Friday, March 1, 2013

கவிதைகளின் விடி"வெள்ளி" நட்சத்திரங்கள், சமையல் அங்காடி நட்சத்திரங்கள்...!


அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை சிறு வயதிலிருந்தே வார இதழ்களை வாசிப்பு சாலைகளில் சென்று வாசித்ததின் விளைவோ அல்லது என் ஜீன்'லையே உள்ளதோ என்னமோ தெரியவில்லை, கவிதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்...!

நான் அறிமுகப்படுத்தும் கவிஞர்கள், கவிதாயினிகள் ஒருவருக்கொருவர் சற்றும் குறைந்தவர்கள் கிடையாது என்பதே என் அபிமானமும் கருத்தும், வாங்க கவிதை மழையில் நனைவோம்....

வானம் வெளித்தபின்னும் "குழந்தை நிலா" ஹேமா அவர்களின் கவிதைகள்....

பலவிதமான கவிதைகளில் களம் இறங்கி கலக்கும் தமிழ் மங்கை, தமிழ் இவர் கையில் பரமபதம் ஆடி மகிழ்கிறது என்றே சொல்வேன், தேன் தமிழுக்கு மகுடம் சேர்க்கும் சகோதரி, வாங்க போயி கவிதையில் குளிப்போம்....



--------------------------------------------------------------------
அம்பாளடியாள்  கவிதைகள்...

கண்ணீர்கள் ஏனடா தமிழா, நாடாண்டவன் இன்று அடிமையாக போனோமே...என்றும், தமிழனின் வீரம் காதல் பாசம் பரிதவிப்பு ஏமாற்றம் என்பவைகள் பற்றி கண்ணீர் மல்க கவிதைகள் வடித்து வருகிறார், வாங்க நாமளும் போயி கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம்...
---------------------------------------------------------------------
கரை சேரா அலை' அரசனின் கவிதைகள்...இவர் கவிதைகள் சிலதுகள் ஹைக்கூ வகையை சார்ந்தவையாகவே இருக்கிறது, கொஞ்சமாக எழுதினாலும் கடுகைப் போல காரம் நிறைந்தவைகள்...முடிவுகள் சுபமாக இருக்கும்....வாங்க போயி முத்து குளிப்போம்...
--------------------------------------------------------------------
வசந்த மண்டபம் புலவர் மகேந்திரனின் கவிதைகள்....எனக்கு கேசியோ வாசிக்கத் தெரியும் என்பதால் இவரின் நாட்டுப்புறப் பாடல்களை தாளம் போட்டு நான் படிப்பது [பாடுவது] உண்டு அம்புட்டு சுவாரஸ்யம்...! பேஸ்புக்கிலும் கலக்கி வருகிறார்.

---------------------------------------------------------------------
கவிதைவீதி, நண்பன் சவுந்திரபாண்டியன் கவிதைகள்...! அற்புதமாக கவிதைகள் இயற்றி மனதை லேசாக்கும் நண்பர் இவர்...!
---------------------------------------------------------------------
தமிழ் காதலன்" என்ற பெயரில் கவிதைகள் எழுதும் என் நண்பன், தமிழுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீராத தாகம் கொண்டவர், இப்போது அவர் ஊரில் நூலகங்கள் திறந்து சேவைகள் செய்து வருகிறார்...இவர் கவிதைகள்  எனக்கு தமிழ் அறிவை ஊட்டும் தெளிதேன் விருந்து...வாங்க கொஞ்சம் தமிழ் தேன் சாப்பிடலாம்...!
-------------------------------------------------------------------------
நண்பன் கலியுகம்"தினேஷ் கவிதைகள், இவரும் இங்கே பஹ்ரைனில்தான் இருக்கிறார், ஊரில் இருந்து வந்தவரை கூட பார்க்க நேரமில்லாமல்தான் இருக்கேன், நண்பா மன்னிச்சு...

இவர் கவிதைகளில் உயிர் மிகுந்து காணப்படுவது எனக்கு நல்லாவே உணர்வு உண்டாக்கும், ஆனால் லேசில் எனக்கு புரியாது, சில நேரங்களில் நண்பன் தமிழ் காதலன் எனக்கு விளக்கம் சொல்லி தந்தது உண்டு, உங்களுக்கு நல்லாவே புரியும் வாங்க வந்து படியுங்க...
-------------------------------------------------------------------------
தபூ சங்கர் கவிதைகளுக்கு..... நான் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை இருப்பினும், என் உயிரில் கலக்கும், கலந்த அந்த கவிதைகள் என் ரத்தநாளங்களில் புது ரத்தம் பாய்ந்தோட செய்வதுமல்லாமல் என்னை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள வைக்கும் கவிதைகள், படிக்காதவிங்க வாங்க வந்து படியுங்கள் பத்து வயசாவது குறஞ்சிரும் உங்களுக்கு....
----------------------------------------------------------------------------
என் தங்கச்சியின் "ரேவா கவிதைகள்" புரியாத வாழ்க்கைக்குள், புதைந்து கிடக்கும் அன்பின் புதையலை, அன்போடு அனுபவிப்பவள்...என்று கவிதைகள் எழுதுகிறார், இந்த சின்ன வயசுலேயே தேன் தமிழை தன் சுண்டு விரலில் மாட்டி வைத்து, கவிதை அபிநயம் நடத்தும் மந்திரம்தான் எனக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம், வாங்க அன்பின் காதலின் அழகு கவிதைகள் [படிப்போம்] பார்ப்போம்...!
-----------------------------------------------------------------------------
தேனம்மை லட்சுமணன் "சும்மா" என்று எழுதுகிறார் இவர் கவிதைகள் அநேக வாராந்தரிகளில் வந்தவண்ணம் இருக்கிறது, இவர் கவிதைகள் மட்டுமில்லை, சிறு கதைகள்  இன்னும் வாசகர்களுக்கு தேவையான தொழில் நுட்ப தகவல்கள், ஷேர் மார்கெட்டுகள், பேங்க் சம்பந்தபட்ட நிறைய விஷயங்களை தருகிறார் வாங்க போயி பார்த்துட்டு வரலாம்...!
-------------------------------------------------------------------------------
வாங்க இனி சமையல் ரா[ஜா]ணிகளைப் பற்றி பார்ப்போம்....

ஆட்டு குடல் கறி சமைப்பது எப்படி என்று சொல்லித்தருகிறார் "கோவை நேரம்"ஜீவா...

சாப்பாடு மட்டுமில்லை இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி சொல்லி தருகிறார் இவருடைய புத்தகங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன...!
----------------------------------------------------------------------------------
சமைத்து அசத்தலாம் வாங்க என்று அழைக்கிறார் ஆஸியா ஓமர், வெஜ் நான்வெஜ் அயிட்டங்களின் பல்கலைகழகம் இவருடைய சமையல் பதிவுகள்....படித்து விட்டு சப்பு கொட்டிகிட்டே போயிகிட்டு இருப்பேன், என்ன செய்ய நான் இருக்கும் இடம் அப்பிடி ஆகிபோச்சு [சமைக்க தெரியாது சொல்லி தந்தாலும் மண்டையில ஏறாது ஹி ஹி]
வாங்க ருசி பார்த்து விட்டு வருவோம்...!
-----------------------------------------------------------------------------
எல்லா புகழும் இறைவனுக்கே என்று எழுதி வருகிறார் ஸாதிகா, இவர் சமையல் ராணி மட்டுமல்ல, கவிதைகளின் சங்கமம், பலவகையான பல்சுவைகளை இவர் எழுதிய வண்ணம் இருக்கிறார், இப்போது ஆளை காணோம் கொஞ்சநாளாக.....வாங்க தேடிபிடிச்சு கொண்டு வருவோம்...!
-------------------------------------------------------------------------------
எஞ்சலின், காகிதப் பூக்கள் என்ற தலைப்பில் எழுதி வருகிறார், இந்த சமையல் ராணி அநேக சமையல் குறிப்புகள் மட்டுமல்லாமல், எம்பிராயிடரி பற்றியும், சொந்தமாக நாம் கிப்ட் பொருட்கள் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் வாங்க போயி படிக்கலாம்...!
--------------------------------------------------------------------------------
எஸ். மேனகா, சஷிகா என்ற பெயரில் சூப்பர் சூப்பரான சாப்பாட்டு வகைகளை சொல்லித்தருகிறார்...சமையல் அரசி சாப்பிட சாப்பிட பசியெடுக்கும் கைவண்ணம் இவர்களிடம் இருக்கிறது காரணம் இவர்கள் சமையல் பார்த்து [படித்து] ஒருநாள் என் வீட்டம்மாவிடம் செய்து தரும்படி கேட்டேன்...

செய்து தந்தார்கள், நானும் என் குழந்தைகளும்  விரும்பி சாப்பிட்டோம், இப்போதும் குழந்தைகளுக்கு மேனகாவின் சமையல் குறிப்புகள்தான் சமைக்கப்படுகிறது என்று என் வீட்டம்மா அடிக்கடி சொல்வதுண்டு...!

வாங்க அந்த சாப்பாட்டையும் போயி ருசி பார்த்துவிட்டு வருவோம்...!
-----------------------------------------------------------------------------------
என் இனிய இல்லம்" ஃபைஸா காதர், சமையல் மகாராணி, சின்ன சின்ன கிப்ட்'கல் அலங்கார பொருட்கள் நாம் உபயோகிக்கும் பொருட்களிலேயே எப்படி செய்வது என்பது பற்றி சொல்லித் தருகிறார் வாருங்கள் அவர்களையும் போயி நலம் விசாரிக்கலாம்...!

இன்னும் நிறையபேர் இருக்காங்க சொல்றேன்....


34 comments:

  1. ஹேமா அக்கா பக்கமும் மகேந்திரன் அண்ணா பக்கமும் அடிக்கடி போவேன். இப்பதான் மற்றவர்களையும் அறிந்தாயிற்றே. விடுவோமா...

    ReplyDelete
  2. நீங்கள் இங்கே தந்திருக்கும் கவிதாயினிகளில் தேனக்கா என் அபிமானத்துக்குரியவர். தபுசங்கர் கவிதைகள் உங்களுக்குப் பிடிக்கலைன்னால் தான் அதிசயம். :) குழந்தை ஹேமாவின் கவிதைகளும் அற்புதமானவை...! சமையல் குறிப்பு பதிவராக இதுவரை தூயா அவர்களின் பதிவுகளைத் தான் அறிந்திருந்தேன்..இன்றைக்கு தான் தெரிந்தது இத்தனை பேர் சமையல் குறிப்பு எழுதி வருகிறார்கள் என்று...பயனுள்ள தகவல்கள் பரிமாறி இருக்கிறீர்கள் மனோ சார்..! நன்றி!!
    வாழ்த்துகளும் கூடவே... :)

    ReplyDelete
  3. என் ஃப்ரெண்ட் ஹேமா, தேனக்கா, தோழி அம்பாளடியாள், நண்பர்கள் அரசன், செளந்தர், நான் எழுத உந்துசக்திகளில் ஒருவரான வசந்த மண்டப ம்கேன், காதலில் தோய்ந்து கவிதை படித்து அசத்தும் தபூசங்கர் இப்படி எனக்கு நெருங்கியவர்களைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கலை. ரேவா கவிதைகளும், தினேஷ் அவர்களையும் புதிதாக தெரிஞ்சுக்கிட்டேன் மனோ. சமையல் விஷயத்துல... தங்கச்சி ஸாதிகாவும், மேனகா என்கிற சஷிகாவும் நான் அறிந்தவர்கள். வெள்ளியன்று அருமையான அறிமுகப் பதிவுகள். அனைவருக்கும் மனம் நிறைய நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. அருமை... தெரியாதவர்களையும் தெரிந்துகொண்டேன்...

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள். அத்தனை பேருமே நான் அடிக்கடி வாசிப்பவர்கள் எனபதில் கூடுதல் மகிழ்ச்சி எனக்கு.

    ReplyDelete
  6. அட கவிதையும், சமையலும் சேர்ந்து இன்று சற்றே மணம் தூக்கலாய் ஒரு பகிர்வு!

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. இனிய வணக்கம் நண்பர் மனோ...
    கவிக்குயில்கள் மத்தியில் என் அறிமுகமும்...
    மகிழ்ச்சியான தருணம்...
    நன்றிகள் பல..
    அறிமுகம் செய்யப்பட்ட அத்தனை கவிக்குயிலகளும்
    தேனிசைக்கும் பாடல்கள் புனைபவர்கள்...
    ...
    சமையல் ராணிகளில் இருவர் மட்டுமே
    எனக்கு அறிமுகம்...
    மற்றவர்களை சென்று பார்க்கிறேன் நண்பரே...
    ...
    என்னை வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  8. நன்றி மனோ அண்ணா உங்களின் அறிமுகத்திற்கும் உற்சாகமான பாராட்டுதல்களுக்கும், இங்கிருக்கும் அத்தனை கவிதைக்கார சகோக்களும் வாழ்த்துகள்..சமையல் ரா(ஜா)ணிக்களுக்கும் தான்... அதோடு மனோ அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகளோடு வாழ்த்துகளும் :) வலைப்பக்கம் விட்டு வெகுவாய் விலகியிருந்தாலும் மீண்டும் மீண்டும் பயணப்படுகின்ற உந்து சக்தி இங்கிருந்தே கிடைக்கிறது.. புதிய சகோதரர்கள் இன்றைய அறிமுகத்தில் கிடைத்திருக்கிறார்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி :) நன்றி அண்ணா

    ReplyDelete
  9. அண்ணா...

    அனைத்துக் கவிஞர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை கவிதை வடிப்பதில்... அதேபோல் சமையல் வலைப்பக்கங்களில் நீங்கள் சொல்லியிருக்கும் அனைவரும் ராணிகள்தான்....


    அழகான அறிமுகங்கள்... நறுக்... சுறுக்... அறிமுக வார்த்தைகள்..

    வாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கும்... உங்களுக்கும்.

    ReplyDelete
  10. அறிமுகப்படுத்திய அரிவாள் மனோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்...விரைவில் பார்சல் அனுப்பபடும்...

    ReplyDelete
  11. ஆஹா... மனம் கவர்ந்த... வயிறையும் கவர்ந்த பதிவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ.
    // இப்போது ஆளை காணோம் கொஞ்சநாளாக.....வாங்க தேடிபிடிச்சு கொண்டு வருவோம்...!// சகோ,பிளாகில் பதிவெழுதுவதில் நான் நீண்ட இடைவெளி இதுவரை ஏற்படுத்தியதே இல்லை.எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன்.நீங்கள் தான் வருவதில்லை.:(

    வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்புற ஆற்ற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //வசந்த மண்டபம் புலவர் மகேந்திரனின் கவிதைகள்....எனக்கு கேசியோ வாசிக்கத் தெரியும் என்பதால் இவரின் நாட்டுப்புறப் பாடல்களை தாளம் போட்டு நான் படிப்பது [பாடுவது] உண்டு அம்புட்டு சுவாரஸ்யம்.//

    நானு மட்டும் பாட மாட்டேனா என்ன..இதோ கேளுங்க ...
    இங்கன கேளுங்க

    subbu thatha.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  14. தெரிந்தவர்கள்,தெரியாடதவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்... தெரியாதவர்களின் தளங்களுக்கு கண்டிப்பாக வருகிறேன்... நன்றி அறிமுகப்படுத்தியமைக்கு...

    ReplyDelete
  15. கவிதை அறிமுகம், சமையல் அறிமுகம் என இன்று கதம்பமாய் மணத்தது பதிவு.

    ReplyDelete
  16. செவிக்கு (கவிதை) உணவும், வயிற்றுக்கு (சமையல் தளங்கள்) உணவும் கொடுத்து இன்றைய வலைச்சரத்தை அசத்திவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. இன்று அறிமுகமான அனைத்து உறவுகளுக்கும் உங்கள் அம்பாளடியாளின்
    நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் எங்கள் அருமைச் சகோதரர் உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் ! வாழ்த்துக்கள் மேலும் தேடல் இதமாகத் தொடரட்டும் ...

    ReplyDelete
  18. நெடுநாட்க்கள் நகர்ந்துவிட்டன வலையுலகில் உலா வந்து மீண்டும் உலவ துவங்கும் முன் நல்லதொரு அறிமுகம் தந்தீர் நன்றி அண்ணே.....

    அரியனை ஏறிட அனுதினம் ஆவலே
    ஆண்டார்க்கும் வீனேமாண் டோர்க்கும் அகனெழில்
    ஈடேறும் காலம் அமைத்தான் நாளுரைத்து
    எங்கும்யெனை ஏற்றுவித்தே தேற்றான்...........

    ReplyDelete
  19. சமையலும், கவிதையும் என அறிமுகங்கள் அருமை....

    நிறைய பேர் தெரிந்தவர்கள் தான்.

    ReplyDelete
  20. இன்று பெண்மணிகளும் எட்டிப் பார்த்துள்ளனர்.அனைவருக்கும் இனிய வாழ்த்து...+ Mano sarukkum...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. கவிதையும் ,சமையலும் ,சேர்ந்து கலகலப்பூ ஊட்டுகின்றது இன்றைய வலைச்சரம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete

  22. கவிதை உலகிலே ஹேமா, தேனம்மை லக்ஷ்மணன், ரேவா இவர்களைப்பற்றி என்ன சொல்ல?

    வானில் ஜொலித்திடும் நக்ஷத்திரங்கள் என்று சொன்னாலும் குறைத்து மதிப்பிடுவதாகவே ஆகும்.
    தங்கம், வைரம், புஷ்பராகம் என நவரத்தினங்களுக்கு ஈடாக என்று சொல்வோமா... ? போதாது.
    என்ன சொல்வது ?
    யோசித்தேன்.
    தேனம்மை என்றுமே வாக்தேவியாக தென்படுகிறாள். ஆக சரஸ்வதி தேவி.
    ரேவா அவர்களை அஷ்டலக்ஷ்மிகளில் ஒன்றான சௌந்தர்ய லக்ஷ்மியாக ( அவர்கள் கவிதைகளில்
    பார்க்கப்படும் அழகான சொற்களின் நளினத்திற்காக மட்டுமே இதைச் சொல்ல முடியும்) சொல்லலாம்.
    ஹேமா.. நீங்கள் குறிப்பிடும் ஹேமா வானம் வெளுத்தபின்னும் ஹேமா தானே !!
    அவர்கள் ச்க்தியே..
    பராசக்தியின் வடிவம்.
    அவர்கள் ஈழத்து தமிழர் வேதனையைச் சித்தரிக்கும் கவிதைகளைப் படித்துவிட்டு இன்னமும் சும்மாவே இருக்கிறதே தம்ழ் உலகம் ..
    வீறு கொண்டு எழ வேண்டாவோ ?
    அவரது பல கவிதைகளை நான் பாடி இருக்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  23. அறிமுகமான அனைவரது பக்கமும் சென்றிருக்கேன் ..ஓரிருவரைத்தவிர ..
    தபுசங்கர் சுட்டி அளித்தமைக்கு மிக்க நன்றி .

    அனைத்து சமையல் சூப்பர் ஸ்டார்களுடன் இந்த (என்னை ):))மைக்ரோ லிட்டில் ஸ்டாரையும் சமையல் ராணியாக பட்டம் சூட்டி விட்டதற்கு மிக்க நன்றி மனோ .

    ReplyDelete
  24. ஹையோ.. சூப்பர் சூப்பர் தாங்கஸ் நாஞ்சில் மனோ.. ஃபோட்டோவோட எல்லார் ப்லாகும் செம அழகா இருக்கு..

    நன்றி திண்டுக்கல் தனபாலன் மற்றும் வலைச்சரம்.

    அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வணக்கம்
    மனோ(சார்)

    இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. வெள்ளி நட்சத்திருங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. சகோதரர் சூரி சிவா அவர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றிகள் உங்களின் பாராட்டு என்னை வெகுதூரம் யோசிக்க வைத்து இவ்வரியை எழுதச்செய்தது, என் வலைபக்க வருகையையும் வருகைக்கு அடையாளமிட்ட உங்களின் பின்னூட்டத்தின் சாரத்தை பிடித்து வலைச்சரம் வந்தேன், வந்ததும் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியில் நெகிழச்செய்தது, விளையாட்டு போக்காய் ஏதோ எழுத ஆரம்பித்து இன்று என் எழுத்து என்னை வைத்து தன்னை எழுதிகொண்டிருக்கிறது என்பதை அவ்வவ்போது என் இவ்வலையுலக உறவுகளின் பாராட்டில் காண்கிறேன், மீண்டும் ஒரு உற்சாகத்துள்ளல் கொண்டு பயணமாவதற்கான இலக்கை காட்டிச்செல்கிற உங்களின் பாராட்டுக்கு நன்றி சகோ...மனோ அண்ணாவுக்கு மீண்டுமொரு நன்றி, தங்கைக்கு இப்படி ஒரு வாழ்த்துக்கு வாய்பேற்படுத்திக்கொடுத்ததுக்கும் வாய்பளித்த வலைச்சரத்திற்கும் நன்றி :)

    ReplyDelete
  28. கவிதை அரசர்களும், அரசிகளும், சமையல் ராஜா, ராணிகளுமாக வலைச்சரம் களை கட்டுகிறது.

    அறிமுகங்கள் பல தெரிந்த முகங்கள். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

    உங்களுக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  29. அறிமுகத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.அருமையாக போய்கிட்டு இருக்கு உங்க வாரம்.அசத்துங்க!

    ReplyDelete
  30. அறிமுகம் அத்தனையும் அருமை.வாழ்த்துக்கள் தொடருங்கள் தோழரே

    ReplyDelete
  31. நன்றி...

    அனைத்து அறிமுகங்களும் அழகு...

    ReplyDelete
  32. இதனை எல்லாம் படித்து விட்டு இரவு சமையல் அம்மா செய்யும் சப்பாத்தியை நினைத்தால்.....

    ReplyDelete
  33. இதனை எல்லாம் படித்து விட்டு இரவு சமையல் அம்மா செய்யும் சப்பாத்தியை நினைத்தால்.....

    ReplyDelete
  34. அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி சகோ!! உங்க வீட்டம்மாவுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்....வாழ்த்துக்கள்!!

    ReplyDelete