அன்பு வலைச்சர பதிவர் மற்றும் வாசகர்களுக்கு,
எங்கோ ஓர் அந்நிய தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை என் தமிழார்வம் கண்டு அழைத்து பொறுப்பு கொடுத்தமைக்கு பெருமகிழ்வோடும், நன்றிகளோடும் பூமகளின் வணக்கங்கள்..!!
சொந்த ஊர் கொங்கு தமிழுக்கும், சிறுவாணித் தண்ணீருக்கும் பெயர் பெற்ற கோவை மாவட்டம். தமிழார்வம் என்னில் பள்ளி காலம் தொட்டே இருந்திருந்தாலும், கல்லூரி படிப்புக்கு பின்தான் எழுத ஆரம்பித்தேன்.. தமிழில் எழுத ஆரம்பிக்க நினைத்து இணையத்தில் அதற்கான வாய்ப்பு மிக்க தமிழ் தளம் தேடுகையில் எனது கல்லூரி நட்பின் மூலம் தமிழ்மன்றம் என்ற தளம் பற்றி அறிந்தேன். அதில் தான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன். என்னுள் இருந்த கவிதை, கதைகள் என பல படைப்புகள் வெளிவரக் காரணமான தளத்தினை நன்றிகளோடு நினைவுகூர்கிறேன்.
2007ஆம் வருடம் முதல் பதிவுலகில் பூமகளின் பூக்களம் என்ற வலை தளத்தில் எழுதி வருகிறேன். ஆரம்ப காலத்தில் மழலையின் கிறுக்கலைப் போல் கவிதைகள் எழுதி வந்த எனக்கு பின் கதைகள் மீதும், நகைச்சுவைப் பதிவுகள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் பக்கமும் ஆர்வம் வந்து எழுதத் துவங்கினேன்.
என் பதிவுகளில்களில் மனதுக்கு நெருக்கமான பதிவுகள் சில உங்களுடன் பகிர விழைகிறேன்.
மழை வேண்டி .. !
இக்கவிதை வாடிய பயிர் கண்டு நிஜத்தில் மனம் வருந்தி மழைக்காக வேண்டியது. நிஜத்திலும் மழை வந்து பயிர் செழித்தது மனம் நெகிழ்ந்த நிகழ்வு.
வௌவ்வால் காவியம்
வௌவால் என்ற உயிரினமும் மற்ற உயிரினம் போலவே என்று தோன்றியதன் விளைவு இக்கவிதை..
வரதட்சணை..!
மலர்ந்தவையும் மலராதவையும்..!
ஆகிய கவிதைகள் சமூக பிரச்சனைகளை உள்ளடக்கி எழுத முற்பட்டது.. :)
திரை விமர்சனங்களும் என்னை பதிவர் உலகில் அறியச் செய்தது.
குறிப்பிடும்படியான விமர்சனம் எனில்..
தாரே சமீன் பர் திரைப்படத்தின் விமர்சனம்.
ஆர்டிக்பிசியல் இன்டலிஜென்ஸ் (AI) விமர்சனம்.
பூ - திரைவிமர்சனம்
எஸ்.ரா அவர்களின் "யாமம்" நாவல் நான் படித்த அவரின் முதல் புத்தகம். மிகப் பிடித்துப் போய் அதற்காக நான் எழுதிய என் விமர்சனம் .
மேலும் நகைச்சுவைப் பதிவுகள்,அனுபவப் பகிர்வுகள் என பல பதிவுகளையும்எழுதியுள்ளேன்..
இயற்கை மீதான தீராத தாகத்தில்இயற்கை பற்றி எழுதிய கவிதைகள் மனதுக்கு நெருக்கமானவை.
இன்னும் எனது ஏனைய பதிவுகள் படிக்க விரும்பின் பூமகள் தளத்தில் படிக்கலாம்.
இன்றைய எனது அறிமுகப் பதிவை பொறுமை கூர்ந்து படித்தமைக்கு நன்றிகள். மிண்டும் நாளை சந்திப்போம்.
-நன்றிகளுடன்,
பூமகள்.
இனிய சுய அறிமுகம்.... சுருக்கமாய்... அருமையாய்...
ReplyDeleteஇந்தப் பாடல்பற்றி தெரியுமா?:
;"ஓடக்கர மண்ணெடுத்து
ஒம் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடக்கர மண்ணெடுத்து
ஒம் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடையெல்லாம் தண்ணிவந்து
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன? ராசாவே
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன?"
தங்களது வலை எனக்கு முற்றிலும் புதியது.
ReplyDeleteஒன்று படிக்கலாமே என உள்ளே....
நுழைந்த கணமே நறுமணம் நுகர்ந்தேன்.
பூமகளின் பூக்களமா இது !!
புன்னகை எங்குமே பரவியிருக்க
பூரித்து மகிழ்ந்தேன்.
பூ மகளே !! இது
பூ மகளாம் திருமகள் வாசம் செய்யும்
பூங்காவனமே !!
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha.blogspot.in
வலைச்சரம் பணி ஏற்க வந்த சகோதரி பூமகள் (http://poomagal.blogspot.in ) அவர்களுக்கு, பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியருக்கு!
ReplyDeleteபூமகளின் ஊர்வலம்
பவனிவரப் புறப்பட்டதே
பா மணமும் பரிமளமும்
பன்னீராய்த் தூவிவர
நாம்மகிழ வலச்சரம்சிறக்க
நல்வாழ்த்து நவில்கின்றோம்...
ungal pakkam arumai. neengal arimuga paduthi irukum pakkanglaum nandraga ulladhu.
ReplyDelete(tamizhil ezhuda mudiya villai mannikavum)
தங்களின் அறிமுகம் அருமை! எனக்கும் இன்றுதான் நீங்கள் அறிமுகம்! பூமகள் ஊர்வலத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் சகோ விரியட்டும் அறிமுகப்பூக்கள்... தேன் கூடிக்க காத்திருக்கிறோம் பதிவினூடாய்... தொடருங்கள்
ReplyDeleteஅன்பின் பூமகள்
ReplyDeleteஅருமையான துவக்கம் - சுய அறிமுகம் நன்று - பதிவுகளைச் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
சுய அறிமுகம் நன்று...
ReplyDeleteமேலும் அசத்த வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் காத்திருக்கிறேன் தொடர
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான அறிமுகம் இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் பூமகள் - சுய அறிமுகப் பதிவு நன்று - சுட்டிகளைச் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழியிட்டு வந்தேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteபூமகள் சுய அறிமுகம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு நீங்க புது முகம் தான் . போயி படிச்சு பார்க்கிறேன்.வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக வருக வலைத்தள ஆசிரியர் பொறுப்பை ஏற்று நிற்கும் தங்கள் பணி சிறப்பாகத் தொடர என் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇன்றைய சுய விவரம் சுருக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது அதற்க்கு என் பாராட்டுக்களும் கூட.நன்றி இப் பணியை
ஏற்றுக்கொண்டமைக்கு .
கலக்குங்க தாயீ வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவர்களின் பதிவுகள் அனைத்தும் அருமை இதை எல்லாம் படிக்க படிக்க எனக்கு ஒரு யோசனை வருதுங்க
பதிவர்கள் ஏன் இந்த நாடு நல்லா இருக்க தகவல் உரிமைச் சட்டம் மாதம் ஒரு மனு ஒரு பொருள் சார்ந்து அரசு அலுவலகங்களில் கேட்டு எழுதக் கூடாது? அருமையா சிந்திக்க நேரம் இருக்கு எழுதவும் நல்லா வருது ஒவ்வொரு அரசு அலுவலகமும் சரியாக இயங்க வைக்கும் மிகவும் வழுவான ஆயுதம். பயன்படுத்த இலவச பயிற்சி மற்றும் இந்தியன் குரல் உதவிக்கு பிரதி ஆங்கில மாதம் 1 மற்றும் 15 தேதிகள் சென்னை 9444305581 தினமும் காஞ்சிபுரம் 9994658672 வியாழன் தோறும் வேலூர் 9443489976 கோவையில் சனிக்கிழமை தோறும் பி எஸ் ஜி பப்ளிக் ஸ்கூல் பீளமேடு கோவை பிரதி மாதம் முதல் சனிக்கிழமை மதுரை மாட்டுத் தாவணி பாண்டிச்சேரி மற்றும் தமிழக முக்கிய நகரங்களில்.
சாதனை தமிழகத்தில் விண்ணப்பம் கூட தர மறுத்த வங்கிகளில் 2012-2013 கல்வியாண்டில் 8700க்கும் மேற்பட்ட மாணவர்கள் இச் சட்டம் பன்யன் படுத்தியதன் மூலம் கல்விக் கடன் பெற்றுள்ளார்கள். இல்லைனா இல்லை
சென்னையில் 13 மின் இணைப்புகள் லஞ்சம் குடுக்காமல் பெற்றது. பட்ட பெயர் மாற்றம் நிலா ஆக்கிரமிப்புகள் நில மோசடி புகார்கள் என்று பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது - இந்தியன் குரல்
இதற்காக மாதம் ஒரு மணி நேரம் ஒதுக்கமுடிந்தால் நாளை நாடு உங்களை வணங்கும்
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
ReplyDeleteவணக்கம்!
பூமகள் இங்குப் புனைந்த அறிமுகத்தில்
பாமகள் வந்து பயின்றனளே! - நாமகள்
நன்றே மகிழ்வுறச் நற்றமிழ்த் தேன்குடித்து
வென்றே அளித்தாய் விருந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
பூமகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.com/2013/03/frozen-veg-sambar.html
ஜலீலாகமால்
ஆசிரியப் பணிக்கு வாழ்த்துகள் பூமகள்.
ReplyDelete