள் பயணம்:)))
ReplyDeleteஆ...சூப்பரு!
ReplyDeleteவியாழன் சிறப்புறுகின்றது.
ReplyDeleteஅதிரடிப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteமனோ(அண்ணா)
இன்று அறிமுகம் கண்டஅனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அதிரடிப் பதிவர்கள் அறிமுகம் அசத்தல்! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteஅதிரடி வியாழனில் நல்ல அறிமுகங்கள்....
ReplyDeleteதொடரட்டும் பதிவுகள்.
எவ்ளோ பேர்...இத்தனை பேரோட பதிவுகளையும் தவறாமல் படிக்கிறீங்களா மனோ சார்?? எப்படி தான் உங்களுக்கு நேரம் கிடைக்குதோ??
ReplyDeleteசிலர் நான் விரும்பி படிக்கும் தளத்தின் நண்பர்கள்... சிலர் புதியவர்கள்....
ReplyDeleteஅருமையான அறிமுகம்...
வாழ்த்துக்கள் அண்ணா.
மக்கா அறிமுகத்திற்கு நன்றி..
ReplyDeleteஇந்த அதிரடி வியாழனில் வந்த நண்பர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் எழுத வந்தவர்கள் என்பது சிறப்பு...
இந்த அறிமுக நண்பர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .சங்கவியையும், ராஜாவையும் தெரியும் மற்றவர்களை தெரிஞ்சிக்கிறேங்க.... நன்றி
ReplyDelete
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
http://samaiyalattakaasam.blogspot.com
jaleelakamal