நாள் 5:
நட்பூ :
இன்றைய பதிவில் எனது நன்பர்களின் வலைப்பூக்கள் பற்றி
பகிர்ந்து கொள்கிறேன்.நான் வலைப்பூவை துவக்கி எழுத ஆரம்பித்தபோது,கல்லூரியின்
மூன்றாமாண்aaடில் படித்து கொண்டிருந்தேன், வலைப்பூ பற்றி
நான் என் நன்பர்களிடம் சொல்லுவது உண்டு,ஆனால் அவர்களில்
பெரும்பாலானவர்கள் இதை வெட்டி வேலை என்று தான் அறிவு உரை கொடுத்தார்கள். உனக்கு
இதில் எதுவும் பணம் கிடைக்கிறதா? எதற்காக எழுதுகிறாய் என்று
விமரிசித்தவர்களே அதிகம்,நான் தமிழில் எழுதுவதை விசித்திர
விசயமாகவே பார்த்தார்கள்.எனது கல்லூரி நட்பு வட்டாரத்தில் சில நன்பர்களே தமிழ் படிப்பார்கள்,அதிலும் வெகு சிலரே எனது வலைப்பூவை படிப்பவர்கள் ,
நான் தற்போது
கல்லூரி படிப்பை முடித்து விட்ட நிலையில் சான்றிதழ் வாங்க கல்லூரி சென்ற போது எனது
ஆசிரியை ஒருவர் தற்போது நான் எழுதும் மாய உலகம் தொடர் நன்றாக உள்ளது என்றும்
தொடர்ந்து எழுது என்றும் ஊக்கம் அளித்தார்.கொஞ்சம் பெருமையாக இருந்தது.
சரி.. இன்றைய சரத்தை ஆரம்பிக்கிறேன்..
நன்பர்களின் வலைப்பூக்கள்:
என் நன்பன் ஞானகுருவின் வலைப்பூ இவன் எனது கல்லூரி நன்பன், நான் வலைப்பூ எழுத
ஆரம்பித்த பின்னரே இவன் ஆரம்பித்தான்,ஆனால் க்ளிக் மற்றும்
பேஜ்வியூ விசயத்தில் என்னை ஓவர் டேக் செய்து விட்டான்.தற்போது பெங்களூரில் வேலை
பார்த்து கொண்டிருக்கிறான், தொழிற்களம் தளத்திலும்
எழுதுகிறான்.
இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும் என்று ஒரு தொடர்
துவங்கியுள்ளான் நன்றாக உள்ளது போய் பாருங்கள்.
நன்பன் முகமது குர்ஷித் இப்ராஹிம்-ன் வலைப்பூ.எனக்கு
முன்பே வலைப்பூ அரம்பித்த நன்பன். எனது பள்ளிக்கால (இவன் வேறு பள்ளிக்கூடம்)
தோழன்., பனிரென்டாம்
வகுப்பில் இவன் வீட்டில் குரூப் ஸ்டடி செய்த நிமிடங்கள் மலரும் நினைவுகளாக மனதில்
இன்றும் நீந்துகின்றன, பதிவுலகின் ரகசியங்களையும்,திரட்டிகள் பற்றியும் இவன் தான் எனக்கு கூறினான்.
தள உள்ளடக்கம்:
இத்தளத்தில் அரசியல், சினிமா, சமூக சிந்தனைகள் போன்றவைகள் பற்றி
எழுதுகிறான்.
சில பதிவுகள் :
தற்போது வேலை பளு காரணமாக பதிவு போட முடியவில்லை என்று
வருத்தப்பட்டான். (நூறுக்கு மேல் பதிவிட்டிருக்கிறான்... நான் இன்னும் தொடவில்லை
:( )
சுப்ரமணி: இவரது பதிவுகள் ஆழமான கருத்துடையனவாக
இருக்கும் ,நான் தொடர்ந்து இவர் பதிவுகளை படித்த்போது,இவரது
நட்பு எனக்கு கிடைக்க ஆரம்பித்தது.
இவரது பதிவுகளில்
போன்றவை நம்மை சிந்திக்க செய்பவை
2011ஆம் ஆண்டு “டெரர்கும்மி” விருதுவழங்கும்
நிகழ்வில்,கதைப்பிரிவில்,இரண்டாம் பரிசு
பெற்றுள்ளது
சில நபர்களை நான் இங்கு குறிப்பிடாமல் இருக்கலாம்,அவர்களுக்கு தனி இலாகா
(சரம்) இருக்கிறது,அவர்களுக்கு அங்கு இட ஒதுக்கீடு
கொடுத்திருப்பதால் இங்கு இடம் தரவில்லை
கொசுரு : இன்று எழில் அக்கா வலைப்பூவிற்கு ஒரு வயது ஆகிறது ...
நிகழ்காலம் வலைப்பூவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நிகழ்காலம் வலைப்பூவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நிகழ்காலம் பிறந்த நாள் வாழ்த்திற்கு மிக்க நன்றி விஜயன் .தள அறிமுகத்திற்கும் நன்றி.
ReplyDeleteகொஞ்சம் பிரேக் விட்டிருந்தேன். தாங்கள் கொடுக்கும் உற்சாகத்தில், மறுபடியும் பதிவுகளை இட ஆவல் மேலிடுகிறது நண்பா!
ReplyDeleteநண்பர் ஞானகுரு,"மாய உலகம்" படைக்கும் தங்களின் நண்பர் என்பதை நிரூபிக்கிறார். மாய உலகத்தை போன்றே
அவரது படைப்புகளும் அசத்தலாக உள்ளது.
முகமது குர்ஷித் இப்ராஹிம் எழுதும் தளம் தங்களால் எனக்கு ஏற்க்கனவே அறிமுகமானது. இவர்கள் இருவரிடமிருந்தும், தங்களிடம் கிடைத்தது போல அழகான நட்பு உருவாகும் என நம்புகிறேன்.
சரத்தில், வலைப்"பூ"வை மட்டுமல்ல, நட்"பூ"வையும் தொடுக்கலாம் என்பதை நிருபீசிட்டீங்க போங்க!
நட்"பூ"க்களின் அறிமுகம் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசகோதரி எழில் தளத்திற்கும் வாழ்த்துக்கள்...
வணக்கம்
ReplyDeleteவிஜயன்(அண்ணா)
இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
அன்பு !
ReplyDeleteவணக்கம் விஜயன்.
ReplyDeleteநீங்கள் அறிமுகபப்டுத்தியிருக்கும் பலரின் வலைப் பூக்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
தொடரவும் ஆரம்பித்திருக்கிறேன்.
நன்றி அறிமுகப்படுத்தியதற்கு.
வாழ்த்துக்கள் அறிமுகமானவர்களுக்கு.
வணக்கம் விஜயன்.
ReplyDeleteநீங்கள் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் பல மிகவும் சுவாரஸ்யமானவை.
அவர்களைத் தொடர்கிறேன்.உங்களுடைய வலையும் இதில் அடக்கம்.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வே.சுப்ரமணியன். said...
ReplyDeletenandri nanba!
வணக்கம் விஜயன்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பதவி ஏற்றதற்கு வாழ்த்துகள். ஒரு வாரமாக ஊரில் இல்லாததால் நீங்கள் பதவி ஏற்ற விஷயம் தெரியாமல் போயிற்று.
வலைப் பதிவில் உங்கள் தனி முத்திரை மேலும் மேலும் பொலிவுடன் திகழ வாழ்த்துகள்.
உங்களின் மூலம் அறிமுகம் ஆன எல்லாப் பதிவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.