Sunday, March 3, 2013

ஞாயிறு'வின் விலையில்லா நட்சத்திரங்கள் இவர்கள்...!

எஸ். சுரேஷ், எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும் "தளிர்" என்ற பெயரில் பதிவுகள் எழுதி வருகிறார், கொலைவெறி விமான பயணம் பற்றி எழுதி இருக்கிறார் மற்றும் விஸ்பரூபம் இவருக்கு புஸ்பரூபம் ஆனதையும் எழுதி உள்ளார்...!

வாங்க விமானம் எப்பிடி ஓட்டுறாயிங்கன்னு போயி பார்த்துட்டு வருவோம்.
-------------------------------------------------------------------------
தம்பி பிரபு கிருஷ்ணா, "கற்போம்" என்று பதிவுகள் எழுதி வருகிறார், பலவிதமான டெக்னிகல் விஷயங்களை பதிவர்களாகிய நமக்கும் மற்றும் வேலைகள் [[கம்பியூட்டர்]] சம்பந்தப்பட்டவைகளையும் சொல்லித் தருகிறார் வாருங்க போயி என்னான்னு பார்த்துட்டு வந்துருவோம்.
--------------------------------------------------------------------------------
தம்பி மதி சுதா, இலங்கை இந்தியா ஏன் உலக நாடுகள் பற்றி ஏராளமான தகவல்கள் வைத்து இருக்கிறார், சினிமா, அரசியல், காமெடி எல்லாம் கலந்த கலவைகள் இங்கே இருக்கிறது வாங்க அங்கேயும் போயி அவருக்கு கைகுலுக்கி வரலாம்...!
----------------------------------------------------------------------------------
மங்குனி அமைச்சர், "எல்லாம் நம்ம சொந்த பந்தம்தான்" என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி, வாசிக்கும் எல்லார் வயிற்றையும் புண்ணாக்கி வருகிறார், செமையான காமெடி பேர்வழின்னு நினைக்கிறேன், சிலருக்கு கொஞ்சம் ரஃப்பாக தெரிந்தாலும் ரசிக்கும் எங்களுக்கு செம சிரிப்பாகவே இருக்கும்...!

வாங்க போயி கொஞ்சம் ரிலாக்சாக சிரிச்சுட்டு வரலாம்...!
-------------------------------------------------------------------------------------
ஆமினா, "குட்டி சுவர்க்கம்" என்னும் தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார், பரமக்குடி கலவரத்தை அதன் உண்மை நிலையை நேரில் நின்று பார்த்து பதிவாக்கியவர், மீடியாக்கள் பயந்து வெளியே சொல்லாத மேட்டரைஎல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து காட்டியவர்...!

இவர் எழுத்துகள் பல கோணத்தில் பலதரப்பட்ட விஷயங்களை கோர்வையாக்கி எழுதுகிறார், சமையலாகட்டும், பெண்கள் முன்னேற்றம் ஆகட்டும், அரசியல், ஆன்மிகம் எனக் கலக்கும் ஒரு பல்கலைகழகம் இவர், வாங்க போயி சாப்பாடும் சாப்புடுட்டு கொஞ்சம் அவரையும் படித்து விட்டு வரலாம்.
----------------------------------------------------------------------------------------
நண்பன் சுரேஷ், "இரவு வானம்" என்ற தலைப்பில் என்னுடைய எண்ணங்கள் பதிவுகளாக உங்களிடம் என்று சொல்லி எழுதி வருகிறார், குழந்தைகளை ஹாஸ்டலில் விட்டால் என்னவாகும் என்று பெற்றோருக்கு உஷார் செய்தி சொல்கிறார்...!

வாங்க நாமும் போயி அந்த ஹாஸ்டலை பார்த்துட்டு வரலாம்.

--------------------------------------------------------------------------------------
இந்திரா, இந்திரா கிறுக்கல்கள், என்ற தலைப்பில் நான் இந்திரா இம்சிக்கிறேன் என்று எழுதி வருகிறார், கவிதைகள், பெண்கள், காமெடி, அரசியல், நக்கல் நையாண்டின்னு செமையா கலக்கிட்டு இருக்காங்க வாங்க நாமளும் போயி அவரை கலக்கிட்டு வரலாம்...!

-----------------------------------------------------------------------------------------
தேவா, "வாரியர்" தலைப்பில் நான் ஜெயிக்கப் பிறந்தவன், எழுதி பழகுபவன் என்று எழுதி வருகிறார், ஈழப்படுகொலை களும்...இந்தியாவின் கூட்டு மனசாட்சியும் என்று ஒரு பதிவு எழுதி இருக்கார் பாருங்க, இந்தியாவின் காங்கிரஸ் தலைமையின் சதியும் அவர்களின் எண்ணங்களையும் வெளிப்படையாக போட்டு தாக்கி எழுதி இருக்கார், அவர் எழுதியது உண்மையாகவே எனக்கு தோன்றுகிறது...!

வாங்க அவர் வேதனையிலும் போயி நாம் பங்கெடுக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------
மோகன் குமார், வீடு திரும்பல் என்ற தலைப்பில் எழுதி வருகிறார், எங்கே நல்ல ருசி உள்ள சாப்பாடுகள் கிடைக்கும், அவர் போன பிரயாணங்கள், சுற்றுலா தளங்கள், சினிமா மினிமா விமர்சனங்கள், போட்டோக்கள்னு போட்டு அசத்தி வருகிறார்...!

வாங்க நாமளும் போயி அவரோடு சாப்பிட்டு விட்டு வரலாம்.
-----------------------------------------------------------------------------------------------
பவள சங்கரி, நித்திலம் சிப்பிக்குள் முத்து என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார், பாட்டி சொன்ன கதைகள் என்று அழகாக ஒரு நீதி கதை சொல்கிறார் வாருங்கள் என்னாதுன்னு பார்த்துட்டு வரலாம்...!

இவர் வல்லமை இணைய இதழ் ஆசிரியர் என்பது தனி சிறப்பு...!

---------------------------------------------------------------------------------------
ஜெய்லானி, என்ற பெயரில் எழுதி வரும் நண்பன் ஜெய்லானி, சின்ன சின்ன மருத்துவ குறிப்புகள் தந்து நமக்கு உதவுகிறார், நல்ல காமெடி சென்ஸ் உள்ளவர், காமெடிகளை வெகுவாக ரசிக்கும் தன்மை கொண்டவர், சிலபல தகவல்கள் நமக்கு தேவையானதாக இருக்கிறது அவர் தளத்தில் வாங்க போயி தெரிஞ்சிக்கலாம்...!
-------------------------------------------------------------------------------------------
"எடக்கு மடக்கு" என்னும் வலைத்தளம் காமெடியும் சீரியசும் கலந்த கலவையாக வலம் வருகிறது...

இலை மடித்தலின் விஞ்ஞான ரீதியான நன்மைகளை அழகாக விளக்கி சொல்கிறார் வாங்க நாமும் போயி இலை மடித்து வரலாம்...!
--------------------------------------------------------------------------------------
நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது, என்று சொல்லி வருகிறது "பாலாவின் பக்கங்கள்" 

சினிமா விமர்சனம் செய்திகள் தாராளமாக இருக்கிறது இவர் வலையில் வாங்க போயி பார்த்துட்டு வருவோம்...
http://balapakkangal.blogspot.com/2013/02/blog-post.html
-----------------------------------------------------------------------------------------

மிக்க நன்றி நண்பர்களே உங்கள் யாவர் அன்புக்கும் அதிகமான அமோகமான ஆதரவிற்கும்.....என்றும் நன்றி கடன் உண்டு நெஞ்சில்....

வலைசரம் ஆசிரியர் சீனா அய்யாவுக்கும், வலைசரம் பொறுப்பாளர்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றியை சமர்பிக்கிறேன் நன்றி நன்றி நன்றி....!

இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள், அறிமுகப்படுத்த சமயமும் நேரமும் இல்லை, கடும் பணிகளுக்கு நடுவேதான் உங்களை அறிமுகப்படுத்த முடிந்தது நண்பர்களே....!

எனக்கு வரும் சாட்டிங் மற்றும் மெசேஜ்'களுக்கு என்னால் பதில் சொல்லகூட நேரமில்லாமல் இருக்குறேன் மன்னிச்சு மக்கா....!



27 comments:

  1. முத்துமுத்தான பதிவர்களின் அணிவகுப்பு....
    இனிமையுற வலைச்சரப்பணியை
    இனிதே நிறைவேற்றி இருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் நண்பர் மனோ....

    ReplyDelete
  2. அப்பா...ஒரு அறிமுக பிரவாகமே நடத்தி முடித்துவிட்டீர்கள் மனோ சார்!!
    வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
    இனி ஆற அமர மூச்சு வாங்கலாம் நீங்கள்...!! :)
    நீங்கள் அறிமுகப்படுத்திய பல பதிவர்களின் வலைப்பூக்களை இப்போது தான் அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி மனோ சார்...!

    ReplyDelete
  3. வணக்கம்
    மனோ(அண்ணா)

    ஒருவார காலமும் பல சிரமங்களுக்கு மத்தியில் பலவகைப்பட்ட பதிவுகளை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா இன்று அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-
















    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்று அறிமுகமான உறவுகளுக்கும்
    சகோதரரே உங்களுக்கும் !பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் ...

    ReplyDelete
  5. இன்று பல புதிய அறிமுகங்கள். வலைச்சர வாரத்தை அருவா வலம் வந்து இனிமையாக நிறைவு செஞ்சிருக்கீங்க மனோ. வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. சிறப்பாக பல தளங்களின் அறிமுகம்... சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...

    இன்று அறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. முத்துமுத்தான பதிவர்களின் அணிவகுப்பு....
    சிறப்பாக பல தளங்களின் அறிமுகம்... சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...

    இன்று அறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. Thanks Mano. Excellent work done for the past 1 week

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள்..

    ReplyDelete
  10. ஒளிரும் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள்.

    சிறப்பான அறிமுகங்களைத் தந்து வாரத்தை சிறக்க வைத்தீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வணக்கம் மனோ சார்,
    எங்கள் தளத்தையும் விலையில்லா நட்சத்திரமாக வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. அருவா முனையில் அறிமுகம் செய்த முதல் ஆசிரியர் நீர்தாம்,பாராட்டுகள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. முதலில் வலைச்சரத்தில் முதல் பதிவராக என்னை அறிமுகம் செய்து கவுரவித்தமைக்கு மிக்க நன்றி! சுவையான பல பதிவர்களை இந்த ஒரு வாரத்தில் சிறப்பாக அறிமுகம் செய்து வலைச்சரத்தை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. அறிமுகத்துக்கு நன்றி அண்ணா :-))))

    ReplyDelete
  15. ஏவிஎம்.சரவணனுக்கு அப்புறமா கைக்கட்டிக்கிட்டு போஸ் கொடுத்து கலக்குறது "தளிர்"சுரேஷ் தான் :-))

    வாழ்த்துக்கள்!

    # மனோ கோட்டெல்லாம் போட்டிருக்கிறத பார்த்தா பெரிய ஆபிசரா இருப்பார் போல இருக்கே(கோட்டுக்குள்ள அருவா இருக்குமோ?)

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    இவ்வார வலைச்சரத்தில் அனைத்தும் நல்ல அறிமுகங்கள்,ஆனால் குறிப்புறைகள் எல்லாம் கொஞ்சம் அவசரமாக செய்தது போல இருக்கு.

    ReplyDelete
  16. இன்றும் பவள முத்தக்கள் அறிமுகம் செய்தீர்கள் மனோ அண்ணாச்சி!

    ReplyDelete
  17. பல்வேறு பணிகளுக்கிடையிலும் இனிதான பல அறிமுகம் செய்து ஆசிரியராக சிறப்பாக செயல்பட்ட மனோவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  18. வவ்வால் said...
    ஏவிஎம்.சரவணனுக்கு அப்புறமா கைக்கட்டிக்கிட்டு போஸ் கொடுத்து கலக்குறது "தளிர்"சுரேஷ் தான் :-))

    வாழ்த்துக்கள்!

    # மனோ கோட்டெல்லாம் போட்டிருக்கிறத பார்த்தா பெரிய ஆபிசரா இருப்பார் போல இருக்கே(கோட்டுக்குள்ள அருவா இருக்குமோ?)

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    இவ்வார வலைச்சரத்தில் அனைத்தும் நல்ல அறிமுகங்கள்,ஆனால் குறிப்புறைகள் எல்லாம் கொஞ்சம் அவசரமாக செய்தது போல இருக்கு.//

    இந்த வாரம் பார்த்து வேலையிலும் பளு பலமாக கூடி போச்சு நண்பா, அதான் குறிப்புகள் கொஞ்சம் மிஸ் ஆகிப்போச்சுஸாரி'ய்யா...

    ReplyDelete
  19. பல்வேறு பணிகளுக்கும் இடையில் ஒரு வாரம் வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  20. அறிமுகம் ஆனவர் அனைவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. கடும் வேலை பணிக்கிடையில் எங்களையும் அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி.!

    ReplyDelete
  22. இந்த வாரம் அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. இந்த வாரம் அசராமல் பணியாற்றிய சிறப்பாசிரியர் மனோவுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. நன்றிகள் மனோ..!

    வெகு நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து வலைச்சரம் வாசித்தேன்...! நிறைவான வாரம் !!!!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. ஆ............நானுமா?????

    ஹி..ஹி..ஹி...

    நன்றிங்க!

    அனைத்து அறிமுகங்களும் அருமை...

    உங்கள் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete