நாள் -2
தமிழ் பதிவுலகம் பற்றி எனக்கு தெரிவதற்கு முன்பு கூகிள் செய்திகள்,தினமலர்,தினமணி, என்று எனது இணைய-உலக தமிழ் வாசிப்பு ஒரு சிறிய வட்டத்திற்குள்
இருந்தது.அதன்பின்பு விகடன்,தினமலரின் கல்விமலர்,திண்ணை,உயிர்மை போன்ற தளங்களின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தேன்.
தமிழ் புத்தகங்களை இணையம் வழியாக தேடிக்கொண்டிருந்த
என்னை கூகுள் ஒரு "மின்
புத்தக தரவிரக்க" வலைப்பூவிற்கு கூட்டிச்சென்றது.அங்கு பல புத்தகங்கள்
இருந்தன அதன் பிறகு புத்தகங்கள்
தரவிரக்கம் செய்ய மேலும் சில தளங்கள் கிடைத்தன.இணையம் எனது புத்தக தேடலுக்கு உதவ
ஆரம்பித்தது.இணையத்தில் புத்தகங்களை தேடி தேடி சேகரிக்க துவங்கினேன். ( இது பற்றி எனதுஅறிமுக பதிவிலேயே கூறிவிட்டேன்..)
நான் ஒரு "மின் மற்றும் மின்னனு பொறியியல்" (EEE) மாணவன்.பாடங்கள் அனைத்தும்
ஆங்கிலத்தில் தான் இருந்தது, ஆகவே கூகுள் துணையுடன்
பொறியியல் சம்பந்தமான விசயங்கள் தமிழில் கிடைக்குமா என்று தேடிய போது இரு
வலைப்பூக்கள் கிடைத்தன.
இந்த தளத்தில் மின்னியல் சம்பந்தமான தகவல்கள்
தமிழ்மொழியில் காணக்கிடைக்கின்றன,தற்போது இந்த தளத்தில் பதிவுகள் ஏதும் பதியப்படுவதில்லை,எனினும் இப்பூவில் உள்ள தகவல்கள் மின்னியல் துறையினருக்கு உதவும் வகையில்
உள்ளன
2.கூல் :
இந்த வலைப்பூ உரிமையாளர் பெயர் சிவா,எனக்கு இவ்வலைப்பூ
அறிமுகமான புதிதில்,சிவாவுடன் நான் போனில் பேசியிருக்கிறேன்,இந்த வலைப்பூவும் முதல் வலைப்பூ போலவே,மின்னியல்
தொடர்பான பல தகவல்களை கொண்டது. இங்குள்ள
போன்ற பதிவுகள் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய
விசயங்கள்.(மின்சாரம் வந்தால் தானே ?,பாதுகாப்பு,சேமிப்பு
எல்லாம்...! என்று நீங்கள் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது.. )
மின்னியல் தொடர்பாக கதை போன்ற சுவரசியமாக இருக்கும்
வகையில் (மொக்கை போடாமல்...)அனைவருக்கும்
புரிகிற மாதிரி ..ஒரு தொடர்-பதிவு எழுத வேண்டும் என்று நீண்டு நாட்களாக
யோசித்திருக்கிறேன்.மாய
உலகம் தொடர் முடிந்த பின்பு இந்த தொடரை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்
!
நாளைய வலைச்சரத்தில் நான் வலைப்பூ வளர்க்க
ஆரம்பித்த கதையையும்,அதற்கு காரணமான
வலைப்பூக்களையும் பற்றி பகிற்கிறேன்....
விஜயன்.துரை
பதிவுலகில் வந்த (சொந்தக்) கதையையும் அப்போது படித்த தளங்களையும் சுவையாகப் பகிர்ந்தீர்கள். அருமை.
ReplyDeleteமுதல் தளம் புதிது... இரண்டும் பயனுள்ள தளங்கள்... நன்றி...
ReplyDeleteஇன்று இரண்டு தளம் மட்டும் தானா...?
Tamilmanam submitted and Voted...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவிஜயன்(அண்ணா)
இன்று அறிமுகமான பதிவுகள் பயன்னுள்ள பதிவுகள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய அறிமுகங்கள் எனக்கு புதிது நன்றி.
ReplyDelete