Saturday, February 16, 2013

நான் ரசித்த கவிதை பதிவுகள்:


நான் ரசித்த கவிதை பதிவுகள்:

இந்த யுகத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு,அதிலும் கவிதைகள் படிப்பவர்கள் மிகக்குறைவு ..
 சந்தோசம்,கோபம்,குழப்பம் என வார்த்தைகளுக்குள் பிடிபடாத வாழ்க்கை கவிதையில் தன்னை விவரிக்க முயற்சிக்கிறது.,கவிதைகள் கவிஞன் பட்ட மன அவஸ்தையை வாசிப்பவருக்கு தர முயல்கின்றன.அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் உடையவர்கள் கவிதையை வாசிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்.

நிறைய படிக்கிறோம் ஆனால் அதில் சில மட்டும் மனதில் படிந்து விடுகின்றன. இன்றைய சரத்தில் நான் மிகவும் ரசித்த சில கவிதை பதிவுகள்....


(யாராவது யாரயாவது கழுதை என்று திட்டினால் எனக்கு இந்த கவிதை தான்
நினைவிற்கு வருகிறது).இந்த கவிதையை படிக்கும் போது "என்னை படி புத்தி வரும்" என்று கழுதையின் கத்தல்கள் மொழிபெயர்க்கப்பட்டு நம் மனதில் ஒலிக்கும்... இந்த கவிதைக்கு உயிர் கொடுத்தவர் டி.என்.முரளிதரன் அவர்கள் !

கன்னம்.காம் : எனக்கு மிக மிக பிடித்த கவிதை தளம்

எழுதும் போது தோன்றுவது அல்ல கவிதை தோன்றும் போது எழுதுவது...

என்று கவிதைக்கு இலக்கணம் சொல்லி நம்மை வரவேற்கிறது தளம்.அதிகமான பதிவுகள் என்பதைவிட ஆழமான பதிவுகள் என்பதில் இத்தளம் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது. இத்தளத்தில் உள்ள அத்தனை கவிதைகளும் உணர்வு மூட்டை.

இவர் யார் என்பதை இந்த கவிதை சொல்லும்

இவர் வலைப்பூவில் எனக்கு மிக பிடித்த கவிதைகள்:

இத்தளத்தின் உரிமையாளர் யோவ்- ற்கு ஒர் ஓ போடலாம் ! கன்னத்திற்கு எனது முத்தங்கள் !

கவிஞர் அறிமுகம்:

ஒரு முக்கியமான விசயம் நம்ம தொழிற்களம் அருணேஸ் அண்ணன்  பற்றிய செய்தி...இவரை ஒரு பதிவராகவும் , மக்கள் சந்தை தொழிற்களத்தின் நிர்வாக இயக்குனாராகவும் நமக்கு தெரியும் நம்ம அருண் அண்ணனுக்குள் ஒரு கவிஞரும் இருக்கிறார்.. இந்த வலைப்பூவில் அவரது கவிதைகள் உள்ளன மறக்காமல் படிங்க!.


6 comments:

  1. அனைத்தும் நமது நண்பர்களின் தளம்...

    அருணேஸ் அவர்கள் யானைப்பசியில் இருக்கிறார்...!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை புதியவர்களை வாழ்த்துவோம்

    ReplyDelete
  3. எனது கழுதைப்(கவிதைப்) பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.அனைத்து அறிமுகங்களும் சிறப்பானவை

    ReplyDelete