வலைச்சர விருப்ப தாரர்களுக்கும் , நண்பர்களுக்கும் என் காலை வணக்கங்கள். சிறுகதை, பெருங்கதை சிந்தனையாளர்களை அவர்களின் வலைப்பக்கதிற்கே சென்று சின்னதாய் கைக்குலுக்கி விட்டு வருவோம்!
1 ) குடந்தையூர் - ஆர்.வி. சரவணன்
இவரின் எழுத்துக்களை வாசித்து முடிக்கையில் நமக்குள்ளும் துளிர் விடும் சிறுகதை எழுதும் ஆர்வம். இதுதான் இவரின் வெற்றி ரகசியம்.. 2010 லிருந்து வலையுலகில் தொடர்ந்து எழுதி வருகிறார்!
மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல, பெற்றோர், நட்புக்குத் தங்க மனசு இப்படி சிறுகதைகளை எழுதிய இவர் இளமை எழுதும் கவிதை நீ... என்கிற நெடுங்கதையையும் தனது தளத்தில் எழுதி வருகிறார்! கூடவே கவிதை, சினிமா, அனுபவம் இப்படியும் பகிர்ந்து வருகிறார்!
2) நினைவில் சில கனவுகள் - செம்மலை ஆகாஷ்
கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்து நிறைய எழுதி வந்தாலும் இவரிடம் நான் வியந்து ரசித்தது இவரின் கதைகளைத்தான்! நல்ல படைப்பாளி ...
காதலின் குணமும்! பெற்றோர்களின் மனமும்! என்கிற தலைப்பில் ஒரு பெருங்கதை எழுதிய இவர் எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம் என்ற தொடர்கதையை எழுதி வருகிறார். படித்தால் நமக்கே நடந்த உணர்வை தரும் படைப்பு ...
இதை தவிர்த்து நையாண்டி, நகைச்சுவை, அரசியல், சினிமா விமரசனமும் எழுதி வருகிறார்.
3) ரசிக்கிறேன், ருசிக்கிறேன் - மாதவன் இளங்கோ
பெல்ஜியத்தில் வசித்து வரும் இவர் மிக சமீபத்தில் தான் வலைப்பக்கம் தொடங்கி இருக்கிறார்.
இவரின் எழுத்துக்கு ஒரே ஒரு சான்று இந்த கல்லூரி கட்டணம் படித்து முடிக்கையில் மனம் என்னென்னவோ .சிந்திக்கிறது ..படித்து பாருங்கள் ..தோழர்களே .
4) நான் நானாக
சிலரது படைப்புகள் வாசிக்கும் நம்மை ஒரு உலுக்கு உலுக்கப் போடும் அந்த வகையில் இவரது படைப்புகளும் உள்ளது.
இந்த தொடரும் பயணங்கள் அப்படித்தான் வாசித்த என்னை எங்கேயோ கொண்டு தொலைத்து மீண்டும் என்னை கொண்டு வந்து சேர்த்தது.
அதிகம் எழுதாத இவர் போன்றவர்கள் கொஞ்சம் சிரமத்தை பாராமல் நிறைய எழுத வேண்டுகிறேன்!
5) சுபத்ரா பேசுறேன் - சுபத்ரா
கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வரும் இவர் நிறைய வகைகளை நமக்கு எழுத்தின் மூலம் வழங்குகிறார். அதில் சிலவற்றை இங்கு காண்போம்!
இது கதையல்ல நிஜம் என்ற உணர்வுள்ள பகுதியை நம்முன் வைத்து விட்டு எதுவும் சொல்லாமல் நமக்கு ஆயிரம் கற்பினைகளை வழங்கி செல்லும் திறமை எல்லோருக்கும் வராது.
நாமிருவர் அதிகம் விவரிக்காமல் சொல்ல வந்த விடயத்தை நறுக்கு தெரித்தார் போல் சொல்வதிலும் இவங்களுக்கு இணை இவங்களே தான்!
6) ரிஷ்வன் கவிதைத் துளிகள் - ரிஷ்வன்
2011 லிருந்து எண்ணற்ற படைப்புகளை வழங்கி வருகிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை என்று பன்முக படைப்பாளி இவர்.
இவரின் மொத்த எழுத்துக்களுக்கும் இந்த இரண்டு ஏக்கர் நிலம் ஒரே சான்று!
அடுத்து உலகப் பொதுமறையாம் திருக்குறளை வைத்து திருக்குறள் வடிவில் கவிதை எழுதுகிறார்...
7) தமிழ் தெரு - த. ஜார்ஜ்
சிலர் சொல்ல வரும் பெருங்கருத்தை நகைச்சுவை முலாம் பூசி படிப்பவருக்கு சலிப்பு தட்டாமல் எழுத்தின் உள்ளே பயணிக்க வைப்பர்! அந்த வகையறா இவரது படைப்புகளும்!
அடுத்த ஞாயிற்றுக் கிழமை இதற்கு சான்று! வலை போன்று மேலும் படைப்புகளை வழங்கி இருக்கிறார்!
8) வல்வையூரான் - இராஜ முகுந்தன்
கடந்த வருடத்திலிருந்து எழுதி வருகிறார். எதார்த்தமாக வந்து விழுகின்றன இவரின் ஒவ்வொரு படைப்புகளும்!
தேர் முட்டுக்கட்டை காதலை சுவைபட சொல்லிச் செல்கிறார்! இளநீர்., மௌனம் பேசியது. என்று மேலும் நல்ல எழுத்துக்களை நமக்காக வழங்கி இருக்கிறார்!
9) காக்கைச் சிறகினிலே - அகல்
சென்ற வருடத்திலிருந்து எழுதி வருகிறார்! நல்ல படைப்புகளை வழங்கி வரும் இவர் அனுபவம், கவிதைகள், ஹைக்கூ போன்றவற்றை எழுதி வருகிறார்!
"தீதும் நன்றும் பிறர்தர வரும்" மிக எளிமையான வரிகளில் உலகுக்கு சொல்ல வேண்டிய கருத்தை கதையின் ஊடாக செல்வது தான் இவரின் சிறப்பு தெரிகிறது!
10) தேன் மதுரத் தமிழ் - கிரேஸ்
கடந்த மூன்று வருடங்களாக எழுதி வரும் இவரின் படைப்புகள் அனைத்தும் மிக சுருக்கமாகவே இருக்கிறது! ஆனால் நிறைய சொல்கிறது நம்மிடம்!
கோபம் என்கிற கதையில் தெரிகிறது குழந்தைகளிடம் எப்படி இருக்கவேண்டும் என்பது! மேலும் இவரின் தளத்தில் குழந்தைகளுக்காகவே நிறைய படைப்புகள் வழங்கி இருக்கிறார்!
இன்றைய தினம் என்னோடு பயணித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்... மீண்டும் சந்திப்போம் மீண்டுமொரு பதிவில் ..
நன்றிகளுடன்
அரசன்
உ. நா. குடிக்காடு

நன்றிகள் அரசன் அவர்களே. என்னையும் என் படைப்புகளையும் அரங்கம் தந்து வரவேற்றீர்கள். நன்றிகள்.
ReplyDeleteஅறியாத தளங்களுக்கு சென்று வருகிறேன்...
ReplyDeleteமாதவன் இளங்கோ தளம் எனக்கு புதிது... அனைத்து தளங்களுக்கும் சென்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை (சிலர் சொல்வதில்லை) சொல்லியதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
புதிய தளங்கள் எனக்கும் சில சென்று வருகிறேன். நன்றி சகோ.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களிற்கும் இனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அரசன்,
ReplyDeleteவலையுலகை அலசி படிப்பதில் அரசனாகத் தான் இருக்கின்றீர்கள்.
இன்றைய உங்களின் அறிமுகத்தில் இடம்பெற்றிருக்கும் பலரும் எனக்கு புதிய அறிமுகமே.
இன்று அறிமுகம் கண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துகளும், ஆசிரியருக்கு பாராட்டுக்களும்.
கதை சொல்பவர்களைப் பாராட்டி ஒரு பதிவு.
ReplyDeleteமாறுபட்ட பதிவு.
பாராட்டுகள்.
நிறைய புதிய தளங்களை அறிந்து கொண்டேன்! அறிமுகம் செய்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி!
ReplyDeleteவலைச்சரத்தில் மீண்டும் என்னை அறிமுகப்படுத்திய அரசன், உ. நா. குடிக்காடு அவர்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteபல புதிய தளங்களின் அறிமுகத்தைப் பெற்றேன்.. அனைவருக்கும் வாழ்த்துகள்!
அறிமுகத்திற்கு மிக்க நன்றி! மற்ற தளங்களைப் படித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஇளமை எழுதும் கவிதை நீ தொடர்ந்து படித்து வருகிறேன்... அருமையான தொடர்கதை. சரவணன் சாரின் பதிவுகளில் மென்மை இழையோடும்... மற்றவர்களையும் சென்று பார்கிறேன் ராசா....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசே,அரசன்(அண்ணா)
இன்று அறிமுகம் கண்ட வலைப்பூக்கள் எனக்கு புதியவை அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மற்றுமொருமுறை எனது பக்கத்தை அறிமுகப்படுத்திய அரசன் மற்றும் வலைசரத்திற்கு எனது நன்றிகள்...
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி அரசன் நீங்கள் அறிமுகபடுதியிருக்கும் மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇளமை எழுதும் கவிதை நீ தொடர்ந்து படித்து வருகிறேன்... அருமையான தொடர்கதை. சரவணன் சாரின் பதிவுகளில் மென்மை இழையோடும்...
ReplyDeleteதங்கள் கருத்துக்கும் அன்பிற்கும் நன்றி சீனு
புதிய தளங்களை கண்டுகொள்கின்றேன். நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்னுடைய வலைதளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி...
ReplyDeleteபுதிய தளங்களை அறிந்து கொண்டேன்.
ReplyDeleteநன்றி அரசன்.
தொடர வாழ்த்துக்கள்.
அருமையான தொகுப்பாளர் நீங்க, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அதில் எனக்கும் ஒரு இடத்தைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பரே! பலமுறை எனது பதிவுகள் வலைச்சரத்தில் பகிரப்பட்டிருந்தாலும் எனது கதைகளை மட்டும் ரசிக்கும்படியாக பகிர்ந்தது மிக மிக அருமை. புதிய நண்பர்களின் அறிமுகம் முக்கியமான பங்களிக்கிறது. இப்போது இரண்டு நண்பர்களின் பதிவிற்கு முதல் முதலில் சென்று பார்த்தேன். என்னமா எழுதுராங்கப்பா! புதிய பதிவர்கள் என்றாலும் அவர்களின் எழுத்துக்கள் என்னை மிக மிக கவர்ந்தது. அனைத்து வலைச்சர அறிமுக நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். ரொம்ப நன்றி நண்பா.
ReplyDeleteநன்றி திரு.அரசன். மீண்டும் ஒரு அறிமுகம் உங்களால்.
ReplyDeleteஅடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துககள்.
இனிய வணக்கம் சகோதரர் அரசன்...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...
ஓரிருவர் நான் அறியாதவர்கள்...
சென்று பார்க்கிறேன்...
வாழ்த்துக்கள்...
நல்ல அறிமுகங்கள் நண்பரே...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
அறிமுகங்கள் அருமை.ரசித்தேன்
ReplyDeleteஅன்பு நண்பர் அரசன் அவர்களுக்கு, வணக்கம்!
ReplyDeleteவலைச்சரத்தின் இந்தப் பதிவில் எனது எழுத்தைப் பற்றி உயர்வாக எழுதி, எனது வலைப்பக்கத்தோடு சேர்த்து மற்ற நண்பர்களின் வலைப்பக்கத்தையும் அறிமுகம் செய்தமைக்காகத் தங்களுக்கு என் நன்றிச் செண்டு!!!
நீங்கள் என் வலைதளத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் மட்டும் செய்து வைக்கவில்லை; எனக்கும் பல புதிய நண்பர்களையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளீர்கள்! அந்தப் பலரில் தாங்களும் அடக்கம். அதற்குமென் நன்றி! நன்றி!
எனது வலைதளத்தில் தங்கள் அனைவரின் பின்னூட்டங்களையும் கண்டபோது பேருவகையும், நெகிழ்வும் அடைந்தேன்.
இன்று வலைச்சர அறிமுகப்பேறு கிட்டியுள்ள அனைத்து சக-பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்!
ஆழிசூழ் உலகில்
அன்பு சூழ்ந்து
வாழ்க!
அன்பன்,
மாதவன் இளங்கோ
சுபத்ராவின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். குடந்தையூராரும் நான் படித்ததுண்டு. மற்றவர்களை இயலும் பொழுது அவசியம் சென்று பார்க்கிறேன் அரசன். நல்லறிமுகங்களுக்கு நன்றி!
ReplyDeleteபலரும் எனக்கு புதியவை தான் அண்ணன் சரவணனை தவிர்த்து..சென்று பார்க்கிறேன்..அறிமுகங்களுக்கு நன்றி அண்ணே...
ReplyDeleteபுதிய தளங்களை அறிமுபடுதியமைக்கு நன்றி சார்
ReplyDeleteஇராஜ முகுந்தன் வல்வையூரான் , //
ReplyDeleteஎனக்கும் மகிழ்வு தான் நண்பரே
திண்டுக்கல் தனபாலன் //
ReplyDeleteநன்றிங்க தனபாலன் சார்
Sasi Kala//
ReplyDeleteநன்றிங்க அக்கா
ReplyDeletekovaikkavi said...//
நன்றிங்க மேடம்
சத்ரியன் said...//
ReplyDeleteநன்றிங்க அண்ணே
பசி பரமசிவம்,
ReplyDeletes suresh //
இருவருக்கும் என் நன்றிகள் சார்
சுபத்ரா said...//
ReplyDeleteநன்றிங்க மேடம் .. எனக்கும் சந்தோஷம் தான்
ஹேமா (HVL//
ReplyDeleteசீனு said.//
இருவருக்கும் என் நன்றிகள்
ReplyDelete2008rupan said...//
நன்றிங்க ரூபன்
அகல் said...//
ReplyDeleteநன்றிங்க
r.v.saravanan said...//
ReplyDeleteநன்றிங்க சார்
r.v.saravanan said...//
ReplyDeleteநன்றிங்க சார்
மாதேவி said...//
ReplyDeleteநன்றிங்க மேடம்
கவிதை வீதி... // சௌந்தர் // said...//
ReplyDeleteநன்றிங்க அண்ணே
Suresh Subramanian said...//
ReplyDeleteநன்றிங்க சார்
அருணா செல்வம் said...//
ReplyDeleteநன்றிங்க மேடம்
ReplyDeletesemmalai akash said...//
நன்றி நண்பா
த. ஜார்ஜ் said...//
ReplyDeleteநன்றிங்க சார்
மகேந்திரன் said...//
ReplyDeleteநன்றிங்க அண்ணே
சே. குமார் said...//
ReplyDeleteநன்றிங்க நண்பரே
S.டினேஷ்சாந்த் said...//
ReplyDeleteநன்றிங்க பாஸ்
Madhavan Elango said...//
ReplyDeleteஅது எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு நண்பரே .. நல்ல எழுத்தை பகிர்ந்தேன் அவ்வளவு தான் .. என் நன்றிகள் உங்களுக்கும்
பால கணேஷ் said...//
ReplyDeleteநன்றிங்க சார்
Uzhavan Raja said...//
ReplyDeleteநன்றி தம்பி
சக்கர கட்டி said...//
ReplyDeleteநன்றிங்க சார்
நான் அறியாமல் தவற விட்டவர்களை அறிந்து கொண்டேன். நன்றி அரசன்
ReplyDeleteவாழ்த்துக்கள் பலரை மேடை ஏற்றிய அரசன் சாருக்கு!
ReplyDelete