வணக்கம் பதிவுலக தோழமைகளே! நம்மை நமக்கு அறியச்செய்யும் விதமாக இன்றைய நாளில் சக தோழர்களின் வலைப்பூக்களில் சில நிமிடங்கள் உலா வருவோம், வாருங்கள் என்னோடு நீங்களும்!
1) பதிவுகள் - சத்யப்ப்ரியன்
2006 லிருந்து பதிவுலகத்தில் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் அமெரிக்காவில் வசித்து வரும் நண்பர் சத்யப்ரியன்! எதையும் ஒதுக்கி விடாமல் கவிதை, கட்டுரை, அரசியல், சினிமா என்று மனுஷன் அனைத்திலும் தன் தடத்தை எழுத்தின் மூலம் பதிந்து வருகிறார்! அவருடைய வலை பக்கத்திலிருந்து சில பதிவுகளை காண்போம்.
முதலில் அவரின் அனுபவத்தை பார்ப்போம், பிறகு அவரின் பொடிமாஸை ருசிப்போம்! அடுத்து துல்லியமான நடையில் மிகத்தெளிவாக செய்தி விமர்சனம் ஒன்றை பதிந்து வருகிறார், அடுத்து நிகழ்வுகள் என்கிற வகையில் கொஞ்சம் காட்டத்துடன் அதே நேரத்தில் தீர்க்கமாகவும் தனது எண்ணங்களை இங்கு பதிந்து வருகிறார்!
முடிவாக சினிமா விமர்சனமும் தனக்கே உரிய பாணியில் எழுதி கலக்குகிறார், எல்லா அமசமும் கலந்து ஒரு தரமான வலைப்பூ நண்பர் சத்யப்ரியனின் பதிவுகள் எனும் வலைப்பூ ....
2) சின்னப்பயல் - சின்னப்பயல்
2010 லிருந்து பதிவுலகத்தில் இருந்து வருகிறார் தோழர் சின்னப்பயல். (காலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள.. ) இவரின் அறிமுகமே மிக இயல்பாய் படித்ததும் மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. மேலதிக விபரம் ஏதுமில்லை!
இவரின் பக்கங்களை நோக்குகையில் குடை என்ற சிறுகதை இதழோரத்தில் சிறு புன்னகையை கிளப்பினாலும், காதல் கவிதைகள் அப்படியே மனசுக்குள் தங்கி விடுகின்றன! இவரின் வார்த்தை பிரயோகம் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது, மனதுக்குள் அப்படியே மஞ்சமும் கொள்கிறது!
இவர் சிறுகதை, கவிதை தான் அதிகம் பதிந்து வருகிறார், சொல்ல வரும் எண்ணங்களை எளிமையாய் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லிச் செல்வது இவரின் சிறப்பு... அதற்கு இந்த கண்ணாடிக்குவளை சான்று!
3) மனசு - சே. குமார்
2009 லிருந்து பதிவுகளை எழுதி வருகிறார் நண்பர் பரிவை சே. குமார். இவரும் எந்த சமரசமுமின்றி அணைத்து விதமான பதிவுகளையும் எழுதி வருகிறார்! சமீப காலமாக சினிமா அதிகம் எழுதுகிறார்!
குடி அரசு தின வாழ்த்துக்களில் இவரின் சமூக கோபம் தெளிவாய் தெரிகிறது, அதே நேரத்தில் மழையில் உன் வாசம் இவரின் மெல்லிய மனம் புலப்படுகிறது , இன்னொன்று மண்ணின் மீதுள்ள நேசம், இப்போதுள்ள விலை நிலத்தின் நிலை கண்டு கலங்கும் ஆதங்கள் அனைத்தும் இந்த வெற்றுடம்புடன் விளைநிலத்தில் காணலாம்!
அனுபவம் , மண்ணை பற்றி எழுதி இருக்கிறார் . அனைத்தும் நமது எண்ணங்களில் புதைந்து கொள்ளும் தன்மை இவரின் எழுத்துக்கு உள்ளது .....
4) சிட்டுக்குருவி - விமலன்
2010 லிருந்து எழுதி வருகிறார் , விருதுநகர் பகுதியை சார்ந்தவர். இவரின் எழுத்தின் சிறப்பம்சம் என்னவெனில் பெரும்பாலும் கற்பனையை தவிர்த்து தான் அனுபவித்த / கண்ட நிகழ்வுகளை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவார் எழுத்தின் ஊடாக... சில விடயங்களை சொல்வதில் பெரும் கெட்டிக்காரர்...
தூவானம் இதில் உள்ள எதார்த்தம் நம்மை வசீகரிக்கின்றன, காலக்கண்ணாடி.
தாம் சொல்ல வருவதை எந்த தடையுமின்றி எவ்வித தயக்கமுமின்றி கூறுவதில் தேர்ந்த எழுத்தாளர். கேக் இதையும் பாருங்க இவரின் எழுத்தின் வளம் தெரியும்.
இவரின் கவிதையை படித்து முடித்த பின்னர் மனத்தில் எழும் சலனம் அடங்க சற்று நேரம் பிடிக்கும், அந்த அளவுக்கு வீரியமும், கொஞ்சம் காரமும் இருக்கும் ... அதற்கு ஒரு துளி சான்றாக இந்த தூரம்...
5) பிம்பம் - சுதர்சன் சுப்பிரமணியம்
2009 லிருந்து தனது வலைப்பக்கத்தில் எழுதிவருகிறார், இவரின் பதிவுகளும் அணைத்து கலந்த கலவைகளாகவே இருக்கின்றன. தமிழின் மீதுள்ள ஆர்வம் இவரின் எழுத்துக்களில் அங்கங்கே வெளிப்படுகிறது.
பாரதியை முழுமையாக படியுங்கள் என்று மகா கவி கூறிய இலக்கிய செழுமைகளை நமக்கு விளக்குகிறார். திரையில் தெரியும் காட்சிகளை கண்டு மகிழும் நமக்கு சினிமா தியேட்டர் திரை பற்றி தொழில் நுட்பத்துடன் கொஞ்சம் விளக்கமாக நமக்கு விளக்கி இருக்கிறார்.
அடுத்து இந்து மதத்தை பற்றிய விளக்கத்தை கண்ணதாசனின் வரிகளோடு நமக்கு வழங்குகிறார் இதோ அர்த்தமுள்ள இந்து மதம் தொடர் 5 - சாதாரண வாழ்க்கையும் கடவுளும்
இன்றைய தினத்தில் நாம் கண்ட பதிவர்களை படித்து உற்சாகப்படுத்துங்கள் அன்பின் தோழமைகளே! மீண்டுமொரு பதிவில் சந்திப்போம் ...
உள்ளம் நிறை நன்றிகளுடன்
அரசன்
உ. நா. குடிக்காடு
சிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள் சகோ.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். . அனைவரையும் தொடரர்கிறேண். . .
ReplyDeleteஒவ்வொறு பதிவிலும் குறைந்தது 10 பேரையாது அறிமுகம் செய்யுங்கள். . . நல்ல அறிமுகம் வேண்டி பல நல்ல பதிவர்கள் காத்து இருக்கின்றனர். . .
ReplyDeleteதொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் நண்பா. . .
ReplyDeleteஉங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடிந்தவரைக்
ReplyDeleteகொசம் அறிமுகங்களை அதிகப் படுத்திக்கொள்ளுங்கள் சகோ .
வாழ்த்துக்கள் சிறப்பாகத் தொடரட்டும் .இன்று அறிமுகமானவர்களுக்கும்
என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
அனைத்தும் கலவையான நல்ல தளங்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தொடர்க...
அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழத்துக்கள்! தொடருங்கள் அரசன்!
அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழத்துக்கள்
ReplyDeleteVetha.Elangathilakam.
சிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள்
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசன்
அறிமுகப்பதிவுகள் நன்றாக இருந்தன.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஐந்து அறிமுகத்தில் நான்கு பேர் எனக்கு புதியவர்கள் குமாரின் பதிவுகள் படித்துள்ளேன்! சென்று பார்க்கிறேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைத்தும் கலந்த அற்புத பதிவு தொடர்ந்து உங்கள் ஆசிரியர் பணியை ஆக்கபூர்வமாக் செய்ய வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான பதிவுகளை உங்க அறிமுக நாளிலேயே அறிமுகம் செய்தது மிக மிக அருமை, தொடர்ந்து கலக்குங்க...நண்பா!
ReplyDeleteஅருமையான பதிவர்கள் அறிமுகம்....
ReplyDeleteஅறிமுகமானதில்..
முதலும் கடைசியுமான பதிவர்கள் மட்டும்
நான் அறியாதவர்கள்
சென்று பார்க்கிறேன் சகோதரரே..
உங்களுக்கும், உங்களால் அறிமுகபடுத்தப்பட்டோருக்கும்
வாழ்த்துக்கள்..
யாருமே இதுவரை அறிந்திரா பதிவர்கள்... உங்கள் உழைப்பு தெரிகிறது... தொடர்ந்து கலக்குங்கள்
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள்
ReplyDeleteஎனக்கு வலைச்சரத்தில் தங்கள் மூலமாக மீண்டும் ஒரு முறை அறிமுகம்.
ReplyDeleteஎன்னுடன் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அறிமுகப்படுத்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
தொடருங்கள்... தொடர்கிறோம்...
வணக்கம் திரு அரசன்.
ReplyDeleteஉங்களை வலைச்சரம் மூலம் தெரிந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம். (உண்மையை சொல்லிவிட வேண்டும், இல்லையா?) இன்றுதான் உங்கள் வலைத்தளத்திற்கு சென்று பார்த்தேன்.
வாழ்த்துகள்.
உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
வணக்கம் அரசன் சார்,நன்றி தங்களின் சீரிய அறிமுகத்திற்கு/
ReplyDeleteசே.குமார் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகப் படுத்தினீர்கள். நன்றி.
ReplyDeleteசே.குமாரும், சிட்டுக்குருவியும் எனக்குப் பரிச்சயமானவர்கள். மற்றவர்கள் புதியவர்கள். அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! நன்றி அரசன்!
ReplyDeleteஎன்னையும் மதித்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமாய் உள்ளது தொடருங்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசே,அரசன்
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான அறிமுகங்கள் தொடருங்கள்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteSasi Kala said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள் சகோ.//
நன்றிங்க அக்கா
என் ராஜபாட்டை : ராஜா said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். . அனைவரையும் தொடரர்கிறேண். .//
வணக்கம் ஆசிரியரே .. உங்களின் கருத்துக்கு என் நன்றிகள்
அம்பாளடியாள் said...
ReplyDeleteஉங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடிந்தவரைக்
கொசம் அறிமுகங்களை அதிகப் படுத்திக்கொள்ளுங்கள் சகோ .
வாழ்த்துக்கள் சிறப்பாகத் தொடரட்டும் .இன்று அறிமுகமானவர்களுக்கும்
என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .//
நன்றிங்க மேடம்
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅனைத்தும் கலவையான நல்ல தளங்கள்...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தொடர்க...//
நன்றிங்க சார்
புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteஅறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழத்துக்கள்! தொடருங்கள் அரசன்!//
நன்றிங்க அய்யா
kovaikkavi said...
ReplyDeleteஅறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழத்துக்கள்
Vetha.Elangathilakam.//
நன்றிங்க மேடம்
r.v.saravanan said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள்
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசன்//
நன்றிங்க சார்
S.டினேஷ்சாந்த் said...
ReplyDeleteஅறிமுகப்பதிவுகள் நன்றாக இருந்தன.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா
s suresh said...
ReplyDeleteஐந்து அறிமுகத்தில் நான்கு பேர் எனக்கு புதியவர்கள் குமாரின் பதிவுகள் படித்துள்ளேன்! சென்று பார்க்கிறேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
நன்றிங்க அண்ணா
கோவை மு சரளா said...
ReplyDeleteஅனைத்தும் கலந்த அற்புத பதிவு தொடர்ந்து உங்கள் ஆசிரியர் பணியை ஆக்கபூர்வமாக் செய்ய வாழ்த்துக்கள்//
மிகுந்த நன்றிகள் மேடம்
semmalai akash said...
ReplyDeleteஅருமையான பதிவுகளை உங்க அறிமுக நாளிலேயே அறிமுகம் செய்தது மிக மிக அருமை, தொடர்ந்து கலக்குங்க...நண்பா!//
நன்றிங்க நண்பா
மகேந்திரன் said...
ReplyDeleteஅருமையான பதிவர்கள் அறிமுகம்....
அறிமுகமானதில்..
முதலும் கடைசியுமான பதிவர்கள் மட்டும்
நான் அறியாதவர்கள்
சென்று பார்க்கிறேன் சகோதரரே..
உங்களுக்கும், உங்களால் அறிமுகபடுத்தப்பட்டோருக்கும்
வாழ்த்துக்கள்..//
வணக்கம் அண்ணே ...
மிகுந்த நன்றிகள்
சீனு said...
ReplyDeleteயாருமே இதுவரை அறிந்திரா பதிவர்கள்... உங்கள் உழைப்பு தெரிகிறது... தொடர்ந்து கலக்குங்கள்//
நன்றி சீனு
Prem s said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள்//
நன்றிங்க அன்பரே
சே. குமார் said...
ReplyDeleteஎனக்கு வலைச்சரத்தில் தங்கள் மூலமாக மீண்டும் ஒரு முறை அறிமுகம்.
என்னுடன் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அறிமுகப்படுத்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
தொடருங்கள்... தொடர்கிறோம்...//
எனக்கும் மிக மகிழ்வு தான் நண்பரே
Ranjani Narayanan said...
ReplyDeleteவணக்கம் திரு அரசன்.
உங்களை வலைச்சரம் மூலம் தெரிந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம். (உண்மையை சொல்லிவிட வேண்டும், இல்லையா?) இன்றுதான் உங்கள் வலைத்தளத்திற்கு சென்று பார்த்தேன்.
வாழ்த்துகள்.
உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.//
உண்மையான கருத்துக்கு என் நன்றிகள் அம்மா
விமலன் said...
ReplyDeleteவணக்கம் அரசன் சார்,நன்றி தங்களின் சீரிய அறிமுகத்திற்கு///
உங்களுக்கு தான் என் நன்றிகள் சார்
NIZAMUDEEN said...
ReplyDeleteசே.குமார் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகப் படுத்தினீர்கள். நன்றி.//
மிகுந்த நன்றிகள் சார்
பால கணேஷ் said...
ReplyDeleteசே.குமாரும், சிட்டுக்குருவியும் எனக்குப் பரிச்சயமானவர்கள். மற்றவர்கள் புதியவர்கள். அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! நன்றி அரசன்!//
நெஞ்சார்ந்த நன்றிகள் சார்
SathyaPriyan said...
ReplyDeleteஎன்னையும் மதித்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.//
உங்களுக்கு என் நன்றிகள்
கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமாய் உள்ளது தொடருங்கள்//
நன்றிங்க சார்
2008rupan said...
ReplyDeleteவணக்கம்
சே,அரசன்
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//
நன்றிங்க ரூபன்
புரட்சி தமிழன் said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் தொடருங்கள்.//
நன்றிங்க புரட்சி தமிழரே
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...//
நன்றிங்க நண்பரே
Bala subramanian said...
ReplyDeleteமிக மிக அருமை//
நன்றிங்க சார்
K.s.s.Rajh said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்//
நன்றிங்க நண்பா
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.,
ReplyDeleteநிறைய தேடியிருப்பீர்கள் போல,தொடரட்டும்
படித்துப் பகிர்ந்துகொண்டமைக்கு / அறிமுகத்திற்கு மிக்க நன்றி அரசன் அவர்களே :)
ReplyDelete