Tuesday, February 12, 2013

அறிவியல்...அறிவு...அறிவுரை..


சரம்-2

அறிவியல்:

வரலாற்று சுவடுகள் : தமிழ் வலை உலகில் ,இது போன்ற வலைப்பூக்கள் மிக குறைவு, விமர்சன்ங்கள், கதை,கவிதை,மொக்கை போட ஆயிரக்கணக்கான பதிவர்கள் உள்ளனர்.அறிவியல் பதிவுகள் எழுத குறைந்த நபர்களே உள்ளனர்.குறைவான நபர்களில் நிறைவான பதிவுகள் தருகிறார் வரலாற்று சுவடுகள்( இவ்வலைப்பூ உரிமையாளர் பெயர் எனக்கு தெரியவில்லை ) வ.சு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் !



அறிவியல் நம்பி : அறிவியல் நம்பி எழுதியுள்ள அணுசக்தி தொடர்பான தொடர் எனக்கு மிகவும் பிடித்த தொடர்,அணு விஞ்ஞானத்தை அணு அணுவாக இவர் விளக்கியுள்ளார்.இவர் சில அறிவியல் புத்தகங்களும் வெளியிட்டுள்ளர் .அறிவியலை எளிய தமிழில் புரிகிற மாதிரி சொல்லி தருகிறார்.



அவிழ்மடல் :

அறிவியல், தொழில் நுட்பம், என பல விசயங்களை சுவாரசியமாக விளக்குகிறார் நம்மா ஆளுங்க ... போய் பாருங்க ...

விண்ணியல் சம்பந்தமான விசயங்கள் இந்த வலைப்பூவில் நிறைய உள்ளன ,அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய அறிவியல் வலைப்பூ 

உயிர்மை இதழில் ராஜ் சிவா எழுதும் தொடர் : உலக அழிவும் மாய இன மக்களும் என்ற தொடரை எழுதி பரபரப்பு கிழப்பிய ராஜ் சிவா அவர்கள் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு விடை தேடும் வித்தியசமான தொடர் ஒன்றை உயிர்மை இதழில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.வாசிக்க வாசிக்க பிரமிப்பூட்டும் தொடர்... ,என்னுடைய விருப்பமான தொடர்.






ஜெய தேவ் : ஜெயதேவ் அவர்கள் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அருமையாக தருகிறார்.கடவுள் துகள் , ஜீரோ கிராவிட்டி ,பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.   ஒளியின் [Light] வேகத்துக்கும் எல்லை உண்டு போன்ற சிக்கலான இயற்பியல் விசயங்களை கூட எளிய முறைகளில் விளக்கமாக விளக்கி சொல்கிறார்.இவரின் பிற பதிவுகளைவிட அறிவியல் பதிவுகளில் இவர் திறமை கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுகிறது .இயற்பியலை இயல்பு நடையில் சொல்லித் தரும் ஜெயதேவ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்


மாணவன்  : பல தலைவர்கள் ,விஞ்ஞான மேதைகள் ,வரலாற்று நாயகர்கள் போன்றவர்களின் வரலாற்றை தொகுத்து தரும் சிம்பு அவர்களுக்கு வலையுலக வரலாற்று ஆசிரியர் என்ற பட்டம் கொடுக்கலாம் .



அறிவு :

TNPSC, TET - போட்டித்தேர்வுகளுக்கான குறிப்புகள் :  போட்டி தேர்வர்களுக்கு தேவையான தகவல்கள் கொண்ட தளம்  
அண்ணன் மதுமதி அவர்களின் முயற்சி என்னை புல்லரிக்க வைக்கிறது  (இவரை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் கூறுகிறேன்.. )

ஜேய் வின்  
upsc தேர்வுக்கான குறிப்புகள், பழைய வினாத்தாள்கள் ,புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக ... 

அறிவுரை:

தமிழ் பேரன்ட்ஸ் : அண்ணன் சம்பத் குமார் அவர்களின் வலைப்பூ இது ,குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக சகல விசயங்களும்,இத்தளத்தில் உள்ளன.திருப்பூரில் நடந்த "உறவோடு" விழாவிற்கு சென்றிருந்த போது, இவரின் அறிமுகம் கிடைத்தது."என் பாப்பா பிறந்தவுடன் குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக சில தகவல்களை படித்தேன்,அதன் பிறகு அந்த தகவல்களை தொகுத்து பலருக்கும் பயனளிக்கும் விதமாக வலைப்பூ துவங்கினேன்" என்று கூறும் சம்பத் அண்ணன் அவர்களின் முயற்சிகள் பாராட்டுக்குறியது.இவர் cuteparents.com என்ற ஒரு ஆங்கில வலைப்பூவும் வைத்துள்ளார்.


counsel for any : இவ்வலைப்பூ ஒரு " ஆன்லைன் தமிழ் கவுன்சிலிங்க் " வலைப்பூ,பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறவர்கள் இந்த வலைப்பூவில் உள்ள தகவல்களை நாடுங்கள்,உங்கள் பிரச்சனைகளுக்கு இலவசமாக கவுன்சிலிங்க் கிடைக்கலாம்.

மனநலம் வலைப்பூ : மனநலம் சார்ந்த பல பயனுள்ள தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன.மறக்காமல் படியுங்கள்.

தமிழில் : மனநல மருத்துவர் ஷாலினி அவர்களின் வலைப்பூ, இந்த வலைப்பூவில் உள்ள தகவல்கள் புத்தக வடிவிலும் வந்துள்ளன,டாக்டர் ஷாலினி அவர்களின் ஆழ்ந்த கருத்துக்கள் ஆண்,பெண்,மனநலம் என சகல தளங்களிலும் பரவி இந்த வலைப்பூவில் விரவிக்கிடக்கின்றன.


சட்ட அலோசனைகள்:

மக்கள் சட்டம் (PEOPLE'S LAW) :சட்டம் சம்பந்தமான உங்கள் சாந்தேகங்களுக்கு இந்த வலைப்பூ நிச்சயம் விடை தரும்.இந்த வலைப்பூ ஆசிரியர்களின் முயற்சி நமக்கு வியப்பளிக்கிறது.இந்த வலைப்பூவில் இன்ன பிற சட்ட அலோசனைகள் வழங்கும் தளங்களின் முகவரிகளையும் "இணைப்புகள்" கொடுத்துள்ளனர்.அனைவரும் அவசியம் செல்ல வேண்டிய வலைப்பூ.

Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: சமூக பிரச்சனைகளுக்கு சட்டபூர்வமான தீர்வுகள் இவ்வலைப்பூவில் உள்ளன.

நாளைய சரத்தில் சந்திக்கிறேன் .... 






6 comments:

  1. ராஜ் சிவா அவர்களின் தொடரை நானும் படித்துள்ளேன் அருமையான தகவல்.
    மேலும் மதுமதி கவிஞர் என்ற நிலையிலிருந்து மாறி சமூக சேவகராகி வருகிறார் குறிப்பாக இன்றைய இளைய சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டியை உள்ளார்.
    நீங்கள் கொடுத்த மட்ட்ரதகள்களும் இனிதான் படிக்கவேண்டும்

    ReplyDelete
  2. வலைச்சரத்திற்கு வாசகனாகி சில வாரங்கள் ஆகிவிட்டன.இதற்கு முன் எழுதிய ஆசிரியர்கள் இலக்கியம்,பொழுதுபோக்கு தளங்களையே அதிகம் அறிமுகம் செய்தனர்.நீங்கள் வந்தவுடனேயே மின்நூல் தரவிறக்கம்,அறிவியல் என்று அசத்துகின்றீர்கள்.இவ்வாறான தளங்களைத் தான் தேடிக்கொண்டிருந்தேன்.அறிமுகத்திற்கு நன்றி.தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வித்தியாசமான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பாணியை.

    ReplyDelete
  4. மிக மிக அருமையான, யாவருக்கும் தேவைப்படும் அறிமுகங்கள். அருமை!

    ReplyDelete
  5. கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete