நாள் 4:
தொழில்நுட்ப பதிவர்களுக்கு
நன்றிகள்..!
பதிவுக்குள் செல்வதற்கு முன்
உங்களுக்கு எனது காதலர் தின வாழ்த்துக்கள்
! (காதலர்
தின சிறப்பு சரம் ஒன்றை இன்று பதிவிட இருக்கிறேன்)
வலைப்பூ
துவங்கியாயிற்று...எழுத ஆரம்பித்தாயிற்று...
வலைப்பூ எழுத ஆரம்பித்த ஆரம்ப
காலத்தில் திரட்டிகள் பற்றியோ, வலைப்பூ வடிவமைப்பை மாற்றுவது பற்றியோ எனக்கு
தெரியவில்லை..கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்..இன்னமும் கற்றுக்கொண்டு
இருக்கிறேன்.கற்பனைக்கு எல்லை இல்லை என்று சொல்வார்கள்,அது
போலவே கற்பதற்கும் எல்லை இல்லை.என்றைக்கு நாம் "நமக்கு தெரியும்" என்று
எண்ணி கற்று கொள்வதை நிறுத்த ஆரம்பிக்கிறோமோ? அன்றிலிருந்து
நாம் நம் அறிவை இழக்க ஆரம்பித்து விடுவோம். "அறிவு என்பதே அறியும் உணர்வு
தானே?"
சில பல ஆங்கில தளங்கள் வலைப்பூ
தொடர்பான தொழில்நுட்ப தீர்வுகளை சொல்லி கொடுக்கின்றன.இருந்தாலும் நம்ம
தாய்மொழியில் சொல்லி தருவது போல வருமா??
வலைப்பூ சம்பந்தமான அனைத்து
தொழில்நுட்ப விசயங்களுக்கும் சில தமிழ் வலைப்பூ நன்பர்கள் வலைப்பூ வழியாகவே வழி
சொல்லித்தருகிறார்கள் ...
நான்
தவறாது வாசிக்கும் சில தொழில்நுட்ப வலைப்பூக்கள் பற்றி இந்த பதிவில் கூறுகிறேன்..
இதில் உள்ள வலைப்பூக்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்...
பிலாகர் நன்பன் : அண்ணன்
அப்துல் பாஷித் அவர்களை தமிழ் வலைப்பூக்களின்
டாக்டர் என்றே கூறலாம்.இவரை தெரியாத பதிவர்களே இல்லை.இவரின் முயற்சிகள்
பாராட்டுக்குறியவை.இன்ட்லி Follower கேட்ஜட் தொல்லை ,உலவு ஓட்டு பட்டை பிரச்சனை என வலைப்பூவை தாக்கும் சகல பிரச்சனைகளுக்கும்
தீர்வு சொல்லும் அண்ணன் அப்துல் பாஷித் அவர்களுக்கு என் நன்றிகள்..!
வந்தே மாதரம்: தொழில்நுட்ப பதிவர்களில்
எனக்கு பிடித்த இன்னொரு பதிவர் வந்தேமாதரம் சசிக்குமார் அவர்கள்..
பொன்மலர் : பொன்மலர் அக்காவின் வலைப்பூ
ஹேக் செய்யப்பட்டுவிட்டது.அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பதிவுகள் தந்து
பதிவர்களுக்கு பயன் தரும் பொன்மலர் அக்காவின் ஆர்வம் ஆச்சரியகரமானது.
கற்போம்:
அண்ணன் பிரபு கிருஷ்ணா அவர்களின் தளம்.மாதாமாதம் கற்போம் தொழில்நுட்ப இதழ் ஒன்றையும் சிறந்த முறையில்
இலவசமாக தருகிற தளம்.இந்த இதழில் என்னுடைய கட்டுரைகள் சிலவும் வந்துள்ளன.எனது
கட்டுரைகளை தேர்ந்தெடுத்து பிரசுரித்த கற்போம் குழுவிற்கு எனது நன்றிகள்..
நன்றி... நன்றி... நன்றி...
அடுத்த பதிவு காதலர் தின ஸ்பெசல்
பதிவு...வாசிக்க தவறாதீர்கள்...
இவர்களை தெரியாதவர்கள் இல்லை என்றே எனலாம்... நால்வருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎனக்கு பிளாக்கர் நண்பனைக் கூட சமீபத்தில்தான் அறிந்து கொண்டேன். புதிதாக எழுதும் என் போன்றோருக்கு நல்ல வலைப்பகுதிகள் நன்றி
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி விஜயன் :-)))
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.!
ReplyDeletereply @ திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteநன்றி அண்ணா
ezhil said...
ReplyDeleteநன்றி எழில் அக்கா
Reply @ Prabu Krishna said... && Abdul Basith said...
ReplyDeleteஉங்களை போன்ற நபர்களால் தான் நான் வலைப்பூ துவங்கி எழுத ஆரம்பிததேன் நன்றி அண்ணன்மார்களே !