நாள்-3
வலைப்பூ தோட்டக்காரனாக மாறிய தருணம்...
எனக்கு முதன்முதலில் அறிமுகமாகி தொடர்
வாசிப்பிற்கு உள்ளான வலைப்பூக்கள் இரண்டு,(இன்னமும் தொடர்கிறது)...
இவர் பெயர் பாலாஜி,படைப்பாளி என்ற பெயரில் படைப்புகளை
படைக்கிறார்..இவர் ஓவியர்,கவிஞர்,எழுத்தாளர்,அனிமேசன் வல்லுநர் என பல பரிமாண படைப்பாளி .இவரது சலிப்பு தட்டாத எழுத்து
நடை எனக்கு மிக பிடிக்கும்.எழுத்து மற்றும் குரலாக எனக்கு தெரிந்த இவரை நேரில்
பார்க்கும் வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில்எனக்கு கிடைத்தது .
இவர் எழுதிய தொடர் பதிவுளான
1.உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (இந்த பதிவில் சினிமா
வளர்ச்சிக்கு காரணமான பல பிரபலங்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளார்..)
2.நிர்வாணம் (இந்த பதிவில் இவர் ஒரு
ஓவியனாக தனது கல்லூரி காலத்தில் இருந்து ஏற்பட்ட அனுபவம் மற்றும் ஆராய்ச்சி
அறிவின் துணை கொண்டு நிர்வானம் என்ற விசயத்தை விரிவாக விவரித்து இருக்கிறார்)
ஆகியவை எனக்கு மிக பிடித்த பதிவுகள்
2.
சகோதரன்:
இவ்வலைப்பூவின் உரிமையாளர் ஜெகதீஸ்வரன்,இவரது எழுத்து நடை எனக்கு மிகவும்
பிடிக்கும்,இவரது வாசிப்பின் விஸ்தாரத்தையும்,சிந்தனை வீச்சையும் இவரது பதிவுகள் பிரதிபலிக்கும்.தமிழ்
விக்கிப்பீடியாவிலும் இவர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.(இதன் விவரம் இங்கே) ,விக்கி இவருக்கு விருது கொடுத்து
கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் தன் வலைப்பூவில் ஆயிரத்தி்ல் ஒருவன் என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர்.
பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார்.தமிழ்
புத்தக தரவிரக்க தளத்திலும் இவர் ஆசிரியராக இருக்கிறார்.
இந்த வலைப்பூக்கள் இரண்டுமே வேர்ட் பிரஸில்
இயங்கின.(படைப்பாளி தற்போது பிலாகருக்கு மாறி விட்டது).
என் மனதில் இருந்த கதை,கட்டுரை,கவிதை
இத்யாதிகளை எழுத வேண்டும் என்ற ஆசையை இந்த வலைப்பூ வாசிப்பு விரிவுபடுத்தியது.நான்
வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு கணக்கு துவங்கி,கவிதைகளுக்கு
மட்டுமென்று தனியாக வலைப்பூ ஒன்றை ஆரம்பித்தேன் ! ஈழ தமிழர் பற்றி நான் எழுதி
வைத்திருந்த கவிதை ஒன்றையும்,சில காதல் கவிதைகளையும்
பதிவுகளாக்கி அந்த அந்த வலைப்பூவில் பதிவிட்டேன்..
யாரும் படிக்கிறார்களா? என்றெல்லாம் எனக்கு
தெரியவில்லை ,பதிவுகளை எழுதுவதோடு எனது பணியை
நிறுத்திக்கொண்டேன்... (திரட்டிகள் பற்றியெல்லாம் எனக்கு ஆரம்பத்தில்
தெரியவில்லை).கவிதைகள் மட்டுமின்றி எனக்கு தோன்றும் சிந்தனைகளையும்,கட்டுரைகளையும் எழுத இன்னொரு வலைப்பூ தனியாக துவக்க தீர்மானித்தேன்.
வேர்ட்பிரஸ் தளத்தில் உள்ள வசதிகளை விட
பிலாகரில் அதிக வசதிகள் இருந்த காரணத்தினால் எனது இரண்டாம் வலைப்பூவான கடற்கரையை பிலாகரில் துவக்கினேன்.
இப்படியாக நானும் வலைப்பூ தோட்டக்காரனாக மாறி
இரண்டு வலைப்பூக்களை தமிழ் நீரூற்றி வளர்க்க ஆரம்பித்தேன்...
நாளைய வலைச்சரத்தில் என் வலைப்பூவை வடிவமைக்க
உதவிய வலைப்பூக்கள் பற்றி கூறுகிறேன்
இரண்டுமே நல்ல தளங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறியாத தளங்கள்! அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி தம்பி..வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவிஜயன்(அண்ணா)
இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்துவழங்கிய உங்களுக்கு நன்றிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வித்தியாசமாய் அறிமுகம்...
ReplyDeleteஅழகாக தொகுத்திருக்கிறீர்கள்.
அருமை... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
புதிய தளங்களை அறிமுகப்படுத்தினீர்கள், எனக்கு!
ReplyDeleteபடிக்கவேண்டிய வலைப்பதிவுகள் ஏராளமாக உள்ளன என்பதை எடுத்துக் கூறி விட்டது இன்றைய அறிமுகங்கள். நன்று
ReplyDeleteஅறிமுகம் செய்துவைக்கும் அளவுக்கெல்லாம் சகோதரன் தளம் சென்றுவிட்டதை நினைத்து மகிழ்வு கொள்கிறேன். அறிமுகம் செய்வித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteமிகச் சிறந்த வாசகன் தன்னை படைப்பாளியாக ஆக்கிக் கொள்கிறான். நீங்களும் படைப்பாளியாக பல்வேறு தளங்கள் வலம் வர வாழ்த்துகள் விஜயன்.