நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருணா செலவம் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் செவ்வனே செய்து முடித்து மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் ஏழு பதிவுகள் இட்டு எழுபது பதிவர்களையும் அவர்களது நூற்றி எழுபத்தி இரணடு பதிவுகளையும் அறி,முகப் படுத்தி ஏறத்தாழ முன்னூற்றி ஐம்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.
இவர் சுய அறிமுகம், மரபுக் கவிஞர்கள், தாயகம கடந்தோர், மருத்துவக் குறிப்புகள், புதுக் கவிதைகள், கதம்ப மலர். முடிவல்ல துவக்கம் என ஏழு தலைப்புகளீல் பதிவுகள் இட்டுள்ளார்.
அருணா செல்வத்தினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் பூமகள். தமிழின் மீதான பற்றுதல் இவரை கவிதை, கதைகள் எழுத அழைத்து வந்தது. படித்தது பொறியியலில் தகவல் தொழில்நுட்பம். சிஙப்பூரில் வசித்து வருகிறார்.
நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவர்.
இவர் எஸ்.ராவின் பரம ரசிகர்.
இவர் பூமகளின் பூக்களம், பூவனம், பூமகளீன் கதைப் பூக்கள் என்கின்ற தளங்களீல் எழுதி வருகிறார்.
பூமகளை வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
வருக வருக பூமகளே ! பூமணத்தினை பரப்புக !
நல்வாழ்த்துகள் அருணா செல்வம்
நல்வாழ்த்துகள் பூமகள்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
பூமகளை வாவென்று போற்றி வரவேற்றுப்
பாமகன் பாரதி பாடுகிறேன்! - தேமதுர
வண்ணத் தமிழ்மணக்கும் வல்ல வலைச்சரத்தில்
எண்ணம் இனிக்க எழுது!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருணா செல்வம் அவர்களுக்கும்-
ReplyDeleteபூமகள் அவர்களுக்கும்-
வாழ்த்துக்கள்
விடை பெற்ற தோழிக்கும்
ReplyDeleteவிருந்தளிக்க வரும் தோழிக்கும்
விநயமுடன் நல் வாழ்த்துக்கள்!!!
வாருங்கள் வளமானப் பதிவுத் தாருங்கள் வாழ்த்துக்களுடன்
ReplyDeleteசிறப்பாக பணியை முடித்த அருணா செல்வம் அவர்களுக்கும்... ஆசிரியர் பணியை ஏற்றுள்ள பூமகள் அவர்களுக்கும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇருவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete